Skip to content
Home » தீயாகிய தீபம் 12

தீயாகிய தீபம் 12

தீயாகிய தீபம் 12

விக்கி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி பத்து நாட்கள் ஆயிற்று. கால் காயம் சற்றே பரவாயில்லை. ருத்ராவிடம் மனம் விட்டுப் பேசியதில்  மனவேதனை கொஞ்சம் மட்டுப்பட்டது. தன் அறை கட்டிலில் இருந்து கழிப்பறைவரை ஊன்றுகோலுடன் தனியே செல்ல முடிந்தது.

ருத்ராதான் மொத்தமாக மாறியிருந்தாள் மனதளவில். எப்படியேனும் விக்கி நந்தினியைச் சேர்த்து வைத்துவிட்டுத் தான் இவர்கள் வாழ்விலிருந்து ஒதுங்கி விட வேண்டும் என்பது மட்டுமே தற்பொழுதைய அவள் எண்ணமானது.

சிறிது நாட்களுக்கு முன்புவரை நந்தினி மேல் பொய்யான பழியை போட்டு அவளை தங்கள் வாழ்க்கையிலிருந்து துரத்த எண்ணியவள் இன்று அதற்கு முற்றிலும் மாறாகச் சிந்திக்கிறாள்.

அதற்கான காரணம் இல்லாமல் இல்லை. இரண்டு அழகான காதல் உள்ளங்கள் திருமணம் என்னும் பந்தத்தில் இணையவிருந்த நேரம்.  அவர்கள் பிரிய மூலக் காரணமே தான் தான் என்னும் உண்மைத் தெரிந்து அதனால் ஏற்பட்ட குற்றவுணர்ச்சி தான்.

அன்று விக்கி தன் கதையைச் சொல்லி முடித்து .. தாங்கள் சேர முடியாத காரணத்தை உரைத்தான். ருத்ராவிற்கு உலகமே இருண்டுவிட்டது. ந்தப் பிரச்சனைக்குத் தான் அல்லவா காரணம்.

ஆனால் இதை விக்கியிடம் சொல்ல அவளுக்குத் தைரியம் இல்லை. அதனால் நந்தினியை அவன் முன்னிருத்திவிட்டு விடை பெறலாம் என்பது அவள் எண்ணம்.

இவள் முடிவால் நிச்சயம் விக்கி மற்றும் ருத்ரா பெற்றோர் நொடிந்து போவார்கள். ஆனால் ருத்ராவால் ஒரு குற்றவாளியாக விக்கியை ஏமாற்றி வாழ்க்கை முழுக்க நடிக்க இயலாது. அவள் மனசாட்சி இப்பொழுதே அவளை நொடிக்கு நொடி குற்றம் சாட்டுகிறது.

ருத்ரா தனக்கு வேண்டியதை எப்படியேனும் அடைந்துவிடும் பழக்கம் உள்ளவள். ஆனால் அது இப்படி மற்றவர் வாழ்க்கையைப் பாழாக்கும் என கனவிலும் எண்ணவில்லை.

இந்த சமயத்தில் ருத்ராவிற்கு வேலை நிமித்தமாக மதுரையில் உள்ள கீழடிக்குச் செல்ல வேண்டியிருந்தது.

விக்கி மதுரைக்குப் போக முடியாதுனு சொல்லிடவா?” அவனிடம் பல தடவை கேட்டதை மீண்டும் கேட்க

போயிட்டு வா ருத்ரா ரெண்டு நாள்தானே.. கேன் மேனேஜ்என்றான்.

விசுவும் கோதாவரியும் கூட போயிட்டு வாம்மா .. நாங்க பாத்துப்போம்என்றனர்.

மேலதிகாரி சொன்ன ஒரு வேலை மட்டும் என்றால் நிச்சயம் மறுத்திருப்பாள். ஆனால் அங்கு அருகில்தான் நந்தினி இருக்கிறாள். அவளைச் சந்திக்கவே செல்கிறாள்.

ருத்ராவிற்கு வேலை நான்கைந்து மணி நேரம் தான். காலையில் சென்று அன்று இரவே திரும்பிவிடலாம். ஆனால் நந்தினியைச் சந்திக்கவே இரண்டு நாள் என வீட்டில் கூறினாள்.

தன் பெற்றோர் மற்றும் பவித்ராவிடமும் தன் பயணத்தைப் பற்றிக் கூறினாள்.

நீ இன்னும் லீவ்ல தானே இருக்க .. அப்புறமா எப்படி சொல்றாங்க?” என பவி குறைபட்டாள்.

முக்கியமான வேலை அதான் .. ”

மாமா பாவம் சீக்கிரமா வந்திடுஎனப் பரிந்துரைத்தாள் பவி.

சரிஎன பொங்கி வந்த கண்ணீரைத் துடைத்தாள். இனி இந்த வீடும் மனிதர்களும் நந்தினிக்குத் தான் சொந்தம். குறிப்பாக விக்கி.

தன் விளையாட்டு புத்தி மற்றும் ஆணவத்திற்குத் தகுந்த பாடம் வாழ்க்கை கற்பித்துவிட்டது என தனக்குள் அழுது புலம்பினாள். வெளியில் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் நரக வேதனையில் துவண்டாள்.

இரண்டு நாட்கள் கழித்து மதுரைக்கு அதிகாலையில் பிளைட்டில் பயணமானாள். மனிதர்கள் முதல் அனைத்துமே தனக்கு கீழே சிறியதாகிப் போனார்கள். தான் இழைத்த குற்றம் மட்டும் வேதாளத்தைப் போல அவள் தோளில் தொங்கியபடி அருகில் இருந்தது போல உணர்ந்தாள்.

நந்தினி நிறைவான வாழ்க்கை வாழ வேண்டிய பெண். அவள் குடும்பத்தின் சுமையைத் தானே தன் தோளில் சுமக்கிறாள்.

நந்தினியின் அப்பா கிருபாகரன் மூன்று வருடம் முன்பு இறந்துவிட்டார். நந்தினி ஒரே மகள். அவள் தன் தாய் கோசலையுடன் வசிக்கிறாள். கோசலைக்கு பாலாம்பிகை என்ற தங்கையும் குணசேகரன் என்றொரு தம்பியும் உள்ளனர்.

பாலாம்பிகை தன் திருமணம் முடிந்த இரண்டே மாதத்தில் கணவனை இழந்துவிட்டார். அவர் தன் தம்பி குணசேகரன் வீட்டில்தான் இத்தனை வருடங்களாக இருந்தார். தற்பொழுது தன் அக்கா கோசலை உடல் நலனைக் கவனிக்க இங்கு வந்துள்ளார்

தம்பி குணசேகர் தன் குடும்பத்துடன் அதே தெருவில்தான் வசிக்கிறார். அவ்வப்பொழுது அவரும் உதவுவார். பெரியதாகச் சொத்து என்று இல்லை என்றாலும் நந்தினியைப் படிக்க வைத்து திருமணம் செய்து கொடுக்குமளவு பணம் இருந்தது.

ஆனால் கோசலையின் மருத்துவச் செலவுகள் இருக்கும் கொஞ்ச நஞ்ச பணத்தையும் மெல்ல மெல்ல விழுங்கிக் கொண்டிருந்தது. கோசலைக்கு தன் மகள் நன்றாக வாழ வேண்டும் என்னும் ஆசையைத் தவிர வேறொன்றும் இல்லை.

ருத்ராவிற்கு அன்று விக்கி சொன்னது மீண்டும் மனதில் மறுஒளிபரப்பானது.

நண்பன் திருமணத்தில் சந்தித்த விக்கி நந்தினி தங்கள் காதலைச் சொன்னதும் .. இருவர் உள்ளமும் வர்ணிக்க முடியா ஆனந்தத்தில் உழன்றது.

அடுத்த வாரம் அம்மா அப்பாவை உன் வீட்டுக்கு பொன்னுக் கேட்டு வரச் சொல்லவா?ஆசையாகக் கேட்டான் விக்கி

அடுத்த மாசம் வரச் சொல்லேன் இப்ப வேண்டாம்சொல்ல முடியா வருத்தத்துடன் சொன்னாள் .

ஏன்?” என்பதாய் அவன் புருவம் உயர

அம்மாக்கு இப்பதான் ஹார்ட் அட்டாக் வந்து ஏன்ஜியோ பிளாஸ்ட் செய்திருக்காங்க .. அவங்க ரெஸ்ட்ல இருக்கணும் .. அவங்க இந்த நிமிஷமே பொண்ணு கல்யாணம் பண்ண தயார்தான் .. ஆனா  டாக்டர் ரெஸ்ட்ல இருக்கச் சொல்லிருக்காங்க .. இல்லனா இன்னமும் நிலைமை மோசமாகிடுமாம்என தன் நிலைமையைக் கூறினாள்.

சரி உன் அப்பா?” என அவள் குடும்பத்தைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆவலில் கேட்டான். அவளும் தன் குடும்பத்தைப் பற்றிக் கூறினாள்.

அன்று நந்தினி என் சம்பளம் முக்கியம் எனக் கூறியதன் பொருள் விக்கிக்கு விளங்கிற்று. மூன்று பெண்களும் தனியே அல்லல் படுவதை விக்கியால் புரிந்து கொள்ள முடிந்தது.

விக்கி தன் குடும்பத்தைப் பற்றி அவளிடம் கூறினான். “உனக்கு பைனான்ஷியல் சப்போர்ட் தேவைனா தயங்காம கேளுஎன்றதற்கு வேண்டாம் என மறுத்துவிட்டாள்.

தன் தாயைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்கிறாள் என்னும் ண்ணமே அவன் மனதில் மலையளவு உயர்ந்தாள்.

அடுத்த மாசம் நான் ஆன் சைட் பிராஜக்ட்காக யு.எஸ். போறேன். ஆறு மாசம் அங்க இருக்கணும்என்றான் விக்கி.

இந்தவொரு இடத்தை அடைய பலர் ஏங்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால் விக்கி அவற்றை ரசிக்கும் மனநிலையில் இல்லை. தன் நந்தினியை விட்டுப் பிரிய மனமில்லை.

இதைக் கேட்டவள் “கன்கிராட்ஸ்” எனக் கை கொடுத்தாள். அவள் கையை இறுகப் பற்றியவனுக்கு கையை விட மனமில்லை. தன்னவள் தன்னைவிட்டு சென்றுவிடக் கூடாதென ஏனோ சஞ்சலப்பட்டான்.

அவள் நாணத்துடன் மனமே இல்லாமல் கையை விடுவித்துக் கொண்டாள்.  

சென்னையிலிருந்து மதுரை ஒன்றரை மணிநேர பயணம் தான். ஆனால் ருத்ராவிற்கு அது மிக நீண்ட பயணமாகத் தோன்றியது.

பழைய நிகழ்வை மனம் அசைப்போட்டது. அத்தனை பிரச்சனைக்கும் பிள்ளையார் சுழி போட்ட நிகழ்வு.

அன்று அவ்விடம் தனக்கும் தன் குடும்பத்துக்கும் எத்தனை எத்தனை மகிழ்ச்சியை அள்ளிக் கொடுத்ததோ அதே போல் அதே இடத்தில் மற்றொருவருக்கு மீள முடியாத துயரத்தை தன்னால் ஏற்பட்டது என்பதை நினைக்க தன் மேல் வெறுப்பாக இருந்தது.

சென்னைக்கு அருகில் புதியதாகக் கட்டிய ரிசார்ட் அதை காண வேண்டும் என ருத்ரா மற்றும் பவிக்கு ஆசை. தனியாக செல்வதைக் காட்டிலும் குடும்பத்தோடு செல்லலாம் என திட்டம் வகுத்தனர்.

ருத்ரா அண்ணி சித்ரா இந்த திட்டம் சரிவராது எனவும் தன் மாமனாரும் மாமியாரும் வேலை நிமித்தமாக வர மாட்டார்கள் ன்றும் கூறிவிட .. இந்த வார்த்தைகளை ருத்ராவால் ஏற்க இயலவில்லை.

ருத்ரா “ சரி நீங்களே ஒரு குறிப்பிட்ட தேதியை சொல்லுங்க. அந்த தேதியில ரிசார்ட்ல இருக்கிற மாதிரி நான் சம்மதிக்க வைக்கிறேன். பெட் பத்தாயிரம். சரியா?” என எள்ளலுடன் கேட்க

இதற்கு வாய்ப்பே இல்ல என்று அண்ணி சம்மதித்தாள்.

பவித்ராநான் அம்பயர்என முன்னமே கூறிவிட்டாள்.

உடனே ருத்ரா தன் ஆட்டத்தைத் துவக்கினாள் அப்பா ப்ளீஸ் .. இந்த ரிசாட் சூப்பரா இருக்காம் .. உங்க வெட்டிங் டே செலிப்ரேஷன் அங்கேயே வெச்சிகலாம்எனத் தன் தந்தையைத் தாஜா செய்தாள்.

இங்க சுவிட்ச் போட்டா அங்க லைட் எரியும் என்பது போல அப்பா சம்மதித்தால் அம்மாவைச் சம்மதிக்க வைப்பது எளிது என்பதால்.

இதெல்லாம் தேவையில்லாத வேலைஅம்மா மறுக்க

ருத்ரா முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு தந்தையை ண்டு செய்கையால் வற்புறுத்த

நாம யாருக்காகச் சம்பாதிக்கிறோம்நம்ம குழந்தைகளுக்காக தானே .. அவங்க சந்தோஷம் தான் முக்கியம்என அப்பா நொடியில் ருத்ராவிறக்கு ழக்கறிஞராக மாறிவிட்டார்.

யெஸ் டாட்என  ஹைபை கொடுத்தாள் தந்தைக்கு.

ஆனா அன்னிக்கு எமர்ஜென்சி ஆப்பரேஷன் வந்தா .. என்னால வர முடியாது. எனக்கு பேஷண்ட்தான் முக்கியம்என அம்மா சம்மதித்தாலும் தன் டேம்ஸ் அண்ட் கன்டிஷனை கூறிவிட்டார்.

அனைவருக்கும் தெரியும் தன் அன்னை அவற்றிற்குத் தகுந்த ஏற்பாடுகள் செய்வார் என்று. அவர் தன் நோயாளியை என்றுமே விட்டுக் கொடுக்க மாட்டார். அதே போல தன் குடும்பமும் அவருக்கு முக்கியம்.

எந்த ரிசார்ட்? எங்க இருக்கு?” என தந்தை வினவ

ருத்ரா தன் செல்போனில் அந்த ரிசார்ட் பற்றிய முழு தகவலையும் காட்டினாள். அதில் இல்லாததையும் சொல்லி தனக்கு இவர்கள் தலையசைக்க வேண்டி எல்லாவற்றையும் கோர்த்தாள்.

புதுசா? .. அப்ப சௌகிரியமா இருக்குமா? பாதுகாப்பா எப்படி?” என அம்மா சந்தேகத்தைக் கிளப்ப

அம்மா அதெல்லாம் இல்லாம கவர்மெண்ட் அப்ரூவல் கிடைக்குமா? .. பாருங்க  ரிவ்யூஸ் எல்லாம் பாசிடிவாதான் இருக்கு

அது போலி அகெண்ட் கிரியேட் செய்து ரிவ்யூ போட்டிருக்கலாமே. இதெல்லா எடுத்துக்க முடியுமா?என அண்ணி  தன் பங்கிற்குத் தடையை உண்டாக்க முயன்றாள். தான் தோற்றுவிடக் கூடாதே “பத்தாயிரம் முக்கியம் பிகிலு”

சரி ரிவ்யூசை நம்ப வேண்டாம்என்றவள் உடனே அந்த ரிசார்ட்டுக்கு போன் செய்தாள். ஸ்பீக்கரை ஆன் செய்து தன் சந்தேகங்களைக் கேட்டாள். அவன் தன் இடம் சரியில்லை என்றா கூறுவான்? எல்லா வசதியும் இருக்கு என வாக்குறுதியை அள்ளி வீசினான்.

அப்பொழுதே ருத்ரா கையோடு புக் செய்தும்விட்டாள். அவள் பெற்றோர் சம்மதத்துடன். அவர்கள் நகர்ந்ததும்.

ருத்ரா தன் அண்ணி சித்ராவிடம் கெத்தாக வந்து நின்றாள்எப்படி சம்மதிக்க மாட்டாங்கனு சொன்னீங்க .. இப்ப பாத்தீங்களா?” என இல்லாத காலரை தூக்கிக் காட்டுவது போலப் பாவனை செய்தாள்.

சித்ரா எரிச்சலுடன் தன் தோல்வியை ஏற்று ருத்ரா கேட்ட பணத்தை ஜிபே செய்தாள்.

ருத்ரா விக்கி மற்றும் நந்தினி மூவரும் அன்று ஒரே இடத்தில் இருந்தனர்.

ஒளிரும்

10 thoughts on “தீயாகிய தீபம் 12”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *