இங்கே காரின் குளிர் சாதனத்தின் அளவை கூட்டி வைத்துக் கொண்டு, காதில் ஒலித்த பாடலில் மனதை பதித்துக் கொள்ள முயன்றாலும் முடியவில்லை, அன்னை இருக்கும் மருத்துவமனையை நோக்கி காரை செலுத்திக் கொண்டிருந்த ரஜினிகாந்தால்..
‘அது எப்படியாம்? உன்னையும் உனது தொழிலையும் பற்றி தனது மகளுக்கு என்ன ஆகுமோ என்ற பதற்றத்தில் ஒன்றிரண்டு வார்த்தை தவறாக பேசிவிட்ட அந்த மனிதரின் பணத்தை வாங்க மாட்டாயாம். ஆனால் தெரிந்தே இதையெல்லாம் செய்து உன்னை தூக்கி எறிந்து விட்டுச் சென்றவளை நினைத்து அப்படியே உருகி உருகி தேடுவாயாம்’
இது அவளைத் தேடித் தோற்றுவிட்டு காரில் வந்து அமர்ந்து அவன் காரை கிளப்பிய நேரத்தில் ஒலித்த அவனது மனசாட்சியின் குரல்.
பதிலே சொல்ல முடியாத கேள்விகளை தொடுப்பதற்காகவே மனசாட்சி என்ற ஒன்றையும் வெளியே வரவே முடியாத வலைகளை பின்னுவதற்காகவே மனம் என்ற ஒன்றையும் சேர்த்து படைத்து வைத்திருக்கிறான் இறைவன்.
“இங்கே பாருண்ணா. நீ கல்யாணம் பண்ணிக்கறியோ இல்லையோ எனக்கு சீக்கிரம் வழி விடு. நான் நிம்மதியா கல்யாணம் பண்ணி ஹவுஸ் வைஃபா செட்டில் ஆகணும்” அப்போதெல்லாம் தங்கை பேசுவதை விளையாட்டு எனவே நினைப்பான் நமது மருத்துவன்
அவளது பெயர் அரசி. அரசியாகவே வாழட்டுமே என்பதுதான் இவன் எண்ணமும் இவனது பெற்றோரின் எண்ணமும். இருந்தாலூம் நேரமும் காலமும் சூழ்நிலைகளும் அவளை இப்போது எங்கேயோ கொண்டு நிறுத்தி இருக்கின்றன.
“எனக்கு எல்லாம் கல்யாணம் பண்ணிக்கற ஐடியாவே இல்லை. என்னோட ப்ரொஃபஷன்லே சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு. அதுக்கு முதல் தடையே கல்யாணம்தான்னு நினைப்பவன்தான் நான். ஸோ சீக்கிரமா என் தங்கைக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து அசத்தலா கல்யாணம் பண்ணிடுவோம்” என்பான் அவளது தலையில் குட்டி “இருந்தாலும் இப்படி கல்யாணத்துக்கு லோலோன்னு அலையுற பொண்ணை இப்போதான் பார்க்கிறேன்” என்று முடித்து அவளிடம் அடி வாங்கி வாங்கிக்கொள்வான்.
இதுவெல்லாம் ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால் நடந்தவைகள்.
அப்படி பேசும் போதெல்லாம் தனது தங்கை ஒரு நாள் ஒரு பெரிய கல்லூரியில் உளவியல் பேராசிரியையாக வருவாள் என்று அவன் நினைத்துக் கூட பார்த்தது இல்லை.
இதிலே எது அவளுக்கு நன்மை? இதுவும் பதிலே தெரியாத ஒரு கேள்வி.
ஒரு கட்டத்தில் அவள் ஒரு பெரிய முடிவை எடுத்து டெல்லியை நோக்கி கிளம்பிய பிறகு அம்மாவின் கண்ணீர் அவனை இளக்கியது.
“சரிம்மா. பொண்ணு பாரு. நான் கல்யாணம் பண்ணிக்கறேன்” சொன்னான்தான்
அவனது அம்மா பார்த்து கொடுத்த பெண்தான் ஸ்ரீதேவி என்றாலும் அவளைப் பார்க்காமலே திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தது எது? இதுவும் பதிலே சொல்ல முடியாத கேள்வி.
‘ஒரு முறை கூட பார்த்திராத, கைப்பேசியில் மட்டுமே துவங்கி அங்கேயே வளர்ந்து அங்கேயே முடிந்து போன ஒரு விஷயத்தை ஆழமான காதல் என்று எப்படி சொல்லி விட முடியும்.?’ அடுத்துக் கேள்விக் கேட்டது மனசாட்சி.
‘இப்போதும் சொல்கிறேன் அவளால் என் முன்னால் வந்து நின்று அதே வார்த்தைகளை பேசி விட முடியாது” கூவியது மனதின் இன்னொரு பகுதி. அவள் அப்படி பேசியதற்கு ஏதோ ஒரு காரணம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
அவர்கள் பழகிய காலத்தில் அப்படி எல்லாம் பெரிதாக பரிசுகள் எல்லாம் பகிர்ந்து கொண்டது இல்லை இருவரும். என்றாலும் இருவரும் பகிர்ந்து கொண்ட ஒரே ஒரு பரிசு மட்டும் மறக்கவே முடியாத ஒன்றாகத்தான் அமைந்து இருந்தது.
“இன்னும் ஒரு வாரத்திலே வேலன்டைன்ஸ் டே வருது ரஜினி சர் எனக்கு என்ன கொடுக்க போறீங்க?” அன்று கேட்டு வைத்தாள் இவள்.
“இன்னும் ஒரு வாரத்திலே வேலன்டைன்ஸ் டே வருது ஸ்ரீதேவி டாக்டர் எனக்கு என்ன கொடுக்கப் போறீங்க?” பதிலுக்கு கேட்டு வைத்தான் இவன்.
“பார்றா. நானும் உங்களுக்கு கொடுக்கணுமா?”
“பின்னே வேண்டாமா?” என்றான் இவன் காதல் கலந்த குரலில். “நேர்லே வந்து கன்னத்தோட கன்னம் வெச்சு உதட்டோட உதடு வெச்சு.. இப்படி எல்லாம் கூட..”
“ஹலோ சர் நிச்சயம் வரை நேர்லே பார்க்க வேண்டாம்னு சொன்னது நீங்கதானே? இப்போ என்ன திடீர்னு?” அவனை கொக்கியில் மாட்டினாள் பெண் மருத்துவர்.
“அப்போ சொன்னேன் ஆனா இப்போ..” சற்றே இழுத்தான் இவன்.
“அதெல்லாம் நீங்க ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரித்தான். தலைவர் பெயர் வெச்சுகிட்டு நீங்க மாத்தி மாத்தி பேசக் கூடாது..” இது அவள்.
“நிஜம்மா சொல்லு உனக்கு என்னை பார்க்கணும்னு ஆசையே இல்லையா தேவிம்மா” அந்த தேவிம்மாவும் அவளை அத்தனை ஈர்த்தது.
“உண்மையை சொல்லவா?”
“ம்”
“எனக்கு உங்களை பார்க்கணும்ங்கிறதை விட அது என்னவோ உங்களை தொட்டுப் பார்க்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு . பர்டிகுலர்லி தோஸ் ஃபிங்கர்ஸ். அந்த விரல்கள்….. நீங்க சர்ஜரி பண்ணி நிறைய பேருக்கு பார்வை வந்திருக்குன்னு உங்க அம்மா அவ்வளவு பெருமையா சொன்னாங்க”
“என்ன ஸ்ரீதேவி டாக்டர் நீங்க பண்ணாத சர்ஜரியா? சர்ஜரி பண்ணி எத்தனை உயிர்களை பத்திரமா ஜனிக்க வைக்கறீங்க?”
“இல்லை ரஜினி சர். ..அவ்ளோ நுணுக்கமா…… எனக்கு சரியா சொல்லத் தெரியலை… எனக்கு… எனக்கு உங்க விரல்களை தொட்டுப் பார்க்கணும்…”
“ஆஹான்.. தொட்டுப் பார்த்து..” கேட்டான் இதமாய்
“அது.. அது.. தொட்டுப் பார்க்கணும் அவ்ளோதான். சரி ..நான்..நான்… உங்களுக்கு சர்ப்ரைஸா எதாவது ஒரு கிஃப்ட் ட்ரை பண்றேன்” படபடத்துப் போனாள் அவனுடய குழைவில்.
“சரி நானும் அப்போ சர்ப்ரைஸா கிஃப்ட் ட்ரை பண்றேன். வேறே வழி? ” குரலில் சேர்த்துக் கொண்ட சின்ன ஏக்கத்துடன் சொன்னான் இவன்.
இருவரும் கொரியர் வழியாக தங்களது பரிசுகளை பரிமாறிக் கொண்ட போது அதைப் பார்த்து அசந்துதான் போனார்கள்.
“என்ன டாக்டர் மேடம் இது. எப்படி நான் வாங்கின மாதிரி அதே… என்னாலே நம்பவே முடியலை” பரிசுகளுக்கு எல்லாம் இத்தனை மகிழ்ந்து போனவன் இல்லை அவன்.
“எனக்கும் புரியலை ரஜினி சர். ஆனா மனசுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. நாம சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கணும்.”
“நான் இப்போவே ரெடி ஸ்ரீதேவி டாக்டர், வரீங்களா நீங்க?
“பார்றா. என் ஃப்ரெண்ட் கூட நீங்க அனுப்பின கிஃப்ட் பார்த்திட்டு நாம் ரெண்டு பேரும் மேட் ஃபார் ஈச் அதர்ன்னு சொன்னா. உங்க அம்மா மாதிரியே நம்ம கல்யாணத்திலே அவளுக்கு ரொம்ப சந்தோஷம்”
“அது யாருங்க உங்க ஃப்ரெண்ட்? அவங்க பேர் என்ன?” இவனது குரலில் ஆர்வம்
“பார்றா.. பேரெல்லாம் சொல்ல முடியாது” என்றாள் இவள் வேண்டுமென்றே. “அவளும் ஒரு டாக்டர்தான் அது வேணும்னா சொல்லலாம்”
“ஆஹான்.. அப்போ அவங்களை நான் மீட் எல்லாம் பண்ண முடியாதா?”
“அது சரி. என்னையே நிச்சயத்திலே தான் மீட் பண்ணுவாராம். என் ஃப்ரெண்டை இப்போவே பார்க்கணுமா? வாய்ப்பே இல்லை. வேணும்னா நம்ம நிச்சயத்திலே அறிமுகப் படுத்தி வைக்கிறேன்.” என்றவள் ஏனோ சட்டென மௌனமானாள் பின்னர் திடீரென கேட்டாள் “எது நடந்தாலும் என்னை விட்டுட மாட்டீங்க தானே ரஜினி சர் ?”
“ஏன்டா அப்படி கேக்குற?” இவனது குரலிலும் இறக்கம்.
“தெரியலை தோணிச்சு. உங்க அப்பா சொன்னாங்க, என் ஜாதகப் படி நிச்சியதார்த்தம் முடிஞ்சதும் ஏதோ பரிகாரம் பண்ணனும். இல்லன்னா நமக்குள்ளே ஏதாவது மனஸ்தாபம்….. சரி அப்புறம் பேசறேன். சர்ஜரி இருக்கு பை.”அப்போதைக்கு முடிந்திருந்தாள் அவள்.
எல்லாம் நின்று போய் ஒரு ஒன்றரை வருடம் இருக்குமா? கணக்குப் போட்டது மருத்துவனின் மூளை.
இந்த தொழில் நுட்ப யுகத்தில் இப்போது நினைத்தாலும் பார்த்து விடக் கூடிய, பேசி விடக் கூடிய தூரத்தில்தான் இருக்கிறாள் என்றாலும் அவனால் அதை செய்ய இயலவில்லை.
அப்போதெல்லாம் இவன் மிகவும் நேசிக்கும் ஒரு உயிராக இருந்தவள் இன்று இவனை மொத்தமாக வெறுக்கும் ஒரு பெண்ணாக மாறிப் போனது ஏனோ?
இவள்தான் திடீரென மாறிப் போனாள் என்றால் இந்தத் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டு நிச்சியம் வரை அத்தனை ஏற்பாடுகளும் செய்த அவளது அன்னைக்கு என்னவாயிற்று? அவர் எப்படி இவளுடன் சேர்ந்து கொண்டார்? இந்தக் கேள்விகளுக்கும் இவனிடம் பதில் இல்லை.
அவளது அந்த முடிவினால் உடைந்து போய், கலங்கிப் போய் நின்ற இவனது அன்னையும் தந்தையும் இப்போதுதான் ஒரு நிலைக்கு வந்திருக்கிறார்கள்.
“என்ன ரஜினி சர் நீங்க? உங்களாலே தப்பெல்லாம் பண்ணவே முடியாது.” அப்பா அடிக்கடி சொல்வார்.
ஆனாலும் எனது காதல் விஷயத்தில் நான் தப்பு செய்து விட்டேனோ? அவளை வெகு சுலபமாக என்னை விட்டு விலகிப் போக விட்டு விட்டேனோ? எனது தன்மானம் பெரிதென நிஜமான காரணம் என்ன என்று ஆராயாமல் விட்டு விட்டேனோ? இன்று காரணமே இல்லாமல் குடைந்தது மனசாட்சி.
அதற்குள்ளாக கார் அன்னை இருக்கும் மருத்துவமனையை அடைந்து இருந்தது. அங்கேதான் அவளும் சுற்றிக் கொண்டிருக்கிறாள் என்பதைத்தான் இவன் அறிந்திருக்கவில்லை. தலை வலியின் அழுத்தம் இவனுக்கும்.
காரை விட்டு இறங்கினான் இவன். மிக மிக மெலிதான் தூறலும், இளங்காற்றும் ஒன்றை ஒன்று முத்தமிட்டுக் கொண்டிருக்க காரின் கதவைத் திறந்து கொண்டு இறங்கி அப்படியே நின்று விட்டான் கொஞ்ச நேரம்.
அப்போது அந்த மருத்துவமனை வளாகத்தின் வெளியில் இருந்த அந்த காபி கடை இவனது கண்ணில் பட்டது. அடர் மரங்களின் கீழே ஆங்காங்கே சிமெண்ட் பெஞ்சுகள் இருக்க, அவற்றின் நடுவில் இருந்தது அந்த ‘காஃபி பாயின்ட்’.
அதை நோக்கி தனிச்சையாய் நகர்ந்தன இவன் கால்கள்.
அதே நேரத்தில் அந்த காபி பாயின்ட்டின் அருகினில் நின்றவளின் கைப்பேசி ஒலித்தது. அழைத்தது அவளது அன்னை. ஏற்றாள் அழைப்பை.
“சொல்லுமா”
“நாளைக்கு குல தெய்வம் கோவிலுக்கு போகணும். ஆயிரம் வேலை கிடக்கு, சீக்கிரம் வாயேன்”
“வரேன் மா. இங்கே வேலை எல்லாம் முடிஞ்சது. கிளம்பறேன்.”
“மூணு நாள் லீவ் சொல்லிட்டியா?” அன்னையின் தவிப்பு இது.
“சொல்லிட்டேன் மா. வரேன் ” துண்டித்தாள் அழைப்பை. அந்த கடையில் அவளுக்கான காபியை சொல்லி விட்டு சற்று தள்ளி நின்று கொண்டாள்.
“என்ன மாதிரி ட்ரெஸ் பண்ணுவீங்க நீங்க? எப்பவும் ஃபார்மல்ஸ்தானா? ஜீன்ஸ் டி ஷர்ட் எல்லாம் உண்டா?” ஸ்ரீதேவி ஒரு முறை கேட்டிருக்கிறாள் நமது கண் மருத்துவனிடம்.
“ஜீன்ஸ் டி ஷர்ட் எல்லாம் போடுவேன். ஆனா பேன்ட் கலர் எப்பவும் கருப்புதான். ஷர்ட், டிஷர்ட் தான் கலர் மாறும்” சொல்லி இருக்கிறான் அவன்.
இன்று சுற்றி இருக்கும் கருப்பு பேண்டில் எல்லாம் அவனை தேடிக் கொண்டிருக்கிறது இவளது அங்கலாய்த்துக் கிடந்த மனது. நாளை குல தெய்வம் கோவிலில் திருவிழா.. அங்கே பல சொந்தங்கள் கூடும். இவளது திருமண பேச்சு அடிபடும். எங்கிருந்தாவது ஒரு மாப்பிள்ளை கிளம்பி வருவான். நினைக்கவே சலிப்பாக இருந்தது இவளுக்கு.
“என்னாச்சு ஸ்ரீதேவி டாக்டர்? குரல் ஒரு மாதிரியா இருக்கு? உடம்புக்கு என்ன?”
ஒரு முறை எங்கிருந்தாவது கேட்டு விடேன். உடலும் மனமும் தளர்ந்து கிடக்கிறது. உள்ளம் உனது அன்பிற்கு ஏங்கிக் கிடக்கிறது. கெஞ்சிக் கொண்டாள் மனதார.
அதை உணர்ந்து கொண்டதோ அவனது உள்ளுணர்வு. சொல்லி வைத்ததை போல. தனது தலை வலிக்கான மருந்தைத் தேடி அதே காஃபி பாயிண்ட்டில் வந்து நின்றான் ரஜினிகாந்த்.
காலையில் மருத்துவமனைக்கு சென்ற அதே இளம் கிரீம் நிற முழுக்கை சட்டையும் கருப்பு பேன்டும் காற்றில் ஆடும் சிலுசிலு சிகையும் என நின்றிருந்தான் அங்கே.
அவனை கவனித்திருந்தாலும் அவனை அவளுக்கு பெரிதாக அடையாளம் தெரிந்து விடப் போவதில்லை என்பது வேறு விஷயம் என்றாலும், காபி பாயிண்டில் அருகே வந்து நின்றவனை கவனிக்காமல் பார்வையை சற்றே தூரத்தில் இருந்த மரத்தின் மீது இருந்த பறவைகளின் மீது வைத்திருந்தாள் ஸ்ரீதேவி.
இரண்டு பறவைகள் ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டு அமர்ந்திருக்க, எங்கிருந்தோ வந்த ஒரு பறவை அந்த இரண்டு பறவைகளில் ஒன்றோடு சண்டையிட ஆரம்பித்தது.
சில நிமிட சண்டை. கொஞ்ச நேரத்தில் முதல் இருந்த பறவை பறந்து சென்று விட புதுப் பறவை சென்று அமர்ந்திருந்த பறவையின் அருகில் அமர்ந்து கொண்டது.
பிரிந்து பறந்து சென்றது ஆண் பறவையா பெண் பறவையா எதுவும் புரியவில்லை என்றாலும், அந்தக் காட்சி ஏனோ பிடித்தம் இல்லை இவளுக்கு.
தலை இன்னுமாக வலித்து தெறிப்பதைப் போலத் தோன்ற
‘டாக்டர் சார் என்னதான் பண்றீங்க?’ இவள் மானசீகமாக கேட்டுக் கொண்டே திரும்ப, இவளுக்காக இவள் முன்னே நீண்டது, இவளுக்கு ஒரு பிரச்சனை எனும் போது உடனே குரலின் வழி அணைத்துக் கொள்பவனின் காபி ஏந்திய கரம்.
தொடரும்
அத்தியாயம் ஐந்து
டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 5 – Praveena Thangaraj Novels
Interesting👌
@Rajamrajam உங்க கமென்ட் எனக்கு எப்பவுமே பெரிய பூஸ்ட். மா. நன்றி நன்றி.
அழகான மெல்லிய தூறலை ரசிக்கும் மனப்பான்மையில் அத்தியாயம். வத்சலாவிற்கு மட்டுமே சாத்தியமான ஒன்று. மழை, காபி இரண்டும் இல்லாமல் ஹீரோ, ஹீரோயினா? மனசாட்சி, மனம் கனெக்ட் பண்ணின வரிகள் வெகு அழகு. எங்க ரஜினி சர் தப்பு பண்ணமாட்டாங்க – படிக்கவே அழகா இருந்தது. குரலின் வழி அணைத்துக் கொள்பவன் எப்போது நேரில் வருவானோ. தேவியோடு நாங்களும் காத்திருக்கிறோம் வத்சலா .
@devisrinivasan. அவ்வளவு ரசிச்சு படிச்சு ரசிச்சு ரசிச்சு கமென்ட் போட்டு இருக்கீங்க. மனசுக்கு அத்தனை நிறைவா இருக்கு. இன்னும் நிறைய இது போல எழுதனும்னு தொந்து உங்க கருத்துக்களை பார்க்கும் போது.நன்றி நன்றி நன்றி
Azhaghana pathivu 😍😍😍😍😍
@Eswari ஒவ்வொரு அத்தியாயத்தையும் ரசிச்சு படிச்சு தொடர்ந்து கமென்ட் பண்றீங்க, எனக்கு அத்தனை சந்தோஷம். நன்றிகள் பல மா.
அருமை அருமை….
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@Anuammu எல்லா அத்தியாயத்துக்கும் ரசிச்சு படிச்சு உங்க கருத்துக்களை சொல்வது எனக்கு பெரிய சந்தோஷம் மா. மனம் நிறைந்த நன்றிகள்.
ரஜினி சார் தப்பு பண்ண மாட்டார், என்ன ஒரு அருமையான டயலாக் அந்த ரஜினின்ற பெயருக்கான டயலாக், நம்ம டாக்டர் ரஜினிகாந்த் மேலையும் ரொம்ப எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது அவர் நம்ம ஸ்ரீதேவி டாக்டரை புரிந்து கொள்வார் என்று தெரிகிறது, super going very well
@muthupriyabalaji. பொதுவாகவே எழுத்தளர்களுக்கு பெரிய கமென்ட் பார்க்கும் போது ரொம்பவே சந்தோஷமா இருக்கும். அதுவும் தமிழில் எனும் போது இன்னும் பெரிய மகிழ்ச்சி. ஒவ்வொரு அத்தியாயத்தையும் படிச்சு நீங்க சொல்லும் கருத்துக்கள் அப்படி ஒரு உணர்வைத்தான் கொடுக்கிறது. நான் ரஜினி சாரை எவ்வளவு ரசிச்சு எழுதறேனோ அவ்வளவு ரசிச்சு படிக்கறீங்க நீங்க. நன்றிகள் பலப்பல மா.
Rajini sir oru thadavai sonna dialogue always special. Correct a connect panni irukeenga. Rajini ,sridevi ku naduvil play pannuvathu yaar?
Rajini ,sridevi yai therinthu kolvaana?
@priya ஒரு தடவை சொன்னா டயலாக்…ஹா ஹா ஹா… கிரேட் நீங்க. அழகா கேட்ச் பண்ணிடீங்க. ஒவ்வொரு எபியும் ரசிச்சு படிச்சு கமென்ட் சொல்வதற்கு மனம் நிறைந்த நன்றிகள் மா.
காபி வித் லவ் ❤❤❤
@kothai suresh Beautiful comment. நீங்க கதையை படிப்பது, கமென்ட் போடுவது எனக்கு அத்தனை பெரிய என்ரஜி. நன்றிகள் பலப்பல
அருமையான ஜோடி ஏதோ காரணம் இருக்கு. .. அந்த நட்பு தான் ஏதோ பண்ணி இருக்க வாய்ப்பு இருக்கு
@kothaihariram ஒவ்வொரு அத்தியாயத்தையும் ரசித்து ரசித்து படித்து அழகான கமென்ட் சொல்லும் உங்கள் அன்பிற்கு மனம் நிறைந்த நன்றிகள். உங்களது கருத்து மிகப் பெரிய ஊக்கம் எனக்கு.
Lovely lovely…evlo frustration la iruntaalum unga writing padicha oru positive vibe vandudum..,thanks ka
@Uma என்ன மாதிரி வார்த்தைகள். வாவ்ன்னு இருக்கு. ரொம்ப ரொம்ப நிறைவா இருக்கு மனசுக்கு. மனம் நிறைந்த நன்றிகள் மா.
ithu than pakamale vara love ah aana atha unarnthu apram yen venam solli iniku avanukaga engitu iruka paru unmaiyana kadhalum purithalum iruntha manasula ninaikurathu avanuku therium
@kalidevi மனம் நிறைந்த நன்றிகள் மா. முதல் அத்தியாயத்தில் இருந்து ஒவ்வொரு எபிக்கும் கமென்ட் சொல்லி அவ்ளோ சப்போர்ட் பண்றீங்க. மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மா.
Super😍😍
@Vinoprakash. Thanks for your continuous support. Its extremely encouraging to read your comment
@Vinoprakash. Thanks for your continuous support. Its extremely encouraging to read your comment
ரஜினி சாரும் ஸ்ரீதேவி டாக்டரும் பேசிக்குறது அழகு சிறு தூரல் வித் காபி செம காம்போ ரெண்டு பறவைக்கு நடுவில் புதுசா ஒரு பறவை மாதிரி இவங்களுக்கு நடுவில் வந்த மூண்றாம் நபர் யாரா இருக்கும்
@Gandhimathi ரொம்ப ரொம்ப அழகான கமென்ட். தூரல் வித் காபி…… நன்றி நன்றி. அந்த பறவை ஸீன் யாருமே சொல்லலை. நீங்க கரெக்டா கேட்ச் பண்ணிட்டீங்க. யார் அந்த மூன்றாம் நபர்/ அடுத்த எபியில் தெரியும்.
Wow😍
@priyarajan Thank u so much