Skip to content
Home » தேவதையாக வந்தவளே 13

தேவதையாக வந்தவளே 13

தேவதை 13

“வெளி கதவை நான் சாத்திக்கிறேன். பெட்ரூம் கதவை நீ சாத்திக்கோ. அப்பதான் உன்னால நிம்மதியா தூங்க முடியும்”, என்று கூறிவிட்டு அவள் சம்மதத்திற்கு காத்திருக்காமல் போர்வை தலையணையோடு படுத்து விட்டான்.

“நீங்க எல்லாத்தையும் உங்க இஷ்டத்துக்கு பண்ணிட்டு இருக்கீங்க. அது உங்களுக்கு புரியுதா இல்லையா?? “, என்று கேட்டு நின்றவளை, திரும்பி பார்த்தவன். செங்குத்தாக தலையை கைக்கு முட்டுக் கொடுத்து படுத்தவன்.

“சரி, உன் இஷ்டத்துக்கு பண்றேன் சொல்லு என்ன பண்ணலாம்??. வீட்டுக்கு வெளியே வாசல்ல போய் படுக்கவா??, இல்ல மொட்ட மாடில போய் படுக்கவா? “, என்று கேட்டான் அரவிந்த். அவள் அதிர்ந்து அவனைப் பார்த்தாள்.

“நான் இதை மட்டும் சொல்லல”, தடுமாற்றத்துடன் வந்தது வார்த்தைகள்.

“நீ இதை மட்டும் சொல்லலன்னு எனக்கும் தெரியுது. நான் சொன்னதை விட உனக்கு பெஸ்ட்டா ஒரு ஐடியா தோணுச்சுன்னா காலையில யோசிச்சு சொல்லு. நான் அதை கேட்கிறேன். ஆனா குழந்தையை என்னால விட்டுக் கொடுக்க முடியாது. நீ விட்டு கொடுத்துட்டு போறேன்னா தாராளமா போ. ஆனா அப்பயும் ஒன்னு சொல்றேன். அந்த குழந்தையை பார்த்துக்க வர கேர் டேக்கரோ, இல்ல எனக்கு மனைவியா வரப்போறவளோ அந்த குழந்தையை நல்லபடியா பார்த்துப்பாங்கன்னு சொல்ல முடியாது. அப்புறம் முடிவு உன்னுடையது”, என்று கூறிவிட்டு. அவ்வளவுதான் என்பது போல படுத்து விட்டான்.

அவன் சொன்னது போல, குழந்தையோடு படுக்கை அறைக்கு சென்றவள். கதவை தாழிட்டு விட்டு அதற்கு சேரை தடுப்பாக கொடுத்துவிட்டு கட்டிலில் வந்து படுத்தாள். குழந்தையை தூக்கி கொண்டே அவள் சேரை இழுத்துப் போட்டதனால், அது ஒலியை ஏற்படுத்தியிருக்க. அதை அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

“நம்ப மாட்டேங்கறாள். அவளோட கடந்த காலம் உனக்கு தெரியும் நம்புறது கஷ்டம் தான்”, அவன் உதடுகள் முணுமுணுத்தது. அவளை தனக்கு ஆறு மாதமாக தெரியும்.

இதற்கு முன்னால் அவளை அவனும் நம்பவில்லை தானே . ஆனால் அரவிந்த் என்ற ஒருவன் அவளுக்கு புதிதானவன் புதிரானவன். மாலையில் சந்தித்து இரவில் திருமணத்திற்கு கேட்கிறான். அதுவும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தான பெண்ணை. அவள் எப்படி சம்மதிப்பாள்?, எப்படி அவனை நம்புவாள்??. குழந்தைக்கும் அவனுக்குமான பந்தத்தை அவன் ஆதாரத்துடன் காட்டி விட்டான் தான் . அவள் நம்பிக்கையை பெற அவன் காத்திருந்துதான் ஆக வேண்டும். காத்திருக்க அவனும் தயாராக இருக்கிறான்.

பாவை அவள் அவனை எப்போது புரிந்து கொள்வாளோ??. யார் என்று தெரியாதவனை அவள் வீட்டில் அனுமதித்ததே பெரிய விஷயம். இதில் அடுத்த நாள் வாழ்க்கையிலும் அனுமதிக்க கேட்கிறான். குழந்தைக்காகவே என்றாலும் அதை ஏற்றுக் கொள்வது எவ்வளவு கடினமான ஒன்று என்று அவனுக்கும் தெரிந்தே தான் இருந்தது.

“இன்னைக்கு பேசி பேசி வாய் வலிக்குது. நாளைக்கு இன்னும் எவ்வளவு பேசணுமோ தெரியல??. இவள் கிட்ட பேசறதுக்கே நாம தனியா சாப்பிடணும் போல?, ரெஸ்ட் எடுடா அரவிந்தா?? “, என்று தனக்குள்ளாக பேசிக்கொண்டு வாயை தன் கைகள் கொண்டு இரு பக்கமும் ஆட்டி தளர்த்தி கொண்டவன். அடுத்த நாளை எதிர்நோக்கி செய்ய வேண்டிய வேலை திட்டமிட்டுக்கொண்டே உறங்கிப் போனான்.

ஒரே நாளில் தன் வாழ்க்கையை மாற்றி விட்டிருக்கிறான். எங்கிருந்து எங்கு கொண்டு வந்து சேர்த்து விட்டான். தவிக்க வைத்துக் கொண்டிருக்கிறான். தவிர்க்க முடியாத பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள நினைக்கிறான். ஒரே மாலை பொழுதில் அவள் எத்தனை அதிர்ச்சிகளை தான் தாங்குவாள்??. குழந்தையா, திருமணமா என்ற கேள்விக்குறியுடன் அமர்ந்திருந்தவனுக்கு தூக்கம் வர மறுத்தது. எப்படி வரும்??. தனக்கு சொந்தமாக தன் பிள்ளையாக வளர்ந்த குழந்தை தன்னிடமிருந்து பிரிக்க ஒருவன் வந்து விட்டான். குழந்தை வேண்டுமென்றால் தன்னை திருமணம் செய்து கொள் என்று கேட்கிறான். ஆனால் அவளால் திருமணம் செய்து கொள்ள முடியுமா??. அது குழந்தைக்காகவே என்றாலும்??.இதற்கு வேறு வழி என்ன, மார்க்கம் என்ன என்று சிந்தித்து சிந்தித்து களைத்து போனது அவளுடைய மூளை.

“இது உன் வீடு அதனால ரொம்ப கண்ணியமா நடந்துக்குறான். இங்கு அக்கம் பக்கத்தில் ஆட்கள் இருக்கிறார்கள் சத்தம் போட்டால் உடனே ஓடி வந்து விடுவார்கள். பயமாக கூட இருக்கலாம்?. ஆனா நாளை??. திருமணம் செய்து கொண்ட பிறகு இந்த கண்ணியம் இருக்குமா??, அல்லது சொன்ன வாக்கைதான் காப்பாற்றுவானா??, திருமணம் முடிந்த பிறகு ஏதாவது செய்தால் என்ன செய்வது??.

ஊரார் பார்க்க சொந்தங்கள் சூழ, பெரியவர்களின் ஆசியோடு சம்மதத்தோடு அம்மி மிதித்து அருந்ததி பார்த்து கழுத்தில் தாலி கட்டினவனே என்ன ஒரு மனுஷியா யோசிக்கல. போக பொருளா மட்டும் தான் சிந்திச்சான். தட்டிக் கேட்க வேண்டிய தம்பி அமைதியா இருக்கான். எனக்கு துணையா இருக்க வேண்டிய அப்பா, ஆம்பளைங்கன்னா இப்படித்தான் இருப்பாங்கன்னு கிளாஸ் எடுக்கிறார் இவன் மட்டும் நல்லவனா இருப்பான்னு எப்படி நம்பறது??. அவள் மனம் அவளிடம் கேள்வி கேட்டது .

“ஏன் உன்னால போராட முடியாதா??. அப்போ உனக்காக மட்டும் போராடி வெளியே வந்தியே??. இப்ப குழந்தைக்காக சேர்த்து போராட போற, அவ்வளவுதான். அப்பயும் சரி இப்பயும் சரி உனக்கென யாரும் இல்ல. உன்னோட தைரியமும் துணிச்சலும் தன்னம்பிக்கையையும் மட்டும் தான் உனக்கு துணையா இருக்கு. உன்னோட உயிரா கலந்துட்ட உன்னோட குழந்தைக்காக நீ இதை செஞ்சுதான் ஆகணும். ஒருவேளை அவன் நல்லவன் இல்லைனா திரும்பவும் டைவர்ஸ் பண்ணிடு. அப்ப திரும்பவும் குழந்தையை கேட்பானே??. ஒருவேளை குழந்தைகள் இருப்பதினால் தான் நிறைய பெண்கள் எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் நல்ல கணவனே இல்லனாலும், சகிச்சுக்கிட்டு வாழ்றாங்களோ??. அப்படி ஒரு வாழ்க்கையை நீயும் வாழ்ந்துதான் ஆகணுமா??, அந்த கேள்வி அவள் மனதினுல் எழும்போதே “அம்மா’’, என்று சினுங்கி கொண்டே குழந்தை அவளை கைகளால் துலாமியபடி தேடி அவள் முந்தியைப் பிடித்துக் கொண்டு உறங்க ஆரம்பித்தாள்.

தான் இல்லை என்றால் இவள் கஷ்டப்படுவாளே??. தன்னைப் பிரிந்து இவள் இருக்கவே மாட்டாளே??. என்று அவளை கட்டி அணைந்தபடி படுத்துக் கொண்டாள்.

“ஒரு பொண்ணு ஒரு வாட்டி தான் திருமணம் செய்யணும். டைவசும் ஒரு வாட்டி தான் பண்ணனும். சும்மா சும்மா பண்ணா, உன் மேல நான் தப்பு இருக்குன்னு நினைப்பாங்க. உங்க அப்பா சொன்ன மாதிரி, உனக்கு பொறுத்துப்போக தெரியலன்னு சொல்லுவாங்க ”, அவள் மூளை எச்சரிக்கை விடுத்தது.

“அப்படி என்ன பண்ணிட போறேன்??, போட்டோ எடுக்க போறேனா, இல்ல ரேப் பண்ண போறேனா??, ஏன் உன்னால ஒருத்தனை தடுக்க முடியாதா இல்ல அவனுக்கு தண்டனை தான் கொடுக்க முடியாதா??. அவன் கேட்ட கேள்வி அவள் மூளையில் வந்து சென்றது.

“இதெல்லாம் உனக்கு புதுசா இதெல்லாம் ஏற்கனவே அனுபவிச்சு இருக்கியே??, ஏற்கனவே அனுபவிச்சன்றத்துக்காக திரும்பவும் அனுபவிக்கணுமா??. அப்ப இதுக்கு என்னதான் வழி. உனக்கு குழந்தை வேணுமா வேணாமா??, சொந்த தந்தையே தன்னை எவ்வளவு கேவலமாக பேசினார் என்று அவளுக்கு தெரியும். எத்தனையோ மாற்றங்கள் வாழ்க்கையில் நேர்ந்து கொண்டு தான் இருக்கிறது. . இந்த குழந்தைக்கு தாயும் இல்லை தந்தையும் இல்லை. ஆனால் ஒரு வகையில் இவன் உறவுக்காரன் உரிமை உள்ளவன் வேறு. நாம் உரிமை அற்றவள். ஆனால் இவன் சொல்வதை கேட்டால் உரிமை வந்து சேரும். ஷாலினியை தன்னிடம் இருந்து யாருமே பிரிக்க முடியாது. ஆனால் ஒருவேளை அவளுடைய தகப்பன் வந்து கேட்டால்??, தாய் மாமனை விட தகப்பனுக்கு தானே உரிமை இருக்கிறது அந்த சந்தேகத்தை அவள் அவனிடமே கேட்க வேண்டும் என்று நினைத்து கொண்டாலே தவிர உறக்கம் மட்டும் வருவேனா என்று அலிசாட்டியும் செய்து கொண்டிருந்தது. பல குழப்பங்களுக்கு நடுவில்.

“உன்னோட தைரியத்தை மட்டும் நம்பி கலத்துல இறங்கு”, என்று கூறியபடி ஒரு முடிவை எடுத்தாள்.

மறுநாள் காலையில் அவர்கள் இருவரும் விழித்து வெளியில் வரும் போது. அவன் சமையல் அறையில் தான் எதையோ உருட்டிக் கொண்டிருந்தான்.

“இவன் வீடுன்னே நினைச்சுட்டான் போல, இப்பவே இவ்வளவு உரிமை எடுத்துக்குறவன் qதிருமணம் ஆனா என்ன பண்ணுவான்? வீட்டோட சேர்த்து நம்ம மேலயும் உரிமை எடுத்துக்கிட்டா என்ன பண்றது?“, அவள் மனம் மீண்டும் குழம்ப துடித்தது.

அவள் தொண்டையைக் கனைத்தாள்.

“குட் மார்னிங்”, என்று ஆரவாரமாக காலை வணக்கத்தை கூறினான்.

“என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க??, இது என்னோட கிச்சன்”, என்றால் மாலினி.

சிரித்துக் கொண்டே திரும்பியவன். ஷாலினியின் கன்னத்தை செல்லமாக தட்டி விட்டு. உன் வீடு என் வீடு, உன் கிச்சன் என் கிச்சன், உன் குழந்தை என் குழந்தை உன் சொத்து என் சொத்து இது எல்லாம் மாற போகுது. நான் என்பது மாறி நாம் என்பது ஆக போகும்போது இப்ப எதுக்கு இந்த பேச்சு? “. அவன் பேச்சில் அவள் ஸ்தம்பித்து நிற்க. திறந்திருந்த அவள் வாயை மூடச் சென்றான். அவள் சுதாரித்து இரண்டடி பின்னால் சென்று தானாகவே மூடிக்கொண்டாள். அவன் சத்தமாகவே சிரித்தான் அவளுடைய செயலை பார்த்து.

“ நான் பசி தாங்க மாட்டேன். அதுக்காக உன்னை தொல்லை பண்ணவும் மாட்டேன். சமைக்க பழகிட்டேன். முதல்ல இந்த தோசைக் கரண்டியை தூக்குனது என் தங்கச்சிக்காக. இப்ப என் தங்கச்சி பொண்ணுக்காக. எங்க அம்மா கிட்ட சண்டை போட்டுக்கிட்டு தனியா வந்த காலத்துலையே சமைக்க கத்துக்கிட்டேன். அதனால உனக்கு கவலை வேண்டாம். நீ இங்கே இருக்க போறியா, இல்ல என் கூட தூத்துக்குடிக்கு வர போறியான்னு மட்டும் சொல்லு”, என்றான் அரவிந்த்.

“ எல்லாம் இவன் இஷ்டம் “, என்று மனதிற்குள் கடுகடுத்தவள்.

“நான் இங்கேயே குழந்தையோட இருந்துக்குறேன். நீங்க தூத்துக்குடிக்கு போறீங்களா? “, இவனிடம் சண்டையிடுவது வீண். அது அவளுக்குத்தான் பாதகமாக முடிந்து விடும் சமாதானமாக போவது தான் மேல், என்று இரவெல்லாம் யோசித்து முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு கேட்டாள்.

“அஸ்கு புஸ்கு அப்பள வடை ”, தன் வலகையை இட கைக்கு நடுவில் வைத்துக்கொண்டு கையை ஆட்டியபடி கூறினான். அதில் அவளுக்கு சிரிப்பு வர துடித்தது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள்.

“உன்ன விட்டுட்டு போற ஐடியா இல்லை. ஐ மீன் உங்க ரெண்டு பேரையும். ஒன்னு நான் இங்க இருந்தே அந்த பிசினஸை கண்டினியூ பண்ணலாம். அப்படி இல்லன்னா அதுல இருந்து ஷேர் வாங்கி இங்கே ஏதாவது புதுசா பிசினஸ் ஸ்டார்ட் பண்ணலாம். அது வரைக்கும் உன் புருஷனுக்கு நீ சோறு போட மாட்டியா என்ன?? “, என்று கேட்டுக் கொண்டே லாவகமாக பூரியை சுட்டுக் கொண்டிருந்தான். அவன் சொன்னதை விட அவன் சமையல் அவளை ஈர்த்தது. அதிர்ச்சியிலே என்றாலும், இப்பொழுதுதான் அவள் அவன் செய்து கொண்டிருந்ததை பார்த்தாள்.

அவள், அவனைத் தாண்டி கொண்டு வந்து பார்த்தாள். அவளைப் போல சட்டியில் எண்ணெய் கொதித்துக் கொண்டிருக்க. பக்கத்தில் தக்காளி தொக்கு வெந்து கொண்டிருந்தது. அவன் பூரியை அடுக்கி கொண்டிருந்தான்.

உண்மையில் இவன் நிறைய சாப்பிடுவான் போல? “, என்று எண்ணினால் அவள்.

6 thoughts on “தேவதையாக வந்தவளே 13”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *