தீயாகிய தீபம் 20
விக்கி தனக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரியப் பொக்கிஷம் என எண்ணினாள் நந்தினி. அவனை தன் குடும்பத்தார் விமர்சிப்பதைச் சற்றும் பொறுக்க முடியவில்லை. அதனால்தான் எந்த ரகசியத்தை மறைக்க வேண்டும் என நினைத்தாளோ அவை அனைத்தையும் சொல்லி முடித்தாள்.
பலஹீனமான இதயத்தைக் கொண்ட நந்தினியின் தாயாரால் தன் மகளுக்கு நேர்ந்த கொடுமையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எந்த தாயால் தான் தன் மகளின் இந்த நிலையை ஏற்க முடியும்?
நந்தினி தாயாரை உடனே மருத்துவமனையில் சேர்த்தனர். அதிர்ச்சியினால் ஏற்பட்ட மயக்கம் என மருத்துவர்கள் பரிசோதித்த பின் கூறினர். அது சற்று நிம்மதியை அளித்தது. இருப்பினும் ஒரு நாள் மட்டும் மருத்துவ கண்காணிப்பில் அவர் இருக்க வேண்டும் என மருத்துவர் அறிவுரைத்தார்.
நந்தினி மூலம் தகவல் அறிந்து விக்கி தன் பெற்றோருடன் மருத்துவமனைக்கு வந்தான். நந்தினியை தன் பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைத்தான். அவர்கள் பேசட்டும் என விக்கி நகர்ந்து நந்தினியின் மாமாவிடம் கோசலையின் உடல் நிலை பற்றி விசாரித்தான்.
நந்தினி தயக்கத்துடன் அவர்களை எதிர் கொண்டாள்.
“ உன் அம்மாக்கு சீக்கிரமா சரியாகிடும் கவலைப்படாத நந்தினி” என கோதாவரி பல நாள் பழகியவர் போல ஆறுதலாக அவள் கையைப் பற்றினார்.
“எங்க வீட்டுக்கு மருமகளா வரப் போற பொண்ணு தைரியமா இருக்க வேண்டாமா? நாங்க உன் கூடவே இருக்கோம் பயப்படாத மா” என விசு சூசகமாக அவர்கள் நிலைப்பாட்டைக் கூறிவிட்டார்.
ஒரு நொடி மகிழ்ந்தாலும் தனக்கு நேர்ந்தவை பற்றி அவர்களுக்கு தெரியுமா? என்ற ஐயம் எழுவே …
“எனக்கு .. என்னை ரிசார்ட்ல” எனத் தட்டுத்தடுமாறி அந்த மோசமான நிகழ்வை கூற முயன்றாள்.
அவள் நிலையுணர்து உடனே கோதாவரி “நந்தினி ரிசார்ட்ல நடந்த விபத்து பத்தி விக்கி எல்லாம் சொல்லிட்டான். உன் மேல எந்த தப்பும் இல்ல .. ருத்ரா இப்படி செய்வானு சத்தியமா நாங்க எதிர்பார்க்கல” எனச் சங்கடத்துடன் கூறினார்.
“முடிந்ததை பேச வேண்டாம். விக்கிக்கு டைவர்ஸ் கிடைக்க ஒரு வருஷம் ஆகும். டைவர்ஸ் கிடைச்சதும் உடனே உங்க கல்யாணம் தான்” விசு உறுதியாகக் கூறினார்.
கோதாவரி நந்தினியை பாசமாக அணைத்துக் கொண்டார். இந்த சின்ன வயதில் எத்தனை துன்பங்களைச் சுமக்கிறாள் இவள் என நினைக்கவே கோதாவரி மனம் கனத்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நந்தினி நிம்மதியாக உணர்ந்தாள்.
விசு மற்றும் கோதாவரி தங்கள் மகன் வாழ்க்கையில் நடந்த திருப்பங்களை மனதார ஏற்றனர். அவன் மகிழ்ச்சியே பிரதானம் என முடிவெடுத்தனர். ஆனால் உறவுகளின் முணுமுணுப்பு இல்லாமல் இல்லை.
அடுத்து விசு விக்கி இருக்கும் பக்கமாகச் சென்றார்.
கோதாவரி “அம்மாவை இப்ப பார்க்கலாமா?” கேட்கவும்
“ம்ம் வாங்க” என அறைக்கு அழைத்து சென்றாள்.
அம்மா ஐ.சி.யுவிலிருந்து அறைக்கு மாற்றப்பட்டிருந்தார். முகத்தில் ஆக்சிஜன் மாஸ்க், கையில் டிரிப்ஸ், மானிட்டரின் கீ கீ சப்தத்துடன் கண் மூடிப் படுத்திருந்தார். உதடுதான் மௌனமாக இருந்தது. உள்ளத்தில் ஆழிப் பேரலையாய் தன் மகளை எண்ணி வருந்திக் கொண்டிருந்தார்.
“அம்மா” மெல்ல நந்தினி அழைக்க .. கண் விழித்தார். கோதாவரியை அறிமுகம் செய்தாள் நந்தினி.
படுக்கையில் உள்ளோம் என்பதையும் மறந்து கை கூப்பினார். “அச்சோ என்னங்க” என கோதாவரி பதற்றமாக அவர் கையை ஆதுரமாகப் பற்றினார்.
கண்ணீர் கோடுகள் தலையணையை நினைத்தன. கோதாவரி அருகில் அமர்ந்து நிதானமாக உரையாடினார்.
நந்தினி அறையைவிட்டு வெளியே வந்தாள். எதை எல்லாம் நினைத்து அஞ்சினாளோ அவை ஒன்றன்பின் ஒன்றாக நடந்துவிட்டது.
மனதில் பாரம் அழுத்தியது. இருளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். இரவில் மருத்துவமனை காரிடாரில் யாருமில்லை.
வெளியே தெரு விளக்கின் வெளிச்சத்தில் சாலை, அடுத்த நாள் வாகனங்கள் மற்றும் மனிதர்களின் பாரத்தைச் சுமக்க இளைப்பாறிக் கொண்டிருந்தது.
“சாப்டியா நந்தினி?” விக்கி அருகில் வந்தான்.
வாடிப் போன முகமே அவள் எதையும் உண்ணவில்லை என்பதை உறைத்தது. உடனே விக்கி செல்போனில் அனைவருக்கும் உணவு ஆர்டர் செய்தான்.
பின் அமைதியாக அவனும் இருளை நோக்கியபடி இருந்தான். அவன் மனவோட்டம் எங்கெங்கோ சென்றது.
நந்தினி அவனைத் திரும்பிப் பார்த்தாள். தனக்காக என்னவெல்லாம் செய்கிறான் இவன். தன் மேல் அத்தனை காதலா? வியந்தாள். அவன் முகத்தைக் காண்கையில் மனதில் இனம் புரியாத நிம்மதி குடிக் கொண்டது.
சட்டென விக்கி அவள் பக்கம்த் திரும்ப தன்னையே நோக்குபவளைக் குறுஞ்சிரிப்புடன் என்ன என்பதாய் புருவத்தை உயர்த்தினான்.
அவள் ஒன்றுமில்லை எனத் தலையசைத்தாள்.
“என்கிட்ட எதாவது சொல்லணுமா?” அந்த அமைதியில் விக்கி குரல் மென்மையாகக் கேட்டது.
“நான் என் மேல வெச்சிருக்கிற நம்பிக்கைவிட .. உன் மேல அளவுகடந்து நம்பிக்கை வெச்சிருக்கேன்.” என்றாள் தெளிவான குரலில்
“தெரியும். எனக்காக நீ ஊரவிட்டு போகணுமா? எத்தனை கஷ்டம் … அந்த கோபத்துலதான் அப்படிச் சொன்னேன்” என்றான் சமாதானமாக
“உனக்குக் கல்யாணம் ஆனா மெல்ல மெல்ல என்னை மறந்திடுவ நினைச்சேன். எத்தனை பேர் விருப்பமில்லாம கல்யாணம் நடந்து அப்புறம் சேர்ந்து வாழறாங்க .. அதே மாதிரி நீ…”
அவன் முறைப்பதைப் பார்த்ததும் தானாக அவள் வார்த்தைகள் அடங்கின.
“ஆனா ரிசார்ட்ல நடந்த விபரீதத்தை போலீஸ்ல கம்ப்ளைன்ட் செய்திருக்கலாம். அவனுங்க வெளியில இருக்கிறது மற்ற பெண்களுக்கும் ஆபத்து இல்லையா? அவங்களுக்குத் தண்டனை கிடைக்கணும்” என விக்கி சொல்ல
“அவங்க வெளியில இருக்காங்க ஆனா இனி அவங்களால எந்த பெண்ணுக்கும் ஆபத்து இல்ல” என்றாள் ஏளனப் புன்னகையுடன்.
அவளை வியப்புடன்ப் பார்த்தவன் “உனக்கெப்படி தெரியும்?”
“ரிசார்ட்ல அன்னிக்கு நடந்த கொடுமையை என்னால மறக்கவே முடியலை. முதல் ரெண்டு நாள் எனக்குப் பைத்தியமே பிடிச்ச மாதிரி இருந்தது. என் உடம்பை எனக்கே பிடிக்கல அத்தனை கோபம், அவமானம், இயலாமை, வெறுப்பு எல்லா சேர்ந்து செத்திடலாம்னு இருந்தது.”
“எனக்கு நிதானமா யோசிக்க நேரம் தேவைப்பட்டது. முதல்ல ஜென்னி வீட்ல இருந்தேன். அப்புறமா என் வீட்டுக்கு வந்து வொர்க் பிரம் ஹோம்னு பொய் சொல்லி ரூம்லயே நேரத்தை கழிச்சேன். வேலையை ராஜினாமா செய்தேன்.”
“போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்தா என்ன நடக்கும்? அவங்க ரெண்டு பேரையும் ஒருவேளை பிடிச்சாலும் ஜெயில் தண்டனை ஒரு ஏழெட்டு வருஷம் கிடைக்குமா? அது கூட கண்டிப்பா கிடைக்குமானு சொல்ல முடியாது. பைல்ல வெளில வரலாம்”
“இங்க சட்டப்படி ஒரு குற்றவாளிக்குத் தண்டனை கிடைக்க நூறு வழி இருந்தா … தப்பிக்க ஆயிரம் வழி இருக்கு. அப்படியே தண்டனை கிடைச்சாலும் எதாவது தலைவருடைய பிறந்த நாள் இல்ல இறந்த நாள்னு நன்னடத்தை விதினு வெளில வந்திடுவாங்க. எல்லா சட்டதிட்டம் .. காவல் தவறுனு சொல்லல .. ஒருசில இடங்கள்ல இருக்கு.”
“பணம் .. அரசியல் செல்வாக்கு .. இப்படி ஆயிரம் வழியிலையும் தப்பிக்கலாம். இங்க சட்டத்துல குற்றம் செய்ய வயது வரம்பு இல்ல .. ஆனா தண்டனை அனுபவிக்க மட்டும் சின்ன வயசா இருக்கக் கூடாது” எனச் சொல்லி பெரியதாகவே சிரித்துவிட்டாள். அதில் அவள் வலி அப்பட்டமாகத் தெரிந்தது.
“ சட்டங்கள் கடுமையாக இல்லைனா .. நிச்சயமா பெண்களுக்கு பாதுகாப்பே கிடையாது. நம்ம சட்டதிட்டங்கள் கடுமை ஆகனும். பெண்ணை தவறான வழியில தொட ஆண் பயப்படனும். ஆனா அது எப்போ நடக்கும்? இன்னும் ஆயிரம் வருஷம் ஆனாலும் இப்படியே பேசிட்டு இருப்போம்”
“அதனால தான் …” சற்று நிறுத்தி அவனை பொருள் புதைந்த பார்வை பார்த்தவள் பின் “நானே அவங்களுக்குத் தண்டனை தர முடிவு செஞ்சேன். இது தப்புதான் சட்டத்தை கையில எடுக்கக் கூடாது. ஆனா என் வலியும் வேதனையும் அவங்களுக்கு புரியணும் இல்லையா? . அது நிச்சயமா மரண தண்டனையா இருக்கக் கூடாதுனு முடிவுச் செஞ்சேன். என்வரை மரணம் ஒரு வகையான விடுதலை. உயிரோடு இருக்கும் போதே நரகம்னா என்னனு காட்ட விரும்பினேன். அவன் என் உடலுக்கும் உள்ளத்துக்கும் கொடுத்த வலியை வட்டியோடு திரும்பத் தர நினைச்சேன்”
“ஒரு AI app டவுன்லோட் செஞ்சேன் text to image மூலமா அந்த ரெண்டு பசங்களோட முகத்தைத் தயார் செய்தேன். அந்த முகப் படங்களை கூகுள் இமேஜ் சேர்ச்ல (google image search) தேடினேன். அவங்க ரெண்டு பேரும் நிறைய கேஸ்ல மாட்டியிருக்கறது சில நியூஸ் பேப்பர்ல வந்திருந்ததை கூகுள்ல இருந்தது. அவங்க கொடைக்கானலை சேர்ந்தவங்க. குற்றம் செய்ததும் தலைமறைவா பெரும்பாலும் கொடைக்கானலில் இருப்பாங்களாம். அதனால தான் நானும் கொடைக்கானல்ல வேலைத் தேடிப் போனேன்“
அவளை வினோதமாக விக்கிப் பார்த்தான். அவள் மனதில் இத்தனை திட்டங்கள் இருக்கும் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை. ஒன்றும் அறியாப் பேதையென நினைத்தவன் அவளின் மனவுறுதி அதிசயக்கும் வகையில் தெரிந்தது.
“ஒருவேளை நம்ம கல்யாணம் முடிஞ்ச பிறகு என்னை நாசம் பண்ண ரெண்டு பேரை பழிவாங்கணும் .. போயிட்டு வரேன்னு சொன்னா நீ சம்மதிப்பியா? நிச்சயம் சம்மதிக்க மாட்ட.. அதனாலதான் உனக்குத் தெரியாம போனேன்”
“முதல்ல இந்த முடிவு சரியா வருமாத் தெரியல .. குழப்பமா இருந்தது. நான் நினைச்சது நடக்க எப்படியும் ரெண்டு இல்ல மூணு வருஷமாவது ஆகும்னு நினைச்சேன். ஆனா அவங்க துரதிஷ்டம் இப்படி உடனே வந்து மாட்டுவாங்கனு எதிர்பார்க்கலை. ஓயாம மழை அதோட மலைச் சரிவு சமயம் அங்க வந்தாங்க.” என்றவள் தான் செய்தது மற்றும் மருத்துவமனையில் அவர்கள் உடல் நிலையைக் கூறினாள்.
“அடிப்பாவி சப்போஸ் அவனுங்க செத்திருந்தா கொலை கேஸ் ஆகியிருக்கும்” எனப் பதறினான் விக்கி.
“உண்மைதான் ஆனா அந்த இடம் ரொம்ப ஆழம் கிடையாது. உயிர் போகாது ஒரு குருட்டு நம்பிக்கை” எனக் கண் சிமிட்டி சிரித்தாள் பின்பு “ஆனா கண்டிப்பா அடிப்படும். அதுவும் பைக்ல வேகமா போறாங்க இல்லையா? ஆனா நீ சொல்ற மாதிரி செத்திருந்தா பிரச்சனைதான்” புன்னகைத்தாள். இனி அதற்காக வருந்துவதற்கு எதுவுமில்லை என்பது போல இருந்தது அவள் சிரிப்பு.
“அவங்களுக்கு பின்னாடி எதோ பெரிய அரசியல்வாதி இருக்காங்களாம். யாருனு தெரியல .. எப்ப மாட்டினாலும் சுலபமா பெயில்ல வந்திடுவாங்களாம். இவங்க அரசியல்வாதியோட அடியாள். போலீசால கூட எதுவும் செய்ய முடியலை .. ஆனா அவங்க விழுந்து பயனில்லாம போனதும் காப்பாத்த ஒருத்தனும் வரலை ... அரசியல்வாதி சார்பு உட்பட ” ஒரு யூடியூபர் சொன்னதாக சொன்னாள்.
அடுத்த சில நிமிடங்கள் மௌனமாகக் கழிந்தன. வாழ்க்கை பல சிக்கல் அடங்கியது.
“எனக்கு ஒரு குற்றவுணர்வு இருக்கு நந்தினி. ருத்ராவுக்கு தண்டனை கொடுக்க நான் யார் நீதிபதியா?” என விக்கி கேட்க
என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அவனின் அடுத்த வார்த்தைக்காக மௌனமாயிருந்தாள்.
“ருத்ராவை பொண்ணு பார்க்க போன சமயத்துல அவ செஞ்ச தவறுகளைச் சுட்டிக் காட்டி அட்வைஸ் பண்ணியிருந்தா ருத்ராவோட ரியாக்ஷன் என்னவா இருக்கும்?”
தோளைக் குலுக்கத் தெரியாது என்றாள்.
“கெட் அவுட்னு சொல்லியிருப்பா.. ரைட்?” என்றதும். இருவருமே சிரித்தனர்.
விக்கி ருத்ராவிடம் நெருக்கமாக இருப்பதைப் போல சில தருணங்களில் இருந்தது நெருடலாக உணர்ந்தான். அவள் நம்ப வேண்டும் என்பதற்காகவே அப்படிச் செய்தான். இருந்தாலும் அது தவறு என அவன் மனசாட்சி தினம் தினம் குற்றம் சாட்டியது.
“நான் அவளைக் கல்யாணம் செய்தது தப்பான விஷயம் தோனுது .. நம்ம கல்யாணம் முடிஞ்சதும் அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சிக் கொடுக்கணும். என்னால முடிஞ்ச பண உதவியும் செய்யலாம்னு இருக்கேன். நீ தப்பா நினைக்க மாட்டே தானே?” விக்கிக் கேட்கவும்
“ச்சே என்னடா இப்படி கேட்டுட .. நானும் ருத்ராவுக்கு நல்ல வாழ்க்கை அமைய உதவி செய்றேன்”என்றாள்.
எதிரியும் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கும் விக்கியை கரம் பற்றத் தான் என்ன தவம் செய்திருக்கிறேன் என எண்ணுகையில் பூரிப்பாய் உணர்ந்தாள்.
“ ரிசார்ட்ல நடந்த சம்பவத்தை உனக்கு யார் சொன்னது?” மனதை குடைந்து கொண்டிருந்த கேள்வியை கேட்டாள்.
“அது சீக்ரெட் .. உனக்குத் தாலி கட்டினதும் சொல்றேன்” என்றான்
“அப்ப என் மேல நம்பிக்கை இல்ல” பொய் கோபத்துடன் கேட்க
“இல்லவே இல்ல” என ஸ்பஷ்டமாகக் கூறினான்.
ஆர்டர் செய்த உணவு வரவும் தன் பெற்றோர் மற்றும் நந்தினி மாமாவிற்கு கொடுத்தான். இறுதியாக தனக்கும் நந்தினிக்கும் தானே எடுத்து வைத்தான். நந்தினி சாப்பிடாமல் கொறிக்க அவளைக் குழந்தையைப் போல மிரட்டி உருட்டிச் சாப்பிட வைத்தான்.
சிறிது நேரத்தில் தன் பெற்றோருடன் கிளம்பினான்.
விவாகரத்து கிடைப்பதற்கான இடைப்பட்ட ஒரு வருட காலத்தில் விக்கி தன் அலுவல் தொடர்பாக யு.எஸ். சென்று வந்தான். நந்தினி சில மாதங்கள் கொடைக்கானலில் இருந்தாள். பாட்டியைக் கவனிக்கத் தகுந்த ஏற்பாடுகள் செய்துவிட்டு சென்னை திரும்பினாள்.
அதன் பிறகு விக்கி ருத்ராவிற்கு சட்டப்பூர்வமாக விவாகரத்து கிடைத்தது.
விக்கி நந்தினி திருமணத்திற்கான சுபமுகூர்த்த நாள் குறிக்கப்பட்டது.
விக்கி ஒருநாள் பவித்ராவை நகைக் கடையில் எதிர்பாரா விதமாகச் சந்தித்தான். விக்கி நந்தினிக்கு சர்ப்ரைஸ் கிப்ட்டாக கொடுக்க நகை பார்த்துக் கொண்டிருந்தான்.
பவித்ராவும் நகை வாங்கிக் கொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும் “ஹாய் .. கல்யாண பரிசு வாங்கறேன்” என பூடகமாகக் கூறியபடி அருகில் வந்தாள்.
“யாருக்கு கல்யாணம்?” விக்கி ஆவலாகக் கேட்க
“ருத்ரா” என்றாள்.
முகம் பிரகாசமாக “ரியலி .. கிரேட்” என்றான். மனதிற்கு நிம்மதியாக இருந்தது.
“உங்க பிரெண்ட் சதீஷ் கூடத் தான் கல்யாணம்” என்றாள்.
அவனுக்குப் பக்கென்றது சதீஷ் மற்றும் அவன் குடும்பத்தினர் சாதுவான அப்பிராணிகள். அவர்கள் வாழ்க்கையில் ருத்ரா எந்த ஏழரையை இழுத்துவிடாமல் இருக்க வேண்டுமே என அஞ்சினான்.
அவன் மனவோட்டத்தைப் புரிந்து கொண்ட பவித்ரா “அக்கா முன்ன மாதிரி இல்ல இப்ப ரொம்ப மாறிட்டாங்க” என்றாள் வாட்டத்துடன்.
அப்போதுதான் கவனித்தான் சதீஷ் பெற்றோர் மற்றும் ருத்ரா குடும்பத்தினர் என அனைவரும் அங்கிருந்தனர்.
சதீஷ் பெற்றோருக்கு முன்னமே விக்கியை தெரியும் என்பதால் அவர்களுடன் பேச எந்த தயக்கமும் இல்லை.
சதீஷ் அம்மா விக்கியிடம் “ருத்ரா மாதிரி ஒரு நல்ல பொண்ணு கிடைக்க சதீஷ் கொடுத்து வெச்சிருக்கணும்” என்றார்.
அவரே தொடர்ந்தார் “முதல்ல ருத்ரா எங்க வீட்டுக்கு வந்து மன்னிப்பு கேட்டப்ப .. நான் திட்டி சண்ட போட்டேன். ஆனா ருத்ரா நான் பண்ண பாவத்துக்குப் பரிகாரம் செய்ய அனுமதி கொடுங்கன்னு சொன்னா .. தினமும் வருவா .. எங்களால நம்பவும் முடியல .. ஏத்துக்கவும் முடியல .. முதல் ரெண்டு மாசம் இருக்கும் வீட்டு வாசல் வரை வந்து முடிஞ்ச உதவி கேட்காம செய்தா. அதாவது கடைக்கு போறது மாத்திரை வாங்கிட்டு வருவா .. ஆனா வீட்டுக்குள்ள வரவே இல்ல”
“அப்புறம் எங்களுக்கே பாவமா போச்சு .. உள்ள வரச் சொல்லி .. எங்களுக்கு எந்த உதவியும் வேண்டாம். நீ போயிடு சொன்னோம்.. ஆனா அவ கேட்கல .. சதீஷ் டிரீட்மெண்ட்க்கு பெரிய பெரிய டாக்டகிட்ட காண்பிச்சா .. குடும்பத்துக்கும் உதவியா இருந்தா .. காலப் போக்குல சதீஷ் ருத்ரா காதலிக்க ஆராம்பிச்சாங்க” என வெகு நேரம் ருத்ராவைப் பற்றி சதீஷின் தாயும் தந்தையும் சொன்னார்கள்.
ருத்ரா அப்பா “இப்ப ருத்ரா முன்ன மாதிரி இல்ல .. ரொம்பவே மாறிட்டா. போன ஒரு வருஷமா ருத்ரா சதீஷ் குடும்பத்தையும் சதீஷ் மருத்துவ சிகிச்சைக்கு எல்லாம் பொறுப்பா கவனிச்சா. அவங்க வீட்ல எல்லாருக்கும் ருத்ராவை பிடிச்சிருக்கு. சதீஷ்தான் இந்த முடிவ எடுத்தது.” என்றார்.
இவற்றைக் கேட்ட விக்கி நெகிழ்ந்து போனான்.
ருத்ரா தந்தை “நான் தான் ருத்ராக்கு சின்ன வயசில் இருந்து ரொம்ப செல்லம் கொடுத்தேன் . குழந்தைகளுக்கு நோ சொல்லி வளர்க்கணும். பாசத்தோடு கண்டிப்பும் இருக்கனும். இப்ப அவ வாழ்க்கை பாருங்க… எல்லாம் என் தப்பு” தகப்பனாய் கண்ணீர் மல்க அவர் வருந்தினார்.
ருத்ரா பெற்றோருடன் ஆறுதலாக சிறிது நேரம் உரையாடினான்.
திருமண தேதியைச் சொன்னார்கள். திருமண அழைப்பிதழை கொடுத்தார்கள். அதை கண்டு விக்கி இதழ் மலர்ந்தது காரணம் அதே தேதியில் தான் அவனுக்கும் திருமணம்.
தன் திருமணத்தைப் பற்றியும் கூறினான். விக்கி தன்னுடைய திருமண அழைப்பிதழை கொடுத்து அவர்களை அழைத்தான்.
ருத்ரா வாழ்க்கை தன்னால்தான் பாழானது என்னும் குற்ற உணர்விலிருந்து மீண்டு மனநிறைவாக உணர்ந்தான்.
விக்கி மற்றும் நந்தினி திருமணம் எளிமையாகக் கோயிலில் நடந்தது.
அதே நேரம் பெங்களூரில் சதீஷ் ருத்ரா கழுத்தில் தாலி கட்டினான். திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது.
தீபத்தைப் போல குளிர்ந்தவள் சூழ்நிலையால் தீயாயினாள்.
கட்டு கட்டுக்கடங்காத தீ போன்றவள் குளிர்ந்த தீபமானாள்.
இருபெண்களும் தற்பொழுது தங்கள் குடும்பத்தை ஒளிரச் செய்துவிட்டனர்.
சுபம்
Arumayana kathai 👏👏
Nandhini planning semma and executed well.
Vikki nee rudra kaga ivlo feel panna thevai illappa. Pure heart ❤️
Atlast Rudra didn’t expected this change.
Good story
All the best 👍
Thank you so much Rathi sis for your wonderful wishes and continuous support.
அருமையான முடிவு
Thank you so much Kothai sis for your continuous support and wonderful comments.
Spr sis…. Happy ending….
Thank you so much Priya sis for your continuous support and wonderful comments.
அருமையான கதை. நல்ல முடிவு.
ருத்ரா சதீஷ் திருமணம் சூப்பர்.
Thank you so much Abirami sis for your continuous support and wonderful comments.
Super story😍😍 Good ending 👏👏👏👏👏👏
Thank you so much for your continuous support and wonderful comments Vino sis.
Arumaiyana kathai. Niraivaana mudivu. Vazhthukkal 👍👍👍👍
Thank you so much Eswari sis for your continuous support and wonderful comments.
Arumaiyana kathai . nalla mudivu
vicky than nalla mudiva yosichi nandhini thirumba kai pidichan patha paravala rudra vum manasa mathi sathish kuda vazha mudivu pani iruka .
kandipa pengal enga thanoda kunathai marachi atha vera mari veli paduthina than avanga life ku nallathu irukum antha mari tha nandhini and rudra
Good good ending . congratulations
Thank you so much Kalidevi sis
Thanks for your continuous support and encouragement.