Skip to content
Home » சிநேகம் 10

சிநேகம் 10

அரக்கப்பரக்க அலுவலகத்தில் உள்ளே நுழைந்தவளை கேமரா வழியாக பார்த்துக் கொண்டிருந்தான் தீபக். அவன் பார்த்தது மட்டுமல்லாது அறையில் இருந்த மிதுன் உத்தவ் இருவருக்கும் தெரிவித்தட உத்தவோ “இவ அவளோட ரோஷத்துக்கு இன்னைக்கு ஆபீஸ் வரமாட்டானுல நினைச்சேன்” என்று கூறிட மிதுன் ” ஏன் ரிசைனிங் லெட்டர் குடுத்துட்டு போவதற்கு கூட வந்திருக்கலாமே” என்று இழுத்திட அவனைப் பார்த்து முறைத்தான் உத்தவ். “எதுக்கு என்னைய முறைக்கிற?” மிதுன்” மனசுல ஏதாவது பாசிட்டிவா நினைச்சா கூட அதுல ஏதாவது வில்லங்கமா பேசி வைக்கிறியேடா உன்னை எல்லாம் முறைக்கிறதோட விடக்கூடாது” என அடிக்க விரட்டியவாறே அவனுக்கு பதில் கூறினான் உத்தவ்”விடெடா அளியா” என்றவன் “எப்படியும் அவ இங்க தானே வந்து ஆகணும் அந்த ரிசைனிங் லெட்டர் கொடுத்தா போய் லெட்டர் டிசைன் பண்ணிட்டு வான்னு திருப்பி அனுப்பிரலாம்” என்று கூறினான் மிதுன். இவர்கள் இருவரின் உரையாடலை ஒரு சிறிய புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தவன் ‘ஆதவி அவளது இடத்தில் சென்று அமர்வதை கண்டு அதை நண்பர்களிடம் தெரிவித்தான். “கண்டிப்பா ஆதவி இந்த தடவை முட்டாள்தனமா எதுவும் பண்ண மாட்டான்னு நம்புவோம்” என நண்பர்கள் இருவருக்கும் எடுத்துரைத்தவன் அவனது அறைக்கு அவளது வருகையே எதிர்பார்த்தான். வெகு நேரம் அவர்களை காக்க வைத்தவள் மதிய இடைவெளிக்கு தீபக்கின் அறை நோக்கி வந்தாள். அனுமதி பெற்று உள்ளே சென்றவளுக்கு ஒரு புறம் தயக்கம் மற்றொருபுறம் குற்ற உணர்ச்சி வாட்டி எடுக்க‌ அவர்கள் மூவரையும் பார்த்துக் கொண்டு நின்றாள். அவள் முகத்தை உற்று பார்த்த தீபக் அவளை அமர வைத்துதனது தண்ணீர் பாட்டிலை அவளிடம் தள்ளி வைத்தான். உடனே அவனது முகத்தை பார்த்தவளிடம் ” ரொம்ப பதட்டமா இருக்க தண்ணி குடி” என்றான் மென்மையான குரலில் ஒரு நண்பனாக. தண்ணீர் எடுத்து குடித்தவள் மீண்டும் அமைதியே கடைப்பிடிக்க சில நிமிடங்களுக்குப் பிறகு பொறுமை இழந்த மிதுன் ” இப்படி அமைதியா எதுவுமே பேசாமல் இருப்பதற்கு தான் வந்திருக்கீங்கன்னா தாராளமா வெளியே போகலாம்” என அறை வாசலை காட்ட அவனை முறைத்து பார்த்தவள் ஒரு முடிவுடன் பேச ஆரம்பித்தாள். ” எப்போ பாரு என்னை விரட்டுறதுல குறியா இரு.. ஏதோ பேசி ரொம்ப நாளாச்சு எங்க தொடங்குறதுனு அமைதியா இருந்தா ரொம்ப தான் பொங்குற… பொசுக்கிருவேன்” என பட்டாசாய் படபடத்தவள் மீண்டும் பொறுமையாய் நிதானமாய்,” எதுக்கு எல்லாரும் என்னை ஒதுக்குறீங்க” ஆதவி ” ஹான்… மேடம் நாங்க உங்களை ஒதுக்குறோமா? இதென்னடா புதுகதையா இருக்கு” என்று நக்கலாக கூறினான் உத்தவ். அவனது கேள்விக்கு பதிலளிக்காமல் ஆதவி இருந்திட அவனே தொடர்ந்தான். ” ஆனால் சில பேருக்கு தைரியம் ரொம்ப அதிகம் தான். வருஷங்களுக்கு முன்னாடி நடந்த விஷயங்களுக்கு அப்போ விளக்கம் கேட்காமல் இப்ப என்ன வந்து கேக்குறாங்க பாரு” என அதே நக்கல் குரலில் தீபக், மிதுன் இருவரிடமும் கூறுவது போல் கூறினான். அவன் கூறுவதும் உண்மை என நண்பர்கள் இருவரும் எதுவும் பேசாமல் ஆதரிக்க ஆதவிக்குள்ளும் அதே எண்ணம் தான் ஓடியது. இத்தனை வருடம் அவர்களிடம் பேசாமல் இருந்து விட்டு இப்பொழுது வந்து காரணத்தை கேட்டால் தன்னை என்ன நினைப்பார்கள்?, என தனக்குள்ளே மருகியவள் இப்படியே விட்டால் குழப்பங்களுக்கு விடை கிடைக்காது என்பதால் பொறுமை காத்தாள். ஆனால் உத்தவை முறைக்கவும் தவறவில்லை. நிமிடங்கள் அமைதியாய் கடந்திட இம்முறை மௌனத்தை கலைத்தான் தீபக். “இப்படியே அமைதியா இருக்கிறது என்றால் நீங்க உங்க ப்ளேஸ்ல போய் வேலையை பார்க்கலாம்” என்று கூறஇவளுக்கு ஈகோ தலைக்கு மேல் ஏறி நின்றிட வெளியே கிளம்பினாள். அவர் சென்றதும் நண்பர்கள் தங்களுக்குள்ளேயே பேச ஆரம்பித்தனர் “என்னடா இவ திடீர்னு வந்து இப்படி கேட்கிறா?.. அதுவும் நான் போகச்சொன்னப்போ என்னை திட்டிட்டு தீபு சொன்னதும் மூஞ்சியைத்திருப்பிட்டு போறா” என மிதுன் வினவிட ஹாஹா…. உன்ன மனுசனாவே மதிக்கல அவ.. என கூறிச்சிரித்த உத்தவ் “அது வேற ஒன்னும் இல்ல நேத்து மாளு கிட்ட பேசி இருக்கிறா.. என்ன பேசி இருக்கிறானு ஒழுங்கா தெரியல.. ஆனா கோபி பத்தி தான் பேசியிருக்காங்க..‌மே பி அதனால கூட வந்து பேசி இருக்கலாம்” என அவர்கள் இருவருக்கும் விளக்கம் கூற மூவரும் அமைதியே கடைப்பிடித்தனர். அவள் தானாய் வந்து கேட்டிருந்தால் கூட பதில் கூறியிருப்பர். தவறு தங்கள் மேல் இல்லை என யாரோ சொல்லி அதனால் விளக்கம் கேட்க வந்ததே இவர்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. இவளை என்னத்தான் செய்றது? கொஞ்சம் இறங்கி வர்றா? திரும்ப ஈகோ தலைக்கேறி வோதாளம் மாதிரி முருங்கைமரம் ஏறிடுறா?”என‌ அலுப்பாய் உத்தவ் கேட்டிட “அதுக்கெல்லாம் வழி இருக்கு.. சும்மாவா இவள இங்க கூட்டிட்டு வந்திருக்கோம்” என்றுரைத்தான் தீபக்எந்தா வழி? என மிதுன் கேட்டியஷாக் ட்ரீட்மெண்ட் என்றான் தீபக். நீ ஷாக் கொடுத்து அவள் செட் ஆவுறது போல போங்கடா டேய் என்றான் மிதுன். உண்மையாவே பிளான் வெச்சிருக்கேன் டா நம்புடா…. என்றான் தீபக் வேண்டா அளியா… எந்தினா? என நக்கலாக கூறினான் உத்தவ். டேய் என பெருங்குரலெடுத்து கத்த அவனை கண்டுகொள்ளாமல் தம்தம் மடிக்கணினியில் மூழ்கினர் உத்தவ் மற்றும் மிதுன் .. ச்ச… வேலை செய்வது போல் நடித்தனர். “சம்பந்தமே இல்லாம என்னை ஜோக்கரா மாத்திட்டீங்களா” என நொந்து கொண்ட தீபக் “உங்களுக்கு ஒரு தேவ வரப்ப என்கிட்ட வருவீங்க அப்ப இருக்குடா உங்களுக்கு” என்ன சத்தமாகவே கூறிக்கொண்டான். ஹா ஹா ஹா… அதெல்லாம் சமயம் வரப்போ நோக்காம் என்ற உத்தவ் அறையை விட்டு வெளியேற அவன் அறியவில்லை சுவற்றில் அடித்த பந்தை போல் திருப்பி வந்து தீபக்கிடமே அவன் ஐடியா கேட்டு நிற்கப் போகிறான் என்பதனை.

1 thought on “சிநேகம் 10”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *