அவனது அருகாமை அவளை இளக்கிய போதிலும், உள்ளுக்குள் பரவசமும் பரிதவிப்பும் இருந்த போதிலும் அவனுக்கு முதுகு காட்டி நின்று கொண்டாள் அவள்.
“என் ஃபோன் குடுக்கறீங்களா ப்ளீஸ்? நான் ஏற்கனவே சொல்லிட்டேன். பாதிக்கப் பட்டவங்களுக்கு உடல் உறுப்புகள் கிடைக்கறதே கஷ்டம். அப்படி கிடைச்ச உறுப்புகளை எல்லாம் சட்ட விரோதமா வித்து காசு பார்த்த கிராதகனோட எல்லாம் என்னாலே பழகக் கூட முடியாதுன்னு. இதிலே உங்களுக்கு டாக்டர்னு பேரு வேறே…ப்ளீஸ் என்னை பேச வைக்காம என் ஃபோன் குடுங்க”
“ப்ச் என் முகத்தை பார்த்து இதையெல்லாம் சொல்லு தேவிம்மா. ஏதோ டி.வியிலே நியூஸ் வாசிக்குற மாதிரி எங்கேயோ பார்த்து பேசிட்டு இருக்கே” என்றபடியே அவளது அருகில் வந்தான் ரஜினிகாந்த் . “முதலில் உட்காரு நீ..”
“தேவை இல்லை. என் ஃபோன் குடுங்க..” அவளது கண்கள் மூடிக் கொள்ள உதடுகள் வார்த்தைகளை சுள்ளென உதிர்த்தன.
“என் முகத்தை பார்த்து பேசுடி” இப்போது வெடித்தான் நாயகன். “உனக்கு என்னைப் பத்தி நல்லாவே தெரியும். மருத்துவம்தான் என்னோட வாழக்கைன்னு உனக்கு நல்லாவே தெரியும். நான் நீ சொன்ன லிஸ்ட்லே இருக்குற குற்றங்கள் எதையுமே செய்யலைன்னு உனக்குத் தெரியும். இருந்தாலும் பொய் பேசறே. கொஞ்ச நாள் ஆனாலும் நீ என்னை நேசிச்சது உண்மைன்னா என் முகம் பாரு முதலிலே”
திரும்பி விட்டாள்தான். கடைசி வரியின் தாக்கத்தில் திரும்பி விட்டாள்தான். எட்டிப் பார்க்க துடித்த கண்ணீரை விழுங்கிக் கொள்ள கண்கள் படாத பாடு பட்டன.
இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு நிமிர்ந்து நின்றிருந்தான் அவன். அவனது முகத்தில் கோபமும் காதலும் சரி விகிதத்தில் கலந்து நின்றன. அவனது கம்பீரம் அவளை தடுமாறத்தான் வைத்தது.
‘இவன் முன்னால் நின்றால் எல்லாவற்றையும் அப்படியே கொட்டி விடுவேன்’ சொல்லிக் கொண்டாள் தனக்குள்ளே ‘வேண்டாம் அது வேண்டாம்’
“இப்போ என் முகம் பார்த்து சொல்ல வேண்டியதை சொல்லு” கூர் முனை பார்வையால் கீறினான் அவளை.
“என்னை விட்டுடுங்களேன் ப்ளீஸ்.” அவளது வார்த்தைகளில் முன்பிருந்த வேகம் இல்லை இப்போது “அதான் நீங்களும் உங்க குடும்பமும் அடுத்த அடிக்கு நகர்ந்துட்டீங்க இல்லையா. உங்களுக்கும் மஹதிக்கும் கல்யாணம்ன்னு எங்க அம்மா அன்னைக்கு போன் பண்ண போது அவ சொல்லி இருக்கா. இன்னும் ஏன்..”
சட்டென அவளது முகத்தை கைகளில் ஏந்திக் கொண்டான் நாயகன். அவள் கண்களுக்குள் பார்த்தான் அவன். அவனது குரல் காதல் எனும் மென்மையை சுமந்து நின்றது.
அவனது முதல் ஸ்பரிசத்தில் தன்னை மறந்துதான் நின்றாள் சில நொடிகள். இருந்தாலும் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொள்ள முயன்று கொண்டே இருந்தாள்.
‘உன் முன்னே நடித்து நடித்து நடித்து எனது வாழ்கையே நடிப்பாக போய்விடும் போலிருக்கிறதே எனது காதலா’
“வந்திடுங்க ஸ்ரீதேவி டாக்டர். என்கிட்டே வந்திடுங்க. எந்த பிரச்சனைனாலும் ரெண்டு பேரும் சேர்ந்து சந்திச்சுக்கலாம். இன்னும் எதுவுமே மாறலைடி. நீ நம்ம கடையிலே முதல் முதலா வியாபாரம் பண்ணி உன் கையாலே கோவிலுக்கு சேர்க்கணும்னு எடுத்து வெச்ச காசு கூட அப்படியேதான் இருக்கு.”
“பார்றா. இப்போ என்ன புது அக்கறை என் மேலே? இத்தனை நாளா எங்கே போச்சு இதெல்லாம்?” மனதில் இருந்த ஆதங்கம் அவளே அறியாமல் இப்போது வார்த்தைகளாக வந்தே இருந்தன.
“ஒத்துக்கறேன். எங்க ஸ்ரீதேவி டாக்டரை நான் பனிஷ் பண்றதா? வாய்ப்பே இல்ல அப்படின்னு சொன்னவன், உன் கூட பேசக் கூடாது ஏன் உன்னை, உன் ஃபோட்டோவை கூட பார்க்கவே கூடாது அப்படிங்கிற கோபத்திலே இத்தனை நாள் சுத்தி இருக்கேன், நீ என்னை விட்டு விலகின போது என்னோட ஈகோவை சீண்டி விட்டுத்தான் விலகினே. என்னதான் இருந்தாலும் அதை என்னாலே ஜீரணிக்க முடியலைதான். ஆனா இப்போ கொஞ்ச நாளா மஹதி என் பக்கத்திலே வரும் போதெல்லாம் மனசு உன்னைத்தான் தேடுது. அது இன்னும் நகராம உங்க கிட்டேதான் இருக்கு ஸ்ரீதேவி டாக்டர்”
“நான் நகர்ந்துட்டேன்” அவனது கைகளைத் தட்டி விட்டு திரும்பிக் கொண்டாள். “ஒரு பொண்ணு ஒரு ஆம்பிளையை வேண்டாம்னு சொல்றான்னா அதிலே ஆயிரம் காரணம் இருக்கும். அதை என்ன என்னன்னு தோண்டி துருவறது ஒரு நல்ல ஆம்பிள்ளைக்கு அழகு இல்லை. ஒரு வேளை நான் வேறே யார் கூடவாவது ரிலேஷன்ஷிப்லே கூட இருக்கலாம் இல்லையா .”
“ஆமாமா வேறே யார் கூடவாது ரிலேஷன்ஷிப்லே இருக்கிறவங்கதான், மஹதி எனக்கு ஊட்ட வந்த போது ஓடி வந்தாங்க. அப்புறம் போட்டோ எடுக்கும் போது அப்படியே ஒட்டிக்கிட்டு நின்னாங்க”
பதில் சொல்வதற்கு அவளிடம் வார்த்தைகள் இல்லை சில நொடிகள் யோசித்து ஒரு தீர்மானத்துக்கு வந்து
“நாம பிரிஞ்சதுக்கு உங்க தங்கச்சி காரணமா இருந்தா என்ன செய்வீங்க? சொல்லப் போனா அவதான் முக்கிய காரணம்” இப்போது திரும்பினாள் அவனை நோக்கி. முகத்தில் எதையோ தெளிவாக முடிவு செய்து விட்ட பாவம்.
“வாட் நான்சென்ஸ்?” அவனது தொனி வெடித்தது.
“இதுக்கே இப்படி கோபம் வருது. எனக்காக உங்க குடும்பத்தை விட்டுட்டு நீங்க வர வேண்டிய சூழல் வந்தா என்ன செய்வீங்க? என்னை நீங்க நெருங்கி வந்தா உங்களுக்கு அந்த நிலைமைதான் வரும். அதான் விலகி வந்திட்டேன். நீங்க பேசாம மஹதியை கல்யாணம் பண்ணிட்டு நிம்மதியா இருங்க. இப்போ என் மொபைல் குடுங்க நான் போகணும்”
“நீ மாத்தி மாத்தி பேசறியே தேவிம்மா” குரலை இறக்கினான் நாயகன். “ஏதோ பெருசா நடந்து இருக்கு. . அது என்னனு சீக்கிரமா கண்டு பிடிக்கிறேன்”
“கண்டு பிடிங்க. எதை எல்லாம் கண்டு பிடிக்கணுமோ மொத்தமா கண்டு பிடிச்சிட்டு அப்புறம் என்கிட்டே வாங்க. அப்போ கொடுக்கல் வாங்கல் எல்லாம் பேசுவோம். அது வரைக்கும் என்னை விட்டுடுங்க” என அவனது கைப்பேசியை அங்கிருந்த மேஜையின் மீது வைத்து விட்டு தனது கைப்பேசிக்கு கை நீட்டினாள் பெண்.
கைப்பேசி அவளது கை சேர “சீக்கிரமே நீ என்கிட்டே வர வேண்டியது இருக்கும்” என்றான் அவன் அவள் முகம் பார்த்துக் கொண்டே. “என் காதல் உன்னை என்கிட்டே இழுத்திட்டு வரும்.”
அப்படி அவன் சொல்லி இருக்கக் கூடாதோ. நாளை இரவே அவள் கிழிந்த நாராய் அவனது காலடியில் வந்து விழப் போகிறாள் என்பதை அறிந்திருக்கவில்லையே அவன்.
நடக்கப் போவது எதையுமே அறிந்து கொள்ளாமல் “கண்டிப்பா வருவேன். உங்களுக்கும் மஹதிக்கும் நடக்கப் போற கல்யாணத்துக்கு கண்டிப்பா வருவேன்” என அவன் முகம் பார்த்து சொல்லி விட்டு நடந்தாள் அவள்.
பின்னர் என்ன தோன்றியதோ திரும்பி அவனருகில் வந்தாள். அவனை நோக்கி கை நீட்டினாள் அவள்.
“ஆல் தி பெஸ்ட் டாக்டர் ரஜினிகாந்த்”
‘எனக்கு உங்களை பார்க்கணும்ங்கிறதை விட அது என்னவோ உங்களை தொட்டுப் பார்க்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு. எனக்கு சொல்லத் தெரியலை… எனக்கு… எனக்கு உங்க விரல்களை தொட்டு பார்க்கணும்…”’ அவளது உள்ளம் அரற்றியது.
குழந்தையை அள்ளிக் கொள்வதைப் போல அவளது கரத்தை தனது கரங்களுக்குள் வைத்துக் கொண்டான்.
“தேங்க்ஸ் டாக்டர். எல்லாத்துக்கும் தேங்க்ஸ்” அவளது விரல்கள் அவனது விரல்களை வருடிக் கொடுப்பது புரியாமல் இல்லை ரஜினிகாந்துக்கு.
“எல்லாத்துக்கும்ன்னா?” அவனது குரலில் கொஞ்சம் கோபம் கூட இருந்தது..
“எல்லாத்துக்கும்ன்னா. எல்லாத்துக்கும் தான்” சொல்லி விட்டு கரத்தை விலக்கிக் கொண்டு நடந்தாள் அவள்.
அதே நேரத்தில் அவனது தந்தையின் மனதிலும் ஸ்ரீதேவிதான் வந்து வந்து போய்க் கொண்டிருந்தாள். அவளுக்கு ஜாதகத்தில் இருக்கும் பாதிப்புகளை பற்றி ஒரு எச்சரிக்கை கொடுத்து விடலாம் எனும் எண்ணத்தில், ஒரு உந்துதலில் அவளது எண்ணை அழுத்தினார் அவனது தந்தை.
இப்போது அவள் அவனது அறையை விட்டு சிறிது தூரத்திற்கு வந்து விட்டிருந்தாள். ஒலித்த கைப்பேசியை எடுத்துப் பார்த்தவளுக்கு மிகப் பெரிய வியப்பு.
அவன் தந்தை மீது அவளுக்கு அளவு கடந்த மரியாதை உண்டு. அவரது அழைப்பை ஏற்க முடியாது, அவரிடம் கடுமையாக பேச முடியாது என்பதலாயே இத்தனை நாட்கள் அவரது எண்ணையும் அவனது அன்னையின் எண்ணையும் மறித்து வைத்திருந்தாள் இவள்.
இப்போது அவை எப்படி விடுவிக்கப் பட்டிருக்கும் என்பது புரியாமல் இல்லை அவளுக்கு. இப்போது அவரது அழைப்பை ஏற்று பேசுவதைத் தவிர வேறே வழியும் இருக்கவில்லை அவளுக்கு.
“எப்படிம்மா இருக்கே?” அவரது குரலில் பழைய வாஞ்சை அப்படியே இருந்தது “நான்தான் சொன்னேனேமா. உனக்கும் அவனுக்கும் மனஸ்தாபம் வர நிறைய வாய்ப்பு இருக்கு. கொஞ்ச கவனமா இருங்க. கொஞ்ச நாளிலே எல்லாம் சரியாகும்னு. என்ன நடந்தது, உனக்கும் ரஜினிக்கும் என்ன பிரச்சனைன்னு எங்களுக்கு எதுவுமே தெரியலை. ஒண்ணும் சொல்லாமலே எங்களை விட்டு தூரமா போயிட்டே மா நீ”
“இன்னும் கூட தூரமா போயிடுவேனோ என்னமோ தெரியலை அங்கிள்” அவர் குரல் கேட்டதும் என்னவோ உளறினாள் இவள்.
“என்னதும்மா? புரியலை”
“ஒண்ணுமில்லை அங்கிள். உங்ககிட்டே எல்லாம் பேசறதுக்கு எனக்கு ஒண்ணும் இல்லை. இருந்தாலும் பெரியவங்க போன் பண்ணிட்டீங்க. அந்த மரியாதைக்குதான் எடுத்தேன். சொல்லுங்க என்ன விஷயம். ரொம்ப நேரம் பேச முடியாது என்னாலே. டக்குனு சொல்லுங்க” வேண்டுமென்றே குரலிலொரு சலிப்பை கொண்டு வந்து கொண்டாள் பெண்.
“சொல்லிடறேன் மா. சொல்லிடறேன். இப்போ சமீபத்திலே குலதெய்வம் கோவிலுக்கு எதுவும் போயிட்டு வந்தியாமா?”
“ஆங்…. ஆமாம் போயிட்டு வந்தேன். தீபாவளியை ஒட்டி போயிட்டு வந்தேன். அதுக்கென்ன..?
“நல்லதுமா. நல்ல வேலை செய்து இருக்கே. உன் குலதெய்வம் உன் கூடவே நிக்கும்”
“எனக்குப் புரியலை” என்றாள் புருவங்கள் ஒன்று கூட.
“உன் ஜாதகம் எனக்கு மனப்பாடம். இப்போ உனக்கு கொஞ்சம் கிரஹ நிலைகள் சரியில்லை மா. அதனாலே ரொம்ப ரொம்ப பத்திரமா இருந்துக்கோ பொதுவா ட்ராவெல் பண்ணும்போது, ரோட்டிலே போகும் போது கவனமா இரு. முடிஞ்சா திருப்பதி, திருவண்ணாமலை இப்படி ஏதாவது ஒரு பெரிய கோவிலுக்கு போயிட்டு வா மா. அவ்ளோதான்மா. வெச்சிடறேன்” படபடவென பேசி விட்டு அழைப்பை துண்டித்து இருந்தார் மனிதர்.
அவரது வார்த்தைகள் காதில் ஒலித்துக் கொண்டே இருக்க அதை மனதை விட்டு நகர்த்த முயன்று கொண்டே தனது ஹோட்டலுக்கு செல்ல கார் நிறுத்தம் நோக்கி நடந்தாள் ஸ்ரீதேவி.
அறைக்கு வந்து சேர்ந்த பிறகுதான் இன்று நடந்தவை ஒவ்வொன்றாக படம் போல ஓடியது மனதிற்குள்ளே. கண்ணீர் கொட்டி விடுவேன் கொட்டி விடுவேன் என மிரட்டியது.
‘என்னவனிடம் எத்தனைதான் நடிக்க. எத்தனைதான் பொய் சொல்ல?’
அதனோடு சேர்த்து அவனது தந்தை சொன்ன எச்சரிக்கை அவளுக்கு எதையோ உணர்த்திக் கொண்டே இருந்தது. ஏதாவது ஒன்று பெரிதாக நடக்கப் போகிறதோ? நடக்கட்டும் அதில் ஒன்றும் பாதகம் இல்லை. ஆனால் அப்படி நடந்த பிறகாவது என்னவனுக்கு எனது உண்மையான மனது புரிய வேண்டாமா?
அங்கே மேஜை டிராயரில் இருந்த சில தாள்களையும் பேனாவையும் எடுத்துக் கொண்டு அமர்ந்தாள்.
“ரொம்ப ஸாரி ரஜினி சர். ரொம்ப ரொம்ப ஸாரி” இப்படித்தான் துவங்கினாள் கடிதத்தை.
தொடரும்
ஏன் இப்படி? ஸ்ரீதேவிய ரொம்ப அழகா ஹாண்டில் செஞ்சார் டாக்டர். அவளிடமிருந்து பாதி உண்மையை வாங்கி விட்டான். மீதி கண்டுபிடிப்பது கஷ்டமா என்ன ? சீக்கிரம் தேவியை ரஜினியோடு சேரத்துடுங்க குறைந்த பட்ச ஆபத்தோட. இப்போ ஸ்ரீதேவி எழுதப் போற இந்த கடிதம் எப்போ ரஜினி கைக்கு கிடைக்குமோ. கொஞ்சம் இதம், கொஞ்சம் அழுத்தம்னு கலந்த அத்தியாயம்
தேவி முழுசா சொல்லி இருக்கலாம்… மிச்சம் மீதி தெரியாம டென்ஷன் ஆகுது….
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
என்ன தான் பிரச்சினையோ தெரியலயே சீக்கிரம் சொல்லிட்டுங்க
ரஜினிக்கு டென்ஷன் ஆகுதோ இல்லையோ எனக்கு ஆகுது, என்ன நடக்கப் போகுதோ?
Tension panni bp raise pannaatheenga writer madam 😎😎😎😎
Ipovathu un manasula irukuratha kotidalame sri devi Yen ippadi maraichi vachi avan kitta nadikira . Yaru un manasa ippadi mathi vachi iruka. Ena nadaka potho unaku therilaye aana rajini kandu pidichi unaku support ah irupan
👌👌👌👌👌👌
வச்சு மா நான் சுபஸ்ரீ சுரேஷ்…… உங்க எழுத்துக்கு… கிரேஸ் இந்த தளத்துல எழுதுவது கூட எனக்கு தெரில….. ஏதோ ஸ்வைப்பிங்ல வத்சலா னு பார்த்ததும்…. உடனே எல்லா அத்தியாயத்தையும் படிச்சுட்டு இது notification வரலயேனு கோவமா உங்கள கொஞ்சிட்டே இருக்கேன்……. பார்ரா…… ரஜினி ஸ்ரீதேவி blockbuster யா…… miss panna irunthen 13epi படிச்சி இருக்கேன் மீதி எங்க…….
Sridevi peria aabathu ethuvum Vara koodathu. Avanga onnu seranum.
Rajini avalai vitu iruka koodathu. Unmaiyai
ஸ்ரீதேவி டாக்டரை ரெம்ப கஷ்டபடுத்தாம ரஜினி சார்கிட்ட சேத்துடுங்க பாதி விஷயத்தை அவளை அறியாமளே ரஜினிசார் கிட்ட சொல்லிட்டா மீதி விஷயத்தை லெட்டரில் எழுத போறாளா அந்த லெட்டர் எப்போ நம்ம ரஜினி சார்கிட்ட கிடைக்குமோ
Super super super😍😍😍😍😍
என்ன இப்போ இந்த சிக்கலில் அரசி பேர் அடிபடுது…. ரஜினி சார் இருந்தாலும் உங்களுக்கு இம்புட்டு பொறுமை ஆகாது ஶ்ரீதேவி மா உனக்கு இம்புட்டு அழுத்தமும் ஆகாது..
அச்சோ accident ஆகி ரஜினி sir operation பண்ணுற நிலை வருமா