Skip to content
Home » அன்பென்ற மழையிலே-14

அன்பென்ற மழையிலே-14

ப்ரேம் ரத்தன் சிங் ராத்தோட், சென்னையில் செட்டிலான ராஜஸ்தானி குடும்ப வாரிசு. பெரிய கூட்டுக் குடும்பத்தில் இவன் வயது ஆண்கள் எல்லோருமே மணமாகி செட்டில் ஆகி விட்டனர்.

ஐந்து வருடம் முன்பே, பெண்பார்த்து நிச்சயித்து ஷாதி நடக்க இருந்த நேரத்தில் பெருந் தொற்று அரக்கன் வந்து அவனது பெற்றோரைக் காவு வாங்க, அவர்களது தொழிலும் ஆட்டம் கண்டது. திருமணமும் தடைப்பட்டது. கூட்டுத் தொழிலாக இருந்ததைப் பங்காளிகள்  பங்கு பாகம் பிரித்தனர். குடும்பங்களும் பிரிந்தது. மற்றவருக்கு குடும்பம் இருக்க, தனி மரமாக நின்ற பேரனுக்குத் துணை நின்றார் அவனின் தந்தையைப் பெற்ற,  தாதிஷா ப்ரத்யுக்ஷதேவி . 

மூன்றுவகை இழப்பிலிருந்தும் கடுமையான உழைப்பின் மூலம் ஃபீனிக்ஸ் பறவையாய் எழுந்து வந்தான். மூன்று வருடமாக அவனைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்திக் கொண்டு இருக்கிறார். இவனுக்குத் தான் அதில் பெரிய பிடிப்பு இல்லை. சொந்த பந்தங்கள் சுயநலத்தால் குடும்ப வாழ்க்கையை வெறுத்து இருந்தான். 

இரண்டு வருடங்களுக்கு முன் மும்பை டூ சென்னை விமான பயணத்தில் ப்ரீத்தியைப் பார்த்தான். முகம் வாடியிருந்த அன்புகரசனை ஏதேதோ பேசி சிரிக்க வைத்துக் கொண்டு இருந்தாள். இப்படி ஒரு பெண் வாழ்க்கைத் துணையாக அமைந்தால், கடினமான சூழலையும் இலகுவாகக் கடக்கலாம் என அவனுக்குத் தோன்றியது. 

சென்னையில் தரை இறங்கிய பின், அவளிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளும் ஆர்வத்தில் வேகமாகச் செல்ல, குறுக்கே டிராலி சூட்கேஸ் வந்ததில் தடுமாறி அவள் மீதே விழுந்தான்.  எதிர்பாராத விபத்து, ஆனால் அவன் வேண்டுமென்றே விழுந்ததாக, “ஃபிட்டே மூ” வில் ஆரம்பித்து, வண்ண, வண்ணமாகப் பஞ்சாபியில் திட்ட, சுற்றி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். அவனுக்கு அவமானமாகப் போனது. 

“சட் அப் “ என்றவன், “நீ பெரிய அழகி, குண்டு பூசனி” என ராஜஸ்தானியில் ஆரம்பித்து, பஞ்சாபியில் அவள் திட்டியதுக்கு பதிலுக்குப் பதில் தந்து, “கெட் லாஸ்ட்” என உறுமி விட்டுச் சென்றிருந்தான்.  இத்தனை களேபரத்துக்கும்  அன்பு அவ்விடத்தில் இல்லை. இருந்திருந்தால், அன்றே  இருவருக்கும் கை கலப்பு ஆகியிருக்கும். இன்று தொழில் முறை ஒப்பந்தம் போட்டு இருக்கவும் மாட்டார்கள்.

ப்ரீத்திக்கு, இடித்தவன் முகம் மறந்து விட்டது. பிரேமுக்கு அவள் முகம் மனதில் பதிந்தது. அவளறியாமல் அலைபேசியில் போட்டோ எடுத்து வைத்திருந்தான். டீனேஜ் பையனாட்டம் , உன் வயசுக்கு, தகுதிக்கும் பொருந்தாத செயல் என மனசாட்சி இடித்துரைத்து போதும், ‘பஞ்சாபி குலாபியை நான் என்ன செஞ்சுட போறேன். என்னால அவளுக்கு எந்த ஆபத்தும் வராது’  எனச் சொல்லிக் கொண்டான். 

அன்று முதல், ப்ரீத்தி அவன் நினைவுகளில் , மனதில் குடியேறி இருந்தாள். “ஓ காட்” எனத் தலையைப் பிடித்துக் கொண்டவன், டிடெக்ட்டிவ் ஏஜெண்சி மூலம் விசாரித்தான். 

ஒரு வாரத்தில், அவளின் நதி மூலம் அவன் மேஜையிலிருந்தது. பஞ்சாபி லூதியானல பிறந்தவள், ஒரு அண்ணன் மட்டும் உண்டு, ஆனால் ஓட்டுதல் இல்லை, படிப்பு தொழில் என அத்தனையும் பிட்டு, பிட்டு வைத்திருந்தவர்கள், கடைசியாக, அன்பு, ப்ரீத்தி திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தில் இருக்கின்றனர் என்பதையும் சொல்ல, மனமுடைந்து போனான். 

அன்புவை பற்றியும் விசாரிக்க, அவன் வாழ்க்கை வரலாறும், மாமன் மகள் எழிலரசி திருமணம், கலாட்டா, மாமாவின் ஹார்ட் அட்டாக், எல்லோருமாக ஒரே வீட்டில் குடியேறி இருப்பது வரை தெரிய வந்தது. அதில் அன்புக்கரசன் மேல் நல்ல அபிப்பிராயமும் வந்தது.  

அங்கங்கே சந்திப்புகளில் பார்த்துப் பழகி, இதோ தனக்குத் தேவை வந்த போது, அவர்களுக்கு மால் கட்டும் காண்ட்ரேட்டையும் கொடுத்தான். இப்போதும் இரண்டு மனம், ஒன்று ப்ரீத்தி அடுத்தவனுக்கு நிச்சயமானவன் பார்க்காதே என்றது, மற்றொன்று அவளோடு பழகித் தான் பாரேன் என்றது. இரண்டையுமே காட்டிக் கொள்ளாமல் கெத்தாகத் தான் அவளோடு பழகினான். வாரத்தில் மூன்று நாட்கள் சந்திப்பு என்பது, மோதலில் ஆரம்பித்து, ஒருவர் மேல மற்றொருவர் வைத்த மதிப்பில் நட்பாக மலர்ந்திருந்தது. பொது பேச்சு என்று வரும் போது , ப்ரீத்தியின் பேச்சில் ஏகே நிறைந்து இருந்தான். பிரேமுக்கு அதில்  பொறாமை கூட வந்தது. 

எழில் ஒரே பார்வையில் அவனைக் கணித்து இருந்தாள் . ஒரு மாதம் சென்று  ப்ரீத்தி, விளையாட்டாக பிரேமிடம் அதைச் சொல்ல, “அந்த திறமை இருந்திருந்தா, இரண்டு வருஷம் முன்னாடியே  என் லுகாயியா , என் வீட்டிலிருந்திருப்ப” என்றான். 

அவள் புரியாமல் முழிக்க, “ மிஸ்டர் அன்புவும், நீயும் கமிடெட், இது தெரிஞ்சும், இதை உன் கிட்ட சொல்றது சரியா, தப்பான்னு கூட எனக்குத் தெரியலை. சொல்லாமல் விட்டுட்டமேன்னு பின்னாடி வருத்த படக்கூடாது இல்லையா. லவ் அட் பஸ்ட் சைட்.  உன்னை பார்தோடனே எனக்கு பிடிச்சது. அன்பு கூடத் தான் உன்னைப் பார்த்தேன்” என அன்றைய விமான பயணத்தையும், விமான நிலையத்தில் நடந்ததையும் சொல்ல, அவளுக்குக் கோபம் பலியாக வந்தது. 

“ஏகே வோட சேர்த்துப் பார்த்தும், நீ எப்படி என்னை அப்படி நினைக்கலாம்” எனச் சண்டையிட , 

“சீரியஸ்லி ,உங்க இரண்டு பேரையும் பார்த்தா பிரெண்ட்ஸ் மாதிரி தான் தெரிஞ்சது . ஐ டோன்ட் திங், யு ஆர் கபில்ஸ்” எனத் தோளைக் குலுக்க, 

“கோ டு ஹெல்” என அன்று கோபித்துக் கொண்டு போய் விட்டாள். 

ஆனால் அன்று பிரேம் நிம்மதியாகத் தூங்கினான். தன காதலை அவளிடம் சொல்லி விட்ட மனநிறைவு. அடுத்து வந்த மூன்று நாட்களும், ப்ரீத்தி, பிரேமை சந்திக்கச் செல்லவில்லை, அவனும் கட்டாயப்படுத்த வில்லை. விஷயங்கள் அன்பு மூலமே பரிமாறப் பட்டது. 

அதைக் கவனித்த அன்பு, ப்ரீத்தியிடமும் சில மாற்றங்கள் தெரியவும், என்ன வென விசாரித்தான். 

“நான் மூணு நாளா இப்படி தான் அலையிறேன், என்னை கவனிச்சு கேட்க, இத்தனை நாளா” என அன்பு மீது கோபத்தைக் காட்ட,

“நீயா சொல்லுவேன்னு பார்த்தேன். உன் பிரைவசில நான் தலையிடுறது நல்லா இருக்காதுல்ல” என்றான்.

அவனை முறைத்தவள்,”ஃபிட்டே மூ, இப்பவும் கேட்க வேண்டாம். வோ டீக் கஹா” என மூக்கை உறிஞ்சினாள்.

“ சோட்டி பேபி மாதிரி பண்ணாத. யார் என்ன சொன்னா? அரசி வேற எதுவும் சொன்னாளா?” அவன் விசாரணையில் இறங்க,

“எழில்  சரியா தான் சொல்லியிருக்கா.  ரத்தோட் இஸ் எ சீட்டெர். அவன் ப்ளான் பண்ணி என்னை டார்கெட் வச்சு நம்மளோட டீல் போட்டு இருக்கான்” என்றாள்.

“வாட் டூ யூ மீன். உன்கிட்ட தப்பா நடந்துகிட்டானா. சொல்லு. ” என சட்டையின் கையை ஏற்றிவிட்டான். ‘ஆமாம், இவன் அடிச்சிட்டாலும்’ என மனதில் குமைந்த ப்ரீத்தி, “மிஸ் பிகேவ் பண்ணியிருந்தா, நானே சரியான ஜவாப் கொடுத்திருப்பேன். இது வேற” என்றவள், இரண்டு வருடத்துக்கு முந்தைய கதையைச் சொல்லி  லவ்  வரை அவன் சொன்னதை மடமடவென  சொல்லி முடிக்கும் பொழுது அழுதிருந்தாள். 

அன்புவுக்கும் அதிர்ச்சி, சமாளித்துக் கொண்டு  “ஹேய்  பிரியு , அழுகாத” என அவள் அருகில் வந்து நின்று அவளை அணைத்துக் கொள்ள, “ஐ பீல் சோ பேட். எழில் உன்னை லவ் பண்றான்னு சொல்லும் போது உனக்கும் இப்படித் தானே இருந்திருக்கும். இவங்கல்லாம் ஏன் இப்படி, லவ்வை காமிச்சே நம்மளை கொல்றாங்க. நீ சொல்ற மாதிரி தே ஆர் கிரியேடிங்க் கில்டினெஸ்” என்றவள், 

“ அவன் சொன்னான், ஹம் தோனோங் கோ தேக்கர், ப்ரெண்ட்ஸ் மாதிரி இருந்தோமாம். கமிட்டட் மாதிரி இல்லையாம். ஐசே ஹை க்யா. நம்ம இரண்டு பேருக்குள்ளேயும் லவ் இல்லையா” என அவள் கேட்க, 

“ லவ் இல்லாமல் எங்க போச்சு. நான் அன்பு, நீ ப்ரீத்தி” எனவும், 

“போடா” எனத் தள்ளி விட்டவள், முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள்.

அவள் நேரே வந்து அமர்ந்தவன், “மிஸ்டர் ராத்தோட்டை பார்க்க உனக்கு அன் ஈசியா இருந்தா, நீ அவர் ஆபீஸ்க்கு போக வேண்டாம். அவர் சங்காத்தமே வேண்டாம்னா, டீலை கேன்சல் பண்ணிடலாம்.” எனவும் 

“ அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். பிஸ்னஸ் லைப் பர்சனல் லைபை தனித்தனியா பார்த்துக்க தெரியும். “ என்றாள்.

“ அரசி செட்டில் ஆகாமல், என்னால எந்த முடிவுக்கும் வரமுடியலை. இஃப் யூ ஆர் “ என ஆரம்பிக்க, 

“ சுப், ஏக் தம் சுப். வேற எதுவும் பேசிடாதே. அவன் சொன்னதை மறைக்காமல் உன்கிட்ட சொன்னேன் அவ்வளவு தான்” என்றாள்.

“ உன்னையும் காக்க வச்சு, நான் தப்பு பண்றேனோன்னு எனக்கு கில்டியா இருக்கு” என்றான்.

“அதுக்காக கவலைபடாத. அன்பு இல்லத்தில் மம்மிஜி, பாப்பாஜி, எழில், நீ, நான் இப்படி பேமலியா இருக்கிறதே எனக்குச் சந்தோஷம் தான் “ என்றவள், 

“அந்த பந்தர் சொன்னது, என்னை எதுவும் பாதிக்கலைனு காட்டனும். அதுக்காகவே இந்த ப்ராஜெக்ட் முடிக்கிறோம்” என்றாள்.

ப்ரேம், பிரீத்தியிடம் பேசியது அவன் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தினாலும், யதார்த்தவாதியாக, என்னை விட ப்ரீத்திக்கு ப்ரேம் பொருத்தமாக இருப்பானோ என யோசிக்கவும் ஆரம்பித்தான். தான் மாமன் மகள் வாழ்வுக்காகத் திருமணத்தைத் தள்ளிப் போடலாம். ப்ரீத்தியும் ஏன் அவதிப்பட வேண்டும் எனத் தோன்றியது. 

அன்புவின் முக மாற்றத்திலிருந்தே, ப்ரீத்தி தன்னை பற்றி அவனிடம் சொல்லி விட்டாள் என்பதை ப்ரேம் யூகித்தான். 

“ மிஸ்டர் அன்பு, டோண்ட் மிஸ்டேக் மீ. டூ மந்த்ஸா பழகின பிறகு, உங்க இரண்டு பேர்கிட்டையும் விசயத்தை மறைக்க கூடாதுன்னு நினைச்சேன். ப்ரீத்திகிட்ட சொன்னா,  உன்  வரைக்கும் விஷயம் வரும்னு தெரியும். நான் திறந்த மனசோட இருக்கனும்னு நினைச்சேன். அதனால தான் சொன்னேன் “ ப்ரேம் விளக்கவுரை கொடுக்க 

“ ஐ கேன் அண்டர்ஸ்டேண்ட். என் மாமா பொண்ணு என்னை ஒன் சைடா லவ் பண்றாங்கிறதை, ப்ரீத்தி ஸ்போடிவா தான் எடுத்துகிட்டா. நானும் அதே டிகினிட்டி காட்டனும்ல. மோர் ஓவர், ப்ரீத்தி இஸ் சச் எ வொன்டர்ஃபுல் கேர்ள். அவளோட பழகினா, எல்லோருக்குமே ஆசை வரத்தான் செய்யும். எப்பவும் போல இருங்க. இந்த விசயத்தைப் பெரிய இஸ்யூ ஆக்க வேண்டாம்” என்றான் அன்பு.

“ தாங்க்யூ யார்” என அன்புவைக் கட்டிக் கொண்ட ப்ரேம், “ த்ரீ டேய்ஸா. ஐ பீல் ரெஸ்ட்லெஸ். நௌ ஃபீல் பெட்டர்” என்றான்.

அன்று முதல் மூவரும் இயல்பாகப் பழக ஆரம்பித்தனர். ப்ரீத்தி தான் அன்புவை வைத்து பிரேமையும், ப்ரேமை வைத்து அன்புவையும் கலாய்த்து, காலை வாரினாள். கண்டெண்ட்டை பொருத்து இருவருமே அவளை அவ்வப்போது முறைத்தனர். 

இரண்டு மாதங்கள் கடந்திருந்தது. அன்பு, ப்ரீத்தி, ப்ரேம் கூட்டணியில் அந்த கட்டிடத்தின் வரைபடம்  கலை நுணுக்கத்துடன் வந்திருந்தது. பி ஆர் மால் கட்ட பலமான பில்லர்கள் போடப்பட்டு அதை செட்டாவதற்காக காத்திருந்தனர். 

இந்த மூவர் கூட்டணி ஒரு புறம் இருக்க, எழிலரசி மட்டும் தன் தனி உலகில் சோக கீதம் வாசித்துக் கொண்டு இருந்தாள். அன்பு , ப்ரீத்தியிடம் உன்னைப் பச்சை துரோகின்னு சொல்றா என்ற வாதம் அவளை வெகுவாக பாதித்தது. ‘யாரோ எப்படியோ போறாங்க, இவங்களுக்கு நடுவில் நான் வருவானேன். மூக்குடப்பட்டு நிற்பானேன்.” என மனதில் சொல்லிக் கொண்டாள்.

எழில் சிங்கப்பூரில் உள்ள பள்ளிக்கு ஆசிரியை வேலைக்கு விண்ணப்பம் அனுப்பி இருந்தாள். முதற்கட்ட தேர்வுகள் முடிந்து ஃபைனல் காணொளி வழி நேர்முகத் தேர்வுக்காகக் காத்திருந்தாள். அதில் தேர்வாகி விட்டால் இந்த கல்வியாண்டை இங்கே முடித்து விட்டு, மூன்று மாதத்தில் சிங்கப்பூர் கிளம்ப வேண்டியது இருக்கும்.

இரண்டு மாதங்களுக்கு முன்பான வாக்குவாதத்தின் போது அவள் சும்மா சொல்கிறாள் என்றே நினைத்திருந்தனர்.

மதுரையில் ஒரு கிராமத்தில் வளர்ந்தவள் சென்னையில் வேலை செய்யவே முதலில் மிகவும் சிரமப்பட்டாள். அதனால் வெளி நாட்டுக்குச் செல்ல மாட்டாள் என்றே நம்பி இருந்தனர்.

ஆனால், அன்புவின் பேச்சு அவளுக்கு ரோசத்தை வரவழைத்து இருந்தது. “வெளிநாட்டுக்கு போயி காட்டுறேன்” என்ற வீம்பு, அவளைச் செயல் பட வைத்தது. தான் இங்கிருந்து சென்று விட்டால் அப்பாவும் சோழவந்தான் சென்று விடுவார். மகன்கள், மகள் பேரன் பேத்தி எனச் சந்தோஷமாக இருக்கட்டும் என நினைத்தாள்.

அன்று சீக்கிரமே வந்து மாடியில் மடிக்கணினியை செட் பண்ணி, நேர்காணலுக்காக அமர்ந்து இருந்தாள்.  சிங்கப்பூரிலிருந்து அழைப்பு வந்தது. வெகு அழகாக, இயல்பாக எழிலரசி பதில் தர, அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. 

“ இம்மீடியட்டா நாங்கள் உங்களைத் தேர்ந்தெடுக்கிறோம். மூன்று மாதத்தில் சிங்கப்பூரில் வந்து ஜாயின் பண்ணுங்க. எங்க டீம் உங்களோடு டச்ல இருப்பாங்க” என்றனர்.

எழிலரசிக்கு இந்த சந்தோஷத்தை, ப்ரீத்தி, அன்பு, அத்தை, அப்பாவுடன் கொண்டாட ஆசைப்பட்டாள்.

அன்றைய இரவு இருவருமே சீக்கிரம் வரும் நாள், இலவச இணைப்பாக ப்ரேம் ராத்தோடும் வந்திருக்க 

“ இன்னைக்கு உங்களுக்குச் சந்தோஷமான விசயத்தைச் சொல்லப் போறேன்” என சிங்கப்பூர் வேலையைப் பற்றிச் சொல்ல, அதன் வேல்யு தெரிந்த ப்ரேம் ப்ரீத்தி கைதட்டினர். அன்புவுக்கு அக்மார்க் அதிர்ச்சி. 

“சிங்கப்பூர் ல வச்சு இவளை என்னனு பாதுகாப்பேன்” என மனதில் புலம்ப, 

 “என்ன பாப்பா சொல்ற” என அழகரும்

“என்னது சிங்கப்பூருக்கா” என இந்திராணியும் ஒரே சேர அதிர்ந்தனர். 

சிங்கப்பூர் போக அன்பு குடும்பம் ஒப்புக் கொள்ளுமா… 

மழை பொழியும்

2 thoughts on “அன்பென்ற மழையிலே-14”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *