Skip to content
Home » டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 14(2)

டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 14(2)

கொஞ்சம் கூட யோசிக்கத் தோன்றவில்லை ரஜினிகாந்துக்கு.

“வாங்க ஸ்ரீதேவி டாக்டர். உங்களை விட்டுட்டு போகுற ஐடியா எனக்கு எப்பவுமே இல்லை” இப்போது இவனது புருவங்கள் ஏறி இறங்க அவனது இதழின் ஓரமும் புன்னகை.

ஸ்ரீலேகா செய்தவைகள் அத்தனையும் தெரிந்திருந்தும் கொஞ்ச கூட யோசிக்காமல் அவன் சொன்ன  வார்த்தைகளில் நெகிழ்ந்தது பெண் உள்ளம். கண்கள் நீரேற்றம் கண்டன. இருந்தாலும் இடம் வலமாக அசைந்தது அவள் தலை.

“ஹேய்..” வெளி வந்தது லேகாவின் குரல் “நாம ரெண்டு  பேர்தான் ஊருக்கு போறோம். புரியுதா?”

நிஜமாகவே வியப்பாக இருந்தது ரஜினிக்கு. இவளால் எப்படி பேச முடிகிறது? ஒரு வேளை தான் ஸ்ரீலேகாவின் இடத்தில் இருந்திருந்தால் தன்னால் நிமிர்ந்து பார்க்கவாவது முடிந்திருக்குமா என்பதே தெரியவில்லை அவனுக்கு.

“நான் ரெடிதான் ஸ்ரீதேவி டாக்டர். இப்போ என்கூட வருவதைப் பத்தி நீங்கதான் முடிவு பண்ணணும்” என்றான் அழுத்தமே குரலாக மாறிப் போக.

“நான் எங்க அக்கவோடையே போறேன். அதுதான் எல்லாருக்கும் நல்லது”  அவள் நகரப் போக

“தேவிம்மா..” அழைத்து விட்டான். திரும்பினாள் அவள்.

“ப்ளீஸ் டாக்டர்..” கெஞ்சல் இருந்தது அவளது குரலில். “என்னை போக விடுங்க”

“சரி. நான் சொல்றதை எப்படியும் நீ கேட்கப் போறதில்லை, அதுவும் இனிமே கேட்க போறதே இல்லை. இருந்தாலும் சொல்றேன். முடிஞ்சா ஹை வேலே எங்க காரோட சேர்ந்தே வா. எனக்கும் நீ தனியா போறது என்னமோ உறுத்தலா இருக்கு “

“தெரியலை. பார்க்கலாம்.  மிஸ்டர் ரஜினிகாந்த். சரி  நான் கிளம்பறேன்” அவன் கண்களுக்குள் ஆழமாக பார்த்து சொன்னாள் ஸ்ரீதேவி .

உயிரின் ஒவ்வொரு அணுவும் பதறும் உணர்வு இவனுக்கு. இருந்தாலும் எதையும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் நின்றான் இவன்.  

தான் தனியாக செல்வதை விட தனது அக்காவுடன் செல்வது இன்னமும் ஆபத்து என்பதை அறியாமல் அங்கிருந்த எல்லாரிடமும் விடைப் பெற்றுக் கொண்டு ஸ்ரீதேவி நகர, அவள் செல்லும் திசையிலேயே பார்வையை வைத்தபடி நின்றிருந்தான் நமது நாயகன்.

அவள் சென்றவுடன் இவன் சில நொடிகள் கழித்து தெளிந்து பார்வையை சுழல விட கணபதியின் அருகில் நின்று கொண்டிருந்தாள் மஹதி.

“சர் நான் உங்க கூட கார்லே வரலாமா? வரும் போது சில ஃப்ரெண்ட்ஸ் கூட வந்தேன். அவங்க இந்த வெதர்லே ட்ராவெல் வேண்டாம். ரெண்டு நாள் இங்கேயே இருந்திட்டு வரோம்ன்னு சொல்றாங்க. எனக்கு ஊரிலே வேலை இருக்கு சர்”

“வொய் நாட் மஹதி. நீங்களும் வாங்க எங்க கூட” சொல்லி விட்டார் மருத்துவர். இப்போது அவர்கள் அருகில் வந்த ரஜினிகாந்தின் பார்வை ஏதோ யோசனையுடன் அவளைத் துளைத்தது.

வேறே யாரிடமோ விடைப்பெற்றுக் கொள்ள கணபதி நகர்ந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டவன், அடுத்த உண்மையை தெரிந்து கொள்ள முற்பட்டான்.

இத்தனை நாட்கள் குறுஞ்செய்தி வந்து கொண்டிருந்த அந்த எண்ணை சட்டென அழைத்தான். அடுத்த நொடி மஹதி கையில் இருந்த கைப்பேசி ஒளிர்ந்தது. அடுத்த இரண்டாம் நொடி நடப்பவைகள் புரிய அரண்டு போனாள் பெண்.

ஒரு வித படபடப்புடன் அவள் அழைப்பை துண்டிக்க

“அற்புதம்..” என்றான் ரஜினிகாந்த். “எதுக்கு ரமேஷாவோட பழைய சிம் கார்டு வாங்கி மாத்தி மாத்தி ஏதேதோ மெசேஜ் பண்ணிட்டு இருக்கீங்க மஹதி? இதிலே அவன் உங்களுக்கு அடிக்கடி என்னை பத்தின டிடைல்ஸ், நான் இருக்கும் இடம் எல்லாம் சொல்லிட்டு இருந்திருக்கான் இல்லையா?”

“நா… நானா? நான் ஏன் அப்படி எல்லாம்.. இ.. இல்ல”

“நீங்கதான் மஹதி அதிலே டவுட் இல்லை. பட் காரணம்தான் எனக்குப் புரியலை. என்னதான் வேணும் உங்களுக்கு? மஹதிக்கு பொய் சொல்லி பழக்கம் இல்லை. எந்த நாடகம் போட்டு யாரையும் ஏமாற்றியும் பழக்கம் இல்லை. எல்லாம் நேரடி டீலிங்தான் அப்படின்னு நீங்க அடிக்கடி சொல்லும் போதே எனக்கு கொஞ்சம் சந்தேகம்தான். என்னதான் பண்ணிட்டு இருக்கீங்க நீங்க.? கான்ஃபரென்ஸ் முடியறதுக்குள்ளே என்னை பதில் சொல்ல வைக்கிறேன்னு சொன்னீங்களே. இப்போ நீங்க பதில் சொல்லுங்க.” அவன் அழுத்தமாக

“அது.. அது.. வந்து”

“கமான் ஸ்பீக். தப்பு பண்ண மட்டும் தைரியம் இருக்கு, பேச தைரியம் இல்லையா?” அவனது குரலில் கோப மேகங்கள்.

“தப்பெல்லாம் பண்ணலை. நல்லதுதான் யோசிச்சோம். வேணும்னா அரசியை கேட்டு பாருங்க. நான், புகழ் அரசி மூணு பேரும் உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கத்தான்  முயற்சி பண்ணோம். அதுக்குதான் இந்த கான்ஃபரென்ஸ் யூஸ் பண்ணிக்க நினைச்சோம். அதுக்குதான் அவங்க கல்யாண பேச்சோட நம்ம ரெண்டு பேர் கல்யாண  பேச்சும். அப்படி ஒண்ணு வந்தா நீங்க ரெண்டு பேரும் எங்களை தூக்கி போட்டுட்டு ஒண்ணு சேருவீங்கன்னு நினைச்சோம்.”

“அது சரி” என இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு அவளை ஏற இறங்கப் பார்த்தான் ரஜினிகாந்த்.

“நிஜமாத்தான். கோவில் சர்க்கரை பொங்கல்லேர்ந்து நேத்து நைட் ஃபோட்டோ எடுத்த வரைக்கும் நானும் உங்க ரெண்டு பேரையும் சீண்டி விடத்தான் ட்ரை பண்ணேன். நீங்களாவது கோவில்லே கொஞ்சம் கோபப் பட்டீங்க. அவதான் அசையவே மாட்டேங்குறாளே..” அவள் சொல்ல  

“மத்தவங்களை விடுங்க. ஒரு பொறுப்பான டாக்டர் செய்யுற வேலையா இது?” அவன் கேட்ட நேரத்தில் வந்து நின்று அவளை காப்பாற்றி விட்டார் கணபதி.

“நாம கிளம்பலாமா ரஜினி?”

“எஸ். எஸ் சர்” இயல்புக்கு தள்ளிக் கொண்டான் தன்னை.

அதன் பிறகு அவனுக்கும் மஹதிக்குமான தனிமை கிடைக்கவில்லை. அறைக்கு சென்று சில நிமிடங்களில் தயாராகி அவர்கள் வெளியே வந்த நேரத்தில் அவர்கள் காரின் அருகில் தயாராக இருந்தாள் மஹதி.

“நான் டிரைவ் பண்றேன் சார்” முன் வந்தான் ரஜினிகாந்த். மின்னல்கள் வானில் தோரணம் கட்டிக் கொண்டிருந்தன.

“இல்லப்பா முதல்ல கொஞ்ச நேரம் நான் டிரைவ் பண்றேன். அதுக்கு அப்புறம் நீ எடுத்துக்கோ” என ஓட்டுனர் இருக்கையை தனதாக்கிக் கொண்டார் கணபதி.

அவன் சற்று முன் நடந்தவைகளில்  மிரண்டு போயிருக்க வேண்டும் மஹதி. இப்படி ஒரு தாக்குதலை அவனிடமிருந்து எதிர்ப்பார்க்கவில்லையோ அவள்? படு அமைதியாக பின் இருக்கையை தனதாக்கிக் கொண்டாள் பெண்.

தலைக்கு மேல் இடி சத்தம் எதிரொலித்துக் கொண்டிருக்க இவர்கள் வாகனம் சாலைக்கு வந்த நேரத்தில் கணபதியிடமிருந்து புறப்பட்டது அந்தக் கேள்வி.

“உனக்கு ஸ்ரீதேவி கார் நம்பர் தெரியுமா பா?”

“நல்லாவே தெரியும் சர்.” என்று அவன் சொல்லிக் கொண்டிருந்த போதே அவள் தங்கியிருந்த அந்த ஹோடேலை கடந்து கொண்டிருந்தது இவர்கள் வாகனம்.

சொல்லி வைத்தார் போல அப்போதுதான் அந்த ஹோடேலை விட்டு வெளியே வந்தது நமது பெண் மருத்துவரின் கார்.

“அதோ அந்த செலிரியோதான் சர்” என்று அவளின் காரை அவருக்கு அடையாளம் காட்டினான் நமது நாயகன்.

“என்னோட உள்ளுணர்வு என்னமோ சொல்லுது ரஜினி. நாம் எதுக்கும் அந்த கார் மேலே ஒரு கண் வெச்சுக்குவோம்” என்றார் அவர் லேசான கவலையுடன். “அதுக்கு நேத்து என் பழைய கதைகளை பேசினது கூட ஒரு காரணமா இருக்கலாம் மை பாய் . நீ எதுவும் வித்தியாசமா நினைக்காதே”

“அதெல்லாம் ஒண்ணும் நினைக்கலை சர்”. என்றான் புன்னகையுடன் “உங்களை மாதிரி அன்பு வைக்கறவங்க எல்லாம் இந்த காலத்திலே ரொம்ப கம்மி”

இரண்டு கார்களும் சீரான இடை வெளியிலே பயணித்துக் கொண்டிருந்தன. பெண்கள் பயணிக்கும் அந்தக் காரை செலுத்திக் கொண்டிருந்தது ஸ்ரீதேவியாக இருக்க, அவளருகில் அமர்ந்து இருந்தாள் அவளது தமக்கை ஸ்ரீலேகா.

அவன் சொன்ன வார்த்தைக்கு அவள் மதிப்பு கொடுப்பதை போலத்தான் தோன்றியது அவனுக்கும். அவர்களுடைய காரை பின் தொடர்ந்துதான் வந்து கொண்டிருந்தது ஸ்ரீதேவியின் கார்.

இருந்தாலும்  பெரிதாக எதையும் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை ஸ்ரீதேவி. லேகா கைப்பேசியில் மூழ்கி இருக்க நடப்பவைகளை பெரிதாக கவனிக்கவில்லை அவள்.

தூறல் பெரு மழையாக மாறிக் கொண்டிருந்தது. அதிலும் வெகு லாவகமாகத்தான் நகர்ந்து கொண்டிருந்தன இரு கார்களும். ஆனாலும் இந்த இருளும் சூழ்நிலையும் அனைவருக்குமே சொல்ல முடியாத ஒரு மெலிதான பயத்தை கொடுத்துக் கொண்டுதான் இருந்தது,

உள்ளுக்குள் ஆயிரம் குழப்பங்கள் இருந்த போதும்  நேற்று முன்தினம் டாக்டர் கணபதியிடம் இருந்த உற்சாகத்தை திரும்ப கொண்டு வந்து விட முயன்று கொண்டிருந்தான் ரஜினிகாந்த்.

“சர் இப்படியாயிடுச்சே சர். நாம அநியாயமா இளநீர் மிஸ் பண்ணிட்டோமே. இப்போ ஹைவேய்ஸ்லே எந்த இளநீர் கடையும் இருக்காதே” என்றான் கவலை தோய்ந்த குரலில்.

“அட ஆமாம்பா” சிரிப்பை வரவழைத்துக் கொண்டார் கணபதி. மெதுவாக ஏதேதோ கதை பேச ஆரம்பித்து இருந்தனர் ஆண்கள் இருவரும். நேரம் இரவு பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

அவ்வப்போது கணபதி கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்த மஹதி ஒரு கட்டத்தில் அந்த பென்ஸ் காரின் பின் இருக்கையில் அப்படியே படுத்து உறக்கத்தை தழுவி இருந்தாள்.

சில மணி நேரங்கள் கடந்திருந்தன. மழைக் கொட்டிக் கொண்டுதான் இருந்தது.  அதன் வேகத்தை தாங்க முடியாமல் காரை அவ்வப்போது சாலை ஓரத்தில் நிறுத்தி நிறுத்தித்தான் பயணித்துக் கொண்டிருந்தார்கள் பெண்கள்.

பென்ஸ் கார் என்பதால் மழையில் செல்வது இவர்களுக்கு கடினமாக இல்லை என்றாலும் பெண்களுக்காகவே தானும் நிறுத்தி நிறுத்தி நகர்ந்து கொண்டிருந்தார் கணபதி.

இரண்டு ஃபிளாஸ்க்குகளில் இவர்கள் கொண்டு வந்திருந்த காபியும் அவர்களுக்கு வழித் துணையாகி இருந்தது. ஒரு கட்டத்தில் காரை நிறுத்தி காரின் ஓட்டுனர் இருக்கையை ரஜினிகாந்த் எடுத்துக் கொண்ட அதே நேரத்தில், அங்கே பெண்கள் இருவரும் இடம் மாறிக் கொள்வது தெரிந்தது ரஜினிக்கு.

இத்தனை நேரம் இவர்கள் வாகனத்துடன் ஒன்றிணைந்தே காரை செலுத்திக் கொண்டிருந்தாள் ஸ்ரீதேவி. ஆனால் அவளது அக்கா ஓட்டுனர் இருக்கையை ஆக்கிரமித்துக் கொண்ட வேளையில் சர்ரென வேகமெடுத்தது பெண்களின் செலிரியோ.

கண் இமைக்கும் நேரத்தில் சரேலென இவர்கள் கண் விட்டு மறைந்தும் போனது அவர்கள் வாகனம். மெல்ல மாற்றம் கொண்டது கணபதியின் முகம்.

“இவ்ளோ நேரம் தேவி ஓட்டிட்டு இருந்தாப்பா.  என் வார்த்தைக்கு மரியாதை கொடுத்து நம்ம பின்னாடியே, நம்ம கூடவே வந்தா. ஆனா இப்போ அவ அக்கா ஓட்டுறா போலிருக்கு. சரியில்லையே….ம்? அவளுக்கு எதுக்கு இவ்ளோ வேகம்னு தெரியலையே” அவர் சொன்ன நேரத்தில்  வானத்தில் பெரிய மின்னலொன்று வெட்டி, பெரிய இடி ஒன்று வெடித்து விழுந்தது. சில நொடிகள் ஸ்தம்பித்து. காரோடு  அப்படியே நின்று விட்டான் ரஜினிகாந்த்.

தொடரும்

12 thoughts on “டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 14(2)”

  1. Pingback: டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 14 (1) - Praveena Thangaraj Novels

  2. Avatar

    விட்டுட்டு போற ஐடியா எப்போதும் இல்லை . சூப்பர் ரஜினி சர். உண்மையைப் புரிந்து கொண்ட ரஜினிகாந்த் தொடர்ந்து அவளில் கவனம் வைக்கிறான். ஸ்ரீதேவியும் உணர்கிறாள். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளத் தான் அவளின் மனம் தடுக்கிறது. அரசி, புகழ் இருவரும் மஹதி கூட கூட்டா? ஸ்ரீதேவிக்குத் தெரிந்து தான் மஹதியை முறைக்கிறாளோ? லேகாவின் இந்த ரஷ் டிரைவிங் யாருக்கு ஆபத்தை விளைவிக்கப் போகிறது. இந்த ரணகளத்திலும் காபிய விடலையே நம்ம ரெண்டு டாக்டர்ஸ்சம. அடுத்த எபிசோட்க்கு வெயிட்டிங்

    1. Avatar

      இவ அக்காவால தான் , எப்பவுமே பிரச்சனையே? மஹதி, புகழ், அரசி கூட்டணியோ? பெரிய ஆபத்து ஒண்ணுமில்லாம இருக்கணும்

  3. Avatar

    ஓ மை காட் 🙄🙄🙄…. ஶ்ரீதேவிக்கு எதுவும் ஆகாதுதானே….

    வில்லி மஹதின்னு நினைச்சா….லேகாவா அப்படி என்ன செய்திருப்பாள்…..

  4. Avatar

    Sridevi ya rajini, Vida maaten endru solli vittan. Nice.
    Avanga appa sridevi life problem ku reason a irupaaro?

    Mahathi, pugazh ,arasi moonu perum nallavanga than .thank God.
    Ganapathi kum ,etho nadaka poguthu nu thonutho?
    Sridevi ,nallapadiya irukanum?

  5. Avatar

    இந்த லேகாவால தான் இவங்க வாழ்க்கையில் பிரச்சனை வந்ததோ என்ன தான் நடந்தது பிளாஸ்பேக் சொல்லுங்க கொஞ்சம் குழப்பமா இருக்கு

  6. Priyarajan

    😱… Mathavanga mela easy ah carring eduthukara aal ganapathi spr👌👌👌👌👌 ethum asambavitham aagama pathukonga sis…..

  7. Avatar

    ரஜினி சார் அப்பா சொல்லுறார் டாக்டர் கணபதி சொல்லுறார் நம்ம ரஜினி சாரும் சொல்லியாச்சி ஏன் ஸ்ரீதேவி டாக்டர் கேக்கமாட்டிகிங்க உங்க அக்காவ பத்தி தெரிஞ்சும் அவங்களை காரை ஓட்ட விட்டிங்க வேகத்தை விட விவவேகமா இருக்கனுன்னு லேகாவுக்கு தெரியாதா உங்க பாதுகாப்பு வளையமா ரஜினி சாரும் டாக்டர் கணபதியும் வந்து கிட்டு இருந்தாங்க இப்போ அந்த பாதுகாப்பு வளையத்தை விட்டு விவேகத்தை விட வேகம்தான் முக்கியம்ன்னு கிளம்பிட்டிங்களே ஸ்ரீதேவி டாக்டர்

  8. Kalidevi

    Mahathi tha kudave irutnhu etho plan panuthu patha ava serthu vaika plan panitu irunthu iruka , thedirnu vantha lakha tha nadula etho vilayandu iruka pola ipovum paru sonna varthaiku mariyathaiya porumaiya avangaloda drive panna devi intha lekha fast ah drive panni ena pani vaikiralo . but rajini vida matan apadi . Ena aanalum vidura mari illa nu sonnavarache .

    so interesting

  9. Avatar

    ஏங்க கதை கதையை இப்படி பேய் கதையை படிக்கிற மாதிரி திக் திக்குனு படிக்க வைகிறீங்க…. மனசு எல்லாம் பதருதே… அச்சோ மஹதி நீ ஹெல்ப் பண்ண வந்தியா மா … அப்போ உணகும் உண்மை எல்லாம் தெரியுமா … அதுக்கு தான் sreedevi கூட சண்டை போட்டு இருகீயா…

    லேகா என்ன தான் உனக்கு இப்போ அவசரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *