Skip to content
Home » என் சுவாசம் உன் வாசமாய் – 27

என் சுவாசம் உன் வாசமாய் – 27

அத்தியாயம் – 27

அவள் வேறு வழியே செல்ல இவன் வேறு வழியாகச் சென்றான். அவனுக்குப் பொறுப்பு ஏற்கும் முன் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என எண்ணியபடி கோயிலின் சன்னதியில் நிற்க, அவனுக்கு முன் அங்கு நின்றிருந்தாள் அந்தப் பெண். பின்னால் இருந்து யாரோ என எண்ணியபடி நின்றவன் சாமியைக் கும்பிட்டு வேண்டினான். 

‘ஆண்டவா… இன்னும் எவ்ளோதான் எங்களுக்குச் சோதனை காலம். நான் நினைச்ச மாதிரி கல்யாணம் நடக்கணும். இந்தர் லைஃப்ல நல்லது நடக்கனும். அவன் நான் எடுத்த முடிவை ஏத்துக்கனும். அதுக்கு நீங்களும் உங்க ஆசீர்வாதமும் எங்க கூட இருக்கனும். எங்களால கயலுக்கு எந்த விதமான கஷ்டமும் வந்துடக் கூடாது. கூட இருந்து அவளுக்கு எதையும் செய்ய முடியாத நிலையில இருக்கேன். அந்தக் கொடுங்காரனுக்குப் பொண்ணாப் பொறந்து அவ பட்ட கஷ்டம் போதும்… இனிமேலும், அவளைக் கவலை இல்லாமல் இருக்க வைக்கனும்’ என்று வேண்டியவனின் கண், முன்னே பார்க்க அவள்தான் பக்கவாட்டில் திரும்பி நின்றிருந்தாள்.

ஐயர் அவன் மனமுருகி வேண்டுவதைப் பார்த்து அவளிடம் பிரசாதத்தைக் கொடுத்துச் சென்று விட அவள் அப்போது தான் அவனைப் பார்த்தாள். அவனது முகம் படு சோகமாய் இருப்பதைப் பார்த்தவள் அமைதியாக நின்று விட்டாள்.

அவன் கண் திறக்க அவனிடம் திரும்பி கையை நீட்டினாள். அதில் பிரசாதம் இருக்க அதைப் பார்த்தவன், ‘என்ன? இந்தப் பொண்ணு பிரசாதம் கொடுக்குது, இதையும் எவனாவது பார்த்து நம்மளைத் தப்பா நினைக்கவா?’ என்று எண்ணியபடி அவளது பின்னே பார்க்க ஐயர் சென்று விட்டிருந்தார். 

அவனது நினைப்பை உணர்ந்தவள், “ஐயர் நீக்கி ஈ செப்பி இச்சிந்தாரு சார்” (ஐயர்தான் உங்ககிட்டக் கொடுக்கச் சொல்லிக் கொடுத்தார் சார்) என்று கூற,

அவள் பேசியது புரியா விட்டாலும் அவளது சைகை மொழி புரிய, ‘சரி, சாமி பிரசாதம் தானே’ என்று அதை எடுத்து வைத்துக் கொண்டான். அவன் எடுத்ததும் அவள் அங்கிருந்த தூணில் கொட்டிவிட்டுப் பிறகுதான் அவள் எடுத்து வைத்துக் கொண்டாள்.

‘ரொம்பத்தான்’ என்று எண்ணிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அதன்பின் அவனுக்கு வேலைகளைச் சொல்ல அங்கு ஒரு ட்ரான்ஸ்லேட்டரும் இருந்தார். அவரிடம் கூறி இன்று அவனுக்குத் துணையாக வர வேண்டிய ஆடிட்டரை நேரே இந்தக் கோவிலின் பொறுப்பாளரின் இல்லத்திற்குச் சென்று விவரங்களை வாங்கிக் கொண்டு, மதியம் தங்கியிருக்கும் அறைக்கு வரச் சொன்னவன் மற்ற விவரங்களைச் சரி பார்க்கத் துவங்கினான். அவனுக்கு ஏற்படும் சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டவன், அதில் இருக்கும் சிக்கல்களை எவ்வாறு சரி செய்து கணக்குகளை ஆவணப்படுத்துவது என்று யோசிக்கத் தலைவலியே அதிகமானது. மீதியை நாளை பார்க்கலாம் என்று எண்ணியவன் அவர்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினான்.

எல்லோரும் அவனையே குறுகுறுவெனப் பார்ப்பது போல் அவனுக்கு ஒரு உணர்வு ஏற்பட அவனோ, ‘என்னடா இது? எல்லாரும் இப்படிப் பார்க்கிற மாதிரி இருக்கே’ என்று யோசித்தபடி நடந்து வீடு வந்து சேர்ந்தான்.

அங்கு வெளியிலேயே யசோதா நிற்பதைப் பார்த்து என்னவோ ஏதோ எனப் பதறி, “என்னம்மா? என்ன ஆச்சு?” என்று கேட்க, 

“மீர்னி வெதுக்குனி ஒக்க அம்மாயி ஒச்சிந்தி சார்… மீர்தா ரம்மனி செப்பிதிரினு செப்பிந்தி சார்… அதினும் பெட்டி மஞ்சம்தோ ஒச்சுன்டாய் சார்…” (உங்களைத் தேடி ஒரு பொண்ணு வந்து இருக்கு சார்… நீங்கதான் வரச் சொன்னீங்கனு சொன்னுச்சு சார்… அதும் பெட்டி படுக்கையோட வந்து இருக்கு சார்) என்று கூற,

‘அய்யோ, இவங்க வேற என்னை டார்ச்சர் பண்றாங்களே… அந்த ட்ரான்ஸ்லேட்டரை எனக்கு இங்கேயும் கொடுத்து இருக்கலாம். இவங்களுக்கு சைகை காட்டியே நான் பேச மறந்துடுவேன் போல’ என்று நொந்தவன்,

“வாங்க…” என்றவன் வாசலில் இருந்த செருப்பைப் பார்க்காமல் உள்ளே நுழைந்தான்.

அவரிடம் புலம்பிக் கொண்டே, “நீங்க பேசுறது எனக்குப் புரியல, நான் பேசுறது உங்களுக்குப் புரியல. நான் புரிய வெச்சு… உங்களுக்கு நான் செய்யுற சைகை புரிஞ்சு… அச்சோ முடியலமா?” என்று புலம்பியபடி வந்தவன் அங்கிருந்த பெட்டியைப் பார்த்து,

“ஓஓ… அந்த ஆடிட்டரும் வந்துட்டாரா? அதை தான் சொன்னீங்களா?” என்று பெட்டியைக் காட்டி அவன் கேட்க அவர் ஆம் என்று தலையாட்டியதால் சரியெனத் திரும்பியவன் ரூமின் உள்ளே இருந்து வந்தவளைக் கண்டு அதிர்ந்தான்.

‘இந்தப் பொண்ணு… அச்சோ! இவங்களா என்கூட வொர்க் பண்ணப் போற கோ-ஆடிட்டர்? அதுவும் இங்கே தங்கியா?’ என்று நினைத்தவனுக்குத் தலைவலியே உருவானது. அவளுக்கு இவன்தான் இஷான் என்று ஏற்கனவே தெரிந்ததால் அமைதியாக வந்து அவன் எதிரில் நின்றாள்.

“ஹலோ சார், நா பேரு சஹானா… நேனு இக்கட கடப்பா பக்கலோ உண்டானு. இப்புடு மீதோ பணி செய்டானிக்கு ஒச்சேனு” (ஹலோ சார்… என் பேர் சஹானா, நான் இங்கப் பக்கத்தில் கடப்பால இருக்கேன். இப்போ உங்ககூட வொர்க் பண்ண வந்து இருக்கேன்) என்று கூற,

“ஆண்டவா! கஷ்டம்… இவங்களும் தெலுங்கா? இப்போ நான் ரெண்டு பேர்கிட்டச் சைகை பாஷை பேசனுமா? இஷா, உன் நிலமை ரொம்ப மோசம்டா” என்று புலம்ப யசோதாவோ புரியாமல் பார்க்க,

சஹானாவோ பக்கெனச் சிரித்து விட்டாள்.

“அதினா ஏமி செப்பேடோ தெள்ளிதி, ஈ பாப்ப இட்ட நவுத்துந்தி” (என்ன சொன்னாருனு தெரியலையே, இந்தப் பாப்பா இப்படிச் சிரிக்குதே?) என்று அவர் புலம்ப,

‘இப்போ நான் என்ன சொன்னேன்னு இப்படிச் சிரிக்குது இந்தப் பொண்ணு’ என்று யோசனையோடு அவளைப் பார்க்க அவளோ யசோதாவிடம்,

“லேதம்மா, இப்புடுனிந்தி நாதோ கூட சன்ஜல மாட்லாடாலனி விலாபிஸ்தாரு” (இல்லீங்கம்மா… இனி என்கிட்டயும் சைகை பாஷையில தான் பேசனுமோனு பொலம்புறாரு) என்று கூற யசோதாம்மா சிரிக்க அவனோ ஆச்சரியமாய் பார்த்தான்.

“ஏங்க… அப்போ உங்களுக்குத் தமிழ் தெரியுமா?” என்று அவன் ஆச்சரியமாய் கேட்க,

“தெரியும் சார், தமிழ்நாடு தான் சொந்த ஊர். இது பொழப்பு தேடி வந்த ஊர்” என்று கூற,

“ஐயம் சோ சாரி… எனக்குத் தெலுங்கு தெரியாது. அதனால தான் உங்களுக்குத் தமிழ் தெரியாதோனு நினைச்சுட்டேன். சாரிங்க… ஐ..ஐயம் இஷான்” என்று கூற அவனுக்குக் கை குலுக்க அவள் கையை நீட்ட அவனும் மரியாதை நிமித்தம் கை குலுக்கினான்.

“தம்புடு போஜனம் ரெடி ஆயிந்தி, இதுரு ஒஸ்த்தே தின்னேச்சோம்” (தம்பி சாப்பாடு ரெடி, ரெண்டு பேரும் வந்தீங்கனா சாப்பிடலாம்) என்று யசோதா அழைக்க,

இஷான் மீண்டும் புரியாமல் பார்க்க அவர் சொன்னதைச் சொல்லியவளிடம், “ரொம்ப தேங்க்ஸ்ங்க… நீங்க சொல்லலைனா  நான் இவங்ககிட்ட மினி பரதநாட்டியமே ஆட வேண்டி இருக்கும்” என்று கூற அவள் அழகாகச் சிரித்தாள். அந்தச் சிரிப்பு அவனுக்குக் கயலை நியாபகப் படுத்த, இப்போது அவளது நிலை தெரியாமல் தவித்தவன் முகம் நொடியில் சோகமாய் மாறிவிட,

“சாரி சார், நான் சும்மாதான் சிரிச்சேன். உங்கள ஹர்ட் பண்ணனும்னு இல்ல” என்று வருந்த அப்போது தான் தன் தவறை உணர்ந்தவன்,

“அச்சோ சாரிங்க… நீங்க சிரிச்சதுக்கு இல்ல. இது வேற ஒரு விஷயம், அதை யோசிச்சேன். ஐயம் சாரி” என்று கூறிவிட்டு இருவரும் சாப்பிட அமர யசோதா பரிமாறவும் வேலையைப் பற்றிப் பேசிக்கொண்டே இருவரும் சாப்பிட்டு முடித்தனர்.

அன்று முதல் அவனுக்கு வீட்டில் ட்ரான்ஸ்லேட்டர் வேலையைச் செவ்வனே செய்தாள் சஹானா.

சிறிது நேரத்திலேயே இருவரும் இலகுவாகப் பழகும் அளவுக்கு நண்பர்கள் ஆகினர். இந்தர் அடிக்கடி ஃபோன் பண்ணுவான், கயலைப் பற்றிய தகவல் கிடைத்ததா எனக் கேட்க. ஆனால் கிடைக்கவில்லை என்றே கூறிக் கொண்டு இருந்தான். அந்த நேரங்களில் அவனது முகம் வாடியிருப்பதைப் பார்த்த சஹானா அவனிடம் பேசுவாள்.

“அது என்ன சார்? அடிக்கடி ஃபோன் வந்தா மட்டும் சோகமா ஆகிடுறீங்க?” என்று கேட்க,

“அப்படிலாம் ஒண்ணும் இல்லீங்க… கொஞ்சம் பர்ஸனல் இஷ்யூஸ்… அதான்… ரொம்பப் பொறுமையா போக முடியல” என்று கூற அவனது பர்ஸனல் என்ற வார்த்தையில் அவள் அமைதியாகி விட்டாள்.

“ஓகே சார்… ரொம்ப ஸ்ட்ரெஸ் எடுத்துக்காதீங்க. எல்லாம் சரியாகிடும்னு நம்புங்க” என்றுவிட்டு எழுந்து சென்றாள். அதன்பின், அவனது விஷயத்தில் அவள் தலையிடுவதில்லை. இப்படியே ஒரு மாதம் கடந்துவிட இவர்களைப் பார்த்தவர்கள் அனைவரும் இவர்கள் காதலிப்பதாகவே நினைத்துக் கொண்டனர்.

அன்றைய தினம்…

ஒரு சுமோ வந்து நின்றது அவர்களின் ரூம் அருகே. அப்போது தான் சஹானா வீட்டுக்கு வந்திருந்தாள். வேலையை முடித்து இஷானிடம் கூறிவிட்டு வந்திருந்தாள். சற்று உடல்நிலை சரியில்லை என்று. அதனால், அவளது வேலையைத் தனதாக்கிக் கொண்டவன் அவளை வீட்டுக்கு அனுப்பி இருந்தான். ஆனால், அவளது கண்கள் அடிக்கடி கலங்கியபடி இருந்தது. அதனைக் கவனித்தாலும் எதுவும் கேட்க முன்வரவில்லை அவன். உடம்புக்கு ஏதோ பிரச்சனை என்று எண்ணியவன் அப்படியே விட்டு விட்டான்.

வீட்டுக்கு வந்தவளுக்கு தலைவலியோடு சேர்த்து அன்றைய தினம் வந்த ஃபோன் கால் கொடுத்த பயமும் சேர அவள் முகத்தைப் பார்த்த யசோதாம்மா அவளுக்குச் சூடாகக் காபி போட்டுக் கொண்டு எடுத்து வர உள்ளே சென்றார். அந்நேரம் வண்டி வந்து நிற்க அதிலிருந்து இறங்கினர் ஏழெட்டுப் பேர்.

கூடவே ஒரு ஐம்பது வயதுப் பெண்மணி. இறங்கியவர்களில் இருந்த ஒரு உயரமான மனிதன், “ஹேய் சஹானா, பைட்டக்கி ராவே” (ஹேய் சஹானா, வெளியே வாடி) என்று கத்த, திடுக்கிட்டு எழுந்தாள் சஹானா. அவளுக்கு உடலெல்லாம் நடுங்கியது. பதட்டமாய் எழுந்து வெளியே செல்ல எத்தனிக்க, அவளது பதட்டம் சுத்தமாய் நடக்க விடவில்லை.

“பைட்ட ராவே அக்கட மேனமாமன்த்தோ பென்ட்லி, ஒத்தனி பாரி ஒச்சேஸி ஈட எவுடோ ஒக்டு ஜதைல உண்டாவா சிக்குலேக்கனி பருவு லேதாவே ராவே பைட்டக்கி… ஏடவே வாடு” (வெளியே வாடி.. அங்க தாய்மாமனோட கல்யாணம் வேணாம்னு ஓடி வந்துட்டு இங்கே எவனோ ஒருத்தன் கூட ஒண்ணாத் தங்கி இருக்கியா? வெட்கமா இல்ல, மானங்கெட்டவளே! வாடி வெளியே… எங்கடி அவன்?) என்று மீண்டும் கத்த, குரல் கேட்டு வெளியே வந்த யசோதாம்மா சஹானாவின் பதட்டத்தை உணர்ந்து உடனடியாக இஷானுக்கு அழைத்து விட்டார்.

“சார், ஈட எவுரோ சஹானா அம்மாய்த்தோ விவாதம் செய்டானிக்கி வச்சாரு சார்… தொந்தரகா ரண்டி சார்…” (சார், இங்கே யாரோ சஹானா அம்மாகிட்ட தகராறு செய்ய வந்து இருக்காங்க. சீக்கிரம் வாங்க சார்) என்று பதட்டமாய் கூற, அவர் பேசியது புரியா விட்டாலும் சஹானா மற்றும் பதட்டமான பேச்சில் ஏதோ என்று உணர்ந்தவன் உடனடியாகக் கிளம்பினான்.

1 thought on “என் சுவாசம் உன் வாசமாய் – 27”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *