Skip to content
Home » அன்பென்ற மழையிலே-21

அன்பென்ற மழையிலே-21

மழை -21

அன்பு இல்லம், மரங்கள் வளர்ந்து இன்னும் பசுமையாக காட்சி தந்தது. கார் அதனுள் நுழையவும் அவளுக்கு அப்படி ஒரு நிம்மதி. இங்கிருந்த இரண்டு வருடங்கள் அவள் வாழ்வின் நிம்மதியான நாட்கள். வீட்டை கண்ணெடுக்காமல் பார்க்க, கண்ணில் நீர் பெருகியது. அவள் புறம் குனிந்து கண்ணீரை துடைத்து விட்டவன், 

“அன்பு இல்லத்துக்கு, அதனோட அரசியை வரவேற்கிறேன், வா.” என அவள் நெற்றியில் முத்தமிட, திகைப்பூண்டை மிதித்தவள் போல், உறைந்து போனாள் எழிலரசி. சுற்றி வந்து, கார் கதவை திறந்து விட்டு, கை பிடித்து அவளை இறக்கி விட, “நிஜமாவே இந்த வீட்டுக்கு அரசியாகிட்டேனா?” அவள் பார்வை விரிய, “சந்தேகம் இல்லாமல். வாங்க ஓனரம்மா” என வீட்டுக்குள் அழைத்து சென்றான். 

விளங்க முடியா கவிதை போல் நின்ற அன்புக்கரசனை அவள் விழி விரித்து பார்க்க, “ அத்தை மகனை, இனிமே ரைட் ராயலாவே சைட் அடிக்கலாம் அழகியே” என கண்ணடித்து, மென்னகை பூத்து, இனிமையாய் பேச, ‘இது அன்பு அத்தான் தானா’ என்ற சந்தேகம் வந்தது எழிலுக்கு. 

ஆள் புதையுமளவு இருந்த ஷோபாவில் அவளை அமர்த்தி, தானும் அருக்கமர்ந்து, “இப்போ கேளு, உன் சந்தேகத்தை” என்றான். 

“நீங்க நிஜமாவே அன்பு அத்தான் தானா”சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள, அவனையே கிள்ளி பார்த்தாள் . 

“ஏய் , டீச்சரம்மா வலிக்குது. விடுடி “ என்றான் அவன். 

கேட்கவும், சொல்லவும் ஆயிரம் விஷயம் இருந்தது. எங்கிருந்து ஆரம்பிப்பது? 

விடையாய் அவனே பேச ஆரம்பித்தான். 

“ கடைசியா நீ கிளம்பும் போது, நன்றி நவில, இங்க ஒன்னு குடுத்த பார்த்தியா” என கன்னத்தை காட்ட, அவள் முகம் சிவந்தாள். 

அதி ரசித்து, “ அங்க ஆரம்பிச்சுதுடி நம்ம காதல். அயித்த மகனை சைட் அடிச்சேன்னு சொல்ற நேரமாடி  அது. காலமெல்லாம் கூடவே வளர்ந்தப்ப சொல்லை, கல்யாணம்னு பேசும் போது சொல்லை, அவன் தாலியை அறுத்துட்டு போனன்னைக்கும் சொல்லை.  நான் கமிட் ஆனா பிறகு, இரண்டு வருஷம் கூடவே இருந்துட்டு என்னை குத்தம் சொல்றதுக்கு, பிரேக் அப் பண்ணிட்டு போகும் போது சைட் அடிச்சேன்னு, முத்தம் குடுத்துட்டு சொல்லிட்டு போற, நான் மனுசனா என்னடி” அவன் எகிற. 

“இதே குத்ததை நானும் உங்க மேல சொல்லலாம்ல, கூடவே வளர்ந்தப்ப தெரியலை. அடுத்தவன் என் கழுத்துல தாலி கட்டினப்போ  தெரியலை, அதை அறுத்தப்ப தெரியலை, உங்க கூடவே இதே வீட்டுல இருந்தப்பவும்  தெரியலை. நான் போனபிறகு தெரிச்சதாம் போயா. என் ஜாதகம் உன் ஜாதகத்தோட சேரலைனு சொன்னப்பவே நான் செத்துட்டேன்.” எனவும், 

அவள் கன்னத்தில் அடித்து,  “அப்படி சொல்லதடி” என்றான். 

“ஆமாம் போங்க . முதல்முதல்ல ப்ரீத்தி போன் பண்ணும் போது , ரெண்டாவது அதிர்ச்சி. என்னை கல்யாணப் பொண்ணா , நீங்களே  காரோட்டிட்டு கூட்டிட்டு போனீங்க பார்த்திங்களா, பூமி பிளந்து உள்ள போயிட மாட்டோமான்னு இருந்துச்சு. அவன் தாலி காட்டும் போது , நான் இந்த உலகத்துலயே இல்லை. அந்த ராத்திரிய நினைச்சு அவன் தொடுவானேன்னு பயந்து கிடந்தேன். அந்த மாரியம்மனுக்கு என் மனசு தெரிஞ்சு தான், அவன் கையாலேயே அறுக்க வச்சிட்டா. இல்லைனா, நான் போயி , நாலு வருஷம் ஆயிருக்கும்” அவள் சொல்ல, 

“அதையே சொல்லதடி” என இம்முறை அவள் உதட்டில் சுண்டினான். 

“வலிக்குது, குரங்கு” என் திட்ட, 

“வலிக்கணும்னு தான் சுண்டுனது” என்றவன், 

“உன்னை மண்டபத்துல இறக்கிவிட்டுட்டு போனேன்ல , காரை நிறுத்திட்டு வர்றதுக்குள்ள ரெஸ்ட்லெஸ்ஸா பீல் பண்ணேன். ஓடி வந்தா, தாலி கட்டிட்டான். மனசே சரியில்லை, ப்ரீத்திகிட்ட புலம்பினேன் கேட்டு பாரு. அவன் கூட உன்னை சேர்த்து பார்க்கவும் சங்கடமா இருந்தது, உன் கூட போட்டோ எடுக்காமல் கூட தோணலை. கிளம்பும் போது ஒரு பார்வை பாரதியே, நிறைய நாள் அந்த பார்வை என்னை தூங்க விடலை. எல்லாம் சேர்ந்து மாமா மேல விடிஞ்சுருச்சு” என வருத்தப்பட்டான். 

“நமக்கு உள்ளதை தான் அப்பா, வாங்கிக்கிட்டார் போல” என்றவள், “அது சரி, ப்ரீத்திக்கும், உங்களுக்கும் நடக்க இருந்த கல்யாணத்தை ஏன் மாத்துனீங்க. அவ பாவம் இல்லையா” என வினவ, 

“ப்ரீத்தி , சின்ன வயசுலிருந்து பாசத்துக்காக ஏங்கினவ. தெரியாத ஊர்ல நம்பிக்கையான தோழனா என்கிட்ட பழகினா. நாங்க ரெண்டு பேருமே எதார்த்தவாதிகள், சேர்ந்து வாழ்ந்தா நல்லா இருக்கும்னு முடிவு பண்ணினோம். நீ கிளம்பின பிறகு, எனக்குள்ள ரொம்ப தடுமாற்றம், ஏற்கனவே பிரேம், ப்ரீத்தி மேல உள்ள லவ்வை சொல்லி, எங்க ரிலேஷன்ஷிப்பை கொஸ்டின் பண்ணி இருந்தான். நீ கிளம்பின அன்னைக்கு எனக்கும் ஒரே குழப்பம். தனியா உட்கார்ந்து யோசிச்சேன். ப்ரீத்தி, பிரேம் வீட்டுக்கு போயிருந்தா. அவளை பிக் அப் நான் போனேன். அப்போ தான் ரெண்டு பேரையும் உட்கார வச்சு பேசினேன்.” 

“ப்ரீத்தி உடனே ஒத்துக்கிட்டாளா, ஒண்ணுமே கேட்கலையா “ 

“ நீ எழிலை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லு, நான் இவனுக்கு வாழ்க்கை கொடுக்குறேன்னு டீல் போட்டா.” என அந்த நாளுக்கு பயணித்தான். 

பிரேமின் வீட்டில் அவன் தாதிஷா, அன்புவிடம் , “ ஒரு லட்கீயை மனசில வச்சுகிட்டு ஷாதி பண்ண மாட்டேங்குறான். சொத்து, ஜயதாத் நிறைய இருக்கு. இவன் சொத்து மேல ஆசை பட்டு வராமல், இவனுக்காக வர்ற பொண்ணா இருக்கனும். இந்த லட்கி மேல அவனுக்கு ஆசை இருக்கும் போல, இவங்க வீட்டு ஆளுங்ககிட்ட கேட்டு சொல்லேன்.” என்றார். 

அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே, ப்ரேமும், ப்ரீத்தியும் வந்தனர். “தாதிஷா, நான் என்ன சொன்னேன்” என ஆரம்பித்து ராஜஸ்தானியில் அவரை கடிய, பாட்டி, பேரனுக்குள் வாக்குவாதம் நடந்தது. 

“ஹேய் , சோடோ  யார். லடக்கி தோ இத்தினி ஸ்வீட் ஹை. அப்புறம் பீஜி கேட்பாங்கள்ல” என ப்ரீத்தி அவனை சமாதானப்படுத்த, 

“சம்ஜாவோ இஸ்க்கோ” என அவளை கொஞ்சினார். 

“பாகல் கைக்கி, அவங்க சீரியஸா எடுத்துக்குவாங்க.” என ப்ரீத்தியை கடிந்தவன், அன்புவிடம் மன்னிப்பு கேட்க, “எப்டியோ போ” என தாதிஷா அவனை திட்டி விட்டு உள்ளே சென்றுவிட்டார். 

“சாரி, அன்பு. இவளை நான் இங்கே கூட்டிட்டு வந்துருக்கவே கூடாது. எல்லாரும் ஊருக்கு போயிட்டாங்கன்னு அப்செட்டா இருந்தா. அதனால்  கூட்டிட்டு வந்தேன்”அவன் விளக்க உரை கொடுக்க, 

“ விடுங்க பிரேம், இப்போ அது பிரச்னை இல்லை” என்றவன். 

“இந்த எழில், ஊரை விட்டு போனாலும் என் மண்டையை விட்டு போக மாட்டேங்குறா, பயங்கர ஸ்ட்ரெஸ். மாமா மாதிரி நானும் ஹாஸ்பிடல் போய் படுத்துருவேன் போல” எனவும், ப்ரீத்தி , “சுப்கர்” என அவன் தோளில் அடித்தவள், 

“அப்படியெல்லாம் சொல்லாதே. எனக்கு இருக்கிற ஒரே பிரென்ட் நீ தான்.” என்றாள்.

“இவ ஒருத்தி” என சலித்த பிரேம், “அன்பு, நான் கேட்குறதுக்கு எல்லாம் பதில் சொல்லுங்க.” என எழிலை பற்றிய சில கேள்விகளை கேட்க, அவனும் அதற்கான பதிலை சொன்னான். 

“நீங்க, உங்க மாமா பொண்ணு எழிலரசியை லவ் பண்றிங்க, இந்த குண்டு பூசனியை இல்லை. ஏன்னா இதே பீலிங்ஸ் நான் , இவளால ரெண்டு வருசமா அனுபவிச்சிட்டு வர்றேன்” என அவன், அன்புவுக்கும் மேல் ப்ரீத்தி மேல் உள்ள ஈர்ப்பை, ஆசையை பட்டியலிட, 

“வாவ், இன்டரெஸ்டிங்.” என அவள் பிரேமை வம்பிழுத்தபடி கேட்டாள்’  

“மார் டாலுங்கி. சுப்கர்” என்றவன், 

“ நீங்க ப்ரீத்தி மேல வச்சிருக்க அன்பை குறையாய் சொல்லை. அது வேறு வகை, எழில் மேல வச்சிருக்கிறது தான் லவ்” என்றான். 

அன்பு, எழிலை ஜோடி சேர்த்து விட்டு, தான் ப்ரீத்தியை கட்டிக்கொள்ள திட்டமிட,  “என்னை குழப்பாதீங்க” என அன்பு தலையை பிடித்துக் கொண்டான், 

“ஏய், இது என்னோட மேட்டர் , நீங்களா எப்படி முடிவெடுப்பீங்க” என நடுவில் குண்டை தூக்கி போட்டாள்  ப்ரீத்தி . “இவ ஒருத்தி’ என அவளை முறைத்த பிரேம், 

“அன்பு, நீ ஆசைப்படுற பொண்ணை  விட, உன்னை ஆசை படுற பொண்ணை கட்டிக்கோன்னு தலைவரே சொல்லி இருக்கார்” எனவும்  

“அது பையன் இல்லை” என ப்ரீத்தி சந்தேகம் கேட்க, 

“கொஞ்ச நேரம் பேசாமல் இரு” என திட்டிவிட்டு, குட்டையை குழம்பினான்.

அன்புவுக்கு ப்ரீத்தி என்ன சொல்வாலோ என்ற பயம், 

“ஆனால், நான் ப்ரீத்திக்கு ப்ரோமிஸ் பண்ணி இருக்கேனே” என்றான். 

“அதுக்காக, அவ வாழ்க்கையும் சேர்த்து நாசமாக்க போறிங்களா. உங்க மௌனம் தான் எழில் வாழக்கையை காவு வாங்கிடுச்சு, ப்ரீத்திக்கும் அதையே செய்யாதீங்க. அதை நான் அனுமதிக்க மாட்டேன்” என வேகமாக பேசியவன், 

“என் மேல நம்பிக்கை வைங்க, அவளை உங்களை விட நல்லா பார்த்துக்குவேன். அவளை சந்தோஷமாவும் வச்சுக்குவேன்” அன்புவின் கையை பிடித்து வாக்கு தந்தான்.  

“இதுல ப்ரீதியோட மனசு ரொம்ப முக்கியம். அவ ஹெர்ட் ஆகிட கூடாது” என அன்பு சொல்ல, ப்ரீத்தி, பிரேம் முன்பே அன்புவின் கழுத்தை கட்டிக் கொண்டு அவன் கன்னத்தில் முத்தமிட்டவள், “ இது தான் என் ஏகே . ஐ லவ் யு மேன் “ என்றாள். 

அன்பு மேலும் குழம்பி போக, பல்லை கடித்த பிரேம், “ ஏ பாகல் கைக்கி, அவர் தெளிஞ்சாலும், நீ தெளிய விடமாட்டேங்கிறா.’ என திட்டியவன், “ இப்போ சொன்னேல்ல, அதையே சொல்லி, அவர் லிப் டு லிப் கிஸ் அடி. நீ அன்புவை லவ் பண்றேன்னு ஒத்துக்குறேன்” என பிரேம் சவால் விட, இருவருமே அதிர்ந்தனர். 

“அதெல்லாம் ஷாதிக்கு அப்புறம். உன் முன்னாடியா செய்வோம்” என அன்பு பதற, ப்ரீத்தி பிரேமை முறைத்தபடி, “நீ திரும்பு, நான் ஏகே வை கிஸ் பண்றேன்” என பதில் சவால் விட்டாள். 

அன்பு, “ப்ரீத்தி சும்மா இரு” என அதட்ட, 

“சரி கண்ணை மூடிட்டேன். ரெண்டு நிமிஷம் தான் டைம் “ என பிரேம் கண்ணை மூடிக்கொள்ள, இருவரையும் மாற்றி, மாற்றி பார்த்தவள், அன்புவை நோக்கி முன்னேற, “ப்ரீத்தி ப்ளீஸ்” என அன்பு  கண்ணை மூட, அதனுள் எழில் வந்தாள். “அரசி” என அவன் வாய் முணுமுணுத்தது. 

அதை பார்த்த ப்ரீத்தி, “அவ்வளவு தான் ஏகே, நீ எழிலை கல்யாணம் பண்ணிக்கோ. நான் அதை தான் முதல்ல இருந்து சொல்றேன். என்னை பத்தி கவலை படாதே, நான் இந்த தடிமாடுக்கு வாழக்கை குடுத்துக்குறேன்” என்றாள். 

தடிமாடு என்றதுக்கு பிரேம் கோபப்படுவான் என பார்த்தால், “தேதோ “ என பிரேம் சட்டென அவள் முன் மண்டியிட்டு நிற்க, அன்பு வாயை பிளந்தான். இது போல் செய்ய, தன் ஈகோ இடம் கொடுக்குமா என தன்னையே கேட்டுக் கொண்டான். 

ப்ரீத்தி  கண்ணில் நீரோடு, ‘நீ கேட்குறேன்னு இல்லை, நான் ரஜினி ஃபேன் அதனால், என்னை நேசிக்கிற உன்னை ஷாதி பண்ணிக்கிறேன்” என அவனை கட்டி கொள்ள, அன்பு ஆச்சர்யமாக பார்த்தான். 

‘அங்குட்டு திரும்பு ஏகே, நான் இவனுக்கு ப்ரூப் பண்ணிட்டு வர்றேன்” என அவள் பிரேமை பார்க்க, “என்னமோ செஞ்சு தொலைங்க” என அவன் தாதிஷாவை அழைக்க சென்று விட்டான். 

ப்ரீத்தி, “நான் இவ்வளவு நாள் ஏகே கூட, அவன் வீட்டுல தான் இருந்தேன்” என ஆரம்பிக்க, 

“உன்னை பத்தி A to Z எனக்கு தெரியும். ஐ லவ்யூ குலாபி. உன் மேல சந்தேகம் எல்லாம் வராது. அன்பு அளவுக்கு, உன்னை  பார்த்துக்குவேனான்னு தெரியலை. நல்ல ஹஸ்பண்டா இருப்பேன்.” என வாக்கு தர, அவனை கட்டி கொண்டாள். “உன் டவுட் கிளியர் பண்ண” என அவளின் ரோஜா இதழ்களை, தன செவ்விதழ்  கொண்டு பொருத , அந்த கணத்தில் கன்னியாய் உயிர்த்திருந்தாள் அந்த பாவை. 

அன்பு  தாதிஷாவை அழைத்து வந்து, அப்போதே அவர்கள் ஷாதியை உறுதி செய்தான். பெரியவர் அவர்களை ஆசீர்வதித்தார். 

அன்பு இல்லத்துக்கு வந்த பின்பும், ப்ரீதியிடம் ஐயம் திரிபுர கேட்க, 

“நீ எழிலை கல்யாணமா பண்ணிக்கிறேன்னு ப்ரோமிஸ் பண்ணு. நான் பிரேமை ஷாதி பண்ணிக்கிறேன்.” என்றாள் . 

“அவளை தான் கல்யாணம் பண்ணும். ஆனால் இப்போ இல்லை, அவ சிங்கப்பூர் போயிட்டு வரட்டும்” என்றான். 

ப்ரீத்தி ஏன் என் வினவ, “ கடமைக்காக , நன்றிக்கடனுக்கா கல்யாணம் பண்றேன், இல்லை நீ என்னை விட்டேன்னு நான் அவ பக்கம் திரும்புனேன்னு நினைச்சுட்டானா?” என அவன் வினவ, 

“எஸ், நீ சொல்றதும் பாயிண்டு தான். நீ லவ் பண்ணி அவளை கல்யாணம் பண்ணிக்கனும்னு அவளுக்கு ஆசை. நீ சொல்றபடி செய்யலாம். “ என்றாள். 

“ரெண்டு வருஷம் லவ் பண்ணி, அவ மனச மாத்தி கல்யாணம் பண்ணிக்கிறனே” என்றவன், “அதுக்கு உன் ஹெல்ப் வேணும்” என அன்பு, ப்ரீத்தி கல்யாணம் என்பது போலவே அவளுக்கு காட்ட வேண்டும் என்று சொல்ல, 

“என் டியர் பிரெண்டை, என் கல்யாணத்துக்கு வர விட மாட்ட” என  குறை பட, 

“அவ உன் கல்யாணத்துக்கு வர்றது முக்கியமா, இல்லை நான் அவளை கல்யாணம் பண்றது முக்கியமா” என வினவ, ப்ரீத்தியும்  அன்புவின் திட்டத்துக்கு சம்மதித்தாள். 

அன்பு, எழிலிடம், ப்ரீத்தி ஒத்துக்கொண்ட முறையை சொல்ல, “அப்போ, நம்ம ஊர் திருவிழாவுக்கு முன்னாடியே, இந்த முடிவு எடுத்துட்டீங்களா, ஜோசியர் சொன்னது உங்களுக்கு தெரியாதா?” என சந்தேகமாக கேட்க, 

“ புதுசா என்னடி சொல்ற” என வினவ, அவள் தாய்மாமா, அழகரிடம் சொன்னதையும், அழகர் மறுமொழியையும் சொல்ல, 

“என் மாமா ஜெம் ஆப் தி மென். உனக்கு தான் சந்தேக புத்தி. நீ சொல்லி தான், இந்த விஷயமே எனக்கு தெரியும். நான் அதெல்லாம் பார்க்கிறதா இல்லை. ப்ரீதியோட கமிட் ஆனப்ப, எந்த ஜோசியரை பார்த்தேன். அதுவும் போக, மாமா ஜாதகத்தை காரணம் சொன்னப்ப கூட அம்மா, அதெல்லாம் ஒன்னும் இல்லை, சும்மா எழிலையே கட்டுவோம்னு தான் சொல்லுச்சு. ப்ரீத்திக்கு வாக்கு கொடுக்கவும் தான் , அந்த பேச்சை விட்டுச்சு” என்றான். 

“அந்த ஜாதகத்தலா , நாலு வருஷம் துன்ப பட்டவ அத்தான். உங்களுக்கு வேணா அதில நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். என்னால உங்களுக்கு ஆபத்துன்னு சொல்லும் போது , மனசு எப்படி வலிச்சது தெரியுமா.” என கண்கலங்க, 

“இந்த தியமையான மனசும், அந்த நேசமும் தான், என்னை உன்கிட்ட கொண்டுவந்து சேர்த்திருக்கு” என்றான். 

“ கந்தவேலு கடத்துனப்ப , தொட்டு தூக்க கூட மாட்டேன், ப்ரீத்தி திட்டுவான்னு சொன்னிங்க” எனவும், 

“ஆமாம், நான் பார்க்கத்தப்ப, நீ பார்க்கிற பார்வையே அங்க தாங்கலை. இதுல தொட்டு தூக்கி, பெரும்பாடு. அப்புறமும் செஞ்சேன்ல” அவளை மையலாக பார்க்க, 

“சரியான திருட்டு பய நீங்க” என முகத்தை மறைக்க, அவன் பெருமூச்சு விட, அவளுக்கு குப்பென வேர்த்தது. அதை மாற்ற, “ப்ரீத்தி, எதோ சொன்னதுக்கு திட்டுனீங்களே” என்று கேட்க, 

“ஆமாம், ப்ரீத்தி, அங்கேயே உன்கிட்ட லவ்வை  சொல்ல  சொன்னா, சிங்கப்பூர் போய்ட்டு வரட்டும்னு சொன்னேன். “என்றான். 

“பெருசா வாக்கு கொடுத்த மனுஷன், என்கிட்டே எங்க லவ்வை சொன்னீங்களாம்” என அவள் கேட்க, 

“ ஏன் சொல்லை, இந்த ஒரு வருஷத்திலே,நேசமணியின்  அழகிக்கு “ எத்தனை லெட்டர், பார்சேல் வந்தது” என அவன் கேட்க, 

“அது உங்க வேலைன்னு ஒரு யுகம் இருந்துச்சு ], ஆனால் வேற ஆள் னு நினைச்சு, இதுவரைக்கும் அந்த பார்சல் எதுவுமே ஓபன் பண்ணலை” என்றாள் . 

“அதையும் எதிர் பார்த்தேன்” என்றான் . 

“எப்புடி” அவள் கேட்க, “கந்தவேலு கிட்ட சொன்னியே ” என  

 “உனக்கு ஆசைதாண்டா பரதேசி. தாலி கட்டியிருந்தாலும் உன்னை தொட விட்டிருக்க மாட்டேன். என் அத்தானை நினைச்ச மனசு, என்னைக்கும் அவர் மட்டும் தான்” அவள் சொன்னதை சொல்லி காட்ட, 

“போ, அத்தான்” என் தன முகத்தை, மடியில் மூடிக் கொள்ள, தன் பக்கம் அவளை இழுத்து  கொண்டவன், அவளை ஆலிங்கனம் செய்து அவள் பின் கழுத்தில் முகம் புதைத்து, 

“அரசி, சொல்லுடி. உனக்கு என்னை அவ்வளவு பிடிக்குமா” என கேட்க, 

கண்ணீரோடு நிமிர்ந்தவள், “பசுமரத்து ஆணி மாதிரி என் மனசுல பதிஞ்சிட்ட அத்தான். நீங்க  கொள்ளி வச்சா தான், என் கட்டை கூட வேகும்” எனவும், 

“இப்படி பேசாதேன்னு சொன்னேன்ல” என அவள், உதட்டைஇரு விரலால்  இழுத்து பிடிக்க, 

“அப்புறம், எப்படி சொல்றதாம்” என்றாள் வலியோடு.  

“இப்படி” என அவன் விரல் பிடித்த அவளின் இதழை அவனின் அழுத்தமான அதரம் கொண்டு சிறை பிடிக்க, கண்ணில் நீரோடு அவன் கழுத்தை கட்டிக் கொண்டாள்.  

 அடுத்து ஒரு எபி அன்புமழைக்கு சுபம் போடுவோம். 

2 thoughts on “அன்பென்ற மழையிலே-21”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *