Skip to content
Home » தீரனின் தென்றல் – 16

தீரனின் தென்றல் – 16

வழக்கமாக நான்கரை மணி பேருந்தில் டாண் என்று வந்து இறங்கும் தென்றல் இன்றைக்கு வரவில்லை… இன்று இரவு அன்னபூரணி திருமணத்தில் கலந்து கொள்ள ஊருக்கு செல்ல வேண்டும்.. 

Thank you for reading this post, don't forget to subscribe!

ஆனால் தென்றல் ஏன் இன்னும் வரவில்லை என்று நேரம் ஆக ஆக பூரணிக்கு பதட்டம் கொள்ள தீரனுக்கு அழைத்து தகவல் சொல்ல அவனோ

“அம்மா ரூபி மாங்கா கேட்டிருப்பா… அதை பறிக்கிறேன் னு மாந்தோப்பு பக்கம் போயிருப்பா… கொஞ்ச நேரத்துல வந்திடுவா ம்மா..” தீரன் அலச்சியமாக சொல்ல

“டேய் குமாரு வந்து இருக்கான் டா… அவன் தான் ரூபியை இன்னைக்கு காலேஜ் கூட்டிட்டு போனான்… நான் கடைத்தெரு போனப்போ அவன் வீட்டுக்கு ரூபியை கூட்டிட்டு வந்ததை பார்த்தேன்… அங்க தான் நம்ம ஊருக்கு வர பஸ் பஞ்சர் ஆகி லேட்டா தான் வரும் னு பேசிக்கிட்டாங்க… ஆனா இப்போ பஸ் ஊருக்குள்ள போய்ட்டு திரும்பியும் போயிடுச்சு… ஆனா தென்றல் பிள்ளையை காணோம் டா…” பூரணி சொல்ல தீரனுக்கு உள்ளுக்குள் ஏதோ தவறாக பட்டது.

“அம்மா… பதறாதே.. பக்கத்துல எங்கயாவது போயிருப்பா வந்திருவா.. நீ கவலைப்படாம இரு. நான் போய் தேடி கூட்டிட்டு வரேன்” என்று தீரன் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான் தென்றலை தேடி…

கல்லூரி செல்லும் வழியில் இருந்த தென்றலின் தோழி ஒருத்தியின் வீட்டருகே செல்ல எதார்த்தமாக அந்த பெண் வெளியே வந்தாள். அவளிடம் தென்றல் பற்றி விசாரிக்க “அப்போவே பஸ்ல போய்ட்டா அண்ணா” என்று சொல்ல ‘பஸ்ஸில் வந்தவள் எங்கே போயிருப்பாள்?’ என்று தீரனுக்கும் பதட்டம் தொற்றிக் கொள்ள அங்கிருந்து நகர போன தீரனை “அண்ணா ஒரு நிமிஷம்” என்று நிறுத்தினாள் அந்த பெண்

“என்னம்மா? “

“இல்ல அண்ணா… நானே உங்களை அன்னைக்கு பார்த்தப்போ இதை சொல்ல நினைச்சேன் ரூபியும் தென்றலும் வேணாம் னு சொல்லிட்டாங்க…” என்று அவள் தயங்க

“என்ன விஷயம் மா? எதை சொல்ல வேண்டாம் னு சொன்னாங்க…”

“அண்ணா காலேஜ் ல நாங்க செகண்ட் இயர் படிக்கும் போது எங்களுக்கு சீனியர் ஒருத்தர் தென்றலுக்கு ப்ரப்போஸ் பண்ணினாரு… தென்றல் நோ சொல்லிட்டா… இந்த வருஷம் ஹையர் ஸ்டடி தென்றலுக்காக தான் இதே காலேஜ் ல படிக்கிறதா சொல்லி டார்ச்சர் பண்ணிட்டே இருந்தாரு… ஆனா தென்றல் இதெல்லாம் ஈசியா சமாளிச்சா தான்…

ஆனாலும் கொஞ்ச நாளா அந்த சீனியர் சரியில்லை… கொஞ்சம் தப்பான பசங்க கூட சுத்திட்டு தென்றல்கிட்ட வல்கரா நடந்துக்கிறாரு…” அந்த பெண் சொல்ல சொல்ல தீரன் தாடை இறுக கை விரல்களை மடக்கி கொண்டு “சரி மா… நான் பார்த்துக்கிறேன்…” என்று சொல்லி விட்டு சென்ற தீரன் குமாருக்கு அழைத்தான்.

“குமாரு… ரூபி பக்கத்துல இருந்தா கொஞ்சம் தள்ளி வா..” பதட்டமாக கூற தள்ளி வந்த குமார் என்ன என்று விசாரிக்க

“டேய் தென்றலை காணோம் டா…” தீரன் சொல்ல குமாரும் பதறினான்.

“டேய் பதறாதே… காலேஜ் ல ஒருத்தன் வம்பு பண்ணிட்டே இருந்துக்கான்… சொன்னா நான் கோப படுவேன் னு தென்றலும் ரூபியும் மறைச்சுருக்காங்க டா… நீ எதையும் வெளிக்காட்டாம ரூபிகிட்ட அவன் யாரு என்ன னு விசாரி…” என்று விட்டு அழைப்பை துண்டித்த தீரன் எங்கு செல்வது என்று இலக்கின்றி பைக்கை செலுத்த அவனின் உள்ளுணர்வு தென்றல் வந்த பேருந்து பழுதானதாக பூரணி சொன்ன இடத்திற்கு செல்ல சொல்ல அவனும் பைக்கில் அங்கு சென்றிருந்தான்.

அது டவுனில் இருந்து இவர்கள் ஊருக்கு வரும் வழி.. சுற்றிலும் சோளம் கரும்பு வாழை என்று தோட்டம் நிறைந்த பகுதி… கூர் பார்வையோடு கண்களை இங்கும் அங்கும் சுழட்ட கண்ணில் தெரிந்தது தென்றலின் கல்லூரி பை… வாழைத்தோப்பு முன்பு ஓரமாக கிடந்தது.

அதை பார்க்கும் போதே சாதாரணமாக விழவில்லை அவளை இழுத்துச் செல்லும் போது கீழே விழுந்திருக்கிறது என்று தோன்ற குமார் எண்ணிற்கு தீரன் அழைக்க முயற்சிக்க அவனின் ஃபோன் சார்ஜ் இன்றி உயிர் விட்டிருந்தது.

வேறு வழியின்றி தென்றலுக்கு எதுவும் நடந்திருக்க கூடாது என்று வேண்டுதலோடு உள்ளே நுழைந்தான் தீரன்.

தோப்பின் மையத்தில் மோட்டார் ரூம் போன்று அறை இருக்க சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டே அங்கு சென்று தீரன் கண்ட காட்சியில் அதிர்ந்து போனான்.

தென்றல் தாவணியை உருவி அவளின் கையும் வாயும் கட்டப்பட்டிருக்க அவளை பாரபட்சமின்றி நான்கு தடியன்கள் விழிகளால் மேய்ந்து கொண்டு இருக்க ஆயிரம் புழுக்கள் தன் மீது ஊர்வதாக அருவருப்பாக உணர்ந்தாள் தென்றல்…

நால்வரில் அவளை நெருங்கிய ஒருவன் தென்றலை கன்னத்தில் அழுத்தி பிடித்து தன் முகத்தை அவள் கழுத்தின் அருகில் கொண்டு செல்ல அருவருப்பில் தன்னை விடுவிக்க போராடினாள் தென்றல்…

“என்ன தென்றல் செல்லம்… நான் லவ் சொன்னா நோ சொல்வியா? இன்னைக்கு நீ முழுசா எனக்கு சொந்தமாக போற… எனக்கு மட்டும் இல்ல என் ஃப்ரண்ட்ஸ்க்கும் நீ இரையாக போற…” என்று சொல்லிக் கொண்டே நெருங்கியவன் முகத்தில் குத்து விழ தென்றலை விட்டு தள்ளிப் போய் விழுந்தான் அவன்.. தீரன் ரௌத்திரத்தில் விழி சிவந்து தன் தேகம் முறுக்கேறி நின்றிருக்க தென்றலை கடத்தி வந்தவனும் அவனின் துணைக்கு நின்ற தோழர்களும் மிரள ஆனாலும் நாம நாலு பேர்.. அவன் ஒருத்தன் தானே என்று தைரியமாக நிற்க தீரனின் கோபத்திற்கு நூறு பேர் அங்கு இருந்திருந்தாலும் துவம்சம் செய்து இருப்பான்…

தீரனை பார்த்த பிறகு தென்றலுக்கு நிம்மதி பிறக்க அமைதியாக நடப்பதை மட்டும் பார்த்திருந்தாள். தன்னவளை இந்த கோலத்தில் பார்த்தவனுக்கு இருந்த கோபம் போதையில் இருந்த நான்கு தடியன்களை அடித்து வீழ்த்த அத்தனை கடினமாக இல்லை..

நால்வரையும் அடித்து வீழ்த்தி அவன்கள் மயங்கி விழ ஓடி வந்து தென்றலின் கட்டை நீக்கி அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் தீரன்…

அவன் நெஞ்சில் புதைந்து கண்ணீர் விட்டவளை தலை கோதி அமைதி படுத்த முயல அவளை அடக்க இயலவில்லை…. “ஏய் அழதாடி…” என்று அதட்ட நிமிர்ந்து பார்த்தாள் தென்றல்.

“ஏன்டி… ரெண்டு வருஷமா உன் பின்னாடி சுத்தி பிரச்சினை பண்ணிட்டு இருந்திருக்கான்… அப்போவே சொல்லி இருந்தா இன்னைக்கு அவன் இப்படி பண்ணிருப்பானா” என்று கோபமாக கேட்க

“நீ கோப பட்டு எதாவது பண்ணிட்டா பிரச்சினை பெருசாகிடும் னு பயந்தேன் தீரா… இவன் அவ்வளவு பெரிய பிரச்சினை னு நான் நினைக்கலை…” அழுது கொண்டே தென்றல் கூற மீண்டும் தன்னோடு அணைத்துக் கொண்டு

“ச்ச்… போடி எவ்வளவு பயந்தேன் தெரியுமா? முதல்லயே சொல்லி இருந்தா இதெல்லாம் நடக்காம நான் பார்த்திருக்க மாட்டேனா?” என்று தீரனும் தன் கண்ணீரை அடக்க முடியாமல் வெளியிட்டு விட்டு அவளின் தாவணியை எடுத்து கையில் தர அணிந்து கொண்டாள் தென்றல்.

“தென்னுக்குட்டி… அம்மா அத்தை மாமா யாருக்கும் இதை சொல்ல வேண்டாம்… பயந்துடுவாங்க” என்று அறிவுத்தி தன் அணைப்பை விலக்காமல் பைக் வரை அழைத்து சென்று அங்கிருந்த அவளின் பையை எடுத்து தூசியை உதறிவிட்டு தந்தவன்

“சரி சீக்கிரம் உட்காரு தென்னூ… உன் அண்ணன் கிட்ட உன்னை காணோம் னு சொல்லிட்டேன் பதறிட்டு இருப்பான்…” என்று சொல்லி வேகமாக ஓட்டி வந்தான் பைக்கை..

வீட்டிற்கு வர இவர்களுக்கு முன்பே குமார் வந்திருக்க “தென்றல் எங்கடி போன?” பூரணி ஓடி வர

“அம்மா… ஒன்னும் இல்ல… பரிட்சை நல்லா எழுத திரும்பவும் வேண்டுதல் வைச்சுக்க மலைக்கோயில் போனாளாம்… ரொம்ப சோர்வா இருப்பா.. சாப்பிட எதாச்சும் கொடு…” தீரன் சொல்ல குமார் நம்பிக்கை இல்லாமல் பார்க்க அவளை கடிந்தபடி அவளுக்கு சாப்பிட எடுத்து வந்தார் அன்னபூரணி.

வெளியே வந்த குமார் தீரனை முறைக்க “ச்ச்… ஒன்னும் இல்ல டா நான் உள்ளே சொன்னது தான் உண்மை..” என்று தீரன் அவன் முகம் பார்க்காது வேறு பக்கம் பார்த்து கூறிட

“நான் உன்னை இப்போ எதுவும் கேட்கவே இல்லையே… ஆனா உள்ள நீ சொன்னது எதுவும் உண்மை இல்லை… எனக்கு நல்லா புரியுது… என்னவோ நடந்துருக்கு.. எனக்கும் தெரிய வேண்டாம் னு மறைக்கிற…. எவ்வளவு நாள் னு நானும் பார்க்கிறேன்” என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டான் குமார்.

இரவு ஊருக்கு செல்ல வேண்டிய பூரணி ‘அவள் முகமே சரியில்லை’ என்று சொல்லி தென்றலை தனியே விட்டு செல்ல தயங்க

“அம்மா… ஒன்னும் இல்ல… ஃபைனல் எக்ஸாம் அந்த பதட்டம் தான்.. நீ போ நான் வேணும்னா இன்னைக்கு நைட்டு நம்ம வீட்டுக்கு போகாம வெளியே திண்ணையில படுத்துக்கிறேன்… தென்றலை நான் பார்த்துக்கிறேன்.” என்று உறுதி தர பூரணி கிளம்பினார்.

வம்படியாக தென்றலுக்கு இரவு உணவு கொடுத்த தீரன் திண்ணையில் உறக்கமின்றி அமர்ந்து இருக்க உள்ளே சத்தம் கேட்டு எழுந்து சென்றவன் கண்ட காட்சி கொடி கட்டுவதற்கு வைத்திருந்த கயிற்றை ஃபேனில் மாட்டி தூக்கு போட்டுக் கொள்ள போனாள் தென்றல்…

  • தொடரும்….
  • நன்றியுடன் DP ✍️

2 thoughts on “தீரனின் தென்றல் – 16”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *