AATHEE Construction and Builders…
Thank you for reading this post, don't forget to subscribe!என்ற பெயர் தாங்கிய பதாகை வெயிலில் ஜொலிக்க வரவேற்றது அந்த மூன்றடுக்கு கட்டிடம்… சென்னையில் மிக குறுகிய காலத்தில் வளர்ந்து வரும் தொழிலதிபன் ஆதீரனுக்கு சொந்தமான அலுவலகம்…
பெயருக்கு ஏற்ப அந்த சூரியனின் பிரகாசம் முகத்தில் தெரிய தன் காரில் இருந்து இறங்கி வந்தான்ஆதீரன்.
அவன் இறங்கிய நொடி அருகில் வந்து நின்றான் அவனின் தனிப்பட்ட உதவியாளன் இந்த கம்பெனி மேனேஜர் என்று குறுகிய காலத்தில் ஆதீரனின் நம்பிக்கையை பெற்று அவன் வலது கை போல செயல்படும் மதன்..
அன்றைய தினம் ஆதிரனின் வேலைகளை ஒவ்வொன்றாக பட்டியலிட்டுக் கொண்டே ஆதிரனின் நடை வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஜாகிங்கில் வர நின்று ஒரு நொடி கவனித்த ஆதீரன்
“என்னாச்சு மதன்.. இன்னைக்கு நீங்களும் என்னை போல ஒர்க் அவுட் பண்ணாம வந்தீங்களா?” என்று ஒற்றை புருவம் உயர்த்தி இறக்கி கேட்க மதனுக்கு மூச்சடைப்பது போல இருந்தது.
அவன் கேட்டதால் இல்லை… இன்றைக்கு தான் உடற்பயிற்சி செய்யவில்லை என்று சொன்னதால்…
ஆம். தன் கடின உழைப்பையும் மீறி உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள தினமும் குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சியில் செலவிடுவான் ஆதீரன்.
என்றாவது உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைக்கவில்லை என்றால் அன்று முழுவதும் லிஃப்ட் பயன்படுத்த மாட்டான்… மூன்று மாடிக்கும் படிவழியே தான் ஏறி இறங்குவான். அவனோடு சேர்ந்து வரும் பாவத்திற்கு மதனும் இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்… என்பது எழுதப்படாத விதி.
ஏற்கனவே இப்போது பேசிக்கொண்டு இவன் நடைக்கு ஈடு கொடுக்க ஓடியே மூச்சு வாங்க இன்னும் மூன்று மாடிக்கு எப்படி ஏறுவேன்? உள்ளுக்குள் மலைத்துப் போனான் மதன் எனும் அப்பாவி ஜீவன்.
“மதன்… மதன் என்னாச்சு?” என்று முகத்தின் முன் சொடுக்கிட்டு நினைவுக்கு கொண்டு வந்த ஆதீரன்.
“ஏன் மேன்.. நான் மேல ஆஃபிஸ் ரூம்க்கு தானே வருவேன்… அதுக்குள்ள நீ இப்படி இறங்கி வந்து எனக்கு ப்ரோக்ராம் சொல்லனுமா? அதோட நான் ஸ்டெப்ஸ் ல வந்தா நீயும் அப்படி தான் வரனுமா என்ன?
என் வொர்க்கர்ஸ் கம்ஃபடபிளா வொர்க் பண்ண தானே இவ்வளவு ஸ்பெஷிலிட்டி… நீ ஏன் வேஸ்ட் பண்ற? நீ லிஃப்ட் ல வா… நான் ஸ்டெப்ஸ் ல வரேன்…” என்று சொல்லிய ஆதீரன் அத்தோடு மதனை லிஃப்ட் உள்ளே தள்ளி விட்டு விறுவிறு என்று மாடி ஏறி சென்றான்.
இது ஆதீரன் குணங்களில் ஒன்று… தன்னிடம் வேலை செய்பவர்கள் தன்னை சார்ந்து இருக்க வேண்டும் என்று நினைக்க மாட்டான்… அவர்களின் வசதி என்பதில் அதிகம் மெனக்கெடுவான்.
இந்த யோசனையோடு மதன் லிஃப்ட் ல் பயணம் செய்து மூன்றாம் தளம் வர சரியாக அவனுக்கு முன்பு வந்து காத்திருந்தான் ஆதீரன்.
“சாரி சார்.. லேட் ஆகிடுச்சு…” மதன் தயங்கியபடி சொல்ல
“இது உன் ஃபால்ட் இல்ல மதன்… நான் கொஞ்சம் வேகமா இருக்கேன் இந்த மிஷின்ஸை விட…” என்று அலட்சியமாக தோளை குலுக்கி சொல்லி விட்டு தன் அறை நோக்கி நடக்க அதுவரை சுறுசுறுப்பாக இயங்கி கொண்டு இருந்த அலுவலகம் ஆதீரன் முகம் பார்த்த அடுத்த நொடி பரபரப்பாக தொடங்கியது.
ஏதோ இந்த நிமிடமே கடைசி.. இதை இழுத்துப் பிடித்து மொத்த வாழ்க்கையையும் வாழ்ந்து கொள் என்று சொன்னால் எப்படி இருக்குமோ.. அப்படி தான் அனைவரும் இயங்கி கொண்டு இருந்தனர்.
அந்த பரபரப்பிலும் அனைவரும் அவர்களை அவன் கடக்கும் நொடி அவசரமாக எழுந்து “குட் மார்னிங் சார்” என்று சொல்ல ஒற்றை தலையசைப்பில் அதனை ஏற்றான் ஆதீரன்.
ஆதீரனின் கம்பீரமும் அவனின் ஆளுமை நிறைந்த தோற்றமும் எந்த பெண்ணையும் சில நிமிடமாவது பார்க்க வைக்கும் அவனை நினைத்து ஏங்க வைக்கும் அழகன் ஆதீரன். ஆண்களும் கூட தங்கள் வாழ்வில் முன்மாதிரியாக ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்கும் அவனின் செயல்களும் நடவடிக்கைகளும்…
ஆதீரன் தன் அறையில் சுழல் நாற்காலியில் அமர்ந்திருக்க மதன் அன்றைக்கு நடக்க இருக்கும் மீட்டிங் பற்றி பேசிக் கொண்டு இருக்க அறையில் இருந்த இன்டர்காம் அலறியது.
ரிசப்ஷனிஸ்ட் லிசி பதட்டமாக “சார் சாரி சார்… ஷ்ரதா மேடம் உள்ள அலோவ் பண்ண கூடாது னு நீங்க சொன்னதா சொல்லியும் கேட்காமல் அவங்க உள்ள வந்துட்டே இருக்காங்க சார்” என்று பதற
“இட்ஸ் ஓகே லிசி… ஐ வில் டேக் கேர்” என்று அழைப்பை துண்டிக்க மரியாதைக்கு கூட அனுமதி கேட்காமல் சட்டென்று கதவை திறந்தாள் அவள்…
தொடைக்கும் மேலேயே நின்றுவிட்ட இறுக்கமான ஸ்லீவ்லெஸ் உடை.. அவளின் அழகை பளிச்சிட்டு காட்ட மதன் அவளை ஒரு புழுவை போல பார்த்து வைக்க ஆதீரன் அவளை கண்டுகொள்ளவே இல்லை…
“உனக்கு மேனர்ஸ் னு ஒன்னு இல்லவே இல்லையா ஷ்ரதா? அடுத்தவங்க ரூம்க்குள்ள பர்மிஷன் இல்லாம இப்படி நுழையிற?” பல்லைக் கடித்து பொறுமையை இழுத்துப் பிடித்தான் ஆதீரன்.
“வாட் ஆதீ… ஐ’ம் இன் லவ் வித் யூ… நான் ஏன் பர்மிஷன் கேட்கனும் உன் ரூம்க்குள்ள வர? என்று குழைந்தவள் ஹேய்… பேசிட்டு இருக்கோமே தெரியலை… கெட் அவுட்” என்று மதனை பார்த்து கத்த
“ஸ்டாப் இட் ஷ்ரதா… இதே வார்த்தைய மதன் சொல்லனும்… நாங்க பேசிட்டு இருக்கும் போது நீ தான் இடையில வந்து பிரச்சினை பண்ற… இங்க மட்டும் இல்ல… என் ஒட்டுமொத்த வாழ்க்கையிலையும் பிரச்சினை பண்ற..” என்று ஆதீரன் வெடிக்க
“வாட் ஆதீ… நான் பிரச்சினை பண்ணலை உன்னை லவ் பண்றேன்… ஏன் உனக்கு புரியலை என் லவ்?” என்று அப்பாவி போல கேட்க
“ஓ… ப்ளீஸ் ஷ்ரதா ப்ளீஸ்.. புரிஞ்சுக்கோ என் லைஃப் ல ஏற்கனவே ஒருத்தி இருக்கா எங்க ரெண்டு பேருக்கும் குழந்தை கூட இருக்கு புரிஞ்சுக்கோ…. உங்க அப்பா மேல இருக்கிற மரியாதையால நான் இவ்வளவு பொறுமையா பேசுறேன்… என்னைக்கும் இந்த பொறுமை அப்படியே இருக்கும் னு நினைக்காத” என்று எச்சரித்தான் ஆதீரன்.
“மேடம் ப்ளீஸ் இப்போ தயவு செஞ்சு கிளம்புங்க” என்று மதனும் சொல்ல அவனை மேலும் கீழும் ஏளனமாக பார்த்தவள்
‘இதுவரைக்கும் என்னை பார்த்தவங்க எல்லாரும் என் அழகுல மயங்கி பின்னாடி சுத்திருக்காங்க… ஆனா என்னையே இன்சல்ட் பண்ற இல்லையா ஆதீ… பார்த்துக்கிறேன் நீ எப்படி அவளோட வாழ்ற னு நான் பார்க்க தானே போறேன்’ என்று தன் மனதுக்குள் பேசிக் கொண்டு இருக்க
“உன்னோட மைண்ட் வாய்ஸ் டிஸ்டர்ப் எல்லாம் வெளியே போய் வச்சுக்கிறயா ஷ்ரதா… எனக்கு மீட்டிங் இருக்கு” என்று சொல்லி விட்டு அங்கு அவள் நிற்பதையே கண்டு கொள்ளாமல் வேலையை தொடங்க
“ம்கூம்… ” என்று இயலாமையோடு தரையை உதைத்தவள் வெளியேறி விட ஏதோ ஒன்றை கேட்க தயங்கி அவன் முகத்தை பார்ப்பதும் தவிர்ப்பதுமாக இருந்த மதனை பார்க்காமலேயே தெரிந்து கொண்ட ஆதீரன்
“என்ன மதன் என்ன கேட்க இவ்வளவு தயக்கம்?” என்று அவன் புருவம் உயர்த்தி கேட்க
“சார்… இரண்டு வருஷமா எனக்கு உங்களை நல்லா தெரியும்… இரண்டு வருஷத்துல எந்த பொண்ணையும் ஏறெடுத்து பார்க்கலை உங்க வீட்ல உங்க கூட மனைவி காதலி.. ஏன் அம்மா அக்கா தங்கச்சி னு கூட எந்த பொண்ணும் இல்ல. ஆனா ஸ்ரதா மேடம் வரும் போது எல்லாம் ஏதோ உங்க வாழ்க்கையில ஒரு பொண்ணு இருக்கு உங்களுக்கு ஒரு குழந்தை இருக்கு னு பேசுறீங்க… ஏன் சார்… அவங்ககிட்ட எதுவும் பொய் சொல்றீங்களா இல்ல உங்க ரிலேஷன்ஷிப் சீக்ரட்டா இருக்கா?” என்று கேட்டு முடிக்கும் முன் நெஞ்சுவலி வந்துவிடும் போல உணர்ந்தான் மதன்.
விரக்தியாக சிரித்துக் கொண்டான் ஆதீரன்… “என் லைஃப் ல ஒரு பொண்ணு இருந்தா… என்னை மட்டுமே உலகமா நினைச்சு என் நிழல் மாதிரி என்னை சுத்தி சுத்தி வந்தவளை தான் இழுத்திட்டு நிக்கிறேன் மதன்…” வேதனையோடு ஆதீரன் சொல்ல
“சார்… இருந்தாங்க அப்படினா இப்போ?” என்று முடிக்காமல் கேள்வியாக நிறுத்த அவன் கேட்க வந்ததை உணர்ந்து கொண்ட ஆதீரன்
“நீ நினைக்கிற மாதிரி இல்ல மதன்…. என்னையே நம்பிட்டு இருந்தவளோட நம்பிக்கை அன்பை காதலை கொன்னு அவளை நானே என்கிட்ட இருந்து பிரிய காரணமா ஆகிட்டேன்…” விரக்தியாக ஆதீரன் சொல்ல
“இல்ல சார்…. ஒரு சாதாரண ஸ்டாஃப் எங்களுக்கே இவ்வளவு நல்லது பண்ற நீங்க இப்படி பண்ணிருப்பீங்களா?” சந்தேகமாக மதன் கேட்க
“ஒரு காலத்துல நான் அவளுக்கு பண்ணின துரோகத்துக்கு ப்ராயசித்தம் தான் இந்த ஆதீரனோட இப்போதைய செய்கைகள்… சரி விடு மதன்… வேலையை பாரு. ஆமா உனக்கு ஒரு அசிஸ்டன்ட் ரெக்ரூட் பண்ண சொல்லி சொல்லி இருந்தேனே இன்டர்வியூ என்ன ஆச்சு?…” என்று ஆதீரன் கேட்க
“சார் இன்டர்வியூ பத்தி நியூஸ் எல்லாம் கொடுத்தாச்சு சார்… நாளைக்கு இன்டர்வியூ… என்று பதில் சொல்ல சரி நீயே உனக்கான அசிஸ்டன்ட் செலக்ட் பண்ணிடு மதன். சரி நீ போய் வேலையை பாரு…” என்று அனுப்பியவன் ஆயாசாமாக தன் சுழல் நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடினான் ஆதீரன்.
கண்ணுக்குள் மின்னலாக பளிச்சிட்டது அவளின் சிரிப்பு… “தீரா…“ ஐந்து ஆண்டுகள் முன்பு அவள் காதலோடு அழைத்த குரல் இன்னும் ரீங்காரம் ஆனது அவனின் காதுகளுக்குள்… வெடிக்க துடிக்கும் எரிமலை போன்ற உள்ளம் அதன் அறிகுறியாக சூடான கண்ணீரை வெளியிட ஒரு நொடி தன் பச்சரிசி பல்வரிசை தெரிய இரட்டை ஜடையில் வலது கட்டை விரலை வாயில் வைத்து நகத்தை கடித்தபடி அவள் பார்த்த பார்வை… இந்த நொடி எதிரில் நிற்பது போன்று தோன்ற விசுக்கென்று கண்ணை திறந்தான் ஆதீரன்..
அவன் கண்ணீருக்கு சொந்தகாரி… இத்தனை நேரம் கனவில் வந்து காதல் பேசியவள் காணாமல் போக மீண்டும் இறுக்கத்தை தத்தெடுத்தது அவன் முகம்.
தலையை உலுக்கி விட்டு தன் வேலையில் கவனம் வைத்தான். சில நிமிடங்கள் அவளோடு கனவில் வாழ பகல் முழுவதும் பலமணி நேரம் நொடியும் ஓய்வின்றி உழைத்துக் கொண்டு இருக்கிறான்
தென்றலவளின் தீரன்…
– தொடரும்…
– நன்றியுடன் DP ✍️
Wowwwwwwwww semmaaaaaa sis….. Waiting for next ud…. Yennaku puducha name “dheeran”❤️😍
wow nice