மழை -13
எழிலும், ப்ரீத்தியும் வீட்டுக்கு வரும் நேரம் இந்திராணி மகனுக்காகச் சமைத்து வைத்து விட்டு உட்கார்ந்திருந்தார். மால் கிளம்பும் போதே பெண்கள் தகவல் கொடுத்திருக்க, பெரியவர்கள் சாப்பிட்டு முடித்திருந்தனர்.
அழகர், அன்புவிடம் அலைபேசியில் பேசி விட்டு வந்து தகவல் தந்திருக்க,
“ இந்த பையன் ஏன்தான் இப்படி இருக்கானோ நேரத்தில சாப்பிட வேணாமா.” எனக் கவலைப்பட,
“ ம்மமிஜி நீங்க இருக்கிறதினால் வீட்டுச் சாப்பாடாவது கிடைக்குது. இல்லைனா ஹோட்டல் தான்” என்றாள் ப்ரீத்தி.
“ பொம்பளை புள்ளை தான சமையல் தெரியாதா. நாளைக்குப் புள்ளை பெத்தா அதுக்கும் ஹோட்டல்ல இருந்து தான் வாங்கி கொடுப்பியா” என்று கேட்க
“ அது தான் நீங்க வந்துட்டிங்கல்ல. நோ ப்ர்ப்ளம்.” என்றாள்.
“ நல்லா தாண்டி, எங்க காலத்தில எல்லாம் சமையல் ருசியை வச்சு தான் புருஷன் மனசுல இடம் பிடிக்கனும்னு சொல்லுவாக.” எனவும்,
“ உங்களுக்கு அது ஒன்னு தான் வழி. இங்க ப்ரீத்தி பிஸ்னஸ் பார்ட்னர். உங்க மகனுக்குச் சமமா சம்பாதிக்கிறா. வேணும்னா சமையல் வேலைக்கு ஆள் போட்டுடுவாங்க. ஒன்னு இருந்தா, ஒன்னு இருக்காது. அதெல்லாம் விடுங்க. உங்களுக்குப் பேரக் குழந்தையைப் பார்க்க வேண்டாமா, சீக்கிரம் இவங்க இரண்டு பேருக்கும் கல்யாணத்தைப் பண்ணி வைங்க” என எழில் தூண்டி விட,
“ நானும் சொல்லிக்கிட்டே தான் இருக்கேன். இரண்டு பேருமே பிடி கொடுக்க மாட்டேங்கிறாங்களே” என்றார் இந்திராணி.
“ மம்மிஜி, எழில் செட்டில் ஆனா தான், நாங்க அடுத்த ஸ்டெப் எடுத்து வைப்போம். இவளை முதல்ல கல்யாணம் பண்ணிக்க சொல்லுங்க. “ ப்ரீத்தி வாதாட,
“ அது தான் ஆகிடுச்சே. இன்னொரு தடவை அந்த குழியில் விழ நான் தயாரா இல்லை” பிடிவாதமாக மறுத்தாள் எழில்.
“ அது கல்யாணம்னு சொல்லாத. ஒரு ஆக்ஸிடன்ட் விபத்து. உனக்கு வெளியே இருக்க மர்த் மேல நம்பிக்கை இல்லைனா, ஏகே வை மேரேஜ் பண்ணிக்கோ. ஐ ஹவ் நோ அப்ஜக்ஷன்” என ப்ரீத்தி சொல்லவும்,
“ அட சும்மா இருத்தா. ஜாதகம் பொருந்தி இருந்தா, என்னைக்கோ, கட்டுறா தாலியைனு சொல்லி இருக்க மாட்டேனா” அழகர் மீண்டும் ஆரம்பிக்க, “பாப்பாஜி, அந்த கல்யாணம் குண்டலி பார்த்து தானே கல்யாணம் பண்ணி வச்சீங்க, அப்புறம் எப்படி அப்டி ஆச்சு” என வாதாட,
“அது கந்தவேலு பண்ணுன தப்பு. பணத்துக்கு ஆசைப்பட்டு, பாப்பா ஜாதகத்துக்கு ஒத்து வர்ற மாதிரி , தன ஜாதகத்தை எழுதி கொடுத்துருக்கான். அதெல்லாம் அப்புறம் தானே தெரியுது.எதோ நாங்க படணுமுன்னு இருந்துருக்கு” என்றார்.
“நீங்க ஜாதகமே பார்க்காம, ஏகேக்கும், எழிலுக்கும் ஷாதி பண்ணி வச்சிருக்கணும்” ப்ரீத்தி மீண்டும் சொல்ல,
“கல்யாணத்துக்கான அடித்தளம் நேசமா இருக்கனும். கடமையா இருக்கக் கூடாது. இதுக்கப்புறம் உன்கிட்ட பேச எதுவும் இல்லை” என்ற எழில் தான் வாங்கி வந்த பொருட்களை எடுத்துக் கொண்டு தன் கூட்டில் அடையச் சென்றுவிட்டாள். இனி ஒரு வாரத்துக்கு அந்தக் கூட்டுக்குள் தான் இருப்பாள்.
இந்திராணி, “ நான் வளர்த்த பிள்ளைக்கு ஏன் தான் இப்படி விதி போட்டுச்சோ. நானாவது கல்யாணம் கட்டிக்கிட்டடு போயி நாலு வருஷம் வாழ்ந்துட்டு, ஒத்தை மகனோட வந்தேன். இதுக்கு பொம்மை கல்யாணம் மாதிரியில்ல ஆகிப் போச்சு” எனக் கண்ணீர் விட, அழகர் கண்ணீரை மறைத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்றார்.
“ அழுவாதீங்க ம்மமிஜி. பேசிப் பேசி தான் எழில் மனசை மாத்தனும். எழிலுக்கு மறுபடியும் ஷாதி பண்ணுவோம். “ என உறுதியாகச் சொல்ல,
“ அப்படி மட்டும் நடந்து அது சந்தோஷமா வாழ்ந்துச்சுனா, ஆயிசுக்கும் நான் உனக்குச் சேவகம் பண்றேன் ஆத்தா” என்றார். இருவரும் கட்டிக் கொண்டு அன்பைப் பரிமாறினர்.
“ நீ ஓஞ்சு வந்திருப்பேண்டு தெரியும், இருந்தாலும் போயி உடுப்ப மாத்திட்டு வந்து, அன்பு வுக்கு சாப்பாடு பரிமாறுறியா. நான் நிண்டா திட்டுவான்” எனவும்
“ எனக்கும் பரிமாறனும்னு ஆசை தான் மம்மிஜி. ஆனா பாருங்க. அவரோட வேலை தான்.நைட் குள்ள முடிச்சு வைக்கனும். நீங்க புட் எடுத்து வைங்க. ஏகே வந்து சாப்பிட்டுக்கும்” என்று விட்டு மாடிக்கு ஓடியே விடட்டாள். ஏனெனில் கீப் பேஷன்ட்ஸ் க்கு அவள் கொடுத்த ரிப்ளைக்கு, அவனிடம் வாங்கி கட்டிக் கொள்ள வேண்டியது இருந்தது. முடிந்த வரை தள்ளிப் போட்டால், கொஞ்சம் குறைவாகத் திட்டு விழும்.
“ நல்ல பொம்பளைங்க. இது என்ன வாழ்க்கை. எதுக்கு இந்த பொழப்பு” என மேஜை மீது சாப்பாட்டை எடுத்து வைத்து விட்டு, நகரம் கற்றுக்கொடுத்த வழக்கப்படி கதவைச் சாவி கொண்டு பூட்டி தன் அறைக்குச் சென்று விட்டார்.
அலுவல் முடிந்து வந்த அன்பு தன்னிடமிருந்த சாவியை வைத்து கதவைத் திறந்து, மறுபடியும் பூட்டி தன்னறைக்கு சென்று குளித்து உடை மாற்றி வந்தான்.
பாட்டிலில் தண்ணீர் நிரப்பிச் செல்ல மறந்த எழிலரசி கீழே வர, டைனிங்க் டேபிளில் ஒவ்வொரு பாத்திரமாகத் திறந்து உருட்டிக் கொண்டு இருந்தான் அன்பு.
சாதாரணமாக அன்புவின் நடமாட்டம் இருந்தால் தன் அறைக்குள் அடைந்து கொள்பவள் இன்று மாலில் பிரேமை பார்க்கவும் அன்புவிடம் பேச வேண்டும் என முடிவெடுத்தாள்.
அவன் சாதத்தைப் போடவும், “ ஒரு நிமிஷம்” என ஆறியிருந்த குழம்பு காயை, மைக்ரோ வேவ் ஓவனில் சுட வைத்து எடுத்து அவனுக்குப் பரிமாற, “ தாங்க்ஸ். நான் போட்டுக்குறேன். நீ போய் படு” என்றான்.
தனது பாட்டிலில் நீரை நிரப்பியவள் , அவன் சாப்பிடும் வரை வேறு வேலை இருப்பது போல் அடுப்படியில் ஊசல் ஆடினாள்.
சாப்பிட்டு முடித்தவன் பாத்திரத்தை முட, மிச்சம் மீதியைச் சின்ன கின்னங்களில் வழித்து ஃபிரிட்ஜில் பத்திரப்படுத்த அவனும் உதவினான். மவுன படமாக எல்லாம் நடந்தது. ப்ரீத்தியைப் பற்றி, அவனிடம் பேசலாமா வேண்டாமா, தப்பாக எடுத்துக் கொள்வானா என உழன்று கொண்டிருந்தாள்.
அவள் உடல் மொழியிலேயே அதே உணர்ந்தவன்”எதுவும் பேசனுமா” என்றான். இல்லை ,ஆமாம் என மாற்றி மாற்றி தலை ஆட்டியவள், சொல்வதா வேண்டாமா எனக் குழம்பி, அவன் தன்னையே பார்த்து இருப்பதை உணர்ந்து,
“ அவள் மேல சந்தேகப்பட்டு இதைச் சொல்ல வரலை. ஆனால் அந்த ஆள் கொஞ்சம் டேஞ்சரஸ். டேஞ்சரஸ்னா, நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. இவர் வேற மாதிரி. அவளை அட்ரேக்ட் பண்ணிடுவார். சீக்கிரம் நீங்க இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்குங்க. இல்லைனா டீலை கேன்சல் பண்ணிடுங்க” தன் மனதில் பட்டதைச் சொல்ல,
“ நீ என்ன சொல்ற, எனக்கு எதுவுமே புரியலை. அவள் யாரு அவர் யாரு” என விளங்காமல் கேட்டான்.
“ இன்னைக்கு மால்ல நானும், ப்ரீத்தியும் ஒருத்தரை சந்திச்சோம்” மடமடவென பிரேமை பற்றிச் சொல்லி முடிக்க, அவளையே பார்த்திருந்தவனுக்குக் கோபம் பலியாய் வந்தது.
“ ஷட் அப் அரசி. இது பேட் மேனர்ஸ். ப்ரீத்தி உன்னை ப்ரண்டுக்கும் மேல ஒரு சிஸ்டர் மாதிரி பழகுறா. அவளைப் பத்தி இப்படி பேசறது சரியில்லை “ என்றான் கண்டிப்பாக.
நான் என்ன சொல்றேன், இவர் என்ன சொல்றாரு என்ற கோபம் அவளுக்கும், முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு,
“ நான் ஒன்னும் புறணி பேசலை. ரியாலிடியை சொன்னேன். அவகிட்ட நேராவே சொல்லிட்டேன். அவ அதை சீரியஸா எடுத்துக்காமல் சிரிச்சா. அதனால தான் உங்க கிட்ட சொல்றேன். அவளைச் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்குங்க, இல்லைனா என்னைய மாதிரி ஏமாந்து தான் நிற்கனும்”
“ நீ என்ன ஏமாந்து நின்ன?” தான் உலறியது புரிந்தது.
“ சொல்றது சொல்லிட்டேன் அப்புறம் உங்க இஷ்டம்” மாடியை நோக்கிச் செல்ல,
“ என் பர்சனல்ல தலையிட மாட்டேன்னு சொன்ன. இது என்ன?” என்றான்.
சத்தம் கேட்டு மாடியிலிருந்து இறங்கி ப்ரீத்தி, “ ஏகே, வாட் ஹேப்பண்ட்” என எழிலின் கையை ஆதரவாகப் பிடித்தாள்.
“ அவ என்ன சொன்னான்னு கேளு, நம்ம சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கனுமாம். இல்லைனா.. ச்சை சொல்றதுக்கே “ என அவன் பேச்சை நிறுத்த,
“ ஓஹ்ஹோ, இதுக்கு தான் இவ்வளவு பெரிய சீன் கிரியேட் பண்ணியா. என்கிட்டையும் தான் சொன்னா. அதில என்ன தப்பு இருக்கு. தன் அத்தான் ஏமாந்து போயிடக்கூடாதேன்னு சொல்லியிருக்கா”
“ ஷீ இஸ் ப்ளேமிங்க் யூ. நீ என்னை விட்டுட்டு இன்னொருத்தனோட போயிடுவன்னு பச்சையா சொல்றா.” எனக் குற்றம் சாட்ட,
“இல்லை, மிஸ்டர் பிரேம் ரத்தன் சிங் ராத்தோட், என்னை மயக்கிடுவான்னு சொல்ற. இப்போ வரைக்கும் அவன் வார்த்தைக்கு மண்டையை ஆட்டிகிட்டு தானே இருக்கோம்” ப்ரீத்தி சொல்ல,
“எக்சாட்லி , ஹி இஸ் வெரி டேஞ்சரஸ்” எழில் ஒத்து ஊத,
“ஹி இஸ் எ ஜென்டில் மேன். கேட்கிறதா இருந்தாலும், முகத்துக்கு நேரா கேட்டுடுவான். சோ அவனைப் பத்தி கவலைப்பட வேண்டியது இல்லை” அன்பு சொல்ல, எழில், ‘இது மாதிரியே எல்லாரும் சாமியாரா வா இருப்பாங்க.’ என முறைக்க, ப்ரீத்தி எழில் சொல்லவரும் விஷயத்தை என்னைச் சிரித்தாள்.
“அதை விடு, நான் அவளை ஏமாத்துன மாதிரி, அவ ஏமாந்த மாதிரியும் சொல்றா, அது என்னனு கேளு ” அவன் குற்றம் சாட்ட,
“ அது தானே உண்மை. அவ உன்னை காதலிச்சது உண்மை” ப்ரீத்தி அன்புவின் முன்னே வைத்தே சொல்லவும், எழிலுக்குச் சங்கடமாய் போனது.
“ நான் அப்படிச் சொன்னேனா. அத்தை மகன், மாமா மகளுக்குள்ள கல்யாணம் செய்வாங்ககிற பொது விதியை தான் சொன்னேன். அது தான் ஜாதகம் சேரலைனு சொல்லிட்டாங்கல்ல. அதோட அந்த மேட்டர் ஓவர். ஈவன் எனக்குக் கல்யாண ராசியே கிடையாது. அதனால தான் தாலி கட்டி இரண்டு மணி நேரத்தில் அறுத்திட்டு போயிட்டான். என்னைக் காரணம் காட்டி, உங்க கல்யாணத்தைத் தள்ளி போடாதீங்கன்னு தான் சொல்றேன். நான் இங்க இருக்கிறதுனால தான், உங்க கல்யாணம் தள்ளி போகுதுன்னு எனக்கு கில்டியா இருக்கு. நான் இங்கிருந்து மூவ் ஆன் ஆகிக்கிறேன்” என்றாள்.
“ எப்படி. எப்படி மூவ். ஆன் ஆகப் போறேன்னு சொல்லு. நாங்க ஹெல்ப் பண்றோம். உனக்குன்னு ஒரு துணையைத் தேடி வைக்கிறோம்” என்றான் அன்பு.
“ கல்யாணம், கல்யாணம், கல்யாணம். அதைத் தவிர வாழ்க்கையில் வேற ஒன்னுமே இல்லையா” அவள் கோபப்பட
“ அதையே தான் நாங்களும் கேட்கிறோம். நாங்க பாட்டுக்கு இருந்திட்டு போறோம். நீ ஏன் எங்களை ஃபோர்ஸ் பண்ற” ப்ரீத்தி கேட்க,
பெருமூச்சு விட்டவள், “ என்னமோ பண்ணுங்க. பட்டா தான் தெரியும்னு விதி இருந்தா, யாரால மாத்த முடியும். கூடிய சீக்கிரம் நான் கிளம்பிடுவேன். அப்புறம் உங்க பாடு” என அவள் சொல்லிச் செல்ல, அன்பு தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தான்.
“ ஏகே கூல். செய்யறவங்க சொல்ல மாட்டாங்க” எனத் தேறுதல் சொல்ல
“ என் குற்றவுணர்ச்சியைத் தூண்டி விட்டுட்டே இருக்கா. உன்னைக் கல்யாணம் பண்ணினாலும் சந்தோஷமா வச்சுக்குவேனான்னு எனக்குச் சந்தேகம் வருது” என்றான்.
“ உன்னால யாரையும் ஹேர்ட் பண்ண முடியாது ஏகே. அது அவளுக்குப் புரியலை. இன்னைக்கு அவள் வாங்கின நாவல்ஸ் பார்த்தேன். எல்லாமே சடையர். சோகமான எண்டிங்க் உள்ள கதைகள். அவ அந்த உலகத்தில் வாழ ஆரம்பிச்சுட்டா. அவளை இதிலிருந்து வெளியே கொண்டு வரனும்” என்றாள்.
“ என்னை என்ன பண்ணச் சொல்ற” என்றான்.
“ அவ. உன்னையும் ஷாதி பண்ணிக்க மாட்டா. உன்னைத் தவிர வேற யாரையுமே ஷாதி பண்ணிக்க மாட்டா.
உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சுன்னா இங்கிருந்து கிளம்பிடுவா” ப்ரீத்தி சொல்ல,
“ சுத்தமா குழப்புற” என்றான்.
“ உன்னை ஷாதி பண்ணிக்க அவளுக்கு ரொம்ப இஷ்டம். அதுக்கு இரண்டு விசயம் தடையா இருக்கு. ஒன்னு ஜாதகம். இரண்டாவது அவளை நீ காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கிறா. இது இரண்டுமே நடக்காதுன்னு அவள் நம்புறா. நம்ம ஷாதியை பார்த்துட்டா, இதே கற்பனை உலகத்தில் சோக கீதம் வாசிச்சிட்டு காலத்தை ஓட்டிடலாம்கிறது அவ ப்ளான்.” என்றாள்.
“ ஓ நோ. ஒரு குடும்பத்தை நடத்துறதுக்கு உள்ள எல்லா குணாதிசயமும் உள்ள நல்ல பொண்ணு. நல்ல மனைவியா அம்மாவா இருப்பா. அரசி அதை இழக்கக் கூடாது” என்றான்
“ அது உன் கையில் தான் ஏகே இருக்கு. உனக்கு எழிலையும் விட முடியலை. என்னையும் விட முடியலை. இரண்டு பேரையுமே கடமையா தான் பார்க்கிற. ஆனால் வாழ்க்கையை நடத்தக் கடமையை விடக் காதல் முக்கியம். அது நானா, எழிலான்னு நீ தான் முடிவு பண்ணனும். போல்டா ஒரு முடிவை எடு. நீ எழிலை சூஸ் பண்ணாலும், எனக்கு ஓகே தான். அவளை விட நான் சீக்கிரம் மூவ் ஆன் ஆகிடுவேன்”
“ என்னைப் போட்டுக் குழப்பாதே. லீவ் இட். போய் படு” என்றவன், நினைவு வந்தவனாக,
“ ஹேய் ப்ரியூ இங்கே வா. இந்த மெஸேஜ்க்கு என்ன அர்த்தம் “ என சரமாரியாகக் கேள்வி கேட்டு, “என்னை அவ்ளோ சீப்பான ஆளா ஒரு பொண்ணை அனுப்பி டீல் கிராக் பண்ற ஆளுன்னு நினைச்சிட்டு இருக்கியா” எனக் கடுமையாகக் கேட்க,
“ நோ ஏகே, யூ ஆர் மை சேவியர். கித்னே கந்தே ஆக்கோ ஸே முஜே பசாயா. நான் தப்பா சொல்லலை. ஃப்லோல வந்துடுச்சு” என்றாள்.
“ அப்படி உன்னை விட்டுக் கொடுத்துத் தான் எனக்கு அந்த டீல் கிடைக்கனும்னு அவசியமில்லை. இதைக் கால் ஆஃப் பண்ணுவோம்.
ஐ வில் டாக் டு மிஸ்டர் ராத்தோட்” என்றான்.
“ நோ, நோ. இது நமக்கு சேலஞ்சான ப்ராஜக்ட். இன்னைக்கு போன மாலை அவன் சுத்தி காமிச்சான். நீ பார்த்தேனா அதை விடப் பக்கா டிசைன் போட்டுடுவ. ப்ரொசீட் பண்ணுவோம்” எனச் சமாதானப் படுத்த,
“ உனக்கு அன்கம்ஃபோர்டா பீல் ஆனாச் சொல்லு, ராத்தோட் கூட நான் டீல் பண்ணிக்கிறேன்” என்றான்.
“ஜெலன் ஹோ யஹா ஹை க்யா.* என அவனை பாரத்து கண்ணடிக்க,
“கொன்ருவேன். போடி” என அவள் தலையில் கொட்டி அனுப்பி வைத்தான்.
தன் படுக்கையில் சென்று படுத்தவனுக்கு, ‘இரண்டு பேர் மேலையும் எனக்கு இருக்கிறது. கடமை தானா. காதல் இல்லையா’ என தனக்குத் தானே கேட்டுக் கொண்டான்.
அன்பு மழை பொழியும்.
Super. Good intresting
Super😍