Skip to content
Home » என் உயிரின் ஜனனம் நீயடி 8to 10

என் உயிரின் ஜனனம் நீயடி 8to 10

ஜனனம் 8 திடீரென்று அந்த நேரத்தில் மாதவியை அங்கு எதிர்பாராதவன் திகைத்து நிற்க, சமையலறை வாசலில் நின்று தன்னை முறைத்துக் கொண்டிருந்த ஜனனியை பார்த்து அதிர்ந்து விழித்தான். மாதவி “ஹை இனியன் மாமா எப்படி இருக்கீங்க ரொம்ப நாளாச்சு உங்கள பாத்து, கையில என்ன மாமா அது கைல. ஹை எனக்கு புடிச்ச ஸ்வீட். நான் வந்திருக்கேன்.அதனால எனக்காக வாங்கிட்டு வந்தீங்களா?” என்று கேட்டாள் அவளிடம் மறுப்பேதும் கூறாமல் ஆம் என்று தலையாட்டி அவளின் தலையை தடவி விட்டுவிட்டு, உள்ளே வந்தான். அறைக்குள் செல்ல முயன்றவனை “மாமா இங்கே வாங்க. இங்க வந்து உட்காருங்க நான் உங்கிட்ட நிறைய பேசணும்.நிறைய விஷயம் சொல்லணும் நீங்க பாட்டுக்கு போயிட்டு இருக்கீங்க வரவர உங்களுக்கு என் கூட பேச பிடிக்கல தான” என்று கண்ணை கசக்கியவளிடம் “அப்படி எல்லாம் இல்ல மாதவி.நான் கொஞ்சம் பிரஷ் ஆயிட்டு வந்து பேசலாம்னு நெனச்சேன். வேற ஒன்னும் இல்ல வா” என்று அவளை அமர வைத்து அவளின் அருகில் அமர்ந்து கொண்டான். சமையலறைக்குச் சென்ற ஜனனிக்கு ஏற்கனவே இருக்கும் பிரச்சனைகள் பத்தாது இது வேறு புது தலைவலியா என்றுதான் தோன்றியது அவளின் நடவடிக்கைகள். ஜனனி மதிய சமையலை சமையலை முடித்து விட்டு தன் அறைக்கு செல்ல வர, அப்போதும் இருவரும் அவளை கண்டுகொள்ளாமல் சுவாரசியமாக பேசிக்கொண்டு இருக்க, அதற்கு மேல் பொறுமை கொள்ளாத அவள் அறைக்குள் சென்று கதவை அடித்து சாத்தினாள். அதில் அவளுக்கு தான் மாதவியுடன் பேசுவது பிடிக்கவில்லை என்று உணர்ந்தவன், மேலும் அவளோடு சத்தமாக பேசி சிரித்து ,அவளை வெறுப்பேத்த ஜனனியின் கோவமோ எல்லை கடந்தது. மாதவியுடன் சிறிது நேரம் பேசிவிட்டு எழுந்தவன் “எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்குமா.கொஞ்ச நேரம் தூங்குகிறேன் நீ போய் ரெஸ்ட் எடு” என்று அவளை அனுப்பி வைத்தவன் அறைக்குள் வர அதற்குள் அவள் தூங்கி இருந்தாள். கதவைத் தாழிட்டு விட்டு அவளின் அருகே வந்து படுத்தவள் அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, அவளோ “என் முகத்தில் அப்படி என்ன தெரியுது போய் உங்க அத்தை பொண்ணு முகத்தையே பாக்க வேண்டி தான. அதுக்குள்ளே ஏன் வந்துட்டீங்க”, இன்று கோபமாகவே வினவியவளின் மூக்கை பிடித்து ஆட்டியவன் “என் செல்ல பொண்டாட்டிக்கு பொறாமையா? “என்று கேலியாக கேட்டவனை பார்த்தவள் “என்ன பார்த்தா உங்களுக்கு பொறாமைப்படுறவ மாறி தோணுதா, உங்களுக்கும் என்ன பிடிக்கல.ஒருவேளை எல்லாரும் சொல்றா போல அந்த மாதவிய கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சீங்களா? என்ன இப்படி பாக்கவும் எனக்கு வாழ்க்கை குடுத்திட்டீங்களா?நீங்களும் மத்தவங்க போல தான் என்ன நினைக்கறீங்களா?” என்று அழுது கொண்டே தவிப்புடன் கேட்டவளை கண்டவன் அதிர்ந்து தான் போனான்.தான் ஏதோ விளையாட்டுக்கு செய்ய போக,அவளை காயப்படுத்தி விட்டோம் என்று தோன்ற, தன்னையே நொந்து கொண்டவன் அவளை இழுத்து தன் மார்பில் போட்டுகொண்டு “என் முகத்தை பாத்து சொல்லு டி. உன் அன்பு அப்டி நினைக்கறவனா சொல்லு. நான் எந்த ஒரு விஷயத்திலும் உன்ன காயப்படுத்திற கூடாதுனு நினைக்கிறேன். அவ சின்னபொண்ணு, அப்டி எந்த நினைப்பும் எனக்கு இல்லடா. உன் கண்ணுல லைட்டா கோவம் தெரிஞ்சது அதான், உன்ன வெறுப்பேத்தலாம்னு அவகூட இவ்ளோ நேரம் பேசுனேன் மத்தபடி வேறெதுவும் இல்லை” என்றவாறு அவளை அணைத்து கொள்ள, அவ்ளோ அவனின் மார்பின் கதகதப்பில் உறக்கத்தை தழுவியிருந்தாள். ஜனனி விழிக்கும்போது மாலை 4 மணியைக் கடந்து இருந்தது.ஹாலிலிருந்து இனியன் மாதவி சாருமதி மூவரின் சத்தமும் கேட்க, ஜனனி வெளியே எட்டி பார்க்க, இனியன் இருவருக்கும் நடுவில் அமர்ந்திருக்க மூவரும் கேரம் விளையாடிக் கொண்டிருந்தனர். ஜனனி தன்னை சுத்தப்படுத்தி கொண்டு, சமையல் அறைக்கு செல்ல, அவளை கண்ட மாதவி முகத்தை திருப்பி கொண்டாள்.சாருவோ “ஹாய் ஜனனி இப்போ உடம்புக்கு பரவாயில்லையா? நான் உங்களைப் பார்ப்பதற்காக தான் வந்தேன் நீங்க தூங்கிட்டு இருக்கீங்கன்னு மாமா சொன்னாங்க அதனாலதான் இவங்களோட இப்படி விளையாடுவதற்கு உட்கார்ந்தேன்.வாங்க நானும் உங்களோட வந்து ஹெல்ப் பண்ணுறன்” என்று அவளிடம் பேசிக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள் சாரு. மாதவி “என்ன மாமா உங்க வைப் யார்கிட்டயும் பேச மாட்டாங்களா? நான் வந்ததிலிருந்து என்கிட்டயும் பேசல அம்மா அப்பா யார்கிட்டயும் பேசல, இதான் வீட்டுக்கு வந்தவங்களுக்கு கொடுக்கும் மரியாதையா?” என்று கேட்டாள். இனியன் “நீங்க யாருன்னே அவளுக்கு தெரியாதே மாதவி. நீங்க அவகிட்ட அறிமுகம் பண்ணிக்கிட்டீங்களா? அவகிட்ட வந்ததும் பேசுனீங்களா”என்று கேட்க… அவளின் தலையை தானாக இல்லை என ஆடியது. இனியன் “இதோ சாரு கிட்ட கூட அவ பேசினது கிடையாது. அவ எப்படி நார்மலாக பேசுகிறா, நீ அதுபோல போய் பேசு அதுக்கு அப்புறம் அவ உன்கிட்ட பேசலனா வந்து என்கிட்ட சொல்லு நான் பாத்துக்குறேன்” என்றவன் எழுந்து சமையலறைக்கு சென்று விட… ஜனனியும் சாரும் ஏதோ பேசிக்கொண்டே சமைத்துக் கொண்டிருந்தனர்.சாரு ஜனனியை கிண்டல் செய்துகொண்டும் அவளிடம் கேள்வி கேட்டுக்கொண்டும் ஜனனிக்கு உதவி செய்து கொண்டிருந்தாள்.ஜனனி, சாருவிடம் டீயை கொடுத்தனுப்பியவள் “நீ போய் டீ குடி, அப்படியே மத்தவங்களுக்கு கொடுத்துடு” என்று அவளிடம் தர…சாரு அனைவர்க்கும் டீயை கொடுத்துவிட்டு இனியனுக்கும் டீயை குடுத்தவள், “ஹலோ பாஸ் என்னாச்சு. கொஞ்ச நேரம் கூட உங்க மனைவியை பார்க்காம இருக்க முடியலையா? சமையல் அறைக்கே வந்துட்டீங்க?” என்று கிண்டல் செய்தவளின் தலையில் கொட்டியவன் ஜனனியை பார்க்க, அவளோ சாருவின் பேச்சில் சிரித்திருந்தாள்.ஜனனி இந்த வீட்டிற்கு வந்த பிறகு முதல் முறை சிரிக்கிறாள். அதை ரசித்தவன் அவளை கண்ணெடுக்காமல் பார்க்க, ஜனனியும் அவனை தான் பார்த்து கொண்டிருந்தாள்..இவர்களின் பார்வையை கண்டு சிரித்தவள் ஜனனியிடம் “உருகுதே மருகுதே ஒரே பார்வையில்”என்று பாட, ஜனனியோ அவளின் பாடலில் தன்னிலை அடைந்தவள் சாருவை தலையில் குட்டி “டீய குடி”என்று கையில் தர… சாருவின் கலகலப்பான பேச்சில் ஜனனி தன் கூட்டில் இருந்து சிறிது சிறிதாக வெளிப்பட தொடங்கியிருந்தாள். இனியனுக்கு ஏனோ சாரு ஜனனி உடன் இருந்தாள் அவள் முன்பை போல கலகலப்பாக மாறி விடக்கூடும் என்று எண்ணியவன், தன் போனை எடுத்து ஈஸ்வரனுக்கு அழைப்பை விடுத்தான். இனியன் “ஹலோ யோவ் மாமா எப்படி இருக்க, நல்ல இருக்கியா?” என்று கேட்க…அவனோ, “நேத்து தானே மாப்பிள பார்த்தோம்.நல்லா இருக்கேன், உன் அக்கா என் கூட இருக்கும் போது எனக்கு என்ன ஆக போகுது . தங்கச்சி எப்டி இருக்கு, உடம்புக்கு பரவாயில்லயா? நேத்து நடந்ததை சொன்னதும் சாருதான் உடனேயே பார்த்துட்டு வரேன்னு சொல்லிட்டு கிளம்பி வந்துச்சு அதனால் எந்த பிரச்சனையும் இல்லையே” என்று கேட்டான். இனியன் “பிரச்சனை எதுவும் இல்ல இப்ப நான் சாருவை பற்றி நான் உன்கிட்ட பேசணும் நினைச்சு கால் பண்ணேன்” என்று தயங்க… ஈஸ்வரன் “அட மாப்பிள்ளை என்ன பிரச்சினையாக இருந்தாலும் சொல்லு.எதுக்கு தயங்குற மாமா கிட்ட உனக்கு எதுக்காக தயக்கம்” என்று கேட்டான்.இனியன் “ஊருல இருந்து மாதவி வந்து இருக்கா, அவ அப்பிடியே அக்கா மாறி தான். ஆனா சாரு இங்க இருக்கும் போது ஜனனி கொஞ்சம் பெட்டரா பீல் பன்றா, அதனால கொஞ்சநாள் சாரு இங்கயே இருக்கட்டும் மாமா” என்று கூற…. ஈஸ்வரன் “அட இதுக்கா மாப்பிள்ளை இப்படி தயங்கினே பரவால்ல கொஞ்ச நாள் தங்கச்சி கூட இருக்கட்டும் எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை” என்று கூறினான்.சமையலை முடித்து விட்டு, ஜனனி மற்ற, வேலைகளை கவனிக்க சாரு அவளுக்கு அனைத்திலும் உதவியாக இருந்தாள்.மாதவி இனியனையே வட்டமடித்து கொண்டிருந்தாள். ஆனால் அவனின் பார்வை அவன் மனையாளை தவிர வேறேதும் நோக்கவில்லை.காலையில் சோகமாக இருந்த ஜனனி, இப்போது கலகலப்பாக பேசுவது கடுப்பை தர, அவளை என்ன செய்யலாம் என்று நினைத்து, இருப்பதிலே மிகவும் பழைய ஐடியாவாக ஒன்றை யோசித்து அவளுக்கு அவளே தலையில் மண்ணை வாரி போட்டு கொண்டாள்.சமையலறை முன் சிறிது சிறிது வழுவழுப்பாக இருக்கும் இடத்தில் தேங்காய் எண்ணெய் கொட்டி வைத்து இருந்தாள். இனியன் அறையில் இருந்துக் கொண்டே ஜனனியை அழைக்க அவளோ வேகமாக எதையும் பார்க்காமல் நடந்துவர,கொட்டியிருந்த எண்ணையில் வழுக்கி கீழே விழுந்தாள்.”ஆஹ் அம்மா “…”வலிக்குது” காலை பிடித்து கொண்டு கதற, அவளின் சத்தத்தில் அனைவருமே அங்கு கூடி விட்டனர்.இனியன் ஓடிவந்து ஜனனியை தூக்கியவன் “என்னாச்சு இங்க எப்டி எண்ணெய் கொட்டுச்சு”என்று கேட்க யாருமே எதுவும் பேசாமல் இருக்க….ஜனனிக்கோ வலியில் கண்களில் நிக்காமல் கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது.சாரு “மாமா அவளை தூக்குங்க, அவளுக்கு ரொம்ப வலிக்குது போல.இங்க பக்கத்துல இருக்குற இன்னிக்கு போய் பாத்துட்டு வந்துருவோம்” என்று கூறினாள்.ஜனனியை இனியனும் சாருவும் அருகிலிருந்த கிளினிக்க்கு அழைத்து செல்ல, மருத்துவரோ மூன்று நாட்கள் காலை அசைக்காமல் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தார்.வீட்டிற்குள் ஜனனியை இனியன் தூக்கி கொண்டு வர, “என்னப்பா சொன்னாங்க”என்று பதறி போய் கேட்ட அறிவழகனிடமும், தங்கைகளிடமும்,”மூணு நாளைக்கு காலை அசைக்காமல், ரெஸ்ட் எடுக்கணும்னு சொன்னாங்கப்பா”…அன்னபூரணி “வீட்டுல வேலை செய்யணும்னே பிளான் பண்ணி அவளே கீழ எண்ணைய ஊத்தி விழுந்துருப்பா, நடிப்புக்காரி. அவ அம்மாக்காரி மாறி தானே அவளும் இருப்பா என்று அப்போதும் கூட அவளை சகமனுசியாய் கூட மதிக்காமல், பேசியவரை கண்டவனுக்கு ஆத்திரம் மூள, கைகளை இறுக்கி கோவத்தை கட்டுப்படுத்தினான்.இதை மாதவி தான் செய்திருப்பாள் என்று அவளின் பார்வையிலே கண்டு கொண்டவன் “மாதவி”என்று கத்த, அவனின் அழைப்பில் பயந்து போனவள் அவனின் முன் வந்து நிற்க,” இன்னும் ஒரு வாரத்திற்கு இந்த வீட்டில் எல்லா வேலையும் நீ மட்டும் தான் செய்யணும் புரிஞ்சுதா” என்று கேட்டவனுக்கு வேறு வழியில்லாமல் தலையாட்டினாள்.ஜனனம் 9 இனியனின் கட்டளையில் தான் செய்ததை கண்டுபிடித்து விட்டானோ என்று நினைத்தவளுக்கு ஒரு நிமிடம் நெஞ்சில் நீர் வற்றி போன உணர்வு. அங்கிருந்த அனைவருக்குமே புரிந்துபோனது இனியனின் கூற்றில் மாதவி தான் ஏதோ செய்து இருக்கிறாள் என்று… அன்னபூரணி உள்ளுக்குள் மாதவியை மெச்சி கொண்டவர், எதும் பேசாமல் உள்ளே நகர்ந்து சென்றுவிட்டார். அறிவழகன் மாதவியிடம் வந்தவர் “நீ செஞ்சது ரொம்ப தப்பு டா.இது அவனோட வாழ்க்கை. இனியனுக்கு ஜனனிய தான் பிடிச்சிருக்கு. அவளை அவன் கல்யாணமும் பண்ணிக்கிட்டான்.அவங்க வாழ்க்கையையும் வாழ ஆரம்பிச்சுட்டாங்க.இதுக்கு மேல நீ உன் மனசுல ஆசையை வளர்த்து விட்டு இந்த மாதிரி ஜனனிக்கு தொல்லை கொடுக்கிறது நல்லதுக்கு இல்ல பார்த்து நடந்துக்கோ. மறுமுறையும் இதே மாதிரி ஏதாவது பண்ணிக்கிட்டு இருந்தேன்னா, இனியனோட கோபத்துக்கு ஆளாகிடுவ.அப்புறம் என்னால் எதுவும் செய்ய முடியாது” என்று விட்டு உள்ளே சென்று விட்டார்.சாரு மாதவியிடம் வந்தவள் “நான்அப்பவே நெனைச்சேன் இந்த மாதிரி கேவலமான வேலையெல்லாம் உன்னை தவிர வேற யாரும் செய்ய மாட்டாங்கன்னு, உனக்கு இதான் ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் வார்னிங் இதுக்கு மேல நீ ஜனனியை கஷ்டப்படுத்த நெனச்சா அது நல்லா இருக்காது.” என்று அவளை மிரட்டி விட்டுச் செல்லும் சாருவை கண்டவளுக்கு அவளுக்காக இவ ஏன் இப்படி டென்ஷன் ஆகிறா என்று யோசித்துக்கொண்டே அவளும் உள்ளே சென்று விட்டாள். இனியன் அறைக்குள் நுழைய கண்ணை மூடிக்கொண்டு வலியை தாங்க முடியாமல் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தவளை கண்டவனுக்கு, மாதவியை நினைத்து கோவம் தான் வந்தது. இதற்கு தான் ஏதாவது செய்ய வேண்டும் இதை இப்படியே விடுவது நல்லதற்கல்ல என்று நினைத்தவன் அவளின் அருகில் சென்று அமர, அவனை கண்டவள் வேகமாக கண்களை துடைத்து கொண்டவளை, அவளருகில் அமர்ந்தவன் “நம்ம இங்க இருந்து போயிரலாமா? எனக்கு ரொம்ப பயமா இருக்கு ஜனனி. இவங்க நிச்சயம் திருந்த மாட்டாங்க,இதுக்கு மேல உனக்கு ஏதாச்சும் ஆனா என்னால தாங்க முடியாது”என்று கூறியவனை, அதிர்ச்சியாக பார்த்தாள்.அந்த நேரம் சரியாக இனியனின் போன் அடிக்க, அதை அட்டென்ட் செய்து பேசியவன் “நீ தூங்குடா காலைல பேசிக்கலாம். எனக்கு அர்ஜென்ட் வொர்க் இருக்கு ஸ்டேஷன் வரைக்கும் போறேன், நீ பாத்து பத்திரமா இரு என்று நான் அவளின் நெற்றியில் இதழ் பதித்து அவளை படுக்க வைத்து விட்டு சென்று விட்டான்.பலத்த காவலில் இருந்த ஒரு கொலைகாரன் தப்பித்து விட, அனைவரும் விடிய விடிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர் காவலர்கள் அனைவரும்.அவன் இனியனின் பொறுப்பில் இருந்திருக்க, மேலிடத்தில் இருந்து அவனுக்கு பிரசர் அதிகமாகியது. அவனை கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று, அந்த கைதி இத்தனை நாட்கள் அனைவர்க்கும் தண்ணி காட்டியவனை பிடித்ததே இனியன் தான்.அவன் மேல் பயங்கர கொலைவெறியில் இருந்தான் அவன்.இரவு பகல் பாராது இரண்டு நாட்கள் அன்னம் தண்ணீர் இல்லாமல் ஆளாளுக்கு அவனை தேடியும் எந்த பிரயோஜனமும் இல்லாமல் போனது.ஜனனியும் சாருவும் நன்றாக நெருங்கி இருந்தனர் இந்த ஒரு வாரத்தில்… ஜனனி மீண்டும் பழையபடி வீட்டில் நடமாட ஆரம்பித்து இருந்தாள்.மாதவி வேலைசெய்யாமல் தன் வீட்டில் சொகுசாக இருந்து பழக்கப்பட்டவள்,இரண்டே நாட்களில் சோர்ந்து போனாள். ஜனனிக்கு அவளை பார்க்க பாவமாக இருக்க, முடியாமல் போனாலும் கொஞ்சம் கொஞ்சமாக தன் வழக்கமான வேலைகளை தொடங்கியிருந்தாள் சாருவின் உதவியோடு…இனியனுக்கும் ஜனனிக்கும் திருமணம் ஆகி ஒரு மாதம் கடந்திருந்தது.அன்று விடுமுறை நாள் ஆதலால் புகழினி, தமிழரசி, சாரு, ஜனனி நால்வரும் சமையல் முடித்துவிட்டு முற்றத்தில் அமர்ந்து பரமபதம் விளையாடி கொண்டிருந்தனர். இனியனும் அப்போது தான் வந்திருக்க, அறிவழகனுடன் அமர்ந்து பேசிகொண்டிருந்தவன் அவர்கள் விளையாடுவதை பார்த்து கொண்டிருக்க,அப்போது சாரு ஜனனியின் காதில் இனியனை பற்றி ஏதோ சொல்ல, அவளோ திடிரென்று சிரித்து விட,இனியனோ அவளின் சிரிப்பையும் அவளையும் வெகுவாக ரசித்தான்.அப்போது உள்ளிருந்து வந்த, அன்னபூரணி “சிரிடி நல்லா சிரிச்சு சந்தோசமா இரு. என் பொண்ண இந்த வீட்டுக்கு வர முடியாத அளவுக்கு பண்ணிட்ட இல்லை.நீ சந்தோசமா தான் இருப்ப பொறந்ததும் பெத்தவங்கள முழுங்கிட்ட,தாலிக்கட்டுனதும் புருஷன முழுங்கினவ இத்தனை நாளா என் தங்கச்சி குடும்பத்தை பாடா படுத்தினே,குடும்பம் அம்மா, மகள் பாசம் னா என்னென்னனு தெரியுமா டி உனக்கு?உனக்கெல்லாம் ஊரு உலகத்துல வேற ஆம்பளையே கிடைக்கலியா டி, எங்க குடும்பத்தையே நாசம் பண்றீங்க, அதான் படிக்கும் போது எவன் கூடயோ போய் குடும்பம் நடத்தி வயித்துல பிள்ளையை வாங்கிட்டு வந்தயே அவன் கிட்டயே போக வேண்டியது தானே, என் புள்ள தான் உனக்கு கிடைச்சானா ஒழுக்கம் கெட்ட நாயே! இதே மாறி நாளைக்கு வேற எவனாச்சும் கிடைச்சாலும் என் புள்ளைய விட்டுட்டு ஓடி போயிருவ” என்று திட்டி கொண்டே செல்ல…இனியன் திட்ட வாயெடுக்கும் முன் “போதும் நிறுத்துங்க”என்று கை நீட்டி கத்தியிருந்தாள் ஜனனி.அன்னபூரணியின் பேச்சில் அருவருப்படைந்து நின்ற குடும்பத்தினர் ஜனனியின் சத்தத்தில் திகைத்து போய் நின்றிருந்தனர்.இனியனோ விழி விரித்து அவளை பார்த்தான்.ஜனனி “என்ன என்ன வேணாலும் பேசுங்க நான் பொறுத்துப்பேன்.என் கேரக்டர் பத்தி பேச உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. உங்களுக்கு என்ன பிரச்னை ஏற்கனவே ஒருத்தன் கூட கல்யாணம் ஆனது இதானே…அந்த கல்யாணம் எப்படி நடந்துச்சு, எதுக்காக, யாரால நடந்துச்சுனு தெரியுமா உங்களுக்கு” என்றவள் தன் கதையை கூற தொடங்கினாள்.ஜனனியின் பெற்றோர் அவள் பிறந்ததும் இறந்துவிட, சிவகாமி அண்ணன் மகளை பார்த்து கொள்கிறேன் என்று அவர்களின் வீட்டிற்கு வந்து விட்டார் குடும்பத்தோடு.ஊரார் பார்வைக்கு சிவகாமி ஜனனியை நன்றாக பார்த்து கொள்வது போல் கட்டிக்கொண்டாலும், வீட்டிற்குள் அவளை வார்த்தைகளால் வதைத்தாள். அவள் மகிழ்வாக இருப்பதென்னவோ பள்ளியில் தான். முதலில் விவரம் தெரியாத வரை, அவர்கள் பேசுவதை பெரிதாக எடுத்து கொள்ளாதவள், விவரம் தெரிந்ததும் தான் அப்படித்தானோ ராசி இல்லாதவள் என்று அவளாகவே அவர்களுக்கு ஏற்றபோல் வளைய ஆரம்பித்தாள்.அன்னபூரணி அவளின் பெற்றோர் மீது இருந்த கோவத்தில் அவளை கண்டுகொள்ளாமல் அவள் மீது வெறுப்பை கொட்ட, சிவகாமிக்கு இதுவே சாதகமாக அவளை பற்றி தன் தமக்கையிடம் இல்லாததும் பொல்லாததும் கூறி அவர் அவள் பக்கமே திரும்பாத அளவுக்கு ஒரு தோற்றத்தை உருவாக்கினார்.ஜனனி வயதுக்கு வந்த போதும் கூட, அன்னபூரணி வரவில்லை. மாமன் முறையில் சடங்குகள் செய்ய இனியனை தான் அனுப்பி வைத்தார்.இனியனுக்கு அப்போது பதினாறு வயது தான் இருக்கும். அரும்பு மீசை முளை விட்டிருந்த நேரம் ஜனனியை அப்போது தான் முதன்முதலில் பார்த்தான்.சிறுபிள்ளை என நினைத்தவளை சேலையில் பெரிய பெண்ணாய் காண , அவளின் தோற்றம் அவனை ஏதோ செய்ய,அவளின் முகத்தில் இருந்து அவன் கண் திரும்பவே இல்லை. அவள் முகம் மருந்துக்கும் சிரிப்பில்லாமல் சோகமாகவே இருக்க, அவளுக்கு அவன் தான் அனைத்து சடங்குகளும் செய்தான்.அவன் அங்கிருந்த மூன்று நாட்களில் தான் ஜனனியை பற்றியும் சிவகாமியை பற்றியும் தெரிந்து கொண்டான்.அதன் பிறகு அவளை பார்ப்பதற்காகவே அடிக்கடி அங்கு சென்று வந்தான்.அவளை பார்ப்பதற்காகவே அவர்கள் இருந்த ஊரில் உள்ள காலேஜில் சேர்ந்திருந்தான்.ஆனால் அவளை சந்தித்து ஒருமுறை கூட அவன் பேசியது இல்லை.அன்று அவளின் பிறந்தநாள் அவள் யாருமில்லாமல் கோவிலுக்கு வந்திருக்க, அவளை பின்தொடர்ந்து வந்தவன் அவனும் கோவிலுக்குள் நுழைய, அவளோ கண்களில் கண்ணீர் வர, “என் மேல உங்களுக்கு கொஞ்சம் கூட இரக்கம் இல்லையா?நான் பாவம் இல்லையா உங்களுக்கு எதுக்கு என் மேல இவ்வளவு கோவம்? எதுக்கு எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை, எல்லாருக்கும் எல்லாரும் இருக்காங்க, எனக்கு யாருமே இல்லை. ஒருவேளை சித்தி சொல்ற மாறி நான் அனாதை தான, கடைசி வரைக்கும் என் மேல பாசம் காட்ட யாரும் வரவே மாட்டாங்களா?என்று கேட்டு கடவுளிடம் கண்ணீர் விட்டு பேசிகொண்டிருந்தவளை கண்டவனுக்கு ஏதோ போல் தோன்ற,அவளிடம் சென்றவன் “ஜனனி மா “என்றழைக்க திரும்பியவள் “ஹை அன்பு மாமா”என்று குதூகளித்தவளின் கையை பற்றி அழைத்து வந்தவன் அங்கிருந்த பிரகாரத்தில் அமர வைத்தான்.ஜனனி “நீங்களும் இந்த கோவிலுக்கு வருவீங்களா மாமா. காலேஜ் போகலையா”என்று கேட்டவளின் கைவிரல்களை பற்றியவன் “ஹாப்பி பர்த்டே”என்று கூற…”தேங்க்ஸ் மாமா”…இனியன் “எதுக்காக அழுத, சித்தி ரொம்ப திட்டுனாங்களா?”என்று கேட்க…”அதெல்லாம் இல்லை மாமா, இன்னிக்கு என்னோட பிறந்தநாள் அப்றம் எங்க அம்மாவோட இறந்து நாளும்” என்று கூறியவளின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க…அவளை தன் தோளில் சாய்த்து கொண்டவன் “போதும் மா… அழாத நம்ம நல்லத மட்டும் எடுத்துப்போம். இன்னிக்கு உன்னோட பிறந்தநாள் அத செலிபேரேட் பண்ணுவோம்” என்று கூற…ஜனனி “வேணாம் மாமா… அத்தை அரைமணி நேரம் தன் டைம் குடுத்திருக்காங்க… நான் போகனும் அதுமட்டும் இல்லாம எனக்கு பிறந்தநாள் கொண்டாடுற மனநிலை இல்லை”என்று கூற…அவனுக்கும் தன் சித்தி இவளை கொடுமை செய்வது புரிந்ததால் அவளை அதோடு விட்டு விட்டவன் அவளிடம் “உனக்கு நான் இருக்கேன். எப்போவும் உன்ன நான் பத்திரமா பாத்துப்பேன்.என் கடைசி காலம் வரைக்கும்” என்று கூறியவனை புரியாமல் பார்த்தவள் “கடைசி வரைக்கும் எப்படி மாமா வரமுடியும், எனக்கு புரியல” என்று கூற…இனியன் “நீ என்ன கல்யாணம் பண்ணிக்கோ, மாமா ஆயிசுக்கும் உன் கூடயே இருப்பேன்” என்று கூற…அவளுக்கோ அப்போது 17 வயது தான் கல்யாணம், என்பது என்னவென்றே சரியாக புரியாமல் இருக்க “நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன் மாமா. ஆனா எப்போவும் நீங்க என்ன விட்டுட்டு போக கூடாது”என்று கூற…அவனும் மகிழ்வுடன் தலையசைத்தான்.அவர்கள் அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தனர். இரண்டு வருடங்களில் இருவரும் திளைக்க திளைக்க காதலித்தனர். அவளின் முகம் பார்த்தே அவளின் தேவைகள் தீர்த்து வைத்திருந்தான்.அவன் அப்போது கல்லூரி முடித்திருக்க, ஜனனி முதல் வருடத்தில் அடியெடுத்து வைத்திருந்தாள்.முதலில் என்னவென்றே தெரியாமல் அவனை, கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று கூறியவளுக்கு அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக புரிய, அவன் தான் அவளின் கணவன் என்றே மனதில் பதிய வைத்திருந்தாள்.இனியனும் அவளை கண்மூடித்தனமாக காதலித்தான்.அந்த சமயத்தில் தன் இருவரும் ஒரு முறை கோவிலுக்கு செல்ல, அங்கு இவர்களை இருவரும் பேசிக்கொல்வதை கேட்ட, சிவகாமிக்கு இருவரையும் பிரித்தே ஆகவேண்டும் என்று வெறி ஏறியது.இனியன் காவலர் பயிற்சிக்கான வேலையை தொடங்கி பிராக்டிஷ் செய்து கொண்டிருக்க,ஜனனி கல்லூரி இறுதி வருடத்தில் அன்று அன்புவின் பிறந்தநாள்.அவன் அதற்கு அடுத்த நாள் பயிற்சிகாக வெளியூர் செல்ல வேண்டியது இருக்க, ஜனனிக்கு ஏதோ நடக்க போவது போல் மனம் அடித்து கொண்டிருந்தது.அவளின் மனதை கண்களில் மூலம் அறிந்து கொண்டவனோ, அவனின் கழுத்தில் சிறுவயதிலே தன் மாமா (ஜனனியின் தந்தை)தனக்கு போட்ட ஐந்து பவுன் தங்க சங்கிலியை அவள் எதிர்பாராமல் அணிவித்தவன், “இது நான் சின்ன வயசுல இருக்கும் போது மாமா எனக்கு கொடுத்த செயின். இது அப்போ பெருசா இருந்தாலும் இதுவரை நான் இவ்ளோ நாளா கழட்டுனது இல்ல.இனிமேல் நீயும் கழட்டக்கூடாது. இத நீ கழட்டுனா நான் செத்ததுக்கு சமம். என்ன பொறுத்தவரை இது நான் உனக்கு கட்டுன தாலி” என்று கூறியவனை கண்ணிமைக்காமல் பார்த்தவள் அவனை இறுக்க கட்டி அணைத்து முதன்முதலில் அவன் கன்னத்தில் தன் முத்திரையை பதித்திருந்தாள்.இனியனும் ட்ரைனிங்குக்கு கிளம்பி சென்றுவிட, சிவகாமி தன் வேலையை ஆரம்பித்தாள். சமையலறையை துடைத்து கொண்டிருந்தவளிடம் வந்த சிவகாமி, “ஜனனி வா வந்து இங்க உக்காரு, இனி நீ இந்த வேலைலாம் பாக்க கூடாது. நீ மகாராணி மாதிரி வாழ போற”என்று வாயெல்லாம் பல்லாக, அவளை அழைத்து சோபாவில் அமர வைத்தவள் அவளிடம் கண்ணை கசக்கி கொண்டு “நீ தான் ஜனனி இந்த குடும்பத்து மானத்தை நீ தான் மா காப்பாத்தணும்.நாங்க உயிரோட இருக்கறதும் சாகறதும் உன் கையில தான் இருக்கு”என்று கூறி கதறி அழுதவளை புரியாமல் பார்க்க,அருகிலிருந்த தனிஷாவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை வைத்தவள்,”எல்லாம் இவளால தான்,காலேஜ்ல யாரோ கூட படிச்ச ஒரு பையனோட பழகிருக்கா,இப்போ அவனால கர்ப்பமாகி வந்து நிக்குறா…அந்த பையன் வீட்டுல போய் பேசலாம்னு பார்த்தா அவனுக்கு சொந்தம் யாரும் இல்லையாம்,ஒரு மாமா தானாம் அவருக்கு ஒரு பையன் இருக்கான் அவனுக்கு முடிச்சா தான் இந்த பையனுக்கு கல்யாணம் முடிக்க முடியும்னு ஒரேடியா சொல்லிட்டாங்க, உன் காலுல விழுந்து கேக்கறேன் மா… அந்த பையன கட்டிக்க ஒத்துக்கோ இல்லனா நாங்க எல்லாம் நாண்டுக்கிட்டு தான் தொங்கணும். அவனும் நல்ல வசதியான வீட்டு பையன் தான் உன் வாழ்க்கை நல்லா இருக்கும் அதுக்கும் தான் சொல்றேன். கட்டிக்கோமா “என்று கூறி கதறி அழ…அதில் அதிர்ந்து போனவள் கண்களை மூடி கழுத்தில் இருந்த செயினை இறுக்க பற்றி கொண்டவள் “ப்ளீஸ் அத்தை என்ன விட்ருங்க, இதுக்கு வேற எதும் வழி இருக்கும். என்னால் முடியாது” என்று கூற…சிவகாமி “ஏய் வாடி நாம சாகலாம், அவமானப்பட்டு இந்த உயிர வச்சி வாழுறதுக்கு சாகறதே மேல், இத்தனை வருசமா வளர்த்து படிக்க வச்சு, ஆளாக்கி விட்டவங்களுக்கு அவளால இத கூட செய்ய முடியல. வேணாம் வா நம்ம முடிவ தேடிக்கலாம்” என்று சமையல் அறைக்குள் சென்று மண்ணெண்ணெய் எடுத்து தலையில் ஊற்றிக்கொள்ள அதில் அதிர்ந்து போனவள் அவர்களிடம் ஓடிச்சென்று கேனை வாங்கி கீழே எறிந்தவள் “நான் ஒத்துகிறேன் அத்தை ப்ளீஸ். எதும் செஞ்சுக்காதிங்க”என்று அங்கேயே மடங்கி அமர்ந்து அழுதாள்.தாயும் மகளும் அவளுக்கு தெரியாமல் சிரித்து கொண்டு,”நாளைக்கு காலைல கல்யாணம் காமாட்சியம்மன் கோவில்ல, அதுக்கு தயாராகிக்கோ… எவ்ளோ சீக்கிரமா உனக்கு கல்யாணம் நடக்குதோ, அதுல இருந்து ரெண்டு நாள் கழிச்சு இவளுக்கு கல்யாணம் நடக்கும். இப்போ இருக்க நிலமைல இது ரொம்ப அவசியம்”என்று அவளை சம்மதிக்க வைத்திருந்தனர் தாயும் மகளும்…இனியனோ என்ன உணர்வென்றே தெரியாமல் ஜனனியிடமும் பேச முடியாமல் உயிர் போகும் வலியை அனுபவித்தான்.ஜனனி உயிர் உள்ள பிணமாய் பிரகாஷின் கரங்களால் தாலியை ஏந்தி கொண்டாள்.ஜனனம் 10 கோவிலில் திருமணம் முடிந்து அனைவரும் கிளம்பி விட, திருமணத்திற்கு சிவகாமியின் கணவரும் இல்லை. அவர் வெளியூர் சென்றிருந்த போதும் தான் இந்த திட்டத்தை இவர்கள் சிறப்பாக செய்து முடித்திருந்தனர். அப்போதே பிரகாஷின் தாயார் அங்கு வந்து சிவகாமியிடம், “ரொம்ப நன்றி மா… எங்க ஆசையை நிறைவேத்தி வெச்சிட்டீங்க, நீங்க பண்ணது மறக்க முடியாத காரியம். என் பையனுக்கு இதயத்துல கோளாறு. எப்போவேனா எதுவேனா ஆகலாம், வம்சத்துக்கு ஒரே மகன் அவன் கல்யாணத்தை மட்டுமாவது பாக்கணுக்கற ஆசையை நிறைவேத்திட்டீங்க, இந்தாங்க உங்களுக்கு நான் தரதா சொன்ன அஞ்சு லட்சம்” என்று கூறி சிவகாமியிடம் கொடுக்க, அவளோ வாயெல்லாம் பல்லாக பணத்தை வாங்கி கொள்ள, ஜனனி அவளை அருவருப்பாக பார்த்தவள் அவர்களை நம்பி மோசம் போனதில் உயிருடன் மரித்து போனாள்.அப்போது அங்கே ஏதோ சலசலப்பு கேட்க,நண்பர்களுடன் பேசிகொண்டிருந்த பிரகாஷ் நெஞ்சை பிடித்து கொண்டு சரிந்திருந்தான். அனைவரும் பதறி அடித்து ஹாஸ்பிடளுக்கு கொண்டு செல்ல, பரிசோதித்த மருத்துவர் வரும்வழியிலே இறந்துவிட்டார் கடும் மாரடைப்பு என்று கூறி விட்டு செல்ல, தாலி ஏறிய ஒருமணி நேரத்திலேயே கணவனை கொன்றவள், ராசி கெட்டவள் ஊர் தூற்ற பழி ஏற்றாள்.மணமகனின் தாயோ “என் புள்ள அப்போவே கல்யாணம் வேணாம்னு சொன்னானே, நான் அவனை வற்புறுத்தி இந்த ராசி கெட்டவள கல்யாணம் பண்ணி வச்சு என் புள்ளைய கொன்னுட்டனே” என்று சாபமிட்டவருக்கு அவர் மகனின் உடல்நல கோளாறு நியாபகம் வரவில்லை போலும்…ஜனனிக்கு இனியனின் நியாபகத்தில் இருந்தவளுக்கு நடந்த திருமணமே உரைக்கவில்லை என்னும் பொழுது அவனின் மரணம் எதுவும் அவளை பாதிக்க வில்லை.அவன் இறந்து இரண்டு நாட்கள் அவனின் வீட்டில் இருந்தவள், தனிஷாவின் திருமணம் முடிந்ததும் உயிரோடு இருக்கக்கூடாது, இனியனுக்கு இப்படி ஒரு துரோகத்தை செய்த பின் தான் வாழ்வது அவளுக்கு தான் காதலுக்கு செய்யும் அவமரியாதையாய் தோன்ற, அங்கிருந்த அனைத்து மாத்திரைகளையும் விழுங்கி தற்கொலைக்கு முயற்ச்சி செய்ய, அப்போது அங்கு வந்த வேலைக்காரப்பெண் அதை பார்த்து சத்தம் போட்டு மருத்துவமனையில் சேர்த்தனர் பிரகாஷின் பெற்றோர்.அவர்கள் மகனும் இறந்த பின் இங்கு எதுமில்லை என்று சொந்த ஊருக்கு செல்லலாம் என்று முடிவெடுத்து, நாளை அவளையும் அழைத்து செல்லலாம் என்று நினைத்திருக்க, அவள் இவ்வாறு செய்ததில் அதிர்ந்திருந்தவர்கள், சிவகாமியை வர வைத்து மேலும் பணத்தை கொடுத்து ஜனனியை பார்த்துக்கொள்ள சொல்லி விட்டு சென்று விட்டனர் அவர்களின் கிராமத்துக்கு…அதன்பின் ஜனனியை வீட்டிற்கு அழைத்து வர, ஒருமாதமாக ஜனனியை பார்க்காமல் துடித்து போயிருந்தவன் ட்ரைனிங் முடித்து நேராக வீட்டிற்கு வந்தவன் கண்டதென்னவோ வாடியாமலராய் சுருண்டிருந்த ஜனனியை தான். அவளை கண்டு துடித்து போனவன் அவளருகில் செல்ல, அவனை தடுத்து நிறுத்திய சிவகாமி, “அவபக்கத்துல ஆம்பளைங்க போக கூடாது இனியா போகாத, அவ ஒரு விதவை. கல்யாணம் நடந்த அன்னைக்கே புருஷன முழுங்கிட்டா, அப்டி என்ன அவசரம் ன்னு தெரியல எவனோ ஒருத்தன காதலிக்கறேன்னு சொல்லி சொன்னா, நானும் கட்டி வச்சேன். இவ ராசி கல்யாணம் ஆன ஒருமணி நேரத்துல அவனை முழுங்கிட்டு இப்போ புருஷன் போன சோகத்துல அவளும் விஷத்தை குடிச்சு சாக போய்ட்டா”என்று கதையை அடித்து விட்டார்.இதை கதையை தான் அன்னபூரணியிடமும் கூறி ஜனனியின் மேல் கோவத்தை வளர்த்து விட்டுருந்தாள்.இனியனோ சிவகாமி கூறியதில் அதிர்ந்து ஜனனியை பார்க்க, கழுத்திலும் கையிலும் நெற்றியிலும் ஒன்றும் இல்லாமல், சந்தன புடவையில் சோகமே உருவாய் மாறியிருக்க…இனியனோ அவளின் நிலைகண்டு உயிர் போகும் வலியை அனுபவித்தான். அந்த நொடியே அவளை அங்கிருந்து அழைத்து வர ஆவேசம் தோன்ற, தன் குடும்ப நிலையையும், அவளின் நிலையும் அவனை ஆட்டிப்படைக்க, அங்கிருந்து வேகமாக சென்று விட்டான்.பின் ஒருவருடமாக அவளுக்கு தெரியாமலே, அவள் கோவிலுக்கு செல்லும்பொழுது சென்று பார்த்து வருபவன் இந்த முறை ஒரு முடிவெடுத்து அங்கு சென்றவன் கையோடு அழைத்துவந்து விட்டான்.இதை அனைத்தையும் ஜனனி தன் வாயால் கூறி முடிக்க அங்கோ அவ்வளவு அமைதி. சாருவுக்கும் தமிழுக்கும் அவள் கதையை கேட்டதும் கண்களில் கண்ணீர் வந்துவிட, இனியனுக்கு கூட அப்போது தான் தெரிந்தது அவளின் திருமண கதை.ஜனனி “நான் தான் அந்த கல்யாணத்தை ஒரு விஷயமாவே எடுக்கலையே? எனக்கு என் அன்புவோட கல்யாணம் ஆயிருச்சு. இனியனுக்கு துரோகம் பண்ணிட்டனு சாக தோணுச்சு தவிர, இதுவரை நான் எந்த தப்பும் பண்ணல.இப்போ சொல்லுங்க நான் ஒழுக்கம் இல்லாதவளா? ஆம்பளைக்கு அலையுறேனா?” என்று கேட்டு கதறி அழுதவள் அப்படியே மயங்கி கீழே சரிய, இனியன் வந்து அவளை தாங்கி கொண்டான்.அன்னபூரணிக்கு தங்கையை நினைக்க நினைக்க ஆத்திரம் பெருகியது. இவளெல்லாம் ஒரு பெண் தானா? தன் உடன் பிறந்தவனின் மகளுக்கே இவ்வளவு பெரிய துரோகத்தை செய்து விட்டு, தன்னிடமும் அவளை பற்றி தவறாக கூறி துவேசத்தை வளர்த்தவளின் மேல் கோவம் கட்டுக்கடங்காமல் பெருகியது.ஜனனி அழுதழுது சோர்ந்து போய் இருக்க, அவளை கரங்களில் ஏந்தியவன் அவளை அறைக்கு தூக்கிசென்று படுக்க வைத்தவன் அவளின் தலையை வருடியவனின் கண்களில் கண்ணீர் வழிந்தது.ஜனனி மனதில் இருந்த அனைத்தையும் கொட்டிய நிம்மதியில் தன்னவனின் மாடியில் உறக்கத்தை தழுவினாள். அனைவரும் ஹாலில் அமர்ந்து இருக்க அப்போது நுழைந்த நேரம் சிவகாமியின் தனிஷாவும்… சிவகாமி நேராக கீரை ஆய்ந்து கொண்டிருந்த அன்னபூரணியிடம் வந்தவள், “என்னக்கா மறுபடியும் ஆரம்பிச்சுட்டாளா? அந்த ஒழுக்கம் கெட்டவ, நான் தான் சொன்னேன்ல அவளை பத்தி…அவ குடும்பத்துல இருக்க வேண்டியவளே இல்ல, அவளை என்கூட அனுப்பிருங்க, நான் தான் அவளுக்கு சரியான ஆள் அவ கொட்டத்தை அடக்க”என்று கூறி முடிக்கும் முன் அவளை ஓங்கி அறைந்திருந்தார் அன்னபூரணி.சிவகாமி கன்னத்தை ஒரு கையால் பற்றி கொண்டு, தமக்கையை பார்க்க அவர் முகமோ கோவத்தில், கண்கள் சிவந்து போய் நிற்க, சிவகாமிக்கு எதுவோ சரியில்லை என்று தோன்ற, “அக்கா” என்றழைக்க…”அக்காவா பைத்தியம்ன்னு சொல்லு அதான் சரியா இருக்கும், ஏன்னா இவ்ளோ நாள் நீ சொன்ன கதைகளை கேட்டு தப்பே பண்ணாத ஒருத்திக்கு பாவம் பண்ணேன்ல அதுனால நீ என்னை பைத்தியம்னு சொல்லு, பொம்பளையா டி நீ… கூட பிறந்தவனோட மகளுக்கே எந்த ஒரு பொண்ணும் பண்ண கூடாத துரோகத்தை செஞ்சுருக்கியே என்னடி ஜென்மம் நீ… என்கூட பிறந்தவளா நீ பணத்துக்காக பெத்த பொண்ணையே அசிங்கப்படுத்தி கதை கட்டி இன்னொரு பொண்ணு வாழ்க்கையை சிதைச்சுருக்க, உன்னை கொன்னா கூட தப்பில்ல” என்று அவளின் கழுத்தில் கையை வைக்க யாரும் தடுக்கவில்லை.தனிஷா மட்டுமே தாய்க்காக பரிந்து கொண்டு வர, நிமிடத்தில் அவளை தன் பக்கம் இழுத்திருந்த இனியன் அவளை அடித்திருந்தான். அண்ணா என்று கன்னத்தை பற்றியவளை போட்டு அடிவெளுத்து எடுத்தான்.”உன்னை எல்லாம் அடிச்சு வளர்த்துருந்த நீ இப்படி ஒரு பாவத்தை செஞ்சுருக்க மாட்ட” என்றவனுக்கு ஆத்திரம் தணியவே இல்லை.சத்தம் கேட்டு வெளியே வந்த ஜனனி கண்டதென்னவோ சிவகாமியின் கழுத்து நெரித்து கொண்டிருந்த அன்னபூரணியை தான். பார்த்ததும் பதறி போனவள் தன் மாமியாரின் கைகளை விலக்கி “அச்சோ பாவம் விடுங்கத்தை அவங்களை”என்று அவரிடம் இருந்து சிவகாமியை விலக்கியவளை வன்மத்துடன் பார்த்தவள் “என்னடி எல்லாரையும் மயக்கிட்டயா? என் அக்காவையே என்ன அடிக்க வச்சுட்டுலே நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்டேடி” என்று சாபம் கொடுத்தாள்.’ஏய்’ என்று கை நீட்டி மிரட்டிய இனியன், “இதுக்கும் மேல நீ ஏதாச்சும் பேசுன, ஏற்கனவே நீ இவளுக்கு செஞ்சதுக்கு உங்க ரெண்டு பேரையும் தூக்கி உள்ள போட முடியும். அதுக்கு இவ சம்மதிக்க மாட்டா நிச்சயம் அந்த ஒரு காரணத்துக்காக மட்டுமே நீங்க இப்போ நீங்க இன்னும் இங்க இருக்கீங்க, மரியாதையா வெளியே போயிருங்க… இதுக்கும் மேல நீங்க இன்னும் ஒரு நிமிஷம் நின்னாலும் அடுத்து நடக்கறதுக்கு நான் பொறுப்பில்ல” என்று கூறியவனின் கண்களில் இருந்த, கோவத்தை கண்டவர்களுக்கு நெஞ்சம் அடைத்து போனது.அன்னபூரணி “ஏண்டி எல்லா பாவத்தையும் நீ செஞ்சுட்டு கூசாம எப்படி என் மருமகளை பத்தி என்கிட்டயே தப்பா பேசியிருக்க நீ? உனக்கு அந்த தகுதி இருக்கா, ச்சி வெளியே போ… உன்கிட்ட பேசறது கூட பாவம் தான் போய் தொலைங்க” என்று கத்த…ஜனனி மாமியாரின் “மருமகள்”என்ற விளிப்பில், மனதிற்குள் சாரல் அடிக்க அவரையே பார்த்திருந்தாள்.சிவகாமியோ ஜனனியை பார்த்து கருவிக்கொண்டே சென்றாள்.அந்த நேரத்தில் இனியனின் போன் அடிக்க எடுத்து பேசியவன், அறைக்குள் சென்று குளித்து விட்டு அவசரத்தில் மொபைலை மறந்துவிட்டு ஸ்டேஷன்க்கு சென்று விட்டான்.

9 thoughts on “என் உயிரின் ஜனனம் நீயடி 8to 10”

 1. Avatar

  அச்சோ…! இவனொருத்தன்….
  ஒண்ணு மொபைலை மறந்திடறான், இல்லைன்னா பொண்டாட்டியை மறந்திடறான்.

 2. Kalidevi

  Adapavame ippadi lama oru ponnu vazhkaiya kedukurathu intha marium pombalainga irukangala sile per life keduka ipo ava mamiyar purinjikittanga aduthu ena agumnu pakalam

 3. Avatar

  இப்படி மாறிடுவாங்கன்னு தெரிஞ்சுருந்தா முன்னாடியே உண்மையை சொல்லிருப்பாளே!!… எவ்வளவு சுயநலமா இருக்காங்க!!… இவன் வேர எதையாவது மறந்துகிட்டே இருக்கான்!!..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *