பத்து வயது சிறுமி என்றாலும் அவளது தைரியம் மிகப் பிடித்தது நமது மருத்துவனுக்கு. தனக்கு அறுவை சிகிச்சை நடக்கப் போகிறது என்று தெரிந்தும், அறுவை சிகிச்சை கூடத்துக்கு வந்து அவள் சொன்ன புன்னகை கலந்த “குட் மார்னிங் டாக்டர்” அத்தனை கவர்ந்தது அவனை. ஒரு மருத்துவனாக அவளைக் குணப்படுத்தியே ஆக வேண்டும் என்ற உறுதி பிறந்தது அவனிடத்தில்.
அவளது வயது மற்றும் அதன் இயல்பான படபடப்புகளை கருதி அவளுக்கு பொது மயக்க மருந்தை செலுத்துவதே சிறந்தது என்று தீர்மானித்து இருந்தான் ரஜினிகாந்த். அதற்குறிய நிபுணர் வந்திருக்க, அவர் கொடுத்த மருந்தின் உதவியால் ஆழ்ந்த உறக்கத்துக்கு சென்றிருந்தாள் குழந்தை.
இது சற்றே சவாலான அறுவை சிகிச்சைதான். குழந்தை மிக மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் கண்ணாடி குவளை ஒன்று ஒன்று கீழே விழுந்து தெறித்து, உடைந்த அந்த கண்ணாடி துண்டுகளில் ஒன்று அவளது கண்ணில் சென்று குத்திக் கொண்ட கதை இந்த சிறுமியுடையது
அவளது வலது கண்ணின் வெண்படலத்தில் அளவுக்கதிகமான வீக்கம். பார்வையும் மங்கலாகிக் போயிருந்தது. அந்த வீக்கத்தை குறைத்து அங்கே கண்ணாடி துண்டு இருக்கிறது என்பதை கண்டறிவதே பெரும் சவாலாக இருந்தது அவனுக்கு.
அவன் செய்யும் ஒவ்வொரு அறுவை சிகிச்சையும் அவனது தவம் என்று எடுத்துக் கொண்டே செய்வான் நமது மருத்துவன்.
இப்பொது அந்த பத்து வயது குழந்தையின் பார்வையும் வாழ்க்கையும் அவனது பொறுப்பு அல்லவா! ‘இறைவா சக்தி கொடு! எனதருகில் வந்து நின்று கொள்’ என்ற வேண்டுதலுடனே துவங்கினான் தனது தவத்தை.
இன்று காலையில் மருத்துவமனைக்கு வரும் நேரத்தில் கூட அவன் ஒன்றும் அத்தனை மகிழ்ச்சியான மனநிலையில் இல்லை என்பதுதான் உண்மை. அன்னையை அனுமதித்து இருந்த அந்த மருத்துவமனையில் இருந்துதான் இங்கே வந்து சேர்ந்திருந்தான் நமது மருத்துவன்.
“கண்ணா, ராஜா, ரொம்ப எரியுதுடா. வலிக்குதுடா தாங்க முடியலை என்னாலே. ஏதாவது செய்டா” நேற்று மாலையில் தீபாவளி பலகாரம் செய்கிறேன் என்ற பெயரில் கையில் கொதிக்கும் எண்ணையை கொட்டிக் கொண்ட அன்னை யமுனாவின் அழுகை இன்னமும் காதில் கேட்கிறது.
அவற்றை எல்லாம் மனதில் இருந்து சற்று நேரத்துக்கு ஒதுக்கி வைத்து விட்டு தனது தவத்தில் இறங்கினான் நமது மருத்துவன்.
கண் அறுவை சிகிச்சை, அதுவும் இது போன்ற சவாலான அறுவை சிகிச்சை செய்வது எல்லாம் அத்தனை எளிதல்ல. அந்தக் குழந்தையின் விழி வெண்படலத்தின் திசுக்களில் சிக்கிக் கிடக்கிறது அந்த கண்ணாடி துண்டு. அதுவும் அவளது கண் பாவைக்கு மிக அருகில்.
கண் பாவைக்கோ, அல்லது லென்ஸ் எனப்படும் படிம வில்லைக்கோ அல்லது திசுக்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லாமல் அவன் அந்த கண்ணாடி துண்டை நீக்கியாக வேண்டும். இப்போது குழந்தையின் கண்ணில் எங்கே துளையிடுவது என்பது பெரிய கேள்வி.
வாழ்க்கை அவனது இதயத்தில் துளை போட்ட நேரங்களில் கூட அவனது கடமை அவனை அழைத்து இருக்கிறது. அதை கொஞ்சம் கூட உதாசீனம் செய்யாமல் அந்த அழைப்பை மதித்து உழைக்கும் அர்ப்பணிப்பு எண்ணம் கொண்ட மருத்துவன் நமது ரஜினிகாந்த்.
நேற்று அன்னைக்கு அவசரம் அவசரமாக முதலுதவிகள் செய்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்குள் துடித்து விட்டார் அவர். நேற்றிரவு முழுவதும் உறக்கம் இல்லை இவனுக்கும் இவனது தந்தை ஜகன்னாதனுக்கும்.
இவன் நேற்று சரியான நேரத்தில் செய்த முதலுதவிகளால் அன்னையின் பாதிப்புகள் ஓரளவுக்கு குறைந்து இருந்தாலும், வலியும் வேதனையும் இருக்கத்தான் செய்தன. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவர் இன்று காலையில் அறை குறை மயக்கத்தில் இவனது கையை பிடித்துக் கொண்டு
“என் கூடவே இருப்பா. பயமா இருக்கு” என்று கெஞ்சியதை கூட சிந்தனையில் இருந்து இப்போது நகர்த்தி விட்டிருந்தான் நமது மருத்துவன்.
பொதுவாகவே அவனது அன்னைக்கும் தந்தைக்கும் அவனது ஒரே தங்கைக்குமே கூட அவனது அருகாமை மிகப் பெரிய பலம். அப்படி இருக்க முடியாத நேரங்களில் கைப்பேசி வழி கேட்கும் அவனது குரலே அவர்களை ஆசுவாசப் படுத்தும்.
பொதுவாகவே ஒரு மருத்துவன் எனும் முறையில் அவனுக்கு நிறைய மருத்துவ நண்பர்கள் உண்டு. அப்படிப் பட்ட திறமையான மருத்துவ நண்பர்களிடம் அன்னையை விட்டு வந்திருந்தாலும் இவனது மனம் அலைபாயத்தான் செய்கிறது.
“அப்பா இன்னைக்கு ஒரு முக்கியமான சர்ஜரி ஷெட்யூல் பண்ணி இருக்கேன் பா. ஒரு பத்து வயசு குழந்தைக்கு பா. நான் போயிட்டு வந்திடறேன். சீக்கிரமா வந்திடுவேன். அம்மாவை பத்தி அப்பப்போ எனக்கு அப்டேட்ஸ் வந்திடும்பா. நீங்க தைரியமா இருங்க”
காலையில் அவரிடம் இவன் சொன்னபோது அவரது முகம் கொஞ்சம் வாடத்தான் செய்தது. எப்போதும் மகன்தான் அவருடைய பலம்.
மனதிற்குள் ஆயிரம் இருந்தாலும் எதையும் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை அவர் என்பதை அறிந்துதான் இருந்தான் அவன். ரஜினிகாந்தின் தந்தையாயிற்றே அவர்.
“அப்பா இருக்கேன் இல்ல ரஜினி சர். அப்புறம் நீங்க ஏன் கவலைப் படறீங்க. நான் அம்மாவை பத்திரமா பார்த்துக்கறேன். நீங்க தைரியமா போயிட்டு வாங்க.” என்றார் சிரித்துக் கொண்டே.
‘அப்பா இருக்கேன் இல்ல. அப்புறம் ஏன் கவலைப்படறே.?’ ஆயிரம்தான் இவன் பேரரசன் என்றாலும் இந்த வார்த்தைகளை விட பலம் தரும் வார்த்தைகள் வேறே இந்த உலகத்தில் இருக்கிறதா என்பது தெரியவில்லை. அவனுக்கு.
இது போல பல வலிகளையும் பல அழுத்தங்களையும் தாண்டி கடமையை செய்யும் மருத்துவர்களை “குடிச்சிட்டு எங்கேயாவது விழுந்து கிடப்பான்” என மிக எளிதாக விமர்சிக்கிறார்கள்.
நான் நல்லவன் என்று நினைப்பது என்றுமே தவறு இல்லை. ஆனால் இந்த சமூகத்தில் நான் மற்றும் என்னை சேர்த்தவர்கள் மட்டுமே நல்லவர்கள் என்று நினைத்துக் கொண்டு, , யாரையுமே எதையுமே மனதார நம்பி விடாத ஒரு சமூகம் வளர்ந்து கொண்டிருப்பது ஒரு மருத்துவனாக அடிக்கடி நெருடிக் கொண்டே இருக்கிறது அவனுக்கு.
குழந்தையின் கண்ணின் வலது புரத்தில் ஒரு சிறு துளையிட்டுக் கொண்டான் நமது மருத்துவன். அது அவனது தவத்தின் முதலடி. இதற்கே அத்தனை நுணுக்கமும் கவனமும் அவசியம். அந்தத் துளையினுள்ளே கண்ணின் பாவையின் அளவை குறைக்கும் மருந்தை மிகக் குறைந்த அளவில் செலுத்தினான் அவன்.
அது கண்ணாடித் துண்டை நீக்கும் போது கண்ணின் மற்ற மெல்லிய பாகங்களின் மீது ஏற்படக்கூடிய பாதிப்புகளை பெருமளவு தவிர்த்து விடும்.
சில நிமிடங்கள் கழிந்து இருக்க கண் பாவையின் அளவு சிறுத்து குறைந்து இருந்தது. இப்போது கண்ணின் கீழ்ப் பகுதியில் துளை இட்டுக் கொண்டான் மருத்துவன். அதனுள்ளே மெல்ல நுழைந்தது கேனியுலா எனப்படும் மெல்லிய கருவி. அவன் உள்ளே செலுத்திய சில திரவங்கள் இந்த உபகரணம் உள்ளே நுழைவதை எளிதாக்கியது.
இப்போது இவன் அந்த கண்ணடித் துண்டை கண் பாவையை விட்டு சற்றே நகர்த்தி வைக்க வேண்டும். அதன் பின்னர் வெளியில் எடுப்பது கருவிழிக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கும். அந்த வேலையில்தான் இப்போது தனது கவனத்தை வைத்திருந்தான் நமது ரஜினிகாந்த்
அப்பா ஜெகன்னாதன், அவரது தந்தை வளர்த்து வைத்திருக்கும் குடும்ப வியாபாரத்தைத்தான் கவனித்து வருகிறார். பெங்களூரின் மூன்று முக்கியமான இடங்களில் இருக்கிறது அவர்களது மளிகை பொருட்கள் விற்கும் கடை. மூன்றுமே ஊரின் பிரதான பகுதிகள் என்பதால் வியாபாரம் எப்போதுமே குறைந்தது இல்லை.
அதற்கும் மேலாக ஜோதிடக் கலையில் அவருக்கு நம்பிக்கை அதிகம். அதை சரியாக கற்றும் தேர்ந்தவர் அவர். அவ்வளவு ஏன் நேற்றைய அம்மாவின் விபத்தை கூட கணித்து சொல்லிக் கொண்டேதான் இருந்தார் அவர்.
“அதெல்லாம் எந்த காயமும் படாது எனக்கு. உங்களுக்கு வேறே என்ன வேலை. எப்போ பாரு ஜாதகம் ஜோசியம்னு…..” முடித்து விட்டார் அன்னை யமுனா. அதற்கு மேல் தந்தையும் எதையும் பேசவில்லை.
இப்போது இங்கே அவனது முயற்சிக்கு வெற்றி கிடைந்து இருந்து. ஆபத்தான பகுதியை விட்டு சற்றே நகர்ந்து இருந்தது கண்ணாடித் துண்டு. இறைவன் புண்ணியத்தில் அது கருவிழியில் எங்கும் சிக்கிக் கொண்டிருக்கவில்லை எனும் செய்தியே பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது அந்த மருத்துவனுக்கு. அவனது உடல் முழுவதும் ஒரு நிம்மதி பிரவாகம் படர்ந்ததை எடுத்துக் காட்டியது அவனது நிதானமான சுவாசம்.
அவனது தந்தைக்கு நடிகர் ரஜினிகாந்தின் மீது அப்படி ஒரு அபிமானம். அதனாலேயே அவரின் பெயரை இவனுக்கு சூட்டி அழைத்து அழகுப் பார்த்தவர் அவர். இருந்தாலும் “டேய் ரஜினிகாந்த்” என்று அவர் அழைத்ததே இல்லை..
“என்ன ரஜினி சர். வாங்க இங்கே” என்பார் மனிதர்.
“சர். சொல்லுங்க சர். என்ன விஷயம்” என்பான் இவன் நடிகர் ரஜினிகாந்தின் குரலில். ஒரு குரலை கொஞ்ச நேரம் கேட்டால் அதைப் போலவே குரலை மாற்றி பேசும் தனித்திறமை இவனிடம் உண்டு.
எல்லாவற்றுக்கும் மேலாக இவன் மருத்துவனாகத்தான் வருவான் என்பதையும் முன்பே கணித்து வைத்திருந்தார் தந்தை.
இப்போது அந்த திரவத்தின் உதவியுடன் அந்த கண்ணாடி துண்டை துளைக்கு ஏற்றார் போல் நகர்த்தி வைத்துக் கொண்டான். கண்ணின் கீழ்ப் பகுதியில் போடப்பட்டிருந்த துளையினுள் இப்போது நுழைந்தது ஃபோர்செப்ஸ் எனப்படும் பற்றுக் குறடு.
இறைவன் அவனது விரல்களுக்கு என்ன மந்திர சக்தியை கொடுத்திருந்தானோ தெரியவில்லை. அவை வெகு நுணுக்கமாக வெகு லாவகமாக இயங்க அவனது உபகரணத்தின் உதவியுடன் அந்த துளையை விட்டு வெளியே வந்திருந்தது அந்த கண்ணாடித் துண்டு.
அவனுக்குள் இதமான மகிழ்ச்சி அலைகள். உள்ளே இருந்த அந்த திரவங்களை வெளியே எடுத்து விட்டு, அடுத்ததாக துளையில் தானாக கரையக் கூடிய தையலை போட்டான் மருத்துவன். நிறைவு பெற்றது அந்த அறுவை சிகிச்சை.
மயக்க மருந்தின் தீவிரம் குறைந்து அந்தக் குழந்தை கண் விழிக்கும் நிலைக்கு வந்த பிறகு அறுவை சிகிச்சை அறையை விட்டு வெளியே வந்தான் நமது ரஜினிகாந்த்.
அவன் வெளியே வந்து நின்ற அந்த நொடியில் அவனை வரவேற்றது அங்கே எழுந்த படபட கைத்தட்டல்கள். அந்த அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது எனும் செய்தி அங்கே அதற்குள் வந்திருக்க வேண்டும். அதைக் கொண்டாடும் விதமாகவே கைத் தட்டிக் கொண்டிருந்தனர் அங்கே இருந்த மருத்துவமனை ஊழியர்கள்.
இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு கம்பீரமாக நிமிர்ந்து நின்றான் ரஜினிகாந்த். அதே நேரத்தில் அங்கே அந்தக் கூட்டத்தோடு நின்று கைத்தட்டிக் கொண்டிருந்தார் அந்தக் குழந்தையின் தந்தை.
அவனது பார்வை அவரைத் தொட்டு முழுவதுமாக அளந்து திரும்ப, அதற்குள்ளாக அந்தக் குழந்தையின் அன்னை ஓடி வந்து அவனது கரம் பற்றிக் கொண்டார். அவரது கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
அவரைப் பார்த்து சின்ன புன்னகை செய்து “நிம் மகளுகே கண்ணு செனாகி காணிசுதுததே. தைர்யவாகு இரி” (உங்க மகளுக்கு கண்கள் நன்றாக தெரியும் தைரியமாக இருங்கள்) என நிறுத்தி நிதானமாக சொன்னான் நமது நாயகன்.
இன்னமும் கைத்தட்டல் அடங்கவில்லை. தன்னுடன் பணிபுரியும் ஊழியர்களைப் பார்த்து அழகாக புன்னகைத்தான் நாயகன்.
“கமான் கைஸ். இட்ஸ் அ நார்மல் சர்ஜரி. அதுக்கு எதுக்கு இவ்வளவு ஆர்பாட்டம்?” என்றான் அழகான கன்னடத்தில்.
அதற்குள் அவனருகில் ஓடி வந்தான் இவனது உதவியாளராக பணி புரியும் ரமேஷா. அவன் சில வருடங்களாக இந்த மருத்துவமனையில் இவனது உதவியாளனாக பணி புரிகிறான்.
“இல்லை சர். ரொம்ப கஷ்டமான சர்ஜரி. ப்ளான் பண்ணி சிம்பிள்ஆ முடிச்சு இருக்கீங்க. உங்களை பாராட்டியே ஆகணும்”
“கண்டிப்பா சர்” அங்கே காத்திருப்போர் இருக்கையில் இருந்து எழுந்தார் ஒரு குழந்தையின் தந்தை. “எங்ககிட்டே பணம் இல்லை. அது தெரிஞ்சதும் போன வாரம் என் பொண்ணுக்கு ஒரு பைசா கூட வாங்காம ஆபரேஷன் பண்ணி இருக்கீங்க. உங்களுக்கு இந்த கைத்தட்டல் எல்லாம் போதாது. இன்னும் நிறைய நிறைய பாராட்டு கிடைக்கணும்” ஓடி வந்து அவன் கரங்களை பிடித்துக் கொண்டார் அந்த மனிதர்.
அவரை ஒரு வழியாக சமாதானப் படுத்தி அனுப்பி வைத்து விட்டு திரும்பினான் நமது மருத்துவன். அப்போது அவனருகில் வந்து நின்றார் காலையில் பேசிய அந்த மனிதர்.
“சர். நான் காலையிலே” துவங்கினார் மெதுவாக.
“ரமேஷா..: என அவரை பேச விடாமல் இடைமறித்து அழைத்தான் உதவியாளனை
“இவங்ககிட்டேயும் ஃபீஸ் வாங்க வேண்டாம்” இரும்பின் பதத்தில் வெளி வந்தன இவனது வார்த்தைகள்.
“சர் ஏன் சர்? இவர் பேசினதுக்கு தண்டனையா ரெண்டு மடங்கு வாங்கணும்” ரமேஷாவால் அவர் காலையில் பேசியதை இன்னமும் ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை என்று தோன்றியது அவனுக்கு.
ரமேஷாவின் வார்த்தைகளில் இதழ்களில் ஒரு சிறு புன்னகை ஓட பேன்ட் பேக்கட்டில் கட்டை விரல்களை நுழைத்துக் கொண்டு நிமிர்ந்து நின்றான் மருத்துவன்.
“என்னையும் என் படிப்பையும் என் தொழிலையும் கேவலமா பேசினவங்க கிட்டே ஃபீஸ் வாங்கினா எனக்கு அசிங்கம் ரமேஷா..” என்றான் அவன் . அவனது ஒவ்வொரு வார்த்தையிலும் அத்தனை அழுத்தம். அவன் பேசும் போது அவனது விழிகள் அந்த மனிதரை அணு அணுவாக அளந்தன
பின்னர் சட்டென ரமேஷாவை நோக்கி திரும்பியவன் “ஸோ…” என அவனைப் பார்த்து தலை அசைக்க அதிலேயே நமது மருத்துவனின் உறுதி புரிந்து இருந்தது ரமேஷாவுக்கு. அடுத்த இரண்டாம் நொடி அந்த இடத்தை விட்டு மின்னலென நகர்ந்து இருந்தான் ரஜினிகாந்த்.
தான் கற்ற கல்வியினாலும், தனது திறமையினாலும் அங்கே விஸ்வரூபம் எடுத்து நின்ற ஒரு மருத்துவனை பார்த்த பிரமிப்பில் பேச ஒரு வார்த்தை கூட கிடைக்காமல் ஆடிப் போய் நின்றிருந்தார் அந்த மனிதர்.
கொஞ்ச நேரம் கடந்திருக்க, அடுத்து செய்ய வேண்டிய சில வேலைகளை முடித்து விட்டு, அந்த குழந்தைக்கு கொடுக்க வேண்டிய மருந்துகளை பற்றிய விவரங்களை அங்கிருக்கும் மற்ற மருத்துவர்களிடம் சொல்லி விட்டு, தனது அன்னை இருக்கும் அந்த மருத்துவமனைக்கு செல்லக் காரை எடுப்பதற்காக கார் நிறுத்துமிடம் நோக்கி நடந்தான் நமது மருத்துவன்.
அப்போது காற்றில் எங்கிருந்தோ மிதந்து வந்தது அந்த வார்த்தை “பார்றா!”
ஒற்றை வார்த்தை ஒருத்தியை, அதுவும், அவளும் ஒரு மருத்துவராக இருந்த போதும் இவனையும், இவனது தொழிலையும், அதில் அவன் காத்து வரும் கண்ணியத்தையும் தவறாகப் பேசி இவனது இதயத்தை நொறுக்கி விட்டுப் போன ஒருத்தியை மொத்தமாக நினைவுப் படுத்தி விடுமா என்ன?
நினைவுப் படுத்தியதே! என்ன செய்வான் மருத்துவன்! அவனது விழிகள் அனிச்சை செயலாய் இங்குமங்கும் அலைபாய்ந்தன.
இதுவரை அவன் புகைப்படத்தில் கூட பார்த்தேயிறாத அவளை ஏதோ ஒரு வேகத்தில் அவசரமாகத் தேடினான் ரஜினிகாந்த்.
தொடரும்
ரொம்ப அழகான பதிவு. ரஜினிகாந்த் பேரின் ஈர்ப்பை மேலும் கூட்டும் “ரஜினி சர்”. அப்பா, பையன் அழுத்தமான அன்பு மிகவும் அழகு. தன் படிப்பை மதிக்காதவரிடம் பீஸ் வேண்டாம் என்பது கூட சரியான தண்டனை. அவரின் பணம் வந்து பெண்ணின் பார்வையை மீட்டுத் தரவில்லையே. டாக்டர் படிப்புதானே கை கொடுத்தது. அந்த பணத்தை அலட்சியம் செய்த டாக்டர் வெகு அருமை. “பார்றா” ஹீரோயின் ஸீன்லே இல்லாதப்பக் கூட அவளை உணர வைத்த மந்திர எழுத்துக்கள். அடுத்த எபிசோட் படிக்க வெகு ஆவல் வத்சலா. சர்ஜரி பற்றி புரியும்படி எளிமையாகக் கொடுத்ததற்கு பாராட்டுக்கள்
@devisrinivasan கதையை ரசித்து படிச்சு இருக்கீங்க. உங்க கமெண்ட் அத்தனை சந்தோஷம் எனக்கு. மனம் நிறைந்த நன்றிகள்
Rajini sir, super.
Operation I handle seitha vidham nice.
A great doctor and self respect person.
Heroine intro a?
Waiting
@Priya. Yes next heroine intro thaan, Very very happy to read ur comment . Thank you so much.
Azhaghiya pathivu. Operation success…rajini sir geththu 👍👍👍super sis 😍😍😍😍
@eswari Very very happy to read ur comment . Thank you so much ma .
அவனை பத்தி தப்பா பேசின தந்தைக்கு அழகான பதிலடி,
யார் அந்த பெண்?
@kothai suresh உங்கள் கேள்விக்கான பதில்கள் விரைவில் நன்றிகள் பல மா.
அருமை. … மிக அழகான மனிதன்… தன்னைப் பற்றி தெரியாத மனிதர் தவளாக பேசினால் அதை கேட்டால் கோபமா வரும் ஆனால் அவன் அவரை அப்போதே அவமானப் படுத்தாமல் தன்னோட வேலையை முடித்து தன்னோட நடத்தையால் பதில் கூறியது அருமையோ அருமை அழகாக உறவு அப்பா தந்தை
@kothaihariram கதையை ரசித்து படிச்சு இருக்கீங்க. உங்க கமெண்ட் அத்தனைஎனர்ஜி எனக்கு. மனம் நிறைந்த நன்றிகள் மா
Super 😍😍
@vinoprakash நன்றிகள் பல மா.
அருமையான பதிவு
@chanmaa நன்றிகள் பல மா.
உங்க ஹீரோஸ் எப்பவும் மெச்சூர்ட் தான்….
ஆப்ரேஷன் தியேட்டர்க்குள்ளே இருந்து பார்த்த மாதிரியே இருக்கு…
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@Anuammu மனம் நிறைந்த நன்றிகள் மா. ரொம்ப யோசிச்சு ரசிச்சு எழுதின காட்சி. அதை குறிப்பிட்டு
சொன்னது அத்தனை மகிழ்ச்சி.
டாக்டர் கண் ஆப்பரேசன் செய்யும்போது பக்கத்தில் இருந்து பார்த்த பீல் குடுத்தது இந்த எபி சூப்பர்
@gandhimathi Thank u so so much ma. Unga comment enakku eppavume special
Wow spr…. Panathukaga mattume doctor tholil panravanga irukanga but intha maathiri aatkalum irukanga 👌👌👌👌👌👌….
@priyarajan Thank you so so much
Pingback: டாக்டர் ரஜினிகாந்த் - அத்தியாயம் 1 - Praveena Thangaraj Novels
Very nice