தேவதை 17
“அதுக்குள்ள டென்ஷன் ஆகிடாத, நான் என்ன சொல்லி இருக்கேன். உன்னோட விருப்பம் இல்லாம உன்கிட்ட வரமாட்டேன், உன்னை தொட மாட்டேன். ஐ மீன் ஹஸ்பண்ட் வைஃபை தொடுற மாதிரி தொட மாட்டேன். ஆனா ஆத்திர அவசரத்துக்கு தொட்டுக்கலாம், அதெல்லாம் தப்பு சொல்ல கூடாது”, என்று கூறியபடி வீட்டு சாவியை எடுத்துக்கொண்டு வாசல் வரை சென்று விட்டான்.
“என்னமா கிரஷ் போகணும்னு சொல்லிட்டு அப்படியே நிக்குற??, வா போகலாம். இங்க இருக்கிறவங்களுக்கு இன்றோ கொடுத்தாச்சு. அங்க போறதுக்குள்ள என்ன இன்ட்ரா கொடுக்கணும்னு யோசிச்சு வச்சுக்கலாம்”, என்று கூறியபடி கைபிடித்து அவனே அழைத்துச் சென்றான்.
கிரஷில் இருந்தவர்களும் அவர்கள் மூவரையும் வித்தியாசமாக பார்த்தனர்.. அவள் வாயை திறக்கவில்லை. அவனே வீட்டின் அருகில் உள்ளவர்களிடம் சொன்ன அதே பொய்யை சொன்னான். அவள் அப்படியே பார்த்துக் கொண்டிருக்க. அவளைப் பார்த்து கண்களை சிமிட்டியவன்.
“மாத்தி மாத்தி நிறைய பொய் சொல்லிட்டா அப்புறம் தேவை இல்லாம மாட்டிப்போம் எதுக்கு வீணா??”, என்று உதட்டை சுளித்துக் கூறினான்.
எதிலோ மாட்டிக் கொண்ட உணர்வு அவளுக்கு. சிக்கிக்கொண்டாள், இனி தப்பிப்பது கடினமே.
நாயகன் ஸ்டைலில் இவன் நல்லவனா கெட்டவனா என்று சிந்தித்து சிந்தித்தே அந்த இரண்டு நாட்களில் அவள் மண்டை காய்ந்து வறண்டு போனது. கையில் இருந்த மடிக்கணினியிலேயே வேலை செய்தான். வரவேற்பரையிலேயே அமர்ந்திருந்தான். வீட்டிற்கு வரும் வழியிலேயே உணவை வாங்கிக் கொண்டு வந்து விட்டார்கள். அதனால் உணவு செய்ய வேண்டிய அவசியம் இருந்திருக்கவில்லை. அவன் மடிக்கணி கையுமாக அமர்ந்திருப்பதே அதில் ஏதோ செய்து கொண்டிருக்கிறான் என்று தெரிந்தது. தன்னைத் தொல்லை செய்யாமல் இருக்கிறான் அது போதும் அவளுக்கு. ஆனால் இரவும் அதே போல இருப்பானா??, என்ற சந்தேகம் எழுந்து நின்றது. உணவை முடித்துக் கொண்டு அவள் மீண்டும் தன்னறைக்குள் தஞ்சம் புகுந்து விட்டாள். அவள் பயந்தது போல அவளை எந்த விதத்திலும் தொல்லை செய்யவில்லை அவன். இரவு குழந்தைக்கு பால் கொடுக்கவில்லையே என்று அவள் வெளியில் வரும் போது. அவன் அவள் அறை முன்பே அதை வைத்திருந்தான்.அன்று இரவும் அப்படியே சென்றது.
முதல் நாளை விட அன்று கொஞ்சம் உறங்கினால் என்று சொல்லலாம். காலையில் குழந்தை அழும்போது தான் அவளுக்கு உணவு சமைக்க வேண்டும் என்று நினைப்பே வந்தது. பாலை காய்ச்சுவதற்கு வர அவன் தேநீரை போட்டு விட்டு குழந்தைக்கு பாலை ஆற்றி கொண்டிருந்தான். இன்று ஒழுங்காக சமைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். குழந்தைக்கு விளையாட்டு சாமான்களை எடுத்து போட்டுவிட்டு அவள் அடுக்கலைக்குள் நுழைய.
“சமைக்க தான் போரால் போல??, ஆனா எதுவுமே இல்லையே?? “, என்று அவன் சிரித்துக் கொண்டே சிந்தித்தான்..
அவளும் அதையே யோசித்து விட்டு ஃப்ரிட்ஜில் வேறு ஏதாவது இருக்கிறதா என்று உருட்டிக் கொண்டிருந்தாள். காலிங் பெல் சத்தம் கேட்டது. அவன் அமைதியாக அமர்ந்திருக்க. அவள் வெளியில் சென்று திறந்திருந்த கதவின் வழியாக பார்க்க அங்கு பொருட்கள் டெலிவரி செய்யும் ஒரு மனிதன் நின்று கொண்டிருந்தான். கையில் பொருள்களுடன்.
“என்ன வேணும்?? “, அவள் ஆர்டர் செய்யாததால் தயக்கத்துடன் அந்த மனிதரிடம் கேட்டாள்.
“இங்க மாலினி, நம்ம 31 பார் 2, செகண்ட் ப்ளோர். நீங்க தானே?? “, அங்கு எழுதப்பட்டிருந்த நம்பரை பார்த்து விட்டு மீண்டும் கேட்டான் அவன்.
“ஆமா நான் தான். ஆனா நான் ஆர்டர் பண்ணல”, என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அந்த மனிதன் அலைபேசியை காட்ட.
“மாலினி, நான்தான் ஆர்டர் பண்ணேன். வீட்ல எல்லா திங்க்ஸ் காலி ஆயிடுச்சு இல்லையா??, அதனால எனக்குத் தேவைன்னு தோணுது ஆர்டர் பண்ணி இருக்கேன். பத்தலனா திரும்பி பண்ணிக்கலாம்”, என்று அவன் சாதாரணமாக கூறிவிட்டு வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டான்.
“சாரி சார், அவங்க பண்ணி இருக்காங்க போல். எனக்கு தெரியல”, என்று பேசிக்கொண்டே அந்த மனிதனிடமிருந்து அந்த பொருள்களை வாங்கியவள். “எவ்வளவு ஆச்சு? “, என்று கேட்டாள்.
“2200 மேடம்”. “இருங்க நான் போய் எடுத்துட்டு வரேன்”.
“கேஷ் பண்ணியாச்சு மேடம். வெறும் டெலிவரி மட்டும்தான்”, என்று கூறிவிட்டு அவன் அமைதியாக சென்றுவிட்டான்.
“இப்பொழுது தான் என்ன செய்ய வேண்டும்??, பணத்தை அவனிடம் கொடுக்க வேண்டுமா, அல்லது தானே வைத்துக் கொள்ள வேண்டுமா?? “. அவன் முன்பு சென்று நின்றாள். அவளை நிமிர்ந்து பார்த்தவன்.
“குழந்தைக்கு ரொம்ப பிடிச்ச பிஸ்கட் அதுல இருக்கு. சாக்லேட் கொடுத்தா தான் உனக்கு பிடிக்காதே, சோ அதை எடுத்து அவள் கிட்ட கொடுத்திரு”, என்று கூறிவிட்டு அவன் குனிந்து கொண்டான்.
“எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சிருக்கான்”, என்று அவனை மனதிற்குள் வறுத்தெடுத்தவள். அமைதியாக அந்த அட்டைப்பெட்டியின் உள்ளே இருந்த, அவன் கூறிய அந்த பிஸ்கட்டை எடுத்து குழந்தையிடம் நீட்டினாள்.முகம் கொள்ளா சந்தோஷத்துடன் ஷாலினி அதைப் பெற்றுக் கொள்ள.
பொருட்களை சமையல் அறையில் வைத்து விட்டு வந்தவள். தன் ஹேண்ட் பேக்கை திறந்து பணத்தை எடுத்து வந்து அவனிடம் நீட்டினாள். பணத்தையும் அவளையும் ஏற இறங்க பார்த்தவன். அவள் கழுத்தைப் பார்த்தான். இன்னும் அவன் அணிவித்த மாங்கல்யம் அவள் கழுத்தில் தான் இருந்தது.
“என்ன, இதுக்கு மட்டும் காசு தர??, கழுத்துல இருக்குற அந்த தங்கச் சரடு தாலி இதுக்கெல்லாம் சேர்த்து கொடுப்பேன்னு பார்த்தா, வெறும் இரண்டுயிரத்தி இருநூறு ரூபாய் கொடுக்குற?? “, என்று நக்கலாக கேட்டான்.
அவள் தன் கழுத்தில் இருக்கும் தாலிச்சரடை பார்த்துவிட்டு அவனையும் ஒரு பார்வை பார்த்தாள்.
“என்கிட்ட அவ்வளவு காசு இப்ப இல்ல”, என்றாள்.
“இவ்வளவு நாள் என் குழந்தைக்கு, அதாவது என் தங்கச்சி குழந்தைக்கு சாப்பாடு செலவு துணிமணி செலவு மற்ற சவரோஷனைன்னு எல்லாத்தையும் நீ தான் பாத்துக்கிட்ட. அதெல்லாம் கணக்கு போட்டு நானும் தரவா??”, அழுத்தமான வார்த்தைகள்.
கையில் நீட்டிக் கொண்டிருந்த பணத்தை அப்படியே தன் உள்ளங்கையில் மடக்கினாள்.
“நான் காசு பத்தலைன்னா உங்க கிட்ட கேக்குறேன்”, என்றாள் மெல்லிய குரலில்.
“இத நீயே வச்சுக்கோ. என்கிட்ட காசு இல்லனா கண்டிப்பா நான் என் பொண்டாட்டி கிட்ட இருந்து வாங்கிக்கிறேன். இது நம்ம வீடு நீ என்னோட மனைவி. நான் உன்னோட கணவன் உன்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்க மாட்டேன்னு மட்டும் தான் சொன்னேன். நீ நம்ம குழந்தை நான் இது எல்லாமே என்னுடைய பொறுப்பு. உன் புருஷன் ஓரளவுக்கு நல்லாவே சம்பாதிக்கிறான். எனக்கு கஷ்டம் வந்தா கண்டிப்பா உன்கிட்ட முதல்ல கேட்கிறேன். ஏன்னா என் அப்பாவை விட இப்ப நீ தான் எனக்கு உரிமையானவள் ஆயிட்ட. உனக்கு விருப்பப்பட்ட நீ என்ன வாங்கணும்னு நினைக்கிறாயோ அதை நீ வாங்கும் போது. இந்தான்னு நான் காசு கொடுக்க மாட்டேன். எனக்குன்னு நீ ஆசைப்பட்டு ஏதாவது வாங்கி கொடுத்தாலும், கொடுக்க மாட்டேன்”, என்று வசீகரிக்கும் புன்னகையை சிந்தினான்.
“இன்னைக்கு சண்டே தானே, வேணா ஒன்னு பண்ணலாம். லஞ்சுக்கு வெளியே போகலாம். சாப்பிட்டு தேவையான பொருட்கள் வாங்கிட்டு வரலாம்”, இலகுவாக கூறினான். பேச்சை மாற்றுவதற்காக தான் அவன் பேசினான் என்று அவளுக்கு புரிந்தது. அமைதியாக தலை குனிந்தவள் . பணத்தை ஹேண்ட் பேக்கில் வைத்துக் விட்டு, சமையலறை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டாள். மதிய உணவை ஒன்றாகவே அமர்ந்து உண்டார்கள்.
“வாவ், சூப்பர் மாலினி. ஆண்கள் சமையல் தான் ருசியா இருக்கும்னு சொல்லுவாங்க??, ஆனா உன்னுடைய சமையல் தேவாமிர்தம் மாதிரி இருக்கு. அதான் என் பொண்ணு உன்கிட்ட பச்சுன்னு ஓட்டிகிட்டாள் போல, எங்க அம்மாவுக்கு எல்லாம் சமைக்கவே தெரியாது. என் அப்பா வரும்போது கண்டிப்பா அவருக்கு சமைச்சு கொடு. அவர் மருமகளுடைய சமையலை பார்த்துட்டு பாராட்டட்டும். என் சமையல் எப்படி இருக்குன்னு சொல்லவே இல்லையே?? “, அவள் சமையலை பாராட்டி விட்டு, அவன் சமையலை பற்றி கேட்டான்.
“ந நல்லா இருந்தது”, இன்னுமே அவள் தயக்கத்துடன் பேசுவது புரிந்தது. குழப்பத்தில் இருக்கிறாள் என்று தெரிந்தது.
பாத்திரங்களை ஏற கட்ட உதவி செய்தான். மீண்டும் அவன் முன்னால் வந்து நின்றாள்.
“தினமும் கிரஷுகு போகாம இருக்க முடியாது”, என்றால் மெல்லிய குரலில்.
“நான் போகாம இருக்க சொல்லலையே?”.
“குழந்தைங்கள நம்மள நம்பி விட்டு இருக்காங்க. அப்படி திடீர்னு கிரஷ குளோஸ் பண்ண முடியாது. அதுல வேலை செய்றவங்க குழந்தைங்க எல்லாரோட நலத்தையும் நாம பார்க்கணும்”.
“ம்ம், எனக்கு அது புரியுது. அப்ப நான் தான் என்னோட கம்பெனிய வித்ட்ரா பண்ணிக்கிட்டு வந்தாகணும் இல்லையா??, ஷேர்ஸ பிரிச்சு வாங்கிட்டு வந்து இங்க பிசினஸ் தொடங்குன்னு சூட்சமமா சொல்ற, அப்படித்தானே?? “.
அவள் அவசரமாக இல்லை என்ற தலை ஆட்டிவிட்டு.
“நான் அப்படி சொல்ல வரல, டைம் வேணும்னு சொன்னேன்”.
“டைம் உனக்கா, இல்ல கிரஷ்ல உன்னை நம்பி விட்டு இருக்கிற பேரெண்ட்ஸ் குழந்தைகளுக்கா?.
“எல்லாருக்குமே”, ஒற்றை வரியில் முடித்துக் கொண்டாள். அங்கிருந்து அகன்று விட்டாள்.
இப்பொழுது யோசித்து எதுவும் ஆகப்போவதில்லை திருமணம் முடிந்து விட்டது. இதற்கு மேல் அடுத்து என்ன செய்ய வேண்டும் தன்னை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் குழந்தையை எப்படி கவனிக்க வேண்டும் என்று தான் பார்க்க வேண்டும். கிரிஷை உடனே இழுத்து மூடுவதெல்லாம் சிரமமான காரியம். குழந்தைகள் பெற்றோர்கள் என்று எல்லோருக்குமே சிரமம். அந்த மாதத்திற்கான பணத்தை வாங்கி இருக்கிறாள். அந்த மாதம் முழுவதுமாக குழந்தையை பார்த்துக் கொள்ளத்தான் வேண்டும். அங்கு குழந்தைகளை விட்ட பெற்றவர்கள் பிரச்சனை செய்தால், அவர்கள் கேட்கும் நேரத்திற்கு அதை அவள் நடத்தி தான் ஆக வேண்டும்.ஆயிரம் யோசனைகளோடு தன்னறையில் அமர்ந்திருந்தாள். இரவு உணவுக்குப் பிறகு முதல் நாள் என்ன நடந்ததோ அதுவே தான் தொடர்ந்தது. அவன் அவளை தொல்லை செய்யவில்லை. முதலில் அவளுக்கு நம்பிக்கை அல்லவா அவன் கொடுக்க வேண்டும் அதை தான் கொடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறான்.
மறுநாள் காலையிலேயே மூவருக்குமான சமையலை முடித்துவிட்டு குழந்தைக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு. அவள் பரபரப்பாக கிரஷுக்கு கிளம்பி கொண்டு இருந்தாள்.
“நம்ம வீட்டுக்கு போயிடலாமா மாலினி? “.
“அது எங்க இருக்கு??, கிரஷுக்கு வரதுக்கு ரொம்ப லேட் ஆகுமா? “.
“இங்க இருந்து ஒரு ஹாஃப் அன் ஹவர் டிஸ்டன்ஸ்ல இருக்கு. கிரஷுக்கும் அதுக்கும் கொஞ்சம் டிஸ்டன்ஸ் தான். ஆனா, தினமும் நானே உன்னை கொண்டு போய் விட்டுட்டு நானே உன்னை பிக்கப் பண்ணிக்கிறேன். இல்ல உனக்கு ஸ்கூட்டி வேணும்னாலும் சொல்லு வாங்கி தரேன்”, என்றான் அரவிந்த்.
“இல்ல இல்ல அதெல்லாம் வேண்டாம். நான் நான் பாத்துக்கிறேன்”, என்றால் அவள்.“இங்கே எனக்கு வேலை வெட்டி இல்ல மாலினி. அதனால உங்க பின்னாடியே தான் இப்படி சுத்திக்கிட்டு இருக்க முடியும்”, என்று கண் சிமிட்டி கூறினான்.
“நான் கிரஷுக்கு போய்டு மதியானம் சீக்கிரமா வரேன். பாக்கி எல்லாம் செட்டில் பண்ணிட்டு. வீட்டு ஓனர் கிட்ட எல்லாத்தையும் ஒப்படைச்சிட்டு பேக்கர்ஸ்ல எல்லாம் ஏத்திட்டு நைட்டுக்கு கிளம்பலாம். இங்க இருக்க பொருட்களை வைக்கிறதுக்கு அங்க இடம் இருக்கும் தானே?”, என்றால் அவள்.
அதைக் கேட்டதும் அவன் இதழ்கள் தாராளமாக விரிந்தது. அவள் உடனே ஒப்புக்கொண்டது, அவனுக்காகவும் அவள் யோசிக்கிறாள் என்று அவனுக்கு புரிய வைத்தது. அவள் முடிவுகளை எடுக்க தடுமாறுகிறாள் தான். ஆனால் தனக்காக விட்டுக் கொடுக்க நினைக்கிறாள். தனக்காக என்பதை விட குழந்தைக்காக தன்னிடம் பிரச்சனை வேண்டாம் என்று நினைக்கிறாள். இறங்கி போகவும் தயாராக இருக்கிறாள். முழுவதுமாக இல்லை என்றாலும் சிறிதே சிறிது நம்பிக்கை அவன் மீது வந்து விட்டிருக்கிறது என்பது புரிந்தது. சொன்னது போலவே அவனே அவர்களை அழைத்துச் சென்று விட்டான். அவள் பிகு செய்யவில்லை.
“போன் பண்ணு நான் வந்து கூட்டிட்டு போறேன்”, என்று கூறியவன். அவன் வீட்டிற்கு சென்று விட்டான்.
கேமராவை பார்த்துக் கொண்டே லேப்டாப் உடன் அமர்ந்து விட்டவனுக்கு. இன்னுமே அவள் எங்காவது குழந்தையோடு எஸ்கேப் ஆகிவிடப் போகிறாள் என்ற பயம் அவனுக்கு இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். தாலிக்கு மரியாதை கொடுக்காத பெண் இல்லை அவள். அந்த தாலியை கட்டியவன் அவளுக்கு கொடுக்காத மரியாதையினால் அதை கழட்டி எறிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது அவளுக்கு. இப்பொழுது அதே தாலியை உத்து பார்த்துக் கொண்டிருந்தாள். அதை அவனும் கேமரா வழியாக பார்த்துக் கொண்டிருந்தான். உப்ப் என்ற காற்றை வெளியேற்றியவள். குழந்தையை கவனித்தாள். எல்லா குழந்தைகளையும் கவனித்தாள். கணக்கு வழக்குகளை பார்த்தாள். மீண்டும் தாலியை பார்த்தாள்.
அவன் லேப்டாப்பில் ஒரு கவனமும் கிரஷ் கேமராவில் ஒரு கவனமுமாக , இரண்டு வேலைகளையும் செவ்வனே செய்து கொண்டு இருந்தான்.
இரண்டாம் திருமணம் என்பதும் மறுவாழ்வு என்பதும் பெண்களுக்கு இலகுவான ஒன்று இல்லை. திருமணமே இலகுவான ஒன்று இல்லை. கட்டிய கணவனை ஏற்றுக்கொண்டு, புரிந்து கொண்டு வாழ்க்கையுடன் போராடி புதிதாக கிடைத்த மனிதர்களைப் புரிந்து கொண்டு வாழ்க்கையை பழகிக் கொள்ள வேண்டும் எனும் போது. இரண்டாவது திருமணம் இரண்டாவது கணவன் இரண்டாவது வாழ்க்கை என்று அனைத்தையும் இரண்டாவது முறையாக புரிந்து கொள்வது என்பது எவ்வளவு சிரமமானது என்பதை அந்த பெண்கள் மட்டுமே அறிவார்கள். ஓரளவு அவள் மனநிலையை அவன் புரிந்து வைத்திருக்கிறான் எனலாம்.
Interesting😍
Super… Yeppo purunjupalo avana??
Malini ku mattum illa aravindh kum innum ava mela muzhusa nambikai varala
Superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr
Seekkirama maalini purinjukkanum
kandipa irukume athuvum ava patta kastathaium therinji vachi irukan aravind so athukagavathu sikiram purinji life ah lead pannanum malini last life vida intha life ella vithathulaum nalla irukum malini ku