அத்தியாயம் 19
பலா மரத்துக்கு கீழே போடப் பட்டிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து கவிவாணன் பால் தேநீரைப் பருகத் தொடங்க, அவரது தொலைபேசி மெல்லச் சிணுங்கியது.
அவரது மனைவி தான் அழைத்திருந்தார்.
“சொல்லும்மா..”
“என்னவாம் உங்க மருமக.. வீட்டுக்கு வாறாளாமா இல்லையாமா.. அந்தச் சின்னப் பொண்ணுங்க நம்ம வீட்டுல இருக்கிறதுல எனக்கு எந்த விதமான ஆட்சேபனையும் இல்லைனு இதோட எத்தினை தடவை சொல்லீட்டன்..”
“என்ன இருந்தாலும் நீ ஆரம்பத்துல நடந்து கொண்ட விதம்.. அதுகளுக்கு ஒரு மாதிரி இருந்திருக்கும் தானே மதிம்மா..”
“ஏதோ புத்தி பிசகி அப்புடிச் செய்திட்டேன் கவிப்பா.. இப்போ என்ன செய்ய.. நானே கிளம்பி வரவா..”
“நான் பார்த்துக் கொள்ளுறன்.. நீ மனசைப் போட்டுக் குழப்பாமல் உன்னோட ட்ரிப்பை என்ஜோய் பண்ணு.. நீ இந்தளவு தூரத்துக்கு புரிஞ்சு கொண்டு பேசுறதே எனக்கு ஆறுதலா இருக்கும்மா..”
“சாரிப்பா..”
“ஹேய் சாரி எல்லாம் எதுக்கு..”
“கோயில் குளம்னு ஏறியிறங்கத் தான் கவிப்பா எனக்குப் புத்தியே வருகுது.. இத்தனை காலம் உங்களையும் தமிழையும் என்ன பாடு படுத்தியிருக்கிறன்.. தமிழைக் கூட விடுங்க உங்களை என்ன பாடு படுத்தியிருக்கிறன்..”
“முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும் மதி.. இனி நடக்கிறது எல்லாமே நல்லதே நடக்கும்.. நீ ஒழுங்கா வந்து சேரு.. நீ வர முதல் உம் மருமக மனசை மாத்துற வேலையைப் பாக்கிறேன்..”
என்றவர் அலைபேசியைத் துண்டித்து விட்டு, ஆசுவாசப் பெருமூச்சு விட்டார்.
அவரின் தாமரை அவரது வீட்டுக்கு மருமகளாக வந்த நேரம், அவரது மனைவியிடம் தான் எத்தனை மாற்றங்கள், கோவிலுக்கு பாதயாத்திரை போவது, பேசும் போது நல்ல விசயங்களை மட்டும் பேசுவது என ஆளே மாறி விட்டாளே என நிம்மதியாக நினைத்துக் கொண்டார்.
அங்கே உள்ளே மனைவியைத் தேடிக் கொண்டு போன தமிழ், அவள் சுவரோடு சாய்ந்து கொண்டு முன்னால் எரிந்து கொண்டிருந்த அடுப்பைப் பார்த்தபடி நிற்பதைக் கண்டதும், அவளுக்குப் பின்னால் போய் தானும் சுவரோடு சாய்ந்து கொண்டு நின்றான்.
செக்கன்கள் நிமிடங்களாகக் கரையவே, அவளிடம் எந்த அசைவும் இல்லாமல் போக, மெல்ல எட்டி அடுப்பை அணைத்தவன், அவள் தோளில் கை வைக்க, திடுக்கிட்டுத் திரும்பியவள், கால் வழுக்கி சுவரோடு மோதப் போக, வேகமாக மனைவியை இறுக்கமாக அணைத்துக் கொண்டான் தமிழ்.
நெஞ்சை அழுத்திப் பிடித்துக் கொண்டு அவனை மிரள மிரளப் பார்த்துக் கொண்டிருந்த மனைவியின் விழிகள் அவனை என்னவோ செய்தது.
“என்னடி லுக்கு.. நான் மட்டும் பிடிக்கலேனா உருண்டு எங்கையாவது அடி வாங்கியிருப்பாய்..”
என்று கொண்டே அவளை நேராக நிற்க வைக்க, மெல்ல அவனை அண்ணாந்து பார்த்தாள் தாமரை.
“இவ ஒருத்தி எதுக்கெடுத்தாலும் கொட்டக் கொட்ட முழிச்சிட்டு நிப்பா.. இவ கண்ணைப் பார்த்தா நமக்கு வேறை பேச வாறதே மறந்து போயிடுதே..”
எனத் தனக்குள் முணுமுணுத்தவன், அவள் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்தான்.
“நீ என்ன.. தனுவையும் தவத்தையும் கூட்டீட்டு வீட்டுக்கு வர மாட்டேனு சொன்னீயாம்.. ஏன் அங்க அவங்க இருக்க இடம் இல்லையா..”
“அவங்களுக்கு இங்க இடம் இருக்கும் போது.. அங்க எதுக்கு..”
“ஏய் இந்த மாதிரி.. பாதி நாள் அங்கயும் மீதி நாள் இங்கயுமா இது என்னடி வாழ்க்கை.. இதே நாம எல்லாம் ஒரு வீட்டுல இருந்தா எவ்வளவு ஹாப்பியா இருக்கும் சொல்லு..”
“இல்லைங்க.. அது சரியா வராது.. அவங்க வீடு இது தான்.. அவங்க இங்க இருக்கிறது தான் முறை..”
“ஏய் என்ன நீ.. கொஞ்சம் கூட புரிஞ்சு கொள்ள மாட்டேனு வீம்பு பண்றாய்..”
“அவங்களை நான் உங்க வீட்டுக்கு கூட்டீட்டு வர விரும்பலை..”
“உங்க வீடா.. அது நம்ம வீடு..”
“நோ.. அது உங்க வீடு தான்.. அதோட உங்களுக்குமே நான் உங்க சொத்துக்காக தான் உள்ள வந்தனோங்கிற எண்ணம் இருக்கிற வரைக்கும் எனக்கும் கூட அந்த வீட்டுல உரிமை இல்லை.. அதோட என் தங்கச்சிங்க விசியம் என்னோட கவலை.. அதைப் பத்தி நீங்க யோசிக்க வேண்டாம்..”
என்றவள் வெளியே செல்ல எத்தனிக்க, அவளைப் பிடித்து சுவரோடு சாய்த்தவன் அவளது கண்களைப் பார்த்தான்.
“ஒட்டுக் கேட்டியா..”
“அந்தப் பழக்கம் எனக்கு இல்லை.. நீங்கள் சத்தமா தான் பேசீட்டு இருந்தீங்க..”
“ஏய் அப்போ நான் இருந்த மனநிலை வேறை..”
“ஆனா நான் எப்பவுமே ஒரே மனநிலையோட தான் இருக்கேன்..”
“முடிவா என்ன சொல்றே..”
“நான் என்ன முடிவு சொல்ல.. அது தான் தாலி கட்ட முதலே என்கிட்டே.. மத்தவங்க பார்வைக்கு மட்டும் தான் நானும் நீயும் புருஷன் பொண்டாட்டி.. அப்புடீனு நீங்கள் சொல்லீட்டீங்களே.. பொண்டாட்டியில்லாதவ எங்க இருந்தா என்ன.. அவ தங்கச்சிங்க எங்க வாழ்ந்தால் என்ன..”
என்றவளை அழுத்தமான பார்வை பார்த்தவனின், கைகளை விலக்கி விட்டு அவள் வெளியே செல்ல, அவள் சென்ற திக்கையே பார்த்துக் கொண்டிருந்தவன் தலையை அழுந்தக் கோதிக் கொண்டான்.
அவனைப் பொறுத்தவரை தாமரை அவனுடைய மனதினுள் புகுந்து வெகு நாளாகி விட்டிருந்தது, ஆனால் அதை சரியாக உணரும் நிலையில் தான் அவன் இல்லை.
அதோடு அவன் என்ன சொன்னாலும் எல்லாவற்றிற்கும் ஆமாம் சாமி போடும் தாமரை, முதன் முதலாக அவன் சொன்ன ஒரு விடயத்தை மறுத்து ஒதுக்கியது அவனைச் சற்று அசைத்து தான் பார்த்தது.
சமையலறையை விட்டு வெளியே வந்த தாமரை, தன் அறையினுள் புகுந்து கதவைத் தாழிட்டு விட்டு, அதன் மேலேயே சாய்ந்து கொண்டாள்.
மூச்சு முட்டி அழுகை வந்து விடும் போல இருந்தது அவளுக்கு, என்ன இருந்தாலும் அவர் என்னைப் பணத்துக்காக வந்தவள் என்று தானே நினைத்தார், நானும் அவரை நேசித்துத் தொலைக்காமல் போயிருந்தால் அவருக்குக் கழுத்தை நீட்டியிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதே என யோசித்தவள் அப்படியே கண்களை மூடிக் கொண்டாள்.
மனைவி போன திக்கையே பார்த்துக் கொண்டு நின்றவனோ, சரி அவளுக்கு என்ன பிரச்சினையோ, கொஞ்சம் விட்டுப் பிடிப்போம் என நினைத்துக் கொண்டவன், தான் தன் மனைவிக்காக வைத்த டெஸ்ட் பற்றி மறந்து போக, அந்த ரூபனோ வழமையான தன் பிளேபாய் வேலையைக் காட்டத் தொடங்கினான்.
ஏற்கனவே அவன் தன்னைப் பணத்துக்காக வந்தவள் என்று நினைத்து விட்டானே என்கிற ஆதங்கத்தில் இருந்த தாமரைக்கு, தன் கரெக்டர் எப்படி என்பதை அறிய தன் கணவன் வேறொருவன் மூலம் தனக்குச் சோதனை வைத்திருக்கிறான் என்பதை அறியும் நாளும் வேகமாக வந்து சேர்ந்தது.
Super😍
Very interesting
AMA THERINJI THANA AGUM ATHUKU ENA NADAKA POTHU