Skip to content
Home » தீயாகிய தீபம் 17

தீயாகிய தீபம் 17

தீயாகிய தீபம் 17

விக்கியின் திருமண அழைப்பிதழை வியப்பாகப் பார்த்தபடி இருந்தனர். அவனின் நெருங்கிய நண்பர்களான பாலா மற்றும் கதிர்.

முறைக்காத குறையாக இது என்னது?” கதிர் அழைப்பிதழைப் பட்டென டேபிளில் வைத்துக்  கேட்டான்.

என் கல்யாணப் பத்திரிக்கைநிறுத்தி நிதானமாக மலர்ந்த புன்னகையுடன் விக்கிப்  பதிலளித்தான்.

அப்ப நந்தினி?”

நாங்க பிரெண்ட்ஸ் மாதிரிதான் பழகினோம்னு என்கிட்டயே  கதைவிடாத விக்கிபாலாவும் சேர்ந்து கொண்டான்.

சரி நந்தினி எங்க? நீங்கப்  பார்த்தா என் முன்ன அவள நிறுத்துங்கவிக்கி கூலாக பதிலளித்தான்.

உன் காதலிய நீதான் கண்டுபிடிக்கணும்கதிர் சொல்ல பாலா அவன் சொல்லை ஆமோதிப்பதாய் தலையசைத்தான்.

என்னை வேண்டாம்னு  சொல்லிட்டு போனவளைப்  போய் கெஞ்சிக்  கொஞ்சி கால்ல விழுந்து  கூடிட்டு வர முடியாதுவார்த்தையில் தீவிரம் தொனித்தது. “இதுக்கு மேல இதைப்  பத்தி பேச வேண்டாம்என்றவன் அங்கிருந்து வேகமாக நகர்ந்துவிட்டான்.

ஆனால் கதிர் விடுவதாய் இல்லை. ஜென்னியிடம் கேட்டதற்குஅவங்களுக்குள்ள ஏதோ பிரச்சனை .. ” என்றாள் நழுவும் விதமாக.

கதிர் இப்ப நந்தினி எங்க இருக்காங்க?” நண்பனின் காதலை நன்கு அறிந்ததால் சட்டென்று விட முடியவில்லை.

என்னவென்று சொல்லுவாள்? எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல நடிக்க வேண்டியிருந்தது. “ கதிர் ப்ளீஸ் .. நந்தினி விக்கி ரெண்டு பேரும் சின்ன குழந்தை இல்லை .. இது அவங்க வாழ்க்கை .. நாம ஓரளவுதான் எதுவும் சொல்ல முடியும். என்னை எதுவும் கேட்காதஎன்றுவிட்டுச்  சென்றுவிட கலாவும் தன்னிடம் கேள்வி கேட்க வந்துவிடுவானோ எனத்  தலைதெறிக்க ஓடிவிட்டாள்.

விக்கி தன் அலுவல் வேலையில் முழுகவனம் செலுத்தினான். பதவி உயர்வு கிட்டியதும் வேலையும் பொறுப்புகளும் கூடவே அதிகரித்தது.

தன் கவலையை மறக்கவே அவன் இவ்விதம் வேலை செய்கிறான் என அவன் நண்பர்கள் அறிந்ததே. மன அழுத்தம் காரணமாக மயங்கிச்  சரிந்தாலும் எதையும் யாரிடமும் உரைக்கவில்லை.

சரியான கல்லுளி மங்கன்என விக்கி காதில் ஸ்பஷ்டமாக விழும்படி கதிர் திட்டினான். எதன் மேலோ மழை பெய்வது போலவே விக்கிக்  கடந்து சென்றான்.

நாட்கள் நகர விக்கி ருத்ரா திருமணம் இனிதே நடந்தது. இனி எல்லாம் முடிந்தது என நண்பர்கள் சற்று விலகியே நின்றனர்.

இதோ ஒரு மாதம் ஆகிவிட்டது இருவருக்கும் திருமணம் முடிந்து.

ருத்ரா அவளின் அலுவல் விஷயமாக கீழடியில் வேலை முடித்து நந்தினி வீட்டிற்குச்  சென்று  மீண்டும் சென்னைக்குத் திரும்பினாள். மாலை ஐந்து மணியளவில் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.

விக்கி கால் கட்டு அப்படியே இருந்தது. முன்தினம் சென்று மறுநாள் திரும்பினாலும் ஏனோ பெரிய இடைவெளி போலத் தோன்றியது.

ருத்ரா மிகவும்  சோர்வாக வந்தாள் கால்வலி எப்படி இருக்கு?” விக்கியிடம் கேட்க

பெட்டர்என்றான் புன்னகையுடன்.

குளித்துவிட்டு நைட்டி அணிந்து காபியைப்  பருகியபடி விக்கி படுத்திருந்த கட்டில் அருகில் அமர்ந்தாள்.

கீழடியில் வொர்க் முடிஞ்சதா?” விக்கிக்  கேட்க

யெஸ்எனத்  தலையாட்டினாள்.

விக்கி மெல்ல அமர்ந்தான். அவள் உதவ முற்பட இட்ஸ் ஓ.கே.” என்றபடி  எழுந்து நடந்தான். அறையின் கதவை சாற்றி தாளிட்டான். பின்பு சார்ஜிலிருந்த தன் செல்போனை எடுத்து வந்தமர்ந்தான்.

நேற்றுவரை இரண்டடி நடக்கத்  தடுமாறினான். இன்று இயல்பாக நடக்கிறான் என ருத்ரா நினைத்தாலும் எதுவும் கேட்கவில்லை. ஏதோ புரிவது போல இருந்தது.

நந்தினி எப்படி இருக்கா?” விக்கி தொண்டை அடைத்தது. மனதின் ரணம் கண்ணில் அப்பட்டமாய்த் தெரிந்தது.

அவன் கேள்வியே அனைத்து உண்மைகளை உரைத்தது.

சோ .. உங்களுக்கு எல்லாமே தெரியும் இல்லையா?” லேசாய் கண்ணீர் துளிர்விட அவன் முன் அழுதுவிடக் கூடாதென மறுபக்கம் திரும்பி கண்ணீரை உள்ளிழுத்தாள்.

ஆமாம் எனத் தலையசைத்தான்.

நந்தினிக்கு இப்படி ஆகும்னு சத்தியமா நான் எதிர்பார்க்கவே இல்ல … நானும் ஒரு பெண் அவளோட வலி வேதனை எனக்குப் புரியுதுஎனத் தன்னிலை விளக்கம் கொடுத்தாள்.

விக்கி மௌனமாக இருந்தான். முகம் கல்லாக இறுகியது.  தான் எதையும் ஏற்கத்  தயார் இல்லை என்பதைத் தெள்ளத்  தெளிவாக காட்டியது .

யெஸ் ஐ அக்சப்ட் ஒரு பெரிய தப்பு செய்துட்டேன்என்றவளை

ஆழமாகப் பார்த்தவன்ஒன்னு இல்ல ரெண்டுஎன்றான்.

இவன் என்ன சொல்கிறான் என்பதைப் போல கூர்ந்து நோக்கினாள் .

பெங்களுர்ல கண்ணை மூடி பைக் டிரைவிங் சாகசம் செய்றேன்  ஒருத்தன் மேல மோதிட்டல .. இப்ப அவனுக்கு கண்ப்  பார்வை சுத்தமா இல்ல. அவன் என் பிரெண்ட் சதீஷ்

அதிர்ச்சியடைந்தாள் தான் விளையாட்டுக்காகச்  செய்தது இத்தனை பெரிய பாதிப்பை உருவாக்கும் எனக்  கனவிலும் எண்ணவில்லை.

ஆம் அவளுக்கு நன்றாக நினைவிருந்தது. பெங்களூரில் தன் பெரியப்பா வீட்டிற்குச்  சென்றிருந்தாள். பெரியப்பா சத்யநாதன்  பணபலம் அரசியல் செல்வாக்கு எனப்  பகட்டான மனிதர். அவர் மகள் ஸ்வாதி கல்லூரி  மாணவி புது பைக் வாங்கியிருந்தாள். அவளுக்கு காரை விட பைக் ஓட்டுவதில் அலாதி ஆனந்தம். விதவிதமான பைக் அவளிடமிருந்தது.

விடுமுறைக்காக அங்குச் சென்றிருந்தாள் ருத்ரா. ஸ்வாதி தன் ஐந்து லட்சம் பெறுமான பைக்கை ருத்ராவிடம் காட்டினாள். பின்பு பைக்கில் பின்னே ருத்ராவை அமர்த்தி ஓட்டிக் காட்டினாள்.

அதைக் கண்ட ருத்ரா தான் பைக்கை கண்ணை மூடிக் கொண்டே  ஓட்டுவேன் என சவால் விட்டாள். வாய்ப்பே இல்ல என ஸ்வாதி சொல்ல .. விடுவாளா ருத்ரா? பந்தய ரூபாய் இருபதாயிரம்.

மறுநாள் காலை ஆறு மணியளவில் போக்குவரத்து இல்லாத குடியிருப்புப் பகுதியைத் தேர்ந்தெடுத்தனர். அங்கு பைக் கண்ணை மூடி ருத்ரா பைக் ஓட்ட வேண்டும். வீட்டில் எவருக்கும் தெரியாமல் இவற்றை நடத்தத்  திட்டம் வகுத்தனர்.

அன்று கண்ணை மூடி வண்டி ஓட்டுகையில் சதீஷ் இரவு ஷிப்ட் முடிந்து காலை  வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தான்.

ருத்ரா ஐ மாஸ்க் அணிந்து அதன் மேல் கூலர் அணிந்திருந்தாள். ஆதலால் அவள் கண்ணை மூடியிருப்பது  பார்ப்பவருக்குத் தெரியாது. சொற்ப வாகனங்களே அந்நேரத்தில் போய்க் கொண்டிருந்தன. தொலைவில் ஸ்வாதியும் அவளின்  மற்றொரு தோழியும் ருத்ராவை கண்காணித்தபடி இருந்தனர்.

ருத்ரா சில அடிகளிலேயே தடுமாற அப்போது சதீஷ் எதிரே நடந்து வந்தான். அவள் வண்டி தள்ளாட்டமாய் வந்து சதீஷ் மீது மோதிவிட்டாள். அப்போதைக்கு சதீஷ்  விழுந்து தலையில் லேசாக அடிப்பட்டது.

சதீஷால் தான் பந்தயத்தில் தோற்றுவிட்டதால் ருத்ராவிற்குக்  கோபமும் அவமானமும் ஒன்றாய் தலைதூக்க சதீஷை திட்டி சண்டையிட்டு வண்டியுடன் சென்றுவிட்டாள்.

அவளுக்கு இந்த அளவு சதீஷிற்கு பிரச்சனை ஆகும் என்று எதிர்பார்க்கவில்லை.

பின்னந்தலையில் அடிபட்டதன் விளைவாக அடுத்த மூன்று மணி நேரத்தில் மெல்ல மெல்லப்  பார்வை மங்கி பின் முற்றிலுமாக பார்வை பறிபோனது.

விஷயம் சத்யநாதன்  காதை எட்டியது.  அவர் வீட்டில் யாருக்கும் தெரியாமல் சதீஷ் குடும்பத்தை மிரட்டி பிரச்சனையை மூடிமறைத்துவிட்டார்.

விக்கி பெங்களூர் சென்றிருந்த சமயத்தில் சதீஷ் நிலையைக்  கேட்டறிந்தான். சதீஷ் பெற்றோரிடம் காவல் துறையில் புகார் கொடுக்கலாம் என்றதற்கு நடுத்தர வர்க்கமான  அவர்கள் கைகூப்பி வேண்டாம் எனக்  கண்ணீர் மல்க மறுத்தனர்.

சத்யநாதனால் தாங்கள் மிரட்டப்பட்டதையும் கூற விக்கி வேறு வழியில்லாமல் அதைக்  கைவிட்டான்.  ஆனால் அருகிலிருந்த கடையின் சீசீ கேமரா மூலம் ருத்ராவை கண்டான். அப்பொழுது அவள் ருத்ரா எனத் தெரியவில்லை.  அவள் முகத்தை எங்கோ கண்டது போல நியாபகம் நிழலாடியது.

இவற்றை ருத்ராவிடம் சொல்லி முடிக்கையில் விக்கி மனம் கொழுந்துவிட்டு எரிந்தது. 

இந்த விஷயங்களைத் தெரிந்தவள் சிலையாக ஸ்தம்பித்தாள். இதற்கு என்ன சொல்வது தான் அநியாயமாய் இருவர் வாழ்க்கையை அழித்துவிட்டோம் என நினைக்க வெட்கத்தில்க்  கூனி குருகிப் போனாள்.

இதெல்லா தெரிஞ்சே ஏன் என்னைக்  கல்யாணம் பண்ணீங்க?” உள்ளம் உடைந்து கேட்க

சிம்பிள் உன்னை பழிவாங்கஎன உடனே பதில் வந்தது.

இதுவரை ஒரு சுடு சொல் அல்லது எந்தவொரு கஷ்டத்தையும் அவன் தந்ததில்லை என்பதை நினைத்து குழம்பியவள் பின் எப்படி?? ..  ஒரு வேளை இனி ???

அவள் மனவோட்டத்தைப்  புரிந்து கொண்டவன் விரக்தியுடன் சிரித்தவன் நந்தினியைத்  தவிர வேற ஒரு பொன்ன  நினைச்சிக்  கூடப்  பார்க்க முடியாது. அந்த சமயத்துல உன்னை பொண்ணு பாக்க வேண்டிய  சூழ்நிலை ஏற்பட்டது.

நான் உன்னை மறுத்து என் நந்தினி உடனான  காதலை சொன்னா அம்மா அப்பா ஏத்துப்பாங்க ஆனா உன் காதலி எங்கனு கேட்டா? என்ன பதில் சொல்வேன். அந்த சமயத்துல நந்தினிக்கு தனிமையும் தன்னம்பிக்கையும் தேவை. அதனால அவளை உடனே கம்பெல் பண்ணவும் முடியாது

பொண்ணுப்  பார்க்கப்  போகும் முன்ன ஒருவேளை உன் போட்டோவை பார்த்திருந்தா நான் சம்மதிச்சி இருக்க மாட்டேன். நான் உன்னை முதல்ல பார்க்க வந்த போது ..உன்கிட்ட  எனக்கு காதலி இருக்கா .. இந்த கல்யாணத்துல இஷ்டமில்லனு சொல்லத்தான் வந்தேன் .. ஆனா உன்னை முதல்முறைப் பார்த்ததும் ஒரு நொடி சுனாமி அலையா என்னுள் ஏதோ ஒரு எண்ணம்

உன்னை ரிசார்ட்ல பார்த்த நியாபகம் அதோட சீசீ கேமராலயும் உன் முகம்  .. நந்தினி சதீஷ் ரெண்டு பேரும் இன்னிக்கு படும் கஷ்டத்துக்கு நீதானே காரணம்னு தோனவே .. உடனே கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்.”

நீ என்னைக் கல்யாணம் பண்ண இந்த முப்பது நாள்ல ஒரு முறை கூட பந்தயம் வைக்கல. அதுக்கு காரணம் உன்னை நான் யோசிக்கவே விடலநான் என்ன நினைக்கிறேனோ அதைத்தான் உன் முளை சிந்திக்கணும் ஆசைப்பட்டேன். அதுதான் இதுவரை நடந்திருக்கு

வியப்பாகப் பார்த்தவளை வெற்றிப் புன்னகையுடன் மீண்டும் தொடர்ந்தான்.

இது ஒரு மைண்ட் கேம். நானும் நந்தினியும் சேர்ந்திருந்த போட்டோவை போட்டேகிராபர் மூலமா உன் வாட்சப்புக்கு அனுப்பியது நான்தான். நீ எப்பவும் நந்தினி பத்திநினைவுல குழம்பணும். அதுக்காகதான் முதலிரவுல தள்ளிப் போனேன்.” என்றுவிட்டு எளகாரமாக நகைத்தான்.

அதன் விளைவா நீ என்னைவிட்டு விலகிப் போன .. அடுத்த கட்டமா வேணுமனே படில இருந்து கீழ விழுந்தது. ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆக முடிவு செய்த்துக்கு காரணம் நமக்குல்ல இருந்த விலகல் தொடரணும். மனஅழுத்தம் மட்டும் தான் உண்மைஆனா இதுல அம்மா அப்பாவும் ரொம்ப பயந்துட்டாங்க. எனக்கும் வேற வழியல்ல

நீ நந்தினி மேல பொய் கேஸ் போட டிரை செய்த .. உன்னை அதுக்கு மேல நகரவிடாம செய்ய நந்தினிப் பற்றி உண்மையைச் சொன்னேன். அதனால உன்னால முன்னேற முடியமா போச்சு

மேலும் அவன் சொல்லச் சொல்ல தான் அவனின் கைப்பாவை ஆகிவிட்டோம் என உணர்ந்தவளுக்கு ஆத்திரம்ப் பொங்கியது.

ஒளிரும் …     

14 thoughts on “தீயாகிய தீபம் 17”

  1. Avatar

    Twist oooo twist…. Satharanama neraia per ipdi thaaa bet katturanga… Athunala mathavanga pathikka paduvanganu yosika kooda maatingiranga….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *