Skip to content
Home » அன்பென்ற மழையிலே-17

அன்பென்ற மழையிலே-17

மழை-17

 “பதாயி ஹோ, ஷாதி முபாரக் , மிஸ் கௌர். உங்க அன்பு உங்களுக்குக் கிடைக்க போறார், வாழ்த்துக்கள்” பிரேம் சம்பிரதாயமாக ப்ரீத்தியிடம் சொல்ல, அவனைக்  கூர்ந்து பார்த்தவள், 

“ பதாயி, முபாரஹ், வாழ்த்துக்கள் ஏ சப் மன் ஸே போலனா சாஹியே . ஐஸே அத்ரக் காயே பந்தர் ஜைஸே முஹ் ரஹ்கர் நஹி (வாழ்த்துக்கள் மனசிலிருந்து சொல்லணும், இஞ்சி தின்னக் குரங்கு மாதிரி  மூச்சி வச்சுகிட்டு சொல்லக் கூடாது ) “  எனவும், 

“ என் காதலி இன்னொருத்தனை ஷாதி பண்ணிக்க போறா, அதுக்கு விஷ் பண்றதே பெரிய விஷயம். இதுக்கு மேல எதிர் பார்க்காதே, எனக்கு பிராட் மைண்ட் எல்லாம் கிடையாது ” என்றவன், 

“மேரேஜ் டேட் பிஸ் பண்ண உடனே சொல்லு, நான் வேர்ல்ட் டூர் போக டிக்கெட் போடுறேன்” என்றான். 

“எனக்கும், ஏகேக்கும் வெட்டிங் கிப்ட்டா, நீ நிஜமாவே ஜென்டில்மேன் தான், யூரோப் ட்ரிப் போதும் டியர் ” என அவள் பெருந்தன்மையாகச் சொல்ல, 

“மண்ணாங்கட்டி, உனக்கு ஹனிமூன் ட்ரிப் புக் பண்ணித் தர நான் என்ன எழிலரசியா. உன் ஷாதி அன்னைக்கு, வேற எங்கையாவது தண்ணி அடிச்சிட்டு தன்னை மறந்து மல்லாக்க கிடைக்கணும். அதுக்கு தான்” என்றான். 

“ சாரி யார், மே க்யா கருங் , எழில் கடைசி வரை ஸ்டெபர்ணா நின்னுட்டா, அவ ஏகேவை ஷாதி பண்ணிக்கிட்டா, நான் உனக்கு வாழ்க்கை தரலாம்னு தான் யோசிச்சேன். சாரி. என்னால ஏகேக்கு துரோகம் பண்ண முடியாது” என்றாள். 

“இந்தளவு எத்திக்கோட , ஃபிராங்கா இருக்கியே, அதுவே போதும். ஜீத்தி ரஹோ “ என்றவன், “எழில் சிங்கப்பூர் கிளம்பியாச்சா” 

“ மதுரைக்கு பப்பாஜியை கூட்டிட்டு போயிட்டா, மம்மிஜியும் கோவில் திருவிழா பார்க்க போயிருக்காங்க. ஐ  ஃபீல் லோன்லி “ என்றாள் . 

“அன்பு எங்கே “ எனவும், “ஹி இஸ் ஆல்சோ அப்செட். ஆபீஸே கதின்னு இருக்கான்” என வருந்தினாள். 

“நீ கம்பெனி கொடுக்க வேண்டியது தானே” 

“ ஹி நீட் பிரைவசி. டூ டேஸ் விட்டா அவனே சரியாயிடுவான்.” 

“நல்ல கபிள்ஸ்” எனவும், அவனை முறைத்தாள். 

 “ உனக்குப் பொழுது போக ஒரு பேமிலி வேணும். அவ்ளோ தானே. மேரே சாத் ஆவோ” என ராத்தோட் மேன்சனுக்கு அழைத்து சென்று,  தன் தாதிஷா வுக்கு அறிமுகம் செய்து வைத்தான். அவர் அர்த்தமாக நோக்க,  “ அவளுக்கு ஷாதி நிச்சயமாகி இருக்கு. நம்ம நியூ பில்டிங் ,இவளும், இவ மங்கேதரும் சேர்ந்து தான் கட்டுறாங்க “ என தாதிஷாவின் கற்பனைக்கு ஆரம்பத்திலேயே தடை போட்டான். 

ஆனாலும், “சன்சரியாக்கல் பீஜி” என அவர் காலில் விழுந்து வணங்கியவளை, ப்ரத்யுக்ஷா தேவிக்கு மிகவும் பிடித்துப் போனது. 

ப்ரீத்தி, பிரேம் வீட்டில் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்த அதே நேரம், அன்பு தன அலுவலகத்தில் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். 

எழிலரசி அவனை அவ்வளவு பாதித்து இருந்தாள். அவனைத் திட்டிவிட்டோ, எதுவும் சொல்லாமல் புறக்கணித்துச் சென்றிருந்தால் கூட, அவனை இவ்வளவு பாதித்து இருக்காது. வழக்கத்துக்கு மாறாக மனம் திறந்து அன்பைக் காட்டிவிட்டுச் சென்றிருக்கிறாள். அவளுக்கான நல்ல வாழ்க்கைத் துணை அமையும் வரை அவன் மனம் இந்த பாடு தான் படும். 

அழகர் மாமாவும், அவர் மகளும் தங்கள் இருப்பை அன்பு இல்லத்திலிருந்து மதுரைக்கும், சிங்கப்பூருக்கும் குடி பெயர்வதால் பொருட்கள் அதிகம் இருந்தது. அதனால் பெரிய வண்டியை ஏற்பாடு செய்திருந்தான். அதிகாலையில் கிளம்பி விட்டால், மதியம் மதுரைக்குச் சென்றுவிடலாம் என்பது திட்டம். அதனால் இரவிலேயே பெட்டிகளை லோட் செய்து விட்டனர். 

எல்லோருமாக ஒன்றாகச் சாப்பிட்டு, வெகு நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு, அழகர் அன்பு, ப்ரீத்தி இருவரையும் சேர்த்து  வைத்து அறிவுரை சொல்லி, வைகாசியில் திருமணத்துக்கு ஒரு தேதியும் பார்த்துக் குறித்துக் கொடுத்து, அவர்களை முடிவெடுக்கச் சொல்லி வற்புறுத்தினார். 

“ப்ரீத்தியை கேட்டுக்குங்க.” என்றவன், எழில் தங்களைப் பார்ப்பது தெரியவும்    “ப்ரேம் ராத்தோடோட  ப்ராஜெக்ட் முடிஞ்சா நாங்க கொஞ்சம் பிரியா இருப்போம். அப்ப கல்யாணம் வச்சா நாங்களும்  கையோட ஹனிமூன் ட்ரிப்பும் பிளான் பண்ணிக்கலாம், என்ன பிரியு” என்றான். 

“பேசாமல் இரு” என்றவள், எழில் கையை பற்றிக்கொண்டு, “ நீயும் செட்டில் ஆகி, நான் மேரேஜ் பண்றேன்னா, எனக்கு ஹாப்பியா இருந்திருக்கும்” என்றாள் . 

“அதையே சொல்லாத. நீ முதல்ல செட்டில் ஆகு, அடுத்து நான் ஆகிறேன். என்னால தானே உங்க மேரேஜ் தள்ளி போச்சு. இப்பவாவது பண்ணிக்குங்க ப்ளீஸ். நான் ஜூன் பஸ்ட் கிளம்புவேன். அதுக்குள்ள மேரேஜ்  வச்சா நான் கட்டாயம் கலந்துக்குறேன்”  எழில் சொல்ல, 

“அது பாசிபிலே இல்லை. பிரேம் பில்டிங் இன்னாகரேஷன் அதுக்கு அப்புறம் தான் “ அன்பு முந்திக் கொண்டு சொன்னான். 

“ அப்போ நீயே ஒரு நல்ல தேதி பார்த்துச் சொல்லு சாமி . எழில் இந்த கல்யாணத்தில் இருக்கிறதோ, இல்லாததோ பெரிய பிரச்சினை இல்லை, உங்க கல்யாணம் நடக்கணும் அம்புட்டு தான் , என்ன ஆத்தா, நான் சொல்றது சரி தானே “ என இந்திராணியிடமும் கேட்க, 

“நீங்க சொன்னா சரி தான் அண்ணன். இந்த வீட்டில் நான் மட்டும் எப்படி உட்கார்ந்து இருப்பேன். ஒரு பேரனோ, பேத்தியோ வந்தா அதுகளை பார்த்துக்கே என் பொழப்பு ஓடிடும். உங்களை மருமகனுங்க கவனிச்சுக்கும். இருந்தாலும் அடிக்கு ஒருக்கா, என்னையும் வந்து பார்த்துக்குங்க” என்றார்

“கல்யாண வேலை ஆரம்பிச்சுட்டா வரப் போகத் தானே இருப்போம். பாப்பா சிங்கப்பூர் கிளம்பிட்டா அப்புறம் என்ன வேலை. வர்றேன். ஆத்தா, நீ உன் அண்ணன் கிட்டையும் தகவலை சொல்லிடு. எங்களை நம்பி விட்டுட்டு போயிருக்கார், நல்ல மனுஷன்” எனவும், ப்ரீத்தியும் தலையை ஆட்டிக்கொண்டாள் .  

அழகர் காலையில் சீக்கிரம் எந்திருக்கனும் எனப் படுக்கச் செல்ல, இந்திராணியும் பின் தொடர்ந்தார்.

ப்ரீத்தி, “ எழில் இன்னைக்கு நைட் என் ரூம்ல தான் தூங்குற. வந்துடு, ஐ வில் மேக் ஸ்பெஷல் அரேஞ்சுமென்ட்ஸ்” என்று சொல்ல, அன்பு அவளை முறைத்தான்.

“ கொம்புச்சா  வாங்கி வச்சுருக்கேன். சும்மா முறைக்காத ஏகே” என மாடிக்கு ஓடினாள்.

அன்புவும், எழிலும் மட்டுமே நிற்க , டெபிட் கார்டு மற்றும் வீட்டு வரவு செலவு நோட்டை அவனிடம் கொடுத்தாள்.

“ என்ன இது” என அவன் முறைக்க, 

“ இந்த வீட்டுக்கு வந்த புதுசுல நீங்கள் கொடுத்தது. அத்தைக்கு இதை ஆக்ஸஸ் பண்ணத் தெரியாது. நான் தான் எல்லாம் பார்த்தேன்” என்றவள்.

“ தேங்க்ஸ். தேங்க்ஸ் ஃபார் எவ்ரித்திங்க்” என்றாள். அவன் முறைத்தான்.ஆரம்பித்தால் நிறுத்த மாட்டான், வார்த்தைகள் அவளைக் கொத்திக் குதறும் அதனால் கட்டுப்பாட்டோடு அமைதி காத்தான்.

“ நான் இன்னைக்கு ஒரு இங்கிலீஷ் டீச்சரா, இன்டர்நேஷனல் ஸ்கூல்ல சர்வீஸ் பண்ணப் போறேன்னா, நிச்சியமா அது உங்களால தான். யூ ஆர் த இன்ஸ்பிரேஷன் அண்ட் ரோல் மாடல். உங்களை மாதிரி என்னே வெளியூருக்குப் படிக்க அனுப்ப மாட்டார்னு தான் மதுரைக்குள்ள என்ன படிக்க முடியுமோ அதை படிச்சேன். 

அதுக்கான காரணம் எதுவானாலும் இருந்துட்டு போகட்டும். கிராமத்து பொண்ணுக்கு படிப்பு ருசியைக் காட்டினவர் நீங்க. அந்த படிப்பு தான் என்னை இவ்வளவு தூரம் கூட்டிட்டு போகுது. முக்கியமா சென்னைக்கு வந்தது தான் என்னோட லைஃப் ல டேனிங்க் பாயிண்ட். கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்னு அந்த கந்தவேலு தலையில் என்னைக் கட்டி அனுப்பி இருப்பாங்க. நீங்க எடுத்த முயற்சியினால் தான் அந்த நரகத்திலிருந்து தப்பிச்சேன். தேங்க்ஸ் ஃபார் த சப்போர்ட்.

நீங்க அப்பாவை காப்பாத்துனத்துக்கு நான் தாங்க்ஸ் சொல்ல மாட்டேன். ஏன்னா அவருக்குப் பார்க்கிற கடமையும், உரிமையும் உங்களுக்கும் இருக்கு. அன்னைக்கு ஹாஸ்பிடல்ல என்னைத் திட்டினதுக்குக் காரணமும் அது தான்னு எனக்கு புரிஞ்சது. அதுனால தான் அது எதுவுமே என்னை பாதிக்கலை. 

இந்த இரண்டு என் வாழ்க்கையில் மறக்க முடியாத காலகட்டம். கழுத்தில் தாலி ஏறி இறங்கின பிறகும், அத்தை மகனை ரகசியமா சைட்டிக்கிற சான்ஸ் கிடைச்சது” அவள் சிரிக்க அவளை முறைப்பதற்காகத் திரும்பியவன் அதிர்ந்தான், ஏனெனில் கண்ணீரோடு சிரித்துக் கொண்டு இருந்தாள்.  

அவன் சிலையாகப் பார்த்திருக்க, “ஹேண்ட்சம் பர்ஸ்னாலிட்டியா  இருந்தா, பொண்ணுங்க சைட் அடிக்கத் தான் செய்வாங்க. நான் மட்டும் விதிவிலக்கா என்ன. அதுவும் என் செயில்ட் ஹுட் ஹீரோ நீங்க” என்றவள் அவனின் அதிசயித்த பார்வையில், “ இப்ப சொல்லலாம். ப்ரீத்தியைக் கல்யாணம் பண்ணவும் தான் சொல்லக் கூடாது. மோர் ஓவர், வீ ஆர் பார்ட் அவே , வேற வேற திசையில் பயணிக்க போறோம். அவரவர் பயணத்தை சந்தோஷமாவே தொடங்குவோமே. இந்த டூ இயர்ஸ் ப்ரீத்தியோடு எனக்கு உள்ள நெருக்கம், கலை அக்காகிட்ட கூட இருந்தது இல்லை. இது எதுக்கு சொல்றேன்னா , அவ உங்க வாழ்க்கைத் துணையா வர்றது எனக்கு ரொம்ப சந்தோஷம் தான். சிலவருஷம் கழிச்சு திரும்ப வரும் போது என்னை ஆவலா வரவேற்கவும் ஒரு குடும்பம் இருக்கும்ல.” என்றவள், 

ஒரு பெருமூச்சோடு ,” தேங்க்ஸ். தேங்கயூ ஃபார் எவ்ரித்திங். இந்த சிங்கப்பூர் ட்ரிப்புக்கு என்னோட கேரியர் ஒரு முக்கிய காரணமா இருந்தாலும், உங்க இரண்டு பேருடைய வாழ்க்கை பயணத்தில் நான் ஒரு தடைக்கல்லா இருக்க விரும்பாதது தான் பெரிய காரணம். இன்னாருக்கு இன்னார்னு எழுதி வச்சிருப்பான் தேவன். உங்களுக்கானவள் ப்ரீத்தி. ஏஞ்சல் கேர்ள். உங்களை மாதிரியே அன்பானவள். நிச்சயம் உங்க வாழ்க்கை கலர் புல்லா இருக்கும். அதே போல எனக்கான ஒரு லைஃப், ஒரு மனுசனைச்  சந்திக்க, அப்பாவுக்கு ப்ராமிஸ் பண்ண மாதிரி, நான் திறந்து மனசோட காத்திருக்கேன். ஸோ ப்ளீஸ் டோண்ட் வொர்ரி அபவுட் மீ. என்ஜாய் யுவர் லைஃப். எதாவது அதிகப்பிரசங்கி தனமா சொல்லியிருந்தாலும் மன்னிச்சுக்குங்க. “ என்றாள்.

அவன் அப்படியே நிற்க, “ வித் யுவர் பர்மிஷன், இப்போ இல்லையினா எப்போ? ப்ரீத்தி தப்பா எடுத்துக்க மாட்டா. நான் தான் மாடர்ன் லேடியா மாறிட்டேன். நீங்களும் பிஸ்னஸ் மென் , எல்லா விதமான மக்களையும் பார்க்கிறவர், இதை தப்பா எடுத்துக்க மாட்டிங்கங்கிற நம்பிக்கையில்,  ஒரு ப்ரண்ட்லி ஹக்.” அவனை நோக்கி அவள் கையை விரிக்க, அவன் விழிகள் வியப்பில் அகன்றது. 

“என் முறை பையன், அத்தை மகன், என் ஆதர்ச ஹீரோவுக்கு , பிரஸ்ட் அண்ட் லாஸ்ட் பைனல் ஹக் , கிடைக்குமா” என அவனையே பார்த்திருக்க, 

“வா” என்ற ஒரு தலையசைப்போடு அப்படியே நின்றான். “தாங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங்க்” என்றவள், அவனை இறுக அணைத்து, கண் மூடி அவன் கண்ணத்தில் முத்தமிட்டு நொடியில் விலகி அவன் முகம் பார்க்கவும் விரும்பாதவளாகச் சிட்டாக  மாடி ஏறி விட்டாள். அன்பு அதிர்ந்து நின்றான். 

அவன் அறைக்கு நேர் மேலே உள்ள அறையிலிருந்து, இரவு முழுதும் விடிய விடிய ப்ரீத்தியும் , எழிலும் பாட்டுப் பாடி ஆட்டம் ஆடி, அழுது தங்கள் பிரிவை ஆற்றிக் கொண்டனர். அவர்கள் பேச்சு சத்தம் கேட்டபடி அவன் கண் அயர்ந்தான். அடுத்த நாள் அதிகாலையில் மூவரும் கிளம்பி வண்டி புறப்படும் முன் அவனை வந்து எழுப்பி, சொல்லி விட்டு பிரியாவிடைப் பெற்றுச் சென்றனர்.

இன்னும் இரண்டு மாதம் மதுரையில் தான் இருப்பாள். ஆனால் மீண்டும் எழிலரசியைப் பார்க்கவோ, அவள் பயணத்தைத் தடுக்கவோ அவனுக்கு விருப்பம் இல்லை. அவள் பிரிவு அவனை ஏதேதோ செய்தது. தான் வாழ்க்கையில் முன் நோக்கிச் செல்ல வேண்டும் என்று தானே அவள் கடல் கடந்து செல்கிறாள். அவள் ஆசைப்படி அவன் வாழ்வில் அடுத்த கட்டத்துக்குச் சென்றால்  தான் அவளும் அடுத்த அடி எடுத்து வைப்பாள்.

கடந்த காலத்தில் அவள் அவன் மீது சொன்ன குற்றச்சாட்டுக்களை எல்லாம் வரிசைப் படுத்திப் பார்த்தவன், இல்லற வாழ்க்கைக்கு அன்பு மட்டுமே போதாது, துணை மீது அளவற்ற நேசமும், காதலும் , மோகமும், மயக்கமும் வேண்டும் என்பதை உணர்ந்தான்.

அனபுகரசனோ, ப்ரீத்தியோ, ப்ரேமோ, எழிலோ அவர்கள் வாழ்க்கை சிறக்க நேசம் முக்கியம், என்பதை உணர்ந்து அவன் துணையை நேசிக்கத் தொடங்கினான்.ப்ரீத்தி ஆசையாகப் பேச வந்த போது அவளைத் தவிர்த்து வந்தோமே எனப் பச்சாதாபம் கொண்டவன், “ ஹேய் குல்பி, எங்கே இருக்க” என மெஸேஜை தட்டிவிட, 

“ சௌக்கார்பேட்ல மாட்டிக்கிட்டேன். தயவு செய்து என்னை காப்பாற்றி கூட்டிட்டு போ ஏகே ” என மேஸேஜ் திரும்ப வர தனது காரை எடுத்துக் கொண்டு ப்ரேமின் இல்லத்தை நோக்கிப் பறந்தான். எழிலின் எச்சரிக்கை வேறு இருக்கிறதே. காத்திருந்தவன் பொண்டாட்டியை நேற்று வந்தவன் தூக்கிட்டு போயிட்டா? 

மழை பொழியும். 

2 thoughts on “அன்பென்ற மழையிலே-17”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *