Skip to content
Home » தீரனின் தென்றல் – 2

தீரனின் தென்றல் – 2

ஆதீ கம்பெனியில் நடக்க இருக்கும் இன்டர்வியூவில் கலந்து கொள்ள முப்பதுக்கும் மேற்பட்ட ஆணும் பெண்ணும் வந்து வரிசையில் காத்துக் கிடந்தனர்…

Thank you for reading this post, don't forget to subscribe!

இன்று முதல் நிலை நேர்முக தேர்வு இதில் மதன் தேர்ந்தெடுக்கும் ஐவரில் ஒருவரை தான் நாளை ஆதீரன் தேர்ந்தெடுக்க போகிறான்… இது அவர்களுக்குள் நடந்த பேச்சு.

அந்த வரிசையில் பத்தாவதாக அமர்ந்திருந்தாள் அவள்… எளிமையான இளம் பச்சை நிற காட்டன் புடவை நேர்த்தியாக குடி கொண்டிருந்தது அவளின் மேனியில்… இடையை தாண்டி வளர்ந்திருந்த கூந்தலை நேர்த்தியாக பின்னலில் அடக்கியவளுக்கு ஆசை இருந்தும் பூச்சரத்தையும் குங்குமத்தையும் தவிர்த்திருந்தாள்.

ஒவ்வொருவராக உள்ளே சென்று வெளியே வர நேர்காணலை தேர்ச்சி பெறுவோம் என்ற நம்பிக்கை சில முகத்திலும் சிலர் சற்று குழப்பத்திலும் இருக்க ஒவ்வொரு முகமாக ஆராய்ந்து பார்த்தவள்

‘கடவுளே… இந்த இன்டர்வியூ நான் சரியா அட்டென்ட் பண்ணிடுவேன் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. ஆனா ப்ளீஸ்… பழைய கம்பெனி எம்.டி மாதிரி இங்க ஜொல்லு பார்ட்டி யாரும் இல்லாம பார்த்துக்கோ ப்ளீஸ்… அம்மாவோட மெடிக்கல் செலவு புவியோட ஸ்கூல்.. இதுல இனி திரும்ப இன்னொரு இடம் வேலை னு என்னால தேடவே முடியாது.’ என்று மானசீகமாக ஒரு வேண்டுதலையும் போட்டு வைத்தாள் அவசரமாக…

அடுத்த ஆளாக அவள் தான் செல்ல வேண்டும் என்ற போது தான் எங்கிருந்தோ துளி பயம் நெஞ்சில் வந்து ஒட்டிக் கொண்டது. இருந்தும் தைரியத்தை வரவழைத்து கொண்டு அனுமதி கேட்டு உள்ளே செல்ல புன்னகையோடு வரவேற்றான் மதன்.

அவனின் புன்னகையில் எந்த வித விகல்பமோ வீண் வழியலோ இல்லை என்று உணர்ந்து புன்னகைத்தபடி தன் ஃபைலை அவன் பக்கம் நகர்த்தி வைத்தாள் அவள்.

எடுத்து பார்த்தவன் ஒரு முறை அவளை பார்த்து “தென்றல்… பெயர் ரொம்ப நல்லா இருக்கு” என்று கூற

கண் இடுங்க பார்த்தவள் “என் அப்பா அவரோட வாழ்க்கையில இளந்தென்றலோட உணர்வை கொடுத்ததால இந்த பெயரை வைச்சதா சொல்லுவாரு சார்…” என்று கூறியவளுக்கு கண்கள் ஏனோ கலக்கம் கொள்ள அவனுக்கு தெரியாமல் மறைத்துக் கொண்டாள்.

“ம்ம்… டாட்ஸ் லிட்டில் ப்ரின்சஸ்?” கிண்டலாக மதன் கேட்க

“இஃப் யூ டோண்ட் மைண்ட் என்னோட ஜாப்க்கு சம்மந்தமான கேள்வியை மட்டும் கேட்கிறீர்களா சார்?” மென்மையான அழுத்தம் குரலில் சேர்த்து அதே சமயம் சிரித்த முகம் மாறாமல் கூற வியப்பாக பார்த்த மதன்

“இட்ஸ் வெரி சர்ப்ரைஸ் டூ மீ… எங்க பாஸ் மாதிரி இன்னொரு ஆளை லைஃப் ல பார்க்க முடியாது னு நினைச்சேன். பட் யூ ஜஸ்ட் லைக் மை பாஸ்…” என்று புன்னகையோடு மதன் கூற இதற்கு என்ன ரியாக்ஷன் தரவேண்டும் என்பது போல முழித்தாள் அவள் தென்றல்.

“அப்பறம் என்ன கேட்டீங்க? ஜாப் சம்மந்தமான கேள்விகள்… யுவர் ப்ரோஃபைல் வாஸ் வெரி இம்பரஸ்ட் மீ… பட் எந்த கம்பெனிலயும் கன்டினீயூவா சிக்ஸ் மந்த்ஸ் கூட வொர்க் பண்ணலை… மே ஐ நோ வாட் இஸ் தி ரீசன்?” மதன் கேட்க விரக்தியாக சிரித்தாள் தென்றல்.

“பொண்ணா இருக்கேன். அதுவும், ஆண் துணை கூட இல்லாம அம்மாவையும் ஒரு குழந்தையும் கூட வச்சுட்டு தனியா இருக்கேன்… ஏதோ ஓரளவுக்கு பார்க்குற மாதிரி இருக்கேன். இது போதாதா சார் ஆண்களுக்கு தவறான எண்ணங்களை விதைக்க… அவங்க மனசுல அழுக்கை வைச்சுட்டு நான் அதை அம்பல படுத்த முயற்சி செய்தா நான் அவங்களை மயக்க முயற்சி செய்ததா கதை கட்டிடுவாங்க…

நான் அந்த வேலையே வேண்டாம் னு விட்டுட்டு வந்திடுவேன்..” என்று சாதாரணமாக அவள் சொன்ன விதத்தில் அவளின் மனதில் புரையோடி போன காயங்களை புரிந்து கொண்டான் மதன்.

“ஐ அண்டர்ஸ்டேன்ட் மிஸ்… அண்ட் ஐ லைக் யுவர் போல்டனஸ்…” என்று பாராட்டிட புன்னகையோடு “தாங்க் யூ சார்” என்று ஏற்றுக் கொண்டாள் தென்றல்.

அதன் பின்னர் வழக்கமான அவளின் வேலைக்கு சம்பந்தமான கேள்விகளை மதன் கேட்க திக்காது திணறாது அழகான ஆங்கிலத்தில் பதிலளித்தாள் தென்றல்.

“மிஸ் தென்றல் ஒரு டவுட் கேட்கலாமா?” என்று அவன் கேட்கும் போதே இது வேலை சம்பந்தம் அல்ல என்று தோன்றியது தென்றலுக்கு…

இருந்தாலும் பொறுப்போம் என்று கட்டுப்படுத்திக் கொண்டு “யெஸ் சார்… கேளுங்க…” அனுமதி அளித்தாள்.

“இல்ல… உங்களோட ஸ்கூலிங் தமிழ் மீடியம் இல்லையா? காலேஜ் கூட சின்ன டவுன் ல தான் படிச்சிருக்கீங்க… பட் இங்லீஷ் இவ்வளவு அழகா தெளிவா பதட்டமே இல்லாம பேசுறீங்களே….” என்று மதன் ஆச்சரியமாக கேட்க

மென்னகை பூத்த தென்றல் “இங்லீஷ் இஸ் ஜஸ்ட் அ லாங்குவேஜ் சார்… இட்ஸ் நாட் அ நாலேஜ் சார்… கொஞ்சம் முயற்சி எடுத்தா எல்லாராலேயும் பேச முடியும். இருநூற்று நாற்பத்தி ஏழு எழுத்து உள்ள தமிழை திக்காம திணறாம பிழை இல்லாம என்னால பேச முடியும்னா இருபத்தாறு எழுத்து உள்ள ஆங்கிலத்தை என்னால கத்துக்க முடியும்ன்ற நம்பிக்கை இருந்தா போதும்” என்று தென்றல் கூற மெச்சுதலாக புருவத்தை உயர்த்தி கொண்டான் மதன்.

“ஓகே மிஸ்.தென்றல்… எனக்கு உங்க ப்ரோஃபைல் ஓகே பட் ஃபைனல் டெசிஷன் பாஸ் தான் எடுக்கனும்…” என்று மதன் சொல்ல புரியாமல் பார்த்தாள் தென்றல்.

“ஐ மீன் யூ வாஸ் செலக்ட்டட் யுவர் ஃபர்ஸ்ட் லெவல் ஆஃப் இன்டர்வியூ..‌. ஆக்சுவலா நான் யாருக்கும் இதுவரை நீங்க செலக்ட்டட் னு சொல்லவே இல்லை.. கம்பெனி ல இருந்து கால் பண்ணுவாங்க னு சொல்லி அனுப்பிட்டேன். பட் யுவர் ப்ரோஃபைல் வாஸ் அமேசிங்.. அண்ட் ஐ அம் இம்பரஸ்ட் அட் யுவர் ஸ்பீச்…” என்று மதன் சொல்ல

“தாங்க்யூ சார்…” என்றவளுக்கு ஏதோ ஒரு நிம்மதி மனதில் குடிகொள்ள ஏனோ மதனின் பார்வையில் இருந்த சகோதர தன்மையை உணர்ந்து புன்னகைத்தாள் தென்றல்.

ஒருவித நிம்மதியோடு வீட்டிற்கு செல்லும் வழியில் இருந்த கோவிலுக்கு சென்றாள் தென்றல்.

அம்பாளின் சாந்தமான முகத்தை அமைதியாக சில நொடிகள் பார்த்திருந்திருந்தவள் அர்ச்சகர் தீபாராதனை காட்ட தொட்டு கண்ணில் ஒட்டிக் கொண்டவள் அர்ச்சகர் தந்த பிரசாரத்தில் திருநீறை வாங்கி நெற்றியில் இட்டுக் கொண்டு குங்குமத்தை தவிர்த்து விட்டு பிரகாரத்தை வலம் வந்து அங்கிருந்த தூணில் சாய்ந்து அமர்ந்தாள்.  “எப்படியும் இந்த இன்டர்வியூ ல நான் செலக்ட் ஆகிடுவேன் னு நம்பிக்கை வந்துடுச்சு… இனி அந்த ஹவுஸ் ஓனர் நச்சரிப்புல இருந்து தப்பிக்க இந்த ஏரியாலேயே நல்ல வீடா பார்த்து குடி வந்திடனும். அப்போ தான் அண்ணாவும் ரூபியும் எந்த பிரச்சனையும் இல்லாம அடிக்கடி வீட்டுக்கு வந்து போக முடியும்.

இந்த ஏரியால நல்ல ஸ்கூலா பார்த்து புவியை சேர்த்திடனும்…” என்று எதிர்கால திட்டங்களை அவள் மனதில் வகுக்க விதி விதித்த திட்டத்தை நினைத்து அங்கு கருவறையில் வீற்றிருந்த அம்மன் சிரித்துக் கொண்டார்.

நிர்மலமான மனதுடன் கோவிலில் அமர்ந்திருக்க தென்றலின் கை பேசி சிணுங்கிட எடுத்து காதில் வைத்தவள்

“அம்மா… இன்டர்வியூ முடிஞ்சது… நான் வீட்டுக்கு வந்துட்டு இருக்கேன்.” என்று கூறியபடியே கோவிலை விட்டு வெளியே வந்து வீட்டிற்கு செல்ல பேருந்து நிலையம் நோக்கி நடந்தவளை அவள் அறியாமல் நிழல் போல தொடர்ந்தது அந்த கார்…

அதை அவள் கவனிக்கா விட்டாலும் ஏதோவொரு உள்ளுணர்வு உணர்த்த திரும்பி பார்க்க அந்த கார் அவளை கடந்து சற்று மிதமான வேகத்தோடு செல்ல உஃப் என்று மூச்சை வெளியே விட்டபடி இடவலமாக தலையை ஆட்டிவிட்டு சென்று பேருந்து நிலையத்தில் நிற்க இவள் செல்ல வேண்டிய பேருந்தில் ஏறிக் கொண்டாள்.

பேருந்து கிளம்பிய அடுத்த நிமிடம் அந்த பேருந்தை பின் தொடர்ந்தது அந்த கார்…

– தொடரும்…

– நன்றியுடன் DP ✍️

5 thoughts on “தீரனின் தென்றல் – 2”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *