Skip to content
Home » என்ன உயிரின் ஜனனம் நீயடி 4

என்ன உயிரின் ஜனனம் நீயடி 4

ஜனனம் 4

ஜனனி உள்ளே வர, “அண்ணி வலது கால் வச்சு உள்ளே வாங்க” என்று இனியனின் தங்கை தமிழரசி அழைக்க,

கவிதா,”அதெல்லாம் அவளுக்கு தெரியாத? முதல் தடவையா என்ன எல்லாம் பழக்கம் தானே. தெரியலைன்னா தான் இதெல்லாம் சொல்லுவாங்க, அவளுக்கு தான் அனுபவம் நெறைய அனுபவம் இருக்கே” என்று குத்தலாக பேசியவள் இனியனின் முறைப்பில் அடங்கி விட்டாள்.

அன்னபூரணியும் கவிதாவும் எதிலும் கலந்து கொள்ளாமல் அறைக்குள் சென்று அடைந்து கொள்ள,இனியனின் அத்தை முறையில் உள்ளவர்கள் ஜனனிக்கும் இனியனையும் விளக்கேற்றி பால் பழம் கொடுக்கும் சடங்கை செய்தனர்.

முற்றத்தில் இனியனும் ஜனனியும் அமர்ந்திருக்க, இனியனுக்கு ஸ்டேஷனில் இருந்து முக்கியமாக போன் வர, அவன் போய் ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில், அறிவழகனிடம் ஜனனியை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு இரு தங்கைகளையும் அவளுக்கு துணைக்கு வைத்து விட்டு சென்றான்.

அறிவழகன் மகள்களிடம் “அண்ணிய இனியன் ரூமுக்கு கூட்டிட்டு போங்க, கொஞ்ச நேரம் தூங்கட்டும்” என்று கூற…இனியனின் அறைக்குள் அமர்ந்து ஜனனி இருவரிடமும் பேசிக்கொண்டிருக்க, ஜனனியின் களைத்த முகத்தை கண்டவர்கள், “அண்ணி நீங்க தூங்குங்க, நா இவளை டியூஷன்ல விட்டுட்டு கடைல எனக்கு சில பொருட்கள் வாங்கணும். வாங்கிட்டு வரேன்”என்று கூறிய தமிழரசி, தங்கையை அழைத்து கொண்டு வெளியே சென்று விட்டாள்.

அறிவழகனும் தன் அறைக்கு சென்றவர் கால் வலியால் அங்கேயே இருந்து விட்டார்.ஜனனி அசதியில் மாலையானது கூட பார்க்காமல், விரும்பியவனை கரம்பிடித்த மகிழ்வில், தூக்கத்தை தழுவியிருந்தாள்.ஜனனி அறையில் தனியாக இருப்பதை அறிந்து கொண்டவர்கள், அங்கு சென்று பார்க்க, காலை நடந்த சம்பவங்களின் விளைவால் அசதியில் உக்கார்ந்துத்திருந்தவாறே உறங்கியிருந்த ஜனனியை கண்டவர்களுக்கு கோவம் தாறுமாறாக எகிற, அவளுக்கு குடிப்பதற்காக புகழினி செம்பில் தண்ணீர் கொண்டு வந்து வைத்திருக்க, அதை எடுத்த அன்னபூரணி சிறிதும் தாமதிக்காமல் அவளின் முகத்தில் ஊற்றியிருந்தாள்.நன்றாக உறங்கியிருந்தவள் அவளின் முகத்தில் சில்லென்று தண்ணீர் பட, அதிர்ந்து விழித்தவளுக்கு தன் முன் நின்றிருந்த அன்னபூரணியும் கவிதாவும் கண்களுக்கு தெரிய, பதறி போய் எழுந்து நிற்க…

கவிதா,”ஏண்டி இப்படி குடும்ப பொம்பளை சாயங்காலம் வரைக்கும் தூங்குன குடும்பம் விளங்குமா?தரித்திரம், தரித்திரம்” என்று திட்டினாள்.அன்னபூரணி “இங்க பாருடி மரியாதையா சொல்றேன் கிளம்பிரு, உன் முகத்தை கூட எனக்கு பார்க்க பிடிக்கல” என்று கூற…கவிதா “உனக்கு பணம் தானே முக்கியம்.காசு, நகை என்ன வேணுமோ கேளு என் தம்பிய விட்டுரு”என்று இருவரும் மாறிமாறி அவளை அங்கிருந்து அனுப்ப பார்க்க…

கண்களில் வழிந்த நீரை துடைத்த ஜனனி,”இல்லை நான் போகமாட்டேன், அன்பு வந்து சொல்லட்டும் நான் போறேன். அவர் மேல சத்தியம் பண்ணிருக்கேன் நான்”என்று கூற…அன்னபூரணி “இந்த நடிப்பெல்லாம் என் புள்ளைகிட்ட மட்டும் காட்டு. என்கிட்ட வேண்டாம், அவன் வாயாலயே உன்ன வெளியே அனுப்ப வைக்கிறேன் டி” என்று அவளிடம் சவால் விட்டு விட்டு செல்ல…கவிதா, “அதுவரைக்கும் அங்க இருந்த மாறி என் சித்திய வேலை வாங்கிட்டு தண்ட சோறு திங்கலானு மட்டும் நெனச்சுராத, போய் சமையல் கட்டுல இருக்க வேலைய பாரு போ”என்று நாயை போல விரட்ட…

ஜனனி தன் நிலையை நொந்துகொண்டு முடியாமல் களைப்பிலே வீட்டின் பின் புறம் செல்ல, அங்கோ காலையில் இருந்து பாத்திரங்கள் எதுவும் சுத்தம் செய்யாமல் அலங்கோலமாக இருக்க, அனைத்தையும் சுத்தம் செய்து முடிக்க, கவிதாவோ மீண்டும் நிறைய பாத்திரங்களை கொண்டு வந்து போட்டவள் “சுத்தமா கழுவு எல்லாம் அப்படியே இருக்கு, இதெல்லாம் சுத்தம் பண்ணிட்டு போய் சமையல் செய்”என்று விட்டு செல்ல, அனைத்தையும் கழுவியவள் அந்தந்த இடத்தில் வைத்து விட்டு சமையல் அறைக்கு செல்ல, கவிதா ஒரு பெரிய லிஸ்ட் கொடுத்தாள்.

ஜனனி சேலையை எடுத்து செருகியவள் சமையலை வேகமாக முடிக்க, அனைவரும் சாப்பிட வர, அப்போதும் இனியன் வரவில்லை. அறிவழகன் தான் “அவன் கொஞ்சம் லேட்டா தான் மா வருவான். நீ சாப்புடு டைம் ஆகிருச்சு, சாப்பிட்டு தூங்குமா”என்று கூறியவர் தூங்க சென்று விட…ஜனனி கடிகாரத்தை பார்க்க மணி எட்டறை தாண்டி இருந்தது.ஜனனி நேற்று மதியம் சாப்பிட்டது இரவு இனியனுடன் நடந்த நிகழ்வில் பசி மறந்து தூங்கியிருக்க, காலையில் நடந்த நிகழ்வில் ஏதும் சாப்பிடாமல் இருக்க, பசி வயிற்றை கிள்ளியது. கவிதா இருக்கும் அனைத்து உணவையும் பொட்டலம் கட்டிக்கொண்டு சென்று விட, ஜனனிக்கு அங்கு உணவு எதுவும் இல்லை, மீண்டும் எதுவும் செய்ய அவளுக்கு தெம்பும் இல்லை, அவர்கள் செய்ய விட போவதும் இல்லை என்று உணர்ந்தவள் அறைக்குள் சென்று விட்டாள்.அறைக்குள் சென்றவள் கட்டிலில் அமர, அந்த நேரத்தில் மின்சாரம் தடை பட்டு போக, தட்டு தடுமாறி எழுந்தவள் கதவை திறக்க, அதுவோ வெளியே தாள் போட்டு இருந்தது.

கரண்ட் இல்லாமல், கதவை திறக்கவும் முடியாமல் பயத்தில் திணறியவள், பசி, சோர்வு, மன அழுத்தம் ஆகியவற்றின் விளைவால் மயங்கி சரிந்திருந்தாள்.இரவு பதினோரு மணியளவில் இனியன் வேலை முடித்து வீட்டுக்கு வந்தவனுக்கு அப்போது தான் ஜனனியின் நியாபகம் வர, அவனின் அறைக்கு வர, அறைகதவு தாள் போட்டு இருப்பதை கண்டு முகம் சுருக்கியவன் கதவை திறக்க, அவன் சரியாக அறைக்குள் நுழையவும் கரண்ட் வரவும் சரியாக இருக்க, அறைக்குள் நுழைந்தவன் கண்டதென்னவோ மயங்கியிருந்த ஜனனியை தான்.”

ஜனனி” என்று பெருங்குரலெடுத்து கதறியவன், அவளை மடியில் தாங்கி, கன்னத்தை தட்ட, அவனின் சத்தத்தில் அவனின் அன்னையை தவிர குடும்பமே அங்கு கூடியிருக்க, தமிழரசி ஓடி சென்று தண்ணீர் எடுத்து வந்து முகத்தில் தெளிக்க,அவள் மெதுவாக கண்விழிக்க, இனியன் அவளுக்கு நீரை புகட்டினான்.அவளை தூக்கி கட்டிலில் படுக்க வைத்தவன், அவளிடம் “சாப்டியா”என்று கேட்க… அவனுக்கு பதில் கூற கூட தெம்பில்லாமல் கண்களை மூடிக்கொள்ள, புகழினி தான் “அண்ணி மதியமும் சாப்பிடல அண்ணா, இப்போ அக்கா எல்லாத்தையும் எடுத்துட்டு போய்ட்டாங்க” என்று கூறினாள்.தமக்கையின் மீது கோவம் பொங்கினாலும், அதை வெளிக்காட்ட இது சரியான தருணம் அல்ல என்று உணர்ந்தவன், அவர்களை சென்று தூங்க சொன்னவன் வேகமாக சமையல் அறைக்கு சென்று மாவை எடுத்து இரண்டு தோசைகளை ஊற்றியவன், பால் ஒரு டம்ளர் எடுத்து கொண்டு அவனின் அறைக்கு வந்தவன் அவனே அவளுக்கு ஊட்டி விட, அவளின். முகத்தை கண்டவன் தன்னையே நொந்து போனவன் முதல் நாளே இப்படி நடந்ததை எண்ணி வேதனை கொண்டவன், காலை இதுப்பற்றி பேசிக்கொள்ளலாம் என்று, அவளை தட்டி கொடுத்து தூங்க வைத்தான்.

அவளும் இருந்த சோர்வில், அவனிடம் ஏதும் பேசாமல் அவனின் நெஞ்சில் தலை வைத்து உறங்கினாள்.விடியலில்?…அதிகாலை நேரமாகவே ஜனனிக்கு விழிப்பு வர, எழுந்து கொள்ள பார்க்க எழுந்துகொள்ள முடியாமல் அவளை தன்னோடு இறுக்கமாக அணைத்து படுத்திருந்தான் அன்பினியன்.தன்னை அணைத்து பிடித்த படி இருந்த அவனின் கைகளை விலக்கியவள் அவனின் நெற்றியில் இதழ் பதித்து எழ, எழுந்த வேகத்திலே மீண்டும் அவன் மீது விழுந்திருந்தாள்.ஜனனி இனியனை பார்க்க, அவனோ உறங்குபவன் போலே நடிக்க, அதில் குழம்பியவள் மீண்டும் எழ, அவளின் கைபிடித்து இழுத்தவன் நொடி நேரத்தில் அவளை கீழே தள்ளி அவளின் மீது படர்ந்திருந்தான்.

அதில் பயத்துபோனவள் அவனின் முகத்தை பார்க்க, அவனோ கண்கள் மின்ன குறுஞ்சிரிப்புடன் அவளை பார்த்திருந்தான்.அவளோ அவனை கீழே தள்ள முயற்சி எடுக்க அனைத்தும் தோல்வியில் முடிய,அவனை பாவமாக பார்க்க அவளின் மேலிருந்து எழுந்தவன் அவளை இழுத்து தன் மீது போட்டுக்கொண்டு அவளின் தலையை வருடியவன் “சாரிடா எல்லாம் என்னால தான், நான் உன்ன தனியா விட்டுட்டு போயிருக்க கூடாது. அர்ஜன்ட் ஒர்க் இருந்ததால தான் நான் போனேன். அப்போவும் உன்னை சாப்பிட வச்சிருக்கணும் என் தப்பு தான், வந்த முதல் நாளே உன்ன இப்படி கஷ்டப்படுத்திட்டேன்” என்று கலங்கும் குரலில் கூறியவனை சலனமில்லாமல் பார்த்தாள்.

“நடந்த எதுமே உங்க தப்பு இல்லை. டயட் ஆஹ் இருக்குனு நான் தான் சாப்பிடாம தூங்கிட்டேன்” என்று அப்போதும் கூட யாரையும் குறைக்கூற விரும்பாமல் தன் மீதே பழி சுமத்தி கொண்டவளை ஆயாசமாக பார்த்தவன் இவளை எப்படி தன் மாற்றபோகிறோமோ என்று மலைப்பு தான் தோன்றியது.”சரி இப்போ தூங்கு. மணி இன்னும் அஞ்சு கூட ஆகல, பாரு. இந்நேரத்துக்கு யாருமே எழுந்திருக்க மாட்டாங்க” என்றவன் அவளை இறுக்கி அணைத்து உறங்க, அவளோ அவனின் அணைப்பு அவளுக்கு ஏதோபோல் தோன்ற,உடலை அசைத்துக்கொண்டே இருக்க அவனோ அவள் காதில் “பேசாம தூங்கு இல்லை பஸ்ட் நைட் மிஸ் ஆகிடுச்சு, பகல வேஸ்ட் பண்ண மாட்டேன்”என்று ரகசியம் போல் பேச அதில் கன்னம் சிவந்தவள் அவனின் மீதே உறங்கிவிட்டாள்.

உறங்கியவர்கள் விழித்ததென்னவோ அன்னபூரணியின் அர்ச்சனையில் தான்,”இவ்ளோ நேரம் பொம்பள பிள்ளை குடும்பம் தூங்குனா விளங்குமா? என்ன லட்சணமோ தரித்திரம் எல்லாம் நமக்குன்னு வந்து வாச்சிருக்குது பாரு எல்லாம் என் தலையெழுத்து. இத்தனை வேலை கிடக்குது, விடிஞ்சு எவ்ளோ நேரமாகுது இன்னும் தூங்குறா விடியா மூஞ்சி”என்று திட்ட…ஜனனி வேகமாக மணியை பார்த்து கொண்டே எழ, இனியனும் அவள் கூடவே எழுந்து உட்கார அன்னையின் வார்த்தைகளை கேட்டவனுக்கு கோவம் தாறு மாறாக எகிற, சட்டையை எடுத்தவன் ஜனனியிடம் குளிச்சு கிளம்பி வா” என்று விட்டு வெளியே செல்ல, அவனை கண்டதும் பேச்சை நிறுத்தி கொண்டார் அன்னபூரணி.

இனியன் “ஏன் மா நிறுத்திட்டீங்க? வேற எதும் இருந்தா பேசுங்க, ஏன் இதுக்கு முன்னாடி நீங்க இந்த நேரத்துக்கு எழ மாட்டிங்களா? இல்லை அக்கா தங்கச்சிங்க எல்லாரும் இந்த நேரத்துக்கு தானே எழுவீங்க அப்புறம் என்ன? நல்லா கேட்டுக்கோங்க அவ ஒண்ணும் இந்த வீட்டு வேலைக்காரி கிடையாது என் பொண்டாட்டி, அவள அதிகாரம் பண்றது, திட்டறது எல்லாத்துக்கும் எனக்கு மட்டும் தான் உரிமை இருக்கு. இனிமேல் யாராச்சு அவளை திட்றதையோ, அசிங்க படுத்துறதையோ பார்த்தேன், அப்றம் நடக்கற எதுக்கும் நான் பொறுப்பில்லை” என்று கூறியவன் வீட்டின் பின் பக்கம் சென்று விட்டான். அப்போது தான் வந்திருந்த கவிதா “பாத்திங்களாமா உங்கள எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாதவன் இன்னிக்கு எப்படி மிரட்டிட்டு போறான்னு இத இதோட விடக்கூடாது” என்று கூற, அன்னபூரணியும் அவளுக்கு ஒத்து ஊதினார்.

ஜனனி குளித்து முடித்து துண்டை தலையில் சுற்றிக்கொண்டு கண்ணாடியின் முன் நின்றவள் கைகள் நடுங்கும் கரங்களுடன் குங்குமத்தை தொட, அப்போது தான் குளித்து விட்டு வந்த இனியன் அவளின் செயலை கண்டவன் அவளின் பின் வந்து குங்குமத்தை எடுத்து அவளின் நெற்றியில் வைத்து விட கலங்கும் கண்களுடன் திரும்பி அவனை பார்க்க, அவனோ அவளை அழுத்தமாக பார்க்க அவனின் பார்வையில் தலை குனிந்தவள் தலையை வாரிவிட்டு வெளியே செல்ல, “இரு ஜனனி நானும் வரேன்”என்ற இனியனின் குரலில் அவள் கட்டிலில் அமர, அவன் உடைமாற்றி வெளியே வர அவனுடன் வெளியே வந்தவளை அன்னபூரணி நெருப்பில்லாமல் சுட்டு பொசுக்கினாள்.

அதை கண்டும் காணதது போல் சமையலறைக்குள் நுழைந்தவள் எதுவும் சமைக்கப்படாமல் இருக்க, அவசரமாக அனைவர்க்கும் இரண்டு அடுப்பிலும் தோசை கல் வைத்து தோசை ஊற்றியவள் அவசரமாக ஒரு சட்னியையும் செய்து அனைவர்க்கும் கொண்டு வர, அறிவழகன் பாராட்டிக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.

அன்னபூரணியும் கவிதாவும் அதை வெறுப்புடன் பார்த்து கொண்டு இருந்தனர்.அறிவழகன் நண்பரை பார்த்து வருகிறேன் என்று வெளியில் கிளம்பி விட,தமிழரசி கல்லூரிக்கும் புகழினி பள்ளிக்கும் கிளம்பியிருந்தனர்.முற்றத்தில் சேரில் பேப்பர் படித்துக்கொண்டு அமர்ந்திருந்த இனியனோ ஜனனியை பார்க்க, அவ்ளோ சுத்தம் செய்வது, துவைப்பது என பம்பரமாக வேலைபார்க்க தன் தாயையும் தமக்கையையும் பார்க்க அவர்களோ விருந்துக்கு வந்தவர்கள் போல அசை போட்டுக்கொண்டே டிவியை பார்த்து சிரித்து கொண்டிருந்தனர்.இனியனுக்கு இதற்கு அவள் சிவகாமியின் வீட்டில் இருப்பதே மேல் என்று தோன்ற, இதை இப்படியே விட்டாள் இங்கும் அவளை வேலைக்காரியாக்கி விடுவார்கள் என்று எண்ணியவன், மொபைலை எடுத்து ஒருவருக்கு கால் செய்து பேசியவன், “ஜனனி” என்று அழைக்க, துவைத்த கையோடு “என்னங்க”என்று வந்தவள் அவனை பார்க்க, டிவியை பார்த்திருந்தவர்களும் திரும்பி இனியனை பார்த்தனர்.”கையை கழுவிட்டு டிரஸ் மாத்திட்டு கிளம்பு, வெளியே போகணும்”என்று கூறினான்.ஜனனி “ஒரு அரைமணி நேரம் அவளோ தான் இத மட்டும் துவச்சிட்டு வந்துறேன்”என்று கூற…கண்களை சுருக்கியவன்

“இந்த வீட்ல அவங்கவங்க வேலைய அவங்க செஞ்சு தான் பழக்கம், உன் துணி அதுல இருக்கா, இல்லை என் துணி அதுல இருக்கா” என்று கேக்க…ஜனனி “நம்ம ட்ரெஸ் ரெண்டு செட் தான் அத அப்பவே துவச்சிட்டேன். அண்ணி அவங்க வீட்ல இருந்து எடுத்துட்டு வந்திருக்காங்க, அண்ணா துணியும் அவங்களுதும்” என்று கூற…அதில் கோவம் ஏறியவன் போனை எடுத்து கவிதாவின் கணவன் ஈஸ்வரனுக்கு அழைக்க, “ஹெலோ சொல்லு மாப்பிள, எப்பிடி இருக்க, தங்கச்சி நல்லா இருக்கா? நைட் தான் ஊருக்கு போய்ட்டு வந்தேன். இதோ அங்க தான் வரேன் வந்து தங்கச்சிய பார்த்துட்டு வரேன்” என்று அவன் மூச்சு விடாமல் பேச…இனியன் “யோவ் மாமா நான் சொல்றத முதல்ல கேளு,ஆமா உனக்கு கல்யாணம் ஆனது நியாபகம் இருக்குல்ல உனக்கு, உன் வேலைய உன் பொண்டாட்டி தான் செய்யணும் அத விட்டுட்டு எதுக்குயா என் பொண்டாட்டி உன் துணி எல்லாம் துவைக்கணும்” என்று கோவமாக கேட்க…டிவி பார்த்துக்கொண்டிருந்த கவிதாவின் நிலையோ மிகவும் மோசம் அவளுக்கு தான் கணவனை பற்றி தெரியுமே அவனுக்கு கைதான் முதலில் பேசும்.

அன்னபூரணி எழுந்தவர் “இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லை இனியா, அவ உன்கூட பொறந்தவ தானே, ஏன் அவளுக்கு உன் பொண்டாட்டி வேலை செஞ்சா என்ன, கவிதாவுக்கு ஏற்கனவே உடம்பு முடியாம இருக்கு. இதுல வேலை செஞ்சு ரொம்ப முடியாம போய்டுச்சுன்னா நம்ம தான கஷ்டப்படணும்” என்று பேச…”உங்க பொண்ணுக்கு முடியலைன்னா தான் அது கஷ்டம். ஏன் நேத்தெல்லாம் அவ்ளோ வேலை வாங்கி, சாப்பாடு கூட குடுக்காம கொடுமைப்படுத்தி மயக்கம் வந்து விழுந்தாளே அது உங்களுக்கு தெரியும் தான, அப்போ அவளுக்கும் தான முடியல , காலைல எழுந்து நீங்க என் பண்ணீங்க? ஒரு டிபன் கூட அவ வந்து செய்யணும். இப்போ உங்க பொண்ணோட புருஷன் துணியையும் துவைச்சு என் பொண்டாட்டி வேலை செய்யணுமா?” என்று கேட்டவனுக்கு பதில் இன்றி அமைதியாய் இருக்க…அப்போது வேகமாக வந்த ஈஸ்வரனோ பாய்ந்து வந்து கவிதாவின் முடியை பற்றி அவள் கன்னங்களில் அறைய, இனியனோ அவனை தடுத்தவன் “உன்ன அடிக்க கூப்பிடல, நீ தான் அவளுக்கு எல்லாத்தையும் எடுத்து சொல்லி புரிய வைக்கணும்.

எதுக்கெடுத்தாலும் கை நீட்டாத” என்றவனை இடை மறைத்த கவிதா “அதான் செய்றத எல்லாம் செஞ்சிட்டியே அப்புறம் என்ன, நேத்து வந்தவளுக்காக கூட பொறந்தவளுக்கே அடி வாங்கி குடுத்துட்ட இல்லை. நீ நல்லா இரு” என்க…ஈஸ்வரன் “பார்த்தியா மாப்பிளை, இதெல்லாம் சொல்லி திருந்துற ஜென்மமா, இன்னும் நாலு போட்டா கூட திருந்தாது” என்றவன் ஜனனியிடம் “ம்மா சாரி டா… எனக்கு தெரியாது இவ இப்படி பண்ணுவானு மன்னிச்சிருமா”என்று கூற…ஜனனி சங்கடமாக இனியனை பார்க்க, அவனோ கோவமாக அவளை பார்த்தான்.ஈஸ்வரன் “போய் எல்லா துணியும் துவைச்சு நீட்ட அலசி காயம் போட்ருக்கணும். மதிய சமையலும் வேகமா முடிக்கணும் போ”என்று அரட்ட அதில் பயந்தவள் வேலையா கவனிக்க செல்ல…அன்னபூரணி “என்ன மாப்பிளை இவ ஒரு ஆளுன்னு இவ முன்னாடி என் பொண்ண மிரட்டுறீங்க, இவ என்ன பெரிய மகாராணியா என் அந்த வேலை எல்லாம் செஞ்சா குறைஞ்சா போயிடுவா”என்று கேட்க…ஈஸ்வரன் பதில் கூறும் முன் தடுத்த இனியன், “இவங்க கிட்ட பேசுனா அது இன்னிக்கு முடியாது என்ன பேசுனாலும் இவளை அசிங்க படுத்தி தான் பேசுவாங்க மாமா,கோச்சுக்காதீங்க”என்று கூற… “விடு மாப்பிளை, கொஞ்சம் இன்னும் கவனமா அந்த பிள்ளையை பாத்துக்கோ… இவங்க என்ன பாடு படுத்துவாங்கனு தெரியல”என்று கூறியவனுக்கு தலையாட்டிவிட்டு, ஜனனியின் கைகளை பிடித்து இழுத்து கொண்டு அறைக்கு வந்தவன் அவளை முறைக்க, அவளோ அவனை பாவமாக பார்த்தாள்.

அவளிடம் கோவத்தை காட்ட விரும்பாதவன், அவளின் கையில் ஒரு கவரை குடுத்து “இந்த சேலைய கட்டிட்டு ரெடியாகு, வெளிய ஒரு இடத்துக்கு போகணும்” என்றவன் கட்டிலில் அமர்ந்து விட்டான்.

to be continue….

8 thoughts on “என்ன உயிரின் ஜனனம் நீயடி 4”

  1. CRVS2797

    ஏன் ஜனனிக்கு வாயில்லையா…? நமக்கு பசிச்சா நாம தான் சாப்பிடணும். அதே மாதிரி நம்மளை போட்டு உருட்டுனா,
    பதிலுக்கு திருப்பி நாம தானே உருட்டனும்.

  2. Avatar

    பொம்பளைங் களே இல்ல பிசாசு ங்க இவளுக்கு எப்ப விடுதலை கிடைக்க போகுதோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *