Skip to content
Home » காற்றோடு காற்றாக-19

காற்றோடு காற்றாக-19

19

வாசலில் பைக் சத்தம் கேட்டு பிரியா வெளியே வந்து எட்டிப் பார்த்தாள். பைக்கை நிறுத்தி

ஸ்டேன்ட் போட்டு விட்டு உள்ளே நுழைந்தான் பலராமன்.

“வாங்க அண்ணா, எப்படி இருக்கீங்க?”

“நான் நல்லா தான் இருக்கேன். சங்கருக்குத் தான் உடம்பு சரியில்லைன்னு அண்ணி போன்

பண்ணி சொன்னாங்க. அது தான் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்”

“ஓ ! வாங்க உட்காருங்க”

“சங்கர் எங்கே ப்ரியா?”

“பண்ணையில் தான் இருப்பார்”

அப்போது அவனுக்கு காப்பி எடுத்துக் கொண்டு உள்ளே வந்த கெளரி “இல்லைங்க.

காலையிலே வெள்ளனே எழுந்து டவுனுக்கு போயிருக்குங்க” என்றாள்.

“ஓஹோ.” பலராமனுடன் சேர்ந்து பிரியாவும் பதில் சொன்னாள்.

“இன்னைக்கு நபார்ட் வங்கியிலிருந்து அதிகாரிங்க வராங்க”

“கடன் சான்க்சன் ஆயிருச்சா?”

“அதுக்குத் தான் இன்ஸ்பெக்சனுக்கு வராங்க”

அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போது வாசலில் ஒரு ஜீப் வந்து நின்று அதிலிருந்து சங்கரும்

அவனோடு மூன்று பேரும் வந்து இறங்கினார்கள்.

பலராமனைப் பார்த்து விட்ட சங்கர் “வாடா. பண்ணையை சுத்திப் பார்க்கப் போறோம். நீயும்

வா. போகலாம்” என்று அழைத்தான். போகும் போது கௌரியைப் பார்த்து டீ என்று விரலை

மடித்து ஜாடைக் காட்டி விட்டு சென்றான்.

அவனுடன் சென்ற அதிகாரிகள் அவன் சமர்பித்திருந்த திட்ட அறிக்கையை உள்ளது

உள்ளதுபடி ஒப்பிட்டுப் பார்த்து திருப்தி அடைந்தவர்களாய் வாசலுக்கு வந்து சங்கருடனும்

பலராமனுடனும் கைக்குலுக்கி விட்டுக் கிளம்பினார்கள்.

வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்த பலராமனுக்கும் சங்கருக்கும் டீ கொடுத்தவள் சங்கரைப்

பார்த்து “விவசாயப் பண்ணையில் இருந்து நமச்சிவாயம் என்பவர் எனக்கு போன்

பண்ணினார்”

“ஆமாம். நான் போனை எடுக்கலைன்னா உனக்கு போன் பண்ண சொல்லி உன் நம்பர்

கொடுத்திருந்தேன்”

“சாயங்காலம் வரதா சொல்லச் சொன்னார்”

“சரி. நான் தான் கெளரி வர சொல்லியிருந்தேன். மாட்டுக்கு தீவனத்துக்கு புல்லு போடணும்.

அதுக்கான இடம் பார்த்து மேலும் கொஞ்சம் விவரம் சொல்றேன்னு சொன்னாரு”

“ஆமாம். நீ சொல்லிக் கிட்டு இருந்தியே”

“அது தான். அவரு தான் இந்த சார் நமச்சிவாயம்”

“ஓஹோ”

“சாயங்காலம் நீ இருப்பே இல்லே”

“இருப்பேன். பாத்துக்கறேன்” அவன் கேட்காமலே சொன்னாள். “இப்போ நீ எங்கே போறே?’

“டவுனுக்கு”

“அப்படியே உரக்கடைக்காரரை பார்த்திடு. நீ கேட்ட விதை வந்திருக்காம்”

“வந்திருச்சா! குட். சரி வாங்கிக்கிட்டு வந்துடறேன்”

“சங்கரு, வைத்தியரு உன்னைத் தேடிக் கிட்டு வந்தாரு. போவும் போது ஒரு எட்டு பார்த்துட்டுப்

போயிடு”

“ஏன் நான் நல்லாத் தானே இருக்கேன்?”

“வைத்தியரு பார்க்கனும்னு சொன்னாரு. பார்த்துட்டுப் போயேன்”

“சரி”

“அப்படியே காப்பித் தூள்” என்றவள்”சாரிப்பா” என்று சிரித்தாள்.

“பரவாயில்லை. பையை எடுத்து வை. கூடவே மளிகை கடை ஜாபிதாவையும் எடுத்து வை.

வாங்கிக்கிட்டு வரேன்”

இருவரும் குடித்து வைத்த டீ டம்ளரை எடுத்துக் கொண்டு உள்ளே போனாள் கெளரி. அவள்

போவதையேப் பார்த்துக் கொண்டிருந்த பலராமன் திடீரென்று நினைத்துக் கொண்டார் போல்

கேட்டான்.”ஏன் சங்கர்! கெளரி சூப்பர் இல்ல”

பலராமனை நின்று ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தவன் என்ன நினைத்துக் கொண்டானோ

அல்லது பலராமன் குரலில் இருந்த ஏதோ ஒன்றை உணர்ந்து கொண்டானோ மெல்ல

சொன்னான். ”பலராம், நீ என் கூட பள்ளியில் ஒன்றாகப் படித்ததைப் போல கெளரி

என்னோடு ஒன்றாக வளர்ந்தவள்”

“ஓ, சாரி. நான் தப்பாக எதுவும் சொல்லிடலை”

“இல்லல்ல. நீ தப்பா ஏதும் சொல்லவில்லை. ஆனால் சொல்றேன்” என்று சொன்னவன்

“கெளரி என் கூட வளர்ந்தவள்”

“புரியுது. சகோதரி மாதிரி”

“ஊஹூம். என் சகோதரி மாதிரின்னு சொல்ல முடியாது”

“ஏன் அப்படி சொல்றே?” வியப்பாக கேட்டான் பலராமன்.

திடுக்கிட்டு கேட்டாள் சமையலறையில் இருந்த கெளரி.

உள்ளறையில் இருந்த பிரியாவும் கூடத் தான்.

பலராமனின் வியப்பை கண்டு விட்டு “நெஜம் தான் பலராமா, நான் கௌரியை என்

சகோதரியாக நினைத்ததேயில்லை. ஏன்னா, ஒரு சகோதரிக்கு செய்யும் எந்தவித சடங்கு

சம்பிரதாயம் சீர் செனத்தி என்று எதையும் நான் அவளுக்கு கொடுத்ததில்லை”

“கொடுத்தா தானா உறவு?”

“பணம் காசுன்னு இல்லாட்டா கூட நம்ம கிட்ட அன்பையாவது எதிர்பார்ப்பார்களே!”

“அது உண்மை தான்”

“நண்பனா இருந்தால் கூட நம்முடைய நட்பை பதிலுக்கு எதிர்பார்ப்பார்கள். ஆனால் கெளரி

என்னிடம் எப்போதும் எதையும் எதிர்பார்த்ததில்லை”

“உண்மை தான்”

இரு கரங்களையும் தலையின் பின்புறத்தில் கட்டிக் கொண்டு தலையை சாய்த்து விட்டத்தை

அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான். அவனை வேதனைப்படுத்தி விட்டோமே என்று

பலராமனுக்கு கழிவிரக்கமாகிப் போயிற்று பலராமனுக்கு.

“சரி விடு சங்கர். நான் எதுவும் தப்பா சொல்லிடலை” என்றான் மீண்டும்.

“உனக்கு சொல்லலை பலராம். எனக்கு நானே யோசித்துக் கொண்டிருக்கிறேன்”

“என்ன யோசனை?”

“கெளரி எனக்கு என்னவாக இருக்கிறாள் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்”

“ஒரு அந்தரங்க காரியதரிசி போல பார்த்து பார்த்து செய்யறாளே. அதனால் கேட்டேன்”

“உனக்கு பதில் சொல்லும் சாக்கில் எனக்குள் உரக்க சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்”

“ரொம்ப படிப்பு இல்லாவிட்டாலும், எதையும் நேர்த்தியாய் செய்கிற பாங்கு, நறுவிசு எல்லாம்

சூப்பர்”

“எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நானென்றான். ஈங்கிவனை யான் பெறவே என்ன தவம்

செய்து விட்டேன்? என்று பாரதி, கண்ணனை வேலைக்காரனாகப் பெற்றதாகப் பாடியது

போல கெளரி நல்ல வேலைக்காரி என்று சொல்ல மனம் ஒப்பவில்லை”

நிமிர்ந்து உட்கார்ந்தவன் “மொத்தத்தில்……” நிறுத்தி பெருமூச்செறிந்தான்.

“கெளரி என் உடலின் வலது கை”

“வலது கையா…..?” திகைத்துப் போனான்.

“ம்..என்னை சீவி சிங்காரிச்சி, சோறு ஊட்டி, என் சகலத்திலும் என் உடன் இருக்கும் என் வலது கை. அது செய்யும் வேலைக்காக நாம் யாரும் நன்றி சொல்வதில்லை. வலது கை

இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. வலது கை இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லை”

“உண்மை தான்” என்று உணர்ந்து சொன்னான் பலராமன்.

“அதற்காக வலது கை பிரதிபலனாக நம்மிடம் எதையும் கேட்பதும் இல்லை.

எதிர்பார்ப்பதில்லை. அதன் நிலை பணி செய்து கிடப்பதே”

சங்கர் சொல்ல சொல்ல பலராமனுக்கு நெஞ்சம் நெகிழ்ந்தது.”சங்கர் நீ ரொம்ப கிரேட்”

“நான் இல்ல. கெளரி. ஷீ ஈஸ் வெரி கிரேட்”

“உறவும் இல்லாது நட்பும் அல்லாத இப்படியும் ஒரு…ம்..என்ன சொல்வது? ம்..வலது கரம்”

“எஸ். வலது கரம்”

“இது போல யாருக்கும் அமையாது சங்கர். யு ஆர் வெரி லக்கி”

உள்ளே அடுக்களையில் இதைக் கேட்டுக் கொண்டிருந்த கௌரிக்கு கண்கள் பனித்தது.

உள்ளே அறையில் இதைக் கேட்டுக் கொண்டிருந்த பிரியாவிற்கு கௌரியின் மேல் ஒரு

மதிப்புக் கூடியது. தனக்கும் ஒருநாள் கெளரி வலது கரமாகிப் போவாள் என்னும் தீர்மானம்

ஏற்பட்டது.

மதுவிற்கு திருமணம். அழைப்பிதழ் கொடுக்க பிரியாவின் அப்பா அம்மா வந்திருந்தார்கள்.

மதுவும் உடன் வந்திருந்தாள்.

பெரிய தாம்பாளத்தில் வெற்றிலைப் பாக்கு பூ பழம் கல்யாணப் பத்திரிகை ஜவுளி வைத்து

தேவநாதன் மகாதேவனை சம்பிரதாயமாக அழைப்பு செய்தார். “பத்து நாட்களுக்கு முன்பே

அவசியம் வந்திருந்து திருமணத்தை நடத்தி தர வேண்டும்”

பிரியாவைப் பின் தொடர்ந்து அவள் அறைக்குள் வந்த மது பிரியாவின் கழுத்தைக் கட்டிக்

கொண்டு கொஞ்சி விட்டு பின்பு அவளை இரு தோளிலும் பிடித்து தன்னிடமிருந்து தள்ளி

நிறுத்தி மேலிருந்து கீழ் வரை பார்த்தாள். கண்கள் பிரகாசமாக இருந்தது.

“அக்கா……அப்படியாக்கா…”

“என்ன?”

“கண்ணும் மூஞ்சியும் டாலடிக்கிது”

“அப்படியா…..”

“ஊம்”

“எனக்குத் தெரியலை”

“பிரியா முகமே பிரகாசமா இருக்கு. மறைக்காமல் சொல்லு. ஏதேனும் விசேசமா?’ பின்னோடு

வந்த மாதவியும் அதைஎக் கேட்டாள்.

“அப்படி ஒன்னு இருந்தால் உன்னிடம் மறைப்பேனா?”

வாய் தான் சொல்லியதே தவிர விசேஷம் ஏதும் இருந்தால் எப்படி இருக்கும் என்ற

கற்பனைக்குப் போய் விட்டது பிரியாவின் மனம்.

2 thoughts on “காற்றோடு காற்றாக-19”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *