Skip to content
Home » தீரனின் தென்றல் – 4

தீரனின் தென்றல் – 4

“ஓ… சாரி தென்றல்…” என்று அவளின் மனகாயத்தை கிளறியதற்காக மன்னிப்பு கேட்டாள் சித்ரா.

Thank you for reading this post, don't forget to subscribe!

“இட்ஸ் ஓகே சித்ரா… நீங்க ஏன் சாரி கேட்குறீங்க… அடுத்தவங்க இரக்கத்தை நான் எப்போதுமே எதிர்பார்த்ததே இல்ல…” என்று தென்றல் பேசிக் கொண்டு இருக்க தன் அறையில் இருந்து வெளியே வந்தான் மதன்.

“என்ன தென்றல்… வொர்க் எல்லாம் ஓகே வா… எல்லாம் புரியுது தானே?” மதன் கேட்க

“எஸ் சார்.. எல்லாம் ஓகே தான்..” என்று சொன்னவளுக்கு விழிகள் கலங்கி இருப்பது தெரிய “என்னாச்சு தென்றல்? ஏன் அழுத மாதிரி கண் எல்லாம் சிவந்து போய் இருக்கு?” என்று மதன் கேட்க

“ஒன்னும் இல்ல சார்…” சமாளிப்பாக தென்றல் சொல்ல

“சித்ரா நீங்க சொல்லுங்க…” கேள்வியை அவளிடம் திருப்பினான்.

“அது வந்து சார்… தென்றல் என் அம்மா கூடவும் பொண்ணு கூடவும் தான் இருக்கேன். ஹவுஸ் ஓனர் கொஞ்சம் ட்ரபுள் பண்றாரு னு சொன்னாங்க… அப்போ ஏதோ ஆர்வத்துல அவங்க ஹஸ்பண்ட் பத்தி கேட்டுட்டேன்… அவரு இப்போ உயிரோட இல்ல னு சொன்னாங்க.. அந்த நியாபகம் தான் இவங்களுக்கு அழுகை வந்துடுச்சு போல… சாரி தென்றல்…” என்று மீண்டும் மன்னிப்பு கேட்டாள் சித்ரா.

“ஓ…” மதனும் வருந்த

“ஐயோ விடுங்க சித்ரா… சார் ஐ அம் ஓகே நவ்…” என்று தெளிவான குரலில் தென்றல் கூற

“ம்ம்… சரி… ஆமா ஹவுஸ் ஓனர் ஏதோ ட்ரபுள் பண்றாரு னு சொன்னீங்க என்ன பிரச்சினை நான் தெருஞ்சுக்கலாமா தென்றல்?” மதன் கேட்க சித்ரா பெண்… சிலமணி நேரங்கள் பழகிய பழக்கம் ஏதோ நட்பு ரீதியில் சொல்லி விட்டாள். ஆனால் மதன் தனக்கு மேலதிகாரி என்ற மரியாதை மட்டுமே இருக்க எப்படி கூறுவது என்று தென்றல் விழித்தாள்.

“ஐ திங்க் என்னால உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும்… அதே நம்பிக்கை உங்களுக்கு இருந்தா சொல்லுங்க” என்று கனிவுடன் மதன் பேச

“அச்சோ… அப்படி எல்லாம் இல்லை சார்” என்றவள் தன் வீட்டு உரிமையாளர் குணத்தை பற்றி கூறி “இந்த ஏரியால நல்ல வீடு கிடைச்சா நல்லா இருக்கும் சார்.. என் அண்ணா கூட இங்கே தான் இருக்காரு” என்று கூற

“ஓ… ஓகே தென்றல்.. நான் உங்களுக்கு நல்ல வீடு நான் அரேஞ்ச் பண்றேன்” என்று மதன் கூறிவிட்டு சரி தென்றல் நான் லஞ்ச்காக போறேன்… நீங்க சாப்பிட்டீங்களா? என்று மதன் கேட்க

“ம்ம்… சித்ரா அவங்க லஞ்ச் ஷேர் பண்ணி சாப்பிட்டோம் சார்…” என்று தென்றல் கூற விடைபெற்று அகன்றான் மதன்.

“ம்ம்… தென்றல் அப்போ உங்களுக்கு புதுவீடு கன்ஃபார்ம்… அட நான் மறந்துட்டேன் பாருங்க நம்ம கம்பெனி க்வார்டஸ் ல கூட உங்களுக்கு வீடு அலார்ட் ஆகலாம்…” சித்ரா சொல்ல

“க்வார்டஸா? அப்போ இந்த சாருக்கு நம்ம ஆஃபிஸ் ல அவ்வளவு பலம் இருக்கா சித்ரா?” தென்றல் ஆர்வமாக கேட்டாள்.

“அட நீங்க வேற தென்றல்… நம்ம எம்.டிக்கு எனக்கு தெரிஞ்சு இருக்கிற ஒரே க்ளோஸ் ஃப்ரண்ட் மதன் சார் தான்… நம்ம எம்.டி அவரோட வீட்ல இருக்கிறதை விட மாசத்துல பாதி நாள் மதனுக்கு அவர் கொடுத்த க்வார்டஸ் ல தான் இருப்பார். ரெண்டு பேரும் கிட்டத்தட்ட ரூம் மெட்ஸ் தெரியுமா?” சித்ரா சொல்ல

“அப்படியா?” தென்றல் விழி விரிக்க

“ஒரு வேளை அப்படி நீ அங்க வந்தா நாம வொர்க் ப்ளேஸ் கொலிக்ஸ் மட்டும் இல்ல… ஒரே ப்ளாக் ல குடியிருக்கிற நெய்பர்ஸ் ஆகிடுவோம்…” சித்ரா மகிழ்வாக சொல்ல தென்றல் புன்னகைத்தாள்.

மாலை வேலை முடிந்து தென்றல் கிளம்பும் நேரம் தன் கேபின் அழைத்த மதன் “உட்காருங்க தென்றல்… ஆக்சுவலா பாஸ்கிட்ட சொன்னேன் உங்களை பத்தி… நம்ம பாஸ் எப்பவும் அவரோட வொர்க்கர்ஸ் கம்ஃபடபிளா இருக்க நிறைய உதவிகள் செய்வாரு. அதோட லேடிஸ்… அவங்களுக்கு முறையான பாதுகாப்பு முறைமைகள் எல்லாம் செய்வாரு…

அதனால ஆஃபிஸ் ஸ்டாஃப் க்வார்டஸ் ல உங்களுக்கு ஒரு ஃப்ளாட் அரேஞ்ச் பண்ண சொல்லிட்டாரு.” மதன் சொல்ல

“தாங்க்யூ சார்…” என்று மகிழ்வோடு கூறினாள் தென்றல்.

“பட் க்வார்டஸ் ல ஸ்டே பண்ண சில கண்டிஷன்ஸ் இருக்கு…” மதன் சொல்ல என்ன என்று முழித்தாள்.

“அதாவது தென்றல்… மோஸ்ட்லி நம்ம ஆஃபிஸ் பர்மணன்ட் ஸ்டாஃப் க்கு தான் நான் க்வார்டஸ் அலார்ட் பண்ணுவோம்.. பட் வேலைக்கு சேர்ந்த அன்னைக்கே உங்களுக்கு க்வார்டஸ் தரனும் னா நீங்க குறைந்த பட்சம் இரண்டு வருஷம் நம்ம கம்பெனியை விட்டு எக்காரணம் கொண்டும் வேலையை விட்டு போகமாட்டேன் னு ஒரு அக்ரீமெண்ட் சைன் பண்ணனும்…” என்று மதன் சொல்ல

“சார்… இன்னைக்கு வேலைக்கு சேர்ந்த எனக்காகவே இவ்வளவு சலுகை தரீங்க… கண்டிப்பா எனக்கு இந்த அக்ரீமெண்ட் சைன் பண்ண ஓகே தான் சார்…” தென்றல் மகிழ்வாக கூற

“ஓகே தென்றல்… நீங்க இப்படி சொல்லுவீங்க ன்ற நம்பிக்கை ல அக்ரீமெண்ட் ரெடி பண்ணியாச்சு நீங்க படிச்சுட்டு சைன் பண்ணலாம்… இன்னும் ரெண்டு நாள்ல நம்ம கம்பெனி ஆட்கள் மூலமா உங்க வீடு ஷிஃப்ட்டிங் வொர்க் பார்த்துக்கலாம்…” மதன் சொல்ல

“தாங்க்யூ சோ மச் சார்…” மனதார நன்றி நவில்ந்து பத்திரத்தை படித்து பார்த்து அதில் இருந்ததற்கு சரி என்று கையொப்பம் இட்டு விட்டு வெளியேறினாள் தென்றல்.

தென்றல் கீழே சென்றதை அறிந்து மதன் தன் அலைபேசியில் இருந்து பாஸ் என்று பதிவு செய்த எண்ணிற்கு அழைப்பு தொடுத்தவன்

“ஹலோ பாஸ்… நீங்க சொன்ன மாதிரி தென்றலுக்கு நம்ம ஆஃபிஸ் ல உங்களுக்கு பி.ஏ வா போஸ்ட் போட்டாச்சு சார்… அவங்க வீட்டு ப்ராப்ளம் கூட எதார்த்தமா கேட்குற மாதிரி கேட்டு நம்ம க்வார்டஸ் ல ஃப்ளாட் அலார்ட் பண்ணி அவங்க டூ இயர்ஸ் நம்ம ஆஃபிஸ் விட்டு போக கூடாது னு கண்டிஷன் போட்டு அக்ரீமெண்ட் சைன் வாங்கியாச்சு.” மதன் சொல்ல

“ஓ‌‌… குட் ஜாப் மதன்.. நான் சொன்ன எல்லாமே சரியா செய்துட்ட… ரொம்ப தேங்க்ஸ் மதன்” என்று ஆதீரன் சொல்ல

“பாஸ்… நான் உங்க எப்ளாயி… நீங்க சொல்ற வேலையை நான் சரியா செய்ய தான் எனக்கு சம்பளம் தரீங்க.. பட் பாஸ், உங்களுக்கு எப்படி தென்றலோட ஹவுஸ் ஓனர் ப்ராப்ளம் பண்னறாரு னு தெரியும்? இத்தனைக்கும் நீங்களும் தென்றலும் மீட் பண்ண கூட இல்லையே?” என்று மதன் கேட்க

“எப்பவுமே அவளோட நினைவுகளால மட்டுமே வாழ்ந்துட்டு இருக்கிற எனக்கு அவளுக்கு ஒரு பிரச்சினை னா தெரியாம போகுமா மதன்… என்ன ஒன்னு… நான் அவளை தேடி வரக்கூடாது னு என்கிட்ட சத்தியம் வாங்கினா. அதனால தான் நான் அவளை இதுவரைக்கும் தேடாம இருந்தேன். பட் இப்போ அந்த விதியே எங்களை ஒரே பாதையில பயணிக்க இணைச்சு வச்சிருக்கு.. நான் எப்படி விடுவேன்…” என்று பூடகமாக ஆதீரன் சொல்ல குழப்பமாக முழித்தான் மதன்.

“சரி மதன்… தென்றல் நம்ம ஆஃபிஸ்லயும் அந்த வீட்லயும் செட்டில் ஆகுற வரைக்கும் நான் ஆஃபிஸ் வர மாட்டேன்.. நீ எதுவும் உன் ஆளு சித்ரா கிட்ட உளறி வச்சிடாதே…” என்று கேலியாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான் ஆதீரன்.

– தொடரும்…

– நன்றியுடன் DP ✍️

2 thoughts on “தீரனின் தென்றல் – 4”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *