“மறந்திருந்தால் குறித்துக் கொள்” சிரிப்புத்தான் வந்தது இவனுக்கு. அவளது கைப்பேசி எண் தொடங்கி வண்டி எண், கார் எண், என அத்தனையும் மனப்பாடம் இவனுக்கு.
‘நிஜமாகவே வருகிறாளா என்ன?’ அப்படித்தான் இருக்கும் எனத் தோன்றியது அவனுக்கு. இருந்தாலும் இதை அனுப்புவது யார் எனும் கேள்வி அவனைக் குடைந்தது.
அதனாலேயே அதற்கு பதில் சொல்லும் எண்ணம் வரவே இல்லை ரஜினிகாந்துக்கு.
ஒரு முடிவுக்கு வந்தவனாக தனது காவல்துறை இன்ஸ்பெக்டர் தோழி ஷாலினியை அழைத்தான் அவன். அவள் இவனுடைய பள்ளிக்கால தோழி.
“சொல்லுடா. எப்படி இருக்கே?”
“நல்லா இருக்கேன். பிசியா என்ன?” கேட்டான் இவன்.
“ஒரு என்குயரிக்கு ஓடிட்டு இருக்கேன். ஏதாவது முக்கியமான விஷயமாடா?” கேட்டது எதிர்பக்கம்.
“ஒரு சின்ன ஹெல்ப் ஷாலுமா. ஒரு நம்பர் ட்ரேஸ் பண்ணி யார் நேம்லே இருக்குன்னு சொல்லணும். நான் ட்ரை பண்ணேன் சரியா கண்டு பிடிக்க முடியலை.”
“அவ்ளோதானே. நம்பர் அனுப்பு. நாளைக்குள்ளே பார்த்து சொல்றேன்” முடித்திருந்தாள் தோழி.
அதே நேரத்தில் தனது வீட்டில் இருந்து கிளம்பிக் கொண்டிருந்தாள் ஸ்ரீதேவி. அதே கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக சென்னை நோக்கி கிளம்பிக் கொண்டிருந்தாள் அவள்.
“நீ மட்டும் தனியாவா போறே? தனியா எப்படி கார் ஓட்டிட்டு போவே?” நேற்றே ஆரம்பித்து இருந்தாள் அம்மா.
“ஒண்ணும் பயமில்லைமா. முந்நூறு கிலோ மீட்டர்தானே. அதுவும் பகல் நேரம்தானே. சமாளிச்சிடுவேன்” அம்மாவுக்கு அரை மனம்தான் என்றாலும் எப்படியோ சம்மதிக்க வைத்திருந்தாள் இவள்.
இதோ இன்று ஸ்ரீதேவியின் கை வண்ணத்தில் நகர்ந்து கொண்டிருந்தது அவளின் செலிரியோ ரஜினிகாந்தின் தந்தை பார்த்திருந்தால் இதை கண்டிப்பாக தடுத்திருப்பார்
“வேண்டாம் தேவி. டிரைன்லே போயிட்டு வாயேன் இந்த தடவை” என்று சொல்லி இருப்பார் அவர். இதை அறிந்திருக்கவில்லையே அவர்.
கார் சென்னை நோக்கி, நெடுஞ்சாலையில் நகர ஆரம்பித்து இருக்க ஸ்ரீதேவியின் கைப்பேசியைத் தொட்டது அதே தெரியாத எண்ணில் இருந்து வந்த அந்தக் குறுஞ்செய்தி.
அதே நேரத்தில், அதே நெடுஞ்சாலையில்தான் பயணித்துக் கொண்டிருந்தான் நமது ரஜினிகாந்தும். தனது பென்ஸ் காரை படு லாவகமாக செலுத்திக் கொண்டிருந்தார் டாக்டர் கணபதி உற்சாகத்தின் உச்சியில் இருந்தார் அவர்.
நவம்பர் மாத குளிரும், மழையும் அவர்கள் பயணத்திற்கு துணை வந்து கொண்டிருந்தன. சென்னையிலுமே மிதமான முதல் கனமழை வரை பெய்யலாம் என்ற அறிவிப்பை கொடுத்திருந்தனர் வானிலையாளர்கள்.
“நான் டிரைவ் பண்றேன் சர்” எனும் இவனது கோரிக்கையை மறுத்திருந்தார் கணபதி .
“கொஞ்ச நேரம் சும்மா வா பா. எத்தனை வருஷம் ஆச்சு நான் டிரைவ் பண்ணி. காரிலே உட்கார்ந்து வந்து வந்து போர் அடிச்சு போச்சு” என்றவர் இவனை ரசனையுடன் பார்த்து விட்டு
“எப்பவும் உன்னை ஃபார்மல்ஸ்லே பார்த்து பார்த்து இன்னைக்கு டி ஷர்ட் த்ரீ ஃபோர்த்ன்னு கலக்குறியே பா” என்றார். “யூ லுக் வெரி ஸ்மார்ட்’
“சர் நீங்க வேறே. ட்ராவெல்க்கு சரியா இருக்கும்னு போட்டேன் சர்” என்றான் சின்ன வெட்க சிரிப்புடன்.
“நானும் யோசிச்சேன் ரஜினி. ஆனா போய் இறங்கினதும் எவனாவது டெலிகேட்ஸ் “ஹாய் சர்”ன்னு வந்து நிற்பான். நம்ம இமேஜ் கொஞ்சம் பாதிக்க படாம இருக்கணும் இல்லையா” என்று சொல்லி அவர் வாய் விட்டு சிரிக்க இவனுமே வாய் விட்டு சிரித்தான்.
“நீ இப்படி சிரிச்சு நான் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு பா” என்றார் ஒரு கையால் அருகில் இருந்தவனின் தோளில் ஒரு செல்ல அடி வைத்து. “நம்ம சூப்பர் ஸ்டார் பேர் வெச்சுகிட்டு சோகமா சுத்திட்டு இருக்கியே நீ. என்னாச்சு உனக்கு, இங்கே வந்த புதுசிலே நிறைய மிமிக்ரி எல்லாம் பண்ணுவே. நீ என்னை மாதிரி பேசி எல்லாம் நான் பார்த்து இருக்கேன்”
மெலிதாக சிரித்துக் கொண்டான் ரஜினிகாந்த்.
“எங்கே இப்போ ஒரு தடவை பேசிக் காட்டு பார்ப்போம்” என்றார் ஆவலுடன்.
“நீங்க வேறே சர். நான் அப்போ ஏதோ ஃபன்க்காக பண்ணேன்”
“இப்போவும் அதே ஃபன்க்குதான் கேக்கறேன். பண்ணு பா” என்றார் வெகு லாவகமாக காரை இரண்டு லாரிகளுக்கு நடுவில் புகுத்திக் கொண்டே.
“மை டியர் யங் மேன்” இவன் அவர் குரலில் பேச, அவர் வாய் விட்டு சிரிக்க, அவன் இன்னும் தொடர, அங்கே சில நிமிடங்கள் இருந்த அவனது உற்சாகம் அவரது ஒரு கேள்வியில் தணிந்து நின்றது.
“உன்னுடைய இந்த விளையாட்டு எல்லாம் நம்ம ஹாஸ்பிட்டல் மேலே வந்த அந்த கருவிழி திருட்டு பத்தின பிரச்சனைக்கு அப்புறமே குறைஞ்சு போச்சு ரஜினி” அவனைக் கனகச்சிதமாக கணித்து வைத்திருந்தார் மனிதர்.
“ஆமாம் சர்” என்றான் மெதுவாக
“அதுதான் எதுவுமே நடக்கலைன்னு ப்ரூவ் ஆகிடுச்சு இல்லையா பா. அப்புறம் என்ன? அது அந்த அரசியல் கட்சி பிரமுகரோட வேலை. அவர் ஹாஸ்பிட்டல்க்கும் நமக்கும்தான் போட்டி. என்னென்னமோ பண்ணிப் பார்த்தாங்க. யூ டியூப், டி.வி சேனல் அப்பிடின்னு எல்லாத்திலேயும் பேசினாங்க. நம்ம டாக்டர்ஸ் எல்லார் பேரையும் அதிலே இழுத்து விட்டாங்க. கடைசியில் நியாயம் ஜெயிச்சு வந்தததா இல்லையா?” பேசிக் கொண்டே சென்றார் கணபதி .
பார்வையை ஜன்னலுக்கு வெளியில் வைத்துக் கொண்டான் ரஜினிகாந்த்.
“அதான் ஊரெல்லாம் பேசறாங்களே உங்க ஹாஸ்பிட்டல்லே தானமா கிடைச்ச கருவிழியிலே ஆரம்பிச்சு எல்லாத்திலேயும் ஸ்கேம்ன்னு. அத்தனை திருட்டுன்னு. அதிலே எல்லாத்திலேயும் உங்களுக்கும் பங்கு இருக்குன்னு. நீங்க எல்லாம் ஒரு டாக்டரா? உங்களோட பழகின்னேன்னு சொல்லவே எனக்கு அசிங்கமா இருக்கு. சரியான திருடன். துரோகி. உங்க கல்விக்கு நீங்க செஞ்ச துரோகம் இது. இப்படி இருந்தா உங்க வித்தை உங்களுக்கு பலிக்காமத்தான் போகும் “ இப்போதும் காதுக்குள் வந்து சாடினாள் ஸ்ரீதேவி.
“ரஜினி” மிக இதமாக அவர் அழைக்க, கலைந்தான் இவன்.
“சர்..”
“இந்த வயசிலே வேலையிலேயே உன்னை மொத்தமா மூழ்கடிச்சுக்குறே. உன்னோட காதல் ஏதாவது உன்னை விட்டு விலகிப் போயிடுச்சா என்ன?” அத்தனை லாவகமாக இன்டிக்கேட்டரை உபயோகித்தபடியே, வாகனத்தை நெடுஞ்சாலையின் இந்தப் பக்கத்துக்கும் அந்தப் பக்கத்துக்கும் மாற்றி முன்னேறிக் கொண்டே கேட்டார் கணபதி .
“சர்?” அதிர்ந்து போனான் இவன்.
“எனக்கு உன் முகத்தை பார்த்தாலே தெரியுது ரஜினி ” என்றார் வெகு சாதாரணமாக.
“கடைசியிலே எனக்கு ரிப்ளை பண்ணாமலே ஏமாத்திட்டீங்களே ஸ்ரீதேவி டாக்டர். சரி போகட்டும். கார்லே சென்னை கிளம்பிட்டீங்க போலிருக்கே. நானும் வரேன் உங்க பின்னாடியே. அதே கான்ஃபெரென்ஸ்க்கு. ஆனா என் கார்லே இல்லை. எங்க கணபதி சர் கார்லே. பென்ஸ். ஹை வேஸ்லே போகும் போது, எங்க காரை கொஞ்சம் தேடிப் பாருங்க. உங்களை கிராஸ் பண்ணும் போது நான் அதிலிருந்து ஒரு ஹாய் சொல்றேன். ஓ..எங்க கார் நம்பர் தெரியாது இல்லையா. குறிச்சு வெச்சுக்கோங்க ஸ்ரீதேவி டாக்டர்” அழகான இதய வடிவ எமொஜிக்களுடன் இருந்தது அந்த குறுஞ்செய்தி.
ஸ்ரீதேவியின் கார் சுங்க சாவடியில் காத்திருந்த நேரத்தில், இவள் கைப்பேசியை துழாவிய போது கண்ணில் பட்டு வைத்தது அது.
சில நொடிகள் திக்குமுக்காடித்தான் போனாள். அது எப்படி நான் கிளம்பியதை மிகச் சரியாக சொல்கிறான். எங்கிருந்தாவது பார்த்துக் கொண்டிருக்கிறானா என்ன சுற்றும் முற்றும் பரபரத்துத் தேடித் பார்த்தன இவளது விழிகள்.
அடுத்த சில நிமிடங்களில் இவளது செலிரியோ சாலையில் நகர்ந்த போது அவளது ஜன்னலை கடந்து பல கார்கள் பறந்து கொண்டிருக்க, அந்த கார்களின் எண்கள் இவளோடு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தன.
“நானும் உங்களோட ஒரே கார்லே ட்ராவெல் பண்ணலாம்னு நினைச்சேன். தப்பிச்சுட்டீங்க டாக்டர் சர்.” நேற்றே ரஜினிகாந்திடம் சொன்னாள் மஹதி.
கணபதி டாக்டருடன் அத்தனை பழக்கம் இல்லையே அவளுக்கு. அதனால் வேறு சில மருத்துவ தோழிகளுடன் வேறொரு காரில் வந்து கொண்டிருந்தாள் மஹதி.
“பொதுவா மனிதர்களை பற்றின என்னோட கணிப்புகள் தப்பா போறது இல்லை ரஜினி. அது எப்படியோ காதலை மனசுக்குள்ளேயே வெச்சுகிட்டு போராடிட்டு இருக்கிறவங்களை முகம் பார்த்ததும் கண்டு பிடிச்சிடுவேன். பல வருஷ அனுபவம். கை கூடாத காதலை நினைச்சே இத்தனை வருஷம் கல்யாணமே பண்ணிக்காம தொழிலே வாழ்க்கைன்னு வாழ்ந்திட்ட அனுபவம்”
“சர்.. சர்.. நீங்க.. உங்க..” என்ன கேட்க வேண்டும் என் புரியவில்லை அவனுக்கு. அவரது அந்த திடீர் வார்த்தைகளில் தடுமாறிப் போனான் ரஜினிகாந்த்.
“வார்த்தைக்கு வார்த்தை பொண்ணு பொண்ணுன்னு சொல்றேனே அவ யாருன்னு கேட்கறியா? அவ நான் தத்து எடுத்து வளர்த்த பொண்ணு பா. இந்த விஷயம் அவளுக்கும் தெரியும்”
……………………………
“என்ன மிஸ்டர் ரஜினிகாந்த். அப்படியே சைலென்ட் ஆகிட்டீங்க.?” என்றார் அவனைப் பார்த்து கண் சிமிட்டி. “வெளியே பார்க்கத்தான் நான் ஹை ஃபை, மெத்த படித்த மேதாவி, அறிவு ஜீவி, கம்பீரமானவன் எல்லாம். உள்ளுக்குளே சரியான பைத்தியக்காரன். இல்லேன்னா என்னை உயிருக்குள்ளே வெச்சு ஒரு பொண்ணை ஒரு தடவை கூட பார்க்காம இருந்திருப்பேனா? அவ என்னை விட்டு போன பிறகும் இந்த நிமிஷம் வரை அவளை விட்டு மனசை விலக்கவே முடியாம இருப்பேனா?
இப்படி பேச்சிழந்து நின்ற தருணங்கள் எல்லாம் அவனது வாழ்க்கையில் மிகக் குறைவு.
“இதெல்லாம் என் வாழ்க்கையிலே நான் யாருக்கும் சொல்லாத ரகசியங்கள். என்னமோ இன்னைக்கு உன்கிட்டே கொட்டணும்னு தோணுது.”
“என்னை அவ்வளவு நேசிச்சா ரஜினி அவ. இந்த சினிமாலே எல்லாம் வருமே பார்த்துக்காம லெட்டர்லேயே லவ் பண்றது. அப்படிதான் இருந்தது எங்க காதல்.” கணபதி சொல்ல ஒரு வித தவிப்பு தொற்றிக் கொண்டது ரஜினிகாந்தின் விழிகளில்.
“அப்போவெல்லாம் போன் கூட அவ்வளவு கிடையாதேபா” என்றார் ஏதோ நினைவலைகளுக்குள் விழுந்து கொண்டே.
“இத்தனைக்கும் அவ என்னோட சொந்த அத்தை பொண்ணுதான். அவங்க குடும்பத்துக்கும் எங்க குடும்பத்துக்கும் ஆகாது. அதனாலே அவளை நான் பார்த்ததே இல்லை. எங்க பாட்டி மூலமா அவளுக்கு என்னைப் பத்தி தெரிஞ்சு இருக்கு. அவங்க நிறைய சொல்லச் சொல்ல அவன் எனக்கு லெட்டர் போட ஆரம்பிச்சா. நான் அவ காதலை ஏத்துக்கவே இல்லை. அவளும் விடவே இல்லை. கடைசியில் ஒரு நாள் அவ ரொம்ப சொல்றாளேன்னு ரெண்டு பேரும் சந்திக்கலாம்ன்னு முடிவு பண்ணோம்”
சொல்லிக் கொண்டே போனார் அவர். எப்போதும் மருத்துவமனையில் தென்படும் கம்பீரமான கணபதி அங்கே இல்லை. காதலுக்காக ஏங்கி நிற்கும் இருபது வயது இளைஞனின் தொனி இருந்தது அவரது குரலில்.
“அப்போ கூட எனக்கு அவ மேலே காதல் வரலையேபா. சும்மாதான் பார்க்க கிளம்பினேன். சொன்ன இடத்துக்கு போய் நிக்கறேன் நான். அவ ரோட்டுக்கு அந்தப் பக்கம் நிக்கறா. நாங்க சொல்லிகிட்ட அடையாளங்கள் வெச்சு ஒருத்தருக்கு ஒருத்தரை அடையாளம் தெரியுது. கை அசைச்சுக்கிட்டோம். என்னை பார்த்துட்டு ரோட்டை பார்க்காம கிராஸ் பண்ணிச்சு அந்தப் பைத்தியம்,.அதோட எல்லாம்….. அவ என் மடியிலே கிடக்கும் போதுதான் எனக்கு அவ மேலே அவ்வளவு காதல் வந்தது மை பாய்” காரை சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்து இருந்தார் கணபதி .
“சர் .. சர் ப்ளீஸ்.. கண்ட்ரோல் யுவர் செல்ஃப்” அவரை தேற்ற முயன்றவனாலும் கண்ணீரை கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை.
நல்ல வேளையாக காருக்கு அருகிலேயே ஒரு இளநீர் கடை இருக்க, “ஒரு நிமிஷம் இருங்க சர்” என்றவன் அடுத்த இரண்டாவது நிமிடத்தில் அவருக்கான இளநீருடன் வந்தான். அவர் தன்னிலை பெற்று தெளிய ஐந்து நிமிடங்கள் பிடித்தன.
“ஐ அம் ரியலி ஸாரி மை பாய் உன் மூடையும் சேர்த்துக் கெடுத்திட்டேன்” என்றார் தெளிந்து நிமிர்ந்து.
“அதெல்லாம் ஒண்ணுமே இல்லை சர்.” அவர் கரம் பிடித்துக் கொண்டு “யூ ஆர் ரியலி கிரேட். இத்தனை வருஷம் அவங்களையே நினைச்சுக்கிட்டு…”
“இல்லை ரஜினி. அவதான் கிரேட். என்னை நினைச்சுகிட்டே வாழ்ந்து என்னை நினைச்சுகிட்டே போய் சேர்ந்திட்ட அவதான் கிரேட்” என்றவர் அவனை பார்த்து புன்னகைத்தார் “இந்தப் பேச்சை எதுக்கு ஆரம்பிச்சேன்னா, காதல் கைக்கு அருகிலேயே இருக்கும் போதே அதை கொண்டாடிடுங்கன்னு சொல்ல வந்தேன். வெட்டி ஈகோ பார்த்திட்டு அதை தொலைச்சிட்டீங்கன்னா காலம் முழுக்க வருத்தம்தான் மிஞ்சும்”
“க.. கண்டிப்பா சர்” சொன்னவனின் கண்களின் ஓரம் கொஞ்சம் கண்ணீர் கண்டிப்பாக மிச்சம் இருந்தது.
“சரி.. வா.. கிளம்பலாம்” என்று அவர் டிரைவர் இருக்கை நோக்கி நடக்க
“நான் டிரைவ் பண்ணவா சர்” கேட்டான் நமது மருத்துவன்.
“நோ நோ நோ. ஐ ஆம் ஆல் ரைட். வா வா..” என்று பழைய துள்ளலுடன் காரை கிளப்பினார் கணபதி . இவனுக்குள்தான் பல விதமான எண்ண அலைகள். அதில் காரணமே இல்லாத ஒரு பய அலையும் அடக்கம்.
கார் முழு வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க, அதே நேரத்தில் இங்கே சாலையின் ஒரமாக நின்றிருந்த தனது காரில் மருத்துவமனையில் இருந்த ஏதோ ஒரு அழைப்பில் மூழ்கி இருந்தாள் ஸ்ரீதேவி. . அதை முடித்து விட்டு சில நொடிகள் சீட்டில் கண்களை மூடி சாய்ந்து கொண்டாள் அவள்.
அந்த நேரத்தில் அவளை சர்ரென கடந்து பறந்தது டாக்டர் கணபதி செலுத்திக் கொண்டிருந்த பென்ஸ். கவனிக்கவில்லை பெண். இப்படிதான் இறைவன் கொடுக்கும் பல நல்ல சந்தர்ப்பங்களை நமது கவனக்குறைவால் தவற விடுகிறோமோ நாம்?
“இங்கே பெங்களூர்லேர்ந்து சென்னைக்கு சித்தூர் ரூட்லே போயிருக்கியா நீ?” முன்பொரு முறை கேட்டான் அவளிடம்.
“போயிருக்கேனே.”
“அந்த ஹை வே லே ஒரு ஹோட்டல் இருக்கு. ஹோட்டல் சிம்பிள் ஹோட்டல்தான். ஆனா அதை சுத்தி மா மரங்கள், அதை ஒட்டி ஒரு சின்ன பிள்ளையார் கோவில்ன்னு அவ்ளோ அழகா இருக்கும். அதை விட அங்கே ஒரு குல்ஃபி கிடைக்கும் பாரு. சான்ஸ்லெஸ்”
அதே சித்தூர் சாலையில்தான் பயணித்துக் கொண்டிருந்தனர் அனைவரும். அவனது காரை தவற விட்டு விட்டு அவன் முன்பு சொன்ன அந்த உணவகத்தை கூகுள் வழிகாட்டியில் தேடிக் கொண்டு அமர்ந்து இருந்தாள் ஸ்ரீதேவி.
நேரம் மாலை நான்கு மணியை நெருங்கிக் கொண்டிருக்க இங்கே மறுபடியும் உற்சாகத்தின் உச்சியை தொட்டிருந்தார் கணபதி .
“பசிக்குது ரஜினி. ஏதாவது ரெஸ்டாரென்ட் பாரு” என்றார் கையை திருப்பி நேரம் பார்த்துக் கொண்டே “அதுக்குன்னு எனக்காக ஃபைவ் ஸ்டார் ரெஸ்டாரென்ட் எல்லாம் தேடாதே. அதெல்லாம் போர் அடிச்சிடுச்சு பா. சின்னதா சிம்பிள் ஆ இருந்தா கூட ஒகே. நல்ல ஸ்னாக்ஸ் கிடைக்குற மாதிரி பாரு.”
” ஷூர் சர்” என்றவனின் மனதில் அதே குறிப்பிட்ட உணவகம்தான் வந்து நின்றது. சில நிமிடங்கள் கடக்க இவன் சொன்ன பாதையில் பயணித்து, அந்த உணவகத்தின் வாசலில் வந்து நின்றது இவர்களது வாகனம்.
சரியாக அந்த நேரத்தில் அழைத்தான் ரமேஷா. “சொல்லு ரமேஷா”
மருத்துவமனை நோயாளிகள் சம்மந்தப் பட்ட ஏதோ ஒரு தகவலை கேட்டுக் கொண்டவன் “இப்போ எங்கே சர் இருக்கீங்க?” என்றான் சாதரணமாக.
தான் இருக்கும் அந்த இடத்தையும் உணவகத்தின் பெயரையும் சொன்னான் ரஜினிகாந்த்.
”ஓகே சர். என்ஜாய்” அவன் அழைப்பைத் துண்டிக்க காரை நிறுத்தி விட்டு இறங்கினர் இருவரும்.
“ஹேய் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு ரஜினி இந்த ஹோட்டல்” என்றான் கணபதி . அவருக்கு தலையசைத்தவனின் எண்ணங்களோ அவளையே சரணடைந்து இருந்தன.
‘அவளுக்கும் இந்த ஹோட்டல் பற்றி சொல்லி இருக்கிறேன்தானே. நினைவு இருந்தால், அவள் இந்த வழியாக் பயணித்துக் கொண்டிருந்தால் ஒரு வேளை இங்கே வந்து நிற்பாளோ?’
அதே நேரத்தில் அதே உணவகத்தை நோக்கிதான் நகர்ந்து கொண்டிருந்தது ஸ்ரீதேவியின் செலிரியோ. கூகுள் வழிகாட்டி அவளுக்கு அதற்கான பாதையை சொல்லிக் கொண்டு இருந்தது.
சில நிமிடங்கள் கடந்து இருக்க, அவர்கள் இருவருக்குமான சிற்றுண்டிகளை சுவைத்துக் கொண்டிருந்தார்கள் ரஜினிகாந்தும் டாக்டர் கணபதியும்.
அப்போது அந்த உணவகத்தை நெருங்கிக் கொண்டிருந்த ஸ்ரீதேவியின் கைப்பேசியை தொட்டது அந்த குறுஞ்செய்தி. அதே தெரியாத எண்ணில் இருந்துதான் வந்து இருந்தது அது.
காரை செலுத்திக் கொண்டிருந்தவள் இன்னமும் அதை கவனிக்கவில்லை. அங்கே போக வேண்டாம் என்று உள்ளத்தின் ஒரு பக்கம் சொன்னாலும் இன்னொரு பக்க மனம் ஒப்பாமல் பரிதவித்துக் கிடந்தது.
“ரொம்ப நல்லா இருக்கு ரஜினி. வடை, பஜ்ஜி ஹோட்டலோட ஆம்பியன்ஸ் எல்லாமே” உணவை ரசித்துக் கொண்டே சொன்னார் கணபதி . “வேறே என்ன நல்லா இருக்கும் இங்கே?” பல வித தின்பண்டங்களை மகிழ்ந்து ரசிக்கும் ஒரு பத்து வயது பாலகன் தென்பட்டான் டாக்டர் கணபதியிடம்.
‘சர் அது குல்ஃபி” என்றான் தயக்கத்துடன் “உங்களுக்கு அதெல்லாம் பிடிக்காது”
“யோவ் என்னயா நீ?” என்றார் கணபதி “அதை முதலிலே போய் வாங்கிட்டு வா. இதெல்லாம் வாழ்க்கையிலே என்ஜாய் பண்ணதே இல்லை நான். எப்போ பாரு ஃபைவ் ஸ்டார் ஹோடேலிலே உட்கார்ந்து ஸ்பூனையும் ஃபோர்க்கையும் வெச்சு சாப்பாட்டை போஸ்ட் மார்ட்டம் பண்ணிக்கிட்டு…”
பஜ்ஜியை முடிந்தவன் சிரித்துக் கொண்டே எழுந்தான். அடுத்த சில நிமிடங்களில் அந்த உணவக வளாகத்தில் இருந்த ஒரு மாமரத்தின் அடியில் நின்று இருவரும் தங்களது குல்ஃபிகளை சுவைத்துக் கொண்டிருக்க, அவனது முதுகுக்கு பின்னால் இருந்து கேட்டது அந்தப் பெண் குரல்
தொடரும்
அத்தியாயம் 9
டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 9 – Praveena Thangaraj Novels
Excellent narration vathsala. Ganapathy character manasil appadiye ottikirar. enaku andha idatthil SPB sir than resemble agarar. Ramesh mele yum doubt varudhe? Ganapathy madhiri rajini , sridevi yum ippodhum parthuka mattangalo . Waiting to read more
@Devisrinivasan unga comment periya periya energy kodukkuthu. Thank u so so much. Azhgazhga guess panni irukeenga. ellame crctaa onnu rendu crctaa. Seekirame theriyum. hahaha..
super super super epi . oru mari kannamoochi aatam mari iruku epo rendu perum santhichipanganu iruku .Rajini kandu pidichiduvana sri devi ah
@kalidevi Thanks a lot for you vow comment. Romba santhoshmaaga unargiren. muthal epilernthu thodarnthu padichu comment solreenga. Nanrigal palapala maa.
Varikku vari rasichchu padikkiren ma….arumaiyana pathivu 😍😍😍😍
@Eswari enna mathiri comment. wow. Atthnai santhosham kodukkum vaarthaigal ungaludayathu, Nanrigal palapala maa
வாவ், கூடவே டிராவல், பண்ற பீலிங். 👌👌👌👌, ஸ்ரீ தேவியும் குல்பி சாப்பிட வந்தாச்சா? கணபதி டாக்டர் பாவம்🥲🥲🥲
@kothaisuresh. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு மா. ஒவ்வொரு அத்தியாயத்தையும் பொறுமையா படிச்சு அழகழகா கமென்ட் சொல்றீங்க. நன்றி நன்றி நன்றி மா.
Nice epi.
Intha epi padikum bothe travel mood varuthu. Ganapathy dr. Flashback ketkum bothu kashtama iruku.
Rajini, sridevi yai miss pannida koodathu.
Restaurant la sridevi ya illai mahathiya?
@priya your words are a big booster for me. romba romba santoshama iruku. rajini srideviyai miss pannida koodathunnu thaan naanum ninaikiren. paarkklam. Thnak u so so much
Very interesting
@kothaihariram ovvoru epiyum neram othukki poruamiya padichu thodarnthu comment pannuvathu periya vishyam. Manam niriantha nanrigal maa.
ரஜினி ஶ்ரீதேவி பின்னாடியே சித்தூர் ரோட்ல போகவச்சுடீங்க….
🤔🤔..ஒரு வேளை ரமேஷா தான் மெஸேஜ் பண்றதா…
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@Anuammu secretly enakkum antha chithoor route pidikkum. Guess oralvukku crct. Thank you so so much
Spr going
@priyarajan Thank you so much
Pingback: டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 7 - Praveena Thangaraj Novels
சூப்பர் எபி உங்க எழுத்து நடை எங்களையும் பெங்களுரில் இருந்து சென்னைக்கு காரில் அழைச்சுட்டு வருது அப்படியே டாக்டர் கணேஷ் அவரோட கடந்த கால நினைவுகளை கேட்டுட்டு குல்பி சாப்பிட்டு இருக்கோம் அப்படி உங்க எழுத்து மயக்கி வைச்சிருக்கு