தீயாகிய தீபம் 18
விக்கி சாதுவான இளைஞன். அதிர்ந்து பேசாது யார் மனதையும் புண்படுத்தாத குணமுடையவன். சராசரி மனிதனாய் குடும்பத்திற்காக ஓடி ஓடி தேயும் நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதி. இப்படிதான் திருமணத்தின் போது விக்கி என்னும் மனிதனைப் பற்றி ருத்ரா மனதில் வரித்துக் கொண்டாள்.
ஆனால் இன்று விக்கியின் ஒவ்வொரு வார்த்தையும் ருத்ராவின் இதயத்தைக் குத்திக் கிழித்தது. இன்னமும் அவளால் நம்ப முடியவில்லை. ஆனால் இன்று அந்த பிம்பம் சுக்கு நூறாய் தகர்ந்தது.
ருத்ரா எப்பொழுதும் தன்னை யாரும் குற்றம் சொல்லிக் கேட்டதில்லை. என்றேனும் குடும்பத்தார் அறிவுரை கூறினாலும் அதைக் காதில் வாங்கிய சரித்திரம் இல்லை. தன்னிச்சையாய் செயல்ப்படுபவள்.
தன் சொல்லிலும் செயலிலும் தவறில்லை என்னும் போக்கில் இருந்தவளுக்கு விக்கியின் செயல்களை அதிர்ச்சியூட்டுவதாய் இருந்தன.
அதிலும் விக்கியின் தற்பொழுதைய பிம்பத்துடன் முன்னர் அவள் மனதில் வரித்து வைத்த விக்கியின் பிம்பத்தில் பொருத்திப் பார்ப்பது அத்தனை எளிதாக இருக்கவில்லை.
ஆனால் அவனின் புதிய அவதாரம் வெளி வரக் காரணமே தான் தான் என்னும் கசப்பான உண்மையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருந்தது.
நந்தினி மேலான அவனின் தூய்மையான காதலைக் காண்கையில் சற்று பொறாமையாக இருந்தது.
“என்ன செய்ய ருத்ரா இனி காலம் முழுக்க நீ இப்படிதான் இருக்கணும். உனக்கு வேற வழியும் இல்லை ” என்றபடி விக்கி அருகிலிருந்த தண்ணீர் பாட்டில் எடுத்து மடக் மடக்கெனத் தண்ணீரை குடித்தான்.
“உனக்குத் தண்ணீர் வேண்டுமா?” எனச் செய்கையில் கேட்க வேண்டாமென்றவள் உடை மாற்றி வெளியே சென்றாள்.
“எங்கு செல்கிறாய்?” என அவனும் கேட்கவில்லை. அவளும் சொல்லவில்லை. கிளம்பும்போது எங்கு செல்கிறாய் எனக் கேட்டால் போகும் வேலை விளங்காது என தனக்குள் வியாகானத்தைக் கற்பித்து சும்மா இருந்து விட்டான்.
அவள் செல்லுமிடம் யூகித்திருந்தான். இதையும் பார்ட் ஆப் தி கேம் என்றுவிட்டால் அவள் வேறு விதமாக சிந்திக்கக் கூடும் என்பதால் சும்மாயிருந்தான்.
மிகப் பெரிய உரையை நிகழ்த்தியதால் அவனுக்குப் பசிக்கவே கீழே வந்து சாப்பிட்டான்.
“ருத்ரா எங்க போறா?” கோதாவரி அவனுக்கு உணவுப் பரிமாறியபடி கேட்டார்.
“பக்கத்துல தான் மா போயிருக்கா வந்திடுவா” என நன்றாகவே சாப்பிட்டான்.
“நீ ஏன்டா கீழ வந்த? கால் வலிக்கும்.. நானே மாடிக்குக் கொண்டு வந்துக் கொடுப்பேன்ல.” விசு ஆதங்கமாய் வினவினார்.
“இல்லபா டாக்டர் ஒரே இடத்துல இருக்காம நடக்கச் சொன்னார்.. இப்ப வலி கொஞ்சம் பரவாயில்ல” என்றான். தன்னுடன் அப்பா அம்மா இருவரையும் கட்டாயப்படுத்திச் சாப்பிட வைத்தான்.
ஏனெனில் அடுத்து ஒரு பூகம்பம் வெடிக்கப் போகிறது. அதன்பின் கவலையில் இருவரும் உணவு அருந்த மாட்டார்கள். அதனால் ருத்ரா வரும் முன் சாப்பிட வைத்தான்.
கோதாவரி ருத்ராவிற்காகச் சாப்பாட்டை எடுத்து வைத்தார். மூவரும் தொலைக்காட்சியில் லயித்திருக்க இரவு ஒன்பது மணியளவில் ருத்ரா வந்தாள்.
“வாம்மா சாப்பிடறியா?” எனக் கோதாவரி எழ முயல
மற்ற யாரையும் கண்டுக் கொள்ளாமல் “நான் உன்னை டைவர்ஸ் பண்றேன் விக்கி” என்றாள் கடுகடுவென்ற முகத்துடன். “டைவர்ஸ் நோடீஸ்ல ரப் காப்பி (rough copy)” என நீட்டினாள்.
அவன் பெற்றோர் அதிர்ந்தனர் “என்னமா சொல்ற?” விக்கி என்னடா இதெல்லாம்?” எனக் கேள்வி கேட்க
விக்கி அதை நிதானமாக வாங்கிப் படித்தான். “எங்கள் இருவருக்கும் மனம் ஒத்துப் போகவில்லை” என்னும் காரணம்தான் அதில் இருந்தது.
”சரி” என்றபடி அவளிடம் காகிதத்தை நீட்டினான்.
“இங்க என்னடா நடக்குது?” என மிரட்டலாக விசு கேட்கவும். விக்கி ஒன்றுவிடாமல் அனைத்தையும் கூறினான். தான் செய்தது உட்பட.
ருத்ராவை பற்றிய செய்திகள் அதிர வைத்தன. நந்தினி சதீஷ் என்னும் நபர்களின் வாழ்வில் நடந்த விபரீதங்கள் சங்கடப்படுத்தின.
ஆனாலும் அதற்காக இவர்களின் விவாகரத்தைப் பெற்றோரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
“நடந்தது நடந்து போச்சு .. அவங்களுக்காக நீங்க ஏன் பிரியனும் .. கல்யாணத்துக்கு முன்னாடியே இதை நீ சொல்லி இருக்கணும் விக்கி. இப்ப இப்படி செய்யறது சரியில்லை. ருத்ரா வாழ்க்கைய நினைச்சிப் பார்த்தியா?”
“ப்ளீஸ் அப்பா என்னால ருத்ராவோட வாழ முடியாது” முகத்தைச் சுளித்து பதிலளித்தான். ருத்ரா மேலிருந்த கசப்பு அப்பட்டமாய்த் தெரிந்தது.
“அவங்க அம்மா அப்பாக்கு என்ன பதில்டா சொல்லப் போற?” விசு கேட்டதும்
விக்கி அவள் அப்பாக்கு போன் செய்து முக்கியமாகப் பேச வேண்டும் என அழைத்தான்.
அடுத்த அரைமணி நேரத்திரல் ருத்ராவின் அப்பாவும் அண்ணனும் வந்தனர். ருத்ரா தாயாருக்கு அன்று மருத்துவமனையில் டியூட்டி இருந்தது.
விக்கி மீண்டும் அவர்களுக்கு அனைத்தையும் சொன்னான். அவர்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தன் மகளின் விளையாட்டுப் புத்தியால் இப்படி ஆகும் எனச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
ருத்ரா யாரோ நந்தினி என்னும் பெண்ணுக்காக தன் குடும்பம் தலைகுனிய வேண்டிய நிலையை எண்ணி வருந்தினாள்.
வகை வகையான மன்னிப்பு சமரசம் உடன்படிக்கை உபதேசம் சமாதானம் என இரண்டு பக்கத்திலிருந்தும் வந்தன.
விக்கி ருத்ரா இருவரும் எதையும் ஏற்கவில்லை.
ருத்ரா மனம் கணக்க “ஒரு குற்றவாளியை மாதிரி என்னால இங்க வாழ முடியாது. நான் விளையாட்டாதான் செய்தேன் .. ஆனா இப்படி ஆகும்னு சத்தியமா எதிர்பார்க்கலை”
“இன்னிக்கு காலைல நந்தினியைப் பார்க்க போனேன். அவகிட்ட மன்னிப்பு கேட்டு விக்கி நந்தினியை சேர்த்து வைக்கறத பத்தி பேசலாம்னு ஆனா நந்தினிய என்னால பார்க்க முடியலை .”
“அப்பா நான் மனசளவுல விக்கியை விட்டு பிரிஞ்சி ரொம்ப நாள் ஆச்சு. இனி நீங்க யார் என்ன சொன்னாலும் எதுவும் நடக்காது” என்று உறுதியான தொனியில் கூறிவிட்டாள்.
விக்கி எந்த சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தான். அவன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தான். ருத்ரா தன் பெற்றோருடன் சென்றுவிட்டாள்.
விக்கி மனம் கனத்தது. ருத்ராவை நினைக்கவும் பாவமாகத்தான் இருந்தது. தன்னால் ஒரு பெண் வாழ்க்கை இந்த நிலைக்கு வந்ததில் வருத்தமாக இருந்தது. இருப்பினும் நந்தினி நிலைமை காட்டிலும் ருத்ரா நிலைமை பரவாயில்லை என மனதைத் தேற்றிக் கொண்டான். அடுத்து வந்த நாட்களில் ருத்ராவின் ஆடைகள் மற்றும் அவளின் பொருட்களை அவள் வீட்டில் சேர்த்தான்.
வீடே களையிழந்து இருந்தது. ருத்ரா பாராமுகமாய் நடந்து கொண்டாள். விக்கி எதையும் கண்டு கொள்ளவில்லை.
அப்பொழுது ருத்ராவின் தாயார் விக்கியிடம் “தம்பி இஷ்டமில்லாம எத்தனையோ கல்யாணம் நடக்குது. காலப் போக்குல எல்லாம் சரியாகறது இல்லயா? இந்த விவாகத்து முடிவைக் கொஞ்சம் தள்ளிப் போடலாமே” எனப் பக்குவமாக பேசிப் பார்த்தார்.
விக்கி பதில் சொல்லும் முன் “அம்மா உள்ள போங்க” என அதட்டலாக ருத்ரா இருவர் பேச்சையும் கத்தரித்தாள். விக்கித் தான் வந்த வேலையைச் செய்து முடித்துக் கிளம்பினான்.
தன் மகள் வாழ்வை நினைத்து மிகுந்த கவலை கொண்டனர் ருத்ரா பெற்றோர். அவள் வேறு ஒரு முடிவில் இருந்தாள் என எவரும் அறியவில்லை.
ருத்ரா ஒன்றிரண்டு வருடங்களில் இவற்றை மறந்து வேறு திருமணம் செய்துக் கொள்வாள் என நம்பினான். இந்த நினைவே விக்கிக்கு ஆறுதல் அளித்தது.
அடுத்த பதினைந்தாவது நாள் விக்கிக்கு முறையாக வக்கீல் நோட்டீஸ் வந்தது.
விவாகரத்திற்கான ஏற்பாடு சட்டப்படி நடக்கத் துவங்கியது.
நந்தினி தன் தாயைக் காணச் சென்னை வந்திருந்தாள். “உனக்கு நல்ல வரன் வந்திருக்கு நந்தினி .. இன்னும் எத்தனை நாளுக்கு இப்படியே இருப்ப?” என அங்கலாய்த்தார்.
“அம்மா ப்ளீஸ் கொஞ்ச நாள் ஆகட்டும்” என அந்தப் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.
ஜான் “ நாளைக்கு சன்டே தானே நந்தினி அக்காவை எங்காவது மால் பீச்சுன்னு கூடிட்டு போயேன். அவங்களுக்கும் ரிலாக்சா இருக்கும்ல .. ” என ஜென்னியிடம் சொல்ல
“அவ அப்படியெல்லா உடனே வர மாட்டா டா” ஜென்னி சலிப்பாய் பதிலுரைக்க
“சொல்லுற மாதிரி சொல்லணும்.” என ஜென்னி போனில் நந்தினிக்கு கால் செய்தான் “அக்கா நான் எக்சாம்ல பாஸ் செய்ததுக்காக நாளைக்கு மால்ல டிரீட் கொடுக்கிறேன். நீங்கக் கண்டிப்பா வரணும்” என்றான்
“கன்கிராட்ஸ் ஜான்” சந்தோஷ தொனியில் நந்தினி பேசவும்
“நாளைக்கு மதியம் ரெண்டு மணிக்கு நாங்களே வந்து பிக்அப் செய்வோம் ரெடியா இருங்க” என்றவன் அடுத்த கேள்விக்குப் பயந்து உடனே போனை கட் செய்துவிட்டான்.
“எப்புடி?” என தன் அக்காவைக் கெத்தாகக் காண
“என்ன எக்சாம்லடா பாஸ் பண்ண?”
“ஹிஹிஹி ” என அசட்டுச் சிரிப்பு சிரித்தான். அப்போது நந்தினியிடமிருந்து போன் வர “ சர்பிரைஸ்னு சொல்லு .. உண்மைய உளறிடாதா” என ஆர்டர் போட்டான்.
அவன் வார்த்தைகளைக் கேட்டு கடுப்பானவள் “எனக்கு தேவைதான்” என முணுமுணுத்தபடி தம்பி சொன்னதை அப்படியே சொன்னாள்.
ஆனாலும் நந்தினியை வெளியே அழைத்துச் செல்வதில் அவளுக்கும் மகிழ்ச்சிதான்.
ஜான் “சக்சஸ்” என வாட்சப்பில் விக்கிக்குச் செய்தி அனுப்பினான். அனைத்தும் விக்கியின் வேலைதான்.
மறுநாள் மாலில் ஜென்னி, ஜான், நந்தினி, கலா என நால்வரும் சுற்றித் திரிந்தனர். ஜானின் கலகலப்பான பேச்சில் நந்தினி தன் கவலைகளைச் சற்றே மறந்திருந்தாள்.
அவர்கள் உள்ளே நுழைந்ததிலிருந்து விக்கி அவர்களைக் கண்காணித்தபடி இருந்தான். தவறியும் அவர்கள் கண்ணில் படாமல் எச்சரிக்கையுடன் இருந்தான். நந்தினியின் சிரிப்பில் தன்னையே தொலைத்தான்.
இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு தற்செயலாக அவர்களைப் பார்ப்பது போல முன்னே சென்றான்.
நந்தினி தவித்துப் போனாள்.
“ஹாய் ஜென்னி .. உன் தியாகி பிரெண்டுகிட்ட சொல்லு . விக்கி விவாகரத்து செய்துட்டான். அவன் மொத்தமா அமெரிக்கா போயிடுவான். இனி திரும்ப வர மாட்டான்னு. அவள சென்னைக்கே வந்திடச் சொல்லு. எங்கேயோ தனியா இருக்க வேண்டாம். என் முகத்துல முழிக்க கூடாதுனு தானே போனா .. இங்க நானே இருக்க மாட்டேன். இனி என் வாழ்க்கை இந்த மண்ணுல இல்ல”
“அதோட என் வாழ்க்கைல நந்தினியைத் தவிர வேற எந்தவொரு பொண்ணும் இல்ல.”
அருகில் நந்தினி என்றொருவள் இல்லாததுப் போலவே அவன் பேசினான்.
இவற்றைச் சொல்லுகையில் அவன் முகத்தில் அப்பட்டமாய் வலியும் ஏமாற்றமும் தெரிந்தது. ஜென்னியிடம் எந்த பதிலையும் எதிர்பார்க்காமல் திரும்பிச் சென்றுவிட்டான்.
நந்தினி உறைந்து போனாள். ஆனால் இதை இப்படியே விட அவளுக்கு மனமில்லை.
“விக்கி .. விக்கி” என அழைத்தபடி பின்னே ஓடினாள்.
அவன் அவள் அழைப்பை காதில் வாங்காதவன் போல மாலுக்கு வெளியே வந்தான். பார்கிங் ஏரியாவுக்கு சென்று தன் பைக்கை உயிர்ப்பித்துக் கிளம்ப முயல அவன் முன்னே சென்று நந்தினி நின்றாள்.
இருவர் பார்வையும் உக்கிரமாக ஒன்றோடு ஒன்று உரசின.
ஒளிரும் …
Nice epi👍👍 Eagerly waiting for next update👍
Thank you so much Vino sis
ருத்ரா பண்ணது சின்ன வேலையா அவளுக்கு தேவை தண்டனை இன்னும் அவளுக்கு செய்த தவறு புரியல … அவளுக்கு இன்னும் மிக பெரிய தண்டனை கிடைக்கனும்
Aamam unmai sis. Thank you so much Kothai sis.
good. Viki and Nandhini should join in life
Nandini kaiyil mudivu ullathu.
Thank you so much nusrath sis.
Interesting episode.
Aduthu Vikki enna seyya poran?
Eagerly waiting for next episode
Rudra pana thappuku intha punishment venum tha rendu per life ippadi nikuthe. Ithula avan pali vangitanu divorce paper kodukura vera ena panuvan eppadium vazha porathu illa athuku divorce best. Athula ippadi nandhini pathathu crt vicky aduthu ipo nandhini ena solla pora therilaye
Next episode il nandini mudivu teriya varum.
Thank you so much Kalidevi sis.
Next episodeil teriyum.
Thank you so much Rathi sis.
Superb going
Rudra life la panna orey nalla vela Divorce.
Nandini Vikki seranum.
Hahaha 😂
Thank you so much Abirami sis.
Spr going…intresting waiting for nxt epi
Thank you so much Priya sis.