தீயாகிய தீபம் 15
விக்கி நலமுடன் இன்பமாக வாழ வேண்டும். அவனை மணக்கும் தகுதியைத் தான் இழந்துவிட்டதாக நந்தினி கருதினாள். இனி விக்கியின் நினைவுகள் மட்டுமே அவளுக்குச் சொந்தம். அவன் அல்ல. அவன் காதல் அவளின் இதயப் பெட்டகத்தில் என்றென்றும் பொக்கிஷமாக பாதுகாக்கப்படும் எனத் தனக்கு தானே அணைப்போட்டுக் கொண்டாள்.
கொடைக்கானலில் முதலில் சிறியரக டிராவல்சில் ஏஜென்சியில் கணக்கு வழக்குப் பார்க்கும் வேலைக்குத்தான் சேர்ந்தாள்.
அந்த டிராவல்சை நடத்தும் நபரின் வயோதிக அன்னைக்குச் சமையல் செய்து கொடுத்து சில மணி நேரம் கவனித்துக் கொள்ளப் பெண்த் தேவை என்றும் விளம்பரத்தில் இருந்தது.
நந்தினி தானே இரண்டு வேலையும் செய்து கொடுப்பதாக கூறினாள். அவர்கள் தரப்பில் உடனே ஏற்றுக் கொண்டனர்.
முன்பு பார்த்த வேலையின் சம்பளத்தில் பாதிகூட தற்பொழுது வருவதில்லை. பணத்தேவையைக் கருத்தில் கொண்டே இரண்டு வேலைக்கும் சேர்ந்தாள். தாயின் மருந்து மாத்திரைக்கே பெரிய தொகை ஒவ்வொரு மாதமும் தேவைப்படும்.
போனில் நேர்காணல் நடந்தது. அவளின் படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தமே இல்லை. அதை டிராவல்ஸ் ஓனர் பலமுறை கேட்டுவிட்டார். ஏனெனில் பாதியில் விட்டுச் சென்றால் அவருக்குப் பிரச்சனை என்பதால் மீண்டும் மீண்டும் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார்.
பல இடத்தில் மாமியார் மருமகள் உறவு ரஷ்யா உக்ரைன் போல இருப்பதைப் போலவே இங்கும் இருந்தது. பாட்டிக்கும் அவர் மருமகளுக்கும் என்றும் ஒத்துப் போவதில்லை. அதிலும் பாட்டிக்கு உடல்நிலை சரி இல்லாததால் அவரை கவனித்துக் கொள்ள ஆள் வேண்டியிருந்தது. அதனால்தான் இந்த ஏற்பாடு.
நந்தினி அன்னையிடம் கணக்கு வழக்கு பார்க்கும் வேலை என்று மட்டும் கூறினாள்.
விக்கி வருவதற்குள் அனைத்து ஏற்பாடும் செய்தாக வேண்டும். அவன் வந்து விஷயம் தெரிந்தால் நொறுங்கிப் போய்விடுவான். சென்னை வீட்டை காலி செய்து தன் அன்னை மற்றும் சித்தியை மாமன் வீட்டில் பத்திரமாக இருக்கவைத்தாள்.
மாமா குடும்பம் அவளுக்குத் தைரியம் கூறி அனுப்பி வைத்தனர். அவள் கொடைக்கானல் செல்வதை ஜென்னி மற்றும் கலா எத்தனை தடுத்தும் நந்தினி கேட்கவில்லை. விக்கியிடம் எதையும் கூறக் கூடாது என அவர்களை வேண்டிக் கேட்டு கொண்டாள்.
விக்கித் திரும்புகையில் நிச்சயம் அலுவலகத்தில் அவனின் திறமைக்கு நல்ல பதவி உயர்வு கிட்டும் என்பது அனைவரும் அறிந்ததே. அதோடு விக்கி நல்ல பெண்ணை திருமணம் முடித்து வாழ்க்கையில் நன்றாக இருக்க வேண்டும். அது ஒன்றே அவளின் விருப்பம். தன் தாய் மன நிம்மதியுடன் இருத்தல் வேண்டும். இந்த இரண்டு ஆசை தவிர அவளுக்கு வேறு எதுவும் இல்லை. தன்னைப் பற்றி அவள் கடுகளவும் நினைத்துப் பார்க்கவில்லை.
நந்தினி முத்துப்பல் சிரிப்பு, மென்மையான குணம், குழந்தைத் தனம், பயந்த சுபாவம் என இருந்தவள் முற்றிலும் மாறிப் போனாள். அந்த கொடூரமான நிகழ்வு அவளை முற்றிலும் மாற்றிவிட்டது.
அவள் வரையில் இனி தன் உடலில் மிஞ்சி இருப்பது உயிர் மட்டுமே. இனி தனக்கு இழக்க எதுவும் இல்லை என்னும் நிலையில் இருந்தாள்.
கொடைக்கானலில் அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. பாதுகாப்பாகப் பாட்டியுடன் வீட்டில் தங்கி வேலைப் பார்த்தாள். பாட்டியைக் கவனித்துக் கொள்ளத் தேவையான பொருட்களை அவர் மகன் கொண்டு வந்து தந்துவிடுகிறான். காலையில் சமையல் செய்து பாட்டியைக் குளிப்பாட்டி உணவும் மருந்தும் கொடுக்க வேண்டும்.
மதியம் மூன்று மணி முதல் ஏழு மணி வரை டிராவல்ஸ் கணக்கைப் பார்க்க வேண்டும். டிராவல்ஸ் அலுவலகம் நான்கு வீதி தள்ளி உள்ளது. அந்த சில மணி நேரம் பாட்டி தனியே சமாளித்துக் கொள்வார்.
இரவு மீண்டும் வந்ததும் பாட்டிக்கு உணவும் மருந்தும் கொடுக்க வேண்டும். அவள் அன்னையைப் போலப் பாட்டி அன்பாக பழகினார். அதுவே அவளுக்கு ஆறுதலாக இருந்தது. நந்தினிக்கு என்று தனியே அறைக் கொடுத்திருந்தனர்.
டிராவல்ஸ் முதலாளியும் “பாருமா நீ என் தங்கை மாதிரி .. உனக்கு என்ன உதவி தேவைனாலும் கேளு” என்றார். தள்ளி நின்று பேசும் நபர். தேவையில்லாமல் ஒரு வார்த்தை பேச மாட்டார்.
இயற்கைக் காட்சிகளும் புது இடம் புது மனிதர்கள் என அனைத்தும் அவளுக்கு அருமருந்தாக இருந்தது. பழைய கொடிய நினைவு அவளை வாட்டி வதைக்காமல் இல்லை. இருப்பினும் அதிலிருந்து மீண்டு வந்தாள். அது அத்தனை சுலபமாக இல்லை. வெளியே புன்னகையுடன் இருப்பதும் உள்ளுக்குள் நொறுங்கி அழுவதுமே அவளுக்கு வழமையானது.
அவ்வப்போது சென்னைக்கு வந்து தன் தாயைப் பார்த்துவிட்டுப் போனாள்.
கொடைக்கானலின் குளிரும் மழையும் நிச்சயம் தன் தாயின் உடல் நிலைக்குச் சரி வராது எனப் புரிந்தது. ஆனால் சில காலம் இப்படியான ஒரு வனவாசம் தனக்கு தேவை என்று எண்ணினாள்.
சென்னையில் விக்கி மற்றும் அவன் நண்பர்களுக்கு அவள் கொடைக்கானலில் இருப்பதைத் தெரிவிக்காமல் இருப்பது கலா மற்றும் ஜென்னிக்கு கொடுக்கப்பட்ட தலையாய கடமை.
விக்கி நண்பர்கள் என்றேனும் நந்தினி எங்கே என்றாள்.
“இப்பதான் வீட்டுக்குக் கிளம்பினாள்”
“முக்கியமான மீட்டிங்ல இருக்கா”
“இன்னிக்கு லீவு” என ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லிச் சமாளித்தனர்.
விக்கி நண்பர்களும் அதற்கு மேல் எதுவும் கேட்க மாட்டார்கள். அது நாகரீகமாய் இருக்காது எனச் சென்றுவிடுவர். மேலும் மற்றவரிடம் நண்பனின் காதலியைப் பற்றிப் பேசுவது அவர்கள் வழக்கமல்ல.
விக்கி வாட்சப்பில் நந்தினியுடன் பேசினான். அவளும் சந்தேகம் வராதபடி சென்னையில் இருப்பதைப் போன்றே பேசியபடி சமாளித்துக் கொண்டிருந்தாள்.
வானிலை மாற்றத்தினால் கொடைக்கானலில் இரண்டு நாட்களாக மழை கொட்டி தீர்த்தது. அதன் விளைவாக சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
பாட்டிக்கு ஆஸ்துமா பிரச்சனையால் மருந்து அவசரமாகத் தேவைப்பட்டது. அவர் மகனுக்கு போன் செய்தார். மழை காரணமாக செல்போன் டவர்கள் பாதிக்கப்பட்டிருந்தது. அதனால் செல்போன் இணைப்பு கிடைக்கவில்லை.
பக்கத்திலுள்ள மருந்தகத்திற்குச் சென்று மருந்து வாங்கலாம் எனச் சென்றாள். மரம் பெயர்ந்து விழுந்ததில் மருந்தகம் மூடியிருந்தது. மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருந்தனர். தெரு வெறிச்சோடி கிடந்தது.
வேறு மருந்தகத்திற்குச் செல்ல குறிப்பிட்ட மருந்து கிடைக்கவில்லை. நல்ல வேளையாக ஒரே ஒரு இடத்தில் மருந்து கிடைத்தது. மீண்டும் கருமேகம் சூழ இடியும் மின்னலும் கூட்டணியாகக் களமிறங்கியது.
மருந்தகத்தில் மருந்து கொடுத்தவன் சில நிமிடங்களில் கடையை மூடிவிட்டுச் சென்றுவிட்டான். தெரு ஆள் அரவமின்றி இருந்தது. திறந்திருந்த ஒரே ஒரு தேநீர் கடையில் இருவர் தேநீர் குடித்தபடி இருந்தனர். அக்கடையும் விரைவில் மூடும் அவசரகதியில் இயங்கியது.
அவர்கள் தான் நந்தினியை நாசம் செய்தவர்கள். பைக்கில் சாய்ந்தமர்ந்து தேநீர் அருந்தியபடிக் கலகலப்பாக உரையாடிக் கொண்டிருந்தனர்.
தவறிழைத்தவர்கள் சகஜமாக உலாவிக் கொண்டிருக்க .. பாதிக்கப்பட்டவள் ஓடி ஓளிந்து கொண்டிருக்கிறாள்.
அவர்களைக் கண்டதும் அச்சத்தில் உடல் நடுங்கியது. மயக்கமே வந்துவிடும் நிலை ஏற்பட .. மருந்தகத்தின் சுவரில் ஒட்டிக் கொண்டாள். மூச்சு முட்டியது. மழை மெல்ல வலுப்பெற்றது.
அவர்கள் எதிரே உள்ள இடத்திற்குச் செல்லலாம் என் பேசிக் கொண்டனர். செய்கையில் புரிந்தது. அவர்கள் குறிப்பிட்ட இடம் மலைபாங்கான இடம். பார்க்க வெறும் மண்சாலை போலத் தோன்றியது. அது மழை நீரினால் ஊரிப் போயிருந்தது. கனமான எதையும் தாங்கும் சக்தியற்றது.
வழி காட்டும் பலகையில் “டேஞ்சர் சோன் போக வேண்டாம்” என்று எழுதி அருகிலிருந்த மரத்தில் மாட்டியிருந்தது. அந்தமரக் கிளைகள் மழையின் காரணமாகச் சற்றே கீழே தொங்கியபடி இருந்தது.
அவள் இருந்த இடத்திலிருந்து சில அடி தூரத்தில் அந்த பலகை தாங்கிய மரம் இருந்தது. சட்டென அங்கு சென்றாள்.
ஒரே நொடி நந்தினி மரக் கிளைகளை இன்னும் கீழே இழுத்தாள். பலகை மொத்தமாக மறைந்து போனது. மரத்தின் அருகே மறைந்துக் கொண்டாள். அவர்கள் இருவரும் பைக்கில் அசுர வேகத்தில்ச் செல்ல மண்சரிவில் வண்டியோடு விழுந்து புரண்டனர்.
அவர்களின் அலறல் சத்தம் கேட்க அத்தனை இன்பமாக இருந்தது. இப்படிதானே தனக்கும் வலித்திருக்கும். வலி வேதனை என்னவென்று அவர்களும் விளங்கிக் கொள்ளட்டும் என நினைத்தாள்.
மீண்டும் மரக் கிளையை நகர்த்தி பலகைச் சரியாகத் தெரியுமாறு வைத்துவிட்டு கிளம்பினாள். அவள் செயலை கவனிக்க அங்கு யாரும் இல்லை. மனதிற்குள் அத்தனை ஆனந்தமாக உணர்ந்தாள்.
புழு பூச்சிக்குக் கூட துன்பம் வரக் கூடாது என எண்ணியவள் இன்று இருவரைக் கொலையே செய்யத் துணிந்துவிட்டாள். அவள் மனம் அந்தளவு கொழுந்துவிட்டு எரிந்தது.
தீபத்தைப் போலச் சாந்தமானவள் இன்று உக்கிரமான தீயானாள்.
மறுநாள் செல்போனில் செய்திதாளைப் படிக்கையில் மண்சரிவில் இரண்டு வாலிபர்கள் விபத்தில் சிக்கி தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் எனக் குறிப்பிட்டிருந்தது.
விபத்து என்னும் வார்த்தையை ஒரு முறை உச்சரித்தாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு அரிதார புன்னகையல்லாமல் மனதிலிருந்து புன்னகைத்தாள். நிம்மதியாக இருந்தது.
மேலும் அவர்களைப் பற்றிய செய்தியில் இருவரும் கொலை கொள்ளை வழிபறி வன்புணர்வு என செய்யாத குற்றம் இல்லை. அவர்களைக் காப்பாற்றுங்கள் என்ற கோரிக்கையுடன் குடும்பத்தினர் எவரும் வரவில்லை. தற்பொழுது இருவரும் காவல்துறையின் விருந்தாளிகள் எனக் குறிப்பிட்டிருந்தது.
இவற்றைப் படிக்கையில் மனதிற்கு இதமாக இருந்தது. ஒருமுறை அவர்களைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மேலிட அரசு மருத்துவமனைக்குச் சென்றாள்.
தான் இ- பேப்பரில் பணிபுரிவதாகவும் அதற்காகச் செய்தி சேகரிக்க வந்ததாகவும் கூறி வார்ட் பாய் மூலமாக சில தகவல்களைத் தெரிந்து கொண்டாள். அங்குச் செய்தி சேகரிக்கப் பலர் இருந்தபடியால் இவளைத் தனியாக யாரும் கவனிக்கவில்லை.
ஒருவன் முற்றிலும் கோமா நிலையிலிருந்தான். மற்றொருவனுக்குத் தலையில் அடிப்பட்டு உடலின் வலது பக்கம் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்தான். அவனால் பேசவும் முடியாமல் போனது. இனி அவனால் இயற்கை உபாதைக்குக் கூட எழுந்து நடக்க இயலாது.
ஆறு மாத்திற்குப் பிறகு விக்கி வெளிநாட்டிலிருந்து சென்னை திரும்பினான். பல கனவுகளும் ஆசைகளும் அவன் இதயத்தில் நிரம்பி வழிந்தது.
ஒளிரும் …
Interesting👍
Thank you so much Vino sis
Very interesting
Thank you so much Kothai sis
Super super
Thank you so much Rathi sis
Iniku thappu panavanga ethumnnadakatha mari suthitu irukanga vali anupavichavanga than oliyuranga enanpana kalam apdi iruku athu mari nadhini nilamai aanalum athe kalam avangaluku nalla pathil koduthuduchi
Very much true sis. Thank you so much Kalidevi sis
Interesting 👍👍
Thank you so much Abirami sis.
Intresting spr going waiting for nxt epi😍😍😍👌👌👌💕💕💕💕💕
Thank you so much Priya sis
Interesting
Thank you so much Eswari sis