Skip to content
Home » தேவதையாக வந்தவளே 33

தேவதையாக வந்தவளே 33

தேவதை 33

“ஐயோ என்னங்க பண்றீங்க??, வீட்ல எத்தனை பெரியவங்க இருக்காங்க அவங்கள செய்ய சொல்லுங்க “, என்று தன் கணவனுக்கு மட்டும் கேட்கும் விதத்தில் கூறினாள்.

“குழந்தை ஆரம்பிக்கட்டும் மாலினி நான் எல்லார்கிட்டயும் பேசிட்டேன் “, என்றான் அரவிந்த்.

அவள் சுற்றியும் பார்வையை ஓட்டினாள் அனைவருமே அவளை ஆர்வத்தோடு பார்ப்பது போல தான் இருந்தது. இந்த நேரத்தில் வாதம் செய்வது தேவையில்லாத பிரச்சினைகளை இழுத்து விட்டு விடும் அது தன் கணவனை அவ மதிப்பது போலவும் இருக்கும்என்று சிந்தித்தவள்.

“சரி, நீங்க தூக்கி பிடிச்சு கட் பண்ண சொல்லுங்க”, என்றாள் .

“அவள் உன்னை தவிர வேற யார்கிட்டயும் போகமாட்டானு உனக்கு தெரியும்தானே? “, என்று கேட்டான் அரவிந்த்.

“இல்லன்னா மாமா கிட்ட கொடுத்து கட் பண்ண சொல்லுங்க”, என்று கூறியபடி குழந்தையை அவனிடம் நீட்டினாள்.

“அப்பாகிட்ட போவா தான். ஆனா இதெல்லாம் சரியா செய்ய மாட்டாள்.. ஏன் நீயே தூக்கி பிடிச்சிட்டு சொன்னா என்ன ஆயிட போகுது??”, என்று அரவிந்த் கேட்க.

எல்லோரும் தங்களையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிய. நல்ல நேரம் செல்வதும் புரிய. வேறு வழி இல்லாமல் ஷாலினியின் கையில் சிசரை கொடுத்து அதை கட் செய்ய சொன்னாள் மாலினி. அவள் அதை செய்ய கஷ்டப்பட. அவளேப் பிடித்து அதை செய்திருந்தாள்.

குழந்தையும் குதூகலத்துடன் கட் செய்ய, அனைவரும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். ஷாலினிக்கு சந்தோஷமாகிவிட்டது. தான் செய்த ஒரு செயலுக்கு இத்தனை பேர் தன்னை பார்த்து கைதட்டி சிரிக்கிறார்களே என்று.

அதன் பிறகு உள்ளே சாமியின் புகைப்படமும் அதற்கு முன்னால் பெரிய குத்து விளக்கும் இருந்தது. மூன்று மெழுகுவத்தியை நீட்டியவன் மூன்று பெண்களிடம், அதாவது மாலினி சாரு மட்டும் எத்திராஜின் தாய் அவர்கள் மூவரிடமும் கொடுத்து விளக்கை ஏற்ற சொன்னான்.

மீண்டும் மாலினியிடம் தயக்கம். தான் ஏற்றுவதில் ஏதாவது தவறு நிகழ்ந்து விடப்போகிறது??. மற்றவர்கள் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை??.“வேண்டாங்க, பெரியவங்க பண்ணட்டும் நான் வேண்டாம்”, என்று தயங்கினாள்.

“எத்திராஜ் சார்பா ரெண்டு பேர் இருக்காங்க. என் சார்பா நீ மட்டும் தான். குழந்தையை வைச்சு ரிப்பன் கட் பண்ண வைக்கலாம்னு என்னோட ஆசையை சொல்லும்போது அவன் சந்தோஷமா ஒத்துக்கிட்டான். இது ஒத்தப்படையில் தான் செய்வாங்க. ரெட்ட படையில செய்ய மாட்டாங்க. என்னோட மனைவி நீ தான். இதை நீ தான் செய்யணும்”, அழுத்தமாக கூறினான்.

ஆனால் அவளுக்கு தயக்கம் இருந்தது. அவள் கையைப் பிடித்து அழைத்துச் செல்ல தன் கணவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவன் பின்னோடு சென்றாள்.

“வாமா “, என்று எத்திராஜின் தாய் அவளை வாஞ்சையாக அழைக்க. அவள் கரத்தில் மெழுகுவர்த்தியை கொடுத்தான் எத்திராஜ். மீண்டும் தன் கணவனை திரும்பி பார்த்தாள். அவன் கண்களால் செய் என்பது போல பாவனை செய்ய. குறித்த நேரத்தில் மூன்று பெண்களும் மூன்று புறமும் நின்று விளக்கை ஏற்றினார்கள்.

கண்களை அழுந்த மூடினாள். பிறகு மெல்ல திறந்தாள் . நிமிர்ந்து பார்க்கும்போது அவளை பார்த்து கைகளை கட்டிக்கொண்டு சிரித்துக் கொண்டிருந்தான் அவளுடைய கணவன். ஒரு பெண்ணுக்கு என்ன அங்கீகாரம் வேண்டுமோ??, அதிகாரம் தேவையோ?? அவள் மனதில் என்ன எதிர்பார்ப்பாளோ அதை எல்லாம் அவன் திறம்பட நடத்திக் கொண்டிருந்தான். கண்களில் லேசான நீர்படலம். அது ஆனந்த கண்ணீர் என்று அவளுக்கு மட்டும் தான் தெரியும். அவனோ புருவம் சுருக்கினான்.

“என்ன? “, என்பது போல தலையை மேல்புறமாக ஆட்டி பார்வையால் கேட்டான்.“ அவள் பார்வையால் ஒன்றும் இல்லை என்று இரு பக்கமும் தலையாட்டினாள் .

உதடு பிரிக்காமல் புன்னகையை அவன் வெளிப்படுத்த. அவள் இதழ்களிலும் அது தொற்றிக் கொண்டது.இவன் தன் வாழ்க்கையில் முன்பே வந்திருக்கக் கூடாதா??, தனக்கு எந்த குற்ற உணர்வும் இல்லாமல் இருந்திருக்குமே???. வாழ்க்கையில் நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் இல்லாமலேயே போயிருக்குமே??. என் வாழ்க்கையில் வந்த தேவதை இவள் என்றாள்.. என் வாழ்க்கையை மாற்ற வந்த தேவன் இவன்தானோ???. அவனையே பார்த்து இமைக்காமல் அவள் சிந்தித்து கொண்டு இருக்க. வேகமாக அவளை நெருங்கியவன்.

“இந்த டிரஸ்ல நான் அழகா இருக்கேன்னு எனக்கு தெரியும். ஆனா நீ இந்த அளவு ரசிக்கிற விதமா இருக்கேன்னு இப்பதான் தோணுது . அங்க எல்லாரும் உன்ன கூப்பிட்டு இருக்காங்க. நீ என்னையே பாத்துட்டு இருக்க “, அவளைப் பிடித்தபடி கேட்டான் ஆனால் அவளிடம் அப்பொழுதும் அசைவு இல்லை. அவளை உலுக்கினான்.

சுய உணர்விற்கு வந்தவளுக்கு அவன் கூறிய வார்த்தையில் வெட்கமாக போய்விட்டது. தொண்டைக் குழி ஏறி இறங்க தன்னை மீட்டு எடுத்துக் கொண்டவள். தன்னை அழைப்பவர்களை பார்த்தாள்.. சாருதான் அழைத்துக் கொண்டு இருந்தாள். தன் தாய்க்கு அவளை அறிமுகப்படுத்தி வைத்தாள்..

“வணக்கம்மா, கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொன்ன அரவிந்தை கல்யாணம் பண்ணிக்கிட்டது நீதானா. என் சொந்தத்தில் இருந்து எல்லாம் கூட வரன் பார்த்தேன். ஆனா பிடிவாதமா வேணாம்னு சொல்லிட்டான். படவா அப்புறம் தான் உன்னை காதலிக்கிறதா சொன்னான். ரெண்டு பேரும் சந்தோஷமா வாழுங்க சீரும் சிறப்புமா குழந்தை குட்டியோட நூறு வருஷத்துக்கு வாழனும்”, மனமார வாழ்த்தினார்.

அவளுக்கு என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை??.

“இவங்க கல்யாணத்துல தான் உன்ன பாக்க வேண்டி இருக்கும் போலன்னு நினைச்சேன். அதுக்கு முன்னாடியே இப்படி ஒரு விழாவை ஏற்படுத்தி உன்ன பாக்க வச்சுட்டான்”, அவர் கிண்டல் அடித்தபடி சாதாரணமாக பேசினார்.

எத்திராஜ் உடைய குடும்பத்திற்கும் அவளைப் பற்றி தெரிந்திருந்தது . மற்றவர்களிடம் சொன்ன பொய்யை அவன் அவர்களிடம் சொல்லவில்லை போலும். அதாவது அவன் காதலித்து அவளை திருமணம் செய்வதாகவும் குழந்தை அவன் தங்கையுடையது என்றும் சொல்லி இருந்தான் . ஆனால் தன்னுடைய முந்தைய வாழ்க்கை அதைப்பற்றி இவர்களுக்கு தெரியாதா?? “. அந்த நாளும் இனிதே கடந்தது.

அன்று ஓய்வெடுத்து விட்டு மறுநாள் தான் ஊருக்கு கிளம்பினார்கள் அவர்கள். அவர்கள் வாழ்க்கையும் அன்றாடம் ஆனது. அவளைக் கிரஷில் விட்டுவிட்டு தன் அலுவலகத்திற்கு செல்பவன். மாலை சரியான நேரத்திற்கு வந்து அவளை அழைத்துச் சென்று விடுவான். அதற்கு மேல் பொறுப்பான மேனேஜரை நியமித்திருந்தான். இரவு பத்து மணி வரையும் அந்த அங்காடி இயங்கியது அடுத்த நாள் வந்து மற்ற கணக்கு வழக்குகளை பார்த்துக் கொள்வான். சரி பார்த்ததை தன் தோழனுக்கும் அவ்வப்போது அனுப்பி வைத்து விடுவான். அங்கு நடக்கும் பிசினஸ்களை எத்திராஜ் பார்த்துக்கொள்ள அவனும் கணக்கு வழக்குகளை சரியான நேரத்தில் அரவிந்துக்கு அனுப்பி வைத்து விடுவான்.

இருவரின் தோழமை மட்டும் அல்லாமல் பிசினஸும் நல்லபடியாக நடக்க அதுவும் ஒரு காரணம்.

….

இப்படியே இரண்டு மாதங்கள் சென்று இருந்தது. தன் அறையில் இருந்து நெட்டி முறித்துக் கொண்டு கழுத்தை கை கொண்டு இப்படியும் அப்படியும் திருப்பியபடி வெளியில் வந்தான் அரவிந்த். வீடு நிசப்தமாக இருப்பதை உணர்ந்தான். அவன் எழுந்தும் நேரத்திற்கு முன்பாகவே எப்பொழுதும் அவள் எழுந்து விடுவாள். சமையலறையில் இருப்பவளை நோக்கி செல்பவன் ஒரு காபியை அவளுடன் பேசிக்கொண்டே பருகி விட்டு. அவளுக்கு ஏதாவது உதவிகளை செய்துவிட்டு வருவான். இரவில் இருவரும் சேர்ந்து சமைப்பது வாடிக்கையாகிவிட்டது. அன்று அவள் இல்லாததை கவனித்தவன் நேரத்தை பார்த்தான்.

“ஓடிட்டாளா?? என்று தான் முதலில் தோன்றியது. எல்லாம் நல்லா தானே போயிட்டு இருந்தது. நம்ம கிட்டயும் கொஞ்ச நாளா நல்லா தானே பேசிக்கிட்டு இருந்தா??, அதுக்குள்ள என்ன ஆச்சு?? என்று அவசர அவசரமாக சமையலறைக்குள் செல்ல. அங்கு சமையல் செய்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. பிறகுதான் மாலினி இருந்த. அறை பக்கமே சென்றான். கதவை உள்பக்கமாக தாழிட்டு இருப்பது தெரிந்தவுடன் சற்று ஆசுவாசமடைந்தான்.

“மாலினி” என்று குரல் கொடுத்துக் கொண்டே தட்டினான். உள்ளே இருந்து எந்த குரலும் வரவில்லை பயந்துவிட்டான். மேலும் குரல் கொடுத்துக் கொண்டே தட்டினான். அப்பொழுதும் பதில் வராமல் போக இம்முறை,

“ஷாலினி” என்று குரல் கொடுத்தான். கட்டில் அசையும் சத்தம் கேட்டது. ஆழ்ந்து நிம்மதியான மூச்சை விட்டான். ஆனால் இவள் எதற்கு குரல் கொடுக்கவில்லை.

மீண்டும் பயப்பந்து அவன் வயிற்றில் உருள ஆரம்பித்தது. தட்டி தட்டி பார்த்தவன். அவள் குரல் வராமல் போக. குழந்தையும் பெரிதாக அழ ஆரம்பிக்க. தடுமாறியபடி எழுந்தாள் மாலினி.

குழந்தையை அணைத்துக் கொண்டாள் அவள் வாகாக தாயிடம் அடங்கினாள்.. ஆனால் எழுந்து சென்று கதவை திறக்கும் அளவிற்கு அவளுக்கு திறன் இருந்திருக்கவில்லை.

“மாலினி குரல் கொடு. குழந்தை அழுவுறா பாரு என்ன பண்ணிட்டு இருக்க? “, என்று மீண்டும் அவன் கத்தினான்.

குழந்தையின் அழுகுரல் நின்று விட்டது. ஆனால் அவளால் தான் குரல் கொடுக்க முடியவில்லை. தட்டு தடுமாறி கட்டிலில் இருந்து இறங்கும்போதே கால் இடறி தள்ளாட்டம் காண ஆரம்பிக்க. விழ போனவள் கஷ்டப்பட்டு சுவரை பிடித்து நின்றாள். ஷாலினியை கீழே இறக்கி விட்டாள்.

சாதாரணமாக லாக் செய்து இருந்தால் அவனால் திறந்து கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் தாழ்ப்பால் போட்டதால் அவனால் வர முடியவில்லை. தாழ் நீக்கும் அளவுக்கு அவளிடம் தெம்பில்லை. தாழ்ப்பாலை எட்டி அவிழ்க்கும் அளவிற்கு குழந்தையின் உயரமும் இல்லை. அவள் தான் சென்றாக வேண்டும் குழந்தையை தூக்கிக் கொண்டு சென்றாள் எப்பொழுது வேண்டுமென்றாலும் விழுந்து விடுவாள் என்று தோன்ற அவளை இறக்கி விட்டு விட்டு அவளே தட்டு தடுமாறி சென்ற கதவை பிடிமானமாக பிடித்துக் கொண்டு தாழ்ப்பாலை விளக்கினாள்.

தாழ்ப்பால் விலகும் சத்தத்தின் அவன் வேகமாக கதவை திறக்க. அவள் அப்படியே மயங்கி சரிந்தாள்..

தான் அவசரமாக திறந்ததுதான் ஏடாகூடமாக அவள் மீது பட்டு விட்டதா??, என்று தான் முதலில் அவன் பயந்தான்.. ஷாலினி தாயை தேடி ஓடிச் சென்று இன்னும் அழ ஆரம்பிக்க. மனைவியை பார்ப்பதா மகளைப் பார்ப்பதா என்று தெரியாமல் தடுமாறி நின்றான் அரவிந்த். மனைவியை கையில் ஏந்தினான். மகளை தன்னுடன் வரச் சொல்லி அழைத்தவன்.

அவளை கட்டியின் மீது படுக்க வைத்தான். உடம்பு நெருப்பாக கொதித்தது. அவள் கன்னத்தை தட்டிய படி அவள் பெயரை சொல்லி அழைத்தான். ஆனால் அவளிடம் நிதானம் இல்லை.

“ஹான்”, என்று முனகினாளே தவிர, அவளால் கண் விழிக்க முடியவில்லை என்று அவனுக்கு புரிந்தது.“அம்மாவை பார்த்துகோடா குட்டி அப்பா அஞ்சு நிமிஷத்துல வந்துடுறேன்”, என்று மகளிடமே மனைவியை ஒப்படைத்து விட்டு சென்றான். பாலை காய்ச்சி மகளுக்கு மனைவிக்கு இருவருக்கும் ஆற்றி எடுத்து வந்தவன் .

ஐஸ் கியூபை ஒரு கிண்ணத்தில் போட்டபடி அதில் கர்சிப்பை போட்டு எடுத்து வந்தான். முதலில் மகளுக்கு பாலை புகட்டினான். ஏனோ இம்முறை அவள் தட்டவில்லை தாயை பார்த்துக் கொண்டே குடித்தாள் அடுத்தது மனைவியை எழுப்பினான். அவளால் எழுந்த முடியவில்லை. லேசாக உயர்த்தி தன் மீது தோள் சாய்த்து கொண்டு அவளுக்கு மீதி பாலை புகட்டினான்.

அவளால் குடிக்க முடியவில்லை. ஆனால் அவன் குடிக்க வைத்தான். அவன் தான் செய்கிறான் என்ற உணர்வு அவனுக்கு இருந்தது. ஆனால் உடல் அதை தடுப்பதற்கோ அல்லது வாய் திறந்து வேண்டாம் என்று சொல்வதற்கோ ஒத்துழைக்கவில்லை. அவளை அணைத்து பிடித்திருந்த போதும் அதில் கண்ணியம் தெரிந்தது. அதனால் அவனிடம் இருந்து விலக கூட அவள் முற்படவில்லை என்று சொல்லலாம்.

பிறகு அவளை படுக்க வைத்து கர்சிப்பை நனைத்து ஐஸ் ஒத்தடத்தை கொடுத்தான். அவன் உடல் சூட்டை குறைக்க முயன்றான். அவளால் அதையும் உணர முடிந்தது கண்களைப் பிரிக்கத்தான் நினைத்தாள். ஆனால் முடியவில்லை.

குழந்தையின் அழுகுரல் தான் அவளை சற்றேனும் மீட்டெடுத்து கதவை திறக்க வைத்திருந்தது. மகளுக்காக மட்டும் அவள் தன் பலம் முழுவதும் கொண்டு திரட்டி எழுந்து கதவை திறந்து இருந்தாள். ஆனால் இப்பொழுது எல்லா பலமும் இழந்துவிட்டது போல தோன்றியது.

பயப்பட அவசியமில்லை பெண்ணே, உங்கள் இருவருக்கும் நான் இருக்கிறேன் என்று வார்த்தைகளால் அல்லாமல், உணர்வுகளால் செயல்களால் உணர்த்திக் கொண்டிருக்கிறான் அவளுடைய கணவன். ஆம் கணவன் தானே அதனால்தானே உரிமையாக செய்கிறான்??. இல்லையென்றால் அவளும் இப்படி இருக்க மாட்டாளே??.

மகளுக்காக துணிந்தவள் அவளுக்காகவும் கஷ்டப்பட்டு தன் பலத்தை திரட்டி இருப்பாள். கணவன் என்பதால் மகள் நன்றாக இருப்பாள் என்ற நிம்மதியுடன் இருந்தாளோ என்னவோ??.

5 thoughts on “தேவதையாக வந்தவளே 33”

  1. Kalidevi

    ena achi malini ipo paru unnoda arikuri engeum illanthum avanuku evlo pathatam paru ithu yaruku varum ipo neeum aravind irukan ra nambikai la tha papa va kuda paka mudila aana ipo avan than unaum papa vaium pathukuran enime lathu nambu ma ellarum avana mariye iruka matanga

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *