மழை-19
எழிலரசியை காணவில்லை என ப்ரீத்தி, அன்புவிடம் சொல்ல அவனுக்கும் பதட்டம் தொற்றியது.
“உன் கூட தானே வந்தா, எப்படி மிஸ் ஆனா” அன்பு டென்சனாக.
“நீ தான், அவகிட்ட பேசவிடாமல் என்னை இழுத்த”
“ஆமாம், உன்னை பேச விட்டா எல்லாத்தையும் உளறிடுவ” என கடிந்தவன், “முதல்ல அவளை தேடுவோம்” என்றான்.
ப்ரீத்தியையும் இழுத்துக் கொண்டு எங்கே தேடுவது, அவளுக்கு பரிச்சயம் இல்லாத ஊரில் தொலைந்துவிட்டால் என யோசித்து “நீ , அந்த அக்காவோட உட்கார்ந்து இரு. நான் பார்த்துட்டு வரேன்” என ப்ரீத்தியை கோகிலாவிடம் விட்டு சென்றான்.
கோகிலா, “என்னத்துக்கு இம்புட்டு டென்ஷனு.” என்று கேட்க,எழிலை காணோம்” என்றாள்.
“அச்சசோ, அந்த எடுபட்டபய, என் தம்பி கந்தவேலு வேற திருவிழால திரிஞ்சானே. சும்மாவே இவ மேல கொலை காண்டுல இருக்கான், என்ன செய்ய. காத்திருக்கானோ ” என கவலைப்பட,
“அச்சோ, வாங்க நம்ம போய் தேடுவோம்” என்றாள் ப்ரீத்தி.
“எங்கன்னு தேட, சரி வா. அன்புவுக்கும் போனை போட்டுச் சொல்லு. அப்படி எதுவும் நடக்க கூடாது. என் புருசனுக்கு தெரிஞ்சது. என்னைய கொன்டே புடுவான்” என புலம்பியபடி கோகிலாவும், ப்ரீத்தியும் ஒரு பக்கம் தேட, ப்ரீத்தி அன்புவுக்கு அலர்ட் மெஸேஜ் அனுப்பி இருந்தாள்.
அதை பார்க்கவும், அன்புவுக்கு மேலும் பதட்டம். ப்ரீத்தியும் , அன்புவும் விடாமல் எழிலுக்கு அழைத்துக் கொண்டே இருக்க, அழைப்பு போயி கொண்டே இருந்தது.
அன்பு, “அரசி பிக் அப் த கால்” என பதறிக்கொண்டு, இங்கும் அங்கும் அலைபாய, அவன் முதுகில் சொத்தென ஒரு பர்ஸ் வந்து விழுந்தது. சுதாரித்து எடுக்க, அது எழிலுடையது உள்ள அலைபேசி மௌனமாய் அவர்கள் அழைப்பைச் சொல்லிக் கொண்டு இருந்தது. கோவிலிருந்து சற்று தொலைவில் ஒருவன், மூட்டை போல் எதையோ தூக்கி கொண்டு செல்ல, அன்பு அவனை பின் தொடர்ந்தான். ஆள்அரவமற்ற குறுக்கு சந்துகளில் ஓடி ஆற்றின் பக்கம் செல்ல, அன்பு பின்னோடு ஓடினான்.
ஆற்று கரையின் ஓரிடத்தில் அவ்வுருவம் மறைந்தது. அன்பு, “அரசி,அரசி” என குரல் கொடுத்துக் கொண்டே தேடினான்.
கோகிலா பயந்தது போலவே, எழிலை தூக்கி சென்றது கந்தவேலு தான். பணம்,தொழில், மானம் மரியாதை எல்லாம் இழக்க காரணமான எழிலரசியை பலத்காரம் செய்துவிட்டால், அவனையே மீண்டும் மணந்து கொள்வாள் என்ற நப்பாசை. குடியில் மூளை மழுங்கி இருந்தவனுக்கு சக குடிகாரன் தந்த யோசனை. அதன் படி எழிலை மயக்க மருந்து கொடுத்து தூக்க முயன்றான். அதை உணர்ந்து மூச்சை உள் இழுத்து கொண்டவள், ஆவனை ஒரு கை பார்ப்பது என்ற முடிவோடு அவன் போக்குக்கு சென்றாள் .
குடிகாரன், அத்து மீறிவிட்டால் என்ற பயத்தில் அவளை தேடிக்கொண்டிருந்த அன்புவையும் தன்னை பின் தொடரும் விதமாக கைபையை அவன் மீது விட்டெறிந்து வந்தாள். அன்பு பின் தொடருவதையும் உறுதி படுத்திக்கொண்டவள், சுதாரித்து அவனை தாக்க நேரம் பார்க்க, புத்தரின் பின்னே மறைந்து, செங்குத்தாக குதித்தான்.
அதிலேயே அரண்டவள், திமிரி கீழே இறங்க, மண்ணில் தள்ளினான். குடிமகன்கள் மது அருந்தி மட்டையாக உள்ள இடம் போலும், புதர குடை போல் இருக்க, சமதளமாக இருந்தது.
அவளை கீழே தள்ளி, அவன் மேலே பாய முயல, சட்டென உருண்டவள் அவன் கீழே விழுந்து, ஆக்கிரோஷமாக எழும் போது , மறைத்து வைத்திருந்த பெப்பர் ஸ்ப்ரேயை அவன் முகத்தில் அடித்து விட்டாள் .
அவன் எரிச்சல் தாங்காமல் கத்த, அந்த சத்தம் கேட்டு அன்பு அவ்விடத்தை நோக்கி தட்டுத் தடுமாறி வந்தான்.
ஆற்றுக்குள் கொட்டகை போட்டு, போகஸ் விளக்குகள் போட பட்டிருந்ததால், அதன் வெளிச்சம் லேசாக உள்ளே தெரிந்தது.
‘பரதேசி நாயே. தாலி கட்டி, அறுத்து விளையாட நான் பொம்மையாடா. உயிருள்ள மனுசி. கந்துவட்டி வாங்கிட்டு கெத்தாவா திரிஞ்ச, எத்தனை பேரு சாபம் விட்டாங்க. உனக்கு விஷம் வைக்க தான், உன்னை கல்யாணம் பண்ணிக்க நினைச்சேன்.கடைசில எங்கப்பா கிட்டயே உன் வேலையை காட்டுனியே” என அவனை காலால் மிதிக்க, அதை பற்றி, அவள் காலை கட்டி கொண்டவன்,
“நான் செஞ்சதெல்லாம் தப்பு தான் எழிலு . ரொம்ப வேதனை அனுபவிச்சுட்டேன். உன்னை அடைஞ்சுட்டா, மன்னிச்சு என் கூட வாழுவேண்டு ஒருத்தன் சொன்னான். என்னை யாருமே சேர்த்துக்க மாட்டேங்கிறாய்ங்கே. பெத்தவய்ங்களும் வீட்டை விட்டு தொரத்தி புட்டாங்க . எவனுக்கும் என்னை பார்த்து பயமும் இல்லை. நான் என்னெண்டு பொழைப்பேன். எனக்கு ஒரு வழி சொல்லு. உன்கூட கூட்டிட்டு போயி, மூணு வேலை சோறு போடு. நாய் மாதிரி உன்னைய சுத்திகிட்டு கிடக்குறேன்” என அழ, அவனை சகட்டு மேனிக்குத் திட்டினாள்.
அன்பு சத்தம் வந்த திசையை நோக்கி செல்போன் ஒளியை பாய்ச்சிக்கொண்டே வர, அங்கு அவன் பார்த்த காட்சியில் வாய் பிளந்து நின்றான். ஏனெனில் எழில் அவன் முகத்தில் பெப்பர் ஸ்ப்ரே அடித்ததும் இல்லாமல், அருகில் இருந்த ஒரு முள் குச்சியை எடுத்து அவனை திட்டிக் கொண்டும், விளாசிக் கொண்டும், இருந்தாள் .
அன்புவுக்கு அவளின் மாற்றைத்தை பார்த்து, வெகு ஆச்சரியம் மற்றும் திருப்தி. மென்னகையோடு அவ்விடம் அடைந்தவன், “அரசி போதும் விட்டுட்டு வா போகலாம்” என்றான். தான் பேசியதை எல்லா கேட்டு இருப்பானோ என நினைத்தவள், அமைதியாய் நிற்க,
“சார், நீங்களாவது பார்த்து எதாவது செய்ங்க” என்றான்.
“போலீஸ்ல தான் பிடிச்சு கொடுக்கணும். ஏற்கனவே பட்டும் உனக்கு புத்தி இல்லையே.” என தன் பங்குக்கு இரண்டு அறை விட்டவன், “கொன்றுவேன் ராஸ்கல். காதலிச்சவனையே கட்ட மாட்டேங்குறாளுங்க, இதில் கடத்திட்டு வந்து ரேப் பண்ண ட்ரை பண்றவனை கட்டுவாளோ, நீயெல்லாம் சான்ஸ் கிடைச்சப்பவே வாழ்க்கையில செட்டில் ஆகி இருக்கனும். விட்டுபுட்டு, சாவு” என்றவன், “நீ போ” என அவளிடம் எரிச்சலை காட்ட,
“ எப்படி போறது, கல்லும், முள்ளுமா இருக்கு” எனவும் அவன் முறைக்க , தானே ஏற போக , கால் சறுக்கியது, “அரசி” என பின்னிருந்து அவளை தாங்கியவன்,
“பார்த்து போடி” என்றான்.
“பார்க்கிறதுக்கு , கண்ணு நல்லா தெரியுது. பேகை கொடுங்க” என சிடு சிடுக்க, “பேகா, அது எங்க இருக்கு” என இடது கையில் மறைத்துக்கொண்டு சொல்ல,
“ரொம்ப நடிக்காதிங்க. சுயநினைவோடை தான் உங்க மேல தூக்கி போட்டுட்டு வந்தேன்” எனவும்,
“பேக்ல ஒளி வட்டம் இருக்கா” அவன் கிண்டலடித்த படி நீட்ட, அதை வாங்கியவள், திறந்து செல்போனை எடுத்து உயிர்த்து லைட் அடித்து பாதையை பார்த்தவள், “ ஆத்தாடி, இதுல என்னனு ஏற “ என மலைத்தாள்.
“அவனையே வேணா தூக்கி கொண்டு வந்து விட சொல்லவா” என்றான் நக்கலாக.
“வேற வழி” என்றவள், அவனை தாண்டி, “டேய் கந்துவட்டி, இதுல எப்படிடா ஏறி போறது” என கேட்க, அவன் இன்னும் எழில் தன் முன் நிற்பதாக எண்ணி, மன்னிப்பு கேட்டு அழுது கொண்டிருந்தான்.
“நாசமா போன்றவனே, என் வாழக்கையை சீரழிச்சது பத்தாதுன்னு, ரேப் பண்றானாம் ரேப். மண்ணாங்கட்டி” என ஒரு கல்லை எடுத்து அவன் மீது எறிய , அன்பு வாய் விட்டு சிரித்தான். அவள் முறைக்க, “அப்டியே பயந்துருவோமா , முன்னாடி பார்த்து போடி. உன்னையெல்லாம் தூக்க முடியாது. ப்ரீத்தி கோவிச்சுக்குவா” என்றான்.
“ ப்ரீத்தி இருந்தா, அவளே என்னை தூக்குவா, நீங்க நோஞ்சான், உடம்புல வலு இல்லை. அதை ஒத்துக்குங்க” என்றாள் .
“அடிங்க, யாரை பார்த்துடி நோஞ்சான்னு சொன்ன” என அவளை அலேக்காக தூக்க , “ஐயோ அத்தான் விட்டுரு. நான் போனடிச்சு யாரையாவது வர சொல்லிக்கிறேன். சிங்கப்பூருக்கு முழுசா போய் சேரனும்” என்றாள் .
அவளை இறக்கி விடாமல் தூக்கி கொண்டு சரிவில் சூதனமாக நடந்தவன், “சிங்கபூர், சிங்கப்பூரு , சிங்கபூர். அங்க என்ன சென்ட் விற்க போறியா, இல்லை பல்பொடியா. யாரை தெரியும்னு அங்க போற” அவன் சலிக்க, அவன் அன்மையில் அவஸ்தையாகவே அமைதி காத்தவள், கரை தென்படவுமே குதித்து இறங்கி , “சிங்கப்பூர்ல காண்ட்ரேக்டர் நேசமணி இருக்கான். அவன் கூட குடும்பம் நடத்துவேன்” என கோவிலை நோக்கி ஓட கண்ணில் மின்னலடிக்க, “இன்னும் ரொம்ப காலம் காத்திருக்கனுமோ. கந்தவேலுவுக்கு சொன்னது தான் நேசமணிக்கும்” என சொல்லிக் கொண்டான்.
ப்ரீத்தியும், கோகிலாவும் பதட்டத்தோடு நிற்க, எழிலும், பின்னாடியே அன்புவும் தென்பட்டனர். கோகிலா கவலையோடு எழிலை நோக்கி ஓடிச் சென்று, “ இது என்னத்தா, தலையெல்லாம் களைஞ்சு இருக்கு” என கேட்க,
“உன் தம்மபி தான். குடுச்சுட்டு வந்து என்னை தூக்கிட்டு போனான். என்னை ரேப் பண்றானாம் . லூசுப்பய “ என திட்ட, “ஐயோ” என் கோகிலா ,” ஆத்தி” என நெஞ்சில் கை வைத்து அரண்டு போனாள்.
“சும்மாவே உன் அண்ணேன் என்னை வையும், இப்போ கொல்லப் போகுது” என அழுக ஆரம்பிக்க
“அத்தாச்சி, இதை யார்கிட்டையும் சொல்லி, விஷத்தை பெருசாக்க வேண்டாம். விடுங்க” என்றாள் .
அன்பு, முக மலர்ச்சியோடு வர, ப்ரீத்தி ஏதோ ரகசியமாக கேட்க, அவன் உதட்டை பிதுக்கினான். அவள் ஏதோ வாக்குவாதம் செய்வது தெரிந்தது.
“பிரியு, நான் சொன்னா, சொன்னது தான். அவ சிங்கப்பூர் போகட்டும்” எனும் போது , எழிலும், கோகிலாவும் அவர்கள் அருகில் செல்ல, அவன் திரும்பி நின்று பேசிக்கொண்டு இருந்தான்.
“நம்ம ஷாதிக்கு அவள் ஒன்னும் வரவேண்டாம். அவள் சொல்ற மாதிரி, உனக்கு பேபி பிறக்கவும் வரட்டும். அது வரைக்கும் நீயும் அவளை கான்டெக்ட் பண்ணாதே” என்றார்.
அதை கேட்ட எழில், “ஆமாம், உன்னோட ஷாதில கலந்துகிறது மட்டும் இல்லை, அந்த போட்டோஸ் கூட என் கண்ணுல காட்டாத, என கண்ணு கொல்லி கண்ணு” என கோபித்தபடி அவள் வீட்டை நோக்கி செல்ல, கோகிலா நாத்தனார் பின்னாடியே ஓடினாள்.
ஆனாலும் அடுத்த நாள், ப்ரீத்தியை மதுரைக்கு அழைத்து சென்று, திருமண பட்டு சேலை, வளையல் , மீனாட்சி குங்குமம்” என வாங்கி கொடுத்து சென்னைக்கு வழி அனுப்பி வைத்தாள். ஏகே யின் கையில் முன்பு ஒரு அம்மா தந்த பொன் மாங்கல்யம் இருந்தது.
அன்பு போகும் போது இந்திராணியையும் அழைத்து சென்று விட்டான். கோணை கொண்டைக்கரமா பிளேனில் பறந்து சென்றது.
அடுத்த ஒருமாதத்தில் எழிலரசியும் சிங்கப்பூர் பறந்தாள்
அதற்கு முன், அழகர் மூலமாக, மறப்போம்,மன்னிப்போம் என கந்தவேலுவுக்கு இரண்டு லட்சம் முதலீட்டில் பழக்கடை ஒன்றை வைத்துக் கொடுத்தாள் .
எழிலரசி சிங்கப்பூர் சென்ற ஒரு வாரத்தில், ராத்தோ மால் திறப்பு விழாவும், அதை தொடர்ந்து ஐந்தாம் நாள், ப்ரீத்தியின் ஷாதியும் நடந்தது. எழில் வேண்டுமென்றே தன் தீர்மானத்தின் படி, அவர்கள் திருமண புகைப்படம் எதையுமே பார்க்கவில்லை.
புது நாடு,மக்கள், நண்பர்கள், பழக்க வழக்கம் என முற்றிலும் மாறி இருந்தாள்.புது பள்ளியும், விதவிதமான மாணவர்களும் மிகவும் பிடித்திருந்தது. சிங்கப்பூர் கல்வி திட்டத்தில் இரண்டு வருட மிலிட்டரி ட்ரைனிக் செல்ல வேண்டும் என்ற செயல் திட்டம் அவளுக்கு ஆச்சரியம் தந்தது. ஆங்கில ஆசிரியையாக இருந்தாலும், சங்கத்தமிழ் வளர்த்த மதுரை மகள் என்பதால், நிறைய பிள்ளைகள் அவளிடம் தமிழும் படித்தனர்.
பேயிங் கெஸ்டாக ஒரு தமிழ் குடும்பத்தோடு வசித்தவள், அப்பாவை வரவழைத்து மூன்று மாதம் அவருக்கு சிங்கப்பூரை சுற்றிக் காட்டினாள்.
“ஆத்தா, யாரையாவது பிடிச்சிருந்தா சொல்லு” என நச்சரிக்க ஆரம்பிக்க, “ நேசமணின்னு ஒரு பில்டிங்க் காண்ட்ரேக்டர் இருக்கார். அவரும் இரண்டு வருஷ காண்ட்ரேக்ட்ல சௌதி அரபியா போயிருக்கார். வரவும் சொல்றேன்” என்றாள்.
“ பில்டிங்க் காண்ட்ரேக்டரா… அப்படிண்டா அன்புவுக்கு தெரிஞ்சு இருக்குமே”
“ ஆமாம் இந்த உலகத்தில இருக்க எல்லாரையும் உங்க மருமகனுக்குத் தெரியும். பேசாம இருங்கப்பா. “ என அவள் அடக்க, அவர் இருக்கும் போதே, “ நேசமணியின் அழகியே” என ஒரு பார்சல் வந்தது.
“ பாப்பா, நீ சொன்னவரா. பாரு பொறுப்பா உனக்கு பிடிச்ச சிரிக்கிற புத்தரை அனுப்பி வச்சிருக்காரு. அதோட முத்து மாலை” என அழகர், ஆச்சரியமாக சில்லாகிக்க , எழிலரசி குழம்பிப் போனாள்.
‘ ஒரு வேளை இது அன்பு அத்தானோட வேலையா இருக்குமோ. யாரோ ஒரு மாப்பிள்ளையை பார்த்து வச்சிட்டு, இரண்டு அனுபுவுமா சேர்ந்து விளையாடுதுங்களோ. இது அன்புத் தொல்லை” என நொந்துக் கொண்டாள்.
அதன் பிறகு ஒரு வழிப் பாதையாக அனுப்பநர் முகவரியில் போஸ்ட் பாக்ஸ் எண்ணோடு வந்த கடிதங்கள் அவள் பெட்டியை நிறைத்தன. எல்லாமே அன்புவை நினைவுப் படுத்த , இவனுக்கு எதுக்கு இந்த வேலை என அன்புவை மனதில் திட்டினாள்.
ஒன்றரை வருடம் கழித்து ப்ரீதியிடமிருந்து போன் வந்தது. “எழில், எனக்கு குழந்தை பிறக்க போகுது. டெலிவரில எதோ காப்பிளிகேஷன் சொல்றாங்க. நீ உடனே கிளம்பி வா. நீ வரதுக்குள்ள எனக்கு எதாவது ஆனா, நீதான் என் குழந்தைக்கு மம்மி யா இருக்கனும். ஏகேவையும் நீதான் பார்த்துக்கணும்” என அழகரின் போன் வழியே, ப்ரீத்தியின் வாய்ஸ் மெஸேஜ் வந்து சேர, பதட்டத்தோடும், கண்ணீரோடும், வேண்டுதலோடும் சிங்கப்பூரிலிருந்து கிளம்பினாள் எழிலரசி..
Super super😍😍😍😍 Waiting for next epi👍👍👍
Omg. What happened? Who is that parcel man? Intresting
I think marriage la yetho nadanthu irukku..