Skip to content
Home » அன்பென்ற மழையிலே-20

அன்பென்ற மழையிலே-20

மழை -20

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியது. விஷயம் கேள்விப்பட்டதிலிருந்து எழிலரசி, ப்ரீத்திகாக , குழந்தைக்காக, அன்புவுக்காக, அத்தைக்காக என ஒவ்வொருவர் நிலையையும் நினைத்து கவலை கொண்டு , தாயையும் சேயையும் காத்துக் கொடுக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு தான் பயணித்து வந்தாள். 

சென்னை வந்து இறங்கியவள், பயந்தபடியே அன்புகரசனுக்கு போன் அடித்தாள். முதல் ரிங்கிலேயே அவன் எடுத்துவிட, “அத்தான் ப்ரீத்தி எப்படி இருக்கா” என கேட்டவளின் குரல் நடுங்க,

“ ஓகே, டெலிவரின்னா அப்படித் தானே இருக்கும். நீ எங்க இருக்க. உனக்கு எப்படித் தெரியும்” 

“ அப்பா மொபைல்ல வாய்ஸ் மெஸேஜ் போட்டு இருந்தா. சென்னை வந்துட்டேன்

 லோகேஷன் அனுப்புங்க. நான் வர்றேன்” என்றவளின் குரல் தேய 

“ ஏய் அரசி அழறியா. இரு நான் வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கிறேன்” என்றான்

“ இல்லை நீங்க ப்ரீத்திக்கிட்டேயே இருங்க. இப்போ தான் லேபர் வார்டுக்கு ஹஸ்பண்ட் போலாம்ன்னு சொல்றாங்களே. நீங்க உள்ளே போகலையா” என கேட்க, 

“ அதுக்கு இன்னும் டைம் இருக்கு” என்றான்.

“ ஓகே அத்தான், லொகேஷன் மட்டும் அனுப்புங்க. நான் வந்துடுறேன்” எனவும், இடத்தை பகிர, அடுத்த அரை மணி நேரத்தில் அவள் மருத்துவமனைக்கு வந்து விட, அழகர் வாசலிலேயே நின்றார். 

“அப்பா” என அவரைக் கட்டிக் கொண்டவள்,’நீங்க எப்பப்பா வந்தீங்க” எனவும், 

“தகவல் தெரியவுமே வந்துட்டேன்மா. பாவம் ப்ரீத்தி ரொம்ப கஷ்டப்பட்டுடுச்சு” எனவும்,

“குழந்தை பிறந்திடுச்சா” என கேட்க, “வாசல்லையே நின்னு என்னப் பேச்சு. உள்ள வந்து பாரு” என அழைத்துச் சென்றார். 

லிப்டில் சென்றனர், நான்காவது மாடியில் அதன் வாசல் திறப்பதையே பார்த்துக் கொண்டு அன்பு அவஸ்தையாக அமர்ந்திருக்க, ப்ரீத்திக்கு கூட குறைத்து முடியவில்லையோ, அதனால் தான் அத்தான் கலங்கி உட்கார்ந்து இருக்கிறாரோ, என எண்ணியவள், “அத்தான்” என அவன் கையை பிடிக்க, அழகர் வலைவு திரும்பி இருந்தார்.

அதற்கு மேல் முடியாது என்பது போல், அன்பு அவளை ஆரத் தழுவிக் கொள்ள, எழில் விக்கித்து நின்றாள். 

“அத்தான் இது ஹாஸ்பிடல். கண்ட்ரோல் யுவர் செல்ஃப்” எனவும், 

“ஸாரி,ஸாரி, ஸாரி. உன்னை பார்க்கத் தான் ப்ரீத்தி வெயிட்டிங்க்” என்றதில் அரண்டே போனாள். 

“அவளுக்கு ரொம்ப முடியலையா. வேண்டாம். என்னால அவளை இந்த நிலமையில பார்க்க முடியலை” என அழ, 

“ ஏய் அவளுக்கென்ன, புள்ளையை பெத்துட்டு மகாராணியாட்டம் உட்கார்ந்து இருக்கா. ஒரு ஊரே அவளுக்கு சேவகம் பார்க்குது. நான் தாண்டி காஞ்சு கிடக்குறேன்‌. என்னை ஒருத்தரும் பார்க்காதீங்க ” என சிடுசிடுத்ததில் ப்ரீத்திக்கு ஒன்றும் இல்லை என சற்றே ஆசவாசம் ஆனாள்.

“ இந்தா ஆரம்பிச்சிட்டிங்கல்ல, புள்ளை பெத்தவளை விட்டு உங்களையா கவனிப்பாங்க” 

என சண்டையிட்டபடியே அறை வாசல் வரை வந்தவள், கைகளை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்ய, “ம்ம்.. சிங்கப்பூரு” என நக்கலடிக்க, “லேபர் வார்டுக்குள்ள இதெல்லாம் பண்ணிட்டு தான் போகனும்” என வகுப்பெடுத்தாள்.

“இந்த ரூம் தான் போ” என கை காட்டி விட்டு அவன் வெளியேவே நிற்க, அவனை வித்தியாசமாக நோக்கி விட்டு உள்ளே பார்க்க, 

அந்த பெரிய அறையில், இந்திராணி, அழகர், ப்ரீத்தியின் அண்ணன் குடும்பத்தை தவிர ராஜஸ்தானி குடுமும் இருக்க குழம்பிப் போனாள். 

“ உள்ளே இருக்க ரூம்ல, ப்ரீத்தி இருக்கா, நீ போய் பாரு” என அன்பு சொல்ல, இந்திராணி,”எழிலு” என ஆசையாக வந்து மருமகளை திருஷ்டி கழித்து கொஞ்சி, “ என் மருமகள்” என அங்கிருந்த ராஜஸ்தானி தாதிஷாவுக்கு அறிமுகமும் செய்து வைத்தார்.

“ ப்ரீத்தி உள்ளே இருக்கு” என உள் அறையைக் காட்ட, கதவை தள்ளிக் கொண்டு உள்ளே செல்ல, வெளியே வந்த நர்ஸ், “லேடீஸா. அப்படின்னா உள்ள போங்க. அவரோடத் தொல்லை” என தலையில் அடித்துக் கொண்டு வெளியேற, அவள் தயங்கியபடியே  உள்ளே சென்றாள். அங்கு கண்ட காட்சியில் எழில் மயக்கம் போடாத குறை தான்.

நைட்டியில் இருந்த ப்ரீத்தி, மார்பை திறந்து போட்டு, மயக்கத்தில் கட்டிலில் சாய்ந்து அமர்ந்து இருக்க, அவள் மடியில் தலையனை வைத்து, பேபி மெத்தை கொள்ளாமல் இருந்த குழந்தையை தன் கையில் ஏந்தியவாறு, 

“ ஹனி, மைடியர் மாஷாவை தொல்லை பண்ணாம, மம்மு குடிச்சுடுங்கடா. அவ்ளோ தாண்டா பேபி ஆகிடுச்சு” என அம்மாவையும் மகளையும் சேர்த்துக் கொஞ்சிக் கொண்டு, 

அவளின் மார்பில், குழந்தையின் வாயை வைத்து, மனைவிக்கும் மகளுக்கும் உதவிக் கொண்டு இருந்தான், பிரேம் ரத்தன் சிங் ராத்தோட். 

“ வாட், ப்ரீத்தி என்னடி இது” என எழில் கத்தியதில் ப்ரீத்தி ஜெர்க்காகி முழிக்க, அந்த அதிர்வு பச்சிளம் குழந்தையிடமும் எதிரொலிக்க, அது அழுக கிளம்பியது. கடுப்பான ப்ரேம் 

“ திமாக் நஹி ஹை க்யா. ஜாவோ யஹாங் ஸே” என உச்சஸ்தாயில் ஆரம்பித்து அப்படியே கீழ் ஸ்தாயில் குறைத்து, 

“ மெதுவா பேசுங்க. மேரி ஸோனி குடி அழ ஆரம்பிச்சுடுவா” என்றான்.

எழிலுக்கு இவ்வளவு நேரம் ப்ரீத்திக்கு என்ன ஆச்சோ என்ற பதைபதைப்பில் தான் பட்ட அவஸ்தை, ஒன்றரை வருட ஏமாற்றம் எல்லாமும் சேர்ந்து அழுகையாய் வெடித்தது

 குழந்தையை கூட பார்க்க வில்லை. ப்ரீத்தி பிரேமை கல்யாணம் பண்ணியிருக்கான்னா? அப்போ அத்தான்? ‘ அன்புவுக்காக வருந்தி, 

“ கடைசில, நேத்து வந்தவன் கூட்டிட்டு போயிட்டான்ல.” எனவும், 

“ ப்ளீஸ் எழில் ரோனா மத். ஏகே தான் எங்களுக்கு ஷாதி பண்ணி வச்சான்.  ஐ வில் எக்ஸ்ப்ளைன் யு” என கை நீட்ட, 

“ வேண்டாம் போ.  உனக்காக அடிச்சு புரண்டு ஓடிவந்தேன்டி. நல்லா இரு” என்றவள், திரும்பி வேக நடையோட வெளியேற,

“ உஸே ரோகோ ஜி” என்றாள் ப்ரேமை பார்த்து. 

“ அன்பு பார்த்துக்குவான். நீ பேபியை பிடி” என அவளிடம் பத்திரமாக தனது தேவதையை ஒப்படைத்து விட்டு வந்தான்.

“ பார்த்திட்டியா. புள்ளை பால் குடிக்குதா” என கேட்ட இந்திராணியிடம், “நீங்க கூட என்னை ஏமாத்திட்டிங்கல்ல  ” என பற்றிய அவர் கையையும் உதறி விட்டு அவள் வெளிய ஓட, 

“ ஆத்தா எழிலு” என இரண்டு எட்டு எடுத்து வைக்க 

“ நீ ப்ரீத்தியை பாரு. மாப்பிள்ளை பாப்பாவை பார்த்துக்குவான்” என அழகர் இந்திராணியையும் தடுக்க, உள்ளிருந்த ப்ரேம், “ என்னங்கப்பா” என்றான்.

“ எதிர்பார்த்தது தானே. அன்பு சமாளிச்சுகட்டும் நீங்க புள்ளையை பாருங்க” என்று சொல்ல, இந்திராணி ப்ரீத்தியிடம் சென்றிருந்தார்.

“ மம்மிஜி. எழில் கோபமா போயிட்டா. மே க்யா கரூங். எல்லாமே ஏகே யோட ப்ளான்” என அவள் சலிக்க.

“வாழ்க்கையை கூத்தா நடத்துறீங்க. உங்களை வச்சுக்கிட்டு நாங்களும் சேர்ந்து கூத்தாடுறோம். இது எங்க போயி முடிய போகுதோ” என்றவர், 

ப்ரீத்தி, ப்ரேமின் மகள், வெள்ளை பூசணி போல் மூன்றரை கிலோ வெயிட்டில் பிறந்திருந்த தேவதையை அள்ளி அணைத்து கொண்டவர், “ நீ வந்து தான். உன் ஆத்தா, சின்னாத்தா, அப்பன், சித்தப்பனை எல்லாம் என்னண்டு கேட்கனும்” என கொஞ்ச, பொக்கை வாய் காட்டி கண் மூடியபடியே சிரித்தது குட்டி ப்ரீத்தி. 

இந்திராணியம்மாள், ப்ரீத்திக்கு கொடுத்த வாக்குப்படி, அவள் ப்ரேம் ராத்தோடை மணந்திருந்த போதும், மசக்கையாக வந்த மூன்றாம் மாதம் முதல் தாய்க்கு தாயாக அவர் தான் பார்க்கிறார்.

அவ்வப்போது ராத்தோட் மேன்ஷன் சென்று வர, ப்ரேம் அன்பு இல்லத்தில் குடியேறி இருந்தான்.

“ மம்மிஜி” என்ற அவளின் அழைப்புக்கு இணங்க மாமியாராக இல்லாமல் மற்றொரு தாயாகவே மாறி இருக்க, அன்பு இல்லம் அவள் தாய்வீடாக மாறியிருந்தது. அதற்காக ஏகே அவள் அண்ணனா என கேட்காதீர்கள் , இப்போதும் இணைபிரியா நண்பர்களாகவே இருந்தனர்.

ப்ரீத்தியின் அண்ணன் குடும்பத்தோடு அவள் ஷாதிக்கு வந்து. சென்ற பின், குழந்தை பிறந்தது அறிந்து இப்போது தான் வந்திருக்கிறார்.

ப்ரேமின் குடும்பத்தில் தாதிஷா அவன் ஷாதி முடியவுமே, பேரனை அவன் மனைவியிடம் ஒப்படைத்து விட்டு ராஜஸ்தான் சென்று விட்டார். கொள்ளு பேரனை பார்க்கவே தற்போது வந்துள்ளார். பிரேம் மற்ற குடும்பத்தினரிடம், ஒட்டி ஒட்டாமல் உறவு வைத்திருந்தான். குழந்தை பிறந்தது அறிந்தே அவர்களும் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். 

எழிலின் மனதில் ஆயிரம் கேள்விகள், எல்லாமே இந்த அத்தானோட வேலையா தான் இருக்கனும். ப்ரீத்தி அப்படி துரோகம் செய்யும் பெண் இல்லை. பிரேம் அவளை விரும்பி இருந்தாலும், கந்தவேலு மாதிரி அத்து மீறும் ரகம் இல்லை. அப்போ இது எல்லாமே அன்புவோட ப்ளான். ஏன் எப்படி எப்போது இந்த கேள்விகள் மண்டையை குடைந்தாலும் , தன் குடும்பத்தினரும் சேர்ந்து அவளை உண்மையை மறைத்தது தான் பெரிய ஏமாற்றமாக உணர்ந்தாள். 

‘இவுங்க யாருக்குமே நான் தேவையில்லை. சிங்கப்பூருக்கு தானே போனேன். செவ்வாய் கிரகத்துக்கு போன மாதிரி தனியா விட்டானுங்க’ என மனதில் சபித்தபடி வேக எட்டுக்களோடு வெளியே வர, அன்பு அவள் கூடவே செல்ல தயாராக நின்றான். 

காரிடாரில் நடக்கும் போதே, “ அரசி, ஐ வில் எக்ஸ்ப்ளைன்” என கூடவே வர, காதில் வாங்காமல், ஏமாற்றத்தில் வந்த கண்ணீர் கண்ணை மறைக்க, அவன் முன் அழக்கூடாது என லிப்டில் புகுந்தாள். கூடவே அவனும் வந்து விட , திரும்பி நின்றுக் கொண்டாள். 

“ அரசி , இங்க பாரு. எல்லாத்துக்கும் நான் தான் காரணம். இங்க பாரு” என்றான்.

“ எனன் பெரிய காரணம். எல்லாருமா சேர்ந்து இரண்டு வருஷமா என் முட்டாளா வச்சிருந்திருக்கீங்க. இன்னைக்கு ப்ரீத்தியோட வாய்ஸ் மெஸேஜ், அந்த ட்ராமாவோட உச்சம். நான் மனுசியா தான் இருக்கேனான்னு செக் பண்றிங்களா. நான் துடிச்ச துடிப்பு எனக்கு தான் தெரியும்” அவள் கதற,

“ ஷ், ஷ். அரசிமா ப்ளீஸ்.  வேண்டாம், அழாத. எனக்கு கஷ்டமா இருக்குடி” என அவளை அணைத்துக் கொள்ள, 

“ ஒன்னும் வேண்டாம் போங்க” என முரண்டு பிடித்தவள், அவனின் இறுகிய அணைப்பில் அழுகையோடு ஒடுங்கினாள்.

லிப்ட், கீழ் தளத்துக்கு வந்திருக்க அவளை அப்படியே அழைத்துச் சென்று தன் காரில் ஏற்றினான்.

“ ஒன்னும் வேண்டாம். நான் ஏர்போர்ட் போறேன்” என அடம்பிடிக்க, 

“ போகலாம். இரண்டு வருஷ கதை தெரிய வேணாமா. கேட்டுட்டு போ” என ப்ரேமுக்கு மெஸேஜ் அனுப்பி விட்டு காரை கிளப்பி இருந்தான்.

டிஸ்யுவை எடுத்துக் கொடுத்து, தண்ணீர் பாட்டிலை அவள் முன் நீட்ட, “ ஒன்னும் வேண்டாம்” என்றாள்.

“ இப்படி அழும்மூச்சியா பக்கத்திவ உட்கார்ந்து வந்தேன்னா, உன்னைய நான் கிட்னாப் பண்ணிட்டு போறேன்னு நினைச்சுக்குவாங்க” 

“ ஆமாம் பெரிய வில்லன், பொண்ணை தூக்கிறீங்கன்னு நினைச்சுக்க போறாங்க. உங்க மூச்சிக்கு அதெல்லாம் செட்டே ஆகாது.” என்றவள், 

“ பெரிய வள்ளல் மாதிரி, காதலிச்ச பொண்ணை , இன்னொருத்தனுக்கு தூக்கி கொடுத்திருக்கீங்க. உங்களுக்கு ரோஷமே இல்லையா” என்றாள்.

“ காதலிச்ச பொண்ணை, இன்னொருத்தன் கிட்ட கொடுத்தனா. நேசமணியை சொல்றியா” சின்ன சிரிப்போடு கேட்க 

“ அதுவும் உங்க வேலை தானா. நினைச்சேன். ஏன்யா, உன் வாழ்க்கைக்கு நான் தடைக்கல்லா இருக்கேன், கண்ணுல படாதது, கருத்தில படாதுன்னு, எல்லாரையும் விட்டுட்டு மனசை கல்லாக்கிட்டு நான் நாடு விட்டு நாடு போனா.. இவரு காதலிச்ச பொண்ணுக்கெல்லாம் இன்னொரு மாப்பிள்ளையை பார்த்து வைக்கிறாரு. ஏன் அத்தான், சைட் விசிட் போகும் போது படாத இடத்தில் பட்டுருச்சா” வேண்டுமென்றே அவள் வினவ0

“ அடியே கொன்றுவேன். யாரைப் பார்த்து என்னடி கேட்குற. வீட்டுக்கு வா ப்ரூஃப் பண்ணி காட்டுறேன்” என கோபமாக சொல்ல, ஒரு நொடி முழித்தவள், 

“ சீ போ” என முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“ பசிக்குதா, எதாவது ரெஸ்டாரண்ட்ல நிறுத்தவா” என்றான்.

“ இல்லை. என் கேள்விக்கு எல்லாம் பதில் வேணும். அப்ப தான் மைண்ட் ஃப்ரியாகும் பசிக்கும்” என்றாள். 

அதில உனக்கு பிடிச்ச பிஸ்கட், ஸ்நாக்ஸ், ப்ளாஸ்க்ல காபி எல்லாம் இருக்கு. சாப்பிடு. வீட்டுக்கு போயி பேசலாம். உன் கூட பேசினால் காரோட்ட முடியலை” என்றான். 

சற்று நேர அமைதிக்கு பின், “குழந்தை எப்போ பிறந்தது” எனவும், 

“ நேத்து” என்றான்.

“ அதுலையும் சீட்டிங்க். உங்க எல்லாருக்கும் வேண்டாதவளா போயிட்டேன்ல நானு” அவள் மீண்டும் அழுகையை ஆரம்பிக்க, 

“ அழகாம வாடி” என மிரட்டினான்.

“ இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” என்றவள், தொண்டை வறண்டு “ கிடக்க, ப்ளாஸ்கிலிருந்து காபியை கப்பில் ஊற்றி அருந்தப் போனவள், “ உங்களுக்கு” எனவும், 

“ நீ வரும் முன்னாடி தான் குடிச்சேன். நீ குடி” என காரை குலுங்காமல் ஓட்டிச் சென்றான்.

(இன்னும் இரண்டு எபி வரும். மாலைக்குள் போட்டு விடுவேன். வாசிங்க . யாருமே என்னை கண்டுபிடிக்க வில்லையா . சோ சாட். இன்னும் வளரனும் போல.)

2 thoughts on “அன்பென்ற மழையிலே-20”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *