Skip to content
Home » என் உயிரின் ஜனனம் நீயடி (டீசர் )

என் உயிரின் ஜனனம் நீயடி (டீசர் )

என் உயிரின் ஜனனம் நீயடி

அன்பினியன் ஜனனி டீசர் :

“டேய் இனியா என்ன காரியம் பண்ணிருக்க நீ? அடப்பாவி இந்த ராசி இல்லாதவ கழுத்துல எதுக்காக தாலி கட்டுன? அவ குடும்பத்துக்கு ஆகாதவ டா, ஏற்கனவே கட்டுனவன முழுங்குனவ, உனக்கு கல்யாணம் பண்ண இவ தான் கிடைச்சாளா? என்னைய நம்பி உன்னை இங்க அனுப்புன என் அக்காவுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்” என்று வாயிலும் வயிற்றிலும் அடித்து கொண்டு புலம்பினார் இனியனின் சித்தி.

“போதும் சித்தி, இதுக்கு மேல என் பொண்டாட்டி பத்தி பேசாதீங்க? அவளை இனி ஒரு வார்த்தை நீங்க மட்டும் இல்லை இங்க இருக்க யார் என்ன சொன்னாலும் அப்புறம் நான் அவங்களுக்கு என் இன்னொரு முகத்தை காட்ட வேண்டியது வரும். என் அம்மாவை எப்படி சமாதானப்படுத்தணும்னு எனக்கு தெரியும். நீங்க உங்க மகளோட கல்யாணத்தை சந்தோசமா நடத்துங்க”என்றவன், அந்த நரகத்திலிருந்து அழைத்து கொண்டு வெளியேறினான்.

…………………………………

“நீ கண்டதையும் கூட்டிட்டு வந்து பொண்டாட்டின்னு சொல்லுவ, அதுக்காக நான் இந்த அசிங்கத்தை ஏத்துகிட்டு இந்த வீட்டு மருமகனு சொல்லி ஆரத்தி எடுத்து உள்ள அழைக்கணுமா? என்னால முடியாது” என்று வீட்டின் வாசலில் நின்று இரைந்தார் அன்னபூரணி அன்பினியனின் அன்னை.

“நீங்க என்ன சொன்னாலும் என் முடிவு மாறாது அம்மா. இனி இவ தான் என் வாழ்க்கை. நீங்க ஏத்துகிட்டு தான் ஆகணும்” என்று உறுதியாய் ஒலித்தது இனியனின் குரல்.

அவர்கள் மாறிமாறி பேசிக்கொள்ள, ஜனனி தன்னால் அவனுக்கு தொல்லை என்று நினைத்தவள்,

“ப்ளீஸ் என்னால யாரும் சண்டை போட்டுக்காதிங்க நான் போயிடுறேன்” என்று திக்கி திணறி கூறியவள் அங்கிருந்து இரண்டு எட்டு எடுத்து வைக்க,

“என்ன விட்டு நீ போகணும்னு நெனச்ச அது நான் செத்ததுக்கு அப்புறம் தான், இப்போ நீ இங்க இருந்து போகணும்னு நெனச்சன்னா அப்போ நான் இப்போவே” அவன் கூறி முடிப்பதற்குள் அன்பு என்று அவனை தாவி அணைத்திருந்தாள் ஜனனி.

மறுமணம் மற்றும் பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பதன் அடிப்படையில் எழுதப்பட்ட நாவல்…

இது ஒரு டீசறான்னு கேட்கப்படாது. மீதி அத்தியாயத்தில்…

18 thoughts on “என் உயிரின் ஜனனம் நீயடி (டீசர் )”

  1. Avatar

    உண்மை தான்..! இங்கே நிறைய விஷயங்கள்ல பெண்ணுக்கு பெண்ணே தான் எதிரியா இருக்காங்க. அதை மாத்தி அமைக்கிறது ஆண்களாகத்தான் இருக்கிறார்கள்.

  2. பெண்ணுக்கு பெண்ணே எதிரி – 100% உண்மை சிஸ். டீசர் அருமையா இருக்கு😍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *