அத்தியாயம் -13
” நான் மானஸ்வினு முதல்லயே சொல்லிட்டேன். சர்வானந்தன் சார் தான் என்னை காப்பாற்றினார். அவர் தான் இந்த பையன் இருக்குற இடத்தையும் கண்டெய்னர் நம்பரையும் சொல்லி முடிஞ்சா இவனை காப்பாத்தி அவன் ஊருக்கு அனுப்பி வைக்க சொன்னார்.” என்று தேம்பினாள்.
நிரஞ்சனை கடத்தியது குழந்தை கடத்தல் விவகாரம். இவள் எப்படி அங்கு சென்றால்? என்ற ஐயம் தோன்ற, “நீ யாரு? எங்கண்ணாவை எப்படி சந்திச்ச?” என்று கேட்டான்.
“நான்… வுமன்ஸ் ஹாஸ்டல்ல தங்கியிருக்கேன் சார். எனக்கு அப்பா அம்மா கிடையாது. நல்ல உத்தியோகம் இருக்க லைஃப் நல்லபடியா பிரச்சனையில்லாம போச்சு. வி..வினோத்தை என்னிடம் பிரப்போஸ் பண்ணினான். வினோத் என்னை கல்யாணம் செய்வதா அவன் வீட்ல பேசிட்டு அழைச்சிட்டு போறதா சொன்னான். பட் அவனும் நானும் கடல்ல தனியா போட்டிங் போனோம். அவனுக்கு தெரிந்த போட் மேன் கிட்ட பணத்தை கொடுத்து ஒன்டே வாடகையில் நடுகடல்ல பேச அழைச்சிட்டு போனான்.
ஏன்னா அங்க போறதுக்கு முன்ன ஒரு சண்டை. சமாதானம் செய்ய அவ்வளவு மெனக்கெட்டு செலவு செய்தான்.
ஆனா அங்க பாதி வழியில் வேற கப்பல் வந்து, அதுலயிருந்து இரண்டு பேர் குதித்து எங்களை மிரட்டி போட்ல இருந்து மேல கப்பல்ல கூட்டிட்டு போனாங்க.
அங்க தான் வினோத்தை அடிச்சிட்டு என்னிடம் தப்பா நடக்க முயற்சி பண்ணினாங்க. அப்ப வினோத் மயங்கிட்டான். தட்டி எழுப்பறப்ப, அவன் எழுந்துக்கலை. அப்போ போலீஸ் டிரஸ்ல சர்வானந்தன் சார் இருந்தார். அவர் தான் குடிக்க போன அயோக்கியன்க வர்றதுக்குள்ள நீ போட்ல குதிச்சு தப்பிச்சு ஓடிடுனு சொன்னார்.
என் லவ்வர் வினோத் சார்? அப்படின்னு கேட்டேன். அவன் இப்ப எழுந்துக்க மாட்டான். நீ தப்பிக்கலை உன்மானம் போகும் அதோட உயிரும் போதும்னு சொன்னார். கூடுதலா தப்பிச்சு கரை சேர்ந்தா நிரஞ்சனை காப்பாற்ற சொல்லி இடத்தையும் கண்டெய்னர் நம்பரையும் சொன்னார் பர்தா வாங்கிட்டு நிரஞ்சனை காப்பாத்தி இங்க கூட்டிட்டு வந்துட்டேன் என்னால என் ஹாஸ்டல்ல போக முடியலை.
நிரஞ்சனை அவங்க வீட்ல சேர்க்கணும் அவனுக்கு உடம்பு சரியாக காத்திருக்கேன்” என்று அழுதாள்.
“லூசாடி நீ.. இத்தனை நடந்திருக்கு போலீஸுக்கு போகாம உட்கார்ந்து இருக்க” என்றான் விஹான்.
"சர்வானந்தன் சார் போலீஸ். அவர் இறந்ததுக்கு என்ன நடவெடிக்கை எடுத்தாங்க? அதோட சர்வானந்தன் சார் டெத்ல அந்த கடத்தல் கும்பல் சார்ந்த ஆட்கள் இருந்தாங்க.
நீங்க என்னை கார்ல கட்டி போட்டு போனதும், அங்க ஒரு பொண்ணு வந்தா என்னிடம் கட்டை அவிழ்த்து, அந்த நிரஞ்சன் எங்கே சொல்லு உன்னை தப்பிக்க விடறேன்னு கேட்டா. நானும் சொல்றேன்னு அவ கூட வந்து அவளை தள்ளிட்டு ஓடிப்போனேன். அப்ப அங்க இரண்டு மூன்று ஆண்கள் என்னை துரத்தினாங்க.
அதனால் தான் இங்கேயே இருக்கேன். யார் நல்லவங்க யார் கெட்டவங்க எதுவும் தெரியலை.” என்று அழுதாள்.
“எங்க அண்ணா பாடி மட்டும் தான் கடலில் கரை ஒதுங்கினார். வேற பையன் பாடி ஒதுங்கலையே? உன் லவ்வர் பெயர் என்ன?” என்று கேட்க, உதடுகள் துடிக்க கண்ணீர் வழிய, “வினோத்” என்றாள்.
“வினோத்… ஓகே… கமிஷனர் கலீயமூர்த்தியிடம் என்னனு விசாரிக்க சொல்லறேன். இனி இங்க இருக்க வேண்டாம். கிளம்புங்க” என்று அவசரப்படுத்தினாள்.
“சார் தகவல் சொன்னா பணம் தருவதாக சொன்னிங்க” என்றதும் “ஜீ பே இருக்கா?” என்று கேட்டு இருபதாயிரம் போட்டுவிட்டான். பணத்தின் தொகை போடாமல் தான் ஒட்டியது. அதனால் காவேரி கொடுத்ததை வாங்கிக்கொண்டார்.
“தேங்க்ஸ் மா” என்று கூறியவர் போனில் மடமடவென ஓலா காரை புக் செய்தான். இரண்டு நொடியில் கார் வரவும் அதில் மானஸ்வியையும் நிரஞ்சனையும் ஏற்றிவிட்டு காரை பின் தொடர்ந்தான்.
ஏதோவொரு நம்பிக்கையில் விஹான் காரில் ஏறக்கூறியதும் ஏறிவிட்டாள்.
நேராக பிருந்தா வீட்டிற்கு வந்ததும் இறங்கினாள்.
விஹான் பணத்தை தந்து நிரஞ்சனை தூக்கி கொண்டு நடந்தான்.
மானஸ்வி கூடவே நடந்தாள்.
தந்தையை கண்டதும் நிரஞ்சன் ”அப்பா..” என்று கூப்பிட, அவனை கட்டிப்பிடித்து அழுதார். நிரஞ்சனோ, “சாரிப்பா… சாரிப்பா.. நான் இனி வீட்டை விட்டு போகமாட்டேன். சாரிப்பா.” என்று அதையே திரும்ப திரும்ப கூறினான்.
வீட்டிலிருந்தவர்கள் எப்படி கிடைத்தார்களென்று கேட்டதற்கு விஹான் விளக்கமளித்தான்.
அங்கே மானஸ்வி தனியாக நின்றாள்.
சற்று நேரம் கழித்து, “அம்மா எங்கப்பா?” என்று நிரஞ்சன் கேட்க, ஜெய்சங்கர் அழ ஆரம்பித்தார்.
“நீ கிடைக்கலைன்னு உங்கம்மா சாப்பிடாம கொல்லாம செத்துட்டாடா” என்று முகத்தில் அறைந்து அழுதார்.
நிரஞ்சனுக்கு ஓரளவு புரியும் வயதென்பதால் தன்னால் அன்னை இறந்துவிட்டாரா என்று அதற்கும் அழுதான்.
விஹானோ அண்ணி பிருந்தாவிடம் வந்து “நீங்க சாப்பிடலையா? இங்க பாருங்க… சாப்பிடாமா எங்கண்ணன் குழந்தையை அழிச்சிடாதிங்க. மரியாதையா போய் சாப்பிடுங்க” என்று திட்டினான்.
“எனக்கு எதுவும் வேண்டாம். நான் சர்வா போன இடத்துக்கே போறேன்” என்று கூறினாள் பிருந்தா.
ஜெய்சங்கருக்கோ தன் மைந்தனால் இந்த பெண்ணின் கணவரும் இறந்துவிட்டாரே என்று கவலைக்கொண்டார்.
“எங்கண்ணா என்னை கேள்வி கேட்பான். ஏன்டா அப்பாவுக்கு நிகரா உன்னை ட்ரீட் பண்ணியது நான். நான் இல்லாத சமயம் என் குழந்தைக்கு நீ தகப்பன் ஸ்தானத்துல பார்த்துக்க வேண்டாம். என்ன சித்தப்பன் நீன்னு காறி துப்புவான். முதல்ல சாப்பிடுங்க அண்ணி. நீங்க சாப்பிட்டா தான் எல்லாருக்கும் நிம்மதி” என்று தட்டில் உணவை வைத்து சாப்பிட கூறவும், நிரஞ்சனும் ‘எனக்கு பசிக்குது’ என்று கூற கூட்டமாய் சாப்பிட அமர்ந்தனர்.
மானஸ்வி தயங்க, “உனக்கென்ன தனியா சொல்லணுமா? சாப்பிடு.” என்று அதட்டவும், மானஸ்வி பயத்துடன் சாப்பிட துவங்கினாள்.
பிருந்தா உணவு தட்டில் கை வைக்காமல் இருக்கவும், "ஏன் அண்ணி.. எங்கண்ணன் உயிரை சுமக்க பிடிக்கலையா? என் அண்ணனோட உயிர் அண்ணி. ப்ளீஸ்.. நீங்க அழறதுக்கு எல்லாம் ஒரு விடிவு வரும்." என்று கூற பிருந்தா சாப்பாடு இறங்க மாட்டேங்குது விஹான். அவரோட எப்படியெல்லாம் வாழணும்னு கனவு கண்டேன்" என்று கலங்கினாள்.
விஹான் கண் காட்ட பங்கஜம் ஊட்டி விட்டார். “சாப்பிடு அண்ணி. இதுக்கெல்லாம் காரணமானவங்களை நான் கண்டுபிடிப்பேன்” என்றதும் விழுங்கினாள்.
அன்று முழுதாக ஜெய்சங்கர் நிரஞ்சன் கவிநிலா என்று அந்த குடும்பத்தை கவனித்தனர்.
தந்தையை கண்டதில் நிரஞ்சனுக்கு சந்தோஷம் என்றாலும் தாய் சிவகாமி இறந்ததில் துக்கமாய் இருந்தான்.
நாளை தங்கள் வீட்டுக்கு சென்றிடலாமா என்று ஜெய்சங்கருக்கு தோன்றியது. எத்தனை நாள் தான் இந்த குடும்பத்தில் உட்கார்ந்து சாப்பிடுவது?
பிருந்தா ஒரு பக்கம் வீட்டில் சாய்ந்தமர்ந்திருக்க, மானஸ்வி மறுபக்கம் அழுது வடிந்திருந்தாள்.
இங்கே பிருந்தா அண்ணி அண்ணனை இழந்தது போல மானஸ்வி தன் காதலனை இழந்திருப்பாளோ? அதன் கவலை.
ஆனால் வினோத் இறந்ததாக இன்னும் உறுதியாகவில்லையே. அவள் பெயரும் ஹாஸ்டல் பெயரும், வேலை செய்த இடம் என்று அனைத்தும் கூறியிருக்க, மானஸ்வி’ என்ற பெயரை போட்டு சமூக வலைத்தளத்தில் தேடினான். ஏகப்பட்ட மானஸ்வி பெயர் வந்தது.
அவளது புரப்பைல் பிக்சர் கண்டுப்பிடித்து பார்வையிட, அவளது உடையும் அவள் பணிச்செய்யும் டேக் கழுத்திலிருந்தது.
எப்படியும் ஒரு பெண் தன்னை தானே பார்த்துக்க தேவையான அளவு சம்பாதிப்பதை அதில் தெரிந்துக் கொண்டான். உள்ளுக்குள் மெச்சுதல் காட்டி பாராட்டினான்.
தற்போது அவளை காண நெய்ந்து போன உடையோடு காட்சிக்கு இருந்தாள்.
அதே போல நிரஞ்சனும், சாப்பிட்டு இருந்த விஹான் கையை அலம்பி வேகமாய் வெளியேறினான்.
முன்பெல்லாம் தந்தை சுதாகர் ஏன் பாதி சாப்பாட்டில் போறான்.’ என்று திட்ட ஆரம்பித்திருப்பார். இப்பொழுது கதையே வேறு. விஹான் சர்வாவின் இறப்பிற்கு யார் காரணமென உண்ணாமல் உறங்காமல் ஒடுகின்றானே.
ஒரு மணி நேரம் கழித்து துணி மணிகளை வாங்கி வந்தான்.
நிரஞ்சனிடம் கொடுக்க, மறுக்காமல் நன்றி கூறி வாங்கிக்கொண்டான். அவனுக்கு கொடுக்கும் பொழுது கவிநிலா சின்ன பெண் என்பதால் அவளுக்கும் வாங்கி வந்திருந்தான். இதில் ஜெய்சங்கரும் வந்ததிலிருந்து இரண்டு சட்டை துணியே மாற்றி மாற்றி போடவும் அவருக்கும் வாங்கி வந்தான்.
“எனக்கு எதுக்கு சார்? பழைய துணி கொடுத்தா கூட போட்டுப்பேன்” என்று மறுத்தார்.
“வாங்கணும்னு முடிவு பண்ணிட்டேன் அண்ணா. வச்சிக்கோங்க” என்று திணித்து விட்டு மானஸ்வியிடம் வந்தான்.
அவன் கொடுக்க வாங்காமல் விழித்தாள். “அன்னிக்கு… ஷோல்டரை பிடிச்சி டிரஸை கிழிச்சிட்டேன். சாரி” என்று கொடுத்தான்.
தாய் தந்தையர் சற்று தூரத்தில் நிரஞ்சன் கூட இருந்தார்கள். பிருந்தா தான் அருகேயிருந்தாள். மானஸ்வியிடம் விஹான் பேசுவதை கேட்கும் நிலையில் பிருந்தா இல்லையே. அவளுக்கு கண்ணுக்கு நிறைவாய் இருந்த கணவன் இப்பொழுது கண்ணெதிரே வராத கவலையில் இருந்தாள்.
மானஸ்வி நன்றி கூறி வாங்கினாள். அவளுக்கும் ஆடைகள் தேவையாக இருந்தது.
கலீயமூர்த்தியிடம் நிரஞ்சன் கிடைத்து விட்டதை உரைக்க அவரும் இரவு வந்து பார்த்தார். நிரஞ்சனிம் வாக்குமூலமாக வீடியோ எடுத்துக்கொண்டார்கள். மாஸ்வியிடமும் விசாரணை முடித்தார்.
ஜெய்சங்கர் பையனை அழைத்து நாளை செல்லலாமா என்று கேட்டார். தாய் இறந்ததுக்கு மகனாக எந்த சடங்கும் செய்ய முடியவில்லை.” என்று கூறியிருக்க கலீயமூர்த்தியோ அவரை ஊருக்கு போக கூறிவிட்டார்.
அதன் பின் விஹானிடம் பேசிவிட்டு கிளம்பினார்.
அன்றைய நாளில் தான் நிம்மதியாக மானஸ்வி உறங்கியது. பாதுகாப்பான சூழலில்…
அடுத்த நாள் காலையில் “நாங்க கிளம்பறோம் தம்பி. அப்பா அம்மாவிடம் சொல்லிட்டோம். அங்க வீட்ல போட்டது போட்டபடி இருக்கு. ஊர்ல பொண்டாட்டி செத்ததும் பிள்ளையை கூட்டிட்டு பதினாறு கூட முடியலை. எங்கயோ போயிட்டான்னு பேசுவாங்க. நிரஞ்சனை வீட்டுக்கு கூட்டிட்டு போனா ஒரளவு நிம்மதியா நடமாட முடியும். பெரிய போலீஸிடம் கூட சொல்லிட்டோம்” என்று கூறினார்.
விஹானோ "பத்திரமா போங்க. நிரஞ்சன் இனி எங்காரணத்துக் கொண்டும் வீட்டை விட்டு ஓடுற எண்ணத்தை விட்டுடு. நீ திரும்பி வந்தாலும் உங்கம்மா இப்ப இல்லை." என்று கூறவும் நிரஞ்சன் அழுதான்.
“இங்க பாரு.. பேச முடியாத தங்கை கவிநிலாவை நீ தான் கண்ணும் கருத்துமா பார்த்துக்கணும்.
அம்மா இல்லாத குறையை அண்ணனா நீ தான் இனி கவனிச்சிக்கணும். இது உனக்கு இரண்டாவது ஜென்மம். புத்திசாலி பையன் இனி நல்லபடியா இருப்ப.
நான் உனக்கு சர்பிரைஸ் விசிட்டா வந்து பார்ப்பேன்.” என்று கூறவும் நிரஞ்சன் விஹானை கட்டி அணைத்தான்.
இந்த அணைப்பு தன் அண்ணன் சர்வானந்தனுக்கு போய் சேர வேண்டியது என்று விஹான் நினைக்காமலில்லை.
தட்டி கொடுத்து அவனே பஸ் ஏற்றி விட்டான். அங்கு பத்திரமாக சென்றதும் போன் போட கூறினான்.
ஜெய்சங்கர் தழுதழுப்பாய் வணக்கம் வைத்து மகன் மகள் இருவரை அழைத்து கிளம்பினார்.
அவருக்கு தன் மகனால் இந்த குடும்பத்தில் பிருந்தா கணவரை இழந்து உள்ளாரே.
என்னதான் உத்தியோகம் என்றாலும் தன்மகனை பின் தொடராமல் இருந்தால் அவருக்கு இந்த அபத்தம் நேர்ந்திருக்காது.
வலியோடு அவர் செல்ல, விஹான் வீட்டிற்கு வந்தான்.
“அவர் வந்துட்டார் ஆன்ட்டி நான் சொல்லிட்டு கிளம்பறேன்” என்று மானஸ்வி கூற “எங்கப்போற?” என்று கேட்டான்.
“ஹாஸ்டலுக்கு” என்று கூறினாள்.
“ஒன்னும் வேண்டாம். உன் உயிருக்கு ஆபத்து இருக்கலாம்னு கலீயமூர்த்தி சொல்லியிருக்கார். நீ இரண்டு தடவை அவங்களிடம் தப்பிச்சிருக்க? ஏதாவது அவங்களை பத்தி சொல்லிடுவன்னு தேடலாம். அதோட உன்னோட வந்த வினோத் இன்னும் கிடைக்கலை.
நீ எங்கேயும் போகக்கூடாது. அப்படி போகணும்னா இங்கிருந்தே வேலைக்கு போ.” என்று கூறினான்.
“இதென்ன அநியாயமா இருக்கு? நான் வினோத்தை தேட வேண்டாமா?” என்று கத்தினாள்.
‘இங்கிருந்தே தேடு. நானும் என் அண்ணனை கொன்ற நாய்களை தேடறேன். நீ உன் பிரெண்ட்டை தேடு” என்றான்.
அம்மா அப்பா இருக்க காதலன் என்று கூறாமல் தவிர்த்தான்.
மானஸ்வி முகம் வெறுப்பை காட்ட, “இத்தனை நாளா கவிநிலா இந்த வீட்ல இருந்தா. எங்கண்ணிக்கும் வீட்ல இருக்கிறவங்களுக்கும் நீ அட்லீஸ்ட் இருக்கன்னு அழாம இருப்பாங்க. அதுக்காகவாதுயிரு” என்று ஹாலில் சட்டமாக்க வீற்றுக்கொண்டான்.
மானஸ்வி விஹானை முறைக்க, ‘என்ன?’ என்றதும் பிருந்தா இருக்கும் அறைக்குள் புகுந்தாள்.
-தொடரும்.
Interesting episode👍👍👍👍
Niranjan ah safe pannitan manasvi ku.appo innum aabathu iruku polayae athu na la than Vihan inga yae stay panna solluran ah
interesting nira jan ah serthu vachitanga sikram itha panavangala kandupidinga
Spr going 👌👌👌💕💕💕💕
Yen muraikura un nalathuku dana soluran enaku enamo iva lover vinoth um kettavan nu thonuthu. Bt yen sis sharva va sakadichega pavam brintha
Good going 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
சர்வாவ விட இவன் போலீசாகியிருந்தா கரெக்டா இருந்திருப்பான் போலயே எல்லாரையும் என்னம்மா அதட்டி உருட்டுறான்.
மானஸ்வி விஹான் ஜோடியா சூப்பரா இருக்கும். ..வினோத் தான் இந்த கடத்தல் கூடத்துக்கு தலைவனா இருப்பானோ