தென்றலுக்கு இந்த வீட்டிற்கு குடிவந்த பிறகு ஏதோ ஒரு பாதுகாப்பு உணர்வு தோன்ற நிம்மதியாக உணர்ந்தாள். அந்த எண்ணத்தோடு சக்தி யூகேஜி படிக்கும் பள்ளியில் அபூர்வா விற்கு எல்கேஜி சேர்க்க ஏற்பாடுகள் செய்து விட்டாள் தென்றல்.
Thank you for reading this post, don't forget to subscribe!அடுத்த வாரம் அவளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். முதலில் குடி இருந்த வீட்டில் அத்தனை பெரிய பொருட்கள் எதுவும் இல்லை அத்தியாவசிய பொருட்கள் இவர்களின் உடைகள் தவிர பெரிதாக எதுவும் இல்லை.. அதனால் எளிதாக பொன்னியே அதையெல்லாம் ரூபிணி குமார் உதவியோடு எடுத்து வைத்து விட்டார்.
ரூபிணி குமார் சக்தி மூவரும் ஒருநாள் அங்கேயே தங்கி இருக்க மறுநாள் காலை தென்றல் சித்ராவோடு வேலைக்கு கிளம்பி சென்றாள்.
மதியம் குமார் சாப்பிட அமர உணவை பரிமாறியபடியே “அத்தை நீயும் உட்காரு… இரண்டு பேரும் சாப்பிட்டதும் நான் சாப்பிடுறேன்…” என்று ரூபா சொல்ல ‘நானும் உங்கூட அப்பறமா சாப்பிடுறேன் ரூபா…” என்று சக்தியும் அபூர்வாவும் மதியம் குட்டித்தூக்கம் போடுவதை உறுதி செய்து கொண்டு குமார் அருகில் அமர்ந்த பொன்னி ‘ரூபா பேசு…’ என்று ஜாடை காட்ட தொண்டையை செருமினாள் ரூபிணி.
“என்னம்மா… மாமியாரும் மருமகளும் ஏதோ ரகசியம் பேசிக்கிறீங்க.. திரும்ப எதாவது சீட்டு போடுறேன் னு என் தலையை உருட்டாதீங்க…” என்று குமார் சொல்ல
“இல்ல ங்க… அதெல்லாம் ஒன்னும் இல்ல… நம்ம அப்பு குட்டிக்கு நாலு வயசு ஆச்சு… ஸ்கூலையும் சேர்க்க போறோம்… ஆனா அவளுக்கும் அவ அம்மாக்கும் ஒரு துணை வேண்டாமா வேலு?” என்று ரூபா கேட்க
“ஏய்… என்னடி பேசுற? ஏன் என் தங்கச்சிக்கும் அவ குழந்தைக்கும் நாம தான் இருக்கோமே…” குமார் சொல்ல
“அச்சோ… அதில்லைங்க… எவ்வளவு காலம் நாம கூட இருக்கிறது?”
“ஏன் ரூபா? நாம எங்க போகப் போறோம்?” என்றே குமார் கேட்க ஏதோ ஃபைலை மறந்து வைத்து சென்றிருந்த மதன் வீடு வர சரியாக இருந்தது.
கதவு திறந்து இருக்க குமாரின் குரல் வாசல் வரை கேட்க அநாகரிகம் என்று தெரிந்தாலும் தன் முதலாளிக்கும் தென்றலுக்கும் இருக்கும் உறவை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் மனதை படுத்தி எடுக்க அப்படியே நின்றான் மதன்.
“ஏங்க என்ன இது? தென்றலுக்கு என்ன வயசுங்க ஆகுது…. அப்பு குட்டி… குழந்தை.. பாவம் அப்பா முகம் தெரியாம ஏங்கிட்டு இருக்கு. ஏதோ அண்ணே மேல உள்ள கோபத்துல சண்டை போட்டா ஊரை விட்டு வந்தா… இத்தனை வருஷம் ஆகியும் அந்த கோபத்தை இழுத்து பிடிச்சு வச்சிட்டு இருந்தா அவங்க ரெண்டு பேர் வாழ்க்கையும் என்ன ஆகுறது? உங்க தங்கச்சி சொன்னானு அண்ணோட நீங்களும் பேசறதை விட்டீங்க…
அண்ணா இப்போ எங்க எப்படி இருக்காரு னு விசாரிச்சு பாருங்க வேலு… அப்பு குட்டி பெண் குழந்தை ங்க… அவளுக்கு இந்த சமூகத்துல அப்பாவை தவிர வேற யாரு பாதுகாப்பு கொடுப்பா?” ரூபா சத்தமாகவே தன் மன ஆதங்கத்தை வெளியிட
“சும்மா இரு ரூபி… எனக்கு மட்டும் என் தங்கச்சி வாழ்க்கையில அக்கறை இல்லையா? நீங்க எல்லாரும் அவ அவனை காதலிச்சதை தூரத்துல இருந்து பார்த்தவங்க… ஆனா, நான் அவங்களோட கூடவே இருந்தவன்.. தென்றல் அவனை எவ்வளவு நம்பினா தெரியுமா? அந்த நம்பிக்கைக்கு துளிகூட பொறுந்தாதவன் தான் அந்த தீரன்… அவனோட தென்றலை நானே எப்படி சேர்த்து வைப்பேன்?” குமாருக்கு கோபம் வந்தது இதை பற்றி பேச தொடங்கியதுமே….
“ஆனா அதுக்காக இப்படியே விட முடியாதே குமாரு… இப்போ நான் துணைக்கு இருக்கேன். ஆனா எத்தனை நாளைக்கு.. அந்த புள்ளை தப்பு பண்ணி இருந்தாலும் அதை உணர்ந்து மன்னிப்பு கேட்க வந்துச்சு.. ஆனா அதுகிட்டயும் கோவிச்சி பேசி அவமான படுத்தி என்னை தேடி வரக்கூடாது னு வயித்துல இருக்கிற குழந்தை மேல சத்தியம் வாங்கினாளே… இதெல்லாம் தப்பு இல்லையா குமாரு. அதுவும் இப்போ அபூர்வா வுக்கு விபரம் தெரிய ஆரம்பிச்சிடுச்சு அந்த குழந்தை என் அப்பா எங்க னு கேட்டா செத்துப் போயிட்டாரு னு மனசாட்சி இல்லாம பேசுறா… இன்னும் எவ்வளவு காலம் இதையெல்லாம் பார்த்துட்டு அமைதியா இருக்க முடியும்?” பொன்னி வேதனையாக கூற
“எனக்கு மட்டும் அதெல்லாம் கஷ்டமா இல்லையா ம்மா… தென்றல் என் தங்கச்சி.. தீரன் என் உயிர் தோழன்… இவங்க காதல் நல்லபடியா கை கூடி சந்தோஷமா வாழ்வாங்க னு நானும் அவ்வளவு ஆசைப்பட்டேன். ஆனா இன்னைக்கு ரெண்டு பேரும் இப்படி தனித்தனியா பிரிஞ்சு இருக்கிறது எனக்கு மட்டும் வேதனை இல்லாத மாதிரி பேசுறீங்க…
ஆனா தப்பு பண்ணினது தீரன் அதனால பாதிக்கப்பட்டது என் தங்கச்சி தென்றல்… நியாயப்படி தர்ம படி நான் என் தங்கச்சிக்கு தான் சப்போர்ட்டா நிக்க முடியும். அது தான் சரியும் கூட…” குமார் சொல்ல
“எல்லாம் சரிதான் வேலு… ஆனா இப்படியே இவங்க வாழ்க்கை தனியாவே கடந்திடனுமா? எனக்கு தெரிஞ்சு அண்ணனும் தென்றலை தவிர வேற பொண்ணை கல்யாணம் பண்ணிருக்க மாட்டாருங்க… அதனால அண்ணா எங்க இருக்காரு பார்க்க முயற்சி பண்ணுங்க வேலு…” ரூபிணி சொல்ல
“பார்க்கிறேன்… ஆனா என் தங்கச்சி என்ன முடிவு எடுக்கிறாளோ அதுதான் என் முடிவும்…” என்று உறுதியாக கூறினான் குமார்.
இதையெல்லாம் வெளியே நின்று கேட்டு கொண்டு இருந்த மதனுக்கு இன்னும் குழப்பம் தான் அதிகரித்தது.
“என்ன இது? பாஸ் துரோகம் பண்ணிட்டதா எல்லாரும் சொல்றாங்க… ஆனா என்ன ஏதுன்னு தெரியலையே…” என்று யோசித்தபடியே தன் வீட்டில் நுழைந்து ஆதீரனுக்கு அழைப்பை தொடுத்தான் மதன்.
நேற்று மதன் அனுப்பிய புகைப்படங்களை லட்சம் முறைக்கு மேல் பார்த்தும் கொஞ்சம் கூட சலிப்பு இன்றி மீண்டும் பார்த்துக் கொண்டு இருந்தான் ஆதீரன்.
மதன் அழைப்பு வர சற்று சலிப்பாக ஏற்று காதில் வைத்தவன் “சொல்லு மதன்…” என்க
“பாஸ்… இங்க உங்க ஃப்ரண்ட் தென்றலோட அம்மா எல்லாம் பேசிட்டு இருந்தாங்க.. நான் எதார்த்தமா க்ராஸ் ஆகும் போது காதுல விழுந்தது…” என்று மதன் பீடிகை போட
“அதான் ஒட்டுக் கேட்டுட்டியே மதன் என்னனு சொல்லு..” ஹெட்செட் மாட்டிக் கொண்டு கையில் இருந்த மொபைல் திரையில் சிரித்த தென்றலை வருடிக் கொண்டு இருந்தான் ஆதீரன்.
“பாஸ் நான் ஒட்டுக் கேட்கலை... அவங்க கதவை மூடாம பேசிட்டு இருந்தாங்க… கொஞ்சம் லவுட் ஆ பேசுனது அந்த பக்கம் க்ராஸ் பண்ணும் போது காதுல விழுந்தது.” என்று திருத்த
“சரி சரி மதன்… என்ன சொன்னான் என் உயிர் தோழன்?” சிறு புன்னகையோடு ஆதீரன் கேட்க குமார் ரூபிணி பொன்னி பேசிய அனைத்தும் கூறினான் மதன்.
கேட்டுக் கொண்டவன் “சரி மதன்…” என்று மட்டும் சொல்ல மதனுக்கு தான் அவன் பதிலில் தலையே சுற்றுவது போல இருக்க
“பாஸ்… என்ன பாஸ் இது? குமார் உங்களை பேசுனது எனக்கே ரொம்ப கஷ்டமா இருந்தது… நீங்க கூலா சரி னு சொல்றீங்க?” என்று கேட்க
“மதன்… இப்போ புதுசா ஒரு ப்ராஜெக்ட் கொட்டேஷன் போட சொல்லி சித்ரா கிட்ட சொல்லிருந்தேன்… என்ன ஆச்சு னு கேட்டு வாங்கிட்டு ஈவ்னிங் வீட்டுக்கு வா மதன்” என்று விட்டு அணைப்பை வைத்து விட
‘புஸ்…’ என்று மூச்சை ஊதி தள்ளிய மதன் “யப்பா முடியல டா சாமி…” என்றபடி பொத்தென்று ஷோபாவில் விழுந்தான் மதன்.
- தொடரும்…
AATHI ENA THROGAM PANITAN THENDRAL KU THERILAYE IVANUM ETHUM SOLLA MATRANE