Skip to content
Home » என் சுவாசம் உன் வாசமாய் – 28

என் சுவாசம் உன் வாசமாய் – 28

அத்தியாயம் – 28

அவசர அவசரமாக இஷான் கிளம்பி வருவதற்குள், அங்கு வந்திருந்த கும்பல் சஹானாவை ஒரு வழி செய்து இருந்தனர். கூடியிருந்த அனைவரும் நின்று வேடிக்கை பார்த்தனரே தவிர உதவ வரவில்லை.

நடுங்கி, எழுந்து வெளியே வர இருந்தவளை உள்ளே வந்து அவளைத் திட்டியபடி இழுத்து வந்தார், சஹானாவின் தாய். அந்தக் கும்பலுடன் வந்தவர்.

அவர் கடப்பாவில் கல்குவாரியின் ஓனர், ஜக்கம்மா… அங்கு இருக்கும் ரெளடிகளுக்குச் சிம்ம சொப்பனம்… ஆனால் மகளுக்கு மட்டும் பாசமான தாயாய் இருந்தார். அவளைப் படிக்க வைத்து கணக்கு வழக்கைப் பார்க்க வைத்தது எல்லாம், நாளை பொறுப்பைத் தன் தம்பியிடம் ஒப்படைத்தால் இருவரும் சேர்ந்து தனது சாம்ராஜ்யத்தைக் காத்து நிற்பர் என்று எண்ணியது எல்லாம் வீணாய் போனது, அவள் அவரது தம்பியை வேணாம் என்று கூறிவிட்டு ஊரை விட்டு ஓடிவர.

அதன்பின் அவள்மேல் கொலை வெறியே உண்டாக, அவளை எங்கெங்கோ தேடி இப்போது கண்டு பிடிக்க அவள் இங்கு எவனோ ஒருவனைத் திருமணம் செய்து தங்கி இருக்கிறாள் என்ற செய்தி தவறாகக் கிடைக்கப் பெற பெற்ற மகளையே கொல்லும் அளவிற்குக் கோபம்.

வந்தவர் தன் மகளைப் பார்க்க, அவ்வளவு வெறியை மனதில் கொண்டு நேரே அவளது முடியைக் கொத்தாகப் பற்ற, அவரைத் தடுக்க வந்த யசோதாம்மாவை அடித்துக் கீழே தள்ளிவிட்டு அவளை இழுத்துக் கொண்டு வெளியே வந்தார்.

“ஏம்வே ஓடுகால் குக்கா… நின்னி சதுவு பெட்டி காட்டாகேசு, சூடு பெட்டிந்தி அன்னி நீ எவுடோ ஒக்கடனி பென்ட்லி செய்டானிக்கா? நா தம்புடுனீ பென்ட்லி சேசுனி மா சாம்ராஜ்யனி காப்பாடானிக்கி… காணி… நூ எவுடு கூடத்தோனோ ஜீவிதம் சேஸ்த்துன்னாவ? எந்த அஹங்காரம்வே நீக்கு?” (ஏன்டி, ஓடுகாலி நாயே… உன்ன நல்லாப் படிக்க வெச்சு கணக்கு வழக்குப் பார்க்க வெச்சது நீ எவனோ ஒருத்தனைக் கல்யாணம் பண்ணி வாழவா? என் தம்பியைக் கல்யாணம் பண்ணி என் சாம்ராஜ்யத்தைக் காப்பாத்த. ஆனா நீ? வேற எவன் கூடவோ சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்க? எவ்வளவு திமிர் உனக்கு?) என்று திட்டியபடி அவளை இழுத்து நாலு அறை விட்டவர் அவளைக் கீழே தள்ள அவளை ஓடிவந்து தாங்கினான் இஷான்.

அவசரமாகக் கிளம்பியவன் போலீஸ்க்கு இன்பார்ம் செய்துவிட்டு ஓடிவர, அவன் தூரத்தில் இருந்து பார்த்தது அந்தப் பெண்மணி சஹானாவை இழுத்துக் கொண்டு வருவதை தான். எல்லோரும் வேடிக்கை பார்க்க நிற்பதைக் கண்டவனுக்குக் கோபம் வர, ஓடி வருவதற்குள் அவர் அவளைக் கீழே தள்ள… அவரைத் தடுக்க வந்தான் அவரது தம்பி. அவன் தடுப்பதற்குள் அவர் அவளைத் தள்ளிவிட அவளை விழாமல் பிடித்தான் இஷான். அவன் வந்ததால் கீழே விழுந்த யசோதாவும் கதவருகே நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டார்.

அவன் அவளைத் தாங்கியதைப் பார்த்த ஜக்கம்மா அவன்தான் அவளது கணவன் என நினைத்து அவனிடம் பாய்ந்தார்.

“ஏரா, நான் கூந்தர்னீ நாத்தோ வேரு சேஸி பென்ட்லி சேஸினு அனந்தகா உண்டாலான் அன்கொன்டிவா? சஜிவத்தோ ஒதல்த்தாதானேரா அனந்தங்க உண்டுவு? அக்கட மா தம்புடு அந்முலேனி உண்டாடு மீக்கி ஏம்ரா அனந்தமு?” (டேய்… என் பொண்ணை என்கிட்ட இருந்து பிரிச்சுக் கல்யாணம் கட்டிகிட்டு நீங்க மட்டும் சந்தோஷமா வாழலாம்னு நினைச்சியா? உங்க ரெண்டு பேரையும் உயிரோட விட்டா தானேடா சந்தோஷமா இருப்பீங்க? அங்கே என் தம்பி அசிங்கப்பட்டு வாழறான், உங்களுக்கு என்ன சந்தோஷம் வேண்டிக் கிடக்கு?) என்று அவனைச் சரமாரியாகத் திட்டி அடிக்கப் பாய…

அதற்குள் அவனை விலக்கி சஹானாவே அடியை வாங்க, அவனோ அவளைத் தன்புறம் இழுத்தவனைப் பார்த்த சஹானாவின் தாய் மாமனோ அவர்களது பொருத்தத்தைப் பார்த்து அவனுக்குக் குற்ற உணர்வு வந்தது. ஏனெனில், சஹானாவை விட அவளது தாய்மாமன் பதினான்கு வயது மூத்தவன். இப்போது இவர்களின் பொருத்தம் அவ்வளவு அழகாய் இருந்தது.

அதைக்கண்டு தன் தமக்கையைச் சமாதானம் செய்ய வந்தான்.

“வாட் ஈஸ் திஸ் சனா?” என்று ஆங்கிலத்தில் கேட்டான் இஷான். அவனே அறியாமல் சஹானா அவனுக்குச் சனா ஆகி இருந்தாள். ஆனால், அதை இருவரும் உணரும் நிலையில் இல்லை. ஆனால் அவளோ, தன் தாய் தவறாகப் புரிந்து வந்துள்ளதால் எங்கே அவனை ஏதாவது செய்து விடுவாரோ எனப் பயந்தவள் அவனுக்குப் பதிலளிக்காமல், 

“அம்மா, அம்மா… நன்னி ஏமன்னா சேஸ்கோண்டா வால்னி ஒதலேயண்டா… வால்க்கும் தீனிக்கும் ஏம் சம்பந்தம் லேதம்மா” (அம்மா, அம்மா… என்னை என்ன வேணா செய்யுங்க, அவரை விட்டுடுங்க… அவருக்கும், இதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல) என்று அழ…

அப்போது அவரது தம்பியும் அவரைச் சமாதானம் செய்ய முன்வந்தான்.

“அக்கா, சாந்தம்கா மாட்லாடக்கா. ஏம் உண்டேனும் ஆயனா மா சஹாவோட பார்த்தா வாலு…” (அக்கா, பொறுமையாப் பேசுக்கா… என்னதான் இருந்தாலும், அவரு நம்ம சஹாவோட வீட்டுக்காரரு”) என்று கூற அவனைத் திரும்பி முறைத்தவர்,

“சிகு லேதாரா நீக்கி இலா செப்படானிக்கி நீக்கி கோஷமேரா அமினி சதுவு பெட்டிதினி நீக்கி பெண்ட்லி செய்யாலனி தானி சாங்கி பெட்தினி இப்புடு நின்னி ஒத்தனி செப்பேஸ் போயாரா அதி… தானி நேன் சமிச்சாளன் கொண்டிவா? சம்புத்தானே காணி நேனு சமிச்சேல” (வெட்கமா இல்ல… இதைச் சொல்ல உனக்கு? அவள நீ ஆசைப்பட்டனு தானே அவளைப் படிக்க வெச்சேன். நீ ஆசைப்பட்டனு தானே அவளைக் கல்யாணம் செஞ்சு கொடுக்கனும்னு வளர்த்தேன். அவ உன்னை வேணாம்னு போனவடா… அவளையும் அவளைக் கட்டினவனையும் நான் மன்னிக்கனுமா? கொன்னு போடுவேனே தவிர அதை மட்டும் செய்ய மாட்டேன்) என்று விட்டுத் திரும்பியவருக்கு, 

அவன் தமிழில், “மனுஷங்களா நீங்கலாம்? இப்படி ஒரு பொண்ணை அடிக்க வர்றீங்க?” என்று கேட்க,

 அவன் தமிழ் பேசுவதைப் பார்த்து யோசனையாய் நின்றார் ஜக்கம்மா. பின்னே, அவரும் ஒரு தமிழனைத் தானே காதலித்து மணம் புரிந்தார். சஹானா முழுவதும் சாதுவான தந்தையின் குணம் கொண்டவள். இவரது அடிதடி குணத்திற்கு அவரது கணவன் அடங்கிப் போவார். அதுவே, அவரை ஈர்க்க அவரையே மணம் புரிந்து கொண்டார். மகளும் அவரைப் போலவே சாதுவாய் வளர அவருக்கு அவளை பிடித்துப் போனது. ஆனால், அவளுக்குத் திருமணம் வேண்டாம் என்று ஓடிப்போகும் அளவுக்குத் தைரியம் எப்படி வந்தது என்றே தெரியவில்லை.

ஆனாலும் தம்பியின் திருமணம் நின்ற கோபம் கனன்று, எல்லாத்துக்கும் இவன்தான் காரணம் என்ற எண்ணமே இப்போது. கோபமாய் அவனைப் பார்த்து தமிழில் பேசினார்.

“யாருடா நீ? எங்க இருந்து வந்த? எவ்வளவு தைரியம் இருந்தா என் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக் கூட்டி வந்து இருப்ப?” என்று கேட்க, அவனோ அதிர்ந்து பார்த்தது சஹானாவை தான். அவளுக்கு அதிர்ச்சி இருந்தாலும், தாய் தான் யாரையோ திருமணம் செய்து கொண்டதாகக் கடிதம் எழுதி அனுப்பியதை இஷானைப் பார்த்ததும் அவனைத்தான் திருமணம் செய்து கொண்டதாகத் தவறாகப் புரிந்து கொண்டார் என்பதை யூகம் செய்தவள்,

“அம்மா… அவரும் நானும் கல்யாணம் பண்ணிக்கலை… நீ..நீங்க” என்று பயத்துடன் முழுதாய் அவள் கூறும்முன் அவளை ஓங்கி அறைந்தார் ஜக்கம்மா. அவளது செய்தியில் அதிர்ந்து நின்றான் ஜக்கம்மாவின் தம்பி.

அதில் அவள் தடுமாறி விழப்போக தன்னிச்சையாக மீண்டும் அவளைத் தாங்கினான் இஷான்.

“ஏன்டிமா இதி… ஏதோ ஓடிவந்து கல்யாணம் செஞ்சு அவனோட வாழுறனு பார்த்தா, நீ ச்சீ… கல்யாணமே பண்ணாம அவனோட வாழறியா? வெட்கமா இல்ல உனக்கு… த்தூ… என் பொண்ணா நீ? எனக்கு இப்படி ஒரு அவமானத்தைத் தேடிக் கொடுத்திட்டியே?” என்று அவர் மீண்டும் அவளை அடிக்கவர அவளோ பயத்தில் நடுங்க மேலும் அவளைத் தன்னுள் புதைத்துக் கொண்டான் இஷான்.

“என்ன பேசுறீங்க நீங்க? இவங்க மாடா, மனுஷியா இப்படி அடிக்கறீங்க?” என்று கூற,

“அவ உன்கூட வாழுற கேடு கெட்ட வாழ்க்கைக்கு அவளை என் கையாலேயே கொன்னு போட்டுட்டுப் போவேன்டா… நீ யாருடா என்னைக் கேட்க? தமிழ்நாடு பசங்க கல்யாணம் பண்ணாம குடும்பம் நடத்துற கேவலத்தை இங்கதான் பார்க்குறேன்… இப்படித்தான் உங்க அம்மா வளர்த்தாங்களா உன்னை?” என்று கேட்க அதிர்ந்து நின்றவன், அவளைத் தன்னிடமிருந்து விலக்கி நின்று,

“வார்த்தையை அளந்து பேசுங்கம்மா.. சனா வாட் நான்சென்ஸ் ஈஸ் திஸ்?” என்று கேட்க,

“நா..நான் உங்களுக்குச் சொல்றேன் இஷான்… ப்ளீஸ்” என்று அவள் கெஞ்ச,

“என்ன இவங்க இப்படிக் கேவலமாய் பேசுறாங்க, நீங்க என்னை அமைதியா இருக்கச் சொல்றீங்க?” என்று அவன் கத்த,

“இதுதான் நீ கட்டிக்கிட்டவள நடத்துற லட்சணமா?” என்று ஜக்கம்மா கேட்க அவன் அவரை முறைக்க,

“அதானே, கல்யாணமே பண்ணாம குடும்பம் நடத்துறீங்கல்ல, அப்போ இப்படித்தான் நடக்கும் போல… இப்படி ஒரு கேவலமான வாழ்க்கைய வாழவாடி என் தம்பிய வேணாம்னு சொல்லிட்டு இவன்கூட ஓடி வந்த?” என்று அவர் அவளை அறையக் கையை ஓங்க அவளைத் தன்பின்னே மறைத்து நின்றான்.

அதற்குள் அங்கு போலீஸ் வந்து இறங்க இன்ஸ்பெக்டர் ஜக்கம்மாவிடம் அமைதியாக,

“மேடம், இதி வால் பணி சேஸே சேஸ்திலம். இக்கட சமஸ்யம் சேஸ்த்தே ஆக்ஸன் தீஸே லாக ஒஸ்த்துன்தி” (மேடம், இது அவங்க வேலை செய்யுற இடம். இங்க பிரச்சினை பண்ணா உங்க மேல ஆக்ஷன் எடுக்க வேண்டி வரும்) என்று கூற,

“ஏமி ஆக்ஷன் தீஸ்த்தாரா, நா கூந்தரு நா தம்புடுத்தோ பெண்ட்லி ஒத்தனீ வேற வாட்னி பெண்ட்லி சேசுன்டினி லெட்டர் ராஷி பெட்டேஸி வீடுத்தோ பாரி ஒச்சியா… ஒச்சிந்திவால் ஈட சரிகா உண்டாந்திந் அன்கொண்டே அந்தம்லேனி ஜீவிதம் சேஸ்த்தாந்தி. அதி சூடானிக்கு நாக்கி கோபம் ராதா? தானி அடுகுத்தே வீடு ஏமோ மஞ்ச்சு வாடுதர மாட்லாடுதாடு நூவு சப்போர்ட் சேஸினு ஒஸ்த்தாவு… முந்தர சரிகா பெண்ட்லி சேஸினவால்க்கி அனுகூலங்கா மாட்லாடய்யா போலிஸு… ஈலத்தோ பெண்ட்லி செய்காண்ட்டோ சஹ ஜீவிதம் சேஸவால்க்கி சப்போர்ட் சேஸி மாட்டலாட ஒத்தய்யா” (என்ன? ஆக்ஷன் எடுப்பயா? என் பொண்ணு என் தம்பியோட கல்யாணம் வேணாம்னுட்டு வேற ஒருத்தனக் கல்யாணம் கட்டிகிட்டேனு லெட்டர் எழுதி வெச்சுட்டு இதோ நிக்கிறானே, இவன்கூட ஓடி வந்துட்டா… வந்தவ முறையாக் கல்யாணம் செஞ்சு வாழுறானு நினைச்சா இவ கேவலமா வாழ்ந்துட்டு இருக்கா… இதைப் பார்த்துக் கோபம் வராதா? அதைக் கேட்டா இவன் பெரிய நல்லவன் மாதிரி பேசுறான்… நீயும் வர்ற சப்போர்ட்டுக்கு… முதல்ல முறைப்படி கல்யாணம் பண்ணி வாழுறவங்களுக்கு ஆதரவாப் பேசுயா போலீஸு… இந்த மாதிரி கல்யாணம் கட்டிக்காம ஒண்ணா வாழுறவனுக்குலாம் சப்போர்ட் பண்ணிப் பேசாதயா) என்று கத்த அங்கு கூடியிருந்த எல்லோரும் இவர்களைப் பற்றிக் கிசுகிசுக்க ஆரம்பித்து விட்டனர். இஷானுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால், அவர் கையை நீட்டித் தன்னைக் காட்டிப் பேசுவதால் ஏதோ தவறு என்று மட்டும் புரிந்து கொண்டவன்,

இன்ஸ்பெக்டரைப் பார்க்க அவர் அவன் அருகில் வந்து அவர் சொன்னதை ஆங்கிலத்தில் சொல்ல கோபம் தலைக்கேறியது.

திரும்பி சஹானாவை முறைத்தவன், “உங்ககூடப் பேசணும். உள்ள வாங்க… சார் ப்ளீஸ், ஒன் மினிட்” என்றுவிட்டு அவளது கையைப் பற்றி இழுத்துக் கொண்டு போனான் உள்ளே… அதைக்கண்டு ஜக்கம்மா மேலும் கோபமானார். நேரே தன் அறைக்குள் சென்றவன் அப்போது தான் அவளது கையை விட்டான்.

“என்ன சனா இதெல்லாம்..? என்ன பேசுறாங்க அவங்க? எதுக்கு என்னை அவ்வளவு கேவலமாய் பேசுறாங்க உங்க அம்மா? நீங்க என்ன சொல்லிட்டு வந்தீங்க?” என்று அவன் கத்த எங்கே இவன் கத்தலில் உண்மையை அறிந்து தன் தாய் தன்னை மீண்டும் இழுத்துச் சென்று மாமனுடன் கட்டி வைத்து விடுவாரோ என்று பயந்தவளுக்கு நடுக்கமே அதிகமாகியது. ஆனால், அவனுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய நிலையை உணர்ந்தவள் கண்களைத் துடைத்துக் கொண்டு,

“ஒரு நிமிஷம்” என்று கதவைச் சாத்திவிட்டு அவன் அருகில் வந்தாள்.

“ப்ளீஸ், கொஞ்சம் கோபப்படாதீங்க இஷான்… நா..நான் செல்லிடுறேன்… நான் என் மாமாவைக் கல்யாணம் செஞ்சுக்க விரும்பலை… எ..எனக்கு என் கேரியர்ல நிறையச் சாதிக்க ஆசை. ஆனா, அதை எங்க அம்மாகிட்டச் சொல்ற அளவுக்குத் தைரியம் எனக்கு இல்ல… அவங்க ரொம்பக் கரடுமுரடான ஆளு… என் மாமா என்னைத் தூக்கி வளர்த்தாரு. ஆனா அவருமேல எனக்கு எந்த இன்ட்ரெஸ்ட்டும் வரலை… அதுக்கு எங்களுக்கு இருந்த வயசு வித்தியாசம்கூட காரணமாய் இருக்கலாம். அண்ட் நான் வெளியே வேலை செய்யனும்னு ஆசைப்பட்டேன். எங்க அம்மாவோட அடக்குமுறை வாழ்க்கை எனக்குப் பிடிக்கல… அதனால தான் க..கல்யாணத்தப்போ… நான் வேற ஒருத்தரைக் கல்யாணம் செஞ்சுகிட்டேன்னு சொல்லி… லெ..லெட்டர் எழுதி வெச்சுட்டு வீட்டை விட்டு வந்துட்டேன். நா..நான் என் புருஷன்கூடப் போறதா எழுதிட்டு இந்த வேலைக்கு வந்துட்டேன். அ..அதைப் படிச்சுட்டு எங்க அம்மா கோபப்பட்டு என்னை எங்க எங்கேயோ தேடி இருக்காங்க. ஆனா யாரோ எங்க அம்மாகிட்ட நான் இங்க இருக்கிறதையும் உங்ககூடத் தங்கி இருக்கேன்னும் சொல்லி இருக்காங்க போல… அ..அதனால” என்று அவள் தேம்ப அவளை முறைத்தவன்,

“அதனால நான் தான் உங்க புருஷன்னு அவங்க நினைச்சுட்டுப் பேசுறாங்களா?” என்று அவன் கோபமாய் பேச,

“ம்ம்…” என்று தலையை ஆட்ட,

“நீங்க ஏன் அதை மறுத்துப் பேசல சனா?” என்று அவன் கோபமாகப் பேச அவனது கோபத்தில் நடுங்கியவள்,

“நா..நான் சொன்னேன் இஷான். உங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்ல… எனக்கும் உங்களுக்கும் கல்யாணம் ஆகலைனு சொன்னா… அ..அதையும் தப்பா எ..எடுத்துட்டு தான்… க..கல்யாணம் பண்ணாமலே சேர்ந்து வாழறோம்னு தப்புத் த..தப்பா…” என்று திக்கி அவள் மேலும் அழ, அவளது அழுகை அவனது மனதைப் பிசைந்தது. ஆனாலும், கோபமும் சேர்ந்தே வந்தது. அதில் அவளைப் பிடித்துக் கத்த ஆரம்பித்தான்.

3 thoughts on “என் சுவாசம் உன் வாசமாய் – 28”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *