Skip to content
Home » தேவதையாக வந்தவளே 12

தேவதையாக வந்தவளே 12

தேவதை 12

“அவங்க கிட்ட யாரு மாலினி சொல்ல போறது. நீ ஓகே சொன்னா நாளைக்கு காலைல ரெஜிஸ்டர் மேரேஜ். நீ இதுக்கு மேல ஃக்ரஷ் வச்சு நடத்தணும்னு நினைச்சா இங்கயே நமக்கு ஒரு பிளாட் இருக்கு. அங்க இருந்துக்கலாம். அப்படி இல்ல வேற ஏதாவது ஐடியா இருக்குன்னு சொன்னா நம்ம ஊருக்கு போகலாம். எனக்கு பிசினஸ் எல்லாம் அங்க தான் இருக்கு உனக்காகவும் குழந்தைக்காகவும் தான் இத்தனை மாசமா இங்க இருக்கேன். இதுல எனக்கு நிறைய லாஸ் தான்”, என்று முடித்தான் அரவிந்த்.

“அப்படின்னா, உங்க குடும்பத்துல இருக்குறவங்க யாருக்கும் சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணிக்க போறீங்க. என்ன போல ஒருத்தியை யாரும் ஏத்துக்க மாட்டாங்க”, என்றாள் மாலினி.

“உன்ன போல ஒருத்தி உன்ன போல ஒருத்தின்னு, நீயே ஏன் உன்னையே கொறச்சு பேசுற. அப்படி நீ எதுல குறைஞ்சு போயிட்ட??. உன்ன மதிக்க தெரியாத உன் எக்ஸ் தான் கவலைப்படணும். இனிமே இத பத்தி நாம யோசிக்க வேண்டாம். பேசவும் வேண்டாம். இங்க எல்லாருக்கும் எக்ஸ் இருக்கு. எனக்கும் இருக்கு நானும் ஒரு பொண்ண உண்மையா காதலிச்சு இருக்கேன். ஆனா அவள் என்ன இல்ல என் பணத்தை காதலிச்சு இருக்காள். இத்தனைக்கும் நாங்க ஒன்னும் பெரிய பணக்காரங்க இல்லை. ஆனா எங்க அம்மா பணக்காரங்க தான். அவங்க கிட்ட இருந்து நான் எதையும் எடுத்துக்கல. சின்னதா தூத்துக்குடியில எக்ஸ்போர்ட் பிஸ்னஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன். அதுவும் பார்ட்னர்ஷிப்ல. அதனாலதான் இங்க என்னால இவ்வளவு நாள் இருக்க முடிஞ்சது. எங்கப்பா சின்ன அளவுல கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி வைத்திருக்கிறாரு. தங்கச்சி இப்போ உயிரோட இல்ல, அதான் தங்கச்சி குழந்தையை தேடினேன். எங்களோட ஃபேமிலி இவ்வளவுதான். இப்ப அந்த பேமிலில உன்னையும் இணைத்துக்கொள்ள விரும்புகிறேன் “

. “வீட்ல பேரன்ட்ஸை எதிர்த்துகிட்டு எதுக்காக இப்படி ஒரு திருமணம்?“.

“ஃபார் யுவர் கைன்ட் இன்ஃபர்மேஷன். பேரண்ட்ஸ் எதிர்த்துகிட்டு இல்ல. எங்க அப்பாவுக்கு இந்த விஷயம் தெரியும் அம்மாவுக்கு மட்டும்தான் சொல்லல. என் தங்கச்சிக்காக, அவளுடைய பொண்ணுக்காக, என் குழந்தைக்காக. இனி இவள் என்னோட குழந்தை நம்மளோட குழந்தை. இவளை நல்லபடியா பாத்துக்கணும்னா நாம நல்லபடியா இருக்கணும். நாம நல்லபடியா இருக்கணும்னா சேர்ந்து இருக்கணும். சேர்ந்திருக்கணும்னா அதுக்கு திருமண பந்தம் ரொம்ப அவசியம். அம்மாக்கு பிடிக்காது ஆட்டுக்குட்டி திட்டு வாங்கன்னு எல்லாம் பாத்துக்கிட்டு இருந்தா என் ஷாலினி ரொம்ப கஷ்டப்படுவாள் அப்பா இல்லாம”, என்று கூறிக்கொண்டே எக்கி அவள் தலையை வருடி கொடுத்தான்.

“நான் இதுக்கு ஒத்துக்கலைன்னா”.

“உனக்கு வேற ஆப்ஷன் இல்ல மாலினி. ஒத்துக்கிட்டு தான் ஆகணும். குழந்தைக்குன்னு வரும்போது நீ பெத்தவங்கள கேட்டு முடிவு எடுக்கல, அதே குழந்தைக்குன்னு வரும்போது நான் என் அம்மாவை கேட்டு முடிவு எடுக்கனும்னு எப்படி நினைக்கிற??. நாம ஒன்னும் சின்ன குழந்தைங்க இல்ல எல்லாத்தையும் கேட்டு செய்வதற்கு. தப்பு எது சரி எதுன்னு தெரிகிற அளவுக்கு பக்குவமானவங்க தான்”, என்றான் அழுத்தமாக. அவள் கூறுவதில் இருந்த உண்மை அவளுக்கும் தெரிந்தது. அவளால் இயன்றவரை போராடிவிட்டாள். தெரிந்ததை எல்லாம் கேட்டுவிட்டாள். அவனும் அதற்கு சலைக்காமல் பதில் கூறிக் கொண்டிருக்கிறான். இதற்கு மேல் என்ன பேசுவது என்று அவளுக்கு தெரியவில்லை. ஆனால் குழந்தையை விட்டு பிரிந்திருப்பது மட்டும் அவனால் முடியாது என்று தோன்றியது. அதற்கு தான் இறந்தே விடலாம். இறப்பது வரை துணிந்தவளுக்கு சமுத்திரம் முழங்கால் அளவு. தைரியமாக ஷாலினிக்காக இந்த தடத்தை எடுத்துவை மாலினி என்று அவள் மூளை கட்டளையிட்டு கொண்டிருந்தது. ஆனால் மனம் அதை ஏற்க மறுத்தது. முந்தைய வடுக்களின் தாக்கங்கள், யாரையும் முழுதாக நம்ப மறுத்துக் கொண்டிருந்தது. அவளுக்கு உண்மையில் இப்பொழுது வேறு வழி இல்லை என்பது தான் உண்மை. ஒன்று குழந்தையை அவனிடம் கொடுத்துவிட்டு அவள் அமைதியாக இருக்க வேண்டும். இல்லை அவனுடன் அவன் சொன்னதற்கு இணங்கி செல்ல வேண்டும். இந்த இரண்டு வழியில் கூட அவன் ஒன்றை தான் குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறானே தவிர மற்ற ஒன்றை அவன் குறிப்பிடவே இல்லை. அது அவளுக்குமே புரிந்தது.

அவள் இல்லாமல் குழந்தையும் இருக்காது என்பது அவனுக்கு நன்றாகவே புரிந்திருந்தது. வேறு ஒரு பெண் குழந்தையை பார்த்துக் கொள்ள மாட்டாள் என்பதையும் அவன் கூறிவிட்டான். இதற்கு மேல் என்ன முடிவு எடுப்பது??.

” நீ யோசிச்சுகிட்டே இரு நான் ஏதாவது சிம்பிளா செய்யுறேன்”, என்று கூறிவிட்டு எழுந்தவன் சமையலறை நோக்கி சென்று விட்டான்.

உரிமையாக சென்று கொண்டிருப்பவனை தடுக்க தோன்றவில்லை அவளுக்கு. அதைப் பற்றி சிந்திக்க கூட முடியவில்லை. அவளுக்கும் அந்த நேரம் தேவைப்பட்டது. எவ்வளவு சிந்தித்தாலும் வேறு வழி இல்லை என்பதுதான் உண்மை. குழந்தை சினுங்க ஆரம்பித்தாள். அப்போதுதான் சுய உணர்விற்கு வந்தவள். அவசரமாக அவளை சுருட்டி கொண்டு எழுந்த எத்தனிக்க..

“பதட்டப்படாத அங்கேயே உட்காரு நான் சாப்பிட எடுத்துட்டு வரேன்”, என்று கூறிவிட்டு தோசையையும் சட்னியையும் எடுத்து வந்து அவள் முன்பு வைத்தான். .

ஷாலினி எழுந்தவுடன் அவனை பார்த்து மழங்க மழங்க விழித்தாள். தூக்க கலக்கம் என்றாலும் தங்கள் இருவருக்கும் நடுவில் மூன்றாவதாக யார் இவன்??, என்ற ரீதியில் இருந்தது அவளுடைய பார்வை. அவனுக்கா அந்த பார்வையின் அர்த்தங்கள் புரியாது???. புரிந்து கொண்டவன் மனதிற்குள்ளாக சிரித்துக்கொண்டான்.

“சாப்பிடுடா செல்லம். நான் உனக்கும் உங்க அம்மாவுக்கும் தோசை சுடுறேன்”, என்று கூறிவிட்டு சென்று விட்டான். அவள் அமைதியாக குழந்தை பசியை ஆற்றவிலைந்தாள். திடீரென்று யோசனை தோன்ற. சட்னியை தொட்டு சுவைத்து பார்த்தாள். எல்லாம் சரியாக இருந்தது மட்டும் அல்லாமல், ருசியாகவும் இருந்தது. தானாகவே அவளுடைய பார்வை அவனின் முதுகை துலாவியது. அதை உணர்ந்தான் போல, அவன் திரும்பிப் பார்த்தான்.

அவள் தலையை தாழ்த்திக் கொண்டாள்.

கள்ளி, திருட்டுத்தனமா பாத்துட்டு தலையை குனிஞ்சுக்குறாள் பாரு. கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கிறதுக்கு இத்தனை மணி நேரம் பேசி இருக்கேன். கூட வாழ வைக்கிறதுக்கு எத்தனை மணி நேரம் பேசணுமோ??. நேரமோ இல்ல வருஷமோ அது கடவுளுக்கு தான் வெளிச்சம்”, என்று நினைத்துக் கொண்டே அவன் தோசையை சுட்டு அடுக்கினான்.

அவனுக்கும் பசித்தது. நல்லவேளை மாவை வைத்திருந்தாள். இல்லையென்றால் அவசர கதியில் உப்புமாவை தான் கிண்டி இருக்க வேண்டும். ஆனால் உப்புமா குழந்தைக்கு பிடிக்காது. ஏன் அவனுக்குமே பிடிக்காது.

“அம்மா ப்ளீஸ் இந்த உப்புமா வேணாமே”, என்று கெஞ்சும் சாதனாவின் ஞாபகங்கள் வந்து சென்றது. அவள் வேண்டாம் என்றாலும் அதை தான் செய்து வைப்பார் அவனுடைய தாயார் விசாலாட்சி. ஆனால் ஒரு வயதுக்கு மேல் அவன் அவளுக்காக போர் கொடியை நாட்டினான்.

“அவளுக்கு தான் பிடிக்கலன்றாலே எதுக்கு வற்புறுத்துறீங்க?? . இரு சாதனா, உனக்கு நான் தோசை சுட்டு எடுத்துட்டு வரேன்”, என்று தங்கைக்காக கரண்டியை பிடித்தவன். இன்று தங்கையின் மகளுக்காக கரண்டியை பிடிக்கிறான். தோசை கரண்டியை தன் முன் தாடையில் வைத்துக் கொண்டு யோசித்தவன். அவன் முகம் திடீரென்று மாறியது. அதுவும் தங்கையின் நினைவுகளால் தான். அரவிந்த் அவசரப்படாத கோவப்படாத பொறுமையா ஆற அமர சிந்திச்சு பாரு. எட்வர்டிற்கு இதில் சம்மந்தம் இருக்கா, இல்ல அவங்க அப்பாவே இந்த ஆட்டத்தை முழுசா ஆடி இருக்காரான்னு தெரிஞ்சுக்கணும் .

ஷாலினி எப்படியும் உன்னோட பொறுப்பு அவளை யார்கிட்டயும் விட்டுக் கொடுத்துடாத. நீ விட்டுக் கொடுத்தாலும் உன் பொண்டாட்டியா வரப்போறவள் விட்டுக்கொடுக்க மாட்டாள்”, என்று அவன் மனசாட்சி எடுத்துக் கூறியது. மீண்டும் அவன் திரும்பி பார்த்தான். கர்ம சிறத்தையாய் குழந்தைக்கு தோசையை ஊட்டிக்கொண்டு இருந்தாள் மாலினி. பசி போல அவளும் நன்றாக சாப்பிட்டாள். குழந்தை இரும்ப ஆரம்பிக்க. அவள் தண்ணீர் புகட்ட எத்தனிக்க அவன் அவசரமாக வெந்நீரைக் கொண்டு வந்து கொடுத்தான்.

“அவளுக்கு தான் கோல்டு புடிச்சிருக்கு இல்ல இதை குடு”. இவனுக்கு தங்களைப் பற்றி எல்லாமே தெரிந்திருக்கிறது முக்கியமாக ஷாலினியை பற்றி. அதுதான் ஆறு மாதமாக தன் பின்னோடு சுற்றி திரிந்தேன் என்கிறானே. உதட்டை மடித்து கடித்து தனக்குள் சிந்தித்து கொண்டு இருந்தாள். தட்டில் தோசையை அடுக்கிக் கொண்டு வந்து அவள் முன்பு வைத்தவன். தனக்கும் அவளுக்குமான தட்டுடன் அமர்ந்தான்.

“எனக்கு பசிக்கல நீங்க சாப்பிடுங்க”, என்றால் அவள்.

“வீட்ல ஊறுகா இருக்கா?“, என்று கேட்டான். தான் சொன்னதை கண்டு கொள்ளாமல் அவன் வேறு கேள்வி கேட்டிருக்க.“செல்ஃப்ல”, என்றால் அவள்.

மீண்டும் எழுந்து சென்றவன். அத்தோடு வந்து அமர்ந்தான். இரு தட்டிலும் தோசையை அடுக்கினான் .

“எனக்கு பசிக்கலைன்னு சொன்னேன்”, என்றால் மாலினி அழுத்தமாக.

“உனக்கு பசிக்குதா பசிக்கலையான்னு உன் வயிறு கொஞ்ச நேரமா சத்தம் போட்டுட்டு இருந்ததில்லை எனக்கு தெரிஞ்சிருச்சு. இன்ஃபாக்ட் என் வயிறு இப்ப சத்தம் போடுது”, என்றான்.

அவள் அவசரமாக தன் வயிற்றில் கையை வைத்து தொட்டுப் பார்த்தாள்.. காலியான வயிறு சத்தத்தை ஏற்படுத்திக் கொண்டுதான் இருந்தது. இவ்வளவு நேரம் அதை அவள் கவனிக்கவில்லை. ஆனால் அவன் கவனித்து விட்டான் போல. அவள் உணர்வுகளை படித்தவன் போல.

“ இப்ப நீ சாப்பிடுறியா?, இல்ல நான் ஊட்டி விடவா? “, என்று கேட்டான். அவள் அவனை முறைத்து பார்த்தாள்.

இதற்கு மேல் சாப்பிடவில்லை என்றால் அது தவறாக போய்விடும் என்று அவள் நினைத்துக் கொண்டிருக்க. அதற்குள் ஷாலினி தோசையை பிய்த்து தன் தாய்க்கு ஊட்டி விட்டாள். அதுதான் அவர்களுக்குள் வாடிக்கையாக நடக்கும் ஒன்றாயிற்றே??. மகளின் செயலை மறுக்க முடியவில்லை அவளால்.சாப்பிட ஆரம்பித்ததும் தான் பசியே அவளுக்கு தெரிந்தது. அடுக்கி இருந்த தோசையில் முக்கால்வாசியை அவன் காலி செய்திருக்க. அவள் கால் வாசியை தின்று முடித்தாள்.

“இவனுக்கு தோசை சுட்டு கொடுக்க ஆள் தேடுகிறான் போல? “, என்று அவள் மனம் எண்ணிக் கொண்டிருக்க.

“கவலைப்படாத எனக்கு தோசையை நானே சுட்டுப்பேன். உனக்கும் நம்ம பாப்பாவுக்கும் சேர்த்து சுட்டு கொடுப்பேன் “, அவளைப் பார்க்காமலேயே கூறினான். மிடறு விழுங்கியபடி அவள் தலையை தாழ்த்திக் கொண்டாள்.

மனதில் நினைப்பதை கூட பேசுகிறானே என்று தயக்கம் அவளுக்கு. பாத்திரங்களை கூட அவனே கழுவி வைத்தான். இவன் குணமே இதுதானா, அல்லது தனக்காக நடிக்கிறானா??. நேரத்தைப் பார்த்தாள், மணி பத்தை தொட்டுக் கொண்டிருந்தது. பதறினால் மாலினி.

“சரி நீங்க கிளம்புங்க காலையில மீதியை பேசிக்கலாம்”, என்றாள்.

“தோடா, காதுல எவனாவது பூ வச்சிருப்பான் அவன் கிட்ட சொல்லு உன் கதையை. நான் ரொம்ப கிளியரா சொல்லிட்டேன். யார் கேட்டாலும் உன் புருஷன்னு சொல்லு. அது மட்டும் இல்லாம நாளைக்கு கல்யாணம் தானே பண்ணிக்க போறோம். அப்புறம் என்ன??, இந்த ஒரு நாள்ல உனக்கு நான் எவ்வளவு கண்ணியமா இருக்கேன்னு தெரிஞ்சுரும். நாளைக்கு குற்ற உணர்வு இல்லாம, பயம் இல்லாமல் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு இந்த ஒரு நைட் உனக்கு உதவியா இருக்கும்”, என்று அவன் பாட்டிற்கு பேசிக் கொண்டே படுக்கை அறைக்குள் சென்றான்

. “என்ன நெனச்சிட்டு இருக்கீங்க?, நான் என்ன திருமணத்துக்கு சம்மதிக்கவே இல்ல “, என்று அவள் கத்திக்கொண்டே இருக்க.

அவன் தலையணை போர்வையோடு வெளியில் வந்தான். “உன்ன தான் நினைச்சுகிட்டு இருக்கேன்”, என்று மனதிற்குள் கூறிக்கொண்டே,

“ நீ அமைதியா யோசிச்சுக்கிட்டே இருக்கல்ல, அதுவே உன்னோட சம்மதத்தை எனக்கு சொல்லிடுச்சு”, என்றான். அவன் பேச்சில் கோபம் எழுந்தாலும், அவன் கையிலிருந்த பொருட்களை பார்த்ததும் அவள் அமைதியாக மீண்டும் தலையை குனிந்து கொண்டாள்.

ஒரு நிமிடத்தில் அவனை தவறாக நினைத்து விட்ட தன் மனதை கடிந்து கொண்டாள்.

5 thoughts on “தேவதையாக வந்தவளே 12”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *