நந்தா தேவி இடம் அக்கா யாருக்கு அடி பட்டு விட்டது என்று கேட்டான்.
தான் கேட்டும் தன் அக்கா ஏதோ ஒரு சிந்தனையில் இருப்பதை பார்த்துவிட்டு அக்கா உன்னிடம் தான் யாருக்கு அடிப்பட்டு விட்டது என்று கேட்டேன்.
தேவி ஒரு சில நொடி அவனை பார்த்து விட்டு இல்ல டா என்னுடன் வேலை பார்ப்பவர்களின் ஹஸ்பண்டுக்கு அடிபட்டு விட்டது.
இப்போது எப்படி இருக்கிறார்கள். இப்பொழுது ஒரு அளவிற்கு பரவாயில்லை .
“நடுத்தர வயதை சேர்ந்தவரா ? “பெரியதாக ஒன்றும் அடி இல்லையே என்று கேட்டான் .
இல்லை,என்னுடன் வேலை செய்பவர்களை வர சொல்லி விட்டேன் அவர்களும் வந்து விட்டார்கள் .
அவர்கள் கணவனை அவர்கள் வந்த பிறகு அவர்களிடம் ஒப்படைத்து விட்டு நான் வந்து விட்டேன்
“ஏன் கா கூடவே இருந்து இருக்கலாம் இல்லை. உதவிக்கு ஆள் இருக்கிறார்களா “
அருகில் யாருமில்லை. படித்துக் கொண்டிருக்கும் பிள்ளைகள் தான் இருக்கிறது .
“ஆகையால் உடனிருந்து கொஞ்சம் பண உதவியும், ஐஸ் யூவில் இருந்ததால் நம்மால் முடிந்த உதவியும் செய்துவிட்டு அவர் கண் முழித்தவுடன் சொல்லிவிட்டு வந்து விட்டேன் .
சரிக்கா இப்போது ஒன்றும் பிரச்சனை இல்லையே.
இல்லடா பரவாயில்லை என்ற உடன் சரி நீ அதுக்கு ஏன் இவ்வளவு சோர்வாக இருக்கிறாய் .
காலையிலிருந்து பதற்றம், அலைச்சல் வேறு இல்லையா அதான்.சரி சரி ஏதாவது நினைத்துக் கொண்டே இருக்காதே
உன் உடம்பை பாரு .உன்னை நம்பி தானே நானும், உதயாவும் இருக்கிறோம் அதை மறந்து விடாதே என்று விட்டு டீ குடி சமையல் மெதுவாக செய்து கொள்வாய்
டேய் நீ எப்போது திருமணம் செய்து கொள்வாய் என்றார்
திரும்பத் திரும்ப இதையே ஆரம்பிக்காதே எப்போது திருமணம் எப்போது திருமணம் இன்னும் கொஞ்சம் காலம் போகட்டும்
டேய் உனக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது அதை நினைவில் வைத்துக்கொள்.
ஆகட்டும் அந்த அளவிற்கு ஒன்றும் நான் கிழவன் ஆகவில்லை.
நந்தா உன் வயதில் இருப்பவர்களுக்கு எல்லாம் திருமணம் ஆகி விட்டது ஆகட்டும் என்று விட்டு லேசாக நழுவி விட்டான் .
தன் அக்கா அசதியாக இருப்பதால் சமையலறை நோக்கி சென்றான்.
உதயாவும் கல்லூரி முடிந்து அவனது நண்பர்களிடம் பேசி விட்டு வீட்டுக்கு வந்து என்ன மாமா அம்மா ஒரு மாதிரி இருக்காங்க என்றவுடன் தனக்கு தெரிந்த விவரத்தை சொன்னான்.
” யாருக்கோ அடிபட்டதற்கு அம்மா ஏன் இவ்வளவு வருத்தமாக , சோர்வாக இருக்கிறது மாமா “
ஒன்றுமில்லை நீ ஏதாவது வேலை இருந்தால் பாரு. உனக்கு சமையலுக்கு உதவி செய்கிறேன் என்றான்.
சரிடா என்று விட்டு இந்த வெங்காயத்தை உரி என்றான். “ஒரு பேச்சுக்கு சொன்னவுடன் என் தலையில் வெங்காயத்தை கட்டுகிறாய் பார்த்தாயா?”என்று விட்டு உரித்து அறிந்தும் கொடுத்தான்.
அப்படியே இரவு உணவிற்கு தக்காளி குருமாவும் தோசையும் ஊற்றி சாப்பிட்டு கொண்டார்கள்.
இருவரும் தன் முகம் மாறுதலை வைத்து சந்தேக பட கூடும் என்பதால் தேவி தன்னை மாற்றிக்கொண்டார்.
ஆனால் ,அவர் மனதில் கண்ணனுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் சீக்கிரம் நல்லபடியாக குணமாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.
தன்னிடம் மலர் போன் நம்பர் கூட இல்லையே தானும் மலர் இடம் என்னுடைய நம்பரையும் கொடுத்துவிட்டு வரவில்லையே .
இப்போது எப்படி இருப்பாள் மலர் சமாளித்துக் கொள்வளா என்று யோசித்தார்.
ஆனால் ,என்ன செய்வது என்று புரியாமல் ஒரு சில நொடி இருந்துவிட்டு தன்னுடன் வேலை பார்க்கும் ஒருவரை அனுப்பி மருத்துவமனையில் விசாரிக்க சொன்னார்.
தேவியுடன் வேலை செய்பவரும் மருத்துவமனைக்குச் சென்று ஐ சியூவில் இருக்கும் கண்ணனை பார்த்துவிட்டு மலரை பார்க்கச் செய்தார்.
மருத்துவமனையில் மலர் மட்டும் தனியாக இருப்பதை பார்த்துவிட்டு தனியாக இருக்கிறது என்ற உடன் மலரிடம் தேவி பேசுகிறார் என்று கொடுக்க சொன்னார் .
தேவி மலரிடம் ஒன்றும் பிரச்சனை இல்லையே சமாளித்துக் கொள்வாய் தானே என்று கேட்டதற்கு.. இங்கு அழுகை கண்ணை மூட்டியது மலருக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை கா.
நான் சமாளித்துக் கொள்வேன். உன்னோட பொண்ணு என்றார் .அவள் பள்ளியில் இருந்து வந்துவிட்டாள்.
அக்கம் பக்கம் நான் வரும்பொழுது அருகில் உள்ள ஒரு அண்ணன் கூட தான் வந்தேன் அவர் கண்ணம்மாவிடம் சொல்லி இருக்கிறார்.
அவரே கொண்டு வந்து கண்ணம்மாவையும் மருத்துவமனையில் விட்டார் .
பாப்பாவும் என்னோடு தான் இருக்கிறாள். சரி பார்த்துக் கொள் ஏதாவது தேவையென்றால் என்றார்.என்று தேவி வாய் எடுத்ததற்கு
நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற உடன் சரி என்று விட்டு தேவி வைத்து விட்டார் .
ஐந்து நாட்கள் மருத்துவமனையில் இருந்து விட்டு கண்ணனை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்தார்கள்.
ஒரு மாதம் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தால் கண்ணன் ஒரு அளவிற்கு லேசாக நொண்டி நொண்டி நடக்கும் படியாக இருந்தது .
காலில் ரத்தக்கட்டு இருந்தது வீக்கமாக இருந்ததால் அவரால் எழுந்து எப்பொழுதும் போல் நடப்பதற்கு சிரமமாக இருந்தது.
மற்றபடி பெரிதாக அடி எதுவும் இல்லை .மருத்துவமனையில் இருந்து வந்தவுடன் தியா தான் ரொம்பவே அழ செய்தாள் ..
தியா நான் வீட்டிலிருந்து தன் தந்தையை பார்த்துக் கொள்வதாக சொன்னாள்.
அதெல்லாம் வேண்டாம் என்றார் கண்ணன் . நீ உன்னுடைய படிப்பை பாரு என்று கண்ணன் சொன்னார் .
“அப்பா உங்களைவிட படிப்பு முக்கியமா? “ஆமாம். உனக்கு நான் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவிற்கு படிப்பும் முக்கியம்.
நீ உன்னுடைய முழு கவனத்தையும் படிப்பில் வை என்றவுடன் சரி என்று விட்டு தியாவும் படிப்பில் கவனத்தை செலுத்தினாள் .
அப்படியே ஒரு மாதம் ஓடி இருந்தது. ஒரு மாதத்தில் நன்றாக தேறி இருந்தார் கண்ணன். ஒரு மாத காலமாக கண்ணன் வேலைக்கு செல்லவில்லை.
இருக்கும் வருமானத்தை வைத்து ஓட்டினார்கள். கண்ணன் மருத்துவ செலவுக்கு என்ன செய்தாய் ?என்று கேட்டவுடன் திருதிருவென முழித்தார் தேவி .
அப்பொழுது கண்ணனே வீட்டில் கூட நான் அப்பொழுது காசு வைத்து இல்லையே? என்ன பண்ண மலரு நகையை எங்காவது வச்சு கடன் வாங்குனியா ?என்றவுடன் என்ன சொல்வது என்று தெரியாமல் ஆமாம் .
ஆமாம் மாமா நீ வேலைக்கு போன உடனே கொஞ்சம் கொஞ்சமா திருப்பிக் கொடுத்துவிடலாம். சரி என்று விட்டு அதன் பிறகு வேறு எதுவும் பேசவில்லை.
கண்ணனும் ஒரு அளவுக்கு உடல்நிலை சரியாகி வேலைக்கு செல்ல ஆரம்பித்திருந்தார்.
தியா 12 ஆம் வகுப்பு இறுதியில் இருந்தாள்.
இறுதித் தேர்வும் ஆரம்பமாகி இருந்தது. தியாவும் மும்மரமாக தனது முழு கவனத்தையும் தேர்வில் வைத்திருந்தாள்
நன்றாக தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் எடுத்து பாஸ் ஆகி இருந்தாள். மேற்கொண்டு என்ன படிக்கிறாய் ?என்று மலரும் கண்ணனும் கேட்டதற்கு அப்பா நான் டிகிரியே படித்துக் கொள்கிறேன்.
எனக்கு அதில் தான் விருப்பம் என்ற உடன் ஏன் ,கண்ணம்மா நல்ல மதிப்பெண் எடுத்திருக்கிறாயே என்று கேட்டதற்கு.
எனக்கு இதில் தான் ஆர்வம் இருக்கிறது. இதில் நான் மேற்கொண்டு படித்துவிட்டு முனைவர் பட்டம் பெற்றால் எனக்கு சந்தோஷம் என்றுடன் பெற்றோர்களாகிய அவர்களுக்குமே தன் மகள் அவளுக்கு விருப்பமான படிப்பை படித்து அதில் நல்ல முன்னேற்றம் கண்டால் நல்லது தானே என்று எண்ணி சரி என்று ஒத்துக் கொண்டார்கள்.
அதன்படி நல்ல கல்லூரியும் தேடினார்கள் நான் கவர்ன்மென்ட் காலேஜில் படித்துக் கொள்கிறேன் என்று சொன்னதற்கு இருக்கட்டும் கண்ணம்மா நல்ல கல்லூரி ஆக பார்க்கிறோம் என்று விட்டு கண்ணன் நல்ல கல்லூரியாக பார்த்து தியா அவள் விருப்பப்பட்ட பிரிவு தேர்ந்தெடுத்து சேர்த்து விட்டிருந்தார் .
தியாவும் முதல் நாள் கல்லூரிக்கு சந்தோஷமாக வந்திருந்தாள்.தியா கல்லூரி வாசலில் அடி எடுத்து வைத்து இரண்டு மூன்று அடி நடந்தவுடன் ஒரு சில ஸ்டுடென்ட்ஸ் அவர்களை ராகிங் செய்ய ஆரம்பித்தார்கள்.
அப்பொழுது அனைவரும் அங்கு வந்து கொண்டிருக்கும் ஆசிரியரை பார்த்துவிட்டு டேய் ஓடுங்கடா அங்க பாருங்க யார் வராங்கனு நாம் அவ்வளவுதான் ராகிங் பண்ணுகிறீர்களா என்று நம்மை தான் சாத்த செய்வார் என்று பயந்து ஓடினார்கள்.
ராகிங் செய்துவிட்டு இப்பொழுது யாருக்காக பயந்து தன்னை விட்டு ஓடுகிறார்கள் என்று திரும்பிப் பார்த்தாள் தியா.
அங்கு கையில் தான் பாடம் எடுக்க போகும் ஒரு நோட்டும் இன்னொரு கையை தனது தலையை கோதி கொண்டு நடந்து வந்தான் வாலிப வயது ஆண்மகன்.
தியா திரும்பி பார்த்தவுடன் யாராக இருக்கும் ஒரு வேலை சீனியரோ என்று எண்ணினாள் .