சூரியன் தன் கதிர்களை தன்னுள்ளே இழுத்து விட்டு மொத்த ஆகாயத்தையும் சந்திரனிடம் விட்டுக் கொடுத்த அந்த நேரம் பகல்நேர பணியாளர்கள் பெரும்பாலும் கிளம்பி இருக்க வெகு சிலரே மீதமிருந்தனர். இரவு நேரத்திற்கான பணியாளர்கள் வந்து சேர்ந்து கொண்டிருந்தனர். ஆதவி தான் தேர்ந்தெடுத்த ஃபைலை படித்துக் கொண்டே அதன் உள்ளே மூழ்கி போக நேரம் சென்றது அறியாமல் அமர்ந்திருந்தாள். வேலை முடிந்ததும் ஆதவி இடத்தை பார்க்க அவள் இன்னமும் அங்கே தான் இருந்தாள். நேராக அவளிடம் சென்றவன் “ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணிக்காத நாளைக்கு வந்து பாத்துக்கலாம் இன்னைக்கு வா கிளம்பலாம்” என அவளை அழைத்தான். “ஏதோ அவன் சொந்த பொண்டாட்டியை கூப்பிடுற மாதிரி கூப்பிடுறானே” என தனக்குள்ளே முணுமுணுத்தவள் அமைதியாக தனது பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு அவனுடன் கிளம்பினாள். இருவரும் ஒன்றித்தே நடக்கையில் ” நீ முணுமுணுத்தது கேட்டுச்சு” உத்தவ்”என்னது” என்றாள் ஆதவி தன் தடுமாற்றத்தை காட்டாமல்” ஏதோ.. சொந்த பொண்டாட்டினு”எனக்கூற “அதுக்கு” ஆதவி ” பொண்டாட்டி ஆக்கிக்கவா” உத்தவ்” பரதேசி..அப்பப்போ கேர்ள் ப்ரெண்ட் மாத்துற உனக்கு கல்யாணம் ஒரு கேடு… இதுல பொண்டாட்டி வேற” என ஆதவி பொரிந்து தள்ள ” ஒன்னையே ஒழுங்கா மெயின்டெய்ன் பண்ண முடியாம பாதில தொங்குறேன். இதுல அப்பப்போவா… யார்டா இப்படி புரளியை கிளப்புனது?” என புலம்பியவாறே யோசித்தவனுக்கு பொசசிவ்னஸை வைத்து விளையாட அவன் நினைத்து ஸ்ரீமா விளையாடிச் சென்றது நினைவுக்கு வந்தது. அதற்கு விளக்கம் கொடுக்கும் வண்ணம் ஆதவியை நோக்கி ” சக்கரே.. ஸ்ரீமா.. ” எனத்துவங்க கையிலிருந்த பேனா கத்தியைக் காட்டி ” சொருகிருவேன்..பேசாம வா” என்றதும்.. “ஆத்தி.. கத்தி” என கத்தியவன்.. கொலைகாரியா இருப்பாளோ என சிந்தனையில் சென்றான். கூடவே ” ஆத்தி.. கத்தி.. ரைபிங் நல்லா வருதுல” எனக்கூறி ஆதவியிடமிருந்து முறைப்பைப் பெற்றுக்கொள்ளவும் தவறவில்லை. தரைத்தளம் வரும்வரையிலும் ஆதிவி முறைக்க உத்தவ் சமாளிப்பாக சிரிக்க என வந்தனர். வந்ததும் நேராக சென்று தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வந்தவன் அவளைத் தேட அவளோ கேட் அருகே சென்று இருந்தாள். வண்டியை ஓட்டிக்கொண்டு அவள் முன்னே நிற்க அவளோ பைக்கையும் அவனையும் மாறி மாறி பார்த்தாள் அந்த பார்வையிலே இவனுக்கு ஏதோ புரிந்துவிட “வேணும்னா கேப் புக் பண்ணிக்கவா” எனக் கேட்டான். அவளும் எதையும் யோசிக்காமல் ஓகே என்றாள். அவள் பட்டண ஓகே சொன்னதில் அவன் முகம் வெகுவாய் வாடிட அதனை கண்டவள் உள்ளம் ஏதோ செய்திட ” நான் பைக்லே வரேன்” எனக்கூறினாள். அது சட்டென முகம் மலர்ந்தவன் தன் மகிழ்ச்சியை வெளிக்காட்டி கொள்ளாமல் அவளை அமர கூறினான். அவள் மனம் அவளுடன் கேள்விக்கணையில் தொடுத்துக் கொண்டிருந்தது. “உன் கெத்து உன் ரோஷம் எல்லாம் எங்க போச்சு? ஈகோ ஈகோனு ஒன்னு வச்சிருப்பியே அதெல்லாம் எங்க போச்சு?” என மனம் அவளிடம் கேள்வி கேட்கிறேன் “கேப் வந்தா அதுல டைம் வேஸ்ட் தண்டத்துக்கு காசு கொடுக்கணும் அதுக்கு இதிலேயே ஓசில போயிறலாம் என உப்புசப்பில்லாத” காரணத்தைக்கூறி அதனை சமாதானம் செய்து கொண்டிருந்தது. அவள் மனமோ “இவளாவும் புரிஞ்சுக்கவே மாட்டா புரிய வைக்கிறதுக்காக யார் என்ன பண்ணாலும் அதையும் தெரிஞ்சுக்க மாட்டா…ஒரு வடிகட்டின முட்டாள் இவ…” என அவளை கழுவி ஊற்றிக் கொண்டு மறைந்தது. தன் யோசனைகள் கலைந்து நிகழ்வில் வந்தவள் நினைவுகளோ கடந்த காலம் நோக்கி சென்றது. அது அவர்கள் சென்னையில் படித்துக் கொண்டிருந்த நாட்கள். காவியக்காதல் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. அதற்காக கண்டதும் காதல் என உருகவும் இல்லை. பார்த்தார்கள் பேசினார்கள் நட்புடன் கரம் கோர்த்தார்கள். நட்பும் புரிதலும் இணைந்திட காதல் எனும் கட்டத்தை அடைத்தார்கள். நண்பர்களும் எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஆதரிக்கவும் செய்யாமல் அமைதியாகவே இருந்தனர். இவர்களது காதல் அழகாகவே அமைந்தது. சில நாட்கள் கல்லூரி வளாகத்திலும், நண்பர்களுடன் வெளியே செல்வதிலும் கழிந்திட நட்பும் படிப்பும் பாதிக்காவண்ணம் பார்த்துக் கொண்டனர். அவர்கள் இருவருக்குமான காதல் தருணங்களில் ஆதவி பெரும்பாலும் விருப்பப்படுவது பைக்கில் இருவருமாய் செல்லும் நேரத்தினைத் தான். அதற்காகவே கேரளாவில் இருந்து தனது பைக்கை கொரியர் மூலம் சென்னைக்கு வரவழைத்து இருந்தான் உத்தவ். இன்றும் அதே பைக் அதே இருவர் ஆனால் அவர்கள் வளர்த்து வைத்திருந்த காதல் முற்றிலும் அழியாமலும் மேலும் வளராமலும் எங்கு வெட்டப்பட்டதோ அங்கேயே சிக்கிக் கொண்டிருந்தது. இருவரின் எண்ணங்களிலும் இதுவே நிறைந்திருக்க உத்தவ் சைட் மிரர் வழியே ஆதவி முகத்தை பார்க்க முயற்சித்தான். ஆதவியோ நெற்றியில் சுருக்கங்களுடன் ஏதோ யோசனையில் இருந்தாள். ராணி இவ ராணிஓவர்திங்கிங் மகாராணி எனவாயில் வந்த ட்யூனில் உத்தவ் பாடலாய் பாட அவனை முறைத்தவள் மீண்டும் யோசனைக்கு திரும்பினாள். அவளையே அறியாமல் அவள் தோளில் தலை சாய்த்திட உத்தவித்திற்கு அவள் தங்களின் கடந்த காலங்களை தான் நினைக்கிறாள் என புரிந்தது. தங்களுக்குள் நடந்த சிக்கல்கள் அனைத்தையும் இன்றுடன் சரி செய்ய வேண்டும் என தனக்குள் முடிவெடுத்தவன் எப்படி இவளை பேசி சமாதானப்படுத்தலாம் என யோசிக்க ஆரம்பித்தவன் ” ஐயே.. இவகூட சேர்ந்து நானும் அதிகமா யோசிக்கிறேன் எனநொந்தவாறே இருவருக்குமான தனிமையை ரசிக்கலானான். பேசவுமில்லை, காதல் பேசவில்லை. ஆனாலும் நீண்ட நாள் கழித்து இந்த பயணம் இருவருக்குள்ளும் மாற்றத்தை உண்டு பண்ணியது. இன்னும் இந்த பயணம் வேண்டுமென தோன்றியது. வழியில் அவனுக்கு பிடித்த காபி ஷாப் ஒன்றில் வண்டியை நிறுத்த இருவரும் உள்ளே சென்றனர். அங்கிருந்த அழகிய அமைதியான சூழல் ஆதவியின் மனதை இலகுவாக்கியது. ஒரு டேபிளில் சென்று அமர்ந்தவன் அவளையும் அமரச்செய்து இரண்டு சுக்கு காப்பி ஆர்டர் செய்தான். அதுவும் அவளுக்கு பிடித்ததே. தனது விருப்பங்கள் இன்னும் அவன் நினைவில் வைத்துள்ளான் என்பதை நினைத்தவள் மனது மகிழத்தான் செய்தது. காபி வரும் வரை சுற்றுப்புற சூழலை ரசித்துக் கொண்டே இருவரும் அமைதியை கடைப்பிடித்திட காபி வந்த இரு நிமிடங்களுக்கு பின் ஒரு பெரூமூச்சை இழுத்து விட்டு உத்தவ் பேச ஆரம்பித்தான்.என்ன வேணும் உனக்கு? எதுக்காக நீ கேரளா வரணும்னு நினைச்ச?” என்று கேட்டு உரையாடலை ஆரம்பித்தான்.”நீங்கதான் எல்லாமே பிளான் பண்ணி பண்ணீங்க ” ஆதவி” நீங்க இங்க ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு வரீங்கன்னு தெரிஞ்ச அப்புறம் தான் நாங்க ஸ்டெப் பை ஸ்டெப் பிளான் பண்ணோம். அதுக்கு முன்னாடி உங்கள தொல்லை படுத்துறது தப்புன்னு தோணுதுனால அமைதியாவே இருந்துட்டோம். அப்படி இருந்தது தப்புன்னு இப்ப எங்களுக்கு தோணுது” உத்தவ். அவள் ஏதோ துடுக்குத்தனத்தில் அவனை மரியாதை கொடுத்துப் பேச அவனும் அதையே கடைப்பிடிக்க அது ஆதவியை ஏதோ செய்தது. அதனால் அவள் நார்மலாகவே பேச ஆரம்பித்தாள்.இல்ல அது அப்படி இல்லை என பேச துவங்கியவள் தடுமாறிக் கொண்டே அமைதியாகிட” நீ உன் மனசுல இருக்குறத அப்படியே சொன்னாலே போதும் இதற்கான முடிவு கிடைச்சுடும். எல்லாரும் சந்தோஷமா இருக்கலாம்” என்றான் உத்தவ். “அப்போ கோபிகா… முதல் விஷயமா கோபிகாவை கண்டு பிடிக்கணும், இரண்டாவது தொலைந்து போன என் சந்தோஷத்தை மீட்டெடுக்கணும்.” என்றிட தன்னையே மாற்றிக்கொண்ட அவள் குற்ற உணர்வில் அல்லாடுகிறாள் என அவனுக்கு புரிந்தாலும் புருவம் சுருக்கி கேள்வியாக நோக்கினான். “ஏதோ கோவத்துல உங்க எல்லாரையும் பிரிஞ்சு மூஞ்சியிலே முழிக்காதீங்கன்னு சொல்லி வந்துட்டேன். ஆனா அதுக்கப்புறம் என்னால இயல்பாக இருக்க முடியல அதுவரையிலும் கலகலன்னு இருந்த நான் அதுக்கப்புறம் ரொம்ப அமைதியாயிட்டேன் நான் உண்டு என் வேலை உண்டுன்னு மட்டுமே இருந்துட்டேன் ஒருவேளை கோபிகா பத்தி தெரிஞ்சிருந்தா கூட நார்மல் ஆகி இருந்திருப்பேன். என் மனசு 70% தப்பெல்லாம் உங்க மேல பழி போட்டாலும் 30% நான் தான் தப்பு பண்ற மாதிரி குற்ற உணர்ச்சியா இருந்துச்சு.. அவ கடைசியா சொல்லிட்டு போறப்போ எங்க போற யார் கூட போறான்னு ஒழுங்கா விசாரிச்சு இருந்திருக்கணும்னு மனசு சொல்லிட்டே இருந்திச்சு. அவ எங்க போனா எதுக்காக போனா ஏன் மொத்தமா காணாம போனா அப்படின்னு அவளை சுத்தின கேள்விகள் பலதும் என் மைண்ட்ல இருந்தது. அதற்கான விடை கிடைக்கணும்னா கண்டிப்பா இங்க வந்து விசாரிக்கணும். அதனால தான் இங்கு வந்தேன். ஆனா உங்க எல்லாரையும் மீட் பண்ணனும்னு ஒரு நொடி கூட நினைக்கல. என் வாழ்க்கையில முடிஞ்சது முடிஞ்சதா இருக்கட்டும்னு தான் நினைச்சிருந்தேன். ஆனா நீங்களே பிளான் பண்ணி என்னை உங்க கூடவே கொண்டு வந்தீங்க இங்க வந்து அப்புறம் உங்களோட ஒதுக்கம் என்ன காயப்படுத்திச்சு. இப்படித்தானே நான் உங்களை திட்டின போதும் ஒதுக்குன போகும் உங்களுக்கு இருந்திருக்கும் அப்படின்னு எனக்கு நானே யோசிச்சேன் சோ மொத்தமா நடந்தது எல்லாத்தையும் உங்ககிட்ட கேட்டு தெளிவு படுத்திட்டு அடுத்த முடிவு எடுக்கலாம் நெனச்சு தான் இன்னைக்கு மார்னிங் வந்து பேசினேன்” என மொத்தமாக தன் மனதிலிருந்தது அனைத்தையும் கூறினாள் ஆதவி.
nice