கொலை செய்யப்பட்டவன் பெயர் நெடுமாறன். சிறுகுடி கிராமத்தை சேர்ந்தவன். அவனுடைய பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் கதறியடித்து ஓடி வந்தனர். உடற்கூராய்வு முடிந்து தலையையும் உடலையும் ஒன்றாய் தைத்திருந்தனர். நல்ல வேளை… தலையும் உடலும் தனியாய் இருந்த கோரத்தை அவர்கள் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் அவர்களும் அந்த இடத்திலே மரித்து போயிருப்பார்கள்.
அதை நினைக்க நினைக்க ஆதனுக்கு அவ்வளவு ஆத்திரம். கொலைகாரனுக்கு எவ்வளவு துணிவிருந்தால் இதை செய்திருப்பான், காவல்துறைக்கு சவால்விடும் வண்ணம்.
ஒரு பக்கம் ஆத்திரம் இருந்தாலும், மற்றொரு பக்கம் அயர்வாக இருந்தது. ஏனெனில் உண்மையில் எந்த தடையமும் கிடைக்கவில்லை. வருத்தமாகவும் இருந்தது.
அருகில் நின்றிருந்த இன்ஸ்பெக்டர் முருகன் அவருக்கருகில் இருந்த கான்ஸ்டபிளிடம் ஏதோ முணுமுணுக்கும் சத்தம் கேட்டது. அவர் கூறியது தெளிவாக கேட்காவிடினும் அவனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. அவரது அலட்சிய பார்வையும், சிறு ஏளனச் சிரிப்பும் அவருடைய எண்ணங்களை அவனுக்கு புடம் போட்டு காட்டியது.
காவல்துறையில் பல வழக்குகளின் முடிச்சுகளை அவிழ்த்த அதிகாரிகள், மக்களிடையே நாயகனாக போற்றப்பட்டனர். அவனுக்கும் மக்களிடையே நாயகனாக வலம்வர பேராசை. ஆனால் அவன் தலைவிதியில் அப்படி ஒன்று எழுதப்படவேயில்லை. இதுவரை அவன் கையாண்ட வழக்குகள் எல்லாம் முடிக்கப்படாமலே இருக்கிறது. சிலர் ஆதனை ராசியில்லாதவன் என்று கூட கூறுவதுண்டு. அவன் கையாண்ட வழக்குகள், வேறொருவர் மூலம் முடிக்கப்பட்டிருக்கிறது.
முருகனுக்கு அவன் மேல் ஒரு காழ்ப்பு. அவனைவிட மூத்தவர்… வயதிலும் சரி.. அனுபவத்திலும்.. ஆனால் அவனுக்கு கீழ் வேலை பார்ப்பது ஒரு காழ்ப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். பலமுறை அவருடைய சாடை பேச்சுக்கள் அவனை சாட்டையில் அடித்திருக்கிறது.
“முருகன்…” என்று அவன் அழைக்க, “சொல்லுங்க சார்..” என்று பாந்தமாக வந்து நின்றார் அவர். அவன் உதடுகளில் சன்னமான புன்னகை தோன்றியது. முதுகுக்கு பின் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் நிதர்சனம் இதுதான். தற்காலிகமாக அவரை வெற்றி பெற்ற உணர்வு.
மனித மனம் இப்படித்தான். சல்லரைத்தனமான எண்ணங்கள் மனதின் சுவரை செல்லரித்து போக வைத்துவிடும். மற்றவரின் பார்வையிலிருந்து கூட தான் கீழிறங்கிவிட கூடாது என்பதில் தெளிவு.
“இவங்க ரெண்டு பேரையும் வீட்டில் விட்டுட்டு வாங்க..” என்று அவன் கூற, நெடுமாறனின் தாய் மயங்கி விழுந்திருந்தாள்.
“போங்க… போய் வேகமா வண்டியை எடுங்க.. ஹாஸ்பிட்டல் போகணும்..” என்று கூற, அடுத்து காரியங்கள் வேகமாக நடந்தேறியது.
அவர்களிடம் விசாரிக்க வேண்டும். ஆனால் இந்த நிலையில் எப்படி விசாரணை செய்வது என்று தெரியவில்லை. மருத்துவமனையில் அவர்கள் இருவருக்குமே சலைன் ஏற்றப்பட்டது.
சற்று நேரம் கழித்து, அந்த அன்னையின் அருகில் அமர்ந்தான் ஆதன்.
“அம்மா…” என்று அழைத்தான். அவர் விழிகளில் நீர் வழிந்தோடியது.
“அம்மா… உங்களோட மனக்கவலை எனக்கு நல்லாவே புரியிது. ஆனாலும் ஒரு விஷயத்தை யோசிச்சுப் பாருங்க. உங்க பையனை இந்த நிலைக்கு ஆளாக்கின குற்றவாளியை பிடிக்க வேண்டாமா? நீங்க மௌனமா இருக்க ஒவ்வொரு நிமிஷமும், குற்றவாளி நம்மைவிட்டு விலகி போக வாய்ப்பிருக்கு..” என்று கூற, அவரும் வாய் திறந்தார்.
நெடுமாறன் அவர்கள் குடும்பத்தின் முதல் பட்டதாரி. குடும்பம் என்று சொல்வதைவிட, சிறுகுடியில் அவன்தான் முதல் பட்டதாரி என்றும் கூறலாம். அவன் மிகவும் நன்றாக படித்தால், அந்த தேயிலை தோட்டத்தின் முதலாளி அவனைப் படிக்க வைத்தார் என்று அவனுக்கு நல்ல கம்பெனியில் வேலை கிடைத்தென்றும் கூறினார். வேலைக்கு சென்று சில மாதங்களே ஆனதாகவும் கூறினார்.
அதன்பிறகு அவரை வற்புறுத்தி வேறு தகவல்கள் வாங்க முடியவில்லை. அவனுக்கு பகையென்று யாரும் கிடையாது என்றும் கூறினார் நெடுமாறனின் தந்தை.
*********
அந்த விடுதி அறையில் இருவர் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். தொலைகாட்சி பெட்டியில் அந்த கொலைச் சம்பவம் ஒலிப்பரப்பாகிக் கொண்டிருந்தது.
“வாட் தி f*** ஈஸ் ஹேப்பனிங் ஹியர்?” என்று அலறினான் ஒருவன்.
மற்றொருவனோ அங்கிருந்த ஒரு பொருளை உடைத்திருந்தான்.
“மனோ… உனக்கு ஒரு வேலையை ஒழுங்கா பார்க்க தெரியாதா? இவ்வளோ பெருசா சொதப்பி வச்சிருக்க. இந்த விஷயம் பெருசாச்சுனா, என்ன ஆகும்னு தெரியுமா… நீயும் நானும் அந்த டீ எஸ்டேட்ல தேயிலைதான் பறிக்கணும்..” என்று அவன் கத்த, மாதவன் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டான்.
“ஏதாவது செய்..” என்று மனோ மீண்டும் அலறினான்.
மாதவன் அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தான்.
மறுமுனையில் அழைப்பை ஏற்றவுடன், வார்த்தைகளை வாரி இறைத்துவிட்டான்.
“யோவ்…என்ன செய்வீயோ தெரியாது. இந்த கொலையைப் பத்தி இனி விசாரணை நடக்கக் கூடாது..” என்று கட்டளையிட்டான் பட்டுக் கத்தரித்தாற் போல்.
“அதெப்படி சார் முடியும். கொலை பொது இடத்தில் நடந்திருக்கு. கொலையைப் பார்த்த சாட்சி இல்லைனாலும், இப்படி கொடூரமா தலையை வெட்டிருக்காங்க. மீடியா முழுக்க இந்த செய்திதான். போட்டோஸ் எப்படி லீக் ஆச்சுன்னு தெரியல.. எங்களுக்கு எவ்ளோ ப்ரஷர் இருக்கு தெரியுமா?” என்று எதிர்முனையில் ஐஜி இழுக்க, பொறுமையிழந்தான் மாதவன்.
“ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்… இந்த மாதிரி விளக்கம் கேட்கவா உனக்கு கோடி கோடியா அள்ளிக் கொடுத்தோம். எலும்பு துண்டை தூக்கிட்டு வாலாட்டும் நாய் மாதிரி இருக்க பழகிக்கோ” என்று மாதவன் மரியாதை குறைவாக பேச, எதிர்முனையில் பல்லை மட்டுமே கடிக்க முடிந்தது.
காவல்துறை, அரசியல்வாதி என்று அளவே இல்லாமல் அனைவரின் நேர்மையையும் நன்கொடையாக பெற்றிருந்தான் மாதவன்.
பொருளாகிப் போன நேர்மை. விற்றவனுக்கும் வாங்கியவனுக்கும் வணிக உறவுதானே. எவரின் பேச்சிலாவது கொஞ்சம் நேர்மை எட்டிப்பார்த்தால், அதை விலைக்கு வாங்கியவன் கோபம் கொள்வது நியாயம்தானே.
நேர்மையோ; பாசமோ; விலைக்கு விற்றுவிட்டால் வாங்கியவன் விசைக்கு விரைந்து ஓட வேண்டும்.
“மிஸ்டர் மாதவன்… மைண்ட் யுவர் வேர்ட்ஸ்..” என்றார் அவர் அழுத்தமாக. காலாவதியான நேர்மையால், சுயமரியாதையைக் காக்க முடியுமா என்ன?
“லுக் மிஸ்டர் கருணா… ஷட் டவுன் திஸ் கேஸ்..” என்று மாதவன் அதிகாரத்தின் உச்சத்தில் நிற்க, கருணாவோ, “பெட்டர் ஷட் டவுன் தி ஐலேண்ட் சைட்..” என்றார்.
“நான் என்ன செய்யணும்னு நீ எனக்கு சொல்ல வேண்டாம். நான் இப்போ நினைச்சா கூட உன்னை வேலையை விட்டு தூக்க முடியும்.”
“என்ன மிரட்டுறீங்க போல.. டூ வாடெவர் யூ வாண்ட்.. படிச்சு படிச்சு சொன்னேன். நெடுமாறன் தப்பிச்சு போகாம பாத்துக்க சொன்னேன். ஆனா நீங்க அவனை பொது இடத்தில் வச்சு கொலை செஞ்சுருக்கீங்க..” என்று அவரும் கத்த, “அவனை நாங்க கொலை செய்யல..” என்று அடுத்த இடியை தலையில் இறக்கினார் மாதவன்.
“என்ன சார் சொல்றீங்க?”
“அதான் எனக்கும் புரியல… என்ன நடக்குது? நெடுமாறனை கொலை செஞ்சது யாருன்னு தெரியாது. ஆனா இந்த வழக்கை தொடர்ந்தால், நாம நிச்சயமா சிக்குவோம்..” என்று மாதவன் கூற, ஐஜிக்கு மண்டை வெடித்துவிடும்போல் இருந்தது.
அடுத்து என்ன செய்வதென்று இருவரும் உரையாடிய பின், அழைப்பை மாதவன் துண்டித்தார்.
அவர்களின் உரையாடலில் கலந்து கொள்ளாமல் இருந்த மனோ, இப்போது கொஞ்சம் நிதானமாக இருந்தான்.
“மனோ… நம்ம எதிரி யாராவது இதை செஞ்சிருப்பாங்களா?”
“ஆனா இவ்ளோ தெளிவா நெடுமாறனை டார்கெட் பண்ணிருக்காங்கனா, அவனை கொலை செஞ்சவனுக்கு எவ்ளோ தெரியும்னு தெரியலையே..”
“முதலில் அவன் யாருன்னு கண்டுபிடிக்கணும். நம்ம விஷயம் தெரிஞ்சவன் நமக்கு நாயா இருக்கணும். இல்லை இருக்கவே கூடாது..” என்று ஆத்திரத்துடன் மாதவன் மொழிய, மனோ அவனுடைய தோளில் தட்டினான்.
*********
ஐஜி கருணா எஸ்.பியிடம் ஆதனைப் பற்றியும் வழக்கின் நிலை பற்றியும் விசாரிக்க, வழக்கில் பெரும் முன்னேற்றம் இருப்பதுபோல் தெரியவில்லை.
“யோவ்… அவனே இந்த கேஸ் வேண்டாம்னு சொல்லிட்டு ஓடணும்.. ” என்று கட்டளையிட்டார் கருணா.
ஒருவன் முன்னோக்கி ஓடினால் அவனைப் பின்னிழுக்க ஆயிரம் நபர்கள் வேலை செய்வார்கள். அப்படித்தான் ஆதனின் நிலையும் இந்த வழக்கும் உள்ளது.
அடுத்து ஆதனுக்கு எஸ்.பி.யிடமிருந்து அழுத்தம். வழக்கில் முன்னேற்றம் இல்லை என்று.
ஆதனும் என்னதான் செய்வான். நெடுமாறனின் அலைபேசி அழைப்புகள், அவன் வேலைப் பார்க்கும் நிறுவணம் என்று அனைத்தும் விசாரித்துவிட்டான். பயனுள்ள தகவல் எதுவும் இல்லை. கொலை நடந்த இடத்தில் ஒரு துப்பும் கிடைக்கவில்லை.
அடுத்து அவனுக்கு எங்கு தொடங்குவது என்றுகூட தெரியவில்லை. உடற்கூறாய்வு அறிக்கையும் பெரிய நம்பிக்கை தரவில்லை.
நெடுமாறனை கொலை செய்தவனை ஆதன் ஒரு பக்கம் தேடிக் கொண்டிருக்க, மாதவன் ஒரு பக்கம் தேடிக் கொண்டிருந்தார்.
அந்த நேரம் பார்த்து, ஆதனை ஒருவன் சந்திக்க வந்திருந்தான். ஆனால் ஆதனை சந்திக்கவிடாமல் முருகன் அவனை தடுத்து நிறுத்தினான்.
“சார்… உடனே ஆதன் சாரை பார்க்கணும்.. நெடுமாறன் கேஸ் விஷயமா” என்றான் பதட்டமாக.
“என்ன விஷயம்? அவர் இப்போ இல்லை.. நீ எங்கிட்ட சொல்லு. நானும் அவரோட அந்த கேஸை பாக்குறேன்..” என்றார்.
அவன் சுற்றி சுற்றி அனைவரையும் பார்த்தான். யாரோ அவனை கண்காணிப்பது போல் தெரிந்தது. தன் கழுத்திலிருந்து ஒரு சங்கிலியைக் கழட்டியவன், “இதை ஆதன் சாரிடம் கொடுங்க.. மறுநாள் இரவு நெடுமாறன் இறந்த இடத்தில் அவரை சந்திக்கிறேன் என்றும் கூறியவன்” அவசரமாக அந்த இடத்தைவிட்டு அகன்று சென்றான். அவனுடைய பெயரைக் கூட அவர் கேட்கவில்லை.
அவன் கொடுத்த சங்கிலியை திருப்பி திருப்பி பார்த்தார். தங்க சங்கிலிபோல் இருந்தது. மனதில் ஒரு குறுக்கு யோசனை தோன்றியது. அதை தன்னுடைய சட்டைப் பையில் போட்டவர் வீடு கிளம்ப தயாரானார்.
போஸ்ட்மார்ட்டம் ரிப்போட் வர, அதை மட்டும் ஆதனின் டேபிலில் வைத்தார். ஆதன் சிறுகுடி கிராமத்திற்கு சென்றிருந்தான்.
அன்று அங்கு ஒரு திருவிழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். நெடுமாறனின் மரணத்தால் அனைவரும் வருத்தத்துடன் இருந்தனர்.
கொலை நடந்த இடத்தில் இருந்த சில நடுகற்களை அவர்கள் வணங்குவார்கள் . ஆனால் இப்பொழுது அங்கு செல்ல முடியாததால் ஊருக்குள்ளே ஒரு படையலுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
அவன் அங்கு செல்லவும் அனைவரும் அவனை சுற்றி வளைத்துக் கொண்டனர். நெடுமாரனை கொலை செய்தவனை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று மன்றாடினர். அந்த தேயிலைத் தோட்டத்தின் முதலாளியும் அங்கு வந்திருந்தார்.
அவரையும் அனைவரும் கடவுளுக்கு நிகராக பார்த்தனர். ஏனெனில் அந்த கிராமத்திற்கு அவர் நிறைய உதவிகளை செய்திருக்கிறார். அந்த மக்களை படிக்க ஊக்குவிப்பதில் இருந்து, மருத்துவ வசதி, நீர் வசதி என்று அனைத்தும் செய்து கொடுத்திருந்தார்.
மழை தொடரும்…
Interesting😍
interesting ithula yaru intha murder panathu ithuku IG vera thunai poranga avan ena na solrtha sei nu order podran
Thanks for your comment ma…
So sethavan per nedumaran avanukum madhav madan kum enna samandhan nu theriyala aana avan ah murder pannathu ivanga rendu perum.illa and aadan kita pesa vandha andha avan yaru ah irukum ,avanukku higher officials kita irunthum pressure varuthu avan ah case handle ah panna vida koodathunu koodavae avanukum evidence ethuvum kidaikkala la yae
Adutha epi la pakkalam… Oru suspense odaikalam… Oru suspense add pannalam😀😀😀
Thanks
Payangara suspense vechirukinga