அப்பா… அவர் தான் எப்பவும் புக் வாசிப்பார். நான் சின்ன வயதிலிருந்து பார்த்து வளர்ந்தபோது புத்தகம் ஆழ்ந்து வாசிப்பவர் அப்பா மட்டுமே. அப்படியென்ன புக்ல இருக்கு. சாப்பிடும் போது கூட புக் படிச்சிட்டே சாப்பிடறார்? என்று அவர் முதுகில் ஏறி, தோளில் இரண்டு பக்கம் கால்களை போட்டு தலைமுடியை பிடித்து யோசிப்பேன். அப்ப எனக்கு வயசு ஐந்தோ ஆறோ இருக்கலாம்.
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
இரண்டாம் வகுப்பு படிச்சேன்.
அப்பா மளிகைக்கடை வியாபாரம். அதனால் பொருட்களை மடித்து கொடுக்க நிறைய புக் இருக்கும். அதுல சிறுவர்மலர் தங்கமலர் வரும். ஏழு வித்தியாசம் என்று முதலில் சின்ன கதையை வாசித்து அந்த விளையாட்டை துவங்கினேன்.
வர்ற புக் எல்லாம் முடிச்சிட்டு காலாட்டி கடையில் மிட்டாய் பிஸ்கேட்ஸ்னு ஒருபிடி.
இப்படி விளையாட்டு தனமாக செய்ததை அப்பா கவனித்து எல்லா புக்கிலும் பாப்பா புதிருக்கு விடை எழுதறா. எட்டு வித்தியாசம் கண்டு பிடிக்கறா. எல்லா அறிவு சார்ந்த துணுக்குகள் வாசிக்கின்றா என்று புத்தகம் வாங்கி கொடுத்து எனது வாசிப்பிற்கு பிள்ளையார் சுழி போட்டார்.
பள்ளி விடுமுறை எல்லாம் புத்தகமும், விளையாடும் என்று பொழுது ரம்மியமாக போகும். எந்த புத்தகமும் திருப்பி படித்து வழக்கத்தை எனக்குள் விதைந்தது. விடுமுறைக்கு பெரிப்பா வீட்டுக்கு வந்தாலும் அங்கே தினசரி பேப்பர் மற்ற சிறுவர் படிக்கும் புத்தகமும் எடுத்து வாசிப்பேன். வாசிப்பு தடுமாற்றமின்றி பள்ளியில் எளிதாக எழுத பேச இயல்பாய் அமைந்தது. கஷ்டப்பட்டு படிக்காமல், ஓரிரு முறையிலே நெஞ்சில் பதியும் விதமாக வாசிப்பு அமைந்தது.
அப்படி வாசித்து ஆரம்பித்த காலத்தில் கல்கண்டு அறிமுகம். அப்பா தீவிரமான தமிழ்வாணன் விசிறி. அவரின் தன்னம்பிக்கை வரிகள் கதைகள் அவருக்கு பிடிக்கும். அது போல எனக்கும் கல்கண்டு வாங்கி தந்து, லேனா தமிழ்வாணன் எழுத்தை பழக்கினார். ஆனாலும் எனக்கு தமிழ்வாணனின் பழைய புத்தகமும் வாசிக்க பிடிக்கும். நான் படித்த முதல் நாவல் என்றால் சங்கர்லால் கதைகள். இவ்வாறு ஏற்பட்டது புத்தக அறிமுகம்.
தொடரும்.
ஹாய், இதுவும் ஒரு தொடர் தான். என்ன தொடர் என்றால், எனக்கும் என் வாசிப்புக்கு எழுத்துக்கும் நான் நடந்து கடந்து வந்த அனைத்தும் என் பாணியில் கதைகளாக, கட்டுரை வடிவில் வரும். இந்த பதிவில் நான் சந்தித்த நல்லது கெட்டது, அனுபவம், வலி, தோல்வி, நண்பர்கள், நண்பர்கள் காலத்தில் மாறிய விதம், எழுத்துலகில் நான் சந்திக்கும் விசித்திரம், கேளிக்கை, மற்றவரின் கோமாளித்தனம், அரசியல், இன்னும் பல சுவாரசியமாக தகவல் வரும்.

Nice started ipo ithellam ninaikum pothu oru silirpu varum me udambu la atha solla varthai irukathu
Nice