அழகான காலை பொழுது மலர்ந்துக் கொண்டிருந்த சமயம். “என்னங்க என்னங்க… எழுந்திரிங்க. எவ்ளோ நேரம் தூங்குவிங்க” என்று எழுப்பிய சாம்பவியை தன் வன்கரத்தால் இழுத்து, நெஞ்சில் பதிய வைத்து கொண்டவன், “சாம்பவி மேடம் ரொம்ப குஷியா இருக்கிங்க? அதுவும் குளிச்சி முடிச்சி” என்று மனைவியை நுகர்ந்தான்.
Thank you for reading this post, don't forget to subscribe!“நமக்கு இரண்டு பிள்ளைகள் இருக்காங்க நிவாஸ் சார். கொஞ்சம் பொறுப்பா நடந்துக்க பாருங்க” நெஞ்சின் ரோமத்தில் கோலமிட்டபடி உரைத்தாள்.
சாம்பவி நிவாஸ் காதல் தம்பதிக்கு மைதிலி என்று ஆறுவயது குழந்தையும், ஶ்ரீதர் என்ற இரண்டு வயது குழந்தையும் இருக்கின்றார். வெளிநாட்டில் க்ரீன் கார்ட் வாங்கிய சிட்டிசனாக, அங்கேயே ஒரு தமிழ் உணவகம் நடத்தி குடும்பத்தோடு இருக்கின்றான்.
சாம்பவி நிவாஸ் இருவருமே குடும்பத்தை எதிர்த்து மணமுடித்தவர்கள். திருமணமாகி அடுத்த மாதமே சாம்பவி குழந்தை உண்டாகி மைதிலி பிறந்தாள். பெரும்பாலும் காதல் மணம் புரிந்தவர்களுக்கு குழந்தை பிறந்துவிட்டால் வாரிசு என்றும், குழந்தை முகத்திற்காகவும் பெற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். இங்கே சாம்பவி நிவாஸ் குடும்பத்தில் தலைகீழானது. ஶ்ரீதர் பிறந்தப் பின்னரும் இரு வீட்டிலும் இவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை.
அந்தளவு பிடிவாதமும், இருவீட்டிலும் வீம்புக்கு பேசாமல் திரிந்தனர்.
சாம்பவி விளையாட்டாய் யூடியூப்பில் தங்கள் சுற்றுலா செல்லும் இடம், குழந்தைகளின் சுட்டிதனம், அமெரிக்காவில் நம்மூர் சமையல்’ என்ற டேக் போட்டு சில பதிவை ஏற்றி பொழுது போக்கும் விதமாக, இந்த காலத்து பெண்களை போல திரிய, அதில் இரு குடும்பத்து பெற்றவர்களும், யூடியூப் பார்த்து வந்தனர்.
அப்படி பார்த்த சமயம் பேரன் பேத்தியான, மைதிலி ஶ்ரீதரின் பூமுகம், சேட்டை பேச்சு லேசாக மனதை தளர்த்தியிருக்க வேண்டும்.
அதுவும் இரண்டு வயதே ஆன ஶ்ரீதர் சமீபத்தில் வந்த படத்தில் வரும் நாயகர்களை போல பேசுவது என்று ஆட, மனதை கொள்ளை கொண்டான்.
காலம் கனிந்தாலும், காதல் மணம் புரிந்தவர்களை குழந்தைகளுக்காக ஏற்க நினைத்து, சாம்பவி அம்மா கோகில் தான் முதலில் பேசியது. அதன் தொடர்ச்சி சாம்பவியின் தந்தை தாமோதரன் பேசினார்.
எங்க வீட்ல நம்மளை ஏற்றுக்கொண்டார்கள் என்ற சாம்பவி மகிழ, நிவாஸோ “எங்க வீட்ல ஆல்ரெடி அம்மா சாவித்திரி பேசிட்டாங்க. அப்பா கண்ணன் தான் முகம் தூக்கி வச்சிட்டு இருக்கார். ஆனாலும் அம்மா எனக்கு போன் போட்டா அப்பா நம்ம நலத்தை விசாரிக்கறார்.” என்று சந்தோஷப்பட்டான்.
இப்படி ஆரம்பித்த மாற்றம் தான், “குழந்தையை போன்லயே பார்த்தது போதும். நம்ம வீட்டுக்கு வந்து நேர்ல எப்ப காட்டுவ” என்ற பேச்சில் இதோ விமானத்திற்கு டிக்கெட் பதிவு செய்யப்பட்டு விட்டது. இன்று இரவு பயணம். நாளை காலை சென்னையில் இறங்க வேண்டியது தான்.
சாம்பவியின் சந்தோஷத்திற்கு காரணம் இதுதான்.
ஊருக்கு செல்வதால் அங்கே அக்கம் பக்கத்தில் உள்ள உறவினருக்கு ஏதாவது வாங்க வேண்டுமென்ற நிவாஸும் சொல்லியிருக்க, எல்லாம் வாங்கி பேக் செய்தாயிற்று. நிவாஸின் தம்பிக்கு பெர்ஃப்யூம் மட்டும் வாங்க வேண்டும் என்று நிவாஸ் சொல்ல, “குழந்தையை எழுப்பாம என்னை எழுப்பிட்டு இருக்க. எனக்கென்னவோ நீ உங்க வீட்டுக்கு போனா நமக்கான தனிமை கிடைப்பது ரேர் என்று காலையிலேயே என்னை உசுப்பேத்த வந்திருக்க” என்று நிவாஸ் சீண்டியபடி மெத்தையில் மனையாளை சாய்க்க, “டேடி” “மம்மி” என்ற குரலில் சாம்பவி கணவனை தள்ளி நிறுத்தி எழ, “டேடி.. தாத்தா பாட்டி பார்க்க கிளம்பலையா? வாங்க,” என்று இவர்களை போலவே போனில் இந்த ஒரு மாதம் பழகிய தாத்தா பாட்டிகளை சந்திக்க ஆர்வம் கொண்டு வந்தார்கள்.
நிவாஸோ குழந்தைகளை அணைத்து கொண்டு, “பேக்கிங் எல்லாம் பண்ணிட்டியா சாம்பவி? கடைசியா நம்ம உணவகத்துக்கு போயிட்டு ஒரு மாதம் வருவது சாத்தியமில்லைன்னு சொல்லிட்டு அதுவரை பார்த்துக்க கூறி பொறுப்பை நண்பனிடம் சொல்லிட்டு வர்றேன். நீ பிள்ளைகள் தயாராயிருங்க.” என்று எழுந்தான்.
சாம்பவியும் குழந்தைகளும் துள்ளி குதிக்காத குறையாக எல்லாம் பேக்கிங் செய்தனர்.
நிவாஸும் தன் நிர்வாகம் நடத்தும் உணவகத்தில் நண்பனின் மேற்பார்வையில் விட்டுவிட்டு, வீட்டுக்கு வந்தான்.
சாம்பவி எல்லாமே தயாராக வைத்திருந்தாள். எப்பொழுது அவழது பெற்றவர்கள் போன் பேசி தங்கள் தவறை மன்னித்து, குழந்தையை காண ஆசையென்று கூறி, சென்னை வர சொன்னார்களோ அன்றிலிருந்தே காலில் சக்கரம் கட்டியிருந்தாள். இன்று சொல்லவா வேண்டும்?!
நிவாஸ் தன் குடும்பத்தோடு விமானத்தில் செக்கிங் எல்லாம் முடித்து இருக்கையில் அமரும் முன் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து தன் பெற்றவருக்கு அனுப்பி “இன்னும் சில மணி நேரத்தில் சென்னை வருவதாக” தெரிவித்தனர்.
சாம்பவியும் தன் சோஷியல் மீடியாவில் புகைப்படத்தை பதிவிட்டு, நீண்ட நாள் பிரிவுக்கு பின் தன் சொந்த பண்ணை மிதிப்பதாகவும், தாய் தந்தையரை காண போவதாகவும் போட்டு லைக் கமெண்ட்ஸை கவனித்து வந்தாள்.
மைதிலி ஶ்ரீதர் இரு குழந்தைகளுக்கும் இது முதல் முறை விமான பயணத்தின் அனுபவமாக இருக்க ஆனந்த களிப்பில் வந்தனர்.
சென்னை சில வினாடியில் தரையிறங்க தயாரானது. ஆனால்…. தரையிறங்கும் விதம் கோளாறு காரணமாகவோ அல்லது என்ன காரணமோ தாறுமாறாக தள்ளாடியது.
ஆசையாக மண்ணில் காலடி வைக்க வந்தவர்களை, விமானம் வெடித்து நெருப்பு அரக்கன் அனைவரையும் விழுங்கி எப்பமிட்டான்.
தங்கள் பெற்றோருடன் தங்கள் குழந்தையை காண வந்த குடும்பம், தங்கள் அமெரிக்க குடியுரிமையை கூட பொருட்படுத்தாமல், நிவாஸ் நண்பனிடம் ஹோட்டலை தந்துவிட்டு சாம்பவிக்காகவும் தன் குழந்தைகளுக்காகவும் தன் சொந்த நாட்டில் தன் சொந்த வீட்டில் தன் பெற்றோருடன் வாழ வந்தவனது கனவுகள் கலைந்தது.
கனவு என்றால் என்ன என்றும் அறியாத மொட்டுப் போன்ற குழந்தையும் தீக்கு இரையாக மாறினார்கள்.
சாம்பவியின் பெற்றோருக்கு அவள் சாம்பல் கூட கிடைக்காது என்பதை அவர்கள் இன்னமும் டிவியகல் தொலைக்காட்சியை பார்த்து அறிய வேண்டிய சோகம் மட்டுமே எஞ்சியிருந்தது.
-முற்றும்.
-பிரவீணா தங்கராஜ்
Indha story ah padikum pothu ennaku andha fight accident la erandha doctor family than niyabagathuku varaga kanavu ellarukum nijam aagurathu illa aana indha mathiri motham ah kalaiyum pothu than rombhavae varutham.ah iruku
கனவுகள் சுமந்து
கடல் கடந்து
குடும்பத்தை காண
குதூகலமாக வந்த
குடும்பத்தின் ஆசை
கனவுகள் எல்லாம்
கனலுக்கு இரையாகி
காற்றோடு கரைந்தது….
கடந்த வாரத்தில்
கண்ட துயரமான சம்பவம்
கண்முன் நிற்கிறது
கலங்கிய நெஞ்சம்
கனமான கதை 👏🏻👏🏻👏🏻💐💐💐 வாழ்த்துக்கள் மா…..
Endha story ya padikumbodhu andha flight crash dhan sis niabagam varudhu evlo per evlo kanavugaloda kelambiyirupanga eppdi agum nu yaarum nenachirukka maatanga la😥 life is unpredictable 🤷
evlo santhosama kelambina family thedirnu ippadi nadakumnu ethipathu iruka matanga avangala paka kathutu iruka amma appa ku inum vishayam theriyama ethir pathu antha kanavu kalaium pothu vali yaralaum ethuka mudiyathu , athu mattu illama ithana yrs pirinji irunthavangaluku ethana kanvugal irukum . intha story padikum pothu kandipa antha crash erantha family tha kanu munnadi nikuthu , but athula oru nalla vishayam alagana family la kolanthainga yarathu thaniya oruthar mattum uyir thappi iruntha nama santhosa paduvom aana antha kolanthai vazhravarai evlo kasta padum ninaikum pothu manasu kanakuthu
athuku intha mari nadanthathe beter . Ithe santhosathoda sorgathula irukanum irupanga .
congratulations sisy