டீஸர்
“தாத்தா…..தாத்தா…பசிக்குது”
என்றபடி அந்த சிறுமி தன் தாத்தாவை தேடிக்கொண்டு வந்தாள்.
“அட பொம்மு இந்தா வந்துட்டேன் டா…. உனக்கு தான் டா சமைச்சிட்டு இருக்கேன் இன்னும் செத்த நேரத்தில சாப்பாடு ரெடி.” இரவு நேரத்து க்கான உணவை சமைத்துக் கொண்டிருந்தார்.
“தாத்தா நாளைக்கு எங்க ஸ்கூல்ல மேஜிக் ஷோ நடக்குது தாத்தா எல்லாரும் 2 ரூபாய் கொண்டு வர சர்மிளா டீச்சர் சொன்னாங்க. எனக்கு காசு வேணும்” என்று அந்த சிறுமி கூறினாள்.
“என் கிட்ட இல்லையே பொம்மு நேத்து காசே இல்ல அந்த முருகேசு கிட்ட தான் பத்து ரூபாய் கடன் வாங்கியாந்தேன்.” என்று தன் இயலாமையை அந்த பெரியவர் கூறவும்.
“சரி தாத்தா பரவாயில்லை நா பெரிய படிப்பெல்லாம் படிச்சு கலெக்டர் ஆகி எல்லா பிள்ளைங்களையேம் ஃப்ரியா கூட்டிட்டு போவேன்.” என் மழலை மாறாமல் கூறவும், தன் பேத்தியை அணைத்துக் கொண்டார்.
நல்லகண்ணு தாத்தாவுக்கு ஒரே மகன் நடராஜன். ஒரு கோயில் திருவிழா போயிட்டு வரும் போது ஒரு விபத்தில் மனைவி மரகதம், பையன், மருமகள் என தன் மூன்று உயிர்களை பறிகொடுத்துவிட்டார்.
தங்கள் அன்றாட வாழ்விற்கு போராடும் மக்கள் ரோட்டோரத்தில் ஒரு குடிசை போட்டு தங்கியிருந்தனர் அந்த குடிசைகளுக்கு மத்தியில் தானும் ஒரு குடிசை அமைத்து தன் பேத்திய கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார். அருகில் உள்ள மாநகராட்சி பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறாள் விண்ணுலக தேவதை போல் மின்னும் ஒரு குட்டி இளவரசி “முத்துலட்சுமி”
——–
அந்த இடத்திற்கு ஒரு ஜீப் வந்து சாலையை தேய்த்து கொண்டு நின்றது.
அதிலிருந்து ஒரு கடா மீசையோடு இறங்கி வந்தார். அந்த பகுதி இன்ஸ்பெக்டர் ஹரிஹரன்……
குடிசை பகுதியை நோக்கி வந்தவர் எல்லோரையும் அழைக்க.
“என்னப்பா நம்ம இடத்துக்கு போலீஸ் வந்திருக்கு” என ஒருவரையொருவர் பார்த்து கொண்டு
போலிஸ் க்கு பயந்து அனைவரும் வந்து குழுமினர்.
“ஏண்டா பஞ்ச பரதேசிகளா உங்கள தங்க இடம் கொடுத்து இருந்துக்கோங்க விட்டா, பெரிய வீட்லயே கை வைப்பீங்களா… ஒழுங்க எடுத்த நகை யெல்லாம் குடுத்துருங்க இல்ல மொத்தமா தூக்கிட்டு போய் பொதைச்சிருவேன்” தொலைச்சிருவேன்னு ஆவேசமாக ஹரிஹரன் கத்தவும்…
“அய்யா ! நாங்க வயித்துபொழப்புக்காக சின்ன புள்ளைங்க விளையாட்டு சாமான் விக்கிறோம் நாங்க எதுக்கையா பெரிய வீட்டுக்கு போகப்போறோம் உங்களுக்கு எதும் தெரியாது “னு பெரியவர் கூறவும்.
“எனக்கே பாடம் எடுக்க வந்துட்டியானு எட்டு உதைத்தார்.
வயது வித்தியாசம் பாராமல் அந்த கொடூரன். மிதிக்கவும் எட்டி போயி விழுந்தார் அந்த பெரியவர்.
மறுபடியும் அடிக்க எத்தனிக்க….
அப்பா அலறிக்கொண்டு வந்தாள் ஒரு இளம் மங்கை
“எங்களுக்கு எதும் தெரியாது சார் எங்க அப்பாவ அடிக்காதீங்க” என காலில் விழவும்.
அந்த நேரத்தில் அவள் உடுத்தி இருந்த தாவணியின் மாராப்பு விலகியது.
அந்த ராட்சசனின் கண்களில் காம அரக்கன் குடியேறவும்,. அவளின் தலைமுடியை கொத்தாக பிடித்து “உன் கிட்ட தான் முதல்ல விசாரிக்கணும்”னு தர தர வென தன் ஜீப் ல் ஏற்றி இழுத்துக்கொண்டு போனான்.
தொடரும்.
பெயர் சொல்லி போட்டியில் பங்கு பெறுகின்றேன். நான் மோசஸ் உங்கள் ஆதரவை வழங்குங்கள்.
அடப்பாவி….! இந்த போலீஸ்காரன்களே இப்படித்தானோ…!
காப்பாத்த வேண்டியவங்களே கொத்துக்கறியாக்கிடறாங்களே..!
ஆரம்பமே இப்படி பயங்கரமா இருக்கே!!… வாழ்த்துகள்!!..
அடபாவிகளா இவன் எல்லாம் மனிதன் தானா இவனை கொஞ்சம் கொஞ்சமா கஷ்டபடுத்தி கொல்லனும்
Good start..
Cinematic effect while reading the story.
அடப்பாவிங்களா… 🤧🤧🤧 அதுங்களே அன்றாட பிழைப்புக்கே அல்லாட்டிட்டு இருக்காங்க.அதுங்க கிட்ட வீரத்தை காமிக்க நம்ம காக்கியை அடிச்சிக்க ஆளே இல்ல…🤦♀️
அதானே முதல் பக்கமே சம்பவம்.. சிறப்பு..😍😍😍😍