மழை -11
“ ஹேய் ஏகே, இவன் ரொம்ப பண்றான். எனக்கு வர்ற கோபத்துக்கு, பேப்பர் வெயிட் எடுத்து அவன் மண்டையை உடைக்கனும் போல இருக்கு. டீல் வேணாம்னு ஒரு வார்த்தை சொல்லு, இவன் மண்டையை உடைச்சுட்டு வந்துடுறேன்” குறுஞ்செய்தியாக வந்து விழுந்த அணுக்குண்டைப் பார்த்த அன்பு,
“ டீல் வேணும். ப்ளீஸ் கீப் த பேஷன்ஸ் (கொஞ்சம் அமைதியை கடைப்பிடி) “ எனப் பதிலைத் தட்டிவிட,
“ என்னது கீப்பு பேஷன்ஸா, அவனை சமாளிக்கனும்னா, நான் கீப்பா தான் போகனும்” எதிர் உள்ளவன் மேல் உள்ள எரிச்சலில் பதில் அனுப்பினாள்.
“ ஷட்அப், யூ இடியட்.” என முகத்தைக் குத்துவது போல் ஆங்கிரி ஸ்டிக்கர் அனுப்பி விட்டு அவன் ஆஃப் லைன் சென்றுவிட, அனுப்பியவளுக்கு “ ஐயோ, வச்சு செய்வானே, மார் டாலேகா ” என உள்ளே ஆட்டம் கண்டது.
எதிரே இருந்தவனோ, “மிஸ் கௌர். யூ ஆர் பிஸிகலி ப்ரசண்ட் ஹியர். பட் நாட் மென்ட்டலி. கயி கோயி ஹுயி (எங்கோ தொலைஞ்சு போயிருக்க). லெட்ஸ் ஃபினிஷ் த மீட்டிங்” என இரண்டு மொழியிலும் கலந்துகட்டி கடுமையாய் சொற்களை உதிர்த்தபடி, லேப்டாப்பை மூட, ப்ரீத்திக்கு பொசுபொசுவென வந்தது.
“ லுக் மிஸ்டர் ராத்தோட், நான் பிஸ்னஸ் ப்ரபோஷல் எடுத்துட்டு வந்திருக்கேன். நீங்கக் கேட்டதுக்கான பதிலை கொடுத்துட்டு தான் இருக்கேன். அதுக்கும் மேல, பிஸிக்கல், மெண்டல்னு (மெண்டலில் அழுத்தம் கொடுத்து) பிணாத்த தேவையில்லை.” எகிற,
“ வாட் யூ ஆர். அதைத் தான் சொன்னேன்.” என்றான் ப்ரேம் ரத்தன் சிங் ராத்தோட், சென்னை சௌக்கார்பெட்டில் குடியேறிய ராஜஸ்தானி பிஸ்னெஸ் மேன். தங்கள் வணிகத்தைப் பெருக்க, சென்னையின் மையப் பகுதியில் புதிதாய் வாங்கிய இடத்தில் பழைய கட்டிடத்தை இடித்து, பிரம்மாண்டமான கட்டிடத்தை எழுப்ப இருக்கின்றனர். அதற்கான நிபந்தனைகளைப் பேசி ஒப்பந்தம் போட, ஏகேபி கன்ஸ்டரக்சன் சார்பில் அதன் டைரக்ட்டர்களிள் ஒருத்தியான ப்ரீத்தம் கவுர் வந்துள்ளாள், அவர்கள் இடையில் தான் இந்த சம்பாஷணை.
“ யூ டூ” என்றாள் ப்ரீத்தம் கௌர்.
“மிஸ்டர் அன்புக்காக உங்களை சகிச்சுகிறேன். அதுக்கும் ஒரு லிமிட் உண்டு. டோண்ட் கிராஸ் இட் ஓகே” அவனும் பொரிந்தான்.
அன்புவின் பெயரைச் சொல்லவும் கொஞ்சம் அடங்கினாள். ‘வார்த்தையை விட்டதுக்கே வச்சு செய்வான். டீலையும் லாஸ் பண்ணிட்டு போனேன். வீட்டுக்குள்ள எண்ட்ரி பாஸே கிடைக்காது. எவன்டா இவைங்களுக்கு அன்பு, ப்ரேமுன்னு பேர் வச்சான். சரியான கடூஸுங்க’ மனதில் திட்ட, ‘உனக்குக் கூடத் தான் ப்ரீத்தினு பேர் வச்சுருக்காங்க. நீ எப்படியாம்’ மனசாட்சி கேட்டது. இரண்டு வருடச் சென்னை வாழ்க்கையில் நன்றாகத் தமிழ் பேசப் பழகி இருந்தாள்.
“பஸ். பகூத் ஹோகய்” அவள் மனசாட்சியை அடக்கச் சொன்ன பதில், எதிரில் இருப்பவனுக்கும் பதிலாக மாறியிருந்தது.
புருவத்தை நெறித்தவன், “ ஐ வில் டாக் டு யுவர் பார்ட்னர் மிஸ்டர் அன்பு” பல்லைக் கடித்துக் கொண்டு சொல்ல,
அவன் முன் கண்ணாடி டம்ளரிலிருந்த தண்ணீரை எடுத்து,ஒரே மூச்சில் மடக் மடக்கென தன் தொண்டையில் சரித்துக் கொண்டவள், கண் மூடி தன்னை சமன் படுத்திக் கொண்டு,
“ ஓகே, லெட்ஸ் கம் டு த பாயிண்ட். தினமும் எல்லாம் உங்க ஆபீஸ்ல வந்து குப்பை கொட்ட முடியாது. வாரத்துக்கு ஒருநாள் வர்றேன்”
அவன் அசராமல் உட்கார்ந்து இருக்க, “இரண்டு நாள்” என்றாள்.
“நான் என்ன சப்ஜி விக்கிறேனா, பேரம் பேசுற”
“அதே தான் நானும் கேட்கிறேன். அழுகி போறதுக்கு சப்ஜி வியாபாரமா. உங்க கம்பெனிக்கு நாங்க பில்டிங்க் கட்டித் தரப் போறோம். டிசைன் ஃபைனலைஸ் பண்ணிட்டா அதே போலக் கட்டிக் கொடுத்துடுவோம். அப்டேசன் ஆன்லைனில் கொடுத்தா பத்தாதா. தினமும் நேரில் வந்து தரனும்கிறது என்ன அவசியம். நியாயமா எங்க ஸ்டாப் தான் வருவாங்க. டைரக்டர் இல்லை. உங்க பிடிவாதம், காசு போட்டவராச்சேன்னு பாவம் பார்த்து வர்றேன்னு சொல்றேன்” என்றாள் .
“இஸ் இட்” அவன் நக்கலாகச் சிரிக்க, “ஹாயரப்பா, முடியலை” என்றாள்.
“ வஹி தோ, அபி பிச்சர் பாக்கி ஹை” என்றான்.
“ எனக்கு உங்க ப்ராஜக்ட் ஒன்னு தான் இருக்கா. மற்றதுக்கும் மேனேஜ்மென்ட் நான் தான் பார்க்கனும். ட்ரை டூ அன்டர்ஸ்டான்”
‘ அன்டர்ஸ்டான்டிங்கு தாண்டி வரச் சொல்றேன், பஞ்சாபி குலாபி. இரண்டு வருஷம் முன்னாடி எவ்வளவு ஆட்டம் காட்டின, வா வச்சு செய்யிறேன்’ அவன் மனதில் கருவ,
“ இந்த ஏகே, எங்க வந்து என்னைச் சிக்க வச்சிருக்கான். என்னங்கடா உங்கப் ப்ளானு.’ என நொந்துக் கொண்டவள்,
“ பைனலி த்ரீ டேய்ஸ், உங்க ஆபீஸ்க்கு வர்றேன். டீல் ஒகேன்னா சொல்லுங்க. இல்லைனா, ஏகேபி கன்ஸ்ட்ரக்ஷனோட புது டைரக்ட்டர் உங்க ப்ராஜக்டை ஹேண்டில் பண்ணுவாங்க. “ என்ற குண்டை வீச,
“ஆப்கி மர்சி(உங்கள் விருப்பம்) “ என முடித்துக் கொண்டான்.
நேரில் அவளைக் கதறவிட்டவன், அவள் தங்கள் அலுவலகத்தை அடையும் முன் , ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு, மின்னஞ்சல் அனுப்பி இருந்தான்.
“ சாலா, வேணும்னே போட்டு பார்க்கிறான்” எனக் கரித்துக் கொட்டியவள், அலுவலகத்துக்குள் புயலெனப் புகுந்து, பதட்டத்தைத் தனிப்பதற்காக வைத்துள்ள, பன்ச் பேகை முடிந்த மட்டும் குத்தி கோபத்தைத் தனித்துக் கொண்டு, கூல்ட்ரிங்ஸ் ,ஐஸ் கிரீம் என உள்ளே தள்ளி கூல் செய்து கொண்டு, அடுத்த அட்டாக்கை எப்படிச் சமாளிப்பது என யோசித்துக் கொண்டே டைரக்டர் கேபினுக்கு சென்றாள்.
அன்புக்கரசனுக்கும், அவளுக்கும் அடுத்தடுத்த கேபின் நடுவில் வழியும் உண்டு. அவள் உள்ளே நுழையும் போதே, ராத்தோட்ஸ் டவர்ஸ் பற்றிய கலந்துரையாடல் நடந்து கொண்டிருந்தது. அது தான் ஏகே, ஒரு ப்ராஜக்ட் வந்தவுடன் அதற்கான ஆட்களை அலாட் செய்து வேலையைத் தொடங்கி விடுவான்.
ஏகேவின் முதல் பார்வை ப்ரீத்தி மேல் காரமாய் மேல் படிந்தது. அவள் அதிர்ந்து நிற்கும் போதே, சட்டென விரிந்த புன்னகையோடு,
“லெட்ஸ் காங்கிரஜுலேட் அவர் டைரக்டர் ப்ரீத்தம் கௌர், இது ஒரு முன்னோடி ப்ராஜெக்ட். குறைந்த இடத்தில், பெரிய வளாகம் கட்டுறது. நம்ம மும்பை ப்ராஜெக்ட்ஸ் பார்த்துட்டு தான், நமக்கு கொடுத்திருக்காங்க. அதை எஃபெக்டிவா ப்ரெசென்ட் பண்ணி, கணிசமான ப்ராஃபிட்டோட இந்த ப்ராஜெக்ட்டை வாங்கி கொடுத்தது, என் பாட்நெர் தான். வெரி ப்ரௌட் ஆப் ஹேர்” எனத் தோளோடு அணைத்து பாராட்டைத் தெரிவிக்க, அவளும் முகம் மலர்ந்தாள்.
“கங்கிராட்ஸ் மேம், வாழ்த்துக்கள் மேம்” “சூப்பர் மேம்” என எஞ்சினியர்கள், காஸ்ட் அனலிஸ்ட், ஹெச் ஆர் அசிட்டேன்ட எல்லோரும் வாழ்த்து தெரிவிக்க,
தலையசைத்து ஏற்றுக் கொண்டவள், அவன் கை காட்டவும், இந்த ப்ராஜெக்ட் எவ்வளவு முக்கியம் என்பதை விவரித்தாள்.
“ இம்பார்ட்ண்ட் நோட்ஸ், ப்ளீஸ் அப்டேட் ஈச் அண்ட் எவ்ரி ப்ராக்ரஸ் டு மீ. நான் தான் மிஸ்ட்ர. ராத்தோட்க்கு பதில் சொல்ற இடத்தில் இருக்கேன்” என்றாள்.
சில விவாதங்களோடு, அவரவருக்கான வேலையைப் பிரித்துக் கொடுத்து, முடிச்சு அனுப்பிடுங்க” என அனைவரையும் அனுப்பி விட்டு, அவள் புறம் திரும்பினான்.
மற்றவர் வெளியேறும் வரை அமைதி காத்தவன், “ என்ன சொன்ன?” என ஆரம்பிக்க
“ எழிலை நான் பிக்கப் பண்றேன்னு ப்ராமிஸ் பண்ணியிருக்கேன். அல் ரெடி லேட். ஷாப்பிங்க் போயிட்டு, டின்னர் முடிச்சிட்டு தான் வீட்டுக்கு வருவோம். ம்மமிஜி, பாப்பாஜிக்கிட்ட இன்பாஃர்ம் பண்ணிடு ஏகே” என்றவள், அவன் பதிலுக்கும் காத்திருக்காமல் பை சொல்லிக் கிளம்பி ஓடியே விட்டாள்.
“இது ஒரு குண்டு பிசாசு அது குச்சி பிசாசு, இரண்டும் சேர்ந்து என்னை வச்சு காமெடி பண்ணிக்கிட்டு இருக்காளுங்க. காலத்துக்கும் நீ பிரம்மச்சாரி தாண்டா. நல்லவன்கிற பேரை காப்பாத்த நான் படுற பாடு. ஷ் அப்பா. முடியலை.” எனப் புலம்பியவன்,
“ இந்த இரண்டு வருஷத்தில் நடந்து ஒரே நல்ல விசயம். அம்மா மாமா, எழிலு, ப்ரீத்தி, நானு எல்லாரும் ஒரே வீட்டில் இருக்கிறது தான் “ என்ற நினைவோடு வேலையில் மும்மரமானான். மணி ஒன்பதைக் கடந்து போது, அழகர் போனடிக்கவும் தான், மணியைப் பார்த்து விட்டு,
“ இதோ கிளம்புறேன் மாமா. எனக்காக வெயிட் பண்ண வேண்டாம், இந்த ட்ராபிக்ல நான் வர ஒன்றரை மணி நேரம் ஆயிடும். இரண்டு பேரும் சாப்பிட்டு படுங்க” என்றான்.
“ இப்படி நேரங் காலம் இல்லாமல் வேலை பார்த்து சம்பாதிச்சு என்ன செய்ய போறீங்க. அது அது காலகாலத்தில நடக்கனும் மாப்பிள்ளை . ப்ரீத்தியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்க்கையில் செட்டிலாகுற வழியை பாரு” என்றார்.
“ அப்போ எழிலுக்கு என்ன வழி.” என்றான்.
“ தெரிஞ்சா செய்யமாட்டேனா. எல்லாம் விதி” என்றார்.
“ இரண்டு பேரும் வந்துட்டாங்களா” என விசாரித்தான்.
“ இப்ப தான் வந்துச்சுங்க. அது தான் உன்னை காணோமேன்னு கேட்டேன். அம்மா காத்துக்கிட்டு கிடக்கு, சீக்கிரம் வா சாமி” என போனை வைத்தார்.
எழிலுக்கு , கந்தவேலு திருமணம், மற்றும் முறிவு, அழகரின் மாரடைப்பு என்ற மோசமான நிகழ்வுகள் நடந்து இரண்டு வருடங்கள் ஓடியிருந்தது.
அழகர் அந்த மாரடைப்பிலிருந்து மீண்டு வரவே ஒரு மாதம் ஆனது. மருத்துவமனையில் இருபது நாள் சிகிச்சை பெற்றார். மொத்த செலவையும் அன்பு ஏற்றுக் கொண்டான். முன்று நாட்கள் இருந்து அழகர் அறைக்கு வரவும் மும்பை சென்றவன், கம்பெனி பார்ட்னர்ஷிப்பை ப்ரீத்தியின் அண்ணன் பெயரில் மாற்றி விட்டு, தான் சம்பளத்துக்கு வேலையிலிருந்து கொள்வதாகச் சொன்னான்.
அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ப்ரீத்தி, மொத்தமா கம்பெனியை வித்துடுவோம். மறுபடியும் புதுசா ஆரம்பிப்போம்” என்றாள்.
ஆனால் அவர்களுக்கு வேலைக் கொடுக்கும் எம் என்சி, சென்னையில் பெரிய ப்ராஜக்ட்டை ஆரம்பித்து ப்ராபிட் ஷேரிங்கில் அவர்களிடமே கொடுத்தது. வேலை அதிகம் இருக்கும். ஆனாலும் சரி என ஒப்புக் கொண்டான்.
மதுரையில் அவனுக்குத் தெரிந்த போலீஸ் நண்பன் மூலமாக கந்தவேலுவின் மீது வரதட்சணை கேஸ் எழிலரசியைக் கொடுக்க வைத்தான்.
அழகர், தன் மேல் பழியைப் போட்டுக் கொண்டு கந்தவேலு சார்பில் பேச, எழில் தயங்கினாள்.
“ உன் சாமர்த்தியத்தினால மாமா பிழைச்சுக்கிட்டார். இல்லைனா” என்று கேட்க அவளுக்கு உள்ளே ஆடியது.
ஆனால் இவர்கள் புகாரளிக்கும் முன்பே, கந்தவேலு, எழிலின் கழுத்திலிருந்து தாலியைப் பறிக்கும் வீடியோ வைரலாகி , அவனைக் கைது செய்ய வேண்டும் என மகளிர் அமைப்புகள் வலியுறுத்த ஆரம்பித்தன.
காவல்துறையே கந்தவேலு மீது நடவடிக்கை எடுத்தது. அதனால் பஞ்சாயத்துப் பேசி இவர்களைச் சேர்த்து வைக்கும் முயற்சி கைவிடப்பட்டது.
‘மகளின் நிலை என்ன ஆகும்’ என்ற கவலை அழகரைத் தின்றது. மீண்டும் பலவீனம் ஆனார். அன்புவும், ப்ரீத்தியும் அலுவலை ஒதுக்கி வைத்து விட்டு, அழகரைப் பார்க்க வந்தனர்.
அழகர் , “அந்த போலீஸ்காரரு உன் பிரண்டு தானாம்ல கந்தவேலு மேல போட்ட கேஸை முடிச்சு விடச் சொல்லு ஐயா. என் மகளுக்கு கல்யாணம் ஆகனும்னு பணம் தர்றேன்னு ஒத்துக்கிட்டது நான் தான்.” என மன்றாட அவன், “நீங்க முதல்ல எந்திரிச்சு வாங்க. அப்புறம் எல்லாம் பேசிக்கலாம்” என்று கோபமாக வெளியேறி விட்டான்.
ப்ரீத்தியிடம், “ மாப்பிள்ளை வயசு கோளாறுல பேசுறான்மா. தாலி ஏறி இரண்டு மணி நேரத்தில் அறுத்த பிள்ளையை எவன் கட்டுவான். எனக்கு அப்புறம் என் மகள் ஒத்தையில் நின்றுவா. கொஞ்சம் சொல்லுத்தா” என்றார்.
“ ப்ப்பாஜி, எழிலை ஏகே க்கே கல்யாணம் பண்ணி கொடுத்திடுங்க. நான் விலகிக்கிறேன்” என்றாள்.
“ ஆத்தி, என் பொண்ணை வாழ வைக்கிறதுக்காக ஊரான் வீட்டுப் புள்ளைக் கண்ணைக் குத்துச் சொல்றியா. வேணடாம் ஆத்தா.அந்த பாவமும் எங்களை வந்து சேர வேண்டாம். நீ சொன்னதே போதும். உன் நல்ல மனசு புரிஞ்சிடுச்சு” என்றார்.
“ உங்கள் உடல் நிலையை விட எழிலுக்கு மனநிலை மோசமா பாதிக்கப் பட்டு இருக்கு. எந்த முடிவா இருந்தாலும், அவ சம்மதம் இல்லாமல் செய்யாதீங்க” என்றாள் ப்ரீத்தி.
வீட்டுக்கு வந்த பிறகு , அழகர் மகளிடம் பேசினார். “ போதும்பா. ஒரு தடவை மணமேடை ஏறி அசிங்கப் பட்டது எல்லாம் போதும். நான் உங்க மகளாவே இருந்துக்குறேன். நான் சுமைனு நினைச்சிங்கன்னா சொல்லுங்க, நான் படிச்ச காலேஜ்ல இருக்கவுங்க மாதிரி மதம் மாறி கன்னியாஸ்திரீயா போயிடுறேன்” அவள் கண்ணீரோடு சொல்ல,
“ இல்லை ஆத்தா இல்லை. நீ என்னோட என் மகளாவே இரு” என்று விட்டார்.
அழகர் ஒப்புக் கொண்டாலும் அவளது அண்ணன்மாரும், சொந்தமும், சுற்றமும் கடந்த காலத்தை நினைவு படுத்திக் கொண்டே இருக்க, இந்திராணி மூலம் அதை அறிந்த அன்பு எழிலரசிக்கு தாங்கள் கட்டும் குடியிருப்புக்கு அருகில் உள்ள பள்ளியில் வேலை வாங்கிக் கொடுத்து, மூவரையும் இங்கு அழைத்து வந்து விட்டான்.
எழில், ப்ரீத்திக்காகப் பார்க்க, கம்யூனிட்டி லிவ்விங்க் போல் ஒரே கூட்டில் ஆளுக்கு ஒரு அறையை ஒதுக்கி, ஒரே கிச்சன், கூடம் என அன்பு இல்லத்தை அமைத்தான்.அண்ணன் தங்கை அவர்கள் மக்கள் என ஒரு பாண்டிங்கோடு அவர்கள் வீடு ஓடிக் கொண்டு இருந்தது.
எழில், இந்திராணி அழகர் மூவரும் ப்ரீத்தியை ,அன்புவை மணந்து கொள்ளச் சொல்லி வலியுறுத்த, ப்ரீத்தி எழிலை மணந்து கொள்ளச் சொல்லி அன்புவை வலியுறுத்திக் கொண்டு இருந்தாள். ப்ரீத்தியின் அண்ணனுக்கு , தங்கை அனபுவின் குடும்பத்தோடு அவள் இருப்பதே பெரிய ஆறுதலாக இருந்தது. ஏனெனில் ஆரம்பம் முதலே அவர்களிடம் பெரிய ஓட்டுதல் இல்லை.
அன்புக்கரசன் , எழிலுக்கு வாழ்க்கை அமைந்த பின்னர் தான் தனக்கு வாழ்க்கை என்பதில் உறுதியாக இருந்தான். ப்ரீத்தி, எழிலை மணந்துகொள்ளச் சொல்லி அவனை வற்புறுத்தும் போது , “என்னை டார்ச்சர் பண்ணாதிங்கடி. இரண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு போங்க, நான் சாமியாரா போறேன்” எனக் கடுப்படித்தான்.
ஒரே வீட்டிலிருந்த போதும் எழிலரசி, அன்புவை தனிமையில் சந்திப்பதையும் , அத்தான் என்ற சொல்லையும் கூட தவிர்த்தாள். அவள் பணிபுரியும் பள்ளியும், பிள்ளைகளுமே அவள் உலகம் ஆகினர்.
வழக்கம் போல் அண்ணனும், தங்கையும் தங்கள் பிள்ளைகளுக்காக ஊரை விட்டு வந்து, ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாகப் பழங்கதை பேசி, பிள்ளைகளின் நலனுக்காகக் கோவில், கோவிலாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தனர். இந்திராணி, அண்ணனின் உடல் நிலையில் மட்டுமின்றி, அன்பு, எழிலுக்குப் போலவே, ப்ரீத்திக்கும் பெறாத தாயாக மாறி இருந்தார்.
ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த அன்பே, இங்கு பெரும் பிரச்சனையாக மாறி இருக்க, புதிதாக என்ட்ரி கொடுத்திருக்கும் பிரேம், ரத்தன் சிங் ராத்தோட் இதற்குத் தீர்வாக அமைவானா ..
மழை பொழியும்.
Good going. Prem ezhil pair? Intresting
apdiyum vaikalamo. avanai veetuku varavalaipom. thanks a lot
Anbu ezhlil seekiram seranum…. Prem preethi semma pair😍😍😍 sand kozhi pair….
catch the point… paarpom. thankyou for support.
Interesting😍
Nice