தீயாகிய தீபம் 19
விக்கியின் முகம் கோபத்தில் கனன்று கொண்டிருந்தது.
நந்தினி “நீ செய்றது எதுவும் கொஞ்சமும் சரியில்ல…” விக்கி மேல் தனகிருக்கும் காதலை வெகுவாக மறைத்து மனக்குறையுடன் வார்த்தைகளை உதிர்த்தாள்.
“அதைக் கேட்க உனக்கென்ன உரிமை இருக்கு? நீ என்ன என் காதலியா?” என விக்கி உக்கிரமாக கேள்வி கேட்டான்.
அவனின் ஒவ்வொரு சொல்லும் மனதைப் பிசைந்தாலும் ”உன் லைப் நல்லா இருக்கணும் தான் …”
அவள் முடிக்கும் முன் “உன்னைத் தியாகம் செய்யச் சொல்லி இங்க யாரும் கேட்கலை .. ஸ்டாப் இட் நந்தினி” அவள் மேல் இத்தனை நாட்களாக மனதில் அடக்கியிருந்த கோபம் அவனை அப்படிப் பேச வைத்தது.
“நீ என்னை புரிஞ்சிக்கவே இல்ல” எனக் கண்ணீருடன் இரண்டடி பின் வைத்து நகர முயன்றாள்.
“இதை நான் சொல்லணும் … உனக்கு என் மேல நம்பிக்கை இல்லை .. உனக்கு நடந்த விபத்தை எனக்குத் தெரியவரும் போது நான் உன்னைவிட்டு விளகிடுவேன்னு நீ நினைச்ச பாரு .. அதோட விளைவுதான் இத்தனையும்” எனக் கழுத்து நரம்பு புடைக்க அவன் சொல்ல …
“இல்லை” என அழுதபடி தலையாட்டினாள்.
“என் காதல் உன் உடம்போட மட்டும் தான் நீ நினைச்சிருக்க .. உன்னோட ஆன்மாவை .. உன் அழகான மனசை .. எவ்வளவு ஆழமா நான் காதலிச்சேனு உனக்கு புரியல … சரி விடு .. இனி பேசி ஒன்னும் ஆகப் போவதில்ல” எனக் கிளம்ப பைக்கை பின்னே நகர்த்தினான்.
“விக்கி ருத்ராவோட சேர்ந்து வாழ்க்கை நடத்து . சந்தோஷமா இருங்க .. இந்த விவாகரத்து வேண்டாம் .. ப்ளீஸ்” அவனின் நலன் கருதிக் கெஞ்சினாள். அப்படியே அவனைவிட்டு விட மனம் வரவில்லை.
“நான் விவாகரத்துக்கு அப்ளை செய்யல .. அவதான் செய்தா”
“ருத்ரா அப்படிச் செய்யக் காரணம் நீயாதான் இருக்கணும்” சந்தேகமாக வினவினாள்.
“அப்படி நீ முடிவு செய்தா அதுக்கு நான் பொறுப்பில்ல” தெனாவட்டாக பதிலுரைத்தான்.
“நான் ருத்ராகிட்ட பேசவா?”
அவளை ஆழமாக ஒருமுறைப் பார்த்தவன் “என் இதயத்துல எப்பவுமே நந்தினிக்கு மட்டும்தான் இடம் … பார் எவர்” என்றதும்
அவளால் எதுவுமே பேச முடியவில்லை. அவளின் மனபாரம் கண்ணீராகக் கரைந்தது.
நந்தினியைப் பார்க்க மனம் இளகியது. இன்னமும் அவளைச் சோதிக்க வேண்டாம் என எண்ணினான். தான் கடுமையாக நடந்து கொண்டதை எண்ணி வருந்தியவனாக
அன்று கேட்ட அதே கேள்வியை மீண்டும் இன்று விக்கி கேட்டான் “வில் யூ மேரி மீ?”அவன் கண்களில் காதலுடன் ஏக்கமும் தெரிந்தது.
அவளால் மறுக்க முடியவில்லை ஆனாலும் ஒரு கொக்கி வைத்தாள் “உன் அம்மா அப்பாக்கு என்னை பற்றிய எல்லா உண்மையும் தெரியணும். கல்யாணத்துக்கு அவர்களோட முழு சம்மதமும் வேணும்” என்றாள்.
“அப்பாடா வேதாளம் முருங்க மரத்திலிருந்து இறங்கிடுச்சி” என அவள் காதுபட முணுமுணுத்தான். அவள் முறைக்க அதைக் கண்டு கொள்ளவில்லை.
மீண்டும் தன் பைக்கை முன்பு பார்க் செய்த இடத்தில் நிறுத்தி இறங்கினான். அவளை இங்கே விட்டு கிளம்ப மனம் வரவில்லை. அவள் அருகில் வந்து “என் அம்மா அப்பாக்கு எல்லா விஷயமும் தெரியும்” என்றான் கனிவான குரலில்.
அவன் சொன்னதைக் கேட்டவள் கண்ணிலிருந்து வைர துளிகள் உருண்டது. அவள் கண்ணீரைத் துடைத்து “இனிமே நீ அழவே கூடாது நந்தினி” எனச் சொல்லி அணைக்க நினைத்த தன் மனதை அடக்கினான். இன்னும் அவள் முழுமனதோடு சம்மதிக்கவில்லை எனப் புரியாதவனா என்ன?
மழை நின்றாலும் தூரல் விடாத குறையாக அவளுள் இன்னமும் குழப்பம் விட்டபாடில்லை.
விக்கி “அழுதது போதும் தெளிவான முடிவு எடு நந்தினி ” எனக் கூறவும் நந்தினி கண்ணைத் துடைத்துக் கொண்டு சரியெனத் தலையசைத்தாள்.
சற்றே தொலைவில் கலக்கத்துடன் ஜென்னி, ஜான் மற்றும் கலா இவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். காதலர்கள் நண்பர்கள் அருகே வந்தனர்.
ஜென்னி காதலர்களை கவனித்தாலும் எதுவும் யூகிக்க முடியவில்லை. அனைவரும் பேசியபடி நடந்தனர்.
கலா “ஐஸ்கிரீம் சாப்பிடலாமா?” என்றாள். ஏகமனதாக அனைவரும் ஏற்றனர்.
மாலில் இருந்த ஐஸ்கிரீம் பார்லருக்குச் சென்று அனைவரும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஆர்டர் செய்து சாப்பிட்டனர்.
“எனக்கு ஒரு சந்தேகம்?” என கலா சிந்தனையுடன்த் தொடங்கினாள் .
“உனக்கு எப்படி நந்தினிக்கு நடந்ததெல்லாம் தெரியும்? நானும் ஜென்னியும் சொல்லல … நந்தினி இந்த விஷயத்தைப் பத்தி மூச்சே விடல .. அப்புறம் எப்படி விக்கி?” எனக் கேட்டு விக்கியை குறுகுறுவெனப் பார்த்தாள்.
ஜானுக்கு பகீரென்றது “இவ வேற அடுத்த பிரச்சனை கிளப்புகிறாளே” எனக் கமுக்கமாய் ஐஸ்கிரீமை வாயில் சிமண்டைப் போல அப்பி அடைத்துக் கொண்டான்.
நந்தினி மற்றும் ஜென்னி “அதானே???” என விக்கியை பார்க்க ..
“டோண்ட் அன்டர் எஸ்டிமேட் த பவர் ஆப் விக்கி … என் ஏழாம் அறிவு எல்லாத்தையும் தெரியப்படுத்திடும்” என எதையோ உளறிச் சமாளித்தான்.
“நாங்களே கண்டுபிடிப்போம்” என ஜென்னி அவனைச் சந்தேகமாகப் பார்த்தாள். மூன்று பெண்களுக்கும் ஜான் மேல் சிறிதும் சந்தேகம் வரவில்லை.
அந்த சமயத்தில் விக்கி நண்பர்கள் கதிர் மற்றும் பாலா வந்தனர். அனைவரும் சேர்ந்து உண்பதை கண்டதும் மகிழ்ச்சியுடன் கதிர் “அப்பாடா உங்க பஞ்சாயத்து முடிஞ்சதா?” என விக்கி மற்றும் நந்தினியிடம் கேட்டான்.
அவனேத் தொடர்ந்து “அப்ப நாங்க லவ் பண்ணலாம் இல்லையா?” எனக் கேட்ட நொடி அனைவரும் அவனைக் கூர்ந்து நோக்க .. தான் உளறிவிட்டதை அப்போதுதான் உணர்ந்து முழித்தான்.
“ நீ எப்படி இங்க? சரி பொண்ணு யாருடா?” விக்கி ஆவலாகக் கேட்டான்.
“அது வந்து .. நானே இன்னும் என் காதலை அவகிட்ட சொல்லலை .. பொண்ணு பேரு ஜென்னி ” என நெளிந்தபடி சொல்லிவிட்டான். என்றேனும் சொல்லித்தானே ஆக வேண்டும்.
ஜென்னி வெட்கத்துடன் “இத்தனை பேர் முன்பா காதலைச் சொல்வது?” எனத் தலையில் அடித்துக் கொண்டாள்.
ஜான் தன் அக்காவைப் பார்க்க .. அசடு வழிந்து தானும் அவனைக் காதலிப்பதாக ஜாடை செய்தாள். நண்பர்கள் மொத்தமும் கும்மாளம் கொண்டாட்டமாக கதிர் மற்றும் ஜென்னியை கேலி செய்தனர்.
பாலா எதிர்பார்ப்புடன் கலாவை நோக்க “ ஸாரி பிரதர் நான் ஆல்ரெடி கமிடட்” என அவளிடம்ப் பதில் வரவும்
பாலா விளையாட்டாகச் சோகமாக இருப்பதைப் போலப் பாவனை செய்ய அவனை மற்றவர் கிண்டல் செய்தனர்.
வெகு நேரம் பேசிவிட்டு அவரவர் வீட்டிற்குக் கிளம்பினர்.
ஜென்னி நந்தினியிடம் விக்கி விவாகரத்துக்கான உண்மையான காரணத்தைச் சொன்னாள். கொசுறு தகவலாய் அதைச் சொன்னது கதிர் என்றாள்.
விக்கி தனக்காகச் செய்தவற்றை எண்ணியவளுக்கு மனதில் விக்கி பிரம்மாண்டமாக உயர்ந்து நின்றான்.
ஜென்னி கதிருடன் சிறிது நேரம் இருப்பதாக தம்பியிடம் கேட்க அவனோ முடியாது என்றுவிட்டான். வேறுவழியின்றி தம்பியுடன்க் கிளம்பினாள்.
“ஜான், சென்டிமீட்டர், மில்லிமீட்டர்னு எனக்கு வில்லன்” எனக்கு வில்லன் வாய்க்குது எனக் கதிர் அலுத்துக் கொண்டான். ஜென்னி சொல்லித்தான் இன்று அங்கு வந்தான். இப்போது புலம்புவதைத் தவிர அவனால் எதுவும் செய்ய முடியவில்லை.
விக்கி நந்தினியை அவள் வீட்டில் தானே அழைத்துச் சென்று விட்டான்.
இரவு நந்தினி மாமா மீண்டும் அவளுக்கு வந்திருக்கும் வரன்களைப் பற்றி பேசினார். இது அம்மாவின் வேலை என நந்தினிக்குத் தெரியும். தன்னால் முடியவில்லை என்றதும் தம்பியை ஏவிவிட்டார் போலும் என நொடிந்து கொண்டாள்.
“நான் ஒருத்தரை விரும்புறேன்” என மெதுவாக நந்தினி தொடங்கினாள்.
“என்னடி சொல்ற?” அம்மாப் பதறினார்.
“அக்கா இரு .. நல்ல மாப்பிள்ளையா இருந்தா முடிச்சிடலாமே .. நீ சொல்லு நந்தினி” என மாமா அவளைப் பேச வைத்தார்.
“பேரு விக்கி, படிப்பு பி.ஈ. .. முன்ன வேலை செஞ்ச ஆபீஸ்ல மாடிலதான் அவரோட ஆபீஸ்” எனத் தயங்கித் தயங்கிச் சொன்னாள்.
“சரி அவங்க வீட்டு அட்ரஸ் போன் நம்பர் குடு .. நான் பேசிப் பார்க்கறேன்” என மாமா சொன்னதும் அவள் அவர் கேட்ட முகவரி தொலைப்பேசி எண் என அனைத்தையும் கொடுத்தாள்.
“எல்லா சரியா வந்தா பத்து நாள்ல நிச்சயமும் .. மூணு மாசத்துல கல்யாணம் முடிச்சிடலாம்” என்றார் மாமா.
“அது கல்யாணம் ஒரு வருஷம் ஆகட்டும் மாமா” என மிடறு விழுங்கியவள் போலத் தயங்கினாள்.
ஏன் என எதிர்பார்த்த கேள்வி வர
“அவருக்கு டைவர்ஸ் ஆக ஒரு வருஷம் ஆகும்”
“ எது டைவர்சா? அவனைப் பத்தி எல்லாம் சொல்லு” குரலில் சந்தேகத்துடன் சினம்.
கண்களில் அச்சம் துளிர விக்கியை பற்றிக் கூறினாள். தனக்கு ஏற்பட்ட கொடுமையைக் கூறவில்லை.
திருமணம் முடிந்து ஒரு மாதத்தில் விவாகரத்து பெற்றவன். முன்பே நந்தினியைக் காதலித்து இருக்கிறான் இருப்பினும் வேறொரு பெண்ணை திருமணம் முடித்திருக்கிறான் போன்ற விஷயங்கள் வீட்டில் அனைவருக்கும் அதிருப்தியை அளித்தது. பெற்றோராய் அவர்கள் கேள்விகள் நியாயமாகவே இருந்தன.
அவன் இத்தனையும் செய்யத் தான் தானே காரணம் என்று அவளால் சொல்ல முடியவில்லை.
“பாருமா அந்த பையன் சரியில்ல .. நாளைக்கு உன்னையும் ஒரு மாசத்துல கழட்டிவிட மாட்டான்னு என்ன நிச்சயம்? .. இவனையெல்லாம் நம்பக் கூடாது. போலீஸ்ல பிடிச்சிக் கொடுக்கணும்” என மாமா அறிவுரையுடன் விக்கியை வசவுப் பாடினார்.
விக்கியை தவறாகப் பேசுவதை அவளால் சகிக்க முடியவில்லை. தனக்காக அவன் செய்தவற்றை முழுமையாக அறிந்தால் மட்டுமே அவர்கள் திருமணத்திற்குச் சம்மதிப்பார்கள் என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டாள்.
நந்தினிக்கு தற்பொழுது வேறு வழியில்லை. தன் அன்னைக்கு எந்த பாதிப்பும் வரக் கூடாது என அச்சத்துடன் ரிசார்ட்டில் நடந்தது முதல் அனைத்தையும் கூறிவிட்டாள்.
தன் செல்ல மகள் பட்ட கஷ்டத்தை நினைக்க நினைக்க இதயத்தை யாரோ அழுத்துவதைப் போல தோன்ற நந்தினி அம்மா இதயத்தைப் பிடித்தபடி அப்படியே மயங்கிச் சரிந்தார்.
ஒளிரும் …
நைஸ்… நந்தினி விக்கி சேர்த்து வாழனும் சூப்பர் ஜோடி .. இந்த ருத்ராவின் குணங்களால் ஓரு பெண்ணின் வாழ்க்கை போய் விட்டது ஓரு நல்லவனின் கண்கள் பறிக்கப்படு அவனின் வாழ்க்கையை கேள்விக்குறியாகி போச்சு. .. அதுனால அவளுக்கு இன்னும் தண்டனை கிடைக்கனும் பணத்திமிர் தான் இதற்கு காரணம்
Thank you so much Kothai sis.
Intresting spr going waiting for nxt epi👌👌👌
Thank you so much Priya sis.
Nice epi
Thank you so much Vino sis.
Very very nice 👍 episode
Eagerly waiting for next episode
Thank you so much Rathi sis.
entha ammavukum ponnoda intha nilamai kastam kodukum thane aana vicky manasara kalayanam panla rudra ku puriya vaika tha pani irukan ipo tha avale divorce kodukurale vicky nandhini pathi therinjitu tha mrg panran antha love venum nandhini purinjiko sikram nalla mudiva sollu vicky
Thank you so much Kalidevi sis.
Nandhini Amma recover aaganum …
Hope 🙏
Good going
Thank you so much Abirami sis.