பாகம்-10
ராகவ் சென்றதும் தன் அறைக்கு வந்தவள், சூர்யாவை பற்றிய தன் இனிய நினைவுகளை புரட்டிப் பார்த்தாள்.
அவள் தினமும் அலுவலகத்துக்குச் செல்லும்போது அவன் பைக்கில் வருவது வழக்கம்தான். பஸ்ஸில் நின்றுக் கொண்டும் உட்கார்ந்தும் அவனை பார்த்திருக்கிறாள். அப்போதெல்லாம் அவனுடன் பைக்கில் அமர்ந்து செல்ல மாட்டோமா என்று ஏங்கி இருக்கிறாள் .
அப்படித்தான் ஒரு நாள் பேருந்து வராமல் அவள் நின்றுக் கொண்டிருந்தபோது அவன் வந்தான். மெரூன் கலர் ஷர்ட்டும் க்ரே நிற பாண்டும் அணிந்திருந்தான்.
அவள்தான் அவன் எங்கிருந்தாலும் கண்டுபிடித்துவிடுவாளே ? அவன் தூரத்தில் வரும்போதே கண்டுபிடித்துவிட்டாள் .
“என்ன சந்திரா ? பஸ் வரலையா “?
“இல்ல! வந்துச்சி !என்னாலதான் ஏற முடியல”
அவள் கட்டி இருந்த சேலையை ஏற இறங்கப் பார்த்தான்.
“பஸ்சுக்கு வசதியா ஏதாவது ட்ரெஸ் போட்டிருக்கலாமில்ல?”
“இல்ல புதுசா எடுத்தது. அதான்”
“சரி! சரி! வண்டில ஏறு லேட்டாகுது. காலில் உதைத்து வண்டியை ஸ்டார்ட் செய்தான்.
“இல்ல! பஸ் வந்துடுச்சு” இவனிடம் பேசிக் கொண்டிருந்தவள், அந்த கும்பலிலும் ஓடிப் போய் ஏறிக் கொண்டாள் .
தன்னைத் தவிர்க்கவே அவள் பேருந்தில் ஏறினாள் என்பது அவனுக்கு அவமானமாக இருந்தது. முகம் சிவந்த கோபத்துடன் வண்டியை வேகமாக ஸ்டார்ட் செய்தான். பறந்து போய் விட்டான். அவனின் வண்டியின் வேகமே அவன் கோபத்தைக் காட்டியது.
அதற்குப் பிறகு அவளால் அவனைப் பார்க்கவே முடியவில்லை. ஞாயிறு அன்றும் இவள் வந்ததும் பட்டென கதவைக் சாத்திக் கொண்டான்.
இவளுக்கு வருத்தமாக இருந்தது. சிறிது நேரம் அவன் அன்னையிடம் பேசிவிட்டு கிளம்பிவிட்டாள். தினமும் அவனைப் பார்ப்பாள் தான். ஏன் அன்று காலையிலும்தான் அவன் வண்டியைக் கழுவிக் கொண்டிருந்ததை பார்த்தாள் . இருப்பினும் அவன் தன்னை தவிர்ப்பதாகவேத் தோன்றியது. இப்படியே ஒரு வாரம் சென்றது. அடுத்த வாரமும் இவள் அவன் வீட்டிற்குச் சென்ற போது மீண்டும் அதைப் போலவே நடந்துக் கொண்டான்.
இவளுக்குத் தான் தாங்கவே முடியவில்லை. வருத்தத்துடனே சென்று விட்டாள் . அவன் அன்னை இவர்களின் கண்ணா மூச்சி ஆட்டத்தை பார்த்துக் கொண்டுதான் இருந்தார். சந்திராவிடம் என்ன பிரச்சனை என்று கேட்டு தெரிந்துக் கொண்டார். கடந்த பத்து நாட்களாகவே மகன் முகம் கொடுத்து பேசாததும் சிடு சிடுவென இருப்பதும் அவருக்கு தெரியாதா என்ன? அவர் இதை எல்லாம் காதல் என்று எதிர் பார்க்கவில்லை. ஆனால் ஏதோ குழந்தைகள் சண்டைப் போட்டுக் கொண்டு முகத்தை திருப்பி வைத்துக் கொள்வது போல சிரிப்பாய் இருந்தது. அவனை அவள்தான் சமாதானப் படுத்த வேண்டும் என்று புரிந்தது.
“நீ பண்ணதை அவன் தப்பா புரிஞ்சுருப்பான். விடு கொஞ்ச நாள் ஆனா சரியாகிடும் “
“ஓகே! ஆன்டி அப்புறம் பாக்கலாம் ” சொல்லி விட்டு கிளம்பி விட்டாள் .
அவளின் சுருங்கிய முகத்தை அவரால் பார்க்க முடியவில்லை. என்ன செய்வது என்றுதான் புரியவில்லை. ஆனால் ஏதாவது செய்தாக வேண்டும் மனதில் நினைத்துக் கொண்டார்.
அன்று மாலை அவள் மாடியில் நின்றுக் கொண்டிருந்தாள்.
அப்போது சற்று நேரம் காற்று வாங்கலாம் என்று அவனும் வந்தான்.
இவளைப் பார்த்ததும் வேறு பக்கமாக ஓரமாக சென்று நின்றுக் கொண்டான்.
அவனைப் பார்க்க, பேச ஏங்கி கொண்டிருந்தவளுக்கு இப்போது ஏனோ பயமாக இருந்தது.
இருப்பினும் எச்சில் முழுங்கி அவனிடம் சென்று நின்றுக் கொண்டாள் . அவள் வருவாளா என்றுதானே அவனும் காத்துக் கொண்டிருந்தான். அவளின் வாசம் வழக்கம்போலவே அவனை மயக்கியது. அதை அவளுக்குத் தெரியாமல் அனுபவித்தான்.
“சாரி ” மிக மிக மெதுவாக குரல் வந்தது.
“எதுக்கு?”
“நீங்க எதுக்கு கோபமாக இருக்கீங்களோ? அதுக்கு”
“என்ன பொறுக்கினு நினச்சுடீங்க !” அவனின் புது மரியாதை அவளைக் குத்தியது.
“இல்ல! அப்படி இல்ல. யாராவது பார்த்தா தப்பாகிடும்”
“நாம ஒன்னும் லவ்வர்ஸ் இல்ல. உங்களுக்கு வேலைக்கு நேரமாகிடுச்சு. நான் லிப்ட் கொடுக்கறேன். அவ்வளவுதான். ஏன் எத்தனையோ பொண்ணுங்க ரபீடோ பைக்ல போகறதில்ல? அழுத்தமாக வார்த்தைகளை உச்சரித்தான். அவனின் வார்த்தைகள் அவளின் தவறைச் சுட்டது.
“அதான் சாரி சொல்லிட்டேன்ல? நீங்க சொல்லற மாதிரி யாரு கூடவும் நான் வண்டில ஏறி போகற டைப் இல்ல. தெரியாதா உங்களுக்கு?” இவளுக்கும் கோபம் வந்தது.
“என் கூடவும் தானே? நீ என்ன தவிர்த்துட்டு ஓடிப் போய் பஸ்ஸுல ஏறினப்போ ஏதோ ஒரு ரோட்டுல போகற பொறுக்கி மாதிரி! பொறுக்கி பையனா நான்? எனக்கு எவ்ளோ அசிங்கமா இருந்தது தெரியுமா?” கோபத்தில் முகம் மூடுவதும் சிவந்து விட்டது அவனுக்கு. அவனது தொடர்ந்தான்.
“ஆமா! நான் ஒன்னு கேட்கறேன், அது என்ன எப்ப பார்த்தாலும் மத்தவங்க தப்பா நினைப்பாங்க, யாராவது பார்த்தா அசிங்கமாகிடும் ? நாளைக்கு உனக்கு ஒரு கஷ்டம்னாலோ இல்ல எனக்கு ஒரு பிரச்னைனாலோ யாரும் வர மாட்டாங்க. நம்ம வயத்துக்கு நாம தான் சம்பாதிக்கணும், நம்ம வாழ்க்கையை நாமதான் பாக்கணும்”
அவன் சொல்வது சரிதான். இதே வார்த்தைகளை அவள் ஒரு நாள் நினைத்து நினைத்து அழத்தான் போகிறாள். அதே சமயம், அவன் சொல்லும் இதே வார்த்தைகள் தான் அவளை இது வரை வாழ வைத்திருக்கிறது. ஆனால் இதே வார்த்தைகளை, இதே மனிதன் வேறு விதமாகச் சொல்லும்போது அதை அவள் எப்படி தாங்குவாள்?
அன்று அவன் சொன்னது இன்றும் அவள் காதில் எதிரொலிக்கிறது.
“எனக்கு நிறையா சான்ஸ் கிடைச்சுது சூர்யா நான் தான் உங்க கிட்ட என்னோட விருப்பத்த சொல்லாம விட்டுட்டுட்டேன். எத்தனை நாள் உங்க கூட வண்டில வர்றதுக்கு ஏங்கியிருக்கேன் ? வாலிப வயசுல வர வேண்டிய ஆசைகள் எல்லாமே எனக்கு இருந்தது. ஆனா உங்ககிட்ட நான் சொல்லாம விட்டுட்டேனே? ரகு அவளை கொஞ்சிவிட்டுச் சென்றது அத்தனை அருவருப்பாக இருந்தது. கண்களில் வழிந்த நீரைக் கூட துடைக்காமல் படுத்துக் கொண்டாள் . ஏனோ ராகுவைப் பார்த்தாலே அவளுக்கு மனா அழுத்தம் அதிகமாகிறது. அது தான் அவன் தனித் தன்மையோ?
அவள் எதை நினைத்தாளோ அதையே தான் அவனும் நினைத்தான்.
“நீ சொன்னது சரிதான் சந்திரா. நீ யார் கூடவும் வண்டில ஏறி போறவக் கிடையாதே! நான்தான் ஏதேதோ நினச்சு உன் மேல உரிமை..ச! ஒவ்வொரு தடவையும் என் கூட வர மாட்டேன்னு சொன்னியே ? என்னிக்கோ ஒரு நாள் உன்னோட புருசனோட போகறதுக்குத்தானே? அவரு கூட மட்டும்! நாந்தான் தப்பு. உன் பின்னாடி வந்திருக்கக் கூடாது”
யோசித்துக் கொண்டிருக்கும்போது அவன் அன்னை சாப்பிட அழைத்தாள் .
“சூர்யா! மாயா போன் பண்ணடா ” என்றாள் அடுத்தடுத்து பரிமாறிக் கொண்டே .
“ம்! எப்ப வருவா ?”
“நாளைக்கு காலையிலேயே வரேன்னா . என்னவோ குரலே சரியில்லடா “
“ஏம்மா ! “
“தெரியலடா, என்னவோஅவகிட்ட பேசினதுலேர்ந்தே மனசுக்கு சங்கடமா இருக்கு, காலைல அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடறியா ?”
“இல்லமா! நாளைக்கு நிறைய வேல இருக்கு. சாரிமா “
அவள் முகம் சுருங்கி விட்டது. இவனுக்கும் கவலையாகத்தான் இருந்தது. பெருமூச்சு விட்டுக் கொண்டான்.
மறு நாள் காலை ,இவன் அலுவலகத்துக்கு வரும்போது ஆயாவும் வந்தாள் ஆட்டோவில்.
“சரி! ஆத்தா பார்த்து பத்திரமா படி ஏறு ” சொல்லி விட்டு ராஜு வண்டியை திருப்பினான்.
“நீயும் பார்த்து போ ! ஆயா சொல்லிக் கொண்டிருந்ததை பார்த்த சூர்யா , கார் கண்ணாடியை இறக்கி அவர் யார் என்னவென்று ஆயாவிடம் விசாரித்தான். அப்போதுதான் அவன் ஆயாவின் மகன் என்பது தெரிந்தது.
“டேய்! இறங்குடா முதலாளி அய்யா “
கட்டையை எடுத்துக் கொண்டு அவன் இறங்க வரும்போது அதை கையால் தடுத்தவன் “அதெல்லாம் பரவால்ல. உங்க பேரு ?”
“ராஜு சார்” மரியாதையாகச் சொன்னான்.
“எனக்கு நீங்க ஒரு உதவி பண்ணணுமே ?”
“சொல்லுங்க சார்”
“நான் ஒரு அட்ரஸ் தரேன். நீங்க அங்க என்னோட பிரண்டு இருப்பாங்க. அவங்கள கூட்டிட்டு போய் என்னோட வீட்டுல விடணும்.முடியுமா?”
“ஓகே சார்”.
மாயாவுக்கு போன் போட்டு விஷயத்தைச் சொன்னவன் உடனே கிளம்பி வீட்டிற்கு வரும்படி உத்தரவிட்டான்.
சூர்யா சொன்னபடியே மாயாவை கொண்டு வந்து பத்திரமாக வீட்டில் விட்டு கிளம்பினான் ராஜு.
தொடரும்………
அட.. ஃப்ரெண்ட்டா.? நான் பொண்டாட்டியாக்கும்ன்னு
நினைச்சிட்டேனே…!
அப்ப இந்த ராகவன் கூட
சந்திராவோட புருசனா இருக்க மாட்டான்னு தான் தோணுது.
New entry one one ah varangale ethuku varanga therilaye konjam chandra life la ena tha achi sollunga pa
மாயா நிஜமா ஃபிரண்டு தானா!!???… என்னாச்சு சந்திரா, சூர்யாவுக்கு??…
சந்திரா சூர்யா இரண்டு பேருக்கும் என்ன பிரச்சனை சந்திராக்கு கல்யாணம் நடந்ததா இல்லையா இந்த மாயா யாரு
Nice