Skip to content
Home » காதலை கண்ட நொடி-1

காதலை கண்ட நொடி-1

முதல் அத்தியாயம்..

காலை ஒன்பது மணி இருபது நிமிடங்களில் இந்தியாவில் தனது பெரிய பெரிய கால்களை( அதாங்க சக்கரம்) பதித்தது இன்டியன் ஏர்லைன்ஸ் விமானம்..
மணமகனே.. மணமகனே வா.. வா..
உன் வலது காலை எடுத்துவைத்து வா..வா..
(எதே மணமகனா🤔🤔🤔 எப்பவும் மருமகளேனு தானே வரும் பாட்டு..இது என்னவா இருக்கும்)
“அதை நான் சொல்றேன்..ஊருல நல்ல நல்ல ப்ரண்ட்ஸ் எத்தனையோ பேர் என் கிரஹம் இவனுக்கு ப்ரண்ட்டா வந்து சிக்கி சின்னாபின்னமாகிட்டு இருக்கேன்.. தமிழ கத்துக்கொடுத்த மாதாஜி இந்த படவா ராஸ்கல்க்கு தமிழர் பண்பாட்டை சொல்லிக்கொடுக்க மறந்ததால இவரு அப்படி இப்படினு இருக்க.. இப்போ திருந்தி தமிழ் பண்பாட்டை கத்துக்கொடுனு என் ஆளை கரெக்ட் பண்ண ஐடியா கொடுனு என் ஜீவனை பறிச்சுட்டு இருக்கான்.. மீ.. ஜோகம்..வெரி பாவம்.. நான்தான் இவனுக்கு ப்ரண்ட்டா வேலை செய்யுற ஜோன்ஸ்..எல்லாரும் ஜோ னு கூப்பிட இந்த கபோதி பய மட்டும் என்னை ஜோனி கோணினு கூப்பிடுவான்..நான் எங்க எப்படி இருக்க வேண்டியவன் தெரியுமா? என்னை கடைசியில இப்படி பொலம்ப விட்டுட்டான்..” என்றவன் புலம்பும்போதே..

“என்னடா என்மேல பாசம் ஜாஸ்தி ஆகி போச்சா?” என்றபடி வந்து இறங்கிய ப்ளைட்டில் இருந்து வெளி வந்த படி தன் நண்பனை பார்த்து பாவம்போல் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டான் இஷான்..(என்னங்கடா பேரு இது.. இஷான்னு இழுத்தான்னு)
“என்ன.. என்ன.. என்னத்த இழுத்தான்” பதறியபடி கேட்டான் ஜோ..
ஒன்றுமில்லை என்று தெரிந்த பின்..
“இவனுக்குலாம் எவன்டா லண்டனோட ப்ரஜைனு கார்டு கொடுத்தவன்.. அவன் மட்டும் என் கையில மாட்டட்டும் இருக்கு அவனுக்கு” என்று கூற
“ஃபோன் போட்டு கொடுக்கவா மச்சி” என்றான் இஷான்..
“அடேய் கிராதகா.. ஏன்டா ஏன் இப்படி உன் மூஞ்சிய பார்த்து ப்ரண்ட்ஷிப் வெச்சதுக்கு என் மூஞ்சிய அடையாளம்தெரியாதஅளவுக்குமாத்த அலையுற.. ஒழுங்கா ஓடிடு..” என்றான் கோவமாய் ஜோன்ஸ்..
“இல்ல மச்சி ஓடிப்போக ஆள் இல்லை.. ரெடி பண்ணிட்டு ஓடுறேனே ப்ளீஸ்..” என்றான் இஷான்..
பக்கென சிரித்துவிட்டான் ஜோன்ஸ்..
“நீ ஓடுறியோ இல்ல நம்மல ஓடவிட்டு அடிக்க போறாங்களோ.. அவங்களுக்கே வெளிச்சம்..வா போலாம்.. பசிக்கிது.. அடிக்கிற வெயில்ல எப்படி வந்து இருக்கான் பாரு நல்லா பப்ஃபூன் மாதிரி” என்றான் ஜோன்ஸ்.
“ஏன்டா எப்பவும் போல தானே வந்தேன்?” என்று அவன் கேட்க..
“தம்பி இது சிங்கார சென்னை நாட் லண்டன்.. இங்க வெயில் வெயில் வெயில்.. அப்படியே வருண பகவான் மனசு வெச்சா வெள்ளம் வர்ற வரை மழை மழை மழை..அப்படித்தான் இருக்கும்..இந்த கிளைமேட்க்கு இந்த ஃகோட் சூட்லாம் செட் ஆகாதுடா” என்று கூற..
“ஓஓஓ..” என்றவன் தன் ஃகோட்டை கழட்டினான்..ஆவென அவனை பார்த்தான் ஜோன்ஸ்…
“என்னா மச்சி அப்படி பார்க்கிற? என்னை சைட் அடிக்கிறியா? நான் அப்படிபட்ட பையன் இல்லடா” என்று கூற இவன் என்ன சொல்றான்னு யோசித்த ஜோன்ஸ் அவன் சொன்ன வார்த்தையின் அர்த்தத்தை உணர்ந்தவன் கோவமாய்
“அடேய்.. என்னை கொலைகாரன் ஆக்காதே.. ஏதோ பார்க்க நல்ல பிள்ளையா தெரியுறேனு பார்த்தா நீ என்னடானா என்னையே தப்பா சொல்ற? என் நேரம்டா வந்து தொலை” என்றான்..
இஷான்.. பிரிட்டிஷ்ம் தமிழும் கலந்த கலவை..அவன் தந்தை ஒரு பிரிட்டிஷ்காரர்.. தாய் தமிழர்.. முதலில் தாயின் விருப்பபடி கூடிய சீக்கிரம் தன் தாயின் விருப்பபடி தமிழ் பெண்ணை மணக்க வேண்டும் மற்றும் தமிழரின் பண்பாடு மற்றும் கலாச்சார முறைகளை கற்றுக்கொள்ளவேண்டும் என்று முடிவு செய்து இருந்தான்..

M.Tech படிக்கிறேன் என அங்கிருந்த கல்லூரியில் சேர்ந்தவனுக்கு கிடைத்த தோழன்தான் ஜோனஸ்.. காதல் வந்தால் கள்ளத்தனமும் வந்துவிடும் போல.. எப்போது தன்னவளை கண்டதும் காதலில் விழுந்தானோ..அப்போதே அவன் தமிழரின் அனைத்து வகையையும் அறிந்து கொள்ள ஆர்வமானான்..ஜோனஸ்ஸின் நட்பால் தமிழரின் பண்பாடு மற்றும் கலாச்சார முறைகளை அவனறியாமல் அறிந்து கொண்டான்..அதை அறிந்தபின் அவன் மனதில் அவன் தாயை பற்றியமதிப்பு அதிகமாகியது அதே சமயம் தன் தாயின் மடிக்கு இப்போது அவன் மனம் ஏங்கியது.. தாயின் ஞாபகம் அலைமோத அவனது வாடிய முகத்தை கண்ட ஜோனஸ்ஸும் வருந்த அவனது தோளில் ஆறுதலாய் கை போட்டு..”சீக்கிரமே எல்லாம் சரி ஆகிடும்டா..நோ வொர்ரீஸ்..” என்று கூற..உடனே தனது வருத்தத்தை மாற்றிக்கொண்டவன்.. அவனோடு கலகலப்பாக பேச ஆரம்பித்து விட்டான்..
இதுதான் இஷான்.. மலையளவு பாரம் இருந்தாலும் அதை தன்னை சுற்றி இருக்கும் நெருக்கமானவர்களுக்காக மறைத்துவிடுவான்..
(அப்படி இன்னா பாரமா இருக்கும்..🤔🤔)
வந்து refresh செய்து கொண்டவனுக்கு டீ கொடுப்பதற்கு பதிலாக.. shampine பாட்டிலை நீட்டினான் ஜோனஸ்..அவனை பார்த்து சிரித்தவன்…
“I stopped to drink alcohol jony.. so I want tea for my refreshment” என்றானே பார்க்கலாம்..
“எதே.. நீயாடா..நீயாடா குடிக்கிறத நிறுத்தின..ஐயகோ.. என் குட்டி இதயம் அப்பாவுக்கும் பிள்ளைக்கும் நடுவுல மாட்டிக்கிட்டு காணாம போய்டும் போலயே.. உன்ன குடியும் குடித்தனுமுமா.. கண்ணும் கருத்துமா பார்த்துக்க சொல்லி உங்கப்பா இப்போதான்டா ஒரு அரைமணி நேரம் லெக்ச்சுரர் எடுத்தாரு.. இந்த ஒத்த வார்த்தையை அப்போவே சொல்லி இருந்தா நான் இந்நேரம் அவருக்கு ஒரு சொற்பொழிவு ஆத்தி இருப்பேனே..ஆனாலும் இந்த பால்டப்பா மூஞ்சிய நம்ப முடியலையே.. உண்மையாகவா எசமான்?” என்று மூச்சு பிடிக்க பேசியவனை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான் இஷான்..

“என்றா..சிரிப்பு கேள்வி கேட்டா பதில் சொல்லனும்.. அத வுட்டுபோட்டு என்னடா சிரக்குறவன்?” என்று அவன் டோனை மாத்தி பேச இது கோவமாக பேசும்போது ஜோனஸ் பேசும் பாஷை என்பது வரை அறிந்து இருந்தவன் சிரிப்பை கட்டுப்படுத்திக்கொண்டு.. அவனை பார்த்து..
“ஜோனி.. அம்மாக்கு புடிக்காத எல்லாம் விட்டுட்டேன்டா.. இப்போதைக்கு நான் இங்க வந்தது என் வேலைக்கு.. அதை கரெக்டா செஞ்சு அப்பாவோட மரியாதையை காப்பாத்தனும்.. அதான்.. ப்ளீஸ் டீ கொண்டு வா..ரொம்ப ஜெட்லாக்கா இருக்கு..இவ்ளோ தூரம்லாம் நான் ட்ராவல் பண்ணி அதும் இவ்ளோ வெயில்ல வந்ததே இல்லடா” என்றான் சீரியசாக.. அம்மாவை பத்தி பேசியதால் அவனும் வேறு எதுவும் கேட்காமல் அவனுக்கு டீ கொண்டு வர சென்றான்..
‘இவனுக்கு எதுக்கு இந்த தலையெழுத்து.. அம்மாவோட ஆசைக்கு அதுக்கு ஏத்த மாதிரி ஏதாவது செஞ்சு இருக்கலாம்ல ஆனா.. இப்படி ராஜவம்ச வாழ்க்கையை விட்டுட்டு இங்க சாதாரண ஒரு லைஃப் வாழ வேண்டிய அவசியம் என்ன வந்துச்சு.. எது எப்படியோ என் நண்பன் வாழ்க்கை நல்லா அமைஞ்சா அதைவிட எனக்கு என்ன சந்தோஷம் இருக்கு’ என்று எண்ணியபடி அவனுக்கு டீயை தன் கையாலேயே போட்டவன் கூடவே ஒரு பிஸ்கட் பாக்கெட்டையும் கொண்டு சென்று நீட்ட..
வேறு வேறு எண்ணங்களில் திளைத்தவன் ஆவி பறக்கும் டீயுடன் பிஸ்கட்டை பார்த்தவனுக்கு கண்கள் கலங்கி விட்டது.. தன் தாய் போல நண்பனும் பசி அறிந்து செயல்படுவதை எண்ணி நெகிழ்ந்து போனான்..
“அம்மாகிட்ட அடிக்கடி சொல்வேன்டா..நீ அம்மா மாதிரியே பிஹேவ் பன்றனு.. அப்போலாம் அம்மா சொல்லுவாங்க.. அது தான் தமிழ்காரங்க பண்பாடுனு
I didn’t understand that words meaning but now I realise that da..” என்று அவனிடம் தன் மனதை மறைக்காமல் எடுத்துக்கூறியவன் பிஸ்கட்டை டீயில் நனைத்து சாப்பிட்டு டீயையும் குடித்தவன்.. அவனே சென்று டீ கப்பை கழுவி வைத்துவிட்டு வரும்வரை அவன் அப்படியே உறைந்து நின்றிருந்தான்..
வந்து அவனை உலுக்கியவன்
“இந்த டயலாக்குக்கு இவ்ளோ சீன் ஆகாதுரா.. ரீடர்ஸ்ஸே ஏத்துக்க மாட்டாங்க.. கப்ப நானே கழுவிட்டேன்.. தூங்கபோறேன்.. நாளைக்கு சீக்கிரமே போகனும் எழுப்பி விடுடா..இங்க டைமிங் கரெக்டா மெயின்டெயின் பன்னனும்..” என்றவன் படுத்து தூங்கியும் விட்டான்.. அவனையே ஆவென பார்த்துக்கொண்டு இருந்த ஜோனஸ் கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் வழிந்தது..
‘எப்படிலாம் இருந்த இஷான் இப்போ இப்படி மாறி வந்து நிக்கிறானே.. அம்மாவுக்காகனு இன்னும் என்னலாம் கஷ்டப்பட போறானோ? அவ்ளோ வசதி கப்ப வாங்ககூட அங்கே ஆள் இருப்பாங்க.. நினைச்சா உடனே முன்னாடி நிக்கும் ஆனா அதெல்லாம் விட்டுட்டு இங்கே வந்து இப்படி கஷ்டப்படனும்னு இவனுக்கு என்ன கிடக்கு? ஆண்டவா சின்ன தோல்விய கூட ஏத்துக்க முடியாத என் நண்பனை எந்த தோல்வியும் தழுவ விட்டுடாதே.. அவன் பாவம்.. அத்தனையும் விட்டுட்டு அவன் ஓடிவந்த காரணம் ஜெயிக்கனும்.. நீதான் ஜெயிக்க வைக்கனும்’ என்றுவிட்டு சென்றான் தன் அறைக்கு..

தூரத்தில் தெரியும்
விண்மீனாய்..
என் மனவானில்
உனை கண்டேன்..
எனது வாழ்வின் விடிவெள்ளியாய்..
நெருங்கி வரும் வேளையில்
உணர்ந்தேன்..நீ
விடிவெள்ளி
அல்ல..
என் இதயத்தை கூறுபோடும்
ஈட்டி என்பதை..
காயங்களோடு காதலாய் நான்…
-டைரியில்..
மறுநாள் அதிகாலை ஐந்து முப்பது மணியளவில் அவனே முழித்துக்கொண்டான்.. எழுந்து நேரம் பார்க்க அது லண்டன் டைம் காட்ட..
“டைம் இருக்கு.. இன்னும் கொஞ்சம் தூங்கலாம்” என்று கூறியபடி மீண்டும் ப்ளாங்கெட்டை கொண்டு முகத்தை மூடியவன் அடுத்த இரண்டு நிமிடத்தில் துள்ளி குதித்து எழுந்தான்..
“அய்யய்யோ.. இது இன்டியன் கன்ட்ரில இதை மறந்தே போய்ட்டேனே.. அப்போ இந்தியா டைம் என்ன?” என்று யோசித்தவன்.. யோசித்து முடிப்பதற்குள் ஆறு மணி ஆகிவிட்டது..அவசரமாக எழுந்தவன் ஓடிச்சென்று ஜோனஸ்ஸை எழுப்பினான்..
“எவன்டா அவன் நடுராத்திரி எழுப்புறவன்?” என்றபடி புரண்டு படுத்தவன்மேல் பக்கத்தில் இருந்த தண்ணீரை எடுத்து கொட்டினான்..
அலறி அடித்து எழுந்தான் ஜோனஸ்..
எதிரில் அவனை கோவமாக பார்த்தபடி நின்றிருந்தான் இஷான்.. கோவத்தில் அவனை முறைத்தவன்
“ஏன்டா..கிராதகா..உனக்கு நான் என்னடா பாவம் பன்னேன்..எதுக்குடா இப்படி அர்த்தராத்திரி என் தூக்கத்தை கெடுக்குற?” என்று கேட்க..
“வாட் டிட் யூ சே.. கிராதகா.. தட் வேர்ட் மீனிங் ஈஸ் வாட்?.. அண்ட் என்ன சொன்ன அர்த்த ராத்திரியா? அப்படினா?” என்று கேட்க..
“இவன் தமிழ் கத்துக்ககுள்ள நான் போய் சேர்ந்துடுவேன்” என்று தலையிலடித்துக் கொண்டவன்..
“கிராதகானா.. disturb பன்ற கொடுமைகாரன்.. அர்த்த ராத்திரினா மிட் நைட்டு டா.. ஏன்டா இப்படி படுத்துற?..நான்லாம் வெயில் காலத்திலேயே குளிக்க யோசிப்பேன்.. நீ இப்படி பனியில தண்ணி ஊத்தி என்னை கொல்ல பார்க்கிறியேடா?” என்று அவனுக்கு விளக்கமும் கொடுத்து கோவமாய் கேள்வி கேட்டுக்கொண்டே உடை மாற்றிவிட்டு சோஃபாவில் படுத்தான்..
“நான்..மீ..கொடுமைகாரனா? குட் ஜோக்.. இட்ஸ் ஓகே.. தென் இட்ஸ் நாட் மிட் நைட் நவ் டைம் ஈஸ் சிக்ஸ்.. சோ.. வேக் அப் ஜாக்கிங் போகனும் வா” என்று கூற..
“எதே.. இந்த குளிர்ல ஜாக்கிங்கா?.. ஏன்டா ஒரேடியாக என்னை கொல்ல ப்ளான் போட்டுட்டியா?” என்று அவனை பார்த்து அதிர்ந்து கேட்க..
“வாட்.. டேய் லண்டன விட இங்க ஃகோல்ட் கம்மியா தானே இருக்கு.. அங்கே ஸ்டே பன்னி படிச்சவன்தானே நீ.. இந்த ஃகோல்ட் கூட தாங்க மாட்டியா?” என்று கேட்டவன்..
“அண்ட் ஆல்சோ இந்த ஊரை பத்தி ரூட்லாம் எனக்கு தெரியாது.. சோ நீ வா” என்று அவனை அழைக்க..
“அடேய்..அடேய்.. நான்லாம் எட்டு மணி ஆகாம எழவே மாட்டேன்டா..
என்னைப்போய் ஜாக்கிங்லாம் கூப்பிட்டா வாட் கேன் ஐ டூ..லண்டன விட்டு ஓடிதான்டா வந்தேன்.. இங்க வந்தும் என் உயிர வாங்க பின்னாடியே வந்து நிக்கறியே” என்று பேச..
அவனை ஆழ்ந்து பார்த்தவன்..
“சோ..நீ வரமாட்ட” என்று கேட்க..
“உயிரே போனாலும் ஜாக்கிங் வர மாட்டேன்” என்றுவிட்டு கவுந்து படுத்தான்.. சிறிது நேரம் அமைதியாக இருந்தது.. பின் இஷான் குரல் கேட்டது..
“ஹலோ..டாட்” என்று கூற.. அலறி அடித்து எழுந்தவன் பாய்ந்து சென்று ஃபோனை புடுங்கி கட் செய்தான்..
“வர்றேன்.. வந்து தொலையுறேன்..”என்றபடி கடுப்புடன் கிளம்பினான்..
அவனை கூட்டிக்கொண்டு பக்கத்தில் இருந்த கிரவுண்ட் க்கு சென்ற ஜோனஸ்.. அவனை “நீ என்னனா பன்னு மேன் என்னை விட்டுடு.. நான் இங்க உட்கார்ந்து இருக்கேன்” என்றுவிட்டு அங்கிருந்த பென்ச்சில் உட்கார்ந்து விட்டான்..
“Lazy fellow” என்றுவிட்டு தனது உடற்பயிற்சியை செய்ய சென்றான்..
பிறகு இருவரும் வீட்டுக்கு செல்ல தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வந்தவன்..அவனுக்கு உதவ இருவரும் சேர்ந்து சமைத்து முடித்து குளித்து கிளம்பினர்..

ஸ்பைசி எஃப் எம்..
சென்னையின் ராயபுரம் பகுதியின் முக்கியமான பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற வானொலி மையம்..
ஸ்டீவ் துவக்கிய இந்தியாவின் பல மாநிலங்களில் பேமஸாக இருக்கும் ரேடியோ.. அதனுள் நுழைந்ததும் இருவரும் நிமிர்ந்து மிடுக்காக நடந்தனர்.. உள்ளே செல்ல செல்ல இருவருக்கும் எல்லோரும் எழுந்து வணக்கம் தெரிவித்தனர்..
அனைவருக்கும் பதில் வணக்கம் சொன்னவர்கள் நேரே தங்களது கேபினுக்கு சென்றனர்..
ஜோன்ஸ் தனது செயலாளரை அழைத்து அர்ஜென்ட் மீட்டிங்குக்கு அரேஞ் செய்ய சொல்லி விட்டு வைத்தான்..
அடுத்த அரைமணி நேரத்தில் அங்கு கூடிவிட்டனர்.. அனைத்து பிரிவுகளின் மேலாளர்கள்..
“Good morning guys.. this meeting is for introducing our new manager of our spicy fm..( காலை வணக்கம் நண்பர்களே.. இந்த மீட்டிங் எதற்காக என்றால் நமது புது மேனேஜரை அறிமுகபடுத்துவதற்காக..)
Let me introduce Mr. Ishan Dyson..
From London..He is appointed directly from steeve sir.. our ceo and founder all r in one person..(இப்போது உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.. திரு.இஷான் டைசன்..ப்ரம் லண்டன்.. இவர் நமது சி.ஈ.ஓ மற்றும் நிதியாளர் ஸ்டீவ் அவர்களின் மூலம் நேரடியாக பணியில் அமர்த்தப்பட்டவர்)”
என்று அவன் அறிமுகம் செய்ய எழுந்து நின்று அவன்..

“Hi guys.. I’m Ishan Dyson.. i finished business development and management so Mr.steeve appointed me as ur manager for learn my new indian business experience.. so please co-operate with me and help to learn easily..(ஹாய் நண்பர்களே.. நான் இஷான் டைசன்.. நான் பிசினஸ் டெவலப்மெண்ட் அண்ட் மேனேஜ்மென்ட் படித்துள்ளேன் அதனால் ஸ்டீவ் சார் என்னை இந்தியாவின் வழி பிசினஸ் பயிற்சிக்காக அனுப்பி உள்ளார்..அதனால் எல்லாரும் எனக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்)” என்று அவன் கம்பீரமாகவும் அழகாகவும் பேசி முடிக்க அவனது பேச்சு அனைவருக்கும் பிடித்துவிட..
“ஸ்யூர் சார்..அண்ட் வெல்கம் சார்” என்று அனைவரும் வாழ்த்த சிறு புன்னகையை வீச ஆண்களே பொறாமை பட்டு ரசிக்கும் வண்ணம் அழகனாய் தெரிந்தான்.. அதிலும் அவன் சிரிப்பும் சிரித்தால் அவனது உதடுக்கு கீழே தாடையில் தோன்றும் சிறு குழியும் அனைவரையும் ஈர்க்கும்.. அதிலும் அவனது கலரும் இந்தியர்கள் போன்ற கருப்பான சிகையும் பார்க்கும்போதே ஈஸியாக கண்டுபிடித்துவிடலாம் இவன் ஃபாரின் கொலாபுரேஷன்னு..
அவர்களுக்கு நன்றி தெரிவித்து வேலையை செய்யுமாறு அனுப்பியவனும் சொல்லவில்லை அவனுக்கு தமிழ் தெரியும் என..
அறிமுகம் செய்து வைத்தவனும் சொல்லவில்லை..
அதனால் அனைவரும் அவனுக்கு தமிழ் தெரியாது ஆங்கிலம் மட்டுமே பேசுவான் போல என எண்ணிக்கொண்டனர்..
புது மேனேஜரின் வரவு உடனடியாக ஆபீஸ் முழுவதும் பரவியது.. அவனை ஒரு ஷோ கேஸ் பொம்மை போல எல்லோரும் பார்த்தனர்.. பெண்கள் எல்லாம் அவன் அழகிலும் ஆங்கிலத்திலும் மயங்கி விழுந்தனர்..
மதியம்வரை அவன் அங்கு நடக்கும் வேலைகளை ஒவ்வொன்றாக தெரிந்து கொண்டவன்.. மாலை நான்கு மணி ப்ரோகிராம் செய்பவரை தன்னை வந்து சந்திக்குமாறு கூறிவிட்டு சென்றான்..
ஏனென்றால் நம்மாளு பன்ன அட்டகாசம்ல நடந்த நஷ்டத்துக்கு அவளை விசாரிக்க வேண்டி இருந்தது.. அதனால் அவளை ப்ரோகிராம் முடிந்ததும் வரச்சொல்லி சொன்னவன் எங்கோ வெளியே சென்றுவிட்டு வந்தவர்கள் ஜோனஸ்ஸை இறக்கி விட்டு
“நீ போடா நான் பார்க் பன்னிட்டு ஒரு ரவுண்டு போய்ட்டு வர்றேன்” என்றவன் தனது சூட்டை கழட்டிவிட்டு சாதாரண பார்மல் உடையில் இருந்தான்..சரியென ஜோனஸ் இறங்கி உள்ளே சென்று விட.. காரை பார்க் செய்வதற்கு இடத்தை பார்த்தவன் அங்கே போக நூலிழையில் அவனை முந்திக்கொண்டு சென்று அங்கே ப்ரேக் போட்டது ஒரு ஸ்கூட்டர்..
சட்டென சுதாரித்து அவன் ப்ரேக் போடவும் முன்னே நின்ற பைக்கில் மோதி விட்டது அவனது காரின் பேனட்…மோதிய வேகத்தில் ஓட்டி வந்தவன் தடுமாற அவன் விழப்போக பார்த்து சுதாரித்து நின்றான்.. அதற்குள் அவள் கீழே இறங்கி விட்டதால் விழவில்லை..

“ஓஓ… ஷிட்” என்று அவன் தலையில் தட்டிக்கொள்ள..
அதற்குள் வண்டியை விட்டு இறங்கியவள் தன் வண்டியை பார்த்தாள்.. அதன் பின்புறம் நேம் போர்டு பேனட்டில் மாட்டி இரண்டும் உடைந்து இருந்தது.. திரும்பி காரை பார்த்தவள் யோசித்து நேரே வந்து அங்கிருந்த ஒரு கல்லை எடுத்து வந்தாள்..அதில் அதிர்ந்தவன் வண்டியை விட்டு இறங்க அவனை பார்த்த உடனே தெரிந்து விட்டது அவளுக்கு இவன் வேறு நாட்டவன் என்று.. அவளது தோழன் கெளதம் அவளை அழைத்ததுலாம் அவள் காதுல விழவே இல்ல..
இறங்கிய இஷான் அவளை பார்த்து “சாரி மேம்.. ஐ டிடின்ட் எக்ஸ்பெக்ட் திஸ்?” என்று கூறியதை காதில் வாங்காமல்

“ஏன்டா வெள்ள பன்னி கண்ணு தெரியாது உனக்கு? இது என்ன உங்க நாடா உன் இஷ்டத்துக்கு பார்க் பண்ண? எங்க வண்டிய டேமேஜ் பன்னின உன் வண்டிய உடைக்காம விட மாட்டேன்டா மைதா..” என்று அவனை பேசவே விடாமல் அவள் கத்திக்கொண்டே அவன் வண்டியின் சைட் மிரர் கண்ணாடியை உடைத்தே விட்டாள்.. அதைக்கண்டு கெளதம் தலையில் கையை வைத்துவிட்டான்..அதில் அவன் அதிர்ந்து பார்த்து கோவம் கொண்டவன்..
“ஈஸ் திஸ் யுவர் பைக் மேடம்” என்று திமிராகவே கேட்டான் இஷான்..
“ஏன்டா இன்னும் எங்க நாட்டை விட்டு போகாம இருந்துட்டு எங்க உயிரை இப்படி வாங்குறீங்க?.. இந்தாடா வெள்ள பன்னி இது என் பைக்தான் அதுக்கு என்ன இப்போ? எஸ்.. இட்ஸ் மை பைக்” என்றாள் அவளும் கோவமாக..
அத்தனை நேரம் அவளது கண்களையே பார்த்துக்கொண்டு இருந்தவன் அதில் அவள் காட்டிய லயங்களை கண்டவன் ‘என்னா கண்ணுடா?’ என்று யோசித்துக்கொண்டான் ஆனால் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல்..
“ஐ செட் சாரி மேம்..யு டிடின்ட் நோட்டீஸ் மை வோர்ட்ஸ்.. அண்ட் ஆல்சோ யு broke மை மிரர்” என்று அவளை அழுத்தமாய் பார்த்து கூற..
“எதே சாரி சொன்னியா? ஏன்டா சாரி சொல்லிட்டா உன்ன விட்டுடனுமா? நீங்க பணக்காரங்க உங்களுக்கு லாம் கண்ணாடி உடைஞ்சதுலாம் ஒரு செலவா.. ஆனா எனக்கு.. எங்க அம்மாகிட்ட அந்த பைக்க வாங்க நான் என்ன பாடு பட்டேன்னு எனக்குத்தான் தெரியும் அசால்ட்டா வந்து இடிச்சுட்டு உடைச்சுட்டு நீ பேச்சு வேற பேசுற..எங்க அம்மா பார்த்தா என்னை விளக்குமாறு எடுத்து வெளுப்பாங்களே நீயாடா வாங்கிப்ப..இல்ல இதுக்கு நான் சேர்த்து வெச்ச காசை பூரா செலவு பண்ணனுமே அதுக்கு நீயா செலவு செய்வ” என்றவள் பொரிந்து தள்ள அவளை ஓடிவந்து தடுத்தான் கெளதம்..
“ஏன்டி அறிவு இருக்கா? அவரு நம்ம ஆபீஸ்க்கு வந்து இருக்காரு புது ஆளு போல தெரியுது.. அவருக்கு என்ன நீ வழக்கமா வண்டி நிறுத்துற இடம் தெரியுமா? அவர் காலியா இருக்கேனு நிறுத்த வந்து இருக்காரு.. அதும் கார் பார்க்கிங்ல பைக்க நிறுத்துற நீ அவருகிட்ட சண்டைக்கு போற அதும் பாஷை தெரியாத மனுஷன்கிட்ட” என்று கூற..
‘ஓஓஓ.. இவங்க எனக்கு தமிழ் தெரியாதுனு நினைக்கிறாங்களா? ஏன்டி மிர்ச்சி..கார் பார்க்கிங்ல பைக்க நிறுத்திட்டு இவ்ளோ பேச்சு வேற.. இருடி மிர்ச்சி உனக்கு இருக்கு’ என்று மனதில் எண்ணியவன் அமைதியாக நின்று பார்த்துக்கொண்டு இருந்தான்..
“ஆமால..”என்று யோசித்தவள்..அவனை பார்த்து திரும்பி..
“சரி சரி..நீ ஊருக்கு புதுசுனு விடுறேன்.. ஆனா ஒழுங்கா என் வண்டியை ரெடி பன்னி கொடுத்துட்டு போ.. இல்ல கொன்னுடுவேன்” என்றாள்..
அதற்கும் இஷான் அமைதியாக நிற்க..
“என்னடா பாஷை இவன்கிட்ட பேசுறது? இப்படி மலைமாடு மாதிரி நிக்கிறான்” என்று கடுப்புடன் அவள் பேச.. அவளை முறைத்த கெளதம்..
“ஏம்மா.. உன் வண்டிய அவரு ரெடி பண்ணனும்னா அவரு வண்டி கண்ணாடிய உடைச்ச நீ எவ்வளவு செலவு செய்யனும்னு யோசிச்சியா? அந்த ஒரு கண்ணாடிக்கே உன் வண்டி உன் கிட்னினு வித்து தரணும் பரவாயில்லையா?” என்று கேட்க..
அப்போது தான் தான் செய்த காரியத்தின் வீரியத்தை உணர்ந்தவள் அவனிடம் திரும்பி..
“நாயே நீ ஒருத்தனே போதும் என்னை கோர்த்துவிட” என்று திட்டிவிட்டு.. அவனிடம் திரும்பி அப்போதும் கெத்தாக..
“இந்தா பாரு வெள்ளகாரா.. நீ என் வண்டிய உடைச்ச..பதிலுக்கு நானும் உன் வண்டிய உடைச்சேன்.. ஐய்யோ இவனுக்கு தமிழ் வேற சொல்லி கொடுக்கனுமா? இந்தா மைதாமாவு..யூ டேமேஜ் மை காடி.. மீ ஆல்சோ டேமேஜ் யுவர் காடி.. இட்ஸ் மேட்டர் சால்வ்டு.. சோ..போ..” என்று கூறியவளின் கூற்றில் அவனுக்கு சிரிப்பு வர.. அதை அடக்கிக்கொண்டவன் அவளையே ஆச்சர்யமாய் பார்க்க.. ஏனோ தன் உணர்வோடு கலந்தவளையும் இவளையும் ஒன்றாய் ஒப்பிட்டு பார்த்தான்..’இவ அவளா இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்.. மை ஹாட் ஸ்பைசி மிர்ச்சி’ என்று எண்ணியவன்..உடனே தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டான்..
‘ச்சே அவ வேற.. இவ வேற..நான் இப்படி திங்க் பன்றேன்’ என்று நினைத்தவாறு நிமிர்ந்து பார்க்க.. அவளோ அங்கு இல்லை (நீ யோசிச்ச கேப்ல அவ எஸ்ஸ் ஆகிட்டா தம்பி)சுத்தி சுத்தி தேட.. அவளோ வாட்ச்மேன் அங்கிளிடம் கெஞ்சிக்கொண்டு இருந்தாள்…
“அங்கிள் ப்ளீஸ் எப்படியாவது கம்மி ரேட்ல வண்டி ரெடி பன்னுறவங்கள கண்டு பிடிச்சு கொடுங்க..ப்ளீஸ்..வீட்டுக்கு தெரிஞ்சா கொன்னுடுவாங்க அங்கிள்” என்று கெஞ்ச இவனுக்கே பரிதாபமாக ஆகிவிட்டது.. அந்த வாட்ச்மேனோ இவனை பார்த்துவிட்டு அமைதியாக இருக்க
அந்த வாட்ச்மேனை பார்த்து ‘ஷ்ஷ்’ என்று வாயில் கை வைத்தவன் கார் சாவியை காட்டி பைக் கீ வாங்கி கொள்ளுமாறு கண்ணை காட்டினான்..அதை புரிந்து கொண்ட அவர் மண்டையை ஆட்டிவிட்டு
“சரிம்மா பைக் சாவி கொடு நான் மெக்கானிக்க ஃபோன் போட்டு வர சொல்றேன்.. வந்து எடுத்துட்டு போவாங்க” என்று கூற சரி என்றபடி அவரிடம் நீட்டியவள்..
“அங்கிள்.. கொஞ்சம் காசு கம்மியா சார்ஜ் பன்ன சொல்லுங்க.. நிறைய காசு இல்ல என்கிட்ட” என்று கூற..
“சரிம்மா நான் பேசுறேன்..நீ போமா..ப்ரோகிராம்க்கு டைம் ஆச்சு” என்று கூற அதை மறந்து போனவள்..
“அச்சச்சோ மறந்துட்டேனே” என்றபடி உள்ளே ஓடினாள்.. அவள் செல்லும் வரை ஓரமாக நின்றவனிடம் வந்து நின்றார் வாட்ச்மேன்..
“சார்” என்றபடி நிக்க..
“அவங்க பைக் ரெடி பண்ணி ஒரிஜினல் பில் எனக்கு அனுப்புங்க.. நான் பே பன்றேன்.. அவங்களுக்கு கம்மியா சொல்லி வாங்கிகோங்க.. பைக் ரெடியானதும் பைக் கீ என்கிட்ட கொண்டு வந்து கொடுங்க.. அண்ட் கார் மிரர் ரெடி பன்ன சொல்லி பில் கொண்டு வாங்க..” என்றுவிட்டு சென்றான் உள்ளே..
அதற்குள்..

6 thoughts on “காதலை கண்ட நொடி-1”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *