Skip to content
Home » அன்பென்ற மழையிலே-10

அன்பென்ற மழையிலே-10

மழை-10 

அழகர் மயஙகி விழுந்த நொடியில் அவளின் சித்தம் தெளிந்தது. தன் வாழ்வின் பிடிமானம் அப்பா மட்டுமே, அவரை காப்பாற்ற வேண்டும் என மூளை துரிதமாக வேலை செய்த்து. 

“ அப்பா, அப்பா” என மகள்களும்,” அண்ணேன்” என இந்திராணியும் அலற, 

“ மச்சானை தூக்குடா” என அவர்கள் தாய்மாமனும், கலையரசி கணவன் மற்றவர்களுமாக அழகரை தூக்கிக் கொண்டு மருத்துவ மனைக்கு விரைய, எழிலும, கலையும் கூடவே ஓடி வந்தனர். 

அந்த அவசரத்திலும் அப்பாவை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரு எண்ணமே மேலோங்கி இருக்க, அத்தையிடம் கொடுத்து வைத்திருந்த செல்ஃபோன் அடங்கிய ஹேண்பேகை வாங்கிக் கொண்டாள்.

அப்பாவோடு, தானும் ஏறிக் கொண்ட எழிலரசி, அரசு ஆஸ்பத்திரியில் இருக்கும் தோழிக்கு போனடித்து விவரம் சொல்லி, ஆம்புலன்ஸுக்கும் ஏற்பாடு செய்து விட்டாள். 

முதலுதவி செய்து, ஊசி போட்டு ஆக்சிஜன் செலுத்தியபடி மதுரைக்கு கொண்டு சென்றனர். 

“பெரிய ஆஸ்பத்திரினா பணம் நிறைய கட்டனுமே” என கலையரசி கவலைப்பட,

“ என் நகையை வித்தாவது க்டடிக்கலாம் அக்கா. இனிமே அது எதுக்கு. அப்பாவை காப்பாத்தினா போதும்” என்றாள்.

“ எப்படி பேசிபுட்டான். தைரியமான ஆம்பளையாம். அன்புவையும் இழுத்து வச்சு பேசிட்டானே” எனவும், நினைவு வந்தவளாக அவனுக்கும் அழைத்து விட்டாள். 

இதோ இப்போது ஆப்பரேஷன் வரை வந்தாயிற்று. மூன்று மணி நேரம் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் , “ கொஞ்சம் கிரிடிகல். அதனால் ஓப்பன் ஹார்ட் தான் பண்ணோம். ரெகவரி கொஞ்சம் லேட்டு ஆகும். பயப்பட வேண்டாம். இரண்டு நாள் சிசியூல தான் இருப்பார்” என்றார்.

அழகர் உயிர் பிழைத்து விட்டார் என்ற செய்தியே அவர் மக்களுக்கு தெம்பை தந்தது. 

“ கோகிலா இரட்டை வேஷம் போட்டுட்டா” என கலையரசியும், மூத்த மருமகளும் பேசிக் கொண்டனர்.

“ தாமுவுமே உடந்தை தான் போல” எனவும் கலையரசி கணவன் சொல்ல, “ஒன்னும் சொல்றதுக்கு இல்லை. “ என்றான் நாகு. 

அறுவை சிகிச்சை முடியவுமே “வீட்டில எல்லாம் போட்டது போட்டபடி வந்து இருப்பீங்க. நீங்க கிளம்புங்க. நான் பார்த்துக்குறேன்” என அன்பு நாகுவிடம் சொல்ல, 

“ பணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டு காலையில வந்துடுறேன் மாப்பிள்ளை. அப்புறம் நீ கிளம்பு” என்றான். 

“ பணத்தை பத்தி எல்லாம் கவலை படாதீங்க. மாமாக்கு பார்க்க வேண்டியது என் கடமை” என்றவன், 

“ எழிலுக்கு என்ன செய்யறதா உத்தேசம் “ எனக் கேட்டான். 

“ மாமா பஞ்சாயத்து பேசலாம்கிறாரு. பணப் பேயா இருக்கான். இம்புட்டு நடந்த பிறகு, எப்படி அங்க அனுப்புறதுன்னு எனக்கு யோசனையா இருக்கு. ஆறப் போட வேண்டியது தான் “ என்றான்.

“ அவனை அப்படியே விடப் போறீங்களா”

“ வேற என்ன செய்யனும்கிற. பொம்பளை புள்ளை வாழ்க்கை “ என யோசித்தான்.

“ போலீஸ் கம்ப்ளையிண்டு குடுங்க. அவனோட ஒன்னும் அவள் வாழ வேண்டாம்” என்றான் முகம் இறுக. 

“ அப்புறம். நீ கட்டிக்க போறீயா, இல்லை காலம் பூரா வீட்டில கன்னியாவே வச்சுக்க முடியுமா. அதுவே பெரிசுக்கு பெரிய நோவா போயிடும். நடக்கிறதை பேசு மாப்பிள்ளை “ என்றான். கலையரசி, அவள் கணவனும் நாளை மூவருக்கும் எடுத்து வரவேண்டியதை இந்திராணியிடம்கேட்டுக் கொண்டு நாகு தம்பதியோடே கிளம்பினர். 

இந்திராணி அண்ணனை விட்டு அகல முடியாது என்று விட்டார். எழிலை எங்கும் தனியாக விடுவதும் சரியில்லை என தன்னோடே வைத்துக் கொண்டான். அவனை பார்க்கவும் தயங்கி, மடியில் தலை கவிழ்ந்தே அமர்ந்து இருந்தாள். 

மருத்துவ மனையில் ரூம் தராத பட்சத்தில் காரிடாரில் காத்திருந்தனர். ப்ரீத்தி அருகில் ஒரு ஹோட்டலில் அறை ஒன்றை எடுத்திருந்தாள். 

“இங்க ஒருத்தர் இரண்டு பேர் இருந்தா போதும். மாற்றி, மாற்றி ரூம்ல போய் ரெஸ்ட் எடுத்துட்டு வரலாம்” என யோசனை சொல்ல, 

“ அததையை கூட்டிட்டு போ ப்ரீத்தி. நான் அப்பாவை விட்டு வரமாட்டேன்” என்றாள் எழில். 

“ ட்ரஸ்ஸையாவது மாத்திட்டு வந்திடு, அப்புறம் வந்து ம்மமிஜியைக் கூட்டிட்டுப் போறேன்” என எழிலை வருந்தி அழைத்துச் சென்றாள். அறைக்கு சென்றும் மெனா பிடித்தது போல் அமர்ந்திருந்தவளை, ப்ரீத்தி பேசியே கரைத்தாள். 

“உனக்கு இவ்வளவு நடந்த அப்புறமும், அதுக்காக ஒடைஞ்சு போயிடாமல், பாப்பாஜியை காப்பாத்த ஓடி வந்திருக்க பாரு. இது பெரிய விஷயம். யு ஆர் எ ஸ்ட்ராங் லேடி. காம்சோர் மத் ஹோ, {பலவீனம் அடைஞ்சுடாதே.) பீ  ஸ்ட்ராங்.” என உற்சாக படுத்தி, 

“நடந்தது எல்லாம்  கந்தி சப்னாவா நினைச்சுக்கோ” என பேசிக்கொண்டே இருக்க, அவள் பார்வையில் மாற்றம் இல்லை. 

“எழில், ஸ்பீக் அவுட். பேசு. யார் கிட்டையாவது சொன்னா நம்ம பாரம் குறையும்” என்றாள். 

“ என்னத்தை பேச சொல்ற, கண்ணை மூடினா, அவன் தாலியை அறுத்ததும், அப்பா மயங்கி விழுந்ததும் தான் படமா ஓடுது. இன்னைக்கு ஒரு பொழுதுல என்னன்ன நடந்து போச்சு. எந்த பொண்ணுக்குமே , என் எதிரிக்கு கூட இது நடக்கக் கூடாது”  எனும் போதே நீர்துளி உருண்டு விழுந்தது. 

“ சாரி டியர். மங்கள் சூத்திரம், தாலி நம்ம இண்டியன் லேடிஸ்க்கு மோஸ்ட் சென்டிமென்ட். உனக்கு இப்படி நடந்து இருக்க வேண்டாம்” என்றாள். 

“ எல்லாம் தலையெழுத்து. என் ஜாதகத்தால அன்பு அத்தானுக்கு ஆபத்து வரும்னு சொன்னவங்க, இப்படி அப்பாவுக்கு ஆபத்து வரும்னு சொல்லியிருந்தா, கல்யாணமே வேண்டாம்னு பிடிவாதமா இருந்திருப்பேன்.” என சோகமானாள்.

“யூ நோ, நான் சின்ன பிள்ளையிலிருந்து அத்தானை தான் நினைச்சிட்டு இருந்தேன். அவருக்கு என்னை பிடிக்காது. ஸ்கூல் மாமா பொண்ணுன்னு சொல்ல அசிங்க பட்டுக்குவார். ஆனாலும் எனக்கு அவரைப் பிடிக்கும். எங்க பக்கம், சொந்தத்துல பொண்ணு மாப்பிள்ளை இருந்தா, சொந்தம் விட்டு போக கூடாதுன்னு கல்யாணம் பண்ணி வச்சிருவாங்க. என் பெரிய அண்ணன், அக்காவுக்கு தாய் மாமா வீட்டில தானே செஞ்சாங்க. அப்படி அன்பு அத்தானுக்கு என்னை கல்யாணம் பண்ணி வைப்பாங்கன்னு கனவு கண்டுகிட்டு இருந்தேன்.” எனும் போது அவள் முகம் மலர்ந்தது.

 “என்ஜினியரிங்க், எம்பிஏ எல்லாம் படிக்கும் போதே, இங்குட்டு செட்டில் ஆக மாட்டார்னு தெரியும். அவரை கல்யாணம் பண்ணிக்கனும்னா, அவருக்கு சமமா இருக்கனும், நாலு பேர்கிட்ட என்னை இண்ட்ரட்ஸ் பண்ணி வைக்க அசிங்க படக் கூடாதுன்னு இங்கிலிஷ் படிச்சேன்.” என கர்வமாகவே சொன்னாள்.  

“ஜாதகத்தை பார்த்துட்டு எனக்கு மாங்கல்ய தோஷம் இருக்கு, அவர் உசுருக்கே நான் எமனா இருப்பேன்னு சொன்ன அன்னைக்கு நான் துடிச்ச துடிப்பு எனக்கு தான் தெரியும்.” எனவும், ப்ரீத்தி அவளை அணைத்துக் கொண்டாள். 

“இப்போ சொல்ற நீ, முன்னாடியே ஏ கே கிட்ட சொல்லி இருக்க வேண்டியது தானே. மாமா கேட்டார்னா, நான் எழிலை கல்யாணம் பண்ணிக்க மறுக்க மாட்டேன்னு தான், என் லவ் ப்ரபோஸலை முதல்ல அக்சப்ட் பண்ணலை” என்றாள். 

“கடமைக்காக கல்யாணம் பண்றதுக்கும், காதலுக்காக கல்யாணம் பண்ணிக்கிறதுக்கும் வித்தியாசம் இல்லையா. அப்பா கேட்டு இருந்தா அத்தான் மறுத்து இருக்க மாட்டார் தான். அதையே அப்பாவும் நினைச்சு இருக்கலாம். தான் படிக்க வச்சதுக்காக தன் மகளை, தங்கச்சி மகன் விருப்பம் இல்லாமல் கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்னு நினைச்சு இருப்பார்.” என்றாள்.

“ நீ ஏகே கிட்ட ஜாதகம் பார்க்கும் முன்னாடியே உன் காதலை சொல்லி இருக்கனும்” பீரித்தி சொல்ல, 

“ காதலை சொல்றதை விட, அதை மறுத்துட்டாங்கிற பயம் நம்ம காதலை சொல்ல விடாது. நீயும் அனுபவிச்சு இருப்பேல்ல” எனக் கேட்டாள்.

“ நான் ரொம்பவெல்லாம் யோசிக்கலை பட்டுனு கேட்டுட்டேன். பட் ஏகே பதிலே சொல்லைங்கவும் செம க்ரை “ என்றாள்.

“ யூ ஆர் லக்கி. நினைச்சதை பேச முடியுது” என்றாள். 

“ ஜாதகம், ஜோசியம் எல்லாம் நீ ஏன் நம்புற. கந்துவட்டி பார்ட்டி உன்க்கு பொருத்தம்னு தான் சொன்னாங்க. ஆனா இப்படி பண்ணிட்டானே “ என்றாள்.

“ நோ, அந்தாள் பணப்பேயி, அதனால என் ஜாதகத்துக்கு ஏற்ற மாதிரி ஃபேக் ஜாதகம் கிரியேட் பண்ணி இருக்கார். இதுவும் அவனே தான் சொன்னான்” என்றவள், 

“அப்பா ஒரு ஜோசியர்கிட்ட பார்ப்பார் அது 99/ சதம் சரியா இருக்கும். அன்பு அத்தான் விசயத்திலும் அதே தான். அத்தைக்கு அவர் ஒரே பையன். இப்படி சொன்ன பிறகு, எனக்கும் அவர்னா உயிரு, என் உயிரை நானே எப்படி எடுக்க முடியும்.  அவரை எப்படி நான் கல்யாணம் பண்ணிக்க முடியும். அப்படி ஒன்னு நடந்தா, எங்க நாலு பேர் வாழ்க்கையும் நரகம் ஆயிருக்கும். இன்னைக்காவது எங்க அப்பா பொழைச்சுட்டார். என்னைய கட்டி வச்சு, அத்தானுக்கு எதாவது ஆயிருந்தா உயிரையே விட்டு இருப்பார். நல்ல வேலை அதெல்லாம் எதுவும் நடக்கலை.” என ஆவுவாசம் அடைந்தாள்.

“ இப்பவும் கூட லேட் இல்லை. நீ ஏகேவை க்ட்டிக்கோ. ஐ கேன் மேனேஜ்” என்றாள் ப்ரீத்தி. 

“ சீ வாயக் கழுவு. என் அத்தான் ப்யூர், அவருக்கு செகண்ட் ஹேண்ட் என்னை மாதிரி துக்கிரி பொண்ணு எல்லாம் வேண்டாம். அவருக்கு பிடிச்ச பொண்ணா, தேவதை மாதிரி அவர் வாழ்க்கையில நீ வந்துட்ட. 

எங்களையும் புரிஞ்சவ. நாளை பின்ன ஒரு தேவைக்கு  அத்தானை உதவிக்கு கூப்பிட்டாலும் , நீ தப்பா நினைக்க மாட்ட. எனக்கு அது போதும்.” என்றவள், 

“ நீங்க இரண்டு பேரும் சந்தோஷமா வாழ்ந்தாலே , நாங்க எல்லாரும் வாழ்ந்த மாதிரி தான். சீக்கிரம் அவரை கல்யாணம் கட்டிக்கிட்டு ஒரு பிள்ளையை பெத்து குடுத்துடு. நாங்க வளர்த்துக்குறோம். இனி என்ன ஒரு கமிட்மெண்டும் கிடையாது” என வெற்றுப் புன்னகை சிந்தினாள் எழிலரசி. 

“சுப, சுப் . கிழவி மாதிரி பேசாதே. இனிமே தான் உனக்கு நல்ல காலமே இருக்கு” என்றாள் ப்ரீத்தி. 

“போதும், அந்த பணப் பேய் கூட எல்லாம் போயி என்னால வாழ முடியாது.” எனவும், 

“உன்னை யார் அங்க போக சொன்னது” என ப்ரீத்தி கோபமாக பேச, 

“உனக்கு எங்க ஆளுங்களை பத்தி தெரியாது. கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்னு  பஞ்சாயத்து பண்ணி சமாதானம் பண்ணி வைக்க பார்ப்பாங்க. அப்படி மட்டும் செய்யட்டும், அவனுக்கு விஷத்தை வச்சு கொன்னுட்டு, நான் ஜெயிலுக்கு போயிருவேன். பரதேசி நாயி. பன்னாடை. அவன் அப்பனுக்கா கட்டி இருக்குன்னு கேட்கிறான். நான் அவ்வளவு கேவலமா போயிட்டேனா. அப்பாவுக்காக தான் அவனை சகிச்சுக்கலாம்னு  மனசை தேத்தி வச்சுருந்தேன். அவருக்கே எமனா வந்தவனை என்னைக்குமே மன்னிக்க மாட்டேன். “ என திட்டி தீர்க்க, 

அவளை அனைத்துக் கொண்டவள், “போதும் டியர், பார்கெட் எவ்ரிதிங். புது வாழ்க்கை ஆரம்பிக்கலாம். எங்களோட மும்பை வந்துடு” என்றாள்.

“இந்த கிழவனையும், கிழவியையும் என்ன பண்றது. மதுரையை சுத்தின  கழுத்தையும் வெளியே போகாதும்பாங்க. அண்ணனும், தங்கச்சியும் வராதுங்க. அவுங்களை பார்த்துகிட்டே என் காலத்தை ஓட்டிடுவேன். கல்யாணம் ஆகலைங்கிற பேச்சும் இனி வராது. என் கோபத்தையும் எல்லாரும் பார்த்து இருப்பாய்ங்க. அழகர் மகள்ன்னு  இனி அலறுவாய்ங்க. எனக்கு வசதி தான்” என்றவள், நகைகளை கழட்டி பத்திர படுத்தி விட்டு, குளிக்க சென்றாள். 

 தலைக்கு குளித்து , ப்ரீத்தியின் பஞ்சாபி குர்தி ஒன்றை அணிந்து வந்தவள், தலையை துவட்டி குளித்த ஜாடை போட்டு ப்ரீதியோடு மருத்துவமனை நோக்கி சென்றாள்.    

 மருத்துவமனையில் , இந்திராணி மண்டபத்தில்  நடந்ததைச் சொல்லி, மகனின் தோளில் சாய்ந்திருந்தார்.

“ எனக்கு குத்த உணர்ச்சியா இருக்கு ராசா. அண்ணன் பேச்சை கேட்டு இருக்கவே கூடாது. வலுக்கட்டாயமா எழிலை உனக்கு கட்டி வச்சிருக்கனும். அதுக்கும் உன் மேல ஆசை தான். அண்ணன் ஜாதகத்தை காரணம் சொல்லவும் தனக்குள்ளவே ஒடுங்கி போச்சு. அப்பாவுக்காகவே கல்யாணத்துக்கு சம்மதிச்சுச்சு. அந்த கல்யாணமே, அண்ணனுக்கு எமனா போச்சு. இந்த அண்ணன் எதையுமே வெளியே சொல்லாது. பத்து லட்சம் கொடுக்கனுமுண்டு சொல்லியிருந்தா. நம்ம நிலத்தை வித்தாவது கொடுத்திருக்கலாம்” என புலம்பினார்.

“ அவனெல்லாம் எவ்வளவு காசு சம்பாதிச்சாலும் அடங்காத ஆளும்மா. இப்ப கொடுத்திருந்தாலும், மெல்ல மெல்ல மாமா உசிரை உருவாமல் விட மாட்டான்” மகன் சொல்ல, 

“ அதைச் சொல்லாத. மலை மாதிரி நிக்கிற என் அண்ணேன் சாஞ்சதே என் கண்ணு முன்னாடி வந்துக்கே இருக்கு. இனி எழிலு நிலமை என்னாகும். நீ  ப்ரீத்தியை என் கண் முன்னாடி கொண்டு வந்து நிறுத்தாம இருந்திருந்தா. கட்டுறா தாலியை எழில் கழுத்துலன்னு  சொல்லி இருப்பேன். அதுக்கும் வழி இல்லாமல் போச்சு. நம்மள நம்பி வந்த புள்ளைக்கு, துரோகம் ப்ண்ணக் கூடாது” அவன் மனதில் இருப்பதையே  அம்மாவும் சொல்லிக் கொண்டு இருக்க, மாமா எழுந்து வந்த பின் எழிலை குறித்து என்ன முடிவெடுப்பார் என்பதே அவன் சிந்தையை நிறைத்திருந்தது. 

‘என்ன ஆனாலும், கந்த வேலிடம் மட்டும் அவளை அனுப்பக் கூடாது’ என உறுதி எடுத்தவன், உடன் படித்த போலீஸ் நன்பனுக்கு போன் அடித்தான்.

எழிலின் நிலை என்னாகும்? 

மழை பொழியும். 

5 thoughts on “அன்பென்ற மழையிலே-10”

  1. எழில்…அவ மனசுல உள்ளதை பிரீத்தி கிட்ட சொல்லிட்டா….இந்திராணி அம்மா அவங்க மனசுல உள்ளைதையும் சொல்லிட்டாங்க….பிரீத்தி க்கு ….ezil-anbu கல்யாணம் நடந்தா …தான் ஒதுங்கிடுவெண்ணு சொல்லிட்டா….இனி என்ன நடக்க போதுன்னு பாப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *