தேவதை 14
“இங்க ஒரே ஒரு பாத்ரூம் தான் இருக்கு. நீ குளிச்சிட்டியா? நீ பிஃரஷ் ஆயிட்டு வந்துட்டேனா. நான் பிஃரஷ் ஆகிவிட்டு வந்துருவேன். ரொம்ப பசிக்குது”, என்றான் அரவிந்த்.
“பசிக்குதுன்னா நீங்க முதல்ல குளிச்சிட்டு வாங்க. இவளுக்கு பல்லு தீத்திட்டேன். குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிடுறேன்”, அவள் அவசரமாக கூறினாள்.
அவன் பசி என்று சொன்னவுடன், அனைத்தையும் மறந்து விட்டாள். ஒரு பெண்ணாக தாயாக பசியாற்றுவது தான் முதன்மை என்று நினைத்தாள். அவள் கூறியதே அவனுக்கு போதுமானதாக இருந்தது. அவளுடைய தாய்மையும் புரிந்தது.
அவனிடம் வேறு எந்த உடையும் இல்லை. குளித்துவிட்டு அதே உடையை உடுத்திக் கொண்டு வந்தான். அவன் தலையை துவட்டிக் கொண்டே வர.
“ஐயோ அது என் டவல்”, என்று மாலினியின் மனம் படபடத்தது.
“குளித்தால் டவல் இல்லாமல் எப்படி துடைக்க முடியும். அப்படின்னா சோப்பு கூட நம்மளுது தான் யூஸ் பண்ணி இருப்பானோ??, கேள்வி கேட்டா உன்து என்துன்னு கிளாஸ் எடுப்பான். ஐயோ உனக்கு அறிவே இல்ல மாலினி”, என்று அவள் முகத்தை சுருக்கி வைத்துக் கொண்டாள்.
அவள் பாவனை அவள் பார்வை சென்ற இடம் என்று அனைத்தையும் கவனித்தவன். உதட்டை சுழித்து உச்சு கொட்டி விட்டு அவளை நெருங்கினான்.
“நீயும் குளிச்சிட்டு ரெடியா இரு. கல்யாணம் ஆகப்போகுது. ஒரே டவல், ஒரே சோப்பு இதெல்லாம் யூஸ் பண்ண பழகிக்கோ”, என்றான். .
“இப்ப இதை கேட்டுட்டு. அப்புறம் ஒரே ரூம்னு சொல்லுவீங்க”, பட்டென்று அவளிடம் இருந்து வார்த்தை வந்திருக்க. அவன் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை சிரித்து வைத்தான்.
“ என்ன சிரிக்கிறீங்க??, அப்ப அதுதான் உங்க மைண்ட்ல இருக்கு இல்லையா? “,.
“ இது எல்லாத்துக்கும் நேத்தே உனக்கு எக்ஸ்பிளைன் பண்ணிட்டேன். நீ திரும்பத் திரும்ப கேட்டா என்னால திரும்ப திரும்ப பதில் சொல்ல முடியாது. எனக்கு வாய் வலிக்குது. இன்ஃபாக்ட் உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டா எனக்கு கண்டிப்பா வாய் வலிக்கும்னு தோணுது. இருந்தாலும் பரவால்ல, அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன் என் பொண்ணுக்காக “.
“ பெரிய இவன்,, இவன் பேசிய உடனே இவனை நம்பிடனுமா இல்ல இவன் கேட்ட உடனே கல்யாணத்துக்கு தான் சம்மதிச்சுடனுமா?? “, அவள் மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்க.
அவன் சிரித்துக் கொண்டே அதையும் கூறினான், “கேட்டவுடனே சம்மதிக்கிறதும் பார்த்த உடனே நம்பறதும் கஷ்டம் தான். ஆனா இவள் என் தங்கச்சி பொண்ணுங்கறத நான் உனக்கு ப்ரூப்ஓட நிரூபிச்சுட்டேன் இல்லையா??, குழந்தைக்காக தான் கல்யாணம் பண்ணிக்கவும் கேட்கிறேன். ஏன்னா உன்ன விட வேற யாரும் ஷாலினிய நல்லா பார்த்துக்க மாட்டாங்க. இதுக்கு மேலயும் என் மேல உனக்கு நம்பிக்கை இல்லைன்னா, இந்த குழந்தை என் தங்கச்சி குழந்தை தான்றதுல நம்பிக்கை இல்லனா நான் உன்னை என் அப்பா கிட்ட பேச வைக்கிறேன் “.
“நாம மனசுல நினைக்கிறது கூட அவன் வெளியில சொல்றான். எப்படி சொல்றான்??. அவனுக்கு மைண்ட் ரீடிங் தெரியுமா??. இவர்கிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் போல”, மனதிற்குள் எண்ணிக்கொண்டவள்,
“நான் இன்னும் திருமணத்துக்கு ஒத்துக்கல”, என்றால் மாலினி அழுத்தமாக.
“அப்ப வேற ஆப்ஷன் வச்சிருக்கியா சொல்லு”, என்று அவன் கேட்டு நிற்க.
மிடறு விழுங்கினால் மாலினி.
“என்கிட்ட குழந்தைய குடுத்துற போறியா??. அப்ப நான் இவளுக்கு கேர் டேக்கரோ, இல்ல அம்மாவோ தேடணுமா?? “, அவன் உதட்டில் கையை வைத்து யோசிப்பது போல் பாவனை செய்தான்.
அவளை எங்கு அடித்தால், அவள் எங்கு சாய்வாள் என்று அவன் நன்றாகவே அறிந்து வைத்திருந்தான். அவளுடைய பலவீனம் எது என்று தெரிந்தவனுக்கு, ஷாலினி தான் அவனுடைய பலம் ஆகினாள்.
“இந்த குழந்தையோட அப்பா வந்து கேட்டா என்ன பண்ணுவீங்க??, தாய் மாமாவை விட அப்பாவுக்கு தானே உரிமை அதிகம்??”, தன்னை சுதாரித்துக் கொண்டு இரவில் தோன்றிய சந்தேகத்தை கேட்டு விட்டால் மாலினி .
“குழந்தையோட அப்பா யாரு? நான் தானே. வேற யாரு வந்து கேப்பா?? “, மிக சாதாரணமாக பேசினான் அரவிந்த்.
“என்ன விளையாடுறீங்களா?, உங்க தங்கச்சியோட குழந்தை தானே இது. உங்க தங்கச்சியோட புருஷன் வந்து கேட்க மாட்டானா?? “..
“மாலினி குழந்தை உயிரோட இருக்கிறது எனக்கும் எங்க அப்பாவுக்கு மட்டும் தான் தெரியும். வேற யாருக்கும் இல்ல. எங்க அம்மாவுக்கு கூட நான் ஷாலினியை என் குழந்தையின்னு தான் சொல்ல போறேன். அவன் அவனுடைய குழந்தையை தேடுனும்னா, முன்னாடியே தேடி இருக்கணும். அப்படி தேடல அவங்க அப்பா வற்புறுத்தினார்ன்னு சமீபத்துல தான் இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டான். அவங்க மனைவி இப்ப பிரக்னண்டா இருக்காங்க. அவன் நல்லவனா கெட்டவனான்னு இனிமேதான் நான் ஆராயணும். இதுக்கு முன்னாடியே விசாரிச்சு தான் நான் என் தங்கச்சியை கல்யாணம் பண்ணி கொடுத்தேன். இப்ப விசாரிக்காம நானே யூகிச்சுக்க விருப்பப்படலை. ஆனால் குழந்தை என்னோட குழந்தை தான் அதுல மாற்றம் இல்லை”.
“இது உங்களோட குழந்தைன்னு சொன்னா யாராவது நம்புவாங்களா??“, கேட்டுவிட்டாள்.
ஐயோ அவசரப்பட்டு வார்த்தையை கொட்டிட்டேனே??. நாக்கை கடித்துக் கொண்டாள். அவன், அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே மகளை திரும்பி பார்த்தான்.
“உன் குழந்தையின்னு சொல்லும் போது நம்புனாங்க இல்ல. அப்ப இதையும் நம்புவாங்க“, என்று பொறுமையாகவே கூறினான்.
சமட்டியால் அடித்த உணர்வு மாலினிக்கு . அவளுக்கும் குழந்தைக்கும் கூட எதுவுமே பொருந்தாமல் தானே இருந்தது. ஆனால் யாரும் அவளிடம் இந்த கேள்வியை கேட்டதில்லையே??, ஒருவேளை மனதிற்குள் இருந்திருக்கும் கேட்டிருக்க மாட்டார்கள். ஆனால் தான் அவனைக் கேட்டது தவறு தானே??. அவன் நினைத்துக் கொண்டே இருக்க. அவன் முதலில் மன்னிப்பு கேட்டு விட்டான்.
“சாரி மாலினி உன்னை ஹர்ட் பண்ணனும்னு நான் சொல்லல. ஜெனிடிக்கா என் தங்கச்சி மாதிரி என் குழந்தை இருக்குறதுக்கு வாய்ப்பு இருக்கு இல்லையா??. அதனால யாரும் எந்த கேள்வியும் கேட்க மாட்டாங்கன்னு சொல்ல நினைச்சேன். இது என்னோட குழந்தை, நீ என்னோட மனைவி. நாம ரெண்டு பேரும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டதா தான் சொல்லுவேன். உனக்கு டைவர்ஸ் ஆனதுக்கப்புறம் தான் இந்த குழந்தை உன் கையில் கிடைத்தது. சோ அப்பவே நாம கல்யாணம் பண்ணிக்கிட்டதா தான் சொல்லுவேன். அதாவது என் குடும்பத்துக்கும் என்னை சேர்ந்தவங்களுக்கும் இவள் என்னோட குழந்தையா. ஐ மீன் நம்மளோட குழந்தையா வளருவாள். ஷாலினி என் குழந்தைன்னு இவளுக்கு நான் சர்டிபிகேட் வாங்கிடுவேன். நீ அம்மா, நான் அப்பா ஷாலினி நம்ம குழந்தை. யாரும் வந்து என்னை எந்த கேள்வியும் கேட்க முடியாது. ஜெனிடிக்கா ப்ரூஃப் பண்ணவும் முடியாது. அப்படி ஒரு வேலை குழந்தைய கேக்குறதுக்கு அவங்க முயற்சி பண்றதுக்குள்ள நீ சொன்னியே அந்த காரணத்தை தோண்டி துருவி எடுத்துடுவேன். இன்னுமே அவன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. பாக்கலாம் காலம் தான் இதுக்கு பதில் சொல்லணும். இப்ப முதல்ல நம்மோட திருமணம். அப்புறம் என் அம்மாவை சமாளிக்கணும். உன் பேரன்ட்ஸ்க்கு தெரிஞ்சா அவங்களையும் சமாளிக்கனும். அதுக்கு நடுவுல இதையும் விசாரிக்கணும்”, அவன் பேசிக் கொண்டே இருக்க அவள் வாயடைத்து போய்விட்டாள்.
“குழந்தைக்கு தகப்பன் நான். தாய் நீ” என்ற வார்த்தையிலேயே அவள் மனம் சுழன்றது.
“இதுக்குள்ள குழந்தைக்கு என்ன அவசரம்??, அப்புறமா பெத்துக்கலாம் மாத்திரை போடுன்னு சொன்னா. வைத்த தள்ளிட்டு வந்து நிக்குற. ஒழுங்கா அபார்ஷன் பண்ணிட்டு வா. எனக்கு இந்த குழந்தை தேவையில்லை”, என்ற வார்த்தைகள் அவள் காதினில் நாராசமாக ஒலித்தது. அவள் அதற்கு மாட்டேன் என்று சொல்ல. அடித்து உதைத்து அந்த குழந்தையை கலைக்க வைத்திருந்தான் அவளுடைய முன்னாள் கணவன்.
சிந்தித்துக் கொண்டிருந்தவளின் முன்பு சுடக்கிட்டான் அரவிந்த். அவள் எதிலிருந்தோ மீண்டவள் போல அவனைப் பார்க்க அலைபேசியை காட்டினான். அதில் ஒரு வயதானவர் இருந்தார்.
“ஹாய் மாலினி, எப்படி இருக்காள். என் பேத்தி ஷாலினி எப்படி இருக்காள்? “, அவள் வாயை பிளந்து கொண்டு பார்த்தாள் .
அவன், அவள் தாடையில் கையை வைத்து அவளுடைய வாயை மூடினான்.
“எங்கப்பா ஸ்டாச்சு சொன்னாதா எனக்கு ஞாபகம் இல்ல,, கேள்வி கேட்டா பதில் சொல்லணும் மாலினி “, என்று கூறினான் அரவிந்த்.
எச்சிலை உன் கூட்டி விழுங்கியவள், மூச்சு வாங்க,
“நான் நல்லா இருக்கேன். ஷாலினி நல்லா இருக்காள். நீங்க நீங்க எப்படி இருக்கீங்க?“, என்று கேட்க.
தந்தை மகன் என்று இருவரின் முகத்திலும் மிதமான புன்னகை கீற்று.
” என் பையன கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டியா, இல்ல இன்னும் இல்லையா?? “, என்று அவர் மீண்டும் கேட்க. அவள் முகத்தில் வேர்வை அரும்புகள் துளிர் விட ஆரம்பித்தது. மேலும் கீழும் தலையாட்டியவள், பிறகு இல்லை என்று இடமும் வலமும் தலையாட்டினாள்.
“ பேசி பேசி உன்ன கன்பியூஷன் பண்ணிட்டானா??, அவன் பேசுறதுல ரொம்ப வல்லவன் தான். எல்லாரையும் பேசிப்பேசியே கவுத்திடுவான். ஆனா உன் விஷயத்துல ஒண்ணுமே முடியாதுன்னு சொல்லிக்கிட்டு இருந்தானே. நீ இப்ப தலையாட்டுறதை பார்த்தா குழம்பி இருக்குறேன்னு தோணுது “, என்றவர் பேசிக் கொண்டே இருக்க. அலைபேசியை தன் புறம் திருப்பியவன்.
“ அப்பா நீங்க என்ன பத்தி ஆஹா ஓஹோன்னு சொல்லலனாலும் பரவால்ல, என்ன டேமேஜ் பண்ணாதீங்க. உங்க மருமகள் கிட்ட பேசி எல்லாம் கவிழ்க்க முடியாது. நேத்து முழுக்க பேசி இருக்கேன். எனக்கு வாயே வலிக்குது அப்ப கூட இன்னும் குழப்பத்துல தான் இருக்காள். நான் போன வைக்கிறேன் கல்யாணத்துக்கு நேரம் ஆகுது “, என்று அவர் பதிலுக்கு கூட காத்திருக்காமல் அலைபேசியை வைத்து விட்டான்.
“என்ன மாலினி அப்பா கிட்ட என்ன இப்படி மாட்டி விட்டுட்ட??. அவர்கிட்ட ஆசிர்வாதம் வாங்கலாம்னு நினைச்சேன். நீ என்னனா நாலு பக்கமும் தலையாட்டி அவர குழப்பியடிச்சுட்ட. இப்ப அவர் என்ன திட்ட போறாரு. இப்பவும் என்ன உனக்கு பிரச்சனை?? இன்னுமே குழப்பம் இருக்கா?? இல்ல என் மேல சந்தேகம் இருக்கா, இல்ல திருமணத்துக்கு யோசிக்கிறது உனக்கு டைம் வேணுமா? என்று கேட்டான்.
அவள் அவசரமாக தலையை ஆட்டினாள் “ஆமாம்”, என்பது போல.
“நீ யோசிக்கிற வரைக்கும் மேரேஜ் பண்ணிக்காம நாம இப்படி ஒன்னா இருக்குறதுல உனக்கு பிரச்சனை இல்லனா எனக்கும் பிரச்சனை இல்லை. எவ்வளவு நேரம் வேணாலும் எடுத்துக்கோ. இந்த ஆறு மாசம் காத்துக்கிட்டு இருந்தது போல, இன்னும் ஆறு மாசமோ இல்ல ஒரு வருஷமோ கூட காத்துகிட்டு இருக்க நான் தயாரா இருக்கேன்”, என்று அலட்டிக் கொள்ளாமல் குண்டை தூக்கி அவள் தலையில் போட்டிருந்தான்.
“என்ன விளையாடுறீங்களா?? “, என்று கேட்டால் மாலினி.
சுற்றும் முற்றும் தன்னை பார்த்துவிட்டு. “எப்ப பார்த்தாலும் என்ன விளையாடுறியான்னு கேட்குற??. நான் எங்கம்மா விளையாடறேன்??, இல்ல நான் பேசுறதே உனக்கு விளையாடுற மாதிரி தோணுதா? “..
“அது எப்படி ஒரே வீட்ல இருக்க முடியும்? “.
“ஏன் முடியாது. எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு. அதாவது ஷாலினி விஷயத்துல உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. அதே ஷாலினி விஷயத்துல உன் மேல எனக்கு நம்பிக்கை இல்லை. நீ என்னை ஏமாத்திட்டு குழந்தையை தூக்கிட்டு ஓடிடுவேன்னு . உன்னோட கம்பர்ட்டபிளுக்காக நான் இதை தான் பண்ண சொல்லி கேட்கிறேன். கல்யாணம் பண்ணாம இருக்கணும்னா இங்க இருந்து குழந்தையோட ஓடலான்ற முடிவை நீ எப்ப வேணாலும் எடுப்ப. அதனால அந்த விஷயத்தை பொறுத்த வரைக்கும் காம்ப்ரமைஸ் இல்ல. சீக்கிரமா ஒரு முடிவு சொல்லு. இல்லனா நான் வேற யாரையாவது தேட வேண்டியது இருக்கும்”, என்று கூறிவிட்டு தட்டையும் தக்காளி தொக்கையும் எடுத்துக் கொண்டு வந்து அமர்த்தவன். சாப்பிட ஆரம்பித்து விட்டான். சிறிது நேரம் அவள் அப்படியே அமர்ந்திருந்தாள் . உண்டு முடித்தவன் எடுத்துச் சென்று அதே போல அடுக்கி மூடி வைத்து விட்டு வந்து. நேரத்தை பார்த்தவன்.
“முடிவு பண்ணிட்டியா??”, என்று கேட்டான்.
“அடேய், நீ சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள நான் முடிவெடுக்கணுமா இதெல்லாம் அநியாயம் டா”, என்று மனதிற்குள் அவனை அர்ச்சனை செய்தவள்.
“இல்லை” என்று தலையாட்டினாள். கைகளை கட்டிக்கொண்டு அவளையே ஆழமாக பார்த்தான். சிரித்தபடி தோள்களை குலுக்கினான்.
Interesting😍
Nice
Aravindh avanga appa sonnathu pola ivan pesiyae aalu ah convince panniduvan pola yae
interesting