Skip to content
Home » என் உயிரின் ஜனனம் நீயடி

என் உயிரின் ஜனனம் நீயடி

ஜனனம் 6ஜனனி குளித்து கீழே வர, வீட்டில் உள்ள யாருமே எழுந்திருக்காமல் இருக்க, அன்றைக்கி நேரமாகவே கவிதா ஈஸ்வரனை வேலைக்கு அனுப்பி விட்டு ஈஸ்வரனின் தங்கை சாருமதியுடன் வீட்டிற்கு வந்திருந்தாள்.ஜனனி வாசல் தெளித்து கோலம் போட்டு விட்டு சமையல் கட்டில் தேவையான காய்களை நறுக்கி கொண்டிருக்க, கவிதா சாருமதியை அழைத்து வந்தவள் சேரில் அமர்ந்தவள், “ஏ ஜனனி ரெண்டு காபி எடுத்துட்டு வா”என்று குரல் கொடுக்க…சாருமதி “என்ன அண்ணி அவங்க கிட்ட போய் வேலை வாங்குறீங்க, இனியன் மாமா கிட்ட சொல்லிற போறாங்க”என்று பதறினாள்.கவிதா “அவன் எதுக்கு திட்டுவான், நான் இந்த வீட்டு பொண்ணு. எனக்கு காபி கொண்டு வந்தா அவன் பொண்டாட்டி கௌரவம் ஒன்னும் குறையாது”என்று கூறியவள், கீழே இறங்கி தரையில் அமர்ந்து கால் நீட்டி கொண்டாள்.ஜனனி இருவருக்கும் காபி கொண்டு வர, அவளின் முகத்தில் இருந்த பூரிப்பும் கண்களில் இருந்த மலர்ச்சியும் உதடுகளிலும் கண்ணங்களிலும் இருந்த சிவப்பும் அவர்களின் மகிழ்ச்சியான வாழ்வை கூற அதை கண்டவளுக்கு அங்கமெல்லாம் எறிய, காபியை கையில் வாங்கியவள் “ஏண்டி உனக்கு வெட்கமாவே இல்லையா? என்னமோ எல்லாம் முதல் தடவை நடக்கற மாறி, பூரிச்சு போய் நிக்குற. ஏற்கனவே ஒருத்தன் கூட குடும்பம் நடத்துனவ தானே நீ. எல்லாம் என் தம்பி தலையெழுத்து எச்சை இலைல சாப்பிடணும்னு, அவன் புத்திக்கு உரைக்க மாட்டுதே, ச்சி அருவருப்பா இருக்கு எனக்கே”என்று விடிந்தும் விடியாத அந்த காலை பொழுதிலே அவளின் மனதை காயப்படுத்த, ஜனனியோ கண்ணீரை அடக்க முடியாதவள் அறைக்குள் புகுந்து கொண்டாள்.சாருமதி தங்களிடம் பாசமாக பேசி அரவணைக்கும் அண்ணியின் இந்த அவதாரத்தில் சற்று அதிர்ந்து போயிருந்தாள்.அழுகையை அடக்கி கொண்டே அறைக்குள் நுழைந்தவளின் பார்வை, மெத்தையில் தான் என நினைத்து தலையணையை இறுக்கி கட்டிக்கொண்டு தூங்கும் கணவனை பார்க்க, அவனுக்காக எதையும் தாங்கலாம் என்ற எண்ணம் தோன்ற, கண்களை துடைத்து கொண்டவள் அமைதியாக அமர்ந்திருந்தவளின் மனதில் கவிதா கூறிய வார்த்தைகளே வட்டமடிக்க, ஒரு வேளை இவனும் தன்னை அப்படி தான் நினைக்கிறானோ என்று குழம்பினாள்.இனியன் அசைவதை கண்டவள் வேகமாக எழுந்து சென்று முகத்தை கழுவி விட்டு கண்களை துடைத்து கொண்டு வர,அவன் அவளை கண்டதும் உதட்டை குவித்து முத்தமிடுவது போல் பாவனை செய்ய அவள் தலை குனிந்து கொள்ள, அவள் வெட்கத்தில் குனிந்தாள் என்று அவன் நினைக்க, அவளோ தேவையில்லாத குழப்பத்தில் தலைகுனிந்தாள் என்று அவனுக்கு தெரியவில்லை.அவள் அவனை தாண்டிச்செல்ல முற்பட, அவன் அவளின் கைகளை பிடித்து இழுக்க, அவளோ அவன் மீதே மொத்தமாக சரிய, அவன் அவளின் இதழை தின்று தீர்க்க, அப்போது அழையா விருந்தாளியாய் கவிதாவின் வார்த்தைகள் நியாபகம் வந்து தொலைக்க, அவனிடம் இருந்து வலுகட்டாயமாக பிரிந்தவள் “எதுக்காக இப்படி என்ன டார்ச்சர் பண்றீங்க, அதான் நைட் நீங்க சொன்ன எல்லாம் பண்ணேன் இல்லை. இப்போ என்ன இப்படி பண்றீங்க காலைல. அசிங்கமா இருக்கு”என்று பட்டென்று கூறி விட…அவள் கூறிய வார்த்தைகளில் வெகுவாக காயம்பட்டவன், வேகமாக அவளை விடுவிக்க, எழுந்து தன்னை சரி செய்து கொண்டவள் சமையல் அறைக்கு சென்று விட, இனியனோ அவளின் வார்த்தைகளிலே உழன்று கொண்டிருந்தான்.திருமணமாகிய மூன்றாம் நாளிலே இருவருக்குமான முதல் மன பிசகு. இருவரும் அவரவர் நிலையில் இல்லை. ஜனனி கவிதாவின் வார்த்தைகளில் தான் என்ன செய்கிறோம் பேசுகிறோம் என்று தோன்றாமல் பேசி விட, இவனோ அவளிடம் சம்மதம் வாங்கி தானே வாழ்வை தொடங்கினோம். அவசரப்பட்டு விட்டேனே அவளின் காயத்தை ஆற்றுவதற்கு பதிலாக மீண்டும் அவளை காயப்படுத்தி விட்டேனோ என்று அதிலும் கூட அவளுக்காகவே யோசித்தான்.கவிதாவுக்கு அவள் பேசியது அதிகம் என்று அவளுக்கே தோன்றியதோ என்னவோ, அதற்கு மேல் எதுவும் விரும்பாமல் தன் அறைக்கு சென்று விட்டாள்.ஜனனி அனைவர்க்கும் காபி எடுத்து தந்து விட்டு இனியனுக்கும் எடுத்து செல்ல, அவன் அப்போது தன் குளித்து முடித்து விட்டு கண்ணாடி முன் தன் பணிக்கு தயாராகி கொண்டிருக்க,அவனை பின்னோடு நின்று ரசித்தவளை கண்ணாடியில் கண்டவனுக்கு அவளின் அழுத கண்கள் ஏதோ நடந்திருக்கிறது என்று தெளிவாக காட்டி கொடுக்க, இவர்களை என்ன செய்தால் தகும் என்று ஆத்திரம் தான் தோன்றியது.அவன் கரங்களில் காபியை கொடுத்தவள் அவனின் முகத்தை பார்க்காமல் வெளியே சென்று விட்டாள்.இனியன் வெளியே வர அவன் கண்டதென்னவோ சமைத்ததை டைனிங் டேபிளில் வைத்து கொண்டிருந்த ஜனனியை தான்.ஜனனி என்றழைத்தவனை திரும்பி பார்த்தவளிடம் “டைம் ஆகிடுச்சு கிளம்பி வா, ஸ்கூல் போகணும்” என்று கூற,அவனிடம் தலையாட்டியவள் உள்ளே சென்று கிளம்பி வர, அவளோ நீல நிற காட்டன் புடவையில், வலது கையில் ஒற்றை வளையளிட்டு, மறு கையில் வாட்ச்,நெற்றி வகுட்டில் குங்குமம் மின்ன, கழுத்தில் மஞ்சள் தாலி, நேற்று இரவு இனியன் அணிவித்த இரண்டு பவுன் செயின்,செர்டிபிகேட் பேக் என்று கிளம்பி வந்தவளை இனியன் ரசனையாக பார்க்க புகழினி “அண்ணி அப்படியே அசல் டீச்சர் போலவே இருக்கீங்க, அப்றம் ரொம்ப அழகாவும்”என்று தமிழரசி இடையில் புகுந்து கூற…அறிவழகன் “ரெண்டு பேரும் வந்து உக்காந்து சாப்பிடுங்க முதல்ல”என்று கூறியவருக்கு மறுப்பாக தலையாட்டியவன் “இல்லை ப்பா முதல் நாள் வேலைக்கு போறா, நாங்க கோவிலுக்கு போய்ட்டு அப்படியே சாப்பிட்டுட்டு போய்கிறோம் நீங்க சாப்பிடுங்க”என்றவன் வெளியே செல்ல…ஜனனி நாத்தனார்கள் இருவரிடமும், மாமனாரிடமும் கூறிக்கொண்டு வெளியே வர, இனியன் வண்டியை வேகமாக முறுக்கி கொண்டு அவளுக்காக காத்திருந்தான்.வரும் வழியெல்லாம் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. கோவிலுக்கு வந்ததும் வண்டியை நிறுத்தியவன் உள்ளே செல்ல முயன்றவளை தடுத்து நிறுத்தியவன் அங்கிருந்த பூக்கடையில் பூவை வாங்கியவன் அவளின் கூந்தலில் சூட, அங்கிருந்தவர்களோ அவர்களை அதிசயமாக பார்த்தனர். காக்கி யூனிபோர்ம்ல் மனைவியிடம் இத்தனை அன்பாக நடந்துகொல்பவனை பார்க்க அத்தனை மகிழ்வாய் இருக்க, அங்கிருந்த பூக்கடைக்கார பெண்ணோ “இரண்டு பேருக்கும் வீட்டுல போய் சுத்தி போடுங்க சார், ஊரு கண்ணெல்லாம் உங்க மேல தான்”என்று கூற…சிரித்த முகத்துடன் அந்த பெண்ணிடம் தலையாட்டியவன், அவளின் கரம் பற்றி உள்ளே அழைத்து செல்ல, மனகிலேசங்களை சற்று நேரம் களைந்து நிம்மதியாக சுவாமியை தரிசனம் செய்தவர்கள் வெளியே வர அப்போது இனியனின் போன் அடிக்க சற்று தள்ளி நின்று பேசி விட்டு வந்தவனின் முகத்தில் கடும் கோவம் , அடுத்து ஒரு உணவகத்தில் வண்டியை நிறுத்தி அவளுக்கு உணவு வாங்கி தர, அதை கைகளால் அளந்து கொண்டிருந்தவளை ஆழ்ந்து நோக்கியவன்,”நீ எச்சில் இலையா,சாப்பிடுற இலையான்னு உன் கூட குடும்பம் நடத்துன நான் தான் சொல்லணும். கண்டதுங்க ஏதோ சொல்லுதுங்கனு நீயும் கஷ்டப்பட்டு என்னையும் கஷ்டப்படுத்துனன்ன நைட் பின் விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்”என்று சீரியசாக ஆரம்பித்தவன் காதலில் முடிக்க, அவன் முகத்தை ஏறிட்டு பார்க்க, “சாரு கால் பண்ணி சொன்னா, இப்போ நீ சாப்புடு”என்று கூற…ஜனனி “நான் காலைல ஏதோ கோவத்துல என்ன பேசறோம்னு புரியாம தப்பா பேசிட்டேன் சாரி”என்று கேட்டவளிடம், “உன் சாரி ஒண்ணும் எனக்கு தேவையில்லை, நீ பண்ண தப்புக்கு உனக்கு நிச்சயம் பனிஷ்மென்ட் தருவேன்” என்று கூற, அவளோ கன்னம் சிவக்க குனிந்து நிறைந்த மனதுடன் சாப்பிட தொடங்கினாள்.ஹோட்டலில் இருந்து கிளம்பியவன் அவளை பள்ளியில் இறக்கி விட்டு விட்டு காவல்நிலையம் சென்றான்.ஜனனி உள்ளே சென்றதும் காலையில் இருந்த மனநிலை முற்றிலும் மாறி அவளும் குழந்தையாய் மாறி அவர்களுடன் அளவளாவ தொடங்கினாள்.அன்று நாள் முழுவதும் ஜனனி உற்சாகமாகவும், மகிழ்வுடனும் வேலை செய்தாள். மாலை நான்காகிட பிள்ளைகள் அனைவரும் மணி ஒலித்ததும் எழுந்து அவரவர் பெற்றோருடன் வீட்டுக்கு செல்ல, ஜனனி வெளியே வர, அவளுக்கு அந்த ஊரில் எதுவும் தெரியவில்லை. காலை இனியன் உடன் வந்த போதும் கூட, காலை நடந்த நிகழ்வுகளால் வழியை கவனிக்க மறந்தாள்.இப்போது எப்படி செல்வது என்று கைகளை பிசைந்து கொண்டு நின்றவளின் முன் ஈஸ்வரனின் வண்டி வந்து நின்றது.ஈஸ்வரனை கண்டதும் முகம் மலர்ந்தவள் அவனிடம் வர, “தங்கச்சி மா மாப்பிளைக்கு ஏதோ அவசர வேலையாம் டா… அதான் என்ன அனுப்பி வச்சான், வா” என்று அழைத்தான்.தலையாட்டி மறுத்த ஜனனி “இல்லை அண்ணா, நான் வரல நீங்க எனக்கு ஆட்டோ எதும் இருந்தா பிடிச்சு குடுங்க, நான் போய்க்கிறேன்”என்று கூற…ஈஸ்வரன் “ஏன் மா நானும் உனக்கு அண்ணன் தான். சாரு எனக்கு எப்படியோ, அதுபோல தான் நீயும் வாடா போகலாம்”என்று கூறியவனை நெகிழ்ந்து போய் பார்த்தவளுக்கு எதிர்த்து பேச மனம் வராததால், அவனின் வண்டியில் ஏறியவள் வண்டியின் பின்புறத்தை இறுக்கமாக பிடித்துக்கொண்டு அமர்ந்தாள்.ஈஸ்வரன் வழியில் வரும்போது,”ஜனனி மா, காலைல கவிதா உன்கிட்ட அப்டி பேசுனது மன்னிக்க முடியாத தவறு தான் புரியுது. நான் அவளை கண்டிச்சு வைக்கிறேன் டா. உன்னை பத்தி சிவகாமி அத்தை இல்லாததும் பொல்லாததும் சொல்லி அவங்க மனசுல விஷத்தை கலந்துட்டாங்க, நிச்சயம் அவங்க ரெண்டு பேரும் உன்ன புரிஞ்சுப்பாங்க, அவங்களுக்கு எல்லாம் தெரிஞ்சா போதும், அவங்கள விட உனக்கு நல்லது நினைக்கறவங்க யாருமே இல்ல. கால ஓட்டத்தில் எல்லா காயமும் கண்டிப்பா ஆறும்.அதுவரை கொஞ்சம் அத்தை பேசறத பொறுத்துக்கோ மா. அதுக்காக அவங்களுக்கு அடிமையா இருக்க, சொல்லல. பொறுத்தார் பூமி ஆள்வார் அத புரிஞ்சு நடந்துக்கோமா”என்று ஒரு நல்ல அண்ணனாய் கூறியவனின் அறிவுரைகளை கேட்டவள் மௌனமாக தலையாட்டி கொண்டாள்.ஈஸ்வரன் சிறு வயது இனியனின் சேட்டைகளை பற்றிபேசிக்கொண்டு வர,ஜனனியோ தன்னவனை நினைத்து சிரித்து கொண்டு வர, வண்டி வீட்டின் முன் நிற்க, ஜனனி ஈஸ்வரனின் தோளில் கைவைத்து கீழ் இறங்க, அது மாடியில் காய்ந்த துணிகளை எடுத்து கொண்டிருந்தகவிதாவின் கண்களில் தவறாமல் விழ, கோவம் கண்ணை மறைக்க துணிகளை அள்ளிக்கொண்டு ஆங்காரமாக வந்தவளின் கண்களில் அப்போது தான் நுழைந்த ஜனனி எதிர்ப் பட்டாள்.ஈஸ்வரன் அவளை இறக்கி விட்டுவிட்டு அருகிலிருக்கும் கடைக்கு சென்று விட்டு வருகிறேன் என்று கூறி சென்று விட்டான்.கவிதா ஜனனியை அவளின் கன்னத்தில் அறைந்து தள்ளி விட, சுவற்றில் மோதி நின்றவளை தாங்கி பிடித்தாள் தமிழரசி.அறிவழகன் “கவிதா எல்லையை மீறி நடந்துக்காத, இப்போ எதுக்கு அந்த பொண்ணை அடிச்ச”என்றவரின் கேள்விகளை உதாசீனப்படுத்தியவள், தமிழரசியை தள்ளி விட்டு ஜனனியை பிடித்தவள் “ஏண்டி ஒருத்தரையும் விட மாட்டியா நீ? என் தம்பி பத்தலையா உனக்கு இப்போ என் புருசனும் வேணுமா? ச்சி நீயெல்லாம் என்னடி ஜென்மம் புருஷன் செத்து ஒரு வருசம் ஆகல. அதுக்குள்ள இன்னொருத்தன தேடிகிட்ட, முதல்ல என் தம்பிய எங்ககிட்ட இருந்து பிரிச்ச, இப்போ என் புருஷனா? எதுக்குடி இப்படி ஆம்பளைங்களுக்கு அலையுற,பிச்சைக்கார நாயே வெளியே போடி இங்கருந்தா இன்னும் என்ன அசிங்கம்லாம் பண்ணுவியோ? என்றவள் ஜனனியின் தலைமுடியை கொத்தாக பற்றி வெளியே இழுத்து வந்து வெளியே தள்ள, அவள் விழுந்ததென்னவோ இனியனின் மார்பில் தான். கவிதா பேசும்போது வந்தவன் அவளின் பேச்சில் கோவத்தை கட்டுப்படுத்த முடியாமல் கைகளை முறுக்கி கொண்டு முன்னேற, அப்போது தான் ஜனனியை கவிதா வெளியே தள்ளியிருந்தாள்.இனியனுக்கு பின் கண்கள் சிவந்து ருத்ரமூர்த்தியாய் நின்றிருந்த ஈஸ்வரனை கண்டதும் கை கால்கள் சில்லிட்டு உடல் நடுங்கி போனவள் வேகமாக தாயிடம் சென்று நின்று கொள்ள, இனியன் ஜனனியை அணைத்தவாறே உள்ளே அழைத்து வர, அதற்கு முன்பு ஈஸ்வரன் பாய்ந்து சென்று கவிதாவின் தலை முடியை பற்றி அவள் கன்னங்களில் அடியை இடியென இறக்கியிருந்தான்.அவன் அடியில் நிலை தடுமாறி கீழே விழுந்தவளின் சடையை கொத்தோடு பற்றி தூக்கியவன் “நீயெல்லாம் ஒரு பொம்பளையாடி, நாக்கு கூசலையா உனக்கு?.. இப்படியெல்லாம் பேசுறியே , நீயும் ஒரு பொண்ணுதான, அந்த புள்ளைய இவ்ளோ கேவல படுத்துற அதுவும் அண்ணன் கூப்பிடுற என்ன வெச்சு நீ எல்லாம் என்ன பொம்பளை டி”என்றவன் ஆத்திரம் தாங்காமல் அவளை அடிக்க, அன்னபூரணி மட்டுமே தடுக்க செல்ல, அவளிடம் கை காட்டியவன் “உங்க பொண்ணு ஜனனிய அடிக்கும் போதும் திட்டும் போதும் எப்டி சிலை மாறி அமைதியா இருந்திங்க அப்படியே இருக்கனும். இல்லை அத்தைனு மரியாதைஎல்லாம் கொடுக்க மாட்டேன் இருக்கிற கோவத்துல “என்று கை நீட்டி எச்சரித்தவன் கவிதாவை போட்டு வெளுத்து வாங்க, இனியன், அறிவழகன் ஒருவருக்குமே தடுக்க தோன்றவில்லை. அப்போதும் ஆத்திரம் அடங்காதவன் ஹேங்கரில் மாட்டியிருந்த பெல்ட்டை எடுத்து வந்து அடிக்க தொடங்க, அப்போதும் யாருமே தடுக்காமல் இருக்க ஜனனி அன்பின் பிடியிலிருந்து வந்தவள் ஈஸ்வரனின் கைகளில் இருந்த பிடுங்கி வீசியவள் “அடிக்காதீங்க அண்ணா,போதும் விட்ருங்க ப்ளீஸ்”என்று கூற…ஈஸ்வரன் “ஏய் பாத்தியாடி, இதான் அந்த பொண்ணோட குணம் நீ அவளை எவ்ளோ கேவலமா பேசி அவகிட்ட அசிங்கமா நடந்துகிட்ட பிறகும் கூட உன்ன காப்பாத்த நினைக்கற பாரு அதான் அவ உன்ன எல்லாம்”என்று கூறியவனை வெறிக்க பார்த்தவள்…ஜனனியை பார்த்து,”என்னடி எல்லார்கிட்டயும் நல்ல பேர் வாங்கறதுக்காக நடிக்கறியா? மானம் கெட்டவளே உன்னோட கரிசனம் ஒன்னும் எனக்கு தேவை இல்லை. போய் சாவு டி எங்கயாச்சும்”என்று மீண்டும் வெறி பிடித்தவள் போல் ஆங்காரமாய் கத்தியவள் அவளின் கழுத்தை பிடிக்க வர, அவளின் கையை தட்டி விட்ட ஈஸ்வரன் கவிதாவை மீண்டும் அடிக்க, அப்போது தான் கவிதாவே உணர்ந்தாள். தன் தந்தை, தம்பி, தங்கைகள் ஒருவரும் தனக்காக பேசவில்லை என்பது புத்தியில் உரைக்க, அனைவரையும் பார்க்க அவர்களின் பார்வையில் இவளுக்காக வெறுப்பு மட்டுமே இருந்தது.கவிதாவுக்கு தன் மீது உள்ள தவறு புரிந்தாலும் அத்தை ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை.ஈஸ்வரன் “இப்போ நீ மரியாதையா இங்கருந்து கிளம்புற, மறுபடியும் நானா சொல்ற வரை நீ இங்க வர கூடாது . அப்டி மீறி வந்த அதான் உனக்கான கடைசி நாளா இருக்கும்” என்று அவளை மிரட்டியவன் ஜனனியிடம் வந்து “அவ பேசுனதுக்கு நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன் மா” என்று மன்னிப்பு வேண்டியவன் அவளின் முகத்தை காண கூட, சங்கட பட்டவன் கவிதாவின் கரங்களை பற்றி தரதரவென அழைத்து சென்றான்.ஜனனி எதுவும் பேச தோன்றாமல் கண்ணீர் மல்க, தலையில் வடிந்த ரத்தத்தை கூட, துடைக்க தோன்றாமல் நிற்க, புகழினி “அச்சோ அண்ணி தலைல ரத்தம் வருது”என்று கூறிய போது தான் இனியனும் ஜனனியை பார்க்க, அவளோ பேசிய வார்த்தைகளின் வலி தாங்காமல் நின்றிருந்தவளுக்கு, அவள் தள்ளி விட்டதால் ஏற்பட்ட காயத்தின் வலி தெரிய வில்லை.அனைவரிடமும் நான் பாத்துக்கிறேன் என்று அழைத்து வந்த இனியன், அறைக்குள் அவளை கூட்டிட்டு வந்து கட்டிலில் அமர வைத்தவன், முதலுதவி பெட்டியை எடுத்து வந்து பஞ்சை வைத்து காயத்தை துடைத்து மருந்திட, காயத்தின் எரிச்சலில் “ஸ்ஸ்”என்று முகம் சுருக்கியவளிடம் “ரொம்ப வலிக்குதாடா”என்று கேட்க..ஜனனி “அன்பு நான் எதுவும் பண்லடா, நான் ஆட்டோ தான் பிடிச்சு குடுக்க சொன்னேன். ஆனா அண்ணா தான் உனக்கு வேலை இருக்குனு கூட்டிட்டு வர சொன்னதா சொன்னார். இப்டிலாம் நடக்கும் னு தான் நா வரல சொன்னேன். என்ன நம்புற தானே, நான் இப்படி ஆம்பளைக்கு அலையுறவளா”, என்று கேட்டு கதறி அழ…அவளின் அழுகையில் கண்கள் கலங்க அவளை அணைத்து கொண்டவனுக்கு கவிதாவை கொன்று விடும் எண்ணம் கூட வந்து போனது,”எல்லாம் என்னால தான் மா, அவசரமா வேலை இருக்குன்னு கால் வந்ததாலதான் நான் மாமாவ அனுப்புனேன். அப்புறம் வேலை கான்செல் ஆகிடுச்சு, அதனால் தான் நீங்க வீட்டுக்கு வந்திருப்பிங்கனு இங்க வந்தேன்”என்று அவனின் விளக்கத்தை கொடுக்க…அப்போது அறைகதவு தட்டப்பட, ஜனனியை கட்டிலில் படுக்க வைத்து விட்டு கதவை திறக்க, அங்கே அறிவழகன் நின்றிருக்க,”அப்பா வாங்கப்பா”என்று அழைத்தான்.அறிவழகன் உள்ளே வந்தவர், ஜனனியை பார்க்க தலையில் காயத்துடன் கண்களில் நீருடன் படுத்திருந்தவளை காணும்போதே,அவருக்கு கண்கள் கலங்கி போக,”ஜனனி மா”என்று அழைத்தார்.அவளோ எழுந்திருக்க,”இல்லமா வேணாம் ரெஸ்ட் எடுத்துக்கோ, கவிதா பண்ணது மன்னிக்க முடியுற தவறு இல்லை. இருந்தாலும் அதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன் மா”என்று கையெடுத்து கும்பிட்டார்.அதில் பதறி போனவள் “விடுங்க மாமா, அதெல்லாம் நான் பெருசா எடுத்துக்கல, எல்லாம் எனக்கு பழகி போனது தான்”என்று கூறியவளின் வார்த்தைகளில் இருந்த வலி தகப்பன், தனையன் இருவரையுமே சிறிது அசைத்து தான் பார்த்தது.இனியனிடம் பார்த்து கொள்ள சொல்லி விட்டு வெளியே வந்தவர் தமிழரசியிடம் அவர்களுக்கு உணவு அறைக்கு கொண்டு செல்ல சொல்ல, அன்னபூரணி “ஏன் மகாராணி இங்க வர மாட்டாங்களோ, அவ எல்லாம் நல்லாருப்பாளா என் பொண்ண இங்க வராத அளவுக்கு பண்ணிட்டாளே”என்று சாபமிட …அறிவழகன் “இத்தனை வருசத்துக்கப்புறம் உன்ன அடிச்சதா இருக்க வேண்டாம்னு நினைக்கறேன்” என்று கர்ஜித்தவரின் குரலில் நடுங்கி போனவர் எதுவும் பேசாமல் அமைதியாய் சமையலறைக்குள் சென்று விட்டார் .இனியன் தமிழ் கொண்டு வந்த உணவை, ஜனனிக்கு கட்டாய படுத்தி உணவை ஊட்டி உறங்க வைக்க, அவளின் தலையை தடவி கொடுத்தவாறே அவனும் அவளை அணைத்து கொண்டு உறங்கினான்.

8 thoughts on “என் உயிரின் ஜனனம் நீயடி”

  1. CRVS 2797

    என்னைக் கேட்டா மதிப்பு இல்லாத இடத்துல இருக்கிறதும் தவறு, சாப்பிடறதும் தவறு.

  2. Avatar

    கவிதா வாயே திறந்தாலே இப்படிதான் கேவலமா பேச வரும் போல!!… என்ன ஜென்மமோ???

  3. Avatar

    கவிதா ஒரு பெண்ணா என்று தெரியல மனசுல இரக்கமே இல்லாதவளா இருக்கா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *