அடுத்து அவன் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருந்தன. மனதை ஒரு நிலைக்கு தள்ளிக்கொண்டு அவன் எழுந்த நேரத்தில் அறையின் கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தார் கணபதி.
“லேகா பெட்டர்பா. ஷீ இஸ் ரெஸ்பாண்டிங் டு ட்ரீட்மென்ட்ஸ். இன்னைக்குள்ளே கான்ஷியஸ் வந்திடும்னு நினைக்கிறேன்”
“ம்?” என புருவங்கள் உயர நிமிர்ந்தான் ரஜினிகாந்த்.
லேகாவுக்கு நினைவு திரும்பி விடும். ஆனால்? அந்த கேள்விக்குறியை பற்றி இப்போது அறிந்திருக்கவில்லை அந்த மருத்துவர்கள்
“தேவி எப்படி இருக்கா டாக்டர்?” அவனது குரலில் கவலை மட்டுமே இருந்தது.
“அவ.. அவதான்..எனக்கு பயமா இருக்குப்பா. இதுவரை அவ நம்ம மெடிசின்ஸ்க்கு கொஞ்சம் கூட ரெஸ்பாண்ட் பண்ணலை. வைடல்ஸ் நார்மல்க்கு வரலை.”
“நான் இப்போ அவளை பார்க்கலாமா டாக்டர்? ட்ரீட்மென்ட், ப்ரோசீஜர் எதுவும் போயிட்டு இருக்கா”
“எது நடந்திட்டு இருந்தா என்ன? நீ உள்ளே இருக்கலாம். வா” என அவனை அழைத்துக் கொண்டு நடந்தார் கணபதி. அடுத்த சில மணி நேரங்கள் அவளுடனே இருந்தான்.
ஒரு மருத்துவனாக அவனால் ஆன முயற்சிகள் அத்தனையும் செய்து பார்த்து கொண்டுதான் இருந்தான் அவன். ஆனால் அவளிடம் அது எதுவுமே பலிக்கவில்லை.
இவன் கண் மருத்துவனாக இருந்தாலும் இவன் சொன்ன ஒரு சில வழிமுறைகளை பின்பற்றி அவளுக்கு வைத்தியம் செய்ய முயன்றார்கள் அங்கிருந்த மருத்துவர்கள். எதுவுமே உதவவில்லை அவர்களுக்கு.
‘இத்தனை படித்தும் என்ன பயன் என்ற கேள்வி அவனை புரட்டத் துவங்கி இருந்தது.’ எந்த வித மாற்றமும் இன்றிக் கிடந்தாள் அவள்.
மொத்தமாக தோற்றுப் போயிருந்தான் அவன் அவளது விரல்களை பற்றிக் கொண்டான். தலையை வருடிக் கொடுத்தான்.
“ஸ்ரீதேவி டாக்டர்” அவளது செவிகளைத் தொட்டது அவனது அழைப்பு.
ஆனாலும் அவனது அழைப்போ ஸ்பரிசமோ அவளிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. நேரம் கடந்து கொண்டே இருந்தது. அவளிடம் எந்த முன்னேற்றமும் இல்லை.
“வேறே ஸ்பெஷலிஸ்ட்ஸ் யாரும் பார்க்கணுமா டாக்டர். எதுக்குமே அசைய மாட்டேங்குறாளே?. இங்கே வந்து கிட்டதட்ட பன்னிரெண்டு மணி நேரமாச்சு.” தோற்றுப் போன பாவத்தில் குரல் வந்தது
“ஒண்ணு ரெண்டு இடத்திலே ஃபிராக்ச்சர்ஸ் காயங்கள் தவிர உடம்பிலே ரொம்ப பெரிய காம்ப்ளிகேஷன்ஸ் இல்லைபா. ஆனா அவ மனசு முழுக்க ஸ்ட்ரெஸ் ரஜினி. அது அவ உடம்பிலே வெளிப்படுத்து. இந்த ஸ்டேட்லே அதை எப்படி குறைக்கறதுன்னுதான் எனக்குப் புரியலை. நீயும் நிறைய ட்ரை பண்ணிட்டே. சரி அவங்க அம்மாவை வர சொன்னாயா?”
“சொல்லி இருக்கேன் சர். வந்திட்டே இருக்காங்க” அவன் சொன்ன அந்த நேரத்தில்தான் நூலைத் தொலைத்த பட்டம் போல வந்து சேர்ந்தார் சுமித்ரா.
அவரது இரண்டு பெண்களும் நினைவில்லாமல் கிடக்க, யாரைக் என்ன கேட்பது என்பது தெரியாமல் அலைபுற்றுப் போய் அந்த மருத்துவமனையில் இங்குமங்கும் அலைந்து கொண்டிருந்தார் அவர்.
அவனுக்கும் ஸ்ரீதேவிக்கும் இடையில் நடந்த அனைத்தயும் அறிந்தவர்தான் சுமித்ரா. பெரிய மகள் தவறு செய்த போது அவளை காப்பாற்றி விடுவதே நோக்கமென அண்ணன் சொன்னபடி நடந்தாகி விட்டது.
இப்போது அந்தச் செயல் சின்ன மகளின் நிம்மதியை வேட்டையாடிக் கொண்டிருக்கிறது.
மகள்கள் இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்க அதனுள் நுழையவெல்லாம் அவருக்கு அனுமதி இல்லை. ரஜினிகாந்தை அழைத்து பேசவும் ஒரு வித தயக்கம் மேலோங்குகிறது.
இங்குமங்கும் அலைந்து, யார் யாரிடமோ உள்ளே செல்ல அனுமதி கேட்டுத் தோற்று பின்னர் ரஜினிகாந்தையே அழைத்து விட அவர் நினைத்த நேரத்தில்தான் தீவிர சிகிச்சை பிரிவை விட்டு வெளியே வந்தான் அவன்.
ஓடிச் சென்றார் அவனிடம்.
“என்.. என்.. பொண்ணுங்க…என்ன என்ன ஆச்சு? எப்படி இருக்காங்க? நான் அவங்களை பார்க்கணும்.” தேம்பலும் அழுகையும் கண்ணீரும் எல்லாம் இருந்தது அவரிடம். அப்படியே சற்று விக்கித்து நின்று விட்டான் ரஜினிகாந்த்.
இப்படி ஒரு காட்சியை அவன் முன்பே ஒரு முறைப் பார்த்து, அப்படி ஒன்றும் அதிக காலம் ஆகிவிடவில்லையே. வெறும் எட்டு வருடங்கள்தானே கடந்து இருக்கின்றன.
எட்டு வருடங்கள் முன்னால் இப்படிதானே அரசியின் கல்லூரியில் சென்று நின்றார் அவனது அன்னை யமுனா.
“என்.. என்.. பொண்ணு…என்ன என்ன ஆச்சு? எப்படி இருக்கா? நான் அவளை பார்க்கணும்.” இதே தேம்பலும் அழுகையும் கண்ணீரும் எல்லாமும் இருந்ததே அவரிடமும்.
அந்தக் காட்சியை மறுபடியும் இங்கே கண்டுவிட்ட நிலையில் பேச்சற்று நின்றிருந்தான் சில நொடிகள்.
“இந்த காலத்திலே போய் ஜோசியம் பரிகாரம் அது இதுன்னு பேசிட்டு இருக்கீங்களேபா. இது பணயுகம் அவ்வளவுதான்” சொல்லிருக்கிறான் தனது தந்தையிடம். “பணம் மட்டும் இருந்தாப் போதும். மற்றபடி ஒழுக்கம், உண்மை, நியாயம் இது மாதிரி எதை மீறினாலும் தப்பில்லை. எல்லாமே நார்மலைஸ் ஆகிடுச்சுப்பா”
“அப்படியா சொல்றே? உனக்கு இன்னும் அனுபவம் வரணும்டா கண்ணா” என்று சிரித்திருக்கிறார் தந்தை. அவர் சொன்ன அனுபவத்தை இப்போது கண் முன்னே பார்த்துக் கொண்டிருக்கிறான் மகன். அவரது சிரிப்பின் உண்மையான அர்த்தம் புரிகிறது இப்போது.
“சொல்லுங்களேன் ப்ளீஸ்..என் பொண்ணுங்க எப்படி இருக்காங்க” சுமித்ரா மறுபடியும் கேட்க அவர் முகத்தை நேராகப் பார்த்தான் ரஜினிகாந்த்.
“உங்க அருமை பெரிய பொண்ணுக்கு பெருசா பிரச்சனை இல்லை. ஆனா.. சின்ன பொண்ணுதான் உயிரை கையிலே பிடிச்சுக்கிட்டு துடிச்சிட்டு இருக்கா” சொல்லும் போதே அவனது விழிகளில் நீர் கட்டிக் கொண்டதுதான்.
“அய்யோ… “ உடைந்தார் சுமித்ரா..”நான் அவளைப் பார்க்கணுமே” இப்போதும் அன்று கல்லூரியில் அழுத யமுனாதான் நினைவுக்கு வந்தார். “என்னை அவங்க கிட்டே கூட்டிட்டு போறீங்களா தம்பி ப்ளீஸ்”
“இப்போ கொஞ்ச நேரத்திலே விசிடிங் ஹவர் வரும் அப்போ போய் பார்க்கலாம். தனியாவா வந்தீங்க. உங்க அண்ணன் எங்கே?” அவனது கேள்வியில் சூடு இருக்கத்தான் செய்தது.
“அவ.. அவருக்கு உடம்பு சரியில்லை” தயக்கத்துடன்தான் சொன்னார் அவளின் அன்னை.
“ஏன்.. என்னாச்சு?”
“சுகர் அதிகமாச்சு. காலிலே புண்ணு ஆறலை. ஒரு காலை எடுத்துட்டாங்க” சத்தியமாக ஆடிப் போனான் ரஜினிகாந்த்.
உயரமும், பருமனும், அடர் மீசையும் அடுத்தவரை அடக்கி ஆளும் குரலும் என இருந்த அந்த வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை மனிதரை பார்த்த நாட்கள் நினைவில் ஆடின.
காலத்தின் விளையாட்டுகளை நினைத்து உடல் ஒரு முறை நடுங்கி ஓய்ந்தது.
“இப்போ நான் என்ன செய்யட்டும்” என்றார் சுமித்ரா கவலையும், அழுகையும் ஆற்றாமையுமாக.
“எப்படியும் போ.. என்னமும் செய்து கொள்” என்று அவரை விட்டு செல்லும் செயலை செய்யும் அளவுக்கு மனப் பக்குவம் இல்லை அவனுக்கு. அவனைப் பெற்றவர்கள் அதை அவனுக்கு கற்றுக் கொடுக்கவில்லையே. என்ன செய்வான் அவன்.
“இங்கே ரூம்லே இருங்க. நாலு மணிக்கு விசிடிங் ஹவர்ஸ். அப்போ ஐ.சி.யூ உள்ளே விடுவாங்க. போய்ப் பாருங்க” என்று அவருக்கு அறையை காட்டி கொடுத்து விட்டு நடந்தான் ரஜினிகாந்த்.
ஸ்ரீதேவியின் நிலையில் முன்னேற்றம் ஏற்பட இன்று முழுவதும் அவனது தந்தை சொன்ன கோவில்களுக்குத்தான் அலைந்து கொண்டிருந்தாள் மஹதி. ஏதாவது ஒரு பரிகாரம் அவளை எழுப்பி விடாதா எனும் தவிப்பு அவளுக்கு.
நேரம் நள்ளிரவைத் தாண்டிக் கொண்டிருந்தது. இன்னமும் எந்த மாற்றமும் இல்லை ஸ்ரீதேவியின் உடல் நிலையில்.
தளர்ந்து போய் அவளருகில் இருந்த இருக்கையிலேயே கண்மூடி அமர்ந்து இருந்த அந்த மருத்துவனின் கண்களுக்குள் அப்பாவின் சிரிப்பு வந்து வந்து போய் கொண்டிருந்தது.
திடீரென ஏதோ புரிந்ததைப் போல சட்டென கண் திறந்தான் ரஜினிகாந்த். ஸ்ரீதேவிக்கான மருந்து கிடைத்தது போலத் தோன்றியது அவனுக்கு.
அடுத்த அத்தியாயத்துடன் நிறைவு பெறும்
Pingback: டாக்டர் ரஜினிகாந்த் Prefinal (1) - Praveena Thangaraj Novels
கடவுளின் தீர்ப்பு இப்போ எல்லாம் உடனே தான். மனுஷங்களுக்கு அதை உணரும் தன்மை தான் இல்லை. ரொம்ப சரியான தீர்ப்பு லேகாவின் மாமாவிற்கு. லேகாவிற்கும் கூட தான். தேவி எழுந்து வர அவனின் தந்தையின் சிரிப்பில் என்ன கண்டுபிடித்தான் டாக்டர். பரபரப்பான எபிசொட். பக்கா ப்ரீ ஃபைனல் அப்டேட். சுமித்ரா பாவம் தான். இரண்டு மகள்களும் ஒரே நேரத்தில். டாக்டர் ரஜினிகாந்த் கண் மருத்துவம் தேர்ந்து எடுத்தது பற்றிக் கூறியது ரொம்ப பிடிச்சது. ரஜினி ஸ்ரீதேவி சேரும் சந்தோஷமான அத்தியாயத்திற்காக காத்து இருக்கிறோம்.
ena kamichi kodutharu doctor oda appa ethuva irunthalum nanmaike irukum nambikaiyoda pannunga rajini sir kandipa elunthu varuva unga sri devi doctor . TRY TRY . thappu pana thandanai kedaikum athuvum udane than kadavul irukenu ippadi tha kamiparu
waiting for final episode
அப்பாவோட சிரிப்பில் என்ன கண்டு பிடிச்சான்? இது கலியுகம் பண்ண தப்புக்கு கை மேல சாரி கால் மேல பலன். சுமித்ராவ பார்த்தா பாவமா இருக்கு இரண்டு பெண்களும் ஹாஸ்பிடலில்
சரியான தண்டனை. .. சீக்கிரமா சேர்ந்துட்டு வாங்க ஸ்ரீதேவியும் ரஜினியும் சூப்பர்
Viru viruppaana pathivu 👍👍👍👍👍👌👌👌👌
Murpagal seyyin pirpagal vilaiyum , but ippovellam maurpagalileye punishment than.
Sridevi ,rajini rendu perum paavam.
Thirupathi perumal karunai vechu ivangalai onnu serkanum.
லேகா பிழைத்து விட்டாள் ஆனான்னு கொக்கி வச்சி இருக்கிங்க அத நம்ம ரஜினி சார் கவனிக்கலை ரிஜினி சார் தங்கைக்கு நடந்த அநியாயத்துக்கு நியாயம் கிடைக்குற மாதிரி இருக்கு லேகாவின் மாமாவிற்க்கு கால் போனது லேகாவிற்க்கு என்ன ஆகப்போகுதோ நம்ம ரஜினி சாருக்கு அப்பா சொன்னது ஞாபகம் வந்துருச்சி போல அப்படி என்ன சொல்லி இருப்பார்
முற்பகல் செய்யின்…. பிற்பகல் விளையும்ன்னு சொல்றது லேகா மாமா விஷயத்தில் பழித்துவிட்டது ஆனா லேகாவுக்கு எதுவும் தண்டனை இல்லையா???
ரைட்டர் ஜி ரஜினி ஶ்ரீதேவி ஜோடி கண்டிப்பா சேரணும் அதுக்கு நீங்க தான் பொறுப்பு….
Arasan anru deivam ninru kollum…… Arumai sis👌👌👌
Interesting😍😍
தெய்வம் நின்று கொல்லும்…