பண்பில் சிறக்க பாங்காய் நடந்திட
Thank you for reading this post, don't forget to subscribe!பாரில் செழிக்க வேண்டுவது கல்வி
இருளில் முழுகும் இந்தியாவை
இனிதாய் மாற்ற வேண்டுவது கல்வி
தன்னிலை உணர்ந்த மனிதராய்
தன் காலில் நிற்க வேண்டுவது கல்வி
சமுதாய இன்னலை களைந்திட
சரித்திர நூலை கற்றிட வேண்டுவது கல்வி
முட் போன்ற வாழ்க்கை பாதையை
முழுவதும் ரோஜாவனமாக மாற்றபடுவது கல்வி
— பிரவீணா தங்கராஜ் .
*ஜூன் 2009 மாத ” மங்கையர் மலரில்” பிரசுரிக்கப்பட்டவை .
