அடுத்து உள்ளே நுழைந்தார் ஜெகந்நாதன். சற்றே பெரிய அறைதான் அது. ஸ்ரீதேவி லேகா என இருவருமே அதே அறையில் இருக்க அவர்களுக்கு துணையாக அவர்களது அன்னையும் அங்கேயே இருந்தார்.
இவர்கள் நால்வரையும் அங்கே எதிர்ப்பார்க்கவே இல்லை யாரும். ஒரு பெரிய அதிர்ச்சியே இருந்தது ஸ்ரீதேவி மற்றும் சுமித்ராவின் முகத்தில்.
சற்று முன்னால் நுழைந்து விட்ட அரசியும் அம்மாவும் இவர்கள் வரும் வழி பார்த்திருக்க சில நொடிகள் அங்கே ஒரு தர்மசங்கடமான மௌனம் இருக்க அதை முதலில் உடைந்தது யமுனாவாகத்தான் இருந்தது.
“தேவிம்மா.. எப்படிம்மா இருக்கே?” எனக் கட்டிலில் படுத்து இருந்த ஸ்ரீதேவியின் அருகில் சென்று கன்னம் வருடினார் அவனது அன்னை. அவரது கரங்களை பிடித்துக் கொண்டாள் ஸ்ரீதேவி.
“நீங்க எப்படி இருக்கீங்க?” என்றாள் ஆசை தீர அவர் முகம் பார்த்து ரசித்தபடியே.
அவரைப் பார்க்க பார்க்க அவளது கண்களில் நீர் சேர்ந்து கொண்டது. அடுத்த நொடி வழிந்த கண்ணீரை துடைத்து விட்டது அவரது கரம்.
“என்னைப் பார்க்கவா ஓடி வந்தீங்க? எதுக்கும்மா? நாங்க எல்லாம் செஞ்ச துரோகத்துக்கு எப்படியும் போகட்டும்னு விட வேண்டியதுதானே? என்னைக் காப்பாத்தி எழுப்பி உட்கார வெச்சிருக்கார் உங்க பையன்.
“லூசு மாதிரி பேசாதே” அவளது தலையில் குட்டினார் செல்லமாக “எனக்கு ஆபரேஷன் பண்ணி என்னை பத்திரமா வாழ வெச்சதை தவிர நீ வேறே எதுவும் பண்ணிடலை. இந்த மாசத்துக்குள்ளேயே உங்களுக்கு கல்யாணம் வைக்கலாம்னு இருக்கோம். சீக்கிரமா நீ என் பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டு நம்ம வீட்டுக்கு வந்து சேரு”
இந்த வார்த்தைகளில் அங்கே இருந்த சுமித்ரா லேகா ஸ்ரீதேவி என மூவருக்குமே அதிர்ச்சி.
“நான்… நான்.. எப்படி?”
“நீதான் மா. நீதான் எங்க வீட்டு மருமகள்னு நாங்க முடிவு பண்ணி பல நாள் ஆச்சு. இப்போ என்னமோ புதுசா கேக்குற ” ஆரம்பித்தார் தந்தை. “சும்மா சாக்கு போக்கு எல்லாம் சொல்லாம கல்யாணத்துக்கு ரெடி ஆகு அவ்ளோதான்”
இப்போது ஸ்ரீதேவியின் பார்வை நேராக சென்றது அரசியிடம்தான். மெல்ல நடந்து அவளருகில் வந்து நின்று அவளது கரம் பிடித்துக் கொண்டு புன்னகைத்தாள் அரசி.
“நம்ம வீட்டுக்கு வந்திடுங்க அண்ணி ப்ளீஸ். எங்களுக்கு நீங்க நிறைய நிறைய அன்பை மட்டும் கொடுப்பீங்களாம். அது மட்டும் போதும் எங்களுக்கு. சரியா?” இன்னுமாக கண்ணீர் கொட்டியது பெண்ணுக்கு.
இதில் ரஜினிகாந்த் வாயே திறக்கவில்லை என்றால், லேகா என்று ஒருத்தி அங்கே இருப்பதை யாரும் கண்டு கொள்ளவே இல்லை. அதற்கும் மேலாக அவள் மறந்தும் கூட ஒரு வார்த்தை பேசி விடவில்லை,
“இங்கே பாருங்க” சுமித்ராவின் பக்கம் திரும்பினார் தந்தை “அரசிக்கு சீக்கிரமே கல்யாணம் வருது. ஆனா ரெண்டு கல்யாணத்தையும் ஒரே மேடையிலே நடத்தக் கூடாது. அதனாலே ஒரு பதினைஞ்சு நாளிலே மார்கழி வர்றதுக்குள்ளே இவங்க கல்யாணத்தை முடிச்சிடலாம்னு யோசிக்கிறோம். இவளுக்கு முன்னாடி அக்கா இருக்கா சொக்கா இருக்கான்னு எந்த கதையும் கேட்க நாங்க தயாரா இல்லை. கல்யாணத்துக்கு இது செய்யறேன் அது செய்யறேன்ன்னு நீங்க எதுவும் ஆரம்பிக்க வேண்டாம். நாங்க எதையும் ஏத்துக்க மாட்டோம். பொண்ணை மட்டும் நீங்க அனுப்பி வெச்சா போதும் கல்யாண பத்திரிக்கை வந்ததும் உங்களுக்கு எத்தனை வேணும்னு சொல்லுங்க கொடுக்கறோம். உங்க சொந்தங்கள் எல்லாருக்கும் கொடுங்க. எல்லாரும் கல்யாணத்துக்கு வாங்க. ”அவ்வளவுதான் படபடவென அடுக்கி முடித்தார் தந்தை.
இப்போதான் ஸ்ரீதேவியின் பார்வை மெல்ல மெல்ல நமது நாயகனைத் தொட்டது. சட்டென அவன் கண்ணடித்து புன்னகைக்க சிறு புன்னகையுடன் விழிகளைத் தாழ்த்திக் கொண்டாள் பெண். அதற்கு மேல் அதை மறுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்பது புரிந்து இருந்தது அவளுக்கு.
அடுத்து வந்த நாட்களில் மடமடவென வேலைகள் நடந்தன. இவள் ஓரளவு உடல் நிலையில் தேறி இருக்க நெருக்கமானவர்கள் கூடும் எளிமையான நிகழ்வாக இருந்தாலும் வாச மலர்களும், ஆனந்த மலர்களும் ஒன்று கூடும் நிகழ்வாகவே நடந்து கொண்டிருந்தது அவர்களது திருமணம்.
மஹதியின் முழுக் குடும்பமும் திருமணதிற்கு வந்திருக்க, இவனுடைய உதவியாளன் ரமேஷா அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து கொண்டிருந்தான்.
அரசியில் துவங்கி யாருமே சில வருடங்கள் முன்னால் நடந்த எதையுமே சுட்டிக் காட்டி பேசி விடாதது அத்தனை நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது அவளது அன்னை சுமித்ராவுக்கு.
எல்லாரையும் மிகவும் மகிழ்ந்து போனவர் டாக்டர் கணபதியாகத்தான் இருந்தார். எங்கே தனது வாழ்க்கை போலவே ஆகி விடுமோ ரஜினியின் வாழ்க்கை என்ற ஒரு கவலை அவருக்கு இருந்தது என்னவோ உண்மைதான். இப்போது ஒரு வித நிம்மதி வந்திருந்தது அவருக்கு.
எல்லாரும் அவரவர் வேலைகள் மும்முரமாக இருக்க இருளான தனிமையில் கிடந்தாள் லேகா. யாரும் அவளைத் தொந்தரவு செய்யவும் இல்லை பெரிதாக கண்டு கொள்ளவும் இல்லை.
சுமித்ரா மட்டும் அவ்வப்போது போது வந்து அவளுக்கான உதவிகளை செய்து விட்டு சென்று கொண்டிருந்தார். அவளும் யாருடனும் பேசிக் கொள்ளவும் இல்லை.
வாழ்கை என்றால் என்னவென இப்போதுதான் புரிந்து கொண்டிருந்தது அவளுக்கு., தனக்கு ஏற்பட்ட இந்த நிலைக்கான காரணம் என்னவாக இருக்கும் என யோசிக்கும் அளவுக்கு தனது குற்றங்களை உணர ஆரம்பித்து இருந்தாள் ஸ்ரீலேகா ` ,
ஸ்ரீதேவி அணிந்திருந்த நகைகள் புடவைகள் உட்பட அனைத்துமே மணமகன் வீட்டில் இருந்தே வந்திருந்தன. திருமண ஏற்பாடுகள் ஆரம்பித்து எல்லா விஷயத்துக்கும் அவளின் சம்மதம் கேட்டே நடந்து கொண்டிருந்தாலும், வெகு சில வார்த்தைகளே பேசிக் கொண்டிருந்தாள் ஸ்ரீதேவி.
“என்ன ஸ்ரீதேவி டாக்டர் நெக்லஸ் டிசைன் பிடிச்சு இருக்கா இல்லையா?”
“ரொம்ப நல்லா இருக்கு ரஜினி சர்”
“புடவை எது வேணும்?”
“உங்க சாய்ஸ் ரஜினி சர்”
இதற்கு மேலாக அவளைப் பேச வைக்கவே முடியவில்லை அவனால்.
திருமணதிற்கு முதல் நாள் மாலையில் வரவேற்பு இருக்க அதற்கு சில மணி நேரங்கள் முன்னால் மண்டபத்திற்கு வந்திருந்தனர் இரண்டு குடும்பத்தினரும்.
அவனுக்கென ஒதுக்கப் பட்டிருந்த அறையில் கட்டிலில் அமர்ந்து இருந்தவன் ஸ்ரீதேவியை அழைத்தான்.
“கொஞ்ச நேரம் முன்னாடி ஒரு காபி குடிச்சேன். அருமையா இருந்தது. எனக்கு இன்னொரு காபி வேணும். ஸோ நீ என்ன பண்றே ஒரு ஜக் லே காபி எடுத்துகிட்டு என் ரூமுக்கு வரே”
“நானா?”
“நீயேதான்”
“நான் இப்போ எப்படி அங்கே..”
“என் ரூமுக்கு வா…டி ..” துண்டித்து இருந்தான் அழைப்பை.
சில நிமிடங்கள் கடக்க அவனது அறை வாசலுக்கு வந்து கதவைத் தட்டினாள் அவனவள்.
வந்திருந்த சொந்தங்கள் அத்தனை பேரின் பார்வைக்கும் இது காட்சியாகிக் கொண்டிருந்தது. முகம் நிறைய சிரிப்புடன் மஹதியும் அரசியும் இவளை ஒரு வழி செய்து கொண்டிருந்தார்கள்.
“கதவு திறந்துதான் இருக்கு உள்ளே வா” அவனது கம்பீரக் குரல் அவளை அழைக்க நுழைந்தாள் உள்ளே.
“கதவை சாத்தி தாழ்ப்பாள் போடு” அவனது அடுத்த ஆணை.
“ஹேய்… வெளியிலே.. எல்லாரும்” அவள் சொல்லி முடிப்பதற்குள் அறைக் கதவின் தாழ்ப்பாளை போட்டிருந்தான் ரஜினிகாந்த். வெளியில் ஓவென குரல் எழுந்தது. அது மஹதியும் அரசியும் நன்றாக புரிந்தது இருவரும்.
“எஸ் இப்படி உட்காருங்க ஸ்ரீதேவி டாக்டர்” என கட்டிலில் அமர்ந்து கொண்டே சொன்னான் ரஜினிகாந்த்
“ஏன் நீங்க இப்படி எல்லாம்.. எல்லாரும் பார்க்கறாங்க”
“அதெல்லாம் எனக்கு பிரச்சனை இல்லை. எனக்கு நீ எந்த வருத்தமும் இல்லாமல் சந்தோஷமா கல்யாணம் பண்ணிக்கணும்”
“அதெல்லாம். வருத்தமெல்லாம் இல்லை .” இன்னமும் நேராக அவன் முகம் பார்த்திருக்கவில்லை அவள்.
“இப்படி உட்காருங்க ஸ்ரீதேவி டாக்டர் முதலிலே” அவனது மென் குரல் சொல்ல அமர்ந்து விட்டாள் அவள். காபியை அங்கிருந்த இரண்டு கோப்பைகளில் ஊற்றி ஒன்றை அவளிடம் நீட்டினான்.
“அருமையா இருக்கு காபி. என்ஜாய்” வாங்கிக் கொண்டாள் அவள் காபியை பருகிக் கொண்டே அவனது விழிகள் அவளது விழிகளைப் பார்க்க அதில் சட்டென சேர்ந்தது கண்ணீர்.
“ஸீ.. இதுதான் சொன்னேன்” அவன் சொல்ல சட்டென வேறுபக்கம் திரும்பி கொண்டாள் அவள்.
“என்னைப் பாரு”
“வேண்டாம்” என தலையசைத்தபடி திரும்பிக் கொண்டாள் பெண். காபியை முடித்து விட்டு அவளது முகத்தை கைகளில் ஏந்திக் கொண்டு தனது பக்கமாக திருப்பினான் ரஜினிகாந்த் .
ஜிமிக்கியும் சின்ன மூக்குத்தியும் புருவங்களுக்கு இடையில் மின்னிய பொட்டும் கூந்தலில் ஆடிய முல்லை சரமுமாய் ஜொலித்தவளின் கண்களில் மட்டும் கண்ணீர்.
“இப்போ உங்களை பார்த்ததும் என்னமோ……. இதெல்லாம் கொஞ்ச நாளிலே சரியாகிடும்” அவள் அவசரப் பட
“எனக்கு இப்போ சரியாகணும்” என்றான் அவன். அவனது வீட்டில் அத்தனை பேரும் சட்டென இயல்பாகி விட்டாலும் அதிகம் உறுத்தலுக்கு உள்ளானவள் இவளாகத்தான் இருந்தாள். திடீரென அதிலிருந்து மாற்றம் கொள்வது அத்தனை எளிதாக இல்லை அவளுக்கு.
“இல்லை.. ரஜினி சர்…அது ” அவள் பேச முயல சட்டென அவளது கன்னம் தொட்டன அவனது இதழ்கள். முதல் முத்தத்தில் சிலிர்த்துப் போனாள் ஸ்ரீதேவி. இருந்தாலும்
“ரஜினி….சர்..வெளியே எல்லாரும்….” அவளது குரல் காற்றாய் எழ அவள் பேசுவதை கவனிக்காமல் தொடர்ந்தான் நாயகன். .அவளது கன்னங்கள் அவனது இதழ்களின் மேடையாகின.
மெல்ல மெல்ல மௌனமானாள் அவள். மொத்தமாக மூன்று நிமிடங்கள் அவளது நெற்றியும் கன்னங்களும் இதழ்களும் அவனது இதழ்களின் ஆளுமைக்கு கட்டுப்பட்டு இருக்க அவன் இதழ்களுக்குள் கரைந்தே கிடந்தாள் பெண்.
பின்னர் மெல்ல விலகினர் இருவரும். இப்போது அவள் முகம் பார்த்தான் ரஜினிகாந்த். அங்கே புன்னகை மட்டுமே இருந்தது இப்போது.
“என்ன ஸ்ரீதேவி டாக்டர்? இப்போ உங்க கண்ணிலே தண்ணியே இல்லை. எங்கே போச்சு?”
சட்டென கொஞ்சம் வெட்கப் பூக்கள் பூத்தே விட்டன அவளது இதழ்களில்.
“அது.. அது.. நான் போகணும்..” அவள் எழ முயல அவளது இரு கரங்களையும் தனக்குள் வைத்துக் கொண்டான் ரஜினிகாந்த்.
“கண்ணிலே ஏன் தண்ணி வரலை இப்போ..”
“ரஜினி சர்.. ப்ளீஸ்..” அவள் வெட்க சிரிப்புடன் அவனை விட்டு விலக முயன்றாள்.
“நான் சொல்லட்டுமா ஏன் தண்ணி வரலைன்னு. ஏன்னா இந்த கொஞ்ச நேரம் நம்ம உலகத்திலே நாம மட்டும்தான் இருந்தோம். அதனாலே.” என்று அவள் நெற்றி முட்டினான். “கொஞ்ச நாள் உன் உலகத்திலே என்னை மட்டும் வெச்சுக்கோ. வேறே யாரைப் பத்தியும் யோசிக்காதே. அப்போ மனசு பழைய படி சந்தோஷமா மாறிடும்”
சரியென அசைந்தது அவள் தலை.
“யோசிச்சு பாரு. முன்னாடி நடந்த பிரச்சனை கல்யாணத்துக்கு அப்புறம் நடந்து அதாவது நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் லேகாவாலே அரசிக்கு ஏதாவது பிரச்சனை வந்திருந்தா என்னை விட்டு ஓடிடுவியா என்ன?”
“அப்படி எல்லாம் இல்லை..” என்றவளின் தலையில் குட்டினான் ரஜினிகாந்த்
“நம்மை சுற்றி இருக்குறவங்க எல்லாருமே மனுஷங்கதான். லேகா உட்பட…. இயல்பான பயங்கள் பலவீனங்கள் எல்லாம் நிறைந்த மனுஷங்க. எல்லாரையும் நாம ரெண்டு பேரும் சேர்ந்தே ஹேன்டில் பண்ணுவோம் சரியா”
“சரி..” அழகாய் புன்னகைத்தாள் ஸ்ரீதேவி.
“ஹலோ போதும் வெளியே வாங்க” இது மஹதி. இவள் சென்று கதவைத் திறந்தவுடன் உள்ளேயே வந்து விட்டாள் அவள்.
“ஹேய்.. என்னடி பண்றீங்க ரெண்டு பேரும். கல்யாணத்துக்கு முன்னாடியே..”
“நீ என்ன பண்றோம்னு நினைச்சியோ..” ஸ்ரீதேவி சொல்ல
“அதைப் பண்ணலைன்னு சொல்லப் போறே அதானே”
“இல்லை.. அதுதான் பண்ணோம்”
“அடிப் பாவி” என அலறிய மஹதியை தள்ளிவிட்டு ஓடிய ஸ்ரீதேவியின் சிரிப்பு அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது நமது நாயகனுக்கு.
வரவேற்பு நடந்து கொண்டிருக்க, சுற்றி இருந்த அலங்காரங்களில் மிளிர்ந்து கொண்டிருக்கும் அடர் பச்சை மற்றும் வெள்ளை கலந்த நிறத்துக்கு ஏற்ப அதே நிற உடைகளில் மேடை மீது நின்றிருந்தார்கள் நமது ரஜினிகாந்தும் ஸ்ரீதேவியும்.
இன்னிசையும், சிரிப்பும், கோலாகல கொண்டாட்டங்களும் அவளது காதில் விழுந்தாலும் மௌன இருட்டிலேயே கிடந்தாள் லேகா.
அதே நேரத்தில் பார்வை இல்லாத நிலைக்கு பழகிக் கொள்ளவே முடியாமல் தடுக்கிக் கொள்வதும் தடுமாறிக் கொள்வதும் எங்காவது சென்று இடித்துக் கொள்வதும் என அலையும் லேகா ரஜினிகாந்தின் பார்வையில் பட்டுக் கொண்டே இருந்தாள். ஓரு கண் மருத்துவனாக அவளின் நிலை அவனுக்கு உறுத்திக் கொண்டே இருந்தது.
மறுநாள் காலை மிக குளுமையாக விடிந்து இருந்தது. மெலிதான மழை அவர்கள் திருமணதிற்கு வந்திருந்த விருந்தினர்களில் ஒருவராக இருந்தது.
சந்தோஷமும் சிரிப்புமாக மணமக்கள் தயாராகிக் கொண்டிருந்தார்கள். அன்னையின் உதவியுடன் ஏதோ தயாராகி கையில் ஒரு தடியுடன் அறையை விட்டு வெளியே வந்தாள் லேகா. திருமணம் நடக்க விருக்கும் அந்த கூடத்தை அடைந்தாள் அவள்.
நடந்து வந்தவளுக்கு அங்கங்கே நாற்காலிகள் இருப்பது புரிய கைகளை விரித்து தேடிக் கொண்டே ஒரு நாற்காலியில் அமர்ந்து விட முடிவு செய்து அவள் அதற்கு முயன்ற நேரத்தில் தடுக்கிக் கொண்டு தடுமாறி, எதன் மீதோ மோதி அவள் கீழே விழ , அவள் மோதிக் கொண்ட அந்த மேஜையின் மீது இருத்த ஒரு ஜக்கினுள் இருந்த கொதிக்கும் காபி அவள் மீது சரிந்து அவளது முகம் கால் பாதம் என பல இடங்களை பதம் பார்த்து இருந்தது.
“அ..ம்..மா” அலறி விட்டாள்தான்.
இது நடந்த அடுத்த மூன்றாம் நிமிடம் ரஜினிகாந்த் ஸ்ரீதேவி மஹதி அரசி அவர்களின் பெற்றோர்கள் என அத்தனை பேரும் அவளை சூழ்ந்து விட்டிருந்தார்கள். இதில் முதலில் அவளது அருகே வந்து அவளுக்கு உதவி செய்தது அரசி என்பதுதான் அவளைப் புரட்டிப் போட்டது.
அவளைச் சுற்றிலும் மருத்துவர்கள்தானே! மடமடவென நடந்தன அவளுக்கான முதலுதவிகள். எங்கிருந்தோ வந்தது அவளுக்கான தேநீர். அவளது உடலும் மனமும் சமன்பட
“இப்போ பெட்டரா இருக்கா சீனியர்?” கேட்டது அரசியாகத்தான் இருந்தது. சுற்றி இருந்த அத்தனை பேருக்கும் நடந்தவைகள் ஓரளவுக்கு தெரியும் என்பதால் அவர்கள் அரசியைப் பார்த்த பார்வையில் ஒரு வித வியப்பும் பிரமிப்பும் பெருமையும் கலந்து இருந்தது.
எதுவுமே பேசவில்லை லேகா. அவளது கரம் மட்டும் அரசியின் கரங்களை தனது கரங்களுக்குள் வைத்துக் கொண்டது. சுற்றி இருந்தவர்கள் அனைவரும் அவளையே பார்த்திருக்க மெல்ல எழுந்த அவளின் கரம் அரசியின் கன்னம் வருடியது
“ரொம்ப ஸாரிம்மா” உச்சரித்தன அவளது உதடுகள்
“அட விடுங்க சீனியர்” அரசி சூழ்நிலையை இயல்பாக்க முயன்றாள்.
“விடவெல்லாம் முடியாது. நான் செஞ்சதுக்கான தண்டனை எனக்கு கிடைச்சாச்சு. அதை அனுபவிச்சு கிட்டு இருக்கேன். இன்னும் அனுபவிப்பேன். என்னை நானே மன்னிக்குற வரைக்கும் அனுபவிப்பேன்” கூவினாள் அவள். “அதுவரைக்கும் யாரும் என்னை தொந்தரவு பண்ண வேண்டாம் போய் அவங்க அவங்க வாழ்க்கையை பாருங்க”
“என்ன சீனியர்?”
“போங்க..” அவள் கத்த அத்தனை பேரும் விலகி நடந்தார்கள்.
அடுத்த கொஞ்ச நேரத்தில் எல்லாரும் இயல்பாகி விட மேடை களை கட்ட, மேடை மீது இருந்தனர் மணமக்கள் இருவரும். வாசனை மலர்களும், மகிழ்ச்சியான மனங்களும் அவர்களை சூழ்ந்து நின்றன.
தாலி கட்டும் நேரம் நெருங்கி விட, அது அவனது கை சேர்ந்த நேரத்தில் மந்திரம் சொல்லிக் கொண்டிருந்த ஐயரை பார்த்து சொன்னான் ரஜினிகாந்த்
“ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க” திகைத்துப் போனார்கள் அனைவரும்.
“என்னாச்சுடா?” கேள்வியுடன் முன்னால் வந்தவர் யமுனாகவத்தான் இருந்தது.
“ம்? உன் அருமை மருமகளை என்னை பார்த்து “லவ் யூ” சொல்லச் சொல்லு”
“டேய்.. ரொம்ப பண்ணாதேடா”
“அவ சொன்னாத்தான் தாலி கட்டுவேன். இந்த ரஜினிகாந்த் சொன்னா சொன்னதுதான்”
சில நொடிகள் யோசித்தவளின் முகத்தில் சின்ன புன்னகை. முகத்தில் ஓடிய ஒரு சின்ன வெட்கக் கோடுடன் அவன் முகம் பார்த்தவள் மெலிதான குரலில் சொன்னாள் “லவ் யூ ரஜினி சர்”
“என்னது என்னது கேட்கலை” அவன் வேண்டுமென்றே வந்ம்புக்கு இழுக்க இன்னும் கொஞ்சம் குரல் உயர்த்தி சொன்னாள் பெண். “லவ் யூ ரஜினி சர்”
“கேட்கலை” அவன் மறுபடியும் சொல்ல
“லவ் யூ ரஜினி சர்” அவள் கூவியே விட டாக்டர் கணபதி உட்பட அத்தனை பேரும் ஒன்றாக குரலெழுப்பி மகிழ்ச்சியும் உற்சாகமுமாய் சிரித்தார்கள்.
அதே மகிழ்ச்சி ஆரவாரத்துடனே கெட்டி மேளம் முழங்க அவள் கழுத்தில் தாலியை கட்டினான் ரஜினிகாந்த்.அரசி பின்னால் இருந்து மற்ற முடிச்சுகளை போட்டு விட நடக்கும் நிகழ்வை உணர்ந்தவளாக தனது கையில் இருந்த மலர்களை அவர்கள் இருவரையும் நோக்கி மகிழ்வுடன் தூவினாள் ஓரமாக அமர்ந்து இருந்த லேகா. வானிலிருந்து பன்னீர் சிதறலாய் தூவிக் கொண்டிருந்தது மழை.
இவர்கள் திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் அரசியின் திருமணமும் முடிந்து இருந்தது. அதன் பிறகு ஆறு மாதங்கள் கடந்திருந்தன. ஸ்ரீதேவி அரசி என இருவருமே தங்களது தாய்மையின் முதல் படியில் இருந்தனர்.
அரசியுமே சென்னையில் ஒரு வேலையைத் தேடிக் கொண்டு விட, பாதி நேரம் தனது அண்ணியுடனே செலவழித்துக் கொண்டிருந்தாள் அவள்.
அந்த நேரத்தில்தான் வந்தது அந்த நாள்.
“எனக்கு குழந்தை உண்டாகி இருக்குன்னு தெரிஞ்சு அம்மா பார்க்க வரேன்னு சொன்னாங்க. வர சொல்லாவா?” உணவு மேஜையில் அரசியுடன் அமர்ந்து உணவு அருந்திக் கொண்டிருந்த ரஜினியிடம் கேட்டாள் ஸ்ரீதேவி “பூ பழம் தவிர வேறே எதுவும் வாங்கிட்டு வர மாட்டங்க”
இதுவரை அவர்கள் வர வேண்டாம் என்று வீட்டில் யாரும் சொன்னது இல்லை. சுமித்ரா மட்டும் அவ்வப்போது வந்து செல்வார். அவரை நேருக்கு நேராக பார்த்தால் ஒரு புன்னகை கலந்த தலையசைப்புடன் விலகிக் கொள்வான் ரஜினிகாந்த்.
“இதிலே என்ன இருக்கு. வரச்சொல்லு”
“இல்ல இதிலே வேறே ஒரு முக்கியமான விஷயம்.” என்றாள் தயக்கத்துடன்.
“நான் வேணும்னா உள்ளே போய்” என்று நகர்ப் பார்த்த அரசியின் கரம் பற்றித் தடுத்தாள் ஸ்ரீதேவி.
“உனக்குத் தெரியாத ரகசியம் இங்கே எதுவும் இல்லை. லேகா இத்தனை நாளா வீட்டுக்குளேயே இருக்கா. யார்கிட்டேயும் போன்லே கூட பேசலை. நிறைய கஷ்டப் படறா. அதனாலே ஒரு சேன்ஜ்க்கு இன்னைக்கு இங்கே கூட்டிட்டு வரேன் சொன்னாங்க”
“வரட்டுமே அண்ணி” அரசிதான் சொன்னாள்.
“ஆறு மாசம் ஆச்சு இல்லையா? அவளுக்கு உங்க அண்ணன் சர்ஜரி பண்ணனும்னு ஆரம்பிச்சாங்க அம்மா. உனக்கு மனசாட்சின்னு ஒண்ணு இருக்கான்னு திட்டி விட்டுட்டேன் நல்லா. இனி மறுபடியும் ஆரம்பிக்க மாட்டாங்க. இருந்தாலும் நீங்க தெரிஞ்சுக்க சொன்னேன்” ஸ்ரீதேவி பேசிக் கொண்டே போக
“அப்படி அவங்க உன்னை கேட்டா நீ என்ன அண்ணா பண்ணுவே?” கொக்கி போட்டாள் அரசி.
“நீ சொல்லு நான் என்ன பண்ணணும்” பதில் கேள்வி கேட்டான் அவள் அண்ணன்.
மதிய நேரம். அவளின் அன்னையும் அக்காவும் வீட்டுக்கு வந்திருந்தார்கள். மிடுக்கும் திமிரும் துள்ளலுமாக இருந்த ஸ்ரீலேகா இருந்த இடத்தில . இளைத்துப் போய் சோர்ந்து கிடந்த ஒரு பெண் தென்பட்டாள்.
அப்பாவின் வார்த்தைகளில் இருவரும் உணவு மேஜைக்கு வர அவர்களுக்கு பரிமாறியவள் அரசியாகத்தான் இருந்தாள். பார்த்து பார்த்து பரிமாறிக் கொண்டிருந்தவளுக்கு என்ன தோன்றியதோ லேகாவை பார்த்து கேட்டே விட்டாள்
“சர்ஜரி பண்ணிக்கறீங்களா சீனியர். எங்க அண்ணன் உங்களுக்கு பார்வை வர வெச்சிடுவார்”
எத்தனை பெரிய விஷயத்தை எத்தனை எளிதாக செய்து விட்டாள் பெண். அவளது அந்த சொற்கள் சுற்றி இருந்த அத்தனை பேரையும் புரட்டிப் போட்டன. ரஜினிகாந்த் மட்டும் ஒரு சிறு புன்னகையுடன் தங்கையை ரசித்து இருந்தான்.
“சர்ஜரி.. சர்ஜரி யா.. அதெல்லாம் வேண்டாம்” படபடத்தது ஸ்ரீலேகாவின் குரல்.
“அதெல்லாம் வேணும்” சொன்னாள் அரசி “எனக்கு உங்களை இப்படி பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு”
“இல்லை.. அதெல்லாம்” லேகாவின் குரலிலும் உடலிலும் நடுக்கம்.
“நான் சொல்றேன் எனக்காக பண்ணிக்கோங்க” சொன்னாள் அரசி. இப்போது ரஜினியின் பார்வை தனது அன்னையை தொட்டது.
யார் மன்னித்தாலும் அவரால் லேகாவை மன்னிக்கவே முடியாது என்றே தோன்றியது அவனுக்கு. அவனது பார்வையின் அர்த்தம் புரியத்தான் செய்தது அன்னைக்கு.
இப்போது ஸ்ரீதேவியின் முகத்தை பார்த்தார் அவர். அவள் தனக்கு செய்த அறுவை சிகிச்சை நினைவுக்கு வந்திருக்க வேண்டுமோ? ஒரு ஆழ் மூச்சை எடுத்துக் கொண்டு புன்னகைத்தார் அவர்.
“அதானே பண்ணிக்கோம்மா. என பையன் கண்டிப்பா உன்னை பார்க்க வெச்சிடுவான்” சத்தியமாக கண்களில் நீர் கட்டிக் கொண்டது ஸ்ரீதேவிக்கு. அதற்கு மேலாக நெகிழ்ந்து இருந்தான் ரஜினிகாந்த்.
புன்னகைத்து அவனது முதுகை ஆறுதலாக தட்டிக் கொடுத்தார் தந்தை.
“என்ன அண்ணா நான் சொல்றது சரி தானே?” அரசி கேட்டாள் “நீ சர்ஜரி பண்ணிடுவே தானே?”
“நாளைக்கு ஹாஸ்பிட்டல் வர சொல்லு டெஸ்ட்ஸ் ஸ்டார்ட் பண்ணாலாம்” எழுந்து நகர்ந்து விட்டான் மருத்துவன்.
பேசும் மொழி மறந்து போய் விக்கித்து கிடந்தார்கள் சுமித்ராவும் லேகாவும். அடுத்த சில நாட்கள் கழித்து மயக்கத்தில் இருந்த லேகாவின் முன் அவனது காண்டிபமான மருத்துவ உபகரணங்களுடன் நின்றிருந்தான் ரஜினிகாந்த்
“நீ சொல்லு நான் என்ன பண்ணணும்” அன்று அரசியிடம் கேட்ட போது அவள் சொன்ன வார்த்தைகள்தான் நினைவுக்கு வந்தன.
“மகாபாரதத்திலே கண்ணன் சொல்வார்ண்ணா வீரம் இல்லாமல் இருப்பது விஜயனுக்கு அழகில்லை. காண்டிபம் ஏந்துன்னு. அதே போலத் தான். மருத்துவனா இல்லாமல் இருப்பது எங்க ரஜினிகாந்துக்கு அழகில்லை. உன் காண்டிபத்தை ஏந்து”
நெகிழ்ச்சியாய் ஒரு சிரிப்பு அண்ணனிடம்.
“என்னண்ணா? எல்லாம் ஒரு காலத்திலே எனக்கு நீ கத்து கொடுத்ததுதான். உன் தங்கை நான் வேறே எப்படி பேசுவேன்?”
ஸுகது:கே ஸமே க்ருதவா லாபாலாபௌ ஜயாஜயௌ |
ததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பா ப மவாப்ஸ்யஸி
“சுகம் துக்கம் லாபம் நஷ்டம் இப்படி எதைப் பற்றியும் யோசிக்காம உன் கடமையை செய் அர்ஜுனா அப்படின்னு சொல்வார் அண்ணா கண்ணன். உனக்கும் அதேதான். நடந்தது நடக்கப் போறது எதைப் பத்தியும் யோசிக்காதே நீ. உன் கடமையை மட்டும் செய். நமக்கு எல்லாமே சரியா நடக்கும்”
“இதுவுமே ஒரு மகாபாரதம்தான்ண்ணா. அங்கே தப்பு செஞ்சவங்களை அழிக்க கீதை தேவைப் பட்டது. இங்கே தப்பு செஞ்சவங்களை திருந்தி நல்லபடியா வாழவைக்க கீதை உபயோகப் படுது. நீ நல்ல மருத்துவனாகவே இரு அதுதான் உனக்கு அழகு”
அன்று அரசி பேசப் பேச பெருமையாக பார்த்துக் கொண்டிருந்தவன் இன்று தனது எதிரிக்கும் தனது கடமையான மருத்துவ சிகிச்சையை சரியாக செய்ய நிமிர்ந்து நின்றான்.
அடுத்த சில நிமிடங்களில் டாக்டர் ரஜினிகாந்த் தனது தவத்தை ஆரம்பித்து இருக்க, அவனை பெருமை கலந்த பார்வையுடன் பார்த்தபடியே அவனருகில் நின்றிருந்தார் டாக்டர் கணபதி. வெளியே பனிச்சாரலாய் அவனையும் அவனது குடும்பத்தையும் வாழ்த்திக் கொண்டிருந்தது வான் மழை.
நிறைந்தது
🥰🥰🥰🥰🥰🥰
சூப்பர். .. ரஜினியின் பக்குவத்தை விட அரசியின் மனப்பக்குவம் அழகு…
Fantabulous story 👏👏👏👏👍👍👍👍👍🥰🥰🥰🥰🥰🥰
வாவ் ரஜனி சார் குடும்பமே மறசாலும் பெரிய மனுஷன் தான்னு நிரூநிச்சிட்டாங்க. மன்னிப்பு கேட்பது மனதார இருந்தாலும் அதை மன்னிக்கும் பெரிய மனசு இவங்க குடும்பத்தில் அனைவருக்குமே இருக்கு. 👌👌👌👌அருமையான கதை வத்சலா ரொம்ப அழகா அருமையா நச்சு ன்னு சொல்லி இருக்க, வழக்கம் போல மழையும் மனதையும் பூமியையும் நனைத்தது, 👌👌👌👌👌
Wow👌👌👌👌👌👌👌👌 super story…… It’s very emotional…. Touch to heart 💕💕💕💕💕💕💕 lovely….. Arassi 😘😘😘😘😘😘 happy ending💕💕💕💕💕💕💕 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
ரொம்ப அருமையான நிறைவான முடிவு . கீதை உபதேசம் அர்ஜுனனுக்கு மட்டுமல்ல. அது வாழ்வியல் உபதேசம். லேகாவும் தவறை உணர்கிறாள். டாக்டர் ரஜினியின் காண்டீபம் மருத்துவம் தானே. எதிரில் இருப்பவர் யார் என்பது தேவையில்லை. அங்கே நிலை நாட்ட வேண்டியது தர்மம் மட்டுமே. மிக அழகான உவமானம். ஸ்ரீதேவி, ரஜினி இருவருக்குமாக ஆரம்பித்த கதையில் அரசியின் ஆட்சியே பிரதானமாக இருக்கிறது. அன்பு சூழ் உலகில் ஆனந்தம் மட்டுமே என்றும். அருமையான, நிறைவானக் கதையைக் கொடுத்த வத்சலாவிற்கு வாழ்த்துக்கள்.
wow superb story ending. rajini sir evlo pesi parthu ethukum response panathava ipo arasi oda sound ketu response pani iruka athu mattum illama rajini ellathaium maranthu avala ethukittan avan mattum illa avan familye vanthu parthathum devi ku aaruthal koduthathum arumai . lekha pannatha yarum yosikama maranthu mannichitanga ellam athvum arasi evlo pakkuvama eduthukitta . lekahvum thappa thiruthi mannipu ketuta . arasi oda pakkuvam ava manasu la irunthu keta lekha ku operation pana solrathu avaloda example sonnathu superb antha varthai ketu rajini sir oda velaiya pathu paarvai varavaikurathu superb . athula anga anga vara mazhai inum silirka vachiduchi
எத்தனை அழகாக எல்லாரையும் மன்னிக்க வச்சி மறக்கவும் வச்சிட்டீங்க….
ரஜினி sir உங்களுக்கு இருக்குற லவ்ஸ் தாங்க முடியல… மஹதி மா sorry மா…
லேகா இதை விட பெரிய தண்டை எதுவுமே இல்ல…
கணபதி டாக்டர் யும் அரசியும் மனசை நிறைத்து நின்னுட்டாங்க…
வாழ்த்துகள் மா
Geethai, Mahabharat ham ku mattum illa nam vaazhkaikum thevai.
Rajini family migavum uyarntha family. Mannipathil ulla sugam unarnthavargal.
Arasi ippadi than solvaala ena expect panninen. Right.
Very nice ending. 👍🏻
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
அருமை அருமை அருமையோ அருமை…..
மேன்மக்கள் என்னைக்குமே மேன்மக்கள் தான்…
ரஜினி சர் ஶ்ரீதேவியை மட்டும் அல்ல மெல்லிய மழைசாரலையும் விரும்ப வைத்துவிட்டீர்கள்…
உங்க கதைகளில் கார்த்திக் என்ற கதாப்பாத்திரம் பெயர் இதுல மிஸ்ஸிங்…
தொடர்ந்து உங்கள் படைப்புகளை தர வேண்டுகிறேன்….
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அருமையான கதை இதைப் போன்ற மனிதர்களை சந்தித்து அதற்குள் நாமளும் சேர்ந்து வாழ மாட்டோம் என்று இயக்கப்பட வைத்தது பாராட்டுக்கள் பல உங்களுக்கு
Super super super super super😍 Fantastic story and good ending👏👏👏
மெலிதான மழை ரஜினி சார் ஸ்ரீதேவி டாக்டர் கல்யாணத்துக்கு வாழ்த்து சொல்ல வந்திருக்குமோ கண்ணன் அர்ஜீனனுக்கு சொன்னது கீதை ரஜினி சாருக்கு அரசி சொன்னது வாழ்வியல் தத்துவம். மறப்போம் மன்னிப்போம்ன்னு சொல்லாமல் சொல்லிட்டா இவங்க ரெண்டு பேர் கல்யாணத்தில் டாக்டர் கணபதிக்கு ரெம்ப சந்தோஷம் அழகான கதை